இந்த IT… IT ன்னு சொல்லுறாங்களே அப்படினா என்ன?
"அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ?" "ஏம்பா இந்த கம்ப்யூட்டர் படிச்சவங்க எல்லாம் நிறைய சம்பளம்வாங்கிட்டு, பந்தா பண்ணிட்டு ஒரு தினுசாவே அலையுறீங்களே? அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ?" –
நியாயமான ஒரு கேள்வியை கேட்டார் எனது அப்பா.
நானும் விவரிக்க ஆரம்பிதேன்.
"அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ?" "ஏம்பா இந்த கம்ப்யூட்டர் படிச்சவங்க எல்லாம் நிறைய சம்பளம்வாங்கிட்டு, பந்தா பண்ணிட்டு ஒரு தினுசாவே அலையுறீங்களே? அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ?" –
நியாயமான ஒரு கேள்வியை கேட்டார் எனது அப்பா.
நானும் விவரிக்க ஆரம்பிதேன்.
அப்பா, "வெள்ளைகாரனுக்கு எல்லா வேலையும் சீக்கிரமா முடியணும்.
அதே மாதிரி எல்லா வேலையும் அவனோட வீட்டுல இருந்தே செய்யணும். இதுக்காக எவ்வளவு பணம் வேணுமானாலும் செலவு செய்ய தயாரா இருக்கான்.
அதே மாதிரி எல்லா வேலையும் அவனோட வீட்டுல இருந்தே செய்யணும். இதுக்காக எவ்வளவு பணம் வேணுமானாலும் செலவு செய்ய தயாரா இருக்கான்.
அது சரி பல்லு இருக்குறவன் பக்கோடா சாப்பிடுறான்".
அதே தான்... இந்த மாதிரி அமெரிக்கால்-ல, இங்கிலாந்து-ல இருக்குற Bank, இல்ல எதாவது கம்பெனி, "நான் செலவு செய்ய தயாரா இருக்கேன். எனக்கு இத செய்து கொடுங்கன்னு கேப்பாங்க.
இவங்கள நாங்க "Client"னு சொல்லுவோம்.
இவங்கள நாங்க "Client"னு சொல்லுவோம்.
"சரி"
இந்த மாதிரி Client-அ மோப்பம் பிடிக்குறதுக்காகவே எங்க பங்காளிக கொஞ்ச பேர அந்த அந்த ஊருல உக்கார வச்சி இருப்போம். இவங்க பேரு "Sales Consultants, Pre-Sales Consultants. ...". இவங்க போய் Client கிட்ட பேச்சுவார்த்தை நடத்துவாங்க.காசு கொடுக்குறவன் சும்மாவா கொடுப்பான்?
ஆயிரத்தெட்டு கேள்வி கேப்பான். உங்களால இத பண்ண முடியுமா?
அத பண்ண முடியுமான்னு அவங்க கேக்குற எல்லாம் கேள்விக்கும்,
"முடியும்"னு பதில் சொல்றது இவங்க வேலை."
அத பண்ண முடியுமான்னு அவங்க கேக்குற எல்லாம் கேள்விக்கும்,
"முடியும்"னு பதில் சொல்றது இவங்க வேலை."
அது சரி, இவங்க எல்லாம் என்னப்பா படிச்சுருப்பாங்க"?"
MBA, MSனு பெரிய பெரிய படிபெல்லாம் படிச்சி இருப்பாங்க."
முடியும்னு ஒரே வார்த்தைய திரும்ப திரும்ப சொல்றதுக்கு எதுக்கு MBA படிக்கணும்?"
அதானே –அப்பாவின் கேள்வியில் நியாயம் இருந்தது."
சரி இவங்க போய் பேசின உடனே client project கொடுத்துடுவானா?"
அது எப்படி? இந்த மாதிரி பங்காளிங்க எல்லா கம்பெனிங்கலேயும் . 500 நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 60 நாள்ளமுடிச்சு தரோம், 50 நாள்ல முடிச்சு தரோம்னு பேரம் பேசுவாங்க.இதுல யாரு குறைஞ்ச நாள சொல்றாங்களோ அவங்களுக்குப்ராஜெக்ட் கிடைக்கும்"
என்ன? 500 நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 50நாள்ல எப்படி முடிக்க முடியும்? ராத்திரி பகலா வேலை பார்த்தாலும் முடிக்க முடியாதே?"
இங்க தான் நம்ம புத்திசாலித்தனத்த நீங்கபுரிஞ்சிக்கணும். 50 நாள்னு சொன்ன உடனே client சரின்னு சொல்லிடுவான்.
ஆனா அந்த 50 நாள்ல அவனுக்கு என்ன வேணும்னு அவனுக்கும் தெரியாது, என்ன செய்யனும்னு நமக்கும் தெரியாது. இருந்தாலும் 50 நாள் முடிஞ்ச பிறகு ப்ரோஜெக்ட்னு ஒன்ன நாங்க deliverபண்ணுவோம்.
சரி... அப்போ ப்ராப்ளம் வராதா?
வருமே.... நாங்க தந்தத பாத்துட்டு "ஐய்யோ நாங்க கேட்டது இது இல்ல, எங்களுக்கு இது வேணும், அது வேணும்னு" புலம்ப ஆரம்பிப்பான்.
"இண்ட்ரெஸ்டிங், சரி அப்புறம்?" - அப்பா ஆர்வமானார்."
இப்போ தான் நாங்க நம்பியார் மாதிரி கைய பிசஞ்சிகிட்டே"இதுக்கு நாங்க CR raise பண்ணுவோம்"னு சொல்லுவோம்.
"CR-னா?" - இது அப்பா.....
அதாவதுப்பா, CR-னா, Change Request. இது வரைக்கும் நீ கொடுத்த பணத்துக்கு நாங்கவேலை பார்த்துட்டோம்.இனிமேல் எதாவது பண்ணனும்னா எக்ஸ்ட்ரா பணம் கொடுக்கணும்"னுசொல்லுவோம்.இப்படியே 50 நாள் வேலைய 500 நாள் ஆக்கிடுவோம்."
அப்பாவின் முகத்தில் லேசான பயம் தெரிந்தது.
"சரி, இதுக்கு அவன் சரின்னு சொல்லுவானா?"
ஹா...ஹா...ஹா.... சரின்னு சொல்லித்தானே ஆகணும். முடி வெட்ட சலூன்க்கு போய்ட்டு, பாதி முடிய மட்டும் வெட்டிட்டு வர முடியுமா?"
சரி ப்ராஜெக்ட் உங்க கைல வந்த உடனே என்ன பண்ணுவீங்க?"ன்னு அப்பா கேட்டார்....
என்ன பெருசா, நாங்க முதல்ல ஒரு டீம் உருவாக்குவோம். இதுல ப்ராஜக்ட் மேனேஜர்னு ஒருத்தர் இருப்பாரு.இவரது தான் பெரிய தலை. ப்ராஜெக்ட் சக்சஸ் ஆனாலும், ஃபெயிலியர் ஆனாலும் இவரு தான் பொறுப்பு."
"அப்போ இவருக்கு நீங்க எல்லாரும் பண்ற வேலை எல்லாம் தெரியும்னு சொல்லு."
"அதான் கிடையாது.
இவருக்கு நாங்க பண்ற எதுவும்யே தெரியாது."
"அப்போ இவருக்கு என்னதான் வேலை?"
–அப்பா குழம்பினார்.
"நாங்க என்ன தப்பு பண்ணினாலும் இவர பார்த்து கைய நீட்டுவோம். எப்போ எவன் குழிபறிப்பானு டென்ஷன் ஆகி டயர்ட் ஆகி டென்ஷன்ஆகுறது தான் இவரு வேலை."
"பாவம்பா"
"ஆனா இவரு ரொம்ப நல்லவரு. எங்களுக்கு எந்த பிரச்னை வந்தாலும் இவரு கிட்ட போய் சொல்லலாம்."
"எல்லா பிரச்னையும் தீர்த்து வச்சிடுவார?"
"ஒரு பிரச்சனைய கூட தீர்க்க மாட்டாரு. நாங்க என்ன சொன்னாலும் தலையாட்டிகிட்டே உன்னோட பிரச்னை எனக்கு புரியுதுனு சொல்றது மட்டும் தான் இவரோட வேலை."
"நான் உன்னோட அம்மா கிட்ட பண்றத மாதிரி?!"
"இவருக்கு கீழ டெக் லீட், மோடுல் லீட், டெவலப்பர், டெஸ்டர்னு நிறைய அடி பொடிங்க இருப்பாங்க."
"இத்தனை பேரு இருந்து, எல்லாரும் ஒழுங்கா வேலை செஞ்சாவேலை ஈஸியா முடிஞ்சிடுமே?""வேலை செஞ்சா தானே?
நான் கடைசியா சொன்னேன் பாருங்க... டெவலப்பர், டெஸ்டர்னு, அவங்க மட்டும் தான் எல்லா வேலையும் செய்வாங்க.அதுலையும் இந்த டெவலப்பர், வேலைக்கு சேரும் போதே "இந்த குடும்பத்தோட மானம்,மரியாதை உன்கிட்ட தான் இருக்குனு"சொல்லி, நெத்தில திருநீறு பூசி அனுப்பி வச்ச என்னைய மாதிரி தமிழ் பசங்க தான் அதிகம் இருப்பாங்க."
"அந்த டெஸ்டர்னு எதோ சொன்னியே? அவங்களுக்கு என்னப்பா வேலை?"
"இந்த டெவலப்பர் பண்ற வேலைல குறை கண்டு பிடிக்கறது இவனோட வேலை.
புடிக்காத மருமக கை பட்டா குத்தம்,
கால் பட்டா குத்தம் இங்குறது மாதிரி."
"ஒருத்தன் பண்ற வேலைல குறை கண்டு பிடிக்கறதுக்கு சம்பளமா? புதுசா தான் இருக்கு. சரி இவங்களாவது வேலை செய்யுராங்களா.சொன்ன தேதிக்கு வேலைய முடிச்சு கொடுத்துடுவீங்கள்ள?"
"அது எப்படி..? சொன்ன தேதிக்கு ப்ராஜக்டை முடிச்சி கொடுத்தா, அந்தக் குற்ற உணர்ச்சி எங்க வாழ்கை முழுவதும் உறுத்திக்கிட்டு இருக்கும். நிறைய பேரு அந்த அவமானத்துக்கு பதிலா தற்கொலை செய்துக்கலாம்னு சொல்லுவாங்க"
"கிளையன்ட் சும்மாவா விடுவான்? ஏன் லேட்னு கேள்வி கேக்க மாட்டான்?"
"கேக்கத்தான் செய்வான். இது வரைக்கும் டீமுக்குள்ளயே காலை வாரி விட்டுக்கிட்டு இருந்த நாங்க எல்லாரும் சேர்ந்து அவன் காலை வார ஆரம்பிப்போம்."
"எப்படி?"
"நீ கொடுத்த கம்ப்யூட்டர்-ல ஒரே தூசியா இருந்துச்சு. அன்னைக்கு டீம் மீட்டிங்ல வச்சி நீ இருமின, உன்னோட ஹேர் ஸ்டைல் எனக்கு புடிக்கலை."இப்படி எதாவது சொல்லி அவன குழப்புவோம். அவனும் சரி சனியன எடுத்து தோள்ல போட்டாச்சு, இன்னும் கொஞ்ச நாள் தூங்கிட்டு போகட்டும்னு விட்டுருவான்".
"சரி முன்ன பின்ன ஆனாலும் முடிச்சி கொடுத்துட்டு கைய கழுவிட்டு வந்துடுவீங்க அப்படித்தான?"
"அப்படி பண்ணினா, நம்ம நாட்டுல பாதி பேரு வேலை இல்லாம தான் இருக்கணும்."
"அய்யோ..... அப்புறம்?"
"ப்ராஜக்டை முடிய போற சமயத்துல நாங்க எதோ பயங்கரமான ஒன்ன பண்ணி இருக்குற மாதிரியும், அவனால அத புரிஞ்சிக்ககூட முடியாதுங்கற மாதிரியும் நடிக்க ஆரம்பிப்போம்."
"சரி....அப்புறம்?"
"அவனே பயந்து போய்,"எங்கள தனியா விட்டுடாதீங்க. உங்க டீம்-ல ஒரு ஒண்ணு, ரெண்டு பேர உங்க ப்ரொஜெக்ட பார்த்துக்க சொல்லுங்கன்னு" புது பொண்ணு மாதிரி புலம்ப ஆரம்பிச்சிடுவாங்க.
"இதுக்கு பேரு "Maintenance and Support". இந்த வேலை வருஷக்கணக்கா போகும்." ப்ராஜக்ட் அப்படிங்கறது ஒரு பொண்ண கல்யாணம் பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு வர்றது மாதிரி.
தாலி கட்டினா மட்டும் போதாது, வருஷ கணக்கா நிறைய செலவு செஞ்சு பராமரிக்க வேண்டிய விசயம்னு" இப்போ தான் கிளையன்டுக்கு புரிய ஆரம்பிக்கும்.
"ஆஹா...... எனக்கும் எல்லாம் புரிஞ்சிடுப்பா." இரு மொதல்ல தோளுக்கு மேல தலை இருக்கான்னு பார்க்கறேன்.... ஏன்னா, ரொம்ப நேரமா இந்த சுத்து சுத்துச்சே, அதான் இருக்கா, இல்ல கழண்டு விழுந்துடுச்சான்னு பார்க்கறேன்...
45 comments:
அட ஐடி யில இம்புட்டு விஷியம் இருக்கா?
ஏற்கெனவே படித்திருந்தாலும் திரும்பவும் படித்தேன், நல்ல நகைச்சுவை!
கோபி இது பதிவர் சிங்கக்குட்டி எழுதியது.. :-)
// Jaleela Kamal said...
அட ஐடி யில இம்புட்டு விஷியம் இருக்கா?//
********
வாங்க ஜலீலா.... ரமலான் நோன்பு எல்லாம் எப்படி போகுது!!
இம்புட்டு விஷயம் இருக்கு தான் போல இருக்கு.... உங்களோட சேர்ந்து நானும், இதை அனுப்பிய என் தோழமையிடம் கேட்கிறேன்...
//
பெயர் சொல்ல விருப்பமில்லை said...
ஏற்கெனவே படித்திருந்தாலும் திரும்பவும் படித்தேன், நல்ல நகைச்சுவை!//
வாங்க தல....
நீங்க சொன்னா சரிதான்.... நன்றி...
//கிரி said...
கோபி இது பதிவர் சிங்கக்குட்டி எழுதியது.. :-)//
********
வாங்க கிரி... வேலை ரொம்ப டைட் போல இருக்கே...
ஆஹா... அப்படியா... எனக்கு தெரிஞ்சு இருந்தா, கண்டிப்பா போஸ்ட் பண்ணி இருக்க மாட்டேன்.... நேற்று தான் எனக்கு ஃபார்வர்ட் மெயிலில் வந்தது... அதை அப்படியே பதிவாக்கினேன்....
"சுட்ட" பழமா? :-)
//Chitra said...
"சுட்ட" பழமா? :-)//
*********
வாங்க சித்ரா....
ஆஹா... கார்த்தாலயே ஆரம்பிச்சுட்டேளா!!?? நான் தான் பதிவின் ஆரம்பத்திலேயே இப்படி சொல்லி இருக்கேனே... பாருங்கோ..
//ஃபார்வர்ட் மெயிலில் வந்தது.... சில பல மாற்றங்களுடன், அப்படியே உங்கள் பார்வைக்கு....//
அதுவும் பத்தலேன்னா, நண்பர் கிரியின் கமெண்டுக்கு பதில் கமெண்ட் போட்டேனே... அக்கட சூடுங்கோ....
//jokkiri said...
//கிரி said...
கோபி இது பதிவர் சிங்கக்குட்டி எழுதியது.. :-)//
********
வாங்க கிரி... வேலை ரொம்ப டைட் போல இருக்கே...
ஆஹா... அப்படியா... எனக்கு தெரிஞ்சு இருந்தா, கண்டிப்பா போஸ்ட் பண்ணி இருக்க மாட்டேன்.... நேற்று தான் எனக்கு ஃபார்வர்ட் மெயிலில் வந்தது... அதை அப்படியே பதிவாக்கினேன்....//
நன்றி.......... யப்பா... மூச்சு வாங்குது.....
இந்த பதிவிற்கு இண்ட்லியில் வாக்களித்து பதிவை பிரபலமாக்கிய தோழமைகள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி....
faaique
ganga
desikadasan
venkatesan1970
fightforright
chitrax
venkatnagaraj
anubagavan
chuttiyaar
balak
amalraaj
VGopi
paarvai
vilambi
MVRS
urvivek
jegadeesh
ashok92
hihi12
kvadivelan
இந்தியாவில் ஐ.டி துறையில் தமிழகத்தின் பங்களிப்பு மட்டும் 29 சதவிகிதமாம்.. இது ஆரோக்யமானது என்றாலும் பொருளாதார ஏற்றத்தாழ்வு இதன் மூலம் அதிகரிக்க வாய்ப்புள்ளது
//இந்திரா said...
இந்தியாவில் ஐ.டி துறையில் தமிழகத்தின் பங்களிப்பு மட்டும் 29 சதவிகிதமாம்.. இது ஆரோக்யமானது என்றாலும் பொருளாதார ஏற்றத்தாழ்வு இதன் மூலம் அதிகரிக்க வாய்ப்புள்ளது//
******
வாங்க இந்திரா...
ஒன்றை பெற ஒன்றை இழப்பது தானே உலக நியதி.... இதில் ஐ.டி.மட்டும் என்ன விதிவிலக்கு!!??
Aaha... Arumai.
Neengalum IT dhana?
//mrs.krishnan said...
Aaha... Arumai.
Neengalum IT dhana?//
******
Welcome Mrs.Krishnan.....
Sorry Madam... I am not in IT related employment.....
ஏனுங்கன்னா இந்த வாறு வாறீங்க.. எனக்கு அழுகாச்சியா வருது.. உம்.....
அன்புடன் ஆர்.வி.எஸ்.
nice post
enjoyed reading
//RVS said...
ஏனுங்கன்னா இந்த வாறு வாறீங்க.. எனக்கு அழுகாச்சியா வருது.. உம்.....
அன்புடன் ஆர்.வி.எஸ்.//
*********
வாங்க ஆர்.வி.எஸ்.சார்...
அப்படியா ரொம்ப வாரிட்டேன்... நான் தலைய கூட கொஞ்சமா தானே எப்போவும் வாரறேன்...
//பத்மா said...
nice post
enjoyed reading//
*******
வாங்க பத்மா...
வருகை தந்து, பதிவை படித்து கருத்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி...
ஐடியில இருக்கும் கஷ்ட நஷ்டங்களை ந்ல்ல நகைச்சுவையுடன் பகிர்ந்து கொண்டு உள்ளீர்கள் நீங்களூம்,சிங்ககுட்டியும்.
பதிவுலகத்துக்கு புதியவன்..!
தங்கள் போன்றவர்களின் பின்னூட்டங்கள் என்னை மேலும் ஊக்கிவிக்கும்..!
எனது பக்கம் உங்கள் பார்வைக்கு
http://vetripages.blogspot.com
ஐ.டியில் உள்ள கஷ்ட நஷ்டங்களை நல்ல நகைச்சுவையுடன் விளக்கி உள்ளீர்கள்.
ஒவ்வொரு தொழிலும் ஒவ்வொரு
மாதிரி.
“ முடியும்னு ஒரே வார்த்தைய திரும்ப திரும்ப சொல்றதுக்கு எதுக்கு MBA படிக்கணும்?"
படிக்கும்போது சிரிப்பு தாங்கவில்லை. நல்ல பதிவு!!
நல்ல நகைசுவை....ரசித்தேன்.
வோட் அளித்தவர்களுக்கு நன்றி சொன்னது வித்தியாசமாக இருந்தாலும் நல்ல உணர்வு. அதற்கு என் வாழ்த்துக்கள்.
ஹா ஹா ஹா.. நல்லா இருக்குங்க.. :-)))
இப்படி தான் என் கொழுந்தனார் பிராஜக்ட் பண்ணிட்டு இருக்கார்.
நல்லா தான் இருக்கு.
நல்ல நகைச்சுவை
நல்ல பதிவு
அன்புள்ள கோபி அவர்களுக்கு!
உங்களை தொடர் பதிவில் பங்கேற்க அழைத்துள்ளேன் இன்றைய என் பதிவில்!
http://www.muthusidharal.blogspot.com/
கலக்கல்
அது சரி பல்லு இருக்குறவன் பக்கோடா சாப்பிடுறான்".//-;))
எனக்கு ஐ.டி பற்றி பல விசயங்கள் புரிய வைத்து விட்டது இந்த பதிவு நன்றி
//கோமதி அரசு said...
ஐடியில இருக்கும் கஷ்ட நஷ்டங்களை ந்ல்ல நகைச்சுவையுடன் பகிர்ந்து கொண்டு உள்ளீர்கள் நீங்களூம்,சிங்ககுட்டியும் //
*****
வாங்க கோமதி மேடம்.... சிங்கக்குட்டி இதே போன்ற பதிவை எழுதியிருந்தது தெரிந்திருந்தால், நான் இதை பதிவிட்டு இருக்கவே மாட்டேன்.. இதையே கிரி அவர்களிடமும் சொன்னேன்...
//♥♪•வெற்றி - VETRI•♪♥ said...
பதிவுலகத்துக்கு புதியவன்..!
தங்கள் போன்றவர்களின் பின்னூட்டங்கள் என்னை மேலும் ஊக்கிவிக்கும்..!
எனது பக்கம் உங்கள் பார்வைக்கு
http://vetripages.blogspot.com//
******
வாங்க வெற்றி.... புதிய வலை பின்னியதற்கு வாழ்த்துக்கள்... தங்கள் வலையை பார்வையிட இதோ வருகிறேன்...
வாழ்த்துக்கள்...
//கோமதி அரசு said...
ஐ.டியில் உள்ள கஷ்ட நஷ்டங்களை நல்ல நகைச்சுவையுடன் விளக்கி உள்ளீர்கள்.
ஒவ்வொரு தொழிலும் ஒவ்வொரு
மாதிரி//
********
வாங்க கோமதி மேடம்...
சரியாக சொன்னீர்கள்... வருகை தந்து கருத்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி..
//
மனோ சாமிநாதன் said...
“ முடியும்னு ஒரே வார்த்தைய திரும்ப திரும்ப சொல்றதுக்கு எதுக்கு MBA படிக்கணும்?"
படிக்கும்போது சிரிப்பு தாங்கவில்லை. நல்ல பதிவு!!//
*******
வாங்க மனோ மேடம்...
யெஸ்... சிலவற்றை படிக்கும் போதே, நமக்குள் சிரிப்பு தொற்றிவிடும்.. இதுவும் அது போல் தான்... அதான், ஒரு பதிவாகவே இட்டு விட்டேன்..
// Kousalya said...
நல்ல நகைசுவை....ரசித்தேன்.
வோட் அளித்தவர்களுக்கு நன்றி சொன்னது வித்தியாசமாக இருந்தாலும் நல்ல உணர்வு. அதற்கு என் வாழ்த்துக்கள்//
**********
வாங்க கௌசல்யா... வருகை தந்து, பதிவை படித்து, ரசித்து சிரித்தமைக்கு மிக்க நன்றி....
ஓட்டு போடுபவர்களுக்கு நம்மூர் அரசியல்வாதிகள் தான் நன்றி சொல்வதில்லை... குறைந்தபட்சம், நாமாவது நம் தோழமைகளுக்கு நன்றி சொல்வோம் என்று நினைத்து சொல்ல ஆரம்பித்தது, அந்த வழக்கம் அப்படியே தொடர்கிறது...
இதை குறிப்பிட்டு பாராட்டியமைக்கு என் மனமார்ந்த நன்றி கௌசல்யா...
//Ananthi said...
ஹா ஹா ஹா.. நல்லா இருக்குங்க.. :-)))//
*******
வாங்க ஆனந்தி....
நல்ல நகைச்சுவை ரசிகை போலிருக்கிறதே... ரசித்து படித்து வாய் விட்டு சிரித்தமைக்கு மிக்க நன்றி...
// sindhusubash said...
இப்படி தான் என் கொழுந்தனார் பிராஜக்ட் பண்ணிட்டு இருக்கார்.
நல்லா தான் இருக்கு.//
*********
வாங்க சிந்துசுபாஷ்....
வாங்க .... வாங்க.... ஆஹா... உங்க கொழுந்தனாரும் இப்படி தான் ப்ராஜக்ட் பண்ணி மாட்டிட்டு இருக்காரா...
//தியாவின் பேனா said...
நல்ல நகைச்சுவை
நல்ல பதிவு//
*******
வாங்க தியா... எப்படி இருக்கீங்க...
பதிவை ரசித்து படித்து, வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி...
//
மனோ சாமிநாதன் said...
அன்புள்ள கோபி அவர்களுக்கு!
உங்களை தொடர் பதிவில் பங்கேற்க அழைத்துள்ளேன் இன்றைய என் பதிவில்!
http://www.muthusidharal.blogspot.com//
*********
மனோ மேடம்...
இதோ வந்து பார்க்கிறேன்...
// இளையராஜா said...
nice
தியாவின் பேனா said...
கலக்கல்//
********
மிக்க நன்றி இளையராஜா (ஆஹா.. எனக்கு மிகவும் பிடித்த இசையமைப்பாளரின் பெயரே உங்களுடைய பெயரும்... சூப்பர்)...
வாங்க தியா... பாராட்டுக்கு மிக்க நன்றி...
//ஆர்.கே.சதீஷ்குமார் said...
அது சரி பல்லு இருக்குறவன் பக்கோடா சாப்பிடுறான்".//-;))
ஆர்.கே.சதீஷ்குமார் said...
எனக்கு ஐ.டி பற்றி பல விசயங்கள் புரிய வைத்து விட்டது இந்த பதிவு நன்றி//
*******
வாங்க சதீஷ்... பதிவிற்கு வருகை தந்து, பதிவை படித்து, பாராட்டியமைக்கு மிக்க நன்றி...
அடுத்த எந்திரன் போஸ்டிங் எப்போ தலைவா?
வாங்க கோபி எனன் திடீர் பயண போய் வந்தாச்சு.
தொடர்பதிவுக்கு அழைத்தோமே, போட்டீங்களான்னு நானும் இரண்டு முன்று முறை வந்து பார்த்தேன்.
ஓ இதான் விஷியமா?
வந்த்தும் உடன் கமெண்டுக்கு மிகக் சந்தோஷம்..
ஃபார்வர்டு மெயிலில் வந்தாலும் அதையும் எங்களுக்குப் புரியற மாதிரி நல்லாவே விளக்கியிருக்கிங்க.....
//goma said...
ஃபார்வர்டு மெயிலில் வந்தாலும் அதையும் எங்களுக்குப் புரியற மாதிரி நல்லாவே விளக்கியிருக்கிங்க....//
********
வாங்க கோமா....
ரொம்ப நாள் கழிச்சு நம்ம வலைப்பக்கம் வந்திருக்கீங்க... அதற்காக ஒரு நன்றி..
பதிவை படித்து கருத்து சொன்னமைக்கு இன்னொரு நன்றி...
enna aalaiyee kaanum, pahtivum kaanum
//Jaleela Kamal said...
enna aalaiyee kaanum, pahtivum kaanum//
******
வந்தாச்சு... அதிரடியா ரெண்டு பதிவும் போட்டாச்சு....
Post a Comment