எலே சங்கி... எப்படி கீறடா சோமாரி!!...
நல்லா கீறேண்டா பேமானி மங்கி......
இன்னாடா இன்னிக்கு ஓப்பனிங்கே டெர்ரரா கீது.. இன்னாடா மேட்டரு சங்கி?
நெற்ய கீதுறா மங்கி...துபாய் மெட்ரோ ரயிலு மேட்டரு... ரஜினி, கமல் அவார்டு மேட்டரு.. வேட்டைக்காரன் ஆடியோ ரிலீஸு மேட்டரு...
மொதல்ல துபாய் மெட்ரோ ரயிலு மேட்டரு சொல்றேன் கேட்டுக்கோடா சங்கி... இது ஷ்டார்ட் பண்ண சொல்ல... ஒரு 15 பில்லியன் ஆவும்னு சொன்னாய்ங்களாம்...
ஒரு பில்லியன்னா நூறு கோடி...15 பில்லியன்னா, 1500 கோடி...அதாவது நம்மூரு துட்டுல 19,500 கோடி... இப்போ அத்த முடிச்சு பாக்க சொல்ல... செலவு ஜாஸ்தியா பூட்சுபா.. ஒரு 28 பில்லியனாயிடுச்சு... அதாவது 36,400 கோடியாயிடுச்சு... இவ்ளோ துட்டு செலவு ஆயிடுச்சே... இத்த திருப்பி எடுக்கறதுக்கு இங்க இருக்கறவிய்ங்க பாக்கெட்ல எல்லாம் எம்புட்டு பெரிய ஓட்டை போட போறாய்ங்களோன்னு பயந்துகினு கீறாய்ங்களாம்...
இன்னாபா... கேக்கவே டெர்ரரா கீதேடா மங்கி... அப்பாலிக்கா??
2007 / 2008 வருசத்துல வந்த படத்துல அல்லாத்தயும் போட்டு பார்த்து, நம்ம தமிழ்நாடு கவுர்ன்மெண்டு, 2007 வருசத்துக்கு தலைவர் ரஜினிக்கு "சிவாஜி" படத்துக்கும், 2008 வருசம் நம்ம கமல்தாசனுக்கு "தசாவதாரம்" படத்துக்கும் சிறந்த நடிகர் அவார்டு குடுக்க போறாய்ங்களாம்... ரெம்ப படா லெவல்ல ஏற்பாடு நடக்குதாம்டா...
அப்டியாடா அப்பாலிக்கா இளைய தளபதி விஜய் நடிக்கற வேட்டைக்காரன் படம் பத்தி இன்னாடா நூஸு...
அந்த படத்தோட பாட்டு ரிலீஸ் பண்ணாங்க இல்ல... அப்போ பேசுன சக்ஸேனா, விஜய் தலைவர் ரஜினிய அப்டியே ஃபாலோ பண்ணா, சூப்பர் ஸ்டார் மாதிரி பெரியாளா ஆவலாம்னு சொன்னாரு...
இத்த கேட்ட விஜய் குஜாலாயிட்டாரு... அவரோட அப்பா எஸ்.ஏ.சி.. கோச்சிகினாரு... இப்போவே விஜய் பெரிய சூப்பர் ஸ்டார் தானேன்னு அல்லார்கிட்டயும் சொல்லி அயுவுறாராம்...
அத்த வுட படா டமாசு இன்னா தெரியுமா... டைரக்டர் சங்கரு வந்து இருந்தார் இல்ல..அவரு சொன்னத கேட்டு நானே மெரிசல் ஆயிட்டேம்பா... முதல்வன் படத்துல மொத்ல்ல ரஜினி நடிக்க மாட்டேன்னு சொன்ன உடனே விஜய நடிக்க வைக்கறதா இருந்தேன்னு சொல்லி, அங்க இருந்த அல்லாருக்கும் பெரிய டெர்ரர் குடுத்துடாருபா...
யப்பா எனக்கு தலைசுத்தறது ஷ்டார்ட் ஆயிட்சுப்பா... ஒரு சோடாவும், ஒரு குவாட்டரும் வாங்கிகினு வரேன்... ஊத்துனாதான் என்னோட என்ஜின் ஷ்டார்ட் ஆவும்னு நெனக்கறேன்... வர்ட்டா.... கடை மூடிட போறான் சோமாரி...
11 comments:
அட அங்க இருந்துகிட்ட அந்த நாட்டு சமாச்சாரம் சொல்றது ஒக்கே இங்க சமாச்சாரமும் புட்டு புட்டு வைக்கிறீங்க... நல்ல எழுத்தாளன் மட்டுமல்ல பத்திரிக்கைக்கு பணிபுரியும் தகுதிகள் அனைத்தும் இருக்கு உங்களிடம்...வாழ்த்துக்கள் ஒரு நாளில் இரண்டு பதிவுகள்.ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
//முதல்வன் படத்துல மொத்ல்ல ரஜினி நடிக்க மாட்டேன்னு சொன்ன உடனே விஜய நடிக்க வைக்கறதா இருந்தேன்னு சொல்லி, அங்க இருந்த அல்லாருக்கும் பெரிய டெர்ரர் குடுத்துடாருபா...//
hahahaha
// தமிழரசி said...
அட அங்க இருந்துகிட்ட அந்த நாட்டு சமாச்சாரம் சொல்றது ஒக்கே இங்க சமாச்சாரமும் புட்டு புட்டு வைக்கிறீங்க... நல்ல எழுத்தாளன் மட்டுமல்ல பத்திரிக்கைக்கு பணிபுரியும் தகுதிகள் அனைத்தும் இருக்கு உங்களிடம்...வாழ்த்துக்கள் ஒரு நாளில் இரண்டு பதிவுகள்.ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்//
********
ரொம்ப மிகையா சொல்றீங்க தமிழரசி...
பாராட்டுக்கு நன்றி...
//Sachanaa said...
//முதல்வன் படத்துல மொத்ல்ல ரஜினி நடிக்க மாட்டேன்னு சொன்ன உடனே விஜய நடிக்க வைக்கறதா இருந்தேன்னு சொல்லி, அங்க இருந்த அல்லாருக்கும் பெரிய டெர்ரர் குடுத்துடாருபா...//
hahahaha//
Welcome Sachanaa..
Thanks for your visit and enjoyed the article... Do come regularly and share your comment..
அந்த படத்துல வடிவேலுக்கு இருக்குற ரத்த காயம் விஜய் - முதல்வன் நியூச கேட்டதனால இருக்குமோ....?
// ஈ ரா said...
அந்த படத்துல வடிவேலுக்கு இருக்குற ரத்த காயம் விஜய் - முதல்வன் நியூச கேட்டதனால இருக்குமோ....?//
வாங்க ஈ.ரா...
ஹா...ஹா....ஹா...
நீங்க சொன்ன மாதிரிதான் இருக்கும்.... இதைத்தான் வடிவேலு கூட அடிக்கடி சொல்றாரே... அதான் "ரத்தக்களரி"ன்னு பேரு...
சங்கி மங்கி சூப்பர்ங்கோ
நல்ல எழுதுறீங்கோ
தொடர்ந்து எழுந்துங்கோ வாழ்த்துக்கள்
//அன்புடன் மலிக்கா said...
சங்கி மங்கி சூப்பர்ங்கோ
நல்ல எழுதுறீங்கோ
தொடர்ந்து எழுந்துங்கோ வாழ்த்துக்கள்//
வாங்க அன்புடன் மலிக்கா..
உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி...
//யப்பா எனக்கு தலைசுத்தறது ஷ்டார்ட் ஆயிட்சுப்பா... ஒரு சோடாவும், ஒரு குவாட்டரும் வாங்கிகினு வரேன்... ஊத்துனாதான் என்னோட என்ஜின் ஷ்டார்ட் ஆவும்னு நெனக்கறேன்.//
:-)))
ஷங்கர் எந்த தைரியத்துல கேட்டாருன்னு தெரியல ..லவ் டுடே மின்சார கண்ணா படம் நடித்துட்டு இருக்கும் போது விஜய்க்கு என்ன வயது..இவர் எப்படி அந்த கதாப்பாத்திரத்திற்கு விஜயை நினைத்தார் என்று இன்றும் புரியலை..
ஆனா அன்னைக்கே விஜய் இதை சொன்ன போது எல்லோரும் கிண்டல் செய்தார்கள்..இன்று அவர் கூறியது உண்மை தான் என்றாகி விட்டது.
//கிரி said...
//யப்பா எனக்கு தலைசுத்தறது ஷ்டார்ட் ஆயிட்சுப்பா... ஒரு சோடாவும், ஒரு குவாட்டரும் வாங்கிகினு வரேன்... ஊத்துனாதான் என்னோட என்ஜின் ஷ்டார்ட் ஆவும்னு நெனக்கறேன்.//
:-)))
ஷங்கர் எந்த தைரியத்துல கேட்டாருன்னு தெரியல ..லவ் டுடே மின்சார கண்ணா படம் நடித்துட்டு இருக்கும் போது விஜய்க்கு என்ன வயது..இவர் எப்படி அந்த கதாப்பாத்திரத்திற்கு விஜயை நினைத்தார் என்று இன்றும் புரியலை..
ஆனா அன்னைக்கே விஜய் இதை சொன்ன போது எல்லோரும் கிண்டல் செய்தார்கள்..இன்று அவர் கூறியது உண்மை தான் என்றாகி விட்டது.//
**********
வாங்க கிரி...
எழுதியதை ரசித்தமைக்கு நன்றி...
ரஜினிக்கு பிறகு விஜய்க்கு மாஸ் அப்பீல் இருப்பதாக ஊடகங்களின் மூலம் அறிகிறேன்.. ஆனால், ரஜினியின் இடத்தை அவர் நெருங்க வேண்டுமானால், அவர் போக வேண்டிய தூரம் அதிகமுள்ளது...
இது ஏதோ, 10/20 படங்களிலும், 5/10 வருடங்களிலும் வந்து விடும் விஷயமல்ல... கே.பாலச்சந்தர் ஒரு விழாவில் சொன்னது போல், இன்னொரு ரஜினி வருவதற்கு குறைந்தது 25 வருடங்கள் ஆகும் என்றார்... அது உண்மைதான்...
ஆஹா ஜாம் வெளியில் வந்து விட்டதா. நாம் தா ஓவரா ஜெயில் கம்பி நட்வில் இருப்பத தெரியாமா ஓவரா ஆக்ட் கொடுத்துட்டோமோ , இந்த ஜோக் ஞாபகம் வருது,,.... ஹி ஹி
//Jaleela said...
ஆஹா ஜாம் வெளியில் வந்து விட்டதா. நாம் தா ஓவரா ஜெயில் கம்பி நட்வில் இருப்பத தெரியாமா ஓவரா ஆக்ட் கொடுத்துட்டோமோ , இந்த ஜோக் ஞாபகம் வருது,,.... ஹி ஹி//
**********
ஆஹா.... வாங்க ஜலீலா மேடம்...
அட...இதுவும் நல்லா தானே இருக்கு....
யப்பா... இது பெரிய டெர்ரர் கமெண்டால்ல இருக்கு....
Post a Comment