வெற்றியின் விழுதுகள் – (பகுதி-4)

வாசகத் தோழமைகளே.... தாங்கள் தரும் பின்னூட்ட ஊக்கத்திற்கு நெஞ்சார்ந்த நன்றிகள். ஆனாலும் ஒரு ரிக்வெஸ்ட் உண்டு. இதை வெறும் தகவலாகவோ அல்லது நல்ல சிந்தனையாகவோ மட்டும் கொள்ளாமல், ஒரு சின்னஞ்சிறிய செயல் திட்டம் இருக்க வேண்டும் என உரிமையாய் கேட்கிறோம்.

ஏன்னா பாருங்க, என்ன மொக்கையா, அரதப் பழசா ஒரு மெயில் கம்போஸ் பண்ணி அனுப்புனாலும். உங்க இன்பாக்ஸ்ல வந்து அது எண்ட்ரி குடுக்கும் போது, நியூ மெயில் என்றுதானே வரும். அத மாதிரி, வர்ற மெயில பார்த்து ஆக்‌ஷன் எடுத்தாத்தான் ஷேமம், இல்லாம கூட்டீஸ்ல தள்ளிவிட்டுட்டா யூஸ் இல்ல.

முந்தைய நம் பாகங்கள் படித்து பிரச்சனையின் ஆழ செல்லும் சாணக்கியத்தனம் நமக்கு வந்ததா, எது வேண்டும் என தீர்மானித்து கிடைத்த வாய்ப்பை கெட்டியாக பிடித்த பாபா அம்பேத்கர் திடம் நமக்கு வந்துச்சா. பதிவு படித்த பின் ஒய்வான நேரத்தில் இது குறித்து யோசித்தீர்களா, 5 WHY எக்ஸ்பெரிமெண்ட் செய்தீர்களா, பச்சை மிளகாய் கடித்தீர்களா, எதுவும் புதியதாய் தோன்றியதா, ஏதேனும் மாறுதல் நிகழ்ந்ததா.

ஆக்கபூர்வமான ஆரோக்கியமான நட்பில் உயர்ந்த ஒரு தலைமுறை உருவாக்க நாம் ஒன்று படுவோம், பாடுபடுவோம். இந்த பகுதியில நாம பார்க்கிற தகவலை உள் வாங்கி, தனித்திருந்து சிந்தித்து அதை நடைமுறைப் படுத்தினால் மிகப் பெரிய மாற்றம் வரும். சரிங்க செய்துறலாம் என சொல்லிவிட்டு, இன்றைய பகுதியை பார்ப்போம்.

நமக்கு ஆறு அறிவுங்க, ஆறாம் அறிவாம் பகுத்தறிவே நம்மை விலங்கிலிருந்து வேறுபடுத்தியது. என்றாலும் எத்தனை கணங்களில் நாம் நமது ஆறாவது அறிவை உபயோகப்படுத்தினோம் எனும் கேள்வி கேட்க வைத்த ஒரு மனிதரை இப்பகுதியில் பார்ப்போம்.

புத்தன், யேசு, காந்தி பிறந்தது பூமியில் எதற்காக என பாடல் ஒலிக்கும் போது, மூன்றாவதாய் சொல்லும் ஒரு மனிதனுக்கு இத்தனை பெரிய அங்கீகாரமா. யார் அவர், மிகப் பெரிய ஆன்மா உடையவன் மகா ஆத்மா என எல்லாராலும் அன்புடன் அழைக்கப்பட்ட மகாத்மா.

சர்வதேச அரங்கிலே இந்தியா என்றவுடன் ஆங்... தெரியுமே, குட் கண்ட்ரி.... என்று சொல்பவர்கள் எல்லோரும் அடுத்ததாய் தெரியும் என்று சொல்வது காந்தியை தான். ஓ நம்ம காந்தி தாத்தாவை சொல்கிறீர்களா என யோசிக்கும் வாசகர்களில் ஒருவர் கேட்கிறார், காந்தி தாத்தா, நேரு மாமா, பேரறிஞர் அண்ணா, அப்ப பெரியப்பா சித்தப்பா எல்லாம் யாரு.... என கேட்டவருக்கு நீங்க தாட்டுல பின்னுறீங்களே, உங்ககிட்ட சாட்...பூட்...த்ரீ போடட்டுமா என எதிர் கேள்வி கேட்டோம்.

சுதந்திரம் வாங்கித் தந்தாரு, அஹிம்சை போதித்தாரு என தெரிந்த தகவல்களில் நிற்காமல் சில அடிப்படைகள் மட்டும் பார்ப்பது நம் இப்பகுதியின் இலக்கு. சூப்பரா படித்து முடிச்சுட்டு, ஒரு ஒப்பந்தத்தின் பேரில் தென்னாப்பிரிக்கா வந்து இறங்கியவர், தலைவிரித்தாடும் இனதுவேஷம் பார்க்கிறார். அவமானப் பட்டு, அடி பட்டு அதை வெல்ல முடிவு செய்கிறார். எடுத்த முடிவு தான் வித்தியாசம்.

அவர் சொன்ன திட்டம்; திடம், தைரியம், அதுவே பல சாதனைகளுக்கு வழி வகுத்தது என்றால் அது மிகையில்லை...

அடிக்க வருபவரை திருப்பி தாக்குவது மிருக குணம் என்றால், அடி வாங்கியவன் அதை உள்வாங்கி வன்மம் வளர்ந்து பழிவாங்குதலும் மிருக குணமே. ஆனால், ஆறாவது அறிவு படைத்த மனிதன் செய்ய வேண்டியது அஹிம்சை. தாக்குதலுக்கு அஞ்சாமல், நம் தீர்மானத்தில் பின் வாங்காமல் போராட வேண்டும் எனும் புதிய பாதை.

ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தை காட்டு எனும் புனிதரின் தத்துவம். ஆனால் காந்தியிடத்தில் உள்ள மந்திரக் கோல் தான் புரியவில்லை. அது எப்படி அடி வாங்கி, அமைதியாயிரு, உன் நிலையில் உறுதியாயிரு அன்புடன் போராடு என சொன்னார், அதையும் எல்லா மக்களும் ஏற்றுக் கொள்ள வைத்தார் என்பது இன்னும் புரியவில்லை.

தென்னாபிரிக்காவின் 21 வருட வெற்றி, மனிதர்களை இணைப்பது எப்படி எனும் வித்தையை அவருக்கு சொல்லி கொடுத்தது. இந்திய மண்ணில் கால் பதித்த போது, சுதந்திரப் போராட்டம் முழு வீச்சில் இருக்கிறது. வாங்க தலைவா உங்களுக்காகத்தான் காத்திருக்கிறோம், வந்து ஜோதியில கலந்துக்கோங்க என எல்லோரும் வேண்ட, அவர் ஒரு அதிரடி முடிவு செய்கிறார்.

திலகரின் ஆலோசனைப்படி 6 மாதம் காஷ்மீரம் தொடங்கி கன்னியாகுமரி வரை பயணம் மேற்கொள்கிறார். அவர் வாழ்வின் முக்கிய திருப்பமே அவரது இந்த பயணம்தான்.

எல்லா மகான்களின் வாழ்விலும் இப்படி ஒரு தேடல் இருக்கிறது. என்ன செய்வது என்ற தெளிவு இல்லாத போது, விடை தேடி பயணம் செல்வது... ஆனாலும், இதை போன்ற உண்மையான தேடலுடன் சென்றவர்கள் அனைவரும் தேடியதை கண்டு கொண்டே திரும்பினார்கள் என்கிறது வரலாற்று உண்மை.. வாசகத் தோழமையே, நாங்களும் கிளம்பிட்டோம் என தாங்களும் பெட்டி கட்டி கிளம்பினால்... ஆ.... கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யான்னு விசில் அடிப்போம்.

விவேகானந்தர் , அப்படி ஒரு முயற்சியில் தான் குமரி வந்து கன்னியாகுமரி பாறையில் தவம் செய்தார். ஒவ்வொரு நாளும் கரையிலிருந்து நீந்தி ஒரு பாறையில் வந்தமர்ந்து விடை தேடினார். நான் ஆன்மீக பலம் பெற்று விட்டேன், அது என் குருவருள். ஆனாலும் எனது இந்த ஆன்மிக பலத்தை வைத்து என்ன செய்ய என கேள்வி கேட்டார், என் வாழ்வின் திசை எது என்ற கேள்வியில் மூழ்கினார்.

வாழ்வின் திசை எது என்ற கேள்வியோடு பயணித்தார் காந்தி. ஆறு மாதம் காஷ்மீரம் தொடங்கி கன்னியாகுமரி வரை பயணித்து தீர்மானம் எடுத்து தன்னை மாற்றினார்... தன் இலக்கு கண்டார். மேற் சட்டை களைந்து, வட்ட வடிவ கண்ணாடி இட்டு, இடையில் உடுத்திய கதராடை, கையில் ஒரு ஊன்றுகோல் என தன்னை அறிவித்துவிட்டு, தலை முடியும் துறந்து ஒரு துறவி போலானார்.


வெள்ளைக்காரன் வட்டமா மேசை போட்டு மாநாடு நடத்தினப்போ, நம்மாளு வேட்டியும் துண்டுமா போறார். ஹேய்... ஹாஃப் நேக்கட் பக்கிரி என காந்தியை ஜோக்கிரி பண்ணி சிரிக்கிறார்கள். ஆனால், இவர் கலங்கவில்லை, வெட்கப்படவில்லை. அரையுடை வேணாங்க குளிரும்ங்க என அக்கறையாய் சொன்ன அட்வைஸில் கூட கரையவில்லை. தான் எடுத்த முடிவில் திடமாய் இருந்து எளிமையே என் ஆயுதம் என முடிவு எடுத்தவர், அடுத்தவர் கேலியில் தன்னை இழக்கவில்லை.

ஒரு சின்ன எக்ஸ்பெரிமெண்ட், நம்மை உற்று நோக்குவோமே. நம் உடை, அணிகலன், உபகரணம், வீடு எல்லாம் சுற்றிப் பார்ப்போம். இதில் நாம் ஆசைப்பட்டு அமைத்துக் கொண்டது ஒரு பிரிவு, சமூக நிர்பந்தத்துக்காக இணைத்துக் கொண்ட்து மற்றது. வேட்டிய கட்டிக்கிட்டு வெயில் காலத்தில தூங்கலாம், அதுவே வெள்ளைக்காரன் கம்பெனில வைஸ் பிரசிடண்ட் ஆகணும்னா, அடாத வெயில்லயும் விடாது கோட் சூட் மாட்டோணும், கழுத்தை இறுக்கற டை கட்டோணும்.... தஸ்....புஸ்..னு பேசோணும்...

அதனால சமூக நிர்பந்தம் எனும் மேட்டர இப்போதைக்கு விலக்கி வைப்போம். நமக்குள் மட்டும் பார்ப்போம். எளிமையான அத்தியாவசியமான வாழ்க்கை முறையை நாம் கடைப்பிடிக்க தொடங்கினால் எப்படி. ??!!

யோவ்... எனக்கு தேவை இதுதான்யா, உனக்காக இல்லை, எனக்காக நான் வாழுறேன், என சமூகத்தை பார்த்து சொல்லும் திடம் நமக்கு வந்தால் எப்படி.

காந்தியை பற்றி புரிந்து கொள்ள இன்னொரு சம்பவம். சுதந்திரம் வாங்கியாச்சுல்ல அப்புறம் என்னய்யா, கலையுங்கய்யா காங்கிரஸை என அவர் கர்ஜித்த போது அவர் விரும்பியது அரசியல் அல்ல, பதவி அல்ல, சமூகத்தை என்பது நமக்கு புரிகிறது.

சுதந்திரம் வாங்கி, எல்லோரும் குதூகலித்த போது, நட்ட நடு இரவில் உடலெங்கும் நகைகளோடு கன்னிப்பெண் ஒருவள் தன்னந்தனியே பயமில்லாமல் நடமாட முடியுமா என எதிர் கேள்வி கேட்டார். அப்படி ஒரு சுதந்திரம் வேண்டும் என்றார். அவர் விரும்பியது மாறுபட்ட பண்பட்ட மனிதாபிமானமுள்ள சமூகத்தை. திருடு, கற்பழிப்பு, இல்லாத அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படாத மனிதர்களை வேண்டும் என்றார்.

எப்படி? பெண்ணை மதிக்கின்ற ஆண் சமூகம் வேண்டும், பெண் தன் கற்பை பாதுகாக்க வேண்டுமே என பயப்படாமல் சுதந்திரமாய் இருக்க வேண்டும். கள்ளன் போலீஸ் இல்லாத சமூகம் வேண்டும். இது தானே அவர் ஆசைப்பட்டது...!!

ராத்திரியில டர்...டுர்ன்னு ஒரு பஸ் போகுது. நடு ராத்திரிங்கிறதால எல்லாரும் கொறட்டை விட்டு தூங்கினாங்க, பஸ்ஸு பக்கத்தில உள்ள சுவருல இடிச்சு நின்னுடுச்சு. விசாரிக்க வந்த போலீசு எல்லார் கிட்டயும் கேட்டார், சாரிங்க நாங்க தூங்கிட்டோம் என்ன நடந்துச்சுன்னு தெரியலன்னாங்க. நம்ம போலீசு டிரைவர்கிட்ட கேட்டார், ஏம்ப்பா, என்ன நடந்துச்சுன்னு. அவர் சொன்னார் ‘ என்ன நடந்துச்சுன்னு எனக்கு சத்தியமா தெரியலேங்க, எனக்கு கூட நல்ல தூக்கம்’ என்றாராம். இதை கேட்ட போலீஸ் சொன்னது “ஙே”....

ஒரு வண்டி ஓடும்போது எல்லாரும் தூங்கலாம் ஆனா, அந்த வண்டியை ஓட்டற டிரைவர் தூங்கலாமா?. நாடே இப்படித்தானப்பா இருக்கு என்ன ஏன் மாறச் சொல்றீங்க, ஊரோடு ஒத்து வாழுறேன் என்றால், அவர்களுக்கு இக்கதை தோதுப்படும். மற்றவரை விடுவோம், நம்ம பஸ்ஸூக்கு நாம தான் டிரைவர், வாங்க பஸ் ஏறி, கியர் மாற்றி..... கூடவே நாமும் மாறுவோம்.

ஒரு சின்ன ஆர்கியூமெண்ட் நமக்குள்ள, இப்படி வைச்சுக்குவோமே. நீங்க ஒரு முடிவு எடுக்குறீங்க, இனிமேல் எளிமையா கதர்ல ஆடை மட்டும் உடுத்துவேன்னு. என்ன ஆகும், விலையும் கம்மி, நம்ம நாட்டு சீதோஷ்ணத்துக்கும் சூப்பர். உங்க துணிய நீங்களே துவைச்சு, உங்கள் கழிவறைய நீங்களே சுத்தம் செஞ்சு, யாரோட உதவியும் இல்லாம ஒரு சுயாட்சி. அப்புறமா பதவி ஆசை இல்லாம, அடுத்தவன் சொத்துக்கு ஆசைப்படாம போதுமென்ற மனசே பொன் செய் மருந்து என நினைத்தால் மிகப் பெரிய சமுதாய மாற்றம் வரும்.

காந்தி கண்ட கனவு தேசம் சாத்தியமா, சத்தியமா காந்தி கண்ட அந்த லட்சிய ஆணாய், பெண்ணாய் நாம் இருக்க சாத்தியம் உண்டு. திருப்பி தாக்காத, அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படாத, போராடும் குணம் உடைய மனிதராய் நாம் ஆகணும். அதை செய்தால், காந்தி கண்ட அந்த கனவு தேசம், இன்று இல்லையேல் நாளை “நனவு தேசம்” ஆகும்.... அது என்ன நனவு தேசம்.... கனவில் கண்டது நனவில் வந்தால் / நிகழ்ந்தால் அதுவே நனவு தேசம்...!!??

ஆறாம் அறிவின் பரிமாணம் உணர்வோம், அண்ணலின் வாழ்வின் சாராம்சமாக ஒரு வரி நினைவில் கொள்வோம், அஹிம்சையை கை கொள்வோம்,

அன்பால் இந்த உலகை வெல்ல முடியுமா.... ??

முடியுமா ???? ...... முடியும்....ம்...ம்மா!!

நம் இருட்டு விடியும், பளீர் வெளிச்சம் பிறக்கும்.... இன்னல் விலகும்.........இனிமை பிறக்கும்.... வளமை சேரும்... மகிழ்ச்சி பெருகும்...

(லாரன்ஸ் / ஆர்.கோபி)

தொடரும்.....

19 comments:

கோமதி அரசு said...

கோபி,உங்கள் திட்டங்களை நடைமுறை படுத்துவோம்,நம்புங்கள்.

தேடுங்கள் கிடைக்கும்.(நம்முள்)

பஸ் கதை அருமை,சிந்திக்க சிரிக்க வைத்தீர்கள்.

//பெண்ணை மதிக்கின்ற ஆண்சமூகம்
வேண்டும்//
ஆம்,வேண்டும்.
மகிழ்ச்சி பெருகட்டும்.
வாழ்த்துக்கள்,உங்கள் இருவருக்கும்.

கோமதி அரசு said...

அன்பால் உலகை வெல்லலாம்.

முடியும்.

Chitra said...

அன்பால் இந்த உலகை வெல்ல முடியுமா.... ??

முடியுமா ???? ...... முடியும்....ம்...ம்மா!!


.......... very good!

Unknown said...

அன்பால் மட்டுமே உலகை வெல்ல முடியும். அருமையான பதிவு.

R.Gopi said...

தொடர் ஊக்கமும், உற்சாகமும் அளிக்கும் தோழமைகளே... உங்கள் அனைவருக்கும் எங்களின் மனமார்ந்த நன்றி....

கோமதி மேடம்....
சித்ரா
ரமா (முதல் வருகையோ!!)

தங்களின் வருகையும், வாழ்த்துமே எங்களை உற்சாகப்படுத்துகிறது...

மிக்க நன்றி....

Anonymous said...

//ஏன்னா பாருங்க, என்ன மொக்கையா, அரதப் பழசா ஒரு மெயில் கம்போஸ் பண்ணி அனுப்புனாலும். உங்க இன்பாக்ஸ்ல வந்து அது எண்ட்ரி குடுக்கும் போது, நியூ மெயில் என்றுதானே வரும். அத மாதிரி, வர்ற மெயில பார்த்து ஆக்‌ஷன் எடுத்தாத்தான் ஷேமம், இல்லாம கூட்டீஸ்ல தள்ளிவிட்டுட்டா யூஸ் இல்ல.//


என்னம்மா யோசிக்கிறீங்க இது ரொம்ப நல்லாயிருக்கு கோபி..விசு வசனத்தை நினைவூட்டியது..உங்க பாஷையில சொல்லனுமின்னான்னு சொல்வார் ஒரு திரைப்படத்தில் அந்த மாதிரி இந்த காலகட்டதுக்கு ஏத்த மாதிரி பன்ச் பளிச்...

R.Gopi said...

// தமிழரசி said...
//ஏன்னா பாருங்க, என்ன மொக்கையா, அரதப் பழசா ஒரு மெயில் கம்போஸ் பண்ணி அனுப்புனாலும். உங்க இன்பாக்ஸ்ல வந்து அது எண்ட்ரி குடுக்கும் போது, நியூ மெயில் என்றுதானே வரும். அத மாதிரி, வர்ற மெயில பார்த்து ஆக்‌ஷன் எடுத்தாத்தான் ஷேமம், இல்லாம கூட்டீஸ்ல தள்ளிவிட்டுட்டா யூஸ் இல்ல.//


என்னம்மா யோசிக்கிறீங்க இது ரொம்ப நல்லாயிருக்கு கோபி..விசு வசனத்தை நினைவூட்டியது..உங்க பாஷையில சொல்லனுமின்னான்னு சொல்வார் ஒரு திரைப்படத்தில் அந்த மாதிரி இந்த காலகட்டதுக்கு ஏத்த மாதிரி பன்ச் பளிச்...//

********

மிக்க நன்றி தமிழரசி...

வருகை தந்து, பதிவை படித்து, பாராட்டிய தோழமைக்கு எங்களின் மனமார்ந்த நன்றி...

அண்ணாமலையான் said...

நிச்சயம் முடியும்

R.Gopi said...

//அண்ணாமலையான் said...
நிச்சயம் முடியும்//

********

வாங்க அண்ணாமலையான்....

ஒரே வார்த்தையாயினும், அதில் சரவெடியை பற்ற வைக்கும் கலையை உங்களிடம் தான் கற்க வேண்டும்...

பதிவின் சாராம்சத்தை அந்த ஒற்றை வார்த்தையில் அடக்கி விட்டீரே...!!

நினைவுகளுடன் -நிகே- said...

அன்பால் மட்டுமே உலகை வெல்ல முடியும். அருமையான பதிவு.

R.Gopi said...

//நினைவுகளுடன் -நிகே- said...
அன்பால் மட்டுமே உலகை வெல்ல முடியும். அருமையான பதிவு.//

********

வாருங்கள் நிகே...

வந்து, பதிவை படித்து கருத்து சொன்னமைக்கு எங்களின் மனமார்ந்த நன்றி...

பெசொவி said...

காந்திய சிந்தனைகள் நிரம்பிய பதிவு. வாழ்த்துகள் கோபி!

R.Gopi said...

//பெயர் சொல்ல விருப்பமில்லை said...
காந்திய சிந்தனைகள் நிரம்பிய பதிவு. வாழ்த்துகள் கோபி!//

*********

வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி தலைவா....

Jaleela Kamal said...

//அடுத்தவன் சொத்துக்கு ஆசைப்படாம போதுமென்ற மனசே பொன் செய் மருந்து என நினைத்தால் மிகப் பெரிய சமுதாய மாற்றம் வரும்.//


அருமையான பகிர்வு,



இவ்வளவு சிரமமப்பட்டு நீங்களும் உங்கள் நண்பர் லாரன்ஸும் பதிவை அலசி ஆராய்ந்து போட்டு இருக்கீங்க,
கண்டிப்பா எல்லோரும் படிக்க வேண்டிய பதிவு.

இருவருக்கும் வாழ்த்துக்கள்

R.Gopi said...

//Jaleela said...
//அடுத்தவன் சொத்துக்கு ஆசைப்படாம போதுமென்ற மனசே பொன் செய் மருந்து என நினைத்தால் மிகப் பெரிய சமுதாய மாற்றம் வரும்.//

அருமையான பகிர்வு,

இவ்வளவு சிரமமப்பட்டு நீங்களும் உங்கள் நண்பர் லாரன்ஸும் பதிவை அலசி ஆராய்ந்து போட்டு இருக்கீங்க,
கண்டிப்பா எல்லோரும் படிக்க வேண்டிய பதிவு.

இருவருக்கும் வாழ்த்துக்கள்//

********

வாங்க ஜலீலா மேடம்...

நெடு நாட்களுக்கு பிறகு வருகை தந்து, பதிவை படித்து எங்கள் இருவரையும் பாராட்டியமைக்கு எங்களின் மனம் கனிந்த நன்றி...

பனித்துளி சங்கர் said...

அருமையான சிந்தனை !

மீண்டும் வருவான் பனித்துளி

R.Gopi said...

// ♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
அருமையான சிந்தனை !

மீண்டும் வருவான் பனித்துளி//

*******

நன்றி மீண்டும் வருக பனித்துளி சங்கர்...

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

நல்ல பதிவு கோபி. தாமதமாக வந்து படித்திருக்கிறேன். நீங்கள் இருவரும் மிக சுவாரசியமாக ஆழமான விடயங்களைச் சொல்லியிருக்கிறீர்கள் . மீதித் தொடரை பின்னர் வந்து படிக்கிறேன். இப்போ எங்களுக்கு பாடசாலை விடுமுறை.

R.Gopi said...

//ஜெஸ்வந்தி said...
நல்ல பதிவு கோபி. தாமதமாக வந்து படித்திருக்கிறேன். நீங்கள் இருவரும் மிக சுவாரசியமாக ஆழமான விடயங்களைச் சொல்லியிருக்கிறீர்கள் . மீதித் தொடரை பின்னர் வந்து படிக்கிறேன். இப்போ எங்களுக்கு பாடசாலை விடுமுறை.//

*********

வாங்க ஜெஸ்...

நீண்ட நாட்களுக்கு பிறகு தங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி...

பாடசாலை விடுமுறை கழிந்து அனைத்து பதிவுகளையும் படித்து கருத்து பகிருமாறு அன்புடன் வேண்டுகோள் விடுக்கிறோம்...