மனம் கனிந்த இனிய “விக்ருதி” தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

புத்தாண்டாம் "விக்ருதி” தமிழ் புத்தாண்டு
கொண்டாட்டமாய் பிறந்த புத்தாண்டு
அதை மகிழ்வுடன் வரவேற்போம் - நாமின்று

கடந்தகால சோதனைகளை துடைத்துவிட்டு
சூழ்ந்துள்ள வேதனைகளை தொலைத்துவிட்டு
”விக்ருதி” புத்தாண்டில் பதிப்போம் சாதனை கல்வெட்டு

ஐந்தறிவு கொண்டவைகள் ஆச்சரியமாய் இணைந்திருக்க
ஆறறிவு கொண்ட நாம் எப்போதும் பிரிந்திருக்க
மதமும், ஜாதியும் துரத்தி அடிக்கும் தூரத்தில்
துரத்தி அடிப்போம், அதை இந்த நேரத்தில்

மரம் வளர்ப்போம், நல்ல செடி வளர்ப்போம்
சுற்று சூழல் பாதுகாத்து, மழை வேண்டுவோம்
மனிதம் வளர்ப்போம், மனித நேயம் வளர்ப்போம்

நல்ல எண்ணங்களை மனதில் நாளும் விதைப்போம்
விதைப்பது நல்விதையானால், மலர்வதும் நன்றாகும்
மலர்வது நன்றானால், நறுமணமும் உண்டாகும்
நறுமணத்தின் சுகந்தம் அதை நம் மனமும் கொண்டாடும்
ஆயுதங்களை புறக்கணிப்போம் -
நம்மை அஹிம்சைக்கு அர்ப்பணிப்போம்
தீயவைகள் கண்டறிந்து ஒதுக்கி வைப்போம்
நல்லவற்றின் தடம் அறிந்து செதுக்கி வைப்போம்

சாதியின் பெயரால் சண்டை இட வேண்டாம்
மதத்தின் பெயரால் மண்டை உடைய வேண்டாம்

அனைவரும் சமம் என்று உரக்க சொல்வோம்
எப்போதும் மனதில் நிலை நிறுத்தி செல்வோம்

கடின உழைப்பிற்கு இல்லை ஈடு இணை
இதை என்றும், எப்போதும் மனதில் நினை
தானத்தில் உள்ளதோ பல தானம்
ஆயினும் - உலகின் இக்கண தேவை - சமாதானம்
தீவிரவாதம் வேரறுக்க பாடுபடுவோம்
அமைதியை கை கொண்டு ஆனந்தம் கொள்வோம்
நம் வாழ்வில் அமைதி நிலைத்திருக்க
அந்த ஆண்டவனை வேண்டுவோம்

அனைவருக்கும் இனிய ”விக்ருதி” தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

36 comments:

கிரி said...

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் :-)

R.Gopi said...

//கிரி said...
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் :-)//

*********

வாங்க கிரி...

தங்களுக்கும், குடும்பத்தார் அனைவருக்கும் என் மனம் கனிந்த இனிய “விக்ருதி” புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்......

Jaleela Kamal said...

கோபி, உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும், இனிய தமிழ் புத்தாண்டு

அனைத்து அருமையான வரிகள், சூப்பர்.

R.Gopi said...

//Jaleela said...
கோபி, உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும், இனிய தமிழ் புத்தாண்டு

அனைத்து அருமையான வரிகள், சூப்பர்.//

*********

வாங்க ஜலீலா மேடம்...

வருகை தந்து வாழ்த்திய தோழமைக்கு என் மனமார்ந்த நன்றி..

Mythili (மைதிலி ) said...

"ஐந்தறிவு கொண்டவைகள் ஆச்சரியமாய் இணைந்திருக்க
ஆறறிவு கொண்ட நாம் எப்போதும் பிரிந்திருக்க" இந்த வரிகள் ரொம்ப அருமையா இருக்கு.. இனிய தமிழ் புத்தண்டு வாழ்த்துக்கள்.

meenamuthu said...

இனிய”விக்ருதி”வருட நல் வாழ்த்துகள் கோபி

இராகவன் நைஜிரியா said...

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.

எல்லா நலமும், வளமும் பெற வாழ்த்துகள்

Chitra said...

வாழ்த்துக்களுக்கு நன்றி. உங்களுக்கும் இனிய சித்திரை திருநாள் நல்வாழ்த்துக்கள்!

மனோ சாமிநாதன் said...

அன்புள்ள கோபி அவர்களுக்கு!

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இதயங்கனிந்த தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

winner said...

இனிய ”விக்ருதி” தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

எல் கே said...

புத்தாண்டு வாழ்த்துக்கள

R.Gopi said...

//மைதிலி கிருஷ்ணன் said...
"ஐந்தறிவு கொண்டவைகள் ஆச்சரியமாய் இணைந்திருக்க
ஆறறிவு கொண்ட நாம் எப்போதும் பிரிந்திருக்க" இந்த வரிகள் ரொம்ப அருமையா இருக்கு.. இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.//

********

மைதிலி மேடம்...

தங்களுக்கும், குடும்பத்தார்க்கும் என் மனம் கனிந்த இனிய “விக்ருதி” புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

R.Gopi said...

//இராகவன் நைஜிரியா said...
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.

எல்லா நலமும், வளமும் பெற வாழ்த்துகள்//

********

ஆஹா... ரொம்ப நாள் கழிச்சு “தல” வந்து இருக்காரு... புடிச்சு ஒரு அமுக்கா அமுக்கிட வேண்டியது தான்...

ராகவன் சார்...

தங்களுக்கும், குடும்பத்தார் அனைவருக்கும் என் மனம் கனிந்த இனிய “விக்ருதி” புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்......

R.Gopi said...

//meenamuthu said...
இனிய”விக்ருதி”வருட நல் வாழ்த்துகள் கோபி//

**********

மீனா மேடம்...

வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி...

தங்களுக்கும், குடும்பத்தார் அனைவருக்கும் என் மனம் கனிந்த இனிய “விக்ருதி” புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்......

R.Gopi said...

//Chitra said...
வாழ்த்துக்களுக்கு நன்றி. உங்களுக்கும் இனிய சித்திரை திருநாள் நல்வாழ்த்துக்கள்!//

********

வாங்க சித்ரா...

வாழ்த்துக்கு மிக்க நன்றி...

தங்களுக்கும், குடும்பத்தார் அனைவருக்கும் என் மனம் கனிந்த இனிய “விக்ருதி” புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்......

R.Gopi said...

//மனோ சாமிநாதன் said...
அன்புள்ள கோபி அவர்களுக்கு!

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இதயங்கனிந்த தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!//

*******

மனோ மேடம்...

ரொம்ப நாள் கழிச்சு வந்து இருக்கீங்க... வருகை தந்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி...

தங்களுக்கும், குடும்பத்தார் அனைவருக்கும் என் மனம் கனிந்த இனிய “விக்ருதி” புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்......

R.Gopi said...

//kayal said...
இனிய ”விக்ருதி” தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்//

*******

வணக்கம் கயல்... வருகை தந்து, வாழ்த்திய தோழமைக்கு மனம் கனிந்த நன்றி...

தங்களுக்கும், குடும்பத்தார் அனைவருக்கும் என் மனம் கனிந்த இனிய “விக்ருதி” புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்......

R.Gopi said...

//LK said...
புத்தாண்டு வாழ்த்துக்கள//

*******

தங்களுக்கும், குடும்பத்தார் அனைவருக்கும் என் மனம் கனிந்த இனிய “விக்ருதி” புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்......

Paleo God said...

அருமைங்க கோபி.:)

உங்களுக்கு எல்லா வாழ்த்துகளும்!

:))

R.Gopi said...

//【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
அருமைங்க கோபி.:)

உங்களுக்கு எல்லா வாழ்த்துகளும்!

:))//

*********

வருகை தந்து, பதிவை படித்து வாழ்த்திய தோழமைக்கு மிக்க நன்றி..

ஷைலஜா said...

புத்தாண்டில் எல்லா வளமும் நலமும் பெற வாழ்த்துகள் ! உங்கள் கனவு மெய்ப்படவேண்டும் கோபி!

R.Gopi said...

//ஷைலஜா said...
புத்தாண்டில் எல்லா வளமும் நலமும் பெற வாழ்த்துகள் ! உங்கள் கனவு மெய்ப்படவேண்டும் கோபி!//

*******

மிக்க நன்றி ஷைலஜா மேடம்...

தங்களுக்கும், குடும்பத்தார் அனைவருக்கும் என் மனம் கனிந்த இனிய “விக்ருதி” புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்......

கோமதி அரசு said...

கோபி,
உங்களுக்கும்,உங்கள் குடுமத்தாருக்கும்
என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

உங்கள் புத்தாண்டு கவிதை அருமை.

//இக் கணம் தேவை -சாமாதானம்//
உலக சாமாதானம் விரைவில் அடையட்டும்.

R.Gopi said...

//தோழி said...
இனிய தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்...//

*******

வருகை தந்து வாழ்த்திய தோழமைக்கு மிக்க நன்றி...

தங்களுக்கும், குடும்பத்தார் அனைவருக்கும் என் மனம் கனிந்த இனிய “விக்ருதி” புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்......

R.Gopi said...

// கோமதி அரசு said...
கோபி,
உங்களுக்கும்,உங்கள் குடுமத்தாருக்கும்
என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

உங்கள் புத்தாண்டு கவிதை அருமை.

//இக் கணம் தேவை -சாமாதானம்//
உலக சாமாதானம் விரைவில் அடையட்டும்.//

*********

வாங்க கோமதி மேடம்...

பதிவிற்கு வருகை தந்து, வாழ்த்தியமைக்கு என் மனமார்ந்த நன்றி...

தங்களுக்கும், குடும்பத்தார் அனைவருக்கும் என் மனம் கனிந்த இனிய “விக்ருதி” புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்......

Anonymous said...

சிறந்த கருத்துக்களோடு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் சொன்ன கோபிக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்...

R.Gopi said...

//தமிழரசி said...
சிறந்த கருத்துக்களோடு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் சொன்ன கோபிக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்...//

********

வருகை தந்து பதிவை படித்து, வாழ்த்திய தோழமை தமிழரசி அவர்களே... மிக்க நன்றி....

தங்களுக்கும், குடும்பத்தார் அனைவருக்கும் என் மனம் கனிந்த இனிய “விக்ருதி” புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்......

theja amma said...

அருமையான வரிகள் . தங்களுக்கும் (காலம் கடந்த)புத்தாண்டு வாழ்த்துக்கள் .
- தேஜாம்மா

R.Gopi said...

//theja amma said...
அருமையான வரிகள் . தங்களுக்கும் (காலம் கடந்த)புத்தாண்டு வாழ்த்துக்கள் .
- தேஜாம்மா//

********

வாங்க தேஜாம்மா....

நீங்கள் வருகை தந்து, வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி...

தங்களுக்கும், குடும்பத்தார் அனைவருக்கும் என் மனம் கனிந்த இனிய “விக்ருதி” புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்......

Kavinaya said...

அருமையான வரிகள்/வாழ்த்து. நன்றி கோபி. உங்களுக்கும், உங்களைச் சேர்ந்த அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

R.Gopi said...

// கவிநயா said...
அருமையான வரிகள்/வாழ்த்து. நன்றி கோபி. உங்களுக்கும், உங்களைச் சேர்ந்த அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.//

********

பதிவிற்கு வருகை தந்து, படித்து, வாழ்த்து பகிர்ந்த தோழமை கவிநயா அவர்களே... மிக்க நன்றி...

தங்களுக்கும், குடும்பத்தார் அனைவருக்கும் என் மனம் கனிந்த இனிய “விக்ருதி” புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்......

மனோ சாமிநாதன் said...

“ஐந்தறிவு கொண்டவைகள் ஆச்சரியமாய் இணைந்திருக்க
ஆறறிவு கொண்ட நாம் எப்போதும் பிரிந்திருக்க”

மிருகங்களுக்கு இருக்கும் பாசப்பிணைப்பும் நன்றியும் அறிவும்கூட இப்போது மனிதர்களிடம் இல்லை. ‘நன்றி கெட்ட மகனைவிட நாய்கள் மேலடா’ என்று அப்போதே பாடி இருக்கிறார்கள்.

“நல்ல எண்ணங்களை மனதில் நாளும் விதைப்போம்
விதைப்பது நல்விதையானால், மலர்வதும் நன்றாகும்
மலர்வது நன்றானால், நறுமணமும் உண்டாகும்
நறுமணத்தின் சுகந்தம் அதை நம் மனமும் கொண்டாடும் “

அருமையான வரிகள்! உங்களின் பதிவு, எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமைப்படவும் வைக்கிறது, இன்னும் நம் இளைஞர்கள் மனதில் எத்தனை தாகமிருக்கிறது நாளைய எதிர்காலத்தைப் பற்றி என்று!

உங்களைப்போன்ற இளைஞர்களின் மனதில் விதைக்கப்பட்டிருக்கும் நற்சிந்தனைகளினால் நாளைய எதிர்காலமாவது நிச்சயம் நீங்கள் ஆசைப்பட்டிருக்கிற சமாதானம், அமைதி, மதச்சார்பின்மை, அன்பு கொண்டதாக மாறும்! உங்களின் இன்றைய கனவு நாளை நிச்சயம் நிறைவேறும்!

R.Gopi said...

//மனோ சாமிநாதன் said...
“ஐந்தறிவு கொண்டவைகள் ஆச்சரியமாய் இணைந்திருக்க
ஆறறிவு கொண்ட நாம் எப்போதும் பிரிந்திருக்க”

மிருகங்களுக்கு இருக்கும் பாசப்பிணைப்பும் நன்றியும் அறிவும்கூட இப்போது மனிதர்களிடம் இல்லை. ‘நன்றி கெட்ட மகனைவிட நாய்கள் மேலடா’ என்று அப்போதே பாடி இருக்கிறார்கள்.

“நல்ல எண்ணங்களை மனதில் நாளும் விதைப்போம்
விதைப்பது நல்விதையானால், மலர்வதும் நன்றாகும்
மலர்வது நன்றானால், நறுமணமும் உண்டாகும்
நறுமணத்தின் சுகந்தம் அதை நம் மனமும் கொண்டாடும் “

அருமையான வரிகள்! உங்களின் பதிவு, எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமைப்படவும் வைக்கிறது, இன்னும் நம் இளைஞர்கள் மனதில் எத்தனை தாகமிருக்கிறது நாளைய எதிர்காலத்தைப் பற்றி என்று!

உங்களைப்போன்ற இளைஞர்களின் மனதில் விதைக்கப்பட்டிருக்கும் நற்சிந்தனைகளினால் நாளைய எதிர்காலமாவது நிச்சயம் நீங்கள் ஆசைப்பட்டிருக்கிற சமாதானம், அமைதி, மதச்சார்பின்மை, அன்பு கொண்டதாக மாறும்! உங்களின் இன்றைய கனவு நாளை நிச்சயம் நிறைவேறும்!//

***********

மனோ மேடம்....

பதிவிற்கு வருகை தந்து, ஆழ்ந்து படித்து, விரிவாக கருத்துரைத்தமைக்கு என் மனமார்ந்த நன்றி....

சாதி, மதத்தின் பெயரால் சச்சரவு வேண்டாம் என்பதை கூட இரு வரிகளில் இதே பதிவில் விளக்கி உள்ளேன் மேடம்..

//சாதியின் பெயரால் சண்டை இட வேண்டாம்
மதத்தின் பெயரால் மண்டை உடைய வேண்டாம்//

”கனவு மெய்ப்பட வேண்டும்” என்பதே என் அவா கூட...

CM ரகு said...

அனைத்தும் அருமையான வைர வரிகள்.

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.
(though its a late wish)

எல்லா நலமும், வளமும் பெற வாழ்த்துகள்.

--CM ரகு

R.Gopi said...

//CM ரகு said...
அனைத்தும் அருமையான வைர வரிகள்.

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.
(though its a late wish)

எல்லா நலமும், வளமும் பெற வாழ்த்துகள்.

--CM ரகு//

*******

வருகை தந்து, வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி ரகு...

R.Gopi said...

இந்த பதிவிற்கு “தமிழிஷில்” வாக்களித்து பதிவை பிரபலமாக்கிய தோழமைகள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி...

venkatnagaraj
ananyamahadevan
giriblog
Jaleela
annamalaiyaan
kbjana
Raghavan
tharun
mounakavi
spice74
inbadurai
tamilz
paarvai
shankarp071
menagasathia
thenali
chanthru
karthikvlk
palapattarai
RDX
geethaachal
kingkhan1
starjan
raghupondy