சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம் என்ற ("தல" தேர்தல் அறிக்கை) பாணியில் சொல்லி அதை செய்தும் விட்டது. 9999, அதாங்க, 2009 செப்டம்பர் 9ம் தேதி, 9 மணிக்கு ரயில் விடுவோம் என சொன்ன துபாய் அரசு சொன்ன தேதியில் சுக்கு புக்கு ரயில் விட்டு அமர்களப் படுத்தி விட்டார்கள்.
இந்த ஊர் வெயிலுக்கு இதெல்லாம் சரியா வருமா, இருக்குறதே முழ நீள ஊரு இதுலே ரயிலா, என்ற கேள்விகளை புரம் தள்ளி நல்லா வரும் என நம்பிக்கையோடே இருக்கிறது. பொத்தி பொத்தி வைச்சு இவ்வளவு நாளா என்ன நடக்குது என்றே தெரியாமல் இருந்த்தால் இப்ப போயி பார்த்த ஜனம் எல்லாம் ஆச்சர்யத்தில வாயடைச்சு நிக்குது.
இது சொர்க்க புரியா, விமான நிலையமா எனக் கேட்கும் வண்ணம், பாதாள ரயில் ஸ்டேஷன்கள், பறக்கும் ரயில் என நல்லா இருக்குது. ஏர்போர்ட்ல வண்டி ஏறியாச்சுன்னா, நிச்சயமா மூணே நிமிசத்தில் அல் ரிக்கா என்ற இடம் வந்து விடலாம். இதுவே சாலை வழி வந்தால் குறைந்த பட்சம் 30 நிமிடம் எனும் ரயிலுக்கே உண்டான சொகுசு மாற்றுக் குறையாமல் உள்ளது. பாதி ஸ்டேஷன் தான் துறந்து இருக்காங்க, மீதியும் துறந்து, கடை கண்ணி பெருகி, டாக்ஸி எல்லாம் ஸ்டேஷன் வாசல் வரை வந்து விட்டால் இன்னும் ஒரு இரண்டு வருட்த்தில் இது முழுமை பெறும் போது நிச்சயம் நல்லா வரும். இதில் ஈடுபட்டு வெற்றி பெற்ற அனைத்து நிறுவனங்களுக்கும், மனிதர்களுக்கும் பாராட்டு சொல்லி, மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.
போன வாரம் சொன்ன 7 நட்சத்திர ஹோட்டல் பற்றி பேசுவோமே. சின்ன வயதில் நாமாய் தீர்மானம் செய்து இருந்தோம் 3ஐ விட 5 நட்சத்திர ஹோட்டல், பெரிதும் வசதியும் ஆனது என. அதுவே வளர்ந்து வரும் போது ஏன் இதுவும் பெரிசாத்தான் இருக்கு, நல்லாத்தான இருக்கு இது மட்டும் ஏன் 3 ஸ்டார் ஹோட்டல் என்று. அன்று நாம் கேட்டது இப்படி.
அழகு, வசதி இன்ன பிற இத்தியாதிகள் எல்லாம் இல்லாமல், அன்னிய தேசத்தினரை மனதில் கொண்டு வடிவமைக்கப் பட்டதே இந்த கோட்பாடுகள் என்று. அதாவது வெள்ளைக்காரன் பர்ஸ்ல டாலர் குமிஞ்சு இருக்கும், அதை லோக்கல் கரன்ஸியா மாற்ற எக்ஸ்சேஞ்சு ஹோட்டக்குள்ளயே இருந்து, 24 மணி நேரமும் அவன் எப்போ வந்தாலும் அவன் பசியார உணவு கொடுக்க மல்டி குசின் உணவகமும் இருந்தா அது 5 ஸ்டார்ன்னு.
ஆனா உண்மை என்னன்னா, சர்வதேச அளவில் ஒருங்கிணைந்த அல்லது எல்லோரும் ஒப்புக்கொண்ட ரேட்டிங் சிஸ்டம் எல்லாம் கிடையாது. ஓட்டல் உரிமையாளர்கள் மத்தியில் இதுக்கென சில வரைமுறைகள் உண்டு.அம்புட்டுதேன். இல்லாமல் நாமாக அறிவித்து கொள்வது தான் இந்த 7 ஸ்டார். சுருங்கச் சொல்லின் தன் துருத்தியை தானே ஊதுவது 7 ஸ்டார். உலகில் இப்போது இருவர் ஊதி உள்ளனர். நாங்க 7 ஸ்டார்ன்னு. ஒருவர் துபாய், மற்றவர் இத்தாலி. பொறுங்கள் ஊதுவதற்கு இன்னும் அஞ்சு பேர் இருக்காங்க கங்கணம் கட்டிக்கிட்டு இருக்காங்க அல்லது ஹோட்டல் கட்டிக்கிட்டு இருக்காங்க. அதில் சென்னையில் உள்ள கிராண்ட் சோழாவும் ஒருவர்.
ஆயிரம் அடிக்கு மேலா நிமிர்ந்து நிக்குற இந்த புர்ஜ் அல் அரப் ஒரு கட்டிட அதிசயம் எனச் சொன்னால் மிகையாகாது. கடலுக்கடியில் பவுண்டேசன் போட்டு, கம்பீரமாக நிற்கும் அதன் அழகை படத்தில் பாருங்களேன். கடலில் இருப்பதால் இது அமைக்கப்பட்டுள்ள கப்பல் போலத் தோற்றம் பொருத்தமாகவும், பொம்பார்டாவும் இருக்கு (பெங்களூர் தமிழில் இது பிரபலம். சூப்பர், நச்சு, பின்னிருச்சு எனும் அர்த்தம் வரும் சொல்) என்ன ஒண்ணு தங்கணும்னா, ஒரு நாள் வாடகை சுமார் 50,000 ரூபாய். இதுக்கு பேசாம் ஒரு வீடே வாங்கி தங்கிராலாமே என தங்கள் மனது முணுமுணுப்பது கேட்டாலும், ரோல்ஸ் ராய்ஸ்ல விமான நிலையம் வந்து கூப்பிட்டு போவாய்ங்கங்கும் போது, ஒரு ராஜ உபசாரம் எனும் போது, சரி ரைட்டு என்று சொல்லத்தானே தோன்றுகிறது.
போய் பக்கத்தில போயி ஃபோட்டா எடுத்துக்கிட்ட்தோட சரி. நாங்க உள்ள எல்லாம் போனதில்ல. சொல்லக் கேள்விதான், நம்மள மாதிரி ஆளுங்க உள்ள நுழையிறதே கொஞ்சம் கஷ்டம் என்று.
எந்த பிரபலமான ஒரு கட்டிடத்துக்கும் ஒரு காண்ட்ராவெர்ஸி உண்டல்லவா. இதுக்கும் உண்டு. அது உண்மையா பொய்யான்னு எங்களுக்கும் தெரியல, கேட்டா கேட்டவய்ங்களுக்கும் தெரியல. எது எப்படியோ, அது உண்மையில்லை என தெரியும் வரை நாமும் பெர்மூடா ட்ரையங்கிள் போல கேட்டு வைப்போம்.
இதை வடிவமைத்த நிர்மாண என்ஜினியர், தனது மதத்தின் அடையாளம் பொறித்த ஒரு வழிபாட்டுத்தலம் போல இருக்குதாம் இந்த டிசைன். கஷ்டப்பட்டு கடலுக்கு அடியில கட்டினாலும், கடலுக்குள்ள போயி கடல் எல்லாம் தெரியுர மாதிரி போட்டா புடிக்க முடியலயாம். சைடு வியூவுல தான் இன்னும் போட்டா எடுக்க வேண்டி இருக்குதுன்னு சொல்றாங்க.
****
தகவல்களாய் துபாய் பற்றியும் வளைகுடா பற்றியும் விலாவாரியா பாத்தோம்.
வெறும் 150 வருடங்களை வரலாறை கொண்ட இந்த சிறிய ஊர்.
சில தகவல்களின் அடிப்படையில் 1200 பிரஜைகளை 1822 ஆம் வருடத்தில் கொண்டிருந்தது எனும் போது சின்ன ஊர் எனச் சொல்வது எவ்வளவு உண்மையாகிறது. ஆனால் இன்று உலகின் 20 வது விலை உயர்ந்த நகரம் என பட்டியலிடும் போது, உலகின் மூன்றாவது விமான நிலையம் உள்ளது எனும் போது அதன் வளர்ச்சி அதிசயிக்க வைக்கிறது. ஒரு முப்பது வருடங்களில் இவர்கள் பெற்ற வளர்ச்சி, இந்த நாட்டின் அரசியல் கட்டமைப்பின் கைங்கரியம் என்றே சொல்ல்லாம்.
இந்த தொடர் 13 பகுதிகளாக வந்து தங்கள் பேராதரவை பெற்றதும் நன்றியோடு எங்கள் வணக்கத்தை பதிவு செய்கிறோம். தங்களின் ஊக்கமும் தூண்டுதலுமே இந்த தொடரின் வெற்றி.
இதோ அரபு மண்ணின் சாதக பாதகங்களை தெரிந்து கொண்டீர்கள். இந்த கஷ்ட நஷ்டங்கள் புரிந்து, ஒரு வளமான வாழ்வுக்காக நான் தயார் என நீங்கள் முடிவெடுத்தால். சபாஷ். வாருஙகள். வளைகுடா உங்களுக்காக காத்திருக்கிறது, உங்கள் வாழ்வை மாற்றி அமைக்கும். ஒளிமயமான வாழ்வின் சேமிப்பிற்கு நிச்சயம் உதவும்.
வேலை தேடுதல் கடினம் அல்ல. நல்ல ஏஜெண்ட், நல்ல கம்பெனிகள் என பல உண்டு. உஷார், ஏமாற்றும் கூட்டமும் உண்டு. இதை விளக்கிச் சொல்ல ஒரு உண்மை சம்பவம் இதோ.
எங்கள் தொலைபேசி சினுங்கியது. நாங்கள் சார்ந்திருந்த ஒரு சமூக சேவை குழுமத்திலிருந்து இந்தியன் எம்பெஸியில் ஒரு பெண் காத்திருக்கிறார்கள், அவர்களிட்த்தில் இதை சேர்த்து விடுங்கள் என சொன்ன போது இப்படி ஒரு அதிர்ச்சி காத்திருக்கும் என்று கனவிலும் நினைக்க வில்லை.
மருத்துவமனை வேலை என ஏமாத்தி, விலைமகளாய் மாற்றும் ஒரு முயற்சியில் இருந்து விடுபட்டு, நம் நாட்டிற்கு செல்ல தயாராய் அந்த பெண். சோர்ந்த உடலிலும், தளர்ந்த மன நிலையிலும் உள்ளவர், நம் எல்லோருக்கும் அறிமுகம் ஆனவர்.
இந்திய முன்னணி விளையாட்டு வீராங்கனை. இதற்கு மேல் கேட்காதீர்கள். அவரது அடையாளம், அவரையும் அவர் குடும்பத்தையும் பாதிக்கும் என்பதால் நாங்கள் பெயர் குறிப்பிடவில்லை.
இவ்வளவு விவரம் உள்ள இவரா இப்படி மாட்டிக் கொண்டார், அவரது கணவர் கூட இந்த ஊரில் இருந்துமா இந்த நிலை, என்ற எங்களின் கேள்விக்கு அவர் அளித்த பதில் மிக முக்கியமானது. நம் எல்லா வாசகர்களுக்கும் அவசியமானது.
இப்படி ஒரு வேலை வாய்ப்பு வந்ததுமே, அவர் யாரிடமும் சொல்லவில்லை. தன் கணவரிடம் கூட! தெரிந்தால் இதை கெடுத்து விடுவார்கள் என்ற பதில் எங்களை சிந்திக்க வைத்தது.
கண் போட்டுருவாங்க, பொறாமை படுவாங்க, கெடுத்து விட்டுருவாங்க என நினைத்து சொல்லாமல் இருப்பது எவ்வளவு தப்பு.
தங்கள் நண்பர்களிடத்தில் இதை பற்றி விரிவாய், விரைவாய், விலாவாரியாய் பேசுங்கள். அவர்கள் நிச்சயம் உதவத்தான் செய்வார்கள்.
(அடுத்த பகுதியில் நிறைவு பெறும்)
12 comments:
//பொத்தி பொத்தி வைச்சு இவ்வளவு நாளா என்ன நடக்குது என்றே தெரியாமல் இருந்த்தால் இப்ப போயி பார்த்த ஜனம் எல்லாம் ஆச்சர்யத்தில வாயடைச்சு நிக்குது.//
//ஒரு முப்பது வருடங்களில் இவர்கள் பெற்ற வளர்ச்சி, இந்த நாட்டின் அரசியல் கட்டமைப்பின் கைங்கரியம் என்றே சொல்ல்லாம்.//
ம்ம் நம்ம ஊரிலும் நடக்குமா?
//இப்படி ஒரு வேலை வாய்ப்பு வந்ததுமே, அவர் யாரிடமும் சொல்லவில்லை. தன் கணவரிடம் கூட! தெரிந்தால் இதை கெடுத்து விடுவார்கள் என்ற பதில் எங்களை சிந்திக்க வைத்தது.
கண் போட்டுருவாங்க, பொறாமை படுவாங்க, கெடுத்து விட்டுருவாங்க என நினைத்து சொல்லாமல் இருப்பது எவ்வளவு தப்பு.
தங்கள் நண்பர்களிடத்தில் இதை பற்றி விரிவாய், விரைவாய், விலாவாரியாய் பேசுங்கள். அவர்கள் நிச்சயம் உதவத்தான் செய்வார்கள்.//
நிச்சயம் தேவையான அறிவுரை..
படுக்காளி - சூப்பர்
ஈ ரா said...
//பொத்தி பொத்தி வைச்சு இவ்வளவு நாளா என்ன நடக்குது என்றே தெரியாமல் இருந்த்தால் இப்ப போயி பார்த்த ஜனம் எல்லாம் ஆச்சர்யத்தில வாயடைச்சு நிக்குது.//
//ஒரு முப்பது வருடங்களில் இவர்கள் பெற்ற வளர்ச்சி, இந்த நாட்டின் அரசியல் கட்டமைப்பின் கைங்கரியம் என்றே சொல்ல்லாம்.//
ம்ம் நம்ம ஊரிலும் நடக்குமா?
//இப்படி ஒரு வேலை வாய்ப்பு வந்ததுமே, அவர் யாரிடமும் சொல்லவில்லை. தன் கணவரிடம் கூட! தெரிந்தால் இதை கெடுத்து விடுவார்கள் என்ற பதில் எங்களை சிந்திக்க வைத்தது.
கண் போட்டுருவாங்க, பொறாமை படுவாங்க, கெடுத்து விட்டுருவாங்க என நினைத்து சொல்லாமல் இருப்பது எவ்வளவு தப்பு.
தங்கள் நண்பர்களிடத்தில் இதை பற்றி விரிவாய், விரைவாய், விலாவாரியாய் பேசுங்கள். அவர்கள் நிச்சயம் உதவத்தான் செய்வார்கள்.//
நிச்சயம் தேவையான அறிவுரை..
படுக்காளி - சூப்பர்//
**************
வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும், வாழ்த்தியதற்கும் நன்றி ஈ.ரா.அவர்களே..
ம்ம் நல்ல பகிர்வு, இவ்வளவு டைப் பண்ண எப்படி நேரம் கிடைக்குது
மெட்ரோ டிரெயின் போயாச்சா, நாங்களும் போய் வந்தோம், இப்ப தான் துபாய் முழுவதும் பார்ப்பது போல் இருக்கு.
//Jaleela said...
ம்ம் நல்ல பகிர்வு, இவ்வளவு டைப் பண்ண எப்படி நேரம் கிடைக்குது
மெட்ரோ டிரெயின் போயாச்சா, நாங்களும் போய் வந்தோம், இப்ப தான் துபாய் முழுவதும் பார்ப்பது போல் இருக்கு.//
முதலில் வாழ்த்தியதற்கு நன்றி...இது பதில் சொல்ல கஷ்டமான கேள்வி...
மெட்ரோ ரயில் பயணம் இனிதாக உள்ளது... போக போக இன்னும் நல்லா இருக்கும்னு நெனக்கிறேன்...
நன்றி ஜலீலா மேடம்...
ரம்ஜான் லீவில் எங்கே போனீர்கள்??
//தான் துறந்து இருக்காங்க, மீதியும் துறந்து//
துறந்தா திறந்தா!
//ஒரு நாள் வாடகை சுமார் 50,000 ரூபாய். //
ரொம்ப குறைவாக இருக்கே!.. காமெடி இல்ல சீரியஸ்
கோபி துபாய்க்கு ஒரு வாட்டி வந்துட வேண்டியது தான் :-)
//கிரி said...
//தான் துறந்து இருக்காங்க, மீதியும் துறந்து//
துறந்தா திறந்தா!
//ஒரு நாள் வாடகை சுமார் 50,000 ரூபாய். //
ரொம்ப குறைவாக இருக்கே!.. காமெடி இல்ல சீரியஸ்
கோபி துபாய்க்கு ஒரு வாட்டி வந்துட வேண்டியது தான் :-)//
*************.
வாங்க கிரி...
அமீரகம் மற்றும் உங்கள் அமீரக நண்பர்கள் உங்களை வரவேற்க எப்போதும் தயார்.
50,000 ரொம்ப கம்மின்னு சொன்ன உங்களின் நகைச்சுவை என்னை மிகவும் கவர்ந்தது...
வந்து கருத்து பகிர்ந்தமைக்கு நன்றி...
கோபி,
150 வருட வரலாறை கொண்ட சிறிய
ஊரின் சிறப்புகளையும், வியக்க வைக்கும் பிரமண்டங்களையும்,
அந்த ஊருக்கு எப்படி வருவது என்று
அதன் சாதக பாதகங்களையும் நன்கு
விளக்கி இருக்கிறீர்கள்.அங்கு வர ஆசை படுபவர்களுக்கு நல்ல
வழிக் காட்டியாய்.
வாழ்த்துக்கள்.
//கண் போட்டுருவாங்க,பொறாமை படுவாங்க,கெடுத்து விட்டுருவாங்க
என நினைத்து சொல்லாமல் இருப்பது
எவ்வளவு தப்பு.//
சரியாக சொன்னீர்கள் கோபி நிறைய பேர் அப்படித்தான் இருக்கிறார்கள்.
அவர்கள் மாற வாழ்த்துக்கள்.
//கோமதி அரசு said...
கோபி,
150 வருட வரலாறை கொண்ட சிறிய
ஊரின் சிறப்புகளையும், வியக்க வைக்கும் பிரமண்டங்களையும்,
அந்த ஊருக்கு எப்படி வருவது என்று
அதன் சாதக பாதகங்களையும் நன்கு
விளக்கி இருக்கிறீர்கள்.அங்கு வர ஆசை படுபவர்களுக்கு நல்ல
வழிக் காட்டியாய்.
வாழ்த்துக்கள்.//
கோமதி மேடம்....
தங்கள் வருகைக்கும், வாழ்த்தியதற்கும் மிக்க நன்றி... ஏதோ எங்களால் முடிந்த அளவு விஷயங்களை தொகுத்து அளித்திருக்கிறோம்... வேறு ஏதேனும் விபரம் வேண்டுவோர் எங்களை தொடர்பு கொண்டால், உதவ காத்திருக்கிறோம்...
எனக்குத் தெரிந்த ஒருவர், தன நிறுவனத்திற்கு ஆறு ஆர்டர்கள் கிடைத்திருப்பதை நண்பரிடம் சொன்ன அன்றே, அனைத்தும் ரத்தானது. அதிலிருந்து, அந்த நண்பர் என்றில்லை, அலுவலக விஷயங்களை அவர் அடுத்தவரிடம் பேசுவதேயில்லை. இது போன்ற சொந்த அனுபவங்கள் தாம் சிலரை, ஒருவரும் அறியாமல் என்று சில விஷயங்களைச் செய்யவைக்கிறது.
இது போன்ற சந்தர்ப்பங்களில், இம்மாதிரி நம்பிக்கை உள்ளவர்கள், RISK எவ்வளவு என்பதை எண்ணிப் பார்த்தாவது, ஒரு சமநிலை கொள்ள வேண்டும்.
//Erode Nagaraj... said...
எனக்குத் தெரிந்த ஒருவர், தன நிறுவனத்திற்கு ஆறு ஆர்டர்கள் கிடைத்திருப்பதை நண்பரிடம் சொன்ன அன்றே, அனைத்தும் ரத்தானது. அதிலிருந்து, அந்த நண்பர் என்றில்லை, அலுவலக விஷயங்களை அவர் அடுத்தவரிடம் பேசுவதேயில்லை. இது போன்ற சொந்த அனுபவங்கள் தாம் சிலரை, ஒருவரும் அறியாமல் என்று சில விஷயங்களைச் செய்யவைக்கிறது.
இது போன்ற சந்தர்ப்பங்களில், இம்மாதிரி நம்பிக்கை உள்ளவர்கள், RISK எவ்வளவு என்பதை எண்ணிப் பார்த்தாவது, ஒரு சமநிலை கொள்ள வேண்டும்.//
*************
வாங்க ஈரோட் நாகராஜ் சார்...
நலம்... நலமறிய ஆவல்... ரொம்ப நாள் கழிச்சு வந்து இருக்கிறீர்கள்...
நீங்கள் சொன்ன நிகழ்வை என்னவென்று சொல்வது? தற்செயல் என்று சொல்லலாமா? இல்லை....
Dear Mr. Gopi
I enjoyed reading this write up.
Vazthukkal
S.rajagopalan.dubai
//srinivasan said...
Dear Mr. Gopi
I enjoyed reading this write up.
Vazthukkal
S.rajagopalan.dubai//
Dear Mr.Srinivasan.....
Thanks for your wish and encouraging comments... Do visit regularly, read the articles and comment...
Post a Comment