ந‌ண்ப‌ர்க‌ள் மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய‌ தீபாவ‌ளி ந‌ல்வாழ்த்துக்க‌ள்...

தீபாவளிப் பண்டிகையை, 'பகவத் கீதையின் தம்பி' என்பார் ஸ்ரீகாஞ்சி மகா ஸ்வாமிகள். கீதைகள் பல இருந்தாலும், பகவத் கீதை தனிப்பெருமை பெற்றதாக எப்படி உள்ளதோ, அதேபோல் பண்டிகைகள் பல இருப்பினும் தனிப் பெருமையுடன் திகழ்கிறது தீபாவளித் திருநாள்.

கண்ணன், நரகாசுர சம்ஹாரம் செய்ததைக் கண்டு, நரகாசுரனின் தாயாருக்கு துக்கம் பொங்கியது. 'என் பிள்ளை போய்விட்ட துக்கம் உண்டு. இருப்பினும் உலகத்தாருக்கு எந்த துக்கமும் வரக் கூடாது. இந்த நாளில், அனைவரும் சந்தோஷமாக இருக்க வேண்டும்' என வேண்டினாள்! இந்த வேண்டுகோள்தான், தீபாவளிப் பண்டிகைக்கு தனிப்பெருமை சேர்த்தது. ''நாம் துன்பப்பட்டாலும் பரவாயில்லை. உலகம் க்ஷேமமாக இருக்க வேண்டும்' எனும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்வதுதான் தீபாவளியைக் கொண்டாடுவதன் தாத்பர்யம்'' என்று அருளியுள்ளார் ஸ்ரீமகா சுவாமிகள்.

இந்தியா மட்டுமின்றி அயல்நாடுகளில்கூட தீபாவளி கொண்டாடப்படுகிறது. இந்தியாவில், பல காரணங்களுக்காக தீபாவளி கொண்டாடப்படுகிறது.

நரகாசுரனுடைய தேசத்துக்கு பாதுகாவலாக கிரி துர்கம், அக்கினி துர்கம், ஜல துர்கம், வாயு துர்கம் எனும் நான்கு கோட்டைகள் இருந்தன. இந்த நான்கு கோட்டைகளையும் அழித்து நரகாசுரனை சம்ஹாரம் செய்தார் கண்ண பரமாத்மா! பஞ்சபூதங்களால் ஆன நம் உடலுக்குள் புகுந்து, தீயவற்றை விலக்கி, நமக்கெல்லாம் அருள்புரிகிறார் கண்ணன் என்பதைக் குறிக்கிறதாம் இது!

கிரி துர்கம் - மண்; அக்கினி துர்கம் - நெருப்பு; ஜல துர்கம் - தண்ணீர்; வாயு துர்கம் - காற்று! ஆக, நிலம், நெருப்பு, நீர், காற்று எனும் நான்கையும் சொல்லியிருப் பதால், ஐந்தாவது பூதமான ஆகாயமும் இதில் சேரும்.

பஞ்ச பூதங்களால் ஆன நம் உடலில், பகவானைக் குடியேற்ற வேண்டும். பகவானுக்கு நம் உள்ளத்தில் இருக்க இடம் கொடுத்தால், அவன் நமது உள்ளத்தில் உள்ள அறியாமையை நீக்குவான்; ஞான ஒளி பிரகாசிக்கும். இதுவே தீபாவளியின் உட்பொருள்.

ரமண மகரிஷி சொல்லும் தீபாவளியும் இதுவே!
''
தீய எண்ணங்கள்தான் நரகன். அவன் குடியிருக்கும் இடமே நம்முடைய உடல். இந்த மாயாவியை அழித்து, தானாக ஆவது- அதாவது, ஆத்ம ஜோதியாகத் திகழ்வதே தீபாவளி'' என்கிறார் பகவான் ரமணர்!

ஜோதிமயமான ஸ்வாமியை உள்ளத்தில் வைத்து வழிபட வேண்டும் என்பதைக் குறிக்கவே, தீபங்களை ஆவளி(வரிசை)யாக வைத்து, வழிபடுகிறோம். இதன் காரணமாகவே தீப ஆவளி என்பது தீபாவளி என்றானது. இதையே திருமகள் தீபாவளி என்றும் லட்சுமி தீபாவளி என்றும் சொல்வர். இது தொடர்பான கதை...

நரகாசுரனை அழிப்பதற்காக கண்ணன் சென்றபோது, பாணாசுரன் முதலான அசுரர்கள் பலர், திருமகளான லட்சுமிதேவியைக் கவர்ந்து வருவதற்காகப் புறப்பட்டனர். அவர்களின் உள்நோக்கத்தை அறிந்த லட்சுமிதேவி, அங்கே எரிந்து கொண்டிருந்த தீபச்சுடரில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டு, அசுரர்களின் கண்களில் படாமல் மறைந்தாள். அன்றைய நாள்தான், தீபாவளி!

தீபாவளியன்று திருமகள் தன்னை தீபத்தில் ஐக்கியப்படுத்திக் கொண்டதன் காரணமாகவே, தீபங்களை ஆவளி(வரிசை)யாக ஏற்றி வைத்து, தீபத்தில் திருமகளை வழிபடுகிறோம். மார்வாடி பெருமக்கள், தீபாவளியன்று புது வருடக் கணக்கு தொடங்குவதும், இந்தத் திருமகள் வழிபாட்டை முன்னிட்டே நடைபெறுகிறது.

அயோத்தியில் தீபாவளி:

ராவண சம்ஹாரம் முடிந்து சீதாதேவியுடன் ஜயராமனாக அயோத்தி திரும்பினார் ஸ்ரீராமன். அப்போது அதிகாலை மூன்று மணி. 14 ஆண்டுகளாக ஸ்ரீராமரை தரிசிக்காத அயோத்தி மக்கள், அந்த இரவில் ஏராளமான விளக்குகளை வரிசையாக ஏற்றி வைத்து, ராமரை தரிசித்து வரவேற்று மகிழ்ந்தனர்.

ஸ்ரீராமபிரான், சீதாபிராட்டியுடன் அரண்மனைக்குள் நுழைந்தார். அப்போது கௌஸல்யாதேவி, ''விளக்கேற்ற வந்த திருமகளே... சீதா! நீ இல்லாததால் இந்த அரண்மனையே இருள் சூழ்ந்து விட்டது. நீ விளக்கேற்று! அந்தகாரம் விலகி அருள் பரவட்டும்'' என்றாள். உடனே, தீபங்களை ஏற்றி வைத்து வழிபாடு செய்தாள் சீதை. இந்த நன்னாளே தீபாவளித் திருநாள்!

இதேபோல், ஞான தீபாவளி என்றும் போற்றுவர்! பிரகலாதனின் பேரனான மகாபலி முடிசூட்டிக் கொண்ட நாள்... தீபாவளி. அன்று ஏற்றப்படும் தீபம் 'எம தீபம்' எனப்படும். வாமன அவதாரம் எடுத்த பகவான், மகாபலி சக்ரவர்த்திக்கு அருள்புரிந்து அவருக்கு தன் ஞானத் திருவடி சூட்டிய நாள்தான் தீபாவளி என்பாரும் உண்டு.

ஆக, தீபாவளித் திருநாள் குறித்து பல கதைகள்; அத்தனையும் நமக்குச் சொல்லும் பாடம்... 'கெட்டவை நீங்கி நல்லதை அடைய வேண்டும். அதாவது ஞானத்தை அடைவதே தீபாவளி' என்கின்றனர் சான்றோர்.


(தகவல் உதவி : சக்தி விகடன்...)


வலையுலக தோழமைகள் மற்றும் அவர்களின் குடும்பத்தார் அனைவருக்கும் என் மனம் கனிந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.....

36 comments:

எல் கே said...

உங்களுக்கும் வாழ்த்துக்கள் கோபி. இந்த தாத்பர்யம் தெரியாமல், பலர் பண்டிகையை இழிவு படுத்தி செய்திகள் பரப்பும் பொழுது மனம் வேதனை அடைகிறது :(

புவனேஸ்வரி ராமநாதன் said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

R.Gopi said...

வாங்க LK

அடுத்தவர்கள் நாம் செய்வதை இழிவு செய்வது ஒன்றும் நமக்கு புதிதில்லையே..

நாம் அடுத்தவர்கள் சொல்ல்லும் அனைத்திற்கும் செவி கொடுத்தால், உடல் முழுக்க செவிகள் இருந்தாலும் போதாது...

அடுத்தவர்களை புறம் தள்ளி, நம் வழியில் நாம் நடப்போம்...

இது போன்ற அனைத்து பண்டிகைகளையும் விமர்சையாக கொண்டாடுவோம்..

அது ஒன்றே நாம் அவர்களை கண்டு கொள்ளாமல் இருக்கிறோம் என்று அவர்களுக்கு கூறாமல் கூறும் பதில்...

உங்களுக்கும், குடும்பத்தார்க்கும், தோழமைகள் அனைவருக்கும் என் மனம் கனிந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.....

ராமலக்ஷ்மி said...

மிக நல்ல பகிர்வு.

தீபாவளி வாழ்த்துக்கள் கோபி.

சாருஸ்ரீராஜ் said...

நல்ல தொகுப்பு , உங்களுக்கு உங்கள் குடும்பத்தார்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

RVS said...

தீபாவளி சிறப்பு செய்தியுடன் வாழ்த்துக்கள் தெரிவித்தமைக்கு நன்றி.
தீபாவளி நல் வாழ்த்துக்கள் ;-) ;-)

jokkiri said...

// புவனேஸ்வரி ராமநாதன் said...
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.//

******

வாங்க புவனா மேடம்...

தங்களுக்கும், குடும்பத்தார் அனைவருக்கும் என் மனம் கனிந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

jokkiri said...

//ராமலக்ஷ்மி said...
மிக நல்ல பகிர்வு.

தீபாவளி வாழ்த்துக்கள் கோபி//

********

வருகை தந்து பதிவை படித்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி ராமலஷ்மி மேடம்....

தங்களுக்கும், குடும்பத்தார் அனைவருக்கும் என் மனம் கனிந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..

jokkiri said...

//சாருஸ்ரீராஜ் said...
நல்ல தொகுப்பு , உங்களுக்கு உங்கள் குடும்பத்தார்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்//

*******

வாங்க சாருஸ்ரீராஜ்...

வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி....

உங்களுக்கும், குடும்பத்தார் அனைவருக்கும் என் மனம் கனிந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

jokkiri said...

//RVS said...
தீபாவளி சிறப்பு செய்தியுடன் வாழ்த்துக்கள் தெரிவித்தமைக்கு நன்றி.
தீபாவளி நல் வாழ்த்துக்கள் ;-) ;-)//

*****

வாங்கோ மன்னை ஆர்.வி.எஸ். அண்ணா.... நலம்... நலமறிய ஆவல்...

பதிவை படித்து, வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி...

தங்களுக்கும், குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் என் மனம் கனிந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்....

Anonymous said...

வாழ்த்துக்கள்

Anonymous said...

உங்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் கோபி

வெங்கட் நாகராஜ் said...

உங்களுக்கும், குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

வெங்கட் நாகராஜ்
புது தில்லி.

Chitra said...

HAPPY DEEPAVALI!

Eeva said...

நல்லா இருக்குங்க, ஜீஜிக்ஸ்.காம் (www.jeejix.com) ல இதை எழுதுங்க , அதிகம் பேர் உங்கள் கட்டுரையை பார்த்தால் பரிசு கிடைக்கும். பதிவு பண்ண பிறகு
மறக்காம உங்களுக்கு தெரிஞ்சவங்களை அழைத்து ஜீஜிக்ஸ்.காம் படிக்க சொல்லுங்க. பரிசு கிடக்கும் வாய்ப்பு அதிகம். வாரா வாரம் பரிசு மழை !!

jokkiri said...

// தமிழரசி said...
வாழ்த்துக்கள்//

********

உங்களுக்கும், குடும்பத்தார்க்கும், தோழமைகள் அனைவருக்கும் என் மனம் கனிந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்....

jokkiri said...

//இந்திரா said...
உங்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் கோபி//

**********

வாங்க இந்திரா

உங்களுக்கும், குடும்பத்தார்க்கும், தோழமைகள் அனைவருக்கும் என் மனம் கனிந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்....

jokkiri said...

//வெங்கட் நாகராஜ் said...
உங்களுக்கும், குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

வெங்கட் நாகராஜ்
புது தில்லி//

*******

வாங்க வெங்கட் நாகராஜ்....

வருகை தந்து, பதிவை படித்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி...

உங்களுக்கும், குடும்பத்தார்க்கும், தோழமைகள் அனைவருக்கும் என் மனம் கனிந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்....

jokkiri said...

// Chitra said...
HAPPY DEEPAVALI!//

******

வெல்கம் சித்ரா...

தங்களுக்கும், குடும்பத்தார் அனைவருக்கும் என் மனம் கனிந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..

அமெரிக்காவுல பண்டிகை எப்படி, களைகட்டுமா?

jokkiri said...

என் தீபாவளி வாழ்த்து பதிவிற்கு வருகை தந்து, பதிவை படித்து, கருத்து பகிர்ந்து, தமிலிஷ் / இண்ட்லியில் வாக்களித்து பதிவை பிரபலமாக்கிய தோழமைகள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி...

karthikvlk
maragadham
rvsm
Ramalakshmi
sriramanandaguruji
RDX
venkatnagaraj
chitrax
arasu08
spice74
paarvai
balak
VGopi
ashok92
jollyjegan
urvivek
ambuli
chuttiyaar

Unknown said...

Good message conveyed through.

Thank you Gopi

Wishing you and Your Family a Happy Diwali.
Kamesh

Mrs. Krishnan said...

Arumai arumai.

Theriyaadha thagavalgal pala therindhu konden.

Ungalukum, kudumbatharukum vaazthukkal. Deepavali Dubaila kondada anumadhi unda? Theriyadhadal ketkiren.

jokkiri said...

// Kamesh said...
Good message conveyed through.

Thank you Gopi

Wishing you and Your Family a Happy Diwali.
Kamesh//

*******

Thanks for visit and wish Mr.Kamesh

jokkiri said...

//Mrs. Krishnan said...
Arumai arumai.

Theriyaadha thagavalgal pala therindhu konden.

Ungalukum, kudumbatharukum vaazthukkal. Deepavali Dubaila kondada anumadhi unda? Theriyadhadal ketkiren.//

********

வாங்க திருமதி கிருஷ்ணன்...

பாராட்டறதுக்கும் ஒரு மனசு வேணும்... அது உங்க கிட்ட நிறைய இருக்கு...

பாராட்டுக்கு மிக்க நன்றி... உங்களுக்கும், குடும்பத்தார்க்கும் என் மனம் கனிந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

தீபாவளி கொண்டாட துபாயில் அனுமதி உண்டு... ஆனால், வெடி வெடிக்க அனுமதியில்லை...

ஸ்வீட் செஞ்சு சாப்பிடலாம்... நண்பர்களுக்கு ஃபோன் செய்து வாழ்த்தலாம்... ஏதாவது புது சினிமா பார்ப்பதென்றால் பார்க்கலாம்... அம்புடுதேன்...

Paleo God said...

நான் மறந்தாலும் எனை மறக்காது வாழ்த்து சொன்ன பேரன்பு கொண்ட நண்பர் கோபிக்கு இனிய தீபாவளி வாழ்த்துகள்!!

:))))))))

jokkiri said...

// 【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
நான் மறந்தாலும் எனை மறக்காது வாழ்த்து சொன்ன பேரன்பு கொண்ட நண்பர் கோபிக்கு இனிய தீபாவளி வாழ்த்துகள்!!

:))))))))//

*******

வாங்க ஷங்கர் ஜி...

நலம் நலமறிய ஆவல்... ரொம்ப நாளைக்கப்புறம் வந்திருக்கீங்க... மிக்க நன்றி...

தங்களுக்கும், குடும்பத்தார்க்கும் என் மனம் கனிந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்....

சௌந்தர் said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்....

Kousalya Raj said...

தீபாவளி பற்றிய செய்திகள் நன்றாக இருக்கிறது....பகிர்வுக்கு நன்றி.
உங்களுக்கும் என் அன்பான தீபாவளி வாழ்த்துக்கள்...

ஈ ரா said...

தீபாவளி வாழ்த்துக்கள்

தனபால் said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

Jaleela Kamal said...

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்


சிறப்பு செய்தி அருமை

Sivaraj said...

Happy Diwali Gopiji

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

jokkiri said...

தொடர்ந்து வருகை தந்து, தீபாவளி வாழ்த்து பகிர்ந்த தோழமைகள் :

1) சௌந்தர்
2) கௌசல்யா
3) ஈ.ரா.
4) தனபால்
5) ஜலீலா
6) சிவராஜ்
7) பன்னிக்குட்டி ராமசாமி

அனைவருக்கும் என் மனம் கனிந்த நன்றி....

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

தகவல்கள் புதிதாய் இருந்தது,

வாழ்த்துக்களுடன்,

ஆர்.ஆர்.ஆர்.
http://keerthananjali.blogspot.com/

கோமதி அரசு said...

நல்ல பகிர்வு.

வெகு நாட்கள் ஆகி விட்டதே உங்கள் பதிவைப் பார்த்து.

தீபாவளி பண்டிகைக்கு ஊருக்கு போய் வந்தேன்.

உங்கள் வாழ்த்துக்கு நன்றி.