ச‌ங்கி ம‌ங்கி அதிர‌டி அல‌ப்ப‌றை - 12.09.09


எலே எடுபட்ட பயலே சங்கி... எப்படிடா இருக்க??

வாலே மங்கி... இன்னாடா மேட்டரு? நெம்ப நாளா ஆளயே காணுமேடா? உள்ளார போயி வந்தியா??

இன்னாடா, காலைலயே டெர்ரர் கேள்வி எல்லாம் கேக்கற?? நானு இங்கனதானேடா கீறேன்... சொல்லுடா... இன்னான்னா மேட்டரு வச்சு கீற..

சொல்றேன்டா, கேட்டுக்கோ.. சினேகா மேட்டரு, நம்ம கமல்தாசன் மேட்டரு... துபாய் மேட்டரு... ரெட்டிகாரு மேட்டரு...அல்லாத்தையும் சொல்றேன்...

நம்ம சிரிப்பழகி சினேகா, திருவண்ணாமலை கிரிவலம் போறேன்னு சொல்லிகினு, கால்ல செப்பல் போட்டு போயிட்சாம்... அது சாமி குத்தம்னு சொல்லி, நெறய பேரு இப்போ சினேகா மேல ஆக்சன் எடுக்கணும்னு கூவறாங்களாம்...

அப்டியா?? அதானே... கோயிலுக்கு போறப்போ, ஏண்டா செருப்பு போட்டுகினு போகுது...

அத்த கேட்டாங்கபா... அதுக்கு, சினேகா, கால்ல ஒரு ஆபரேசன் பண்ணனும். வலி இருக்குதுனு சொல்லிச்சுபா...
நம்ம ஆளுங்க விடுவாய்ங்களா... நேத்து கூட டி.வி.ல ஒன்னிய பாத்தேன்... "பத்துக்குள்ள நம்பர் ஒண்ணு சொல்லு"னு கமல்தாசன் கூட டூயட் பாட்டு பாடி, ஆடுனியேமா, அப்போ காலு வலிக்கலியான்னு கேட்டுடாய்ங்க... இவிய்ங்க ஏதும் பதில் சொல்லலியாம்...

பொறவு... நம்ம கமல்தாசன் அவரோட "உன்னை போல் ஒருவன்" படத்தோட கேசட் ரிலீஸ் பண்ணுனாராம்... டேய் மங்கி... படத்தோட பாட்டு கேசட்டுடா... படம் கேசட் இல்ல... இன்னாடா இம்புட்டு லொள்ளு பேசுத நீயி.....

கேசட் ரிலீஸ் பண்ணப்பறம் அவர பேச சொன்னாய்ங்களா??

ஆமா... அவரு பேசினாரு... ஆனா, வயக்கம் போல, யாருக்கும் பிரியல...

இன்னா மேட்டருன்னா.. அவரு சொன்னது இதுதாம்பா...
எல்டாம்ஸ் சாலைக்கு என் பெயர் வைப்பது சரி என்று சொன்னால், அது தற்பெருமை... தவறு என்று சொன்னால் அது அகம்பாவம் அப்படின்னு சொல்லிகினாருபா...
பொறவு பேச சொல்ல.. இன்னொரு மேட்டரும் சொன்னாரு...

"உன்னை போல் ஒருவன்" எ வெட்னஸ்டே படத்தோட ரீமேக் இல்ல.. தழுவல்தான்.. அது புதன்கிழமையா இல்லாம, வியாழக்கிழமை / வெள்ளிக்கிழமையா கூட இருக்கலாம்னு சொன்னாருபா...

அப்படியே பொண்ணு சுருது ஜூப்பரா மீஜிக் போட்டுகீது... படம் வந்த பொறவு, "மீஜிக்"ல சுருதிதான் ஒலக நாயகின்னு சொன்னாருபா...

அட்ரா..அட்ரா சக்க..மெய்யாலுமாடா... சர்தானேடா.. அவரு பொண்ண அவரு கூட பாராட்டலேன்னா, எப்டிடா?.. ஆமாம்...அவருக்கு இப்படி எல்லாம் பேசறதுக்கு யாருடா கத்து குடுத்தது... சரி... மேல வேற துபாய் மேட்டரு சொன்னியே... அத்த பத்தி சொல்லுடா...

துபாய்ல நேத்து ராத்தி ராஜா எல்லாம் ஒண்ணு கூடி...

ஆஹா... ஒண்ணு கூடிட்டாய்ங்கடா... ஒண்ணு கூடிட்டாய்ங்க... சரி...இன்னா பேசிக்கினாய்ங்க...

இன்னானா... இனிமேலிக்கு தெனத்துக்கும், இங்க இருக்கற, பூரா இஸ்கூல்லயும் தேசிய கொடி ஏத்தணும்... அப்படியே தேசிய கீதமும் பாடணும்னு சொல்டாய்ங்கப்பு...

நல்ல மேட்டருதானடா... இதுக்கு ஏன் இவ்ளோ ஃபீலிங்கு??

டேய்... நீ தெரிஞ்சுதான் கேக்கறியா... நம்ம ஆளுக்கு நம்ம ஊரு தேசிய கீதமே தெரியாதேடா... அப்புறம்தானடா அவிய்ங்க ஊரு தேசிய கீதம் பாடறது...

இர்றா.... இர்றா... வயக்கம் போல எனிக்கு தல சுத்துது...

ஆமா..இன்னாடா, திடீர்னு அயுவுற...

நம்ம ரெட்டிகாரு எலிகாப்டர் வுயுந்து செத்து பூட்டாரு இல்ல... அவரு செத்துபூட்டாரேனு கவலையில 500 பேருக்கு மேல செத்து பூட்டாய்ங்களாமடா.. அதான் ஒரே ஃபீலிங்கா இருக்கு...

அட பொறம்போக்கு முண்டங்களா.. அவருக்கு போற நேரம் வந்துச்சு... போயிட்டாரு.. அதுக்காக நீயும் போனாக்க, அவரு திருப்பி வந்துட போறாராடா... நீ போயிட்டா, ஒன் குடும்பத்த யாருடா காப்பாத்துவா...இப்போ, அவரு புள்ளையே, மொதலமைச்சர் ஆவறதுக்கு தானேடா ப்ளானிங் பண்ணிகினு கீறாரு.. நீ இன்னாடானா அவருக்காக சாவுற... நீங்க எல்லாம், இத்த எப்போதான் தெரிஞ்சுக்க போறீங்களோ..

சரி... நம்ம கேப்டன் பத்தி ஏதாவது மேட்டர் இருக்காடா??
கீதுபா... ஜோக்கிரில போயி பாரு... மொதல் பகுதி கீது...
அத்த படிச்சுட்டேன்.. இப்போ..ரெண்டாவது பகுதிக்காக நான் வெயிட் பண்றேன்பா...

டேய்... ரெண்டாவ‌து ப‌குதியும் போட்டாச்சு... அப்பால‌, சூப்ப‌ர் ஸ்டார‌ ப‌த்தி கூட‌ அங்க‌ கூவி இருக்கேண்டா... அத்த‌யும் பாரு...

சர்தாம்பா..அப்பாலிக்கா மிச்ச மேட்டரு எல்லாம் சொல்றா... நான் நேர அங்கனதான் போறேன்... ஆமாம்...டாஸ்மாக்தான்..ஒரு ஆஃப் அடிச்சாதான் சுத்தறது நிக்கும்... இன்னாது... இன்னா சுத்துதா... என் தலதாண்டா மட மங்கி பயலே...

12 comments:

ஈ ரா said...

//"பத்துக்குள்ள நம்பர் ஒண்ணு சொல்லு"னு கமல்தாசன் கூட டூயட் பாட்டு பாடி, ஆடுனியேமா, அப்போ காலு வலிக்கலியான்னு கேட்டுடாய்ங்க...//

//அட்ரா..அட்ரா சக்க..மெய்யாலுமாடா... சர்தானேடா.. அவரு பொண்ண அவரு கூட பாராட்டலேன்னா, எப்டிடா?..//

//டேய்... நீ தெரிஞ்சுதான் கேக்கறியா... நம்ம ஆளுக்கு நம்ம ஊரு தேசிய கீதமே தெரியாதேடா... அப்புறம்தானடா அவிய்ங்க ஊரு தேசிய கீதம் பாடறது...//

....

ஆபாசம் இல்லாத நகைச்சுவை, கமல் பாஷையில் "ஒரு நேர்மையான நையாண்டி " இதெல்லாம் உங்களுக்கு அனாயாசமாக வருகிறது.....

கலக்குறேள் போங்கோ....

//டேய்... ரெண்டாவ‌து ப‌குதியும் போட்டாச்சு... அப்பால‌, சூப்ப‌ர் ஸ்டார‌ ப‌த்தி கூட‌ அங்க‌ கூவி இருக்கேண்டா... அத்த‌யும் பாரு...
//

அங்கிட்டும் வரோம்...

R.Gopi said...

ஈ ரா said...

//ஆபாசம் இல்லாத நகைச்சுவை, கமல் பாஷையில் "ஒரு நேர்மையான நையாண்டி " இதெல்லாம் உங்களுக்கு அனாயாசமாக வருகிறது.....

கலக்குறேள் போங்கோ....//

*************

வாங்க ஈ.ரா..

ரொம்ப நாள் ஆச்சு உங்கள பார்த்து... நல்லா இருக்கீங்களா??

உங்கள் பாராட்டுக்கு நன்றி பாஸ்..

Eswari said...

//இன்னானா... இனிமேலிக்கு தெனத்துக்கும், இங்க இருக்கற, பூரா இஸ்கூல்லயும் தேசிய கொடி ஏத்தணும்... அப்படியே தேசிய கீதமும் பாடணும்னு சொல்டாய்ங்கப்பு......

நம்ம ஆளுக்கு நம்ம ஊரு தேசிய கீதமே தெரியாதேடா... அப்புறம்தானடா அவிய்ங்க ஊரு தேசிய கீதம் பாடறது...//

அது ஸ்கூல்க்கு போற பிள்ளைகளின் தலைவலி அப்பு. நீங்க ஏன் கவலை படுறிங்க?

சென்னை தமிழ்ல கலக்கிட்டிங்கப்பு...

R.Gopi said...

// Eswari said...

அது ஸ்கூல்க்கு போற பிள்ளைகளின் தலைவலி அப்பு. நீங்க ஏன் கவலை படுறிங்க?

சென்னை தமிழ்ல கலக்கிட்டிங்கப்பு...//

**************

ஏங்க ஈஸ்வரி... கவலைகூட படகூடாதுன்னு சொல்றீங்களே, இது நியாயமா, தர்மமா??

டேங்ஸுங்கோ....

பாசகி said...

//"பத்துக்குள்ள நம்பர் ஒண்ணு சொல்லு"னு கமல்தாசன் கூட டூயட் பாட்டு பாடி, ஆடுனியேமா, அப்போ காலு வலிக்கலியான்னு கேட்டுடாய்ங்க...//

நம்மாளுக இப்படி கேட்டாலும் கேப்பாய்ங்க :) இந்த பொண்ணாவது சூதானமா இருக்க வேணாமா

//ஆமா... அவரு பேசினாரு... ஆனா, வயக்கம் போல, யாருக்கும் பிரியல...//

//அது புதன்கிழமையா இல்லாம, வியாழக்கிழமை / வெள்ளிக்கிழமையா கூட இருக்கலாம்னு சொன்னாருபா...//

//அவரு பொண்ண அவரு கூட பாராட்டலேன்னா, எப்டிடா?.. //

இன்னுமா யாரும் வரல, தப்பாச்சே :)))

//ரெண்டாவ‌து ப‌குதியும் போட்டாச்சு... அப்பால‌, சூப்ப‌ர் ஸ்டார‌ ப‌த்தி கூட‌ அங்க‌ கூவி இருக்கேண்டா... அத்த‌யும் பாரு...//

உள்குத்து கேள்விபட்டுருக்கேன், இதென்னங்க உள்விளம்பரமா. இருந்தாலும் சோக்கா கீது :)

Anonymous said...

ஒரு சினிமா பத்திரிக்கை படிச்சது போல இருந்தது.. நகைச்சுவையா நல்லா எழுதியிருக்கீங்க..பத்திரிக்கையில் வேலைக்கு போக எல்லா தகுதியும் இருக்கு கோபி உனக்கு...

R.Gopi said...

//பாசகி said...
//"பத்துக்குள்ள நம்பர் ஒண்ணு சொல்லு"னு கமல்தாசன் கூட டூயட் பாட்டு பாடி, ஆடுனியேமா, அப்போ காலு வலிக்கலியான்னு கேட்டுடாய்ங்க...//

நம்மாளுக இப்படி கேட்டாலும் கேப்பாய்ங்க :) இந்த பொண்ணாவது சூதானமா இருக்க வேணாமா

//ஆமா... அவரு பேசினாரு... ஆனா, வயக்கம் போல, யாருக்கும் பிரியல...//

//அது புதன்கிழமையா இல்லாம, வியாழக்கிழமை / வெள்ளிக்கிழமையா கூட இருக்கலாம்னு சொன்னாருபா...//

//அவரு பொண்ண அவரு கூட பாராட்டலேன்னா, எப்டிடா?.. //

இன்னுமா யாரும் வரல, தப்பாச்சே :)))

//ரெண்டாவ‌து ப‌குதியும் போட்டாச்சு... அப்பால‌, சூப்ப‌ர் ஸ்டார‌ ப‌த்தி கூட‌ அங்க‌ கூவி இருக்கேண்டா... அத்த‌யும் பாரு...//

உள்குத்து கேள்விபட்டுருக்கேன், இதென்னங்க உள்விளம்பரமா. இருந்தாலும் சோக்கா கீது :)//

வ‌ருகைக்கும் பாராட்டுக்கும் ந‌ன்றி பாச‌கி... ந‌ம‌க்கு நாமே விள‌ம்ப‌ர‌ம்... சுய வேலைவாய்ப்பு போல‌ த‌ல‌... சோக்கா கீதுன்னு சொன்ன‌துக்கு ஒரு பெச‌ல் டேங்க்ஸ்..

R.Gopi said...

//தமிழரசி said...
ஒரு சினிமா பத்திரிக்கை படிச்சது போல இருந்தது.. நகைச்சுவையா நல்லா எழுதியிருக்கீங்க..பத்திரிக்கையில் வேலைக்கு போக எல்லா தகுதியும் இருக்கு கோபி உனக்கு...//

வ‌ண‌க்க‌ம் த‌மிழ‌ர‌சி... ந‌கைச்சுவையை ர‌சித்த‌த‌ற்கு ந‌ன்றி... நீங்க‌ என்ன‌ ப‌த்தி ரொம்ப‌ மிகையா சொல்றீங்க‌... இன்னும் நிறைய‌ வ‌ரும்... தொடர்ந்து ப‌டியுங்க‌ள்.. ஆத‌ர‌வு அளியுங்க‌ள்...

Jaleela Kamal said...

ஹா ஹா பதிவுடன் அந்த வடிவேலு கொண்டையுடன் சூப்பர் கோபி,
நல்ல கோர்வையாக போட்டு இருக்கீங்க.

R.Gopi said...

//Jaleela said...
ஹா ஹா பதிவுடன் அந்த வடிவேலு கொண்டையுடன் சூப்பர் கோபி,
நல்ல கோர்வையாக போட்டு இருக்கீங்க.//

வாங்க‌ ஜ‌லீலா... நோன்பு நேர‌மாச்சே... வ‌ருவீங்க‌ளோ, மாட்டிங்க‌ளோன்னு நென‌ச்சேன்...

வ‌ருகைக்கும், வாய் விட்டு சிரித்த‌மைக்கும் ந‌ன்றி ஜ‌லீலா மேட‌ம்...

கிரி said...

//உள்குத்து கேள்விபட்டுருக்கேன், இதென்னங்க உள்விளம்பரமா. இருந்தாலும் சோக்கா கீது :)//

:-))))

என்னங்க கோபி! அவியல் குவியல் மாதிரி இது ஒண்ணா! நல்லா இருக்கு :-)

R.Gopi said...

//கிரி said...
//உள்குத்து கேள்விபட்டுருக்கேன், இதென்னங்க உள்விளம்பரமா. இருந்தாலும் சோக்கா கீது :)//

:-))))

என்னங்க கோபி! அவியல் குவியல் மாதிரி இது ஒண்ணா! நல்லா இருக்கு :-)//

வாங்க‌ கிரி... ந‌ல்லா இருக்குன்னு சொன்ன‌துக்கு ந‌ன்றி...

ஆமாம் பாஸ்... அவிய‌ல், குவிய‌ல் மாதிரிதான்... சில‌ விஷ‌ய‌ங்க‌ளை ப‌கிர‌லாமே என்றுதான்...