இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

தாயின் மணிக்கொடி பாரீர்
இதை போற்றி புகழ்ந்திட வாரீர்.

வெள்ளையன் பிடியில் இருந்து நாட்டை மீட்க
அன்று சிந்திய பலரின் குருதி
கொடியின் மேலே ஆனது காவி

உல‌கின் இக்க‌ண தேவை சமாதான‌ம்
அதை உண‌ர்த்தும் விதமாய்
கொடியின் ந‌டுவில் இருக்கும் வெண்மை

பஞ்சம், பட்டினி கொடுமையை போக்கி
பசுமையாய் ஆக்குவோம் நாட்டை
இதை உண‌ர்த்த‌வே கொடியின் கடைசியில் பச்சை

இடையில் உள்ள சக்கரம் போல்
ஓயாமல் சுற்றி (உழைத்து) கொண்டிருந்தால்
உன் வாழ்வும் உயர்வு பெறும்
நம் நாடும் வளம் பெறும்

இன்றைய இந்தியா இதை உண‌ருமா?
கிறங்கிய விழிகள், உலகை மறந்த நிலை
இன்று புலர்ந்த‌ பொழுதும் வீண்

நிகழ்கால நிகழ்வுகள், எதிர்கால கனவுகள்
அனைத்தும் கருகிய நிலை
விதவிதமான போதையின் பிடியில் இந்தியா
தூக்கி நிமிர்த்த வேண்டிய இளைஞர்கள்
போதையின் பிடியில் சுருண்டு....

அஹிம்ஸையின் வழியே சுதந்திரம் பெற்ற
அண்ணல் காந்தி கூட இன்றைய நிலை கண்டால்
கையில் எடுப்பார் ஏதாவதொரு ஆயுதம்....
நம் இன்றைய தேவை என்ன?
ஒற்றுமை வாழ்வும், கடின உழைப்பும்

கடுகு அளவுள்ள எறும்பே அதன்
உழைப்பை நம்பி வாழும்போது

மலையளவுள்ள மனிதா - நீயும்
உன் உழைப்பை ந‌ம்பி வாழ்ந்து பாரு

சாம்பலில் இருந்து எழும் ஃபீனிக்ஸ் பறவை போல்
நீயும் சோம்பலில் இருந்து எழுந்து உழை

குடியை கெடுக்கும் குடியை தவிர்
மனதை கெடுக்கும் மதுவை மற

சீரிய சிந்தனையை உள்ளத்தில் நிறுத்து
வாடிய அனைவரையும் அள்ளி அணைத்து
கனிவான மனதுடன் அன்பு செலுத்து

பொழுதுபோக்கை குறைத்தால்
நம் வாழ்வு சிறக்கும்....

ஜெய் ஹிந்த்.....

உலகில் உள்ள அனைத்து நண்பர்களுக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்....

27 comments:

. said...

வர்ணத்தில் நம் கொடியை விளக்கி அற்புதமான கவிதை.

இன்றைய நிலையை சுட்டிக் காட்டி, செய்ய வேண்டிய வினை விதைத்தது அட்டகாசம்.

நல்ல பதிவு.

ஆனா, லீவு விட்டாச்சே, ஒரு மொக்கு மொக்கலாம் என்ற டாஸ்மாக் குடிமகனுக்கு கொஞ்சம் காரம்.

R.Gopi said...

//படுக்காளி said...
வர்ணத்தில் நம் கொடியை விளக்கி அற்புதமான கவிதை.

இன்றைய நிலையை சுட்டிக் காட்டி, செய்ய வேண்டிய வினை விதைத்தது அட்டகாசம்.

நல்ல பதிவு.

ஆனா, லீவு விட்டாச்சே, ஒரு மொக்கு மொக்கலாம் என்ற டாஸ்மாக் குடிமகனுக்கு கொஞ்சம் காரம்.//

***********

வாருங்கள் படுக்காளி அவர்களே..

தங்கள் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் நன்றி....

ஆ....ஹா.... தாங்கள் கூறியது என்னவோ உண்மைதான் போங்கள்....

நட்புடன் ஜமால் said...

சாம்பலில் இருந்து எழும் ஃபீனிக்ஸ் பறவை போல்
நீயும் சோம்பலில் இருந்து எழுந்து உழை

குடியை கெடுக்கும் குடியை தவிர்
மனதை கெடுக்கும் மதுவை மற]]


அருமை.


சுதந்திர தின நல் வாழ்த்துகள்.

R.Gopi said...

//நட்புடன் ஜமால் said...
சாம்பலில் இருந்து எழும் ஃபீனிக்ஸ் பறவை போல்
நீயும் சோம்பலில் இருந்து எழுந்து உழை

குடியை கெடுக்கும் குடியை தவிர்
மனதை கெடுக்கும் மதுவை மற]]

அருமை.

சுதந்திர தின நல் வாழ்த்துகள்.//

**********

தொடர் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும், பாராட்டுக்கும் நன்றி ஜமால்...

தங்களுக்கும், நண்பர்கள் அனைவருக்கும் இனிய சுதந்திர நாள் நல்வாழ்த்துக்கள்.

Sundari said...

//கடுகு அளவுள்ள எறும்பே அதன்
உழைப்பை நம்பி வாழும்போது
மலையளவுள்ள மனிதா - நீயும்
உன் உழைப்பை ந‌ம்பி வாழ்ந்து பாரு//

அருமையான வரிகள்..

R.Gopi said...

//Sundari said...
//கடுகு அளவுள்ள எறும்பே அதன்
உழைப்பை நம்பி வாழும்போது
மலையளவுள்ள மனிதா - நீயும்
உன் உழைப்பை ந‌ம்பி வாழ்ந்து பாரு//

அருமையான வரிகள்..//

***********

சுந்தரி

தங்கள் மின்னல் வேக வருகைக்கும், பாராட்டுக்கும் என் மனமார்ந்த நன்றி....

தொடர்ந்து வாருங்கள்....

நன்றி.....

cdhurai said...

கவிதையில் இருந்த போதை மிக அருமை..

அதாவது நான் சொல்லவரும் போதை அறிவு போதை. அறிவு போதை உன்னிடம் உள்ளவரை முன்னேறலாம் வெற்றி படிகளில். தள்ளாடதே! ஆணவ போதையில்..

துணிந்து செயல்பாடு நெப்போலியன் போலே....

இனிய சுதந்திர முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

செல்லத்துரை.

R.Gopi said...

//cdhurai said...
கவிதையில் இருந்த போதை மிக அருமை..

அதாவது நான் சொல்லவரும் போதை அறிவு போதை. அறிவு போதை உன்னிடம் உள்ளவரை முன்னேறலாம் வெற்றி படிகளில். தள்ளாடதே! ஆணவ போதையில்..

துணிந்து செயல்பாடு நெப்போலியன் போலே....

இனிய சுதந்திர முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

செல்லத்துரை.//

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍

வாங்க‌ செல்ல‌துரை.... க‌விதையின் போதையை ர‌சித்து நீங்க‌ளும் ஒரு சிறு க‌விதை எழுதி விட்டீர்க‌ள் அய்யா.....

தங்க‌ள் அறிவுரை மிக‌வும் பிர‌மாத‌ம்.... எல்லோரும் க‌ட்டாய‌ம் பின்ப‌ற்ற‌ வேண்டிய‌ ஒன்று...

ந‌ன்றி....

Anonymous said...

ஜெய் ஹிந்த் :)))

நெஜமாவே கவிதை நல்ல இருக்கு:)

அன்புடன் அருணா said...

//சாம்பலில் இருந்து எழும் ஃபீனிக்ஸ் பறவை போல்
நீயும் சோம்பலில் இருந்து எழுந்து உழை//
வைர வரிகள்!....அருமை.

R.Gopi said...

//mayil said...
ஜெய் ஹிந்த் :)))

நெஜமாவே கவிதை நல்ல இருக்கு:)//

//அன்புடன் அருணா said...
//சாம்பலில் இருந்து எழும் ஃபீனிக்ஸ் பறவை போல்
நீயும் சோம்பலில் இருந்து எழுந்து உழை//
வைர வரிகள்!....அருமை.//

**************

வணக்கம் மயில் மற்றும் அருணா மேடம்....

பெரியவங்க எல்லாம் திடீர்னு நம்ம பக்கம் வந்து வாழ்த்தும் போது மனசுக்கு மகிழ்ச்சியா இருக்கு.... தங்களின் வருகைக்கும் பாராட்டுக்கும் என் மனமார்ந்த ந‌ன்றி.

கலாட்டா அம்மணி said...

\\சீரிய சிந்தனையை உள்ளத்தில் நிறுத்து
வாடிய அனைவரையும் அள்ளி அணைத்து
கனிவான மனதுடன் அன்பு செலுத்து\\

சிந்தனையில் எப்பொழுதும் இருக்கவேண்டிய வரிகள்..

நல்ல பதிவு.

சுதந்திர தின நல் வாழ்த்துகள்.
ஜெய் ஹிந்த்!

ராமலக்ஷ்மி said...

நல்ல கவிதை கோபி! தேசியக் கொடியின் வர்ணங்களை, சக்கரத்தை அர்த்தப் படுத்தியிருப்பதும் நன்று.

//நம் இன்றைய தேவை என்ன?ஒற்றுமை வாழ்வும், கடின உழைப்பும் //

மிகச் சரி. வலையில் எனது முதல் பதிவாக வந்த ‘ஒன்று பட்டால்..’ கவிதையினையும் நேரம் இருந்தால் வாசித்திடுங்கள். உங்கள் சிந்தனையோடு ஒத்துப் போகும் வரிகளைக் காண்பீர்கள்!

Shakthiprabha (Prabha Sridhar) said...

// பொழுதுபோக்கை குறைத்தால்
நம் வாழ்வு சிறக்கும்.... //

உண்மை தான். ரொம்ப அற்புதமா எழுதியிருக்கீங்க

R.Gopi said...

வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும், பாராட்டுக்கும் நன்றி "கலாட்டா அம்மணி", "ராமலக்ஷ்மி" மற்றும் "ஷக்திப்ரபா".

//க‌லாட்டா அம்ம‌ணி

சிந்தனையில் எப்பொழுதும் இருக்கவேண்டிய வரிகள்..

நல்ல பதிவு.

சுதந்திர தின நல் வாழ்த்துகள்.
ஜெய் ஹிந்த்!//

அதே அதே....

//ராமலக்ஷ்மி said...
நல்ல கவிதை கோபி! தேசியக் கொடியின் வர்ணங்களை, சக்கரத்தை அர்த்தப் படுத்தியிருப்பதும் நன்று.//

ந‌ன்றி ராம‌ல‌க்ஷ்மி மேட‌ம்....

//வலையில் எனது முதல் பதிவாக வந்த ‘ஒன்று பட்டால்..’ கவிதையினையும் நேரம் இருந்தால் வாசித்திடுங்கள். உங்கள் சிந்தனையோடு ஒத்துப் போகும் வரிகளைக் காண்பீர்கள்!//

க‌‌ண்டிப்பாக‌ வாசித்து விட்டு சொல்கிறேன்...

//Shakthiprabha said...
// பொழுதுபோக்கை குறைத்தால்
நம் வாழ்வு சிறக்கும்.... //

உண்மை தான். ரொம்ப அற்புதமா எழுதியிருக்கீங்க//

ந‌ன்றி ஷ‌க்திப்ர‌பா.... பொழுதுபோக்குதானே ந‌ம்மூரில் வாழ்நாளில் பெரும்ப‌குதியை எடுத்துக்கொள்கிற‌து....

வ‌ருகை தந்து க‌ருத்து ப‌கிர்ந்த‌ அனைவ‌ருக்கும் என் ம‌ன‌மார்ந்த‌ ந‌ன்றி...

Sundari said...

சுதந்திர தின வாழ்த்துகள்

R.Gopi said...

//Sundari said...
சுதந்திர தின வாழ்த்துகள்//

வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி சுந்தரி....

ஈ ரா said...

//சீரிய சிந்தனையை உள்ளத்தில் நிறுத்து
வாடிய அனைவரையும் அள்ளி அணைத்து//

பிரமாதமான வரிகள் கோபி

// அஹிம்ஸையின் வழியே சுதந்திரம் பெற்ற
அண்ணல் காந்தி கூட இன்றைய நிலை கண்டால்
கையில் எடுப்பார் ஏதாவதொரு ஆயுதம்.... //

மனதில் பெரும் பாரத்தை ஏற்றிச் சிந்திக்க வைத்தது

சகோதரி ராமலக்ஷ்மி அவர்களே,

உங்கள் கவிதை அருமை,

உங்கள் தளத்தில் வந்து பகிர்கிறேன்..

நண்பர்களே,

நம்ம பதிவுகளையும் படியுங்களேன்...

http://www.padikkathavan.blogspot.com

R.Gopi said...

ஈ ரா said...
//சீரிய சிந்தனையை உள்ளத்தில் நிறுத்து
வாடிய அனைவரையும் அள்ளி அணைத்து//

பிரமாதமான வரிகள் கோபி //

நன்றி ஈ.ரா...சில சமயம் தங்கள் காற்று அடித்து விடுகிறதோ என்னவோ?

// அஹிம்ஸையின் வழியே சுதந்திரம் பெற்ற
அண்ணல் காந்தி கூட இன்றைய நிலை கண்டால்
கையில் எடுப்பார் ஏதாவதொரு ஆயுதம்.... //

//மனதில் பெரும் பாரத்தை ஏற்றிச் சிந்திக்க வைத்தது//

உண்மைதான் ஈ.ரா..

//சகோதரி ராமலக்ஷ்மி அவர்களே,

உங்கள் கவிதை அருமை,

உங்கள் தளத்தில் வந்து பகிர்கிறேன்..// நான் ஏற்கனவே பகிர்ந்தாச்சு... சூப்பர் கவிதை.

//நண்பர்களே,

நம்ம பதிவுகளையும் படியுங்களேன்...

http://www.padikkathavan.blogspot.coம்//

க‌ண்டிப்பாக‌ ப‌டிக்கிறேன்... ந‌ண்ப‌ர்க‌ளும் ப‌டிப்பார்க‌ள் என்று ந‌ம்புகிறேன்....

Abu said...

நண்பர் கோபி அவர்களுக்கு,

சுதந்திரதின வாழ்த்துக்கள் !

அருமையான சுதந்திர தின கவிதை ! இதயத்தில் புது ரத்தம் பாயிச்ச கூடிய வரிகள் அல்லவா இவை.

அருமை !

அன்புடன்
அபுதாகீர்
துபாய்

Abu said...

நண்பர் கோபி அவர்களுக்கு,

அஹிம்ஸையின் வழியே சுதந்திரம் பெற்ற
அண்ணல் காந்தி கூட இன்றைய நிலை கண்டால்
கையில் எடுப்பார் ஏதாவதொரு ஆயுதம்....

இந்த வரிகள் சற்றே முரண்பாடாக உள்ளதே ...இதை நீக்கினால் நான் மகிழ்ச்சி அடைவேன். மகாத்மா அவர் அவராக இருப்பது தான் நல்லது. அவரும் ஆயுதம் ஏந்திவிட்டால் அஹிம்சைக்கு யாரை சுட்டி கட்டுவது...????

அன்புடன்
அபுதாகீர்
துபாய்

R.Gopi said...

//Abu said...
நண்பர் கோபி அவர்களுக்கு,

சுதந்திரதின வாழ்த்துக்கள் !

அருமையான சுதந்திர தின கவிதை ! இதயத்தில் புது ரத்தம் பாயிச்ச கூடிய வரிகள் அல்லவா இவை.

அருமை !

அன்புடன்
அபுதாகீர்
துபாய்//

வாருங்க‌ள் ந‌ண்ப‌ர் அபு அவ‌ர்க‌ளே.... த‌ங்க‌ள் வ‌ருகைக்கும், க‌ருத்துக்கும், வாழ்த்துக்கும் ந‌ன்றி...

R.Gopi said...

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


//Abu said...
நண்பர் கோபி அவர்களுக்கு,

அஹிம்ஸையின் வழியே சுதந்திரம் பெற்ற
அண்ணல் காந்தி கூட இன்றைய நிலை கண்டால்
கையில் எடுப்பார் ஏதாவதொரு ஆயுதம்....

இந்த வரிகள் சற்றே முரண்பாடாக உள்ளதே ...இதை நீக்கினால் நான் மகிழ்ச்சி அடைவேன். மகாத்மா அவர் அவராக இருப்பது தான் நல்லது. அவரும் ஆயுதம் ஏந்திவிட்டால் அஹிம்சைக்கு யாரை சுட்டி கட்டுவது...????

அன்புடன்
அபுதாகீர்
துபாய்//

ந‌ண்ப‌ர் அபு அவ‌ர்க‌ளே... இன்றைய‌ நிலை க‌ண்டால் அண்ண‌லும் ஆயுத‌ம் ஏந்துவாரோ என்ற‌ என் அச்ச‌த்தையே அங்கு ப‌திவில் ப‌திந்தேன்..

ம‌ற்ற‌ப‌டி அவ‌ர் அகிம்சை வ‌ழியில் தொட‌ர‌ வேண்டுமென்ப‌துதான் ந‌ம் அனைவ‌ரின் விருப்ப‌மும்....

கருத்துக்கு நன்றி ஜி....

கௌதமன் said...

கோபி, நல்லாத்தான் இருக்கு...
ஆனா - யார் காதுக்குப் போய்ச்
சேரணுமோ - அந்தப்
புண்ணியவான்கள் - புட்டிக்குள்
புகுந்துவிட்டவர்கள் - எங்கே
இதை எல்லாம் படிக்கப்
போகிறார்கள்?
ஹும்.....

R.Gopi said...

//kggouthaman said...
கோபி, நல்லாத்தான் இருக்கு...
ஆனா - யார் காதுக்குப் போய்ச்
சேரணுமோ - அந்தப்
புண்ணியவான்கள் - புட்டிக்குள்
புகுந்துவிட்டவர்கள் - எங்கே
இதை எல்லாம் படிக்கப்
போகிறார்கள்?
ஹும்.....//

க‌வுத‌ம‌ன் சார்... ந‌ம்பிக்கையை சிறிதும் இழ‌க்காம‌ல் தான் இதை எழுதினேன்... என்ன‌வென்றால்... நாம் ஊதும் ச‌ங்கை ஊதுவோம்...கேட்கும் காதுகள் கேட்கட்டும்...அனைத்து காதுக‌ளும் செவிட‌ல்ல‌வே!!!

கோமதி அரசு said...

சுதந்திர தின கவிதை அருமை.

//உலகின் இக்கண தேவை சமாதானம்
அதை உணர்த்தும் விதமாய் கொடியின்
நடுவில் இருக்கும் வெண்மை.//

கோபி இந்த வரிகளை படிக்கும் போது
//சமாதானமே தேவை உலக சமாதானமே தேவை என்ற பாடல் நினைவுக்கு வருகிறது.//(பழைய சினிமா பாடல்)
மகரிஷி சொல்வது போல் தனி மனித
அமைதியே உலக அமைதியை கொண்டு வரும்.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

R.Gopi said...

//கோமதி அரசு said...
சுதந்திர தின கவிதை அருமை.

//உலகின் இக்கண தேவை சமாதானம்
அதை உணர்த்தும் விதமாய் கொடியின்
நடுவில் இருக்கும் வெண்மை.//

கோபி இந்த வரிகளை படிக்கும் போது
//சமாதானமே தேவை உலக சமாதானமே தேவை என்ற பாடல் நினைவுக்கு வருகிறது.//(பழைய சினிமா பாடல்)
மகரிஷி சொல்வது போல் தனி மனித
அமைதியே உலக அமைதியை கொண்டு வரும்.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.//

லேட்டா வந்தாலும், லேட்ட‌ஸ்டா வாழ்த்திட்டீங்க‌...

ந‌ன்றி கோம‌தி மேட‌ம்...