தகிக்கும் பாலைவனம் - இங்க 50௦ டிகிரி வெயில் எல்லாம் ஜுஜூபி....மத்திய கிழக்கு நாடுகளில் வெயில் காலம் என்பது மிக கொடுமையானது... அதுவும், குவைத், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் (யு.ஏ.ஈ.யின் தலைநகரமான அபுதாபி எண்ணெய் வளம் மிக்க பகுதி - யு.ஏ.ஈ..உலகின் ஐந்தாவது அதிக எண்ணெய் வளம் மிக்க நாடு என்று படித்த ஞாபகம்...) போன்ற எண்ணெய் வளம் மிகுந்த நாடுகளில் வெப்பத்தின் தாக்கம் மிக மிக அதிகமாக இருக்கும்.

பீக் சம்மர் எனப்படும் ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில், மதியம் 12 மணிக்கு மேல் வெய்யில் 50௦ டிகிரியை தாண்டுவது என்பதெல்லாம் சர்வ சாதாரணம். நான் வேலை செய்து கொண்டிருக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (யு.ஏ.ஈ), பீக் சம்மர் எனப்படும் ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் வெயிலில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு நீட்டிக்கப்பட்ட மதிய உணவு இடைவேளை நேரம் அறிவிக்கப்பட்டு விடும்...

ஜூலை 1ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 31ம் தேதி வரையிலான அந்த இரண்டு மாதங்களுக்கு எப்போதும் அளிக்கப்படும் இடைவேளையை விட கூடுதல் நேரம் ஒதுக்கி அரசாங்கம் ஆணை பிறப்பிக்கும்... அதற்கு ”சம்மர் மிட்டே ப்ரேக்” என்று பெயர்...

பொதுவாக இரண்டு மாதங்களுக்கு (ஜூலை-ஆகஸ்ட்) அளிக்கப்படும் அந்த இடைவேளை நேரம் (மதியம் 12.30௦ முதல் ௦03.00௦௦ மணி௦௦ வரை), இந்த ஆண்டின் கடுமையான வெயில் தாக்கத்தை மனதில் கொண்டு மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது... அதாவது 15ம் தேதி ஜூன் முதல் 15ம் தேதி செப்டம்பர் வரை...

எப்போதும் இல்லாதது போல், இந்த ஆண்டு ஜூன் மாத ஆரம்பத்திலிருந்தே வெயிலின் கடுமை மிகவும் உக்கிரமாக உள்ளது... ஏர் கண்டிஷனர்கள் இருந்தும், அந்த வெப்பத்தின் தாக்கத்தை உணர முடிகிறது... தினமும் வெய்யில் 50௦ டிகிரியை சுலபமாக தாண்டுகிறது... நேரடியாக வெயிலில் பணிபுரியும் தொழிலாளிகள் வெயிலின் கொடுமை தாங்காது, ஆங்காங்கே நிழலில் தங்கி இருப்பதை காணும் போது, மனதுக்கு கஷ்டமாக உள்ளது...

அதிலும், ரோடு வேலை செய்யும் தொழிலாளிகள் படும் பாடு, சொல்லி மாளாது... நம்மூர் போல, நிழலுக்கு ஒதுங்க பெரிய அளவிலான மரங்கள் கூட இங்கு இல்லை... (அது போன்ற சாலையோர நிழல் தரும் மரங்கள் இப்போது நம்மூரிலேயே இல்லை என்பது வேறு விஷயம்...).

ஐக்கிய அரபு அமீரக அரசாங்கம், இவர்களுக்கு வேலை செய்யும் கம்பெனி சரியான ஓய்வு கொடுக்கிறதா என்பதை அதிகாரிகளை வைத்து தொடர்ந்து கண்காணிக்கும்..அரசின் ஆணையை மீறும் கம்பெனிகளுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும்.
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதாக முன்பு அரசாணையை மீறிய கம்பெனிகளுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அமீரகத்தில் இருக்கும் எந்த கம்பெனியும் இதற்கு விதிவிலக்கல்ல....சமீபகாலமாக உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும், ஆட்டிப்படைக்கும் ”க்ளோபல் வார்மிங்” என்பதன் அர்த்தத்தை சரியாக உணர்ந்து கொள்ளும் நேரம் வந்துவிட்டது என்பதையே இது காட்டுகிறது...

ஆகவே, நாம் அனைவரும் இதுவரை காட்டி வந்த அலட்சிய போக்கை கைவிட வேண்டும். சிறு சிறு அலட்சியமே பின்னாளில் பெரிய அழிவிற்கு வழிவகுக்கும்... இது நாம் கண்கூடாக பலமுறை கண்டுள்ளோம்... ஒரு பெரிய கப்பலில் விழும் சிறு ஓட்டை தான், கவனிக்காமல் விட்டால் அந்த பெரிய கப்பலையே மூழ்கடிக்கும்... நம்மாலான முயற்சிகளை மேற்கொண்டு, ஆங்காங்கே மரம் நடும் வழக்கத்தை மேற்கொள்ளலாம்...
குறைந்த பட்சம், நாம் வாழும் வீட்டில், சில மரங்களை நடலாம்.. நம்மால் வெட்டப்படும் மரங்களே, இயற்கை நமக்கு அளிக்கும் கொடையான ஆண்டு மழை வரத்தை குறைக்கிறது... எப்போது, வருடா வருடம், நமக்கு கிடைக்கும் அந்த பருவ மழை பொய்ய்க்காமலிருக்க, நாம் நம்மாலான முயற்சிகளை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்...ஏற்கனவே இருக்கும் மரங்களை வெட்டாமல், பாதுகாப்போம்... இயற்கை தரும் வரமான மாமழையை பெற முயற்சிப்போம்... முயற்சி திருவினையாக்கும்.... முயன்றால் முடியாதது எதுவுமில்லை... பசுமையான நம் நாட்டை, நாமே பாலைவனமாக்காமல் இருக்க முயற்சிகள் மேற்கொள்வோம்...

நல்ல விஷயங்களை நாளும் மனதில் கொண்டு, அதை பின்பற்றி வாழ்ந்தால், நம் வாழ்வு சிறக்கும்... வசந்தமாகும்..
நான் எழுதிய இந்த கட்டுரையை தொடர்ந்து, யு.ஏ.ஈ.யின் முன்னணி ஆங்கில நாளேடான “கல்ஃப் நியூஸ்” இன்று (22 .06 .2010) வெளியிட்டு இருக்கும் செய்தியை படிக்க இங்கே க்ளிக்குங்கள்....

43 comments:

கிரி said...

தொழிலாளர்கள் நிலை தான் பரிதாபம். இங்க வந்து இவ்வளவு கஷ்டப்படுவதற்கு நம்ம ஊரிலே வேலை செய்யலாம்.. அதிலும் ஒரு சிலர் அனுபவிக்கும் கொடுமைகள்.. என்னமோ போங்க!

R.Gopi said...

//கிரி said...
தொழிலாளர்கள் நிலை தான் பரிதாபம். இங்க வந்து இவ்வளவு கஷ்டப்படுவதற்கு நம்ம ஊரிலே வேலை செய்யலாம்.. அதிலும் ஒரு சிலர் அனுபவிக்கும் கொடுமைகள்.. என்னமோ போங்க!//

********

வாங்க கிரி....

கண்டிப்பாக வெயிலில் வேலை செய்யும் தொழிலாளர்களை பார்த்தால், பரிதாபமாக இருக்கும்...

அதிகமாக பணம் கிடைக்கும், தனக்கு இருக்கும் சில கடமைகளை முடித்து விடலாம் என்பதாலேயே பலர் அன்னிய நாட்டிற்கு படையெடுக்கிறார்கள்...

இந்த முயற்சியில் பலர் வெல்கிறார்கள், பலர் தோற்கிறார்கள்...

ஹுஸைனம்மா said...

ஆமாங்க, வெயில்ல வேலை பாக்கீறவங்களப் பாத்தா மனசு கஷ்டமாருக்கும். என்னவோ, இப்ப கொஞ்சம் அதிக மதிய இடைவேளை மற்றும் தண்ணீர், உப்புன்னு (to compensate salt loss by perspiration) கொடுக்கிறாங்க - அதுவும் அரசு மற்றும் பெரிய நிறுவனங்கள்தான் அக்கறை எடுக்கிறாங்க; சின்ன நிறுவனங்கள் ரொம்ப கண்டுக்கறதில்லை.

நம்மாள முடிஞ்சது, நம்ம ஆட்கள் இம்மாதிரி நிறுவனங்களில் பெரிய பதவிகளில் இருந்தால் கீழ்நிலை தொழிலாளர்களுக்கு உதவி செய்யலாம் (செய்கிறார்கள்).

Chitra said...

அதிலும், ரோடு வேலை செய்யும் தொழிலாளிகள் படும் பாடு, சொல்லி மாளாது... நம்மூர் போல, நிழலுக்கு ஒதுங்க பெரிய அளவிலான மரங்கள் கூட இங்கு இல்லை... (அது போன்ற சாலையோர நிழல் தரும் மரங்கள் இப்போது நம்மூரிலேயே இல்லை என்பது வேறு விஷயம்...).

...... பாவம்ங்க..... உண்மையில் எப்படி கஷ்டப்பட்டு உழைக்கிறார்கள்!
வேதனையாக இருக்கிறது.

R.Gopi said...

//ஹுஸைனம்மா said...
ஆமாங்க, வெயில்ல வேலை பாக்கீறவங்களப் பாத்தா மனசு கஷ்டமாருக்கும். என்னவோ, இப்ப கொஞ்சம் அதிக மதிய இடைவேளை மற்றும் தண்ணீர், உப்புன்னு (to compensate salt loss by perspiration) கொடுக்கிறாங்க - அதுவும் அரசு மற்றும் பெரிய நிறுவனங்கள்தான் அக்கறை எடுக்கிறாங்க; சின்ன நிறுவனங்கள் ரொம்ப கண்டுக்கறதில்லை.

நம்மாள முடிஞ்சது, நம்ம ஆட்கள் இம்மாதிரி நிறுவனங்களில் பெரிய பதவிகளில் இருந்தால் கீழ்நிலை தொழிலாளர்களுக்கு உதவி செய்யலாம் (செய்கிறார்கள்).//

*******

வாங்க ஹூஸைனம்மா... சரியா சொன்னீங்க...

நான் இது போன்ற தொழிலாளர்களுக்கு என்னாலான உதவிகளை வருடா வருடம் செய்து விடுவேன்... மற்றவர்களுக்கு வருடம் முழுதும் செய்யும் உதவிகள் தனி...

R.Gopi said...

//Chitra said...
அதிலும், ரோடு வேலை செய்யும் தொழிலாளிகள் படும் பாடு, சொல்லி மாளாது... நம்மூர் போல, நிழலுக்கு ஒதுங்க பெரிய அளவிலான மரங்கள் கூட இங்கு இல்லை... (அது போன்ற சாலையோர நிழல் தரும் மரங்கள் இப்போது நம்மூரிலேயே இல்லை என்பது வேறு விஷயம்...).

...... பாவம்ங்க..... உண்மையில் எப்படி கஷ்டப்பட்டு உழைக்கிறார்கள்!
வேதனையாக இருக்கிறது.//

******

வாங்க சித்ரா....

இந்த தொழிலாளர்கள் இவ்வளவு கடுமையாக உழைத்தும், அவர்களின் ஊதியம் என்னவோ பெரிய அளவில் இல்லை... அவர்களின் இருப்பிடம், உணவு போன்ற வசதிகள் கூட சொல்லிக்கொள்ளும்படி இருப்பதில்லை என்பது தான் வேதனை.

ஷைலஜா said...

அந்நிய நாடு என்கிறோம் அங்கே இவ்வளவு கஷ்டப்பட்டு சிலர் உழைக்கிறார்கள் என்கிறபோது நமக்கும் வேதனையாக இருக்கிறது. சென்னைவெய்யிலே தாங்காத எனக்கு நீங்கள் குறிப்பிடும் வெய்யிலின் அளவைப்பார்த்தாலே மயக்கமாய் வருகிறது பாவம் அந்த உழைப்பாளிகள்..பெங்களூர்ல சாலையை அகலப்படுத்தவும் மெட்ரோ ரயில் பாதைக்காகவும் நிறைய மரங்களை வெட்டியபோது சிலர்போராட்டமேநடத்தினார்கள் ..
என்ன செய்து என்ன ஊர் கூடினால்தான் தேர்நகரும்..நல்ல சிந்திக்கவேண்டிய பதிவு கோபி.

R.Gopi said...

//ஷைலஜா said...
அந்நிய நாடு என்கிறோம் அங்கே இவ்வளவு கஷ்டப்பட்டு சிலர் உழைக்கிறார்கள் என்கிறபோது நமக்கும் வேதனையாக இருக்கிறது. சென்னைவெய்யிலே தாங்காத எனக்கு நீங்கள் குறிப்பிடும் வெய்யிலின் அளவைப்பார்த்தாலே மயக்கமாய் வருகிறது பாவம் அந்த உழைப்பாளிகள்..பெங்களூர்ல சாலையை அகலப்படுத்தவும் மெட்ரோ ரயில் பாதைக்காகவும் நிறைய மரங்களை வெட்டியபோது சிலர்போராட்டமேநடத்தினார்கள் ..
என்ன செய்து என்ன ஊர் கூடினால்தான் தேர்நகரும்..நல்ல சிந்திக்கவேண்டிய பதிவு கோபி.//

*******

வருகை தந்து, பதிவை படித்து, அருமையான தகவலை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ஷைலஜா மேடம்...

வெங்கட் நாகராஜ் said...

தேவையான நேரத்தில் தேவையான பதிவு. வளர்ச்சி என்ற பெயரில் இயற்கையை அழித்துக் கொண்டு இருக்கிறோம் - நம்மையே அழித்து விடும் என்று தெரியாமல் அல்லது தெரிந்தும் கண்டுகொள்ளாமல்.

R.Gopi said...

//வெங்கட் நாகராஜ் said...
தேவையான நேரத்தில் தேவையான பதிவு. வளர்ச்சி என்ற பெயரில் இயற்கையை அழித்துக் கொண்டு இருக்கிறோம் - நம்மையே அழித்து விடும் என்று தெரியாமல் அல்லது தெரிந்தும் கண்டுகொள்ளாமல்.//

*********

தொடர்ந்து வருகை தந்து, பதிவை படித்து, கருத்து பகிர்ந்து பாராட்டும் தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி...

நான் எப்போதும் சொல்வது போல், தோழமைகளின் ஊக்கமே நிறைய எழுத தூண்டும்...

மிக்க நன்றி வெங்கட் நாகராஜ்..

Riyas said...

வெயிலில் வேலை செய்பவர்கள் நிலையை எண்ணிப்பார்க்கும் போது பரிதாபம்தான்...

இவர்களின் நிலையை பார்த்து நானும் சிரிய பதிவு போட்டிருந்தேன்..
http://riyasdreams.blogspot.com/2010/06/blog-post_10.html

இனியவன் said...

வெயிலின் கொடுமைக்கு பயந்து எங்கோ தென்படும் மரத்தடியின் கீழ் பொய் நின்றாலும் அதே சூட்டின் தகத்தை தான் உணர வேண்டி இருக்கிறது...இரவு 10 மணி அளவிலும் சுமார் 115 டிகிரி வெப்பத்தை காணும் நாடு..என்னத்தை சொல்ல...

R.Gopi said...

// Riyas said...
வெயிலில் வேலை செய்பவர்கள் நிலையை எண்ணிப்பார்க்கும் போது பரிதாபம்தான்...

இவர்களின் நிலையை பார்த்து நானும் சிரிய பதிவு போட்டிருந்தேன்..
http://riyasdreams.blogspot.com/2010/06/blog-post_10.html//

********

வாங்க ரியாஸ் பாய்...

மத்திய கிழக்கு நாடுகளை பற்றி ஒரு விரிவான அலசலாக தொடர் ஒன்றை சிறிது காலம் முன்பு எழுதினேன்...

அதற்கு நல்ல வரவேற்பு இருந்தது.. இந்த பதிவிற்கும் தோழமைகளின் ஆதரவு நன்றாக இருந்தது...

அனைவருக்கும் மிக்க நன்றி...

உங்கள் பதிவை பார்க்கிறேன்...

R.Gopi said...

//இனியவன் said...
வெயிலின் கொடுமைக்கு பயந்து எங்கோ தென்படும் மரத்தடியின் கீழ் பொய் நின்றாலும் அதே சூட்டின் தகத்தை தான் உணர வேண்டி இருக்கிறது...இரவு 10 மணி அளவிலும் சுமார் 115 டிகிரி வெப்பத்தை காணும் நாடு..என்னத்தை சொல்ல...//

************

வாங்க இனியவன்...

மிக சரியாக சொன்னீர்கள்.. இந்த வருடம் வெய்யிலின் தாக்கம் மிக மிக அதிகமாக இருக்கிறது... ஏசியின் பாச்சா எல்லாம் கூட வெயிலிடம் பலிக்கவில்லை...

வரப்போகும் பீக் சம்மர் நாட்களை நினைத்தால் கலக்கமாக இருக்கிறது..

அமுதா கிருஷ்ணா said...

பரிதாபம் மட்டுமே பட முடிகிறது. போன வருடம் நிறைய பேர் அம்மை தாக்கி இந்தியா வந்ததாக கேள்விப்பட்டேன்..

R.Gopi said...

//அமுதா கிருஷ்ணா said...
பரிதாபம் மட்டுமே பட முடிகிறது. போன வருடம் நிறைய பேர் அம்மை தாக்கி இந்தியா வந்ததாக கேள்விப்பட்டேன்..//

********

வாங்க அமுதா கிருஷ்ணா...

இந்த வருடம் வெய்யிலின் தாக்கம் மிக மிக அதிகமாக இருக்கிறது... அந்த நிலைதான் என்னை மிகவும் கவலை கொள்ள வைக்கிறது...

அன்பு said...

என்னதான் வெயில் என்றாலும், நம்மூரில் சட்டையை கழட்டிவிட்டு வேப்ப மர நிழலில் இருந்தாலே போதும்,ஆனால் இங்கே மர நிழலில் இருந்தாலும் நெருப்பு பக்கத்திலே இருப்பது போன்று அனல் காற்றுதான் வீசுகிறது.

R.Gopi said...

இந்த பதிவிற்கு தமிழிஷில் வாக்களித்து பதிவை பிரபலமாக்கியமைக்கும், தொடர் ஆதரவு அளித்து வருவதற்கும் தோழமைகள் அனைவருக்கும் என் மனப்பூர்வமான நன்றி...

kingkhan1
girirajnet
faizesharmi
RDX
anubagavan
chitrax
venkatnagaraj
jegadeesh
easylife
balak
subam
chuttiyaar
paarvai
mvetha
ashok92
Karthi6
annamalaiyaan
Riyas363
einsteen
syedrahman
chanthru

R.Gopi said...

//அன்பு said...
என்னதான் வெயில் என்றாலும், நம்மூரில் சட்டையை கழட்டிவிட்டு வேப்ப மர நிழலில் இருந்தாலே போதும்,ஆனால் இங்கே மர நிழலில் இருந்தாலும் நெருப்பு பக்கத்திலே இருப்பது போன்று அனல் காற்றுதான் வீசுகிறது.//

*******

கரெக்ட் அன்பு...

இந்த வருஷம் அடிக்கற வெய்யில பார்த்தா, சட்டைய கழட்டினா, பொசுங்கி விடுவோம் போல இருக்கு..

தென்றலை துணைக்கழைத்தால்
அது தீயை வாரி இறைக்கிறது..

Ananya Mahadevan said...

//இங்க வந்து இவ்வளவு கஷ்டப்படுவதற்கு நம்ம ஊரிலே வேலை செய்யலாம்.. அதிலும் ஒரு சிலர் அனுபவிக்கும் கொடுமைகள்.. என்னமோ போங்க! //நூற்றுக்கு நூறு உண்மையான சொற்கள்! அங்காடித்தெரு படம் பார்த்தப்போ எனக்கு முதன் முதலா நினைவுக்கு வந்தது இந்த தொழிலாளர்கள் தான். கட்டிடப்பணிக்காக இவர்கள் ஊருக்குள் அழைத்துச்செல்லப்படும்போது ஏஸி இல்லாத பஸ்ஸில், கொளுத்தும் வெயிலிலும் கம்பியில் சாய்ந்துவாறே தூங்கிக்கொண்டு வருவார்கள். இவர்களின் நிலையைப்பார்த்து அழுதுகூட இருக்கிறேன்! பாவம்! லேபர் காம்புக்களை பற்றி சொல்லவே வேண்டாம். அவ்ளோ கஷ்டமான இருப்பிடங்கள்.
அருமையான பகிர்வு!

R.Gopi said...

// அநன்யா மஹாதேவன் said...

அருமையான பகிர்வு!//

*******

வாங்க அநன்யா...

வருகை தந்து, பதிவை படித்து, கருத்து பகிர்ந்தமைக்கு நன்றி...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

46 ஏ தாங்க முடியல தில்லியில்.. 50 ஆ..ம்.. மேலும் வீட்டுக்குள்ள இருக்கிற எனக்கே முடியாதப்ப நினைப்பேன் ..ரோட்டில் வெயிலில் வேலை செய்பவர்களை. :(

R.Gopi said...

//முத்துலெட்சுமி/muthuletchumi said...
46 ஏ தாங்க முடியல தில்லியில்.. 50 ஆ..ம்.. மேலும் வீட்டுக்குள்ள இருக்கிற எனக்கே முடியாதப்ப நினைப்பேன் ..ரோட்டில் வெயிலில் வேலை செய்பவர்களை. :(//

*********

வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி முத்துலெட்சுமி மேடம்...

சென்னையில் பழகியவர்களுக்கு 40-42 வரை தாக்கு பிடிக்க முடியும்... 45 மட்டும் அதற்கு மேல் என்றால், யாருக்குமே ரொம்ப கஷ்டம்...

இங்கே... ஒரு பெரிய அடுப்பு உலைக்குள் மத்திய கிழக்கு நாடுகள் முழுதும் இருப்பது போல் ஒரு சூழல்...

சாருஸ்ரீராஜ் said...

படிக்கும் போது கஷ்டமாக தான் இருக்கு, நல்ல சமூக அக்கறை உள்ள பதிவு.

R.Gopi said...

//சாருஸ்ரீராஜ் said...
படிக்கும் போது கஷ்டமாக தான் இருக்கு, நல்ல சமூக அக்கறை உள்ள பதிவு.//

********

வருகை தந்து, பதிவை படித்து கருத்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சாருஸ்ரீராஜ்...

என் மற்றொரு வலையையும் படிக்கலாமே...

www.jokkiri.blogspot.com

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

சாலைப் பணியாளர்களின் வேதனையையும்
உலக வெப்பமயமாதலையும் ஒரே இடுகையில்
அளித்தீர்கள். நிச்சயம் விழித்துக்கொள்ள
வேண்டிய நேரம் இது.

மனோ சாமிநாதன் said...

பாலைவன வெய்யில் பற்றி அருமையாக எழுதியிருக்கிறீர்கள்! இன்று கூட கணவருடனும் மகனுடனும் நடுப்பகலில் நெடுந்தொலைவு சென்று வந்தேன். ஏஸி காரில் 4 மணி நேர பயணம். வழியெங்கும் அந்த வெயிலில் வேலை செய்து கொண்டிருக்கும் பல நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள்! நடுவில் இரண்டு முறை ஏறி இறங்கியதற்கே சூடு தாங்க முடியாது உடம்பு துவண்டு போனது. வாழ்க்கையே இந்த வெய்யிலில்தான் என கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும் மனிதர்களை நினைத்து எப்போதும்போல வருத்தமாக இருந்தது.

இங்கே பாலைவனத்தில் காசை செலவழித்து பசுமையைக்கொண்டு வந்து கொண்டிருக்கிறார்கள்!
நம் ஊரிலோ பசுமையை அழித்து [வயல்களை அழித்து] கட்டடம் எழுப்பிக்கொண்டிருக்கிறார்கள்!!

R.Gopi said...

//NIZAMUDEEN said...
சாலைப் பணியாளர்களின் வேதனையையும்
உலக வெப்பமயமாதலையும் ஒரே இடுகையில்
அளித்தீர்கள். நிச்சயம் விழித்துக்கொள்ள
வேண்டிய நேரம் இது.//

********

வாங்க நிஜாம் பாய்...

நீங்கள் தொடர்ந்து வருகை தந்து, பதிவை படித்து, கருத்து சொல்வதற்கு மிக்க நன்றி...

நாம் அனைவரும் ஒன்று கூடி நம்மால் இயன்றதை செய்ய வேண்டியது முக்கியம்..

R.Gopi said...

//மனோ சாமிநாதன் said...
பாலைவன வெய்யில் பற்றி அருமையாக எழுதியிருக்கிறீர்கள்! இன்று கூட கணவருடனும் மகனுடனும் நடுப்பகலில் நெடுந்தொலைவு சென்று வந்தேன். ஏஸி காரில் 4 மணி நேர பயணம். வழியெங்கும் அந்த வெயிலில் வேலை செய்து கொண்டிருக்கும் பல நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள்! நடுவில் இரண்டு முறை ஏறி இறங்கியதற்கே சூடு தாங்க முடியாது உடம்பு துவண்டு போனது. வாழ்க்கையே இந்த வெய்யிலில்தான் என கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும் மனிதர்களை நினைத்து எப்போதும்போல வருத்தமாக இருந்தது.

இங்கே பாலைவனத்தில் காசை செலவழித்து பசுமையைக்கொண்டு வந்து கொண்டிருக்கிறார்கள்!
நம் ஊரிலோ பசுமையை அழித்து [வயல்களை அழித்து] கட்டடம் எழுப்பிக்கொண்டிருக்கிறார்கள்!!//

********

நான் இந்த வருடத்தின் வெயிற் கொடுமையை பற்றி இந்த பதிவு எழுதியபின், இன்றைய “கல்ஃப் நியூஸ்” நாளிதழில் வெயிலின் கொடிய தாக்கத்தை பற்றி விலாவாரியாக எழுதி உள்ளார்கள்...

லாரன்ஸ் said...

யப்பா.... !!!! என்ன வெயிலு, தாங்க முடியலையே.

நெருப்ப அள்ளி கொட்டுன மாதிரி இருக்கே. உஷ்ணம் படும் போது முகம் சுளிச்சு உடல் தயங்குதே. ஏசி எங்க இருக்குதுன்னு தேட சொல்லுதே.... அது முதல் பிரச்சினை.

சூடு படும் பொது எரியுறதோ சுடுறதோ முதல் தொல்லை. கொஞ்ச நேரம் வெயில் பட்டதும் உடம்பு தளர்ந்து போகுதே, மனசு பேதலிச்சு போகுதே. எரிச்சல் மண்டிகிட்டு வருது. ஒரு வேலையும் செய்ய மனசு வரதிலையே.

நம்ம உடம்பு தான் கெட்டு போச்சோ என நமக்குள் ஒரு யோசனை. நண்பர் கோபியின் இந்த பதிவு பார்த்ததும், அவரது கல்ப் நீயுஸ் லிங்கும் பார்த்ததும் கொஞ்சம் ஆறுதலா இருக்கு.

இன்னும் ஒரு மூணு மாசம் தானே, சரி அட்ஜஸ்ட் பணிக்கலாம் என சொல்ல தோணுது.

இன்றைய பிரச்சினை சொல்லி, நடைமுறையை சொல்லி, பதிவிட்ட அருமை நண்பருக்கு நன்றிகள்.

அற்புதம். கலக்குங்க

R.Gopi said...

//லாரன்ஸ் said...

அற்புதம். கலக்குங்க//

********

அருமை தோழமை லாரன்ஸ் அவர்களே....

நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு பதிவிற்கு பின்னூட்டம் இட்டதை காணும் போது மனதிற்கு மகிழ்ச்சியாக உள்ளது...

நன்றி...

கோமதி அரசு said...

தமிழ் நாட்டிலேயே வெயிலில் வேலை செய்யும் தொழிலாளரகளைப் பார்த்தால் மனது மிகவும் சங்கடப்படும்.

50 டிகிரி வெயில் கேட்கவே கஷ்டமாய் உள்ளது.அதில் வேலை செய்யும் தொழிலாளர்கள் நிலையை நினைத்தால் மிகவும் வேதனையாக இருக்கு.

பாலைவனம் சோலைவனமாகி தொழிலாளர்கள் கஷ்டத்தை இயற்கை
குறைக்கட்டும்.

R.Gopi said...

//கோமதி அரசு said...

குறைக்கட்டும்.//

********

வாங்க கோமதி மேடம்...

ரொம்ப நாளைக்கு அப்புறம் நம்ம வலைப்பக்கம் வந்திருக்கீங்க... வந்து, அருமையான கமெண்ட் போட்டு இருக்கீங்க... அதற்காக ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ்....

கோமதி அரசு said...

கோபி,நீங்களும் ரொம்ப நாட்களுக்கு பிறகு தானே பதிவு போட்டு இருக்கிறீர்கள்.

ஊருக்கு போய் இருந்த்தீர்களா?

எஸ்.வி.சேகர் பதிவுக்கு பின் இது தானே வெகு நாட்களுக்கு பிறகு எழுதி உள்ளீர்கள்?

உங்கள் வலைபக்கம் அடிக்கடி வந்து ஏமாந்து போனேன்.

sindhusubash said...

போன மாசம் கரண்ட் இல்லாம அஞ்சு மணி நேரம் ஷார்ஜாவில் இருந்ததை என்னன்னு சொல்ல...அதுவும் ஏழு மாடி இறங்கி வந்ததை ஒரு பதிவாவே போடலாம்.

ஆனா நம்ம நெலம எத்தனையோ பரவாயில்லை..வெயிலில் கஷ்டப்படுறவங்கள விட!!!!

R.Gopi said...

//கோமதி அரசு said...
கோபி,நீங்களும் ரொம்ப நாட்களுக்கு பிறகு தானே பதிவு போட்டு இருக்கிறீர்கள்.

ஊருக்கு போய் இருந்த்தீர்களா?

எஸ்.வி.சேகர் பதிவுக்கு பின் இது தானே வெகு நாட்களுக்கு பிறகு எழுதி உள்ளீர்கள்?

உங்கள் வலைபக்கம் அடிக்கடி வந்து ஏமாந்து போனேன்.//

*******

ஆம் மேடம்... நான் ஊருக்கு போயிருந்தேன்...

இனி தொடர்ந்து பதிவுகள் வரும்..

R.Gopi said...

//sindhusubash said...
போன மாசம் கரண்ட் இல்லாம அஞ்சு மணி நேரம் ஷார்ஜாவில் இருந்ததை என்னன்னு சொல்ல...அதுவும் ஏழு மாடி இறங்கி வந்ததை ஒரு பதிவாவே போடலாம்.

ஆனா நம்ம நெலம எத்தனையோ பரவாயில்லை..வெயிலில் கஷ்டப்படுறவங்கள விட!!!!//

********

வாங்க சிந்து....

ஷார்ஜாவில் ப்ராபர் ப்ளானிங் இல்லாததாலே, இந்தளவு பவர் ப்ராப்ளத்தில் அவஸ்தை படுகிறார்கள்..

30 - 40 மாடி கட்டிடங்களுக்கான கட்டுமான ஒப்புதல் தரும்போதே, அந்த கட்டிடங்களுக்கு மின்சார விநியோகம் தர முடியுமா என்று யோசிப்பதில்லை...

ஷார்ஜாவில் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் உள்ள எவ்வளவோ கட்டிடங்கள் மின்சாரம் வினியோகம் இன்றி குடி விடப்படாமல் காலியாகவே உள்ளது....

கே. பி. ஜனா... said...

//நேரடியாக வெயிலில் பணிபுரியும் தொழிலாளிகள் வெயிலின் கொடுமை தாங்காது, ஆங்காங்கே நிழலில் தங்கி இருப்பதை காணும் போது, மனதுக்கு கஷ்டமாக உள்ளது...
அதிலும், ரோடு வேலை செய்யும் தொழிலாளிகள் படும் பாடு, சொல்லி மாளாது... //
நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் பதறுகிறது...
//பருவ மழை பொய்ய்க்காமலிருக்க, நாம் நம்மாலான முயற்சிகளை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்...ஏற்கனவே இருக்கும் மரங்களை வெட்டாமல், பாதுகாப்போம்... இயற்கை தரும் வரமான மாமழையை பெற முயற்சிப்போம்... முயற்சி திருவினையாக்கும்.... // ரொம்ப சரி!

R.Gopi said...

//K.B.JANARTHANAN said...
//நேரடியாக வெயிலில் பணிபுரியும் தொழிலாளிகள் வெயிலின் கொடுமை தாங்காது, ஆங்காங்கே நிழலில் தங்கி இருப்பதை காணும் போது, மனதுக்கு கஷ்டமாக உள்ளது...
அதிலும், ரோடு வேலை செய்யும் தொழிலாளிகள் படும் பாடு, சொல்லி மாளாது... //
நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் பதறுகிறது...
//பருவ மழை பொய்ய்க்காமலிருக்க, நாம் நம்மாலான முயற்சிகளை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்...ஏற்கனவே இருக்கும் மரங்களை வெட்டாமல், பாதுகாப்போம்... இயற்கை தரும் வரமான மாமழையை பெற முயற்சிப்போம்... முயற்சி திருவினையாக்கும்.... // ரொம்ப சரி!//

********

வாங்க ஜனா சார்...

பதிவிற்கு வருகை தந்து, படித்து, கருத்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சார்...

Gayathri said...

மிக சரிய சொன்னிங்க...தொழிலாளிகள் பாவம்...இந்த வெயில்ல வெடுக்கு ஏசி ல இருந்தாலே சுடு சுத்து நு கத்ரோம்..அவங்க பாவம்...லீவும் இல்ல பெரிய சம்பளமும் இல்ல அனாலும் வெயில்ல கஷ்ட படறாங்க
நியாம பாத ஆபீஸ் வேலை செய்யறவங்களுக்கு கொடுக்கறத விட அதிகம் இவங்களுக்கு கொடுக்கணும்

R.Gopi said...

//Gayathri said...
மிக சரிய சொன்னிங்க...தொழிலாளிகள் பாவம்...இந்த வெயில்ல வெடுக்கு ஏசி ல இருந்தாலே சுடு சுத்து நு கத்ரோம்..அவங்க பாவம்...லீவும் இல்ல பெரிய சம்பளமும் இல்ல அனாலும் வெயில்ல கஷ்ட படறாங்க
நியாம பாத ஆபீஸ் வேலை செய்யறவங்களுக்கு கொடுக்கறத விட அதிகம் இவங்களுக்கு கொடுக்கணும்//

*******

வாங்க காயத்ரி...

தொழிலாளர்களின் நிலையை கண்கூடாக பார்த்து, மனம் நொந்து எழுதிய பதிவு இது...

mrs.krishnan said...

Coimbatore vittu chennai ponale veyyil thanga mudiyaradhu illinga. Neenga solradha partha manasuku romba kashtama iruku.

Kudumbatha vittu velinadugalil velai parkaravanga nilai vedhanaiyanadhu.

jokkiri said...

//mrs.krishnan said...
Coimbatore vittu chennai ponale veyyil thanga mudiyaradhu illinga. Neenga solradha partha manasuku romba kashtama iruku.

Kudumbatha vittu velinadugalil velai parkaravanga nilai vedhanaiyanadhu.//

******

வாங்க மிஸஸ்.கிருஷணன்...

உண்மைதான்.... எங்கள் பாடு இங்கு திண்டாட்டம் தான்...