எஸ்.வி.சேகர் ட்ராமா - ஒரு கற்பனை காட்சி....

எஸ்.வி.சேகர் அவர்களின் நாடகங்கள் நகைச்சுவைக்கு பெயர் போனவை... வசனங்களில் காமெடி வழிந்தோடும்...

நான் அவரின் பெரும்பாலான நாடகங்களை கேட்டிருக்கிறேன்... உங்களில் பலரும் அது போலவே என்று நினைக்கிறேன்... அவர் நாடகத்தில் இது போன்ற ஒரு காட்சி வந்தால் வசனங்கள் எப்படி இருக்கும் என்று என் கற்பனையில் உதித்ததே இந்த பின்வரும் ஒரு கற்பனை காட்சி... இதில் எஸ்.வி.சேகர், அவரின் தந்தை மற்றும் தாத்தா ஆகிய கேரக்டர்கள் பங்கு பெறுவதை போன்ற காட்சி... இனி... நாடகத்தின் அந்த காட்சியில் நுழைவோமே..

பட்டாபி : அப்பா... எப்படி இருக்க... நாலு நாள் ஊர்ல இல்லேன்னா நாட்டுல என்ன நடக்கறதுன்னே தெரியல... நாட்டு நடப்பு எல்லாம் எப்படி இருக்கு? நம்ம ஊர்ல என்ன விசேஷம்?

அப்பா : வாடா பட்டாபி... எல்லாரும் நல்லா இருக்கோம்... நீ எப்படி இருக்க... உன்னொட ஆஃபீஸ் ட்ரெய்னிங் ப்ரோக்ராம் எல்லாம் எப்படி இருந்துது.

பட்டாபி : படு சூப்பரா இருந்துதுப்பா... நிறைய பேர் இருந்தாலும், எப்போவும் போல நான் தான் ஃபர்ஸ்ட்...

அப்பா : ஒன்ன பத்தி எனக்கு தெரியாதாடா பட்டாபி? நீ என்னோட பையன் ஆச்சே... நீ ரொம்ப ப்ரில்லியண்ட்னு ஸ்கூல் படிக்கறப்போவே வாத்தியார் சொல்வாரே...

பட்டாபி : என் கிட்ட கூட தான் சொன்னாங்க. வாத்தியார் பிள்ளை மக்குனு... அது கரெக்ட்தான்......உங்க அப்பா, அதான் என்னோட தாத்தா வாத்தியார் தானே... அட... ஃபர்ஸ்ட்னா, அந்த ஃபர்ஸ்ட் இல்லப்பா...... காலங்கார்த்தால ஆஃபீஸ் மீட்டிங் நடக்கற இடத்துக்கு மொதல் ஆளா போயிட்டேன்..... வாட்ச்மேன் கூட அப்புறம் தான் வந்தான்.... நான் ஃபர்ஸ்ட் வந்தத பார்த்துட்டு எல்லாரும் ஆடி பூட்டாங்க....

ஆனா, போற எடம் ரொம்ப குளிரா இருக்கும்னு நம்ம கெழம் சொல்லித்துன்னு திக்கா ஒரு போர்வை எடுத்துண்டு போனேன்... அங்க போனா வெயில் மண்டைய பொளந்துடுத்து..... மீட்டிங்குக்கு ”மலையூர் மம்பட்டியான்” மாதிரி போர்வைய போத்திண்டு போனேன்... நல்ல வேளை... கையில ஒரு லாந்தர் மட்டும்தான் இல்ல....மானம் போயிடுத்து.... இந்த தாத்தா வர வர ரொம்ப பொய் சொல்றதுப்பா...சரி...

அத விடு.. ...இப்போ முக்கியமான விஷயத்துக்கு வர்றேன்.. நம்ம சங்கரன், சாரங்கன் சண்டை இப்போ எந்த லெவல்ல இருக்கு... ஒலகத்துல நடக்கற எல்லா சண்டையும் முடிஞ்சா கூட இந்த ரெண்டு பேரோட சண்டை முடியாது போல இருக்கு...

அப்பா : ஏண்டா பட்டாபி, வந்தது வராததுமா கேக்கறதுக்கு வேற விஷயமே இல்லையாடா... அந்த மூதேவிகள் போடற சண்டைய பத்தி ஏண்டா கேக்கற... வெளியூர்ல இருந்து வந்த டயர்ட்ல இருப்ப... போய் குளிச்சுட்டு வந்து சூடா டிஃபன் சாப்டு. மத்தது எல்லாம் அப்புறம் பேசிக்கலாம்...

தாத்தா : டேய் பட்டாபி, ஒங்கப்பன் எப்பவுமே அப்படி தாண்டா... நீ கேட்ட கேள்விக்கு எந்த பதிலும் சொல்ல மாட்டாண்டா... நீ என் கிட்ட கேட்டாலும், கேக்காட்டாலும் நான் பதில் சொல்றேன் ஒனக்கு.....

சண்டை வேணாம்.....சமாதானமா போலாம்னானாம் சங்கரன்,
அவன நடுவீதியில வச்சு நாலு சாத்து சாத்தினானாம் சாரங்கன்...

பட்டாபி : இது என்ன பழமொழியா... எங்க......வேற ஏதாவது சொல்லு.....

தாத்தா : குடிசை மேல ஓடறது எலின்னானாம் ஏழுமலை
தாவி தாவி ஓடறது அது அணில்னானாம் அண்ணாமலை.

பட்டாபி : அய்யய்யோ.... இது ரொம்ப கொடுமையா இருக்கே...

தாத்தா : இதுவும் பிடிக்கலியா... சரி அட்லீஸ்ட் இந்த ரெண்டுல ஏதாவது ஒண்ணு தேறுமா பாரு....

வெத்தலைக்கு சுண்ணாம்பு கேட்டானாம் வெள்ளியங்கிரி
அவனுக்கு கொஞ்சூண்டு கொட்டபாக்கு தந்தானாம் கோபால்சாமி

பல் தேய்க்க பல்பொடி கேட்டானாம் பக்கிரி
அதுக்கு மூக்குல போட மூக்கு பொடி தந்தானாம் ஜோக்கிரி

பட்டாபி : அப்பா... பழமொழிங்கற பேர்ல இது அடிக்கற கூத்து தாங்க முடியல... அங்க இருக்கற மத்து எடு... இன்னிக்கு கெழத்த நாலு சாத்து சாத்திடறேன்.... இல்லேன்னா.... ஓயாம பேசற அந்த வாய்ல ஒரு ஓலைவெடிய போட்டுடறேன் இன்னிக்கு...

தாத்தா : அய்யோ... என்ன வுட்டுடு.......

அப்பா : என்னடா கெழம் இந்த ஓட்டம் ஓடறது... பி.டி.உஷாவ மிஞ்சிடும் போல இருக்கே..... பாவம் விட்டுடுடா...

பட்டாபி : பொழச்சு போட்டும் கெழம்... விட்டுட்டேன்.. சரி... டிஃபன் ரெடியா??!! சாப்டுட்டு நம்ம காளிமுத்துவ போய் பார்க்கணும்....

அப்பா : அந்த காளிமுத்துவாடா.... அவர்கிட்ட ஒனக்கு என்ன வேலை?

பட்டாபி : அப்பா... நீ நெனக்கற காளிமுத்து இல்ல .. அந்த காளிமுத்து சகவாசம்லாம் தாத்தாவுக்கு தான்... போன வாரம் கூட ஏதோ லெட்டர் போட்டுது... எங்க வந்து, எத்தனை மணிக்கு மீட் பண்ணட்டும்னு!!

இவர் எங்க ஆஃபீஸ்ல புதுசா வேலைக்கு சேர்ந்திருக்கற மேனேஜர்... பக்கத்து தெருவில தான் குடியிருக்கார்... மீட்டிங்ல மீட் பண்ணினேன்... மீட்டிங் முடிஞ்சு வர்றப்போ, வீட்டுல வந்து பாருன்னு சொன்னார்... டிஃபன் சாப்பிட்டு போய் பார்த்துட்டு வந்துடறேன்...

அப்பா : என்னவோ போடா பட்டாபி... பார்த்து நடந்துக்கோ... அந்த காளிமுத்து கிட்ட எல்லாம் போயிடாத... அவர் ஒரு மாதிரி... உடம்பு கெட்டு போயிடும்... ஜாக்கிரதை...

46 comments:

SUFFIX said...

நல்லா இருக்கு கோபி, ஒரிஜினாலிட்டிய அப்படியே மெயிண்டெயின் செஞ்சிருக்கீங்க.

R.Gopi said...

//SUFFIX said...
நல்லா இருக்கு கோபி, ஒரிஜினாலிட்டிய அப்படியே மெயிண்டெயின் செஞ்சிருக்கீங்க.//

*******

வாங்க SUFFIX......

காமெடியை ரசித்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி... இதெல்லாம் படிக்கும் போது, சிறிது நேரம் நம் கவலையை மறக்கலாம்... அதற்காக எழுதியது...

பெசொவி said...

"நீங்கதான் சொல்றீங்க, இது பழமொழின்னு. அங்க போய் கேட்டா, இதுலாம் பழமொழி இல்ல ஏதோ கிழமொழின்னுட்டான்."

இந்த வசனத்தை விட்டுட்டீங்களே. (பெரிய தம்பி நாடக வசனம்னு நினைக்கிறேன்)

R.Gopi said...

//பெயர் சொல்ல விருப்பமில்லை said...
"நீங்கதான் சொல்றீங்க, இது பழமொழின்னு. அங்க போய் கேட்டா, இதுலாம் பழமொழி இல்ல ஏதோ கிழமொழின்னுட்டான்."

இந்த வசனத்தை விட்டுட்டீங்களே. (பெரிய தம்பி நாடக வசனம்னு நினைக்கிறேன்)//

********

யெஸ்ஸ்ஸ்... நீங்க சொல்ற வசனம் இருக்கு... அதையே எழுத வேண்டாம்... அதே ஸ்டைல்ல வேற எழுதலாம்னு முயற்சித்ததே இந்த பதிவு....

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி பெயர் சொல்ல விருப்பமில்லை.

Ananya Mahadevan said...

சூப்பரா இருக்கு கோபி.. நல்ல முயற்சி.
இதே மாதிரி எஸ்.வீ.சேகரின் ஸ்டையிலில் ரெண்டு மூணு எழுதலாமே... ப்ளீஸ் முயற்சிக்கவும்.

R.Gopi said...

// அநன்யா மஹாதேவன் said...
சூப்பரா இருக்கு கோபி.. நல்ல முயற்சி.
இதே மாதிரி எஸ்.வீ.சேகரின் ஸ்டையிலில் ரெண்டு மூணு எழுதலாமே... ப்ளீஸ் முயற்சிக்கவும்.//

*********

வாங்க அநன்யா...

வருகை தந்து, பதிவை படித்து பாராட்டியமைக்கு மிக்க நன்றி... கண்டிப்பாக முயற்சிக்கலாம்... காமெடி எழுதறதுன்னா நமக்கு “அல்வா” சாப்பிடற மாதிரி..

இராகவன் நைஜிரியா said...

அப்படியே ...எஸ்.வி.சேகர் பேசினா எப்படி இருக்கும்னு கொஞ்சம் கற்பனை செஞ்சு பார்த்த்தேன்.

பயங்கரமா சிரிக்க ஆரம்பிச்சுட்டேன்.

தங்கமணியும், மகனும்... நேத்திக்கு கூட நல்லாத்தானே இருந்தாரு இந்தாளு, இன்னிக்கு என்னாச்சுன்னு கவலையோட பார்க்க ஆரம்பிச்சுட்டாங்கப்பூ...

R.Gopi said...

R.Gopi said...
//இராகவன் நைஜிரியா said...
அப்படியே ...எஸ்.வி.சேகர் பேசினா எப்படி இருக்கும்னு கொஞ்சம் கற்பனை செஞ்சு பார்த்த்தேன்.

பயங்கரமா சிரிக்க ஆரம்பிச்சுட்டேன்.

தங்கமணியும், மகனும்... நேத்திக்கு கூட நல்லாத்தானே இருந்தாரு இந்தாளு, இன்னிக்கு என்னாச்சுன்னு கவலையோட பார்க்க ஆரம்பிச்சுட்டாங்கப்பூ...//

*********

ராகவன் அண்ணா...

மிக்க நன்றி...

நீங்க எழுதின கமெண்ட் படிச்சுட்டு நானே ஆடி பூட்டேன் தல.....

கோமதி அரசு said...

கோபி,

கற்பனை உரையாடல் காட்சி நன்றாக உள்ளது.

R.Gopi said...

//கோமதி அரசு said...
கோபி,

கற்பனை உரையாடல் காட்சி நன்றாக உள்ளது.//

*******

வாங்க கோமதி மேடம்...

வருகை தந்து, பதிவை படித்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி...

KarthigaVasudevan said...

:))

ஹுஸைனம்மா said...

அவர்தான் முழுசா கோபாலபுரம் பக்கம் ஒதுங்கிட்டாரே?? அப்றம் ஏன் போயஸ் கார்டனுக்கும் நடக்கறார்?

நல்லாருந்துது காமெடி!!

R.Gopi said...

//KarthigaVasudevan said...
:))//

********

பதிவை படித்து சிரித்தமைக்கு நன்றி கார்த்திகா...

R.Gopi said...

//ஹுஸைனம்மா said...
அவர்தான் முழுசா கோபாலபுரம் பக்கம் ஒதுங்கிட்டாரே?? அப்றம் ஏன் போயஸ் கார்டனுக்கும் நடக்கறார்?

நல்லாருந்துது காமெடி!!//

******

வாங்க ஹூஸைனம்மா...

அப்படியா சொல்றீங்க... இன்னும் செட்டில்மெண்ட் ஏதாவது பாக்கியோ என்னவோ தோட்டத்துல...

ரீஸண்டா கூட, இன்னும் நான் அ.தி.மு.க.வில் தான் இருக்கிறேன். தி.மு.க.வில் விரைவில் இணைவேன்னு தானே சொன்னார்...

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

எஸ்.வி.சேகர் பண்ற காமெடிலாம் (!?)
எனக்கு ரொம்பப் பிடிக்கும். இதைப்
படித்து, மிகவும் இரசித்தேன்.
இன்னும் கொஞ்சம்ம்ம் நீளமாக
எழுதியிருக்கலாம்.
விரைவில் புது பதிவிடுங்கள்.

R.Gopi said...

//NIZAMUDEEN said...
எஸ்.வி.சேகர் பண்ற காமெடிலாம் (!?)
எனக்கு ரொம்பப் பிடிக்கும். இதைப்
படித்து, மிகவும் இரசித்தேன்.
இன்னும் கொஞ்சம்ம்ம் நீளமாக
எழுதியிருக்கலாம்.
விரைவில் புது பதிவிடுங்கள்.//

*******

அப்படியே ஆகட்டும் நிஜாம் பாய்...

தொடர் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி.....

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

ரொம்ப நல்ல இருக்குங்க கோபி..
நீங்க சொன்ன மாதிரியே நல்ல சிரிக்க வச்சிடீங்க..
ஹைலைட் அந்த பழமொழிகள் தான்.. அசத்தலா இருக்கு..
வாழ்த்துக்கள்..

R.Gopi said...

//Ananthi said...
ரொம்ப நல்ல இருக்குங்க கோபி..
நீங்க சொன்ன மாதிரியே நல்ல சிரிக்க வச்சிடீங்க..
ஹைலைட் அந்த பழமொழிகள் தான்.. அசத்தலா இருக்கு..
வாழ்த்துக்கள்..//

********

வாங்க ஆனந்தி...

வருகை தந்து, பதிவை படித்து, ரசித்து சிரித்து, பாராட்டியமைக்கு மிக்க நன்றி...

கிரி said...

கோபி எனக்கு எஸ் வீ சேகர் காமெடி ரொம்ப ரொம்ப பிடிக்கும். அவரோட நாடகத்தை ஒரு முறையாவது பார்க்கணும் என்று நினைத்து இருக்கிறேன்..ரொம்ப நாளா ஆனா அது இன்னும் நிறைவேறாம இருக்கு.. பார்ப்போம்.

ஆமா என்ன திடீர்னு இவரை பிடித்துட்டீங்க? ;-)

R.Gopi said...

//கிரி said...
கோபி எனக்கு எஸ் வீ சேகர் காமெடி ரொம்ப ரொம்ப பிடிக்கும். அவரோட நாடகத்தை ஒரு முறையாவது பார்க்கணும் என்று நினைத்து இருக்கிறேன்..ரொம்ப நாளா ஆனா அது இன்னும் நிறைவேறாம இருக்கு.. பார்ப்போம்.

ஆமா என்ன திடீர்னு இவரை பிடித்துட்டீங்க? ;-)//

********

வாங்க கிரி...

எஸ்.வி.சேகர் ட்ராமா நேர்ல பார்த்தா ரொம்ப ஜோரா இருக்கும்... டயலாக் அப்பப்போ மாத்துவாரு...

ஒரு நாடகத்துல இமயமலை பத்தின ஒரு ஜோக் வரும்... அப்போ திடீர்னு ”இமயமலை சாஞ்சா நான் ஏன் கவலைப்படணும்... ரஜினி தான் கவலைப்படணும்... ஏன்னா, அவர் தான் அங்க அடிக்கடி போறார்”னு அந்த டயலாக் மாத்தி சொன்னார். பயங்கர அப்ளாஸ்...

கண்டிப்பா ஒரு தடவையாவது பார்த்துடுங்க... ரொம்ப நல்லா இருக்கும்...

எப்போவும் தான் கரடி, விஜயகாந்த் வச்சு காமெடி எழுதறோம்... ஒரு சேஞ்சுக்கு நிஜமான காமெடியன வச்சு ஒரு காமெடி எழுதலமேன்னு தான் இந்த எஸ்.வி.சேகர் போஸ்டிங்..

Chitra said...

Very creative. Good one!

R.Gopi said...

//Chitra said...
Very creative. Good one!//

********

Welcome & Thanks Chitra for your regular visit and encouraging comment....

Ahamed irshad said...

நேர்ல பார்த்த உணர்வு...

R.Gopi said...

//அஹமது இர்ஷாத் said...
நேர்ல பார்த்த உணர்வு...//

********

வாங்க அஹமது இர்ஷாத்...

வருகை தந்து, பதிவை படித்து பாராட்டியமைக்கு மிக்க நன்றி...

theja amma said...

எஸ் . வி சேகர் நாடகம் பார்த்தது போல நன்றாக இருந்தது - படித்து ரசித்தேன் நன்றி - தேஜாம்மா

R.Gopi said...

//theja amma said...
எஸ் . வி சேகர் நாடகம் பார்த்தது போல நன்றாக இருந்தது - படித்து ரசித்தேன் நன்றி - தேஜாம்மா//

********

வாங்க தேஜாம்மா...

நீங்க எல்லாம் வந்து படிச்சு, நல்லா இருக்குன்னு சொல்றபோது கேக்கறதுக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு...

இதெல்லாம் ஒரு ஸ்ட்ரெஸ் ரிலீவர் மாதிரி... நம் இறுகிய மனதையும், சூழ்நிலையையும் இளக வைக்க ஒரு சிறு முயற்சி...

அடுத்ததாக இதே போன்று இரு காட்சிகள் கொண்ட ஒரு பதிவு தயாராகி வருகிறது...

கே. பி. ஜனா... said...

அட சொல்லவே இல்லியே,உங்களுக்குள்ளே ஒரு சூப்பர் காமெடி ரைட்டர் ஒளிஞ்சிருக்கார்னு?

R.Gopi said...

//K.B.JANARTHANAN said...
அட சொல்லவே இல்லியே,உங்களுக்குள்ளே ஒரு சூப்பர் காமெடி ரைட்டர் ஒளிஞ்சிருக்கார்னு?//

**********

இனிமே பாருங்க ஜனா சார்.. அவர் கொஞ்சம் கொஞ்சமா வெளில வருவார்...

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

ஆஹா...கலக்கல்... ரெம்ப கவனிச்சு அதே ஸ்டைல்ல எழுதி இருக்கீங்க சூப்பர்
ஆஹா...கலக்கல்... ரெம்ப கவனிச்சு அதே ஸ்டைல்ல எழுதி இருக்கீங்க சூப்பர்

R.Gopi said...

//அப்பாவி தங்கமணி said...

ஆஹா...கலக்கல்... ரெம்ப கவனிச்சு அதே ஸ்டைல்ல எழுதி இருக்கீங்க சூப்பர்
ஆஹா...கலக்கல்... ரெம்ப கவனிச்சு அதே ஸ்டைல்ல எழுதி இருக்கீங்க சூப்பர்//

**********

Thanks Thangamani....

For your visit and wishes...

I am trying to write a more bigger one in future....

Paleo God said...

என்னாத்தல மெயின் மேட்டர் விட்டுட்டீங்க??

“எல்லாரும் நல்லா இருக்கணும்”

அப்படின்னு இல்ல தொடங்கனும்?

::))

R.Gopi said...

//【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

என்னாத்தல மெயின் மேட்டர் விட்டுட்டீங்க??

“எல்லாரும் நல்லா இருக்கணும்”

அப்படின்னு இல்ல தொடங்கனும்?

::))//

**********

Shankar ji...

That is quite common for all his dramas' starting scene... Aandava ellaaraiyum nalla padiyaa vaippa.. ... But what i tried here is a scene in the drama...thats all..

Anyway... another lengthy comedy sequence is getting ready... will see in that...

Paleo God said...

ஆனாலும் இடுகை சூப்பர்!

ஜோசியர் மாமா, சைட்டு சாந்தி, காவேரி, பண்ணையார் சம்சாரம், ட்ராலி, ரயில்ல டிக்கி, வெங்கி (அம்முவோட ஹஸ்பண்ட்), ஆஞ்ஞி, எல அல்வா.. அட கேட்டுகிட்டே இருக்கலாம்..!

கலக்குங்க கோபி.:))

R.Gopi said...

//【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

ஆனாலும் இடுகை சூப்பர்!

ஜோசியர் மாமா, சைட்டு சாந்தி, காவேரி, பண்ணையார் சம்சாரம், ட்ராலி, ரயில்ல டிக்கி, வெங்கி (அம்முவோட ஹஸ்பண்ட்), ஆஞ்ஞி, எல அல்வா.. அட கேட்டுகிட்டே இருக்கலாம்..!

கலக்குங்க கோபி.:))//

*******

Thanks Shankar ji...

Adhiradi comedy ready pannindu irukken...

Soon will meet with that...

Jaleela Kamal said...

ஹ ஹா கற்பனை டிராமா அருமை.

Anonymous said...

கலக்கல் காமெடி!
தொடரட்டும் உங்கள் பணி :)

உங்கள் தோழி கிருத்திகா said...

சீக்கிரமே கண்டினுவேஷன் எதிர்பார்க்கிரேன் :)
பை தி பை பாத்து ரொம்ப நாள் ஆச்சு...எப்படி இருக்கிங்க

goma said...

அப்படியே S.V.சேகர் டிராமா ஹாலில் அமர்ந்த ஃபீலிங்ஸ் அச்சு அசலாய் இருக்குங்க

Unknown said...

Super Gopi, nicchayama idhai SV Shekarukku anuppi vaippean

Unknown said...

கோபி என்ன ஆச்சு உஙக்ளுக்கு. இந்த பக்கமே காணம். இட்லிவடையில கூட ஆளே இல்லை

R.Gopi said...

R.Gopi said...
Thanks for your visit and comments

JALEELA
RAADHAI
KRITHIKA
JAISANKAR

Had been to India for 40 days trip. Just came back...

Thanks for enquiring about me Jaisankar...

R.Gopi said...

//RD said...
Super Gopi, nicchayama idhai SV Shekarukku anuppi vaippean//

Thanks RD...

Writing another lengthy episode on S.V.Sekar Drama.... Will publish it soon...

Jaleela Kamal said...

நானும் ஆறு முறை வந்து சென்றேன்.
பிறகு என் யூகம் ஊர் போய் இருப்பீங்க என்று
வந்ததும் உடனே வந்து கமெண்ட் இட்டமைக்கு மிக்க நன்றி

ஒரு பதிவா மெசேஜ் வச்சிட்டு போய் இருக்கலாம்.

ஒகே , ஊர் செய்திகள் நிறைய இருக்கும்.

எல்லாம் மெதுவா போடுஙக்ள்

R.Gopi said...

// Jaleela Kamal said...
நானும் ஆறு முறை வந்து சென்றேன்.
பிறகு என் யூகம் ஊர் போய் இருப்பீங்க என்று
வந்ததும் உடனே வந்து கமெண்ட் இட்டமைக்கு மிக்க நன்றி

ஒரு பதிவா மெசேஜ் வச்சிட்டு போய் இருக்கலாம்.

ஒகே , ஊர் செய்திகள் நிறைய இருக்கும்.

எல்லாம் மெதுவா போடுஙக்ள்//

********

வாங்க ஜலீலா மேடம்...

நீங்க சொன்னது சரிதான்... ஒரு பதிவா போட்டு சொல்லி இருக்கலாம்.. எனிவே... விசாரிப்புக்கு மிக்க நன்றி...

நிறைய தோழமைகள் என்னை பற்றி விசாரித்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.

பத்மா said...

நல்ல காமடி கோபி..:)) நிறைய எழுதுங்க

R.Gopi said...

//பத்மா said...
நல்ல காமடி கோபி..:)) நிறைய எழுதுங்க//

******

வாங்க பத்மா....

தாங்கள் பதிவிற்கு வருகை தந்து, படித்து வாழ்த்தியமைக்கு நன்றி...

என் மற்றொரு வலையான www.jokkiri.blogspot.com சென்றால் மேலும் நகைச்சுவை பதிவுகள் படிக்க கிடைக்கும்... அதையும் படித்து கருத்து பகிருங்கள்....