தோப்பும்... புங்கை மரமும்... பின்னே ஞானும்

நான் தேட தொடங்கினேன்
ஊரோரமா ஆத்துப்பக்கம் பெரிய தோப்பு
பூத்து குலுங்கும் கனிகளுடன் சில பல மரங்கள்
தேடினது..... கெடைக்கல.......

ஊரிலிருந்து இரண்டாக பிரியும் பெரிய சாலை
அந்த பக்கம் போனால், பஞ்சாலை
இந்த பக்கம் வந்தால், பூஞ்சோலை

பஞ்சாலையின் சங்கு ஊதியதும்
பஞ்சடைத்த கண்களுடன், பஞ்சு நிறைந்த தலையுடன்
செருப்பின்றி பல ஜோடி கால்கள்.... அந்த வீதியில்......
கஷ்டம்தான்யா என்னிக்குமே உங்களுக்கு....அது விதி....

வேலையின்றி திரியும் வெட்டி கூட்டம்
எதிர்சாலையில் பல வண்ண கைலிகள் ....
வாயில் எரியும் கொள்ளிக்கட்டையுடன்.....
புகுந்தது ....பூஞ்சோலையினுள்.....கையில் சீட்டு கட்டு

என்றும் நீர் நிரம்பி சலசலவென்று ஓடும் ஆறு,
இப்போதோ...சலசலப்பின்றி அன்னநடை போட்டு செல்கிறது....

ஆற்றில், காணும் இடமெங்கும் பலதரப்பட்ட வண்டிகள்
வெளியே செல்லும் அனைத்து வண்டிகளும்
பிள்ளைத்தாய்ச்சி வயிறு போல ஆற்று மணலை நிரப்பி.......

இவ்வளவு கொள்ளை போனபின்பும் ஆறு தன்னகத்தே
சிறிதளவேனும் நீரை வைத்திருக்கிறதே......

அப்புறம், பஞ்சாலை சுற்றி, பஞ்சு துகள்கள் பறந்தபடி.....
இப்புறம், ஊர் மக்கள் தன் சந்தோஷம் துறந்தபடி.....

தோப்பினுள்ளே ஜோடி ஜோடியாக இருந்த பல மரங்கள்
பல துண்டுகளாய் வெட்டி லாரிகளில் ......... . .
தோப்பும் ஆங்காங்கே வெறிச்....வெறிச்...

எப்படி இருந்த ஊர், இப்படி ஆகிவிட்டதே......
தோப்பினுள்ளே அந்த ஒரு மரத்தை தேடினேன்......
அதில்தான் எவ்வளவு கிளைகள்....இலைகள்....

அன்று ஊர் முழுதும் கூடி, அங்கேதானே இருந்தது...
இன்று, ஒரு இரவு முழுதும் (கிழக்கு பக்கம்) தேடியும் கிடைக்கவில்லை......

சரி.... நாளை இரவு வந்து.....
மேற்கு பக்கம் முழுசா தேடி பார்ப்போம்
என்றபடி தோப்பை விட்டு வெளியேறினேன்......

நான் தேடிய அந்த மரம் .......
நான் தூக்கிட்டுக்கொண்ட அந்த
புங்கை மரம்....!!!!

24 comments:

நட்புடன் ஜமால் said...

கவிதை என்ற வகையில் அழகு தான்.

-------------

கடைசி வரிகளில் இணைந்து கொள்ள இயலவில்லை

-------------

கவிதை வரிகள் அருமை தாம்.

Vidhoosh said...

பின்னே ஞானும்!
இயற்கையைப் போற்றும் கேரளத்தில் கூடவா??

-வித்யா

M Arunachalam said...

Wow! Gopi!

I can see glimpses of the famous British novelist & former MP, Dr. Jeffrey Archer in your writing with the way you give the TWIST at the very, very end.

Keep up the good work.

Arun

R.Gopi said...

// நட்புடன் ஜமால் said...
கவிதை என்ற வகையில் அழகு தான்.//

நன்றி...

-------------

//கடைசி வரிகளில் இணைந்து கொள்ள இயலவில்லை.//

நெருப்பு என்று வாய் வெந்து விடவா போகிறது. அதோடு, அது ஒரு கேரக்டர்தானே.
----------

//கவிதை வரிகள் அருமை தாம்.//

பாராட்டுக்கு நன்றி ஜமால்...

//Vidhoosh said...
பின்னே ஞானும்!
இயற்கையைப் போற்றும் கேரளத்தில் கூடவா??

-வித்யா//

ஆம்.... அதிகமே.... வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் நன்றி வித்யா...

//M Arunachalam said...
Wow! Gopi!

I can see glimpses of the famous British novelist & former MP, Dr. Jeffrey Archer in your writing with the way you give the TWIST at the very, very end.

Keep up the good work.

Arun//

I dont know how to react to this comment..... I am overwhelmed... This is the biggest appreciation i received in the entire 8-9 months of my blog writing.....

Thanks a ton Arun ji....

கௌதமன் said...

Very Good Gopi!
Poetic and thought provoking.

R.Gopi said...

// kggouthaman said...
Very Good Gopi!
Poetic and thought provoking.//

கவுதமன் சார்... வாங்க...

ரொம்ப நாளைக்கு அப்புறம் வந்து இருக்கீங்க... நல்லா இருக்கீங்களா??

தங்கள் வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றி சார்....

கௌதமன் said...

அன்பு கோபி.
நான் நலமே!
நாடுவதும் அதே!
நம் நாடுதான் - இப்போ
நலமாயில்லை; நாடு
நலமும் வளமும் பெற
பிரார்த்திப்போம்!

R.Gopi said...

//kggouthaman said...
அன்பு கோபி.
நான் நலமே!
நாடுவதும் அதே!
நம் நாடுதான் - இப்போ
நலமாயில்லை; நாடு
நலமும் வளமும் பெற
பிரார்த்திப்போம்!//

ந‌ன்றி சார்... ந‌ம் நாட்டை ப‌ற்றிய‌ என் க‌வ‌லையை என் முந்தைய‌ சுத‌ந்திர‌ தின‌ ப‌திவில் எழுதியுள்ளேன்.. பார்த்து விட்டு சொல்லுங்க‌ள்...

ந‌ம் நாடு, எல்லா ந‌ல‌மும், வ‌ள‌மும் பெற அந்த‌ இறைவ‌னை ம‌ன‌மார‌ வேண்டுகிறேன்.. நானும் த‌ங்க‌ள் பிரார்த்த‌னையில் சேர்ந்து கொள்கிறேன்...

மீண்டுமொரு முறை உங்க‌ளுக்கு என் ம‌ன‌மார்ந்த‌ ந‌ன்றி... தங்க‌ள் ஆசியை வேண்டும்..

Anonymous said...

நல்ல தேறிட்டீங்க!!!!!!! கீப் இட் அப்

ரொம்ப நல்லா இருக்கு கோபி .

R.Gopi said...

// mayil said...
நல்ல தேறிட்டீங்க!!!!!!! கீப் இட் அப்

ரொம்ப நல்லா இருக்கு கோபி .//

வ‌ருகைக்கும், வாழ்த்துக்கும், என் எழுத்தை தேற்றிய‌ தோழ‌மைக்கும் ந‌ன்றி ம‌யில்...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கடைசி வரி இல்லையென்றாலும் நல்லா தானே இருந்திருக்கும்.. வெளியூரு போய் வேலை செய்றவங்க எப்பயாச்சும் எட்டிப்பாக்கும் போது :)

R.Gopi said...

//முத்துலெட்சுமி/muthuletchumi said...
கடைசி வரி இல்லையென்றாலும் நல்லா தானே இருந்திருக்கும்.. வெளியூரு போய் வேலை செய்றவங்க எப்பயாச்சும் எட்டிப்பாக்கும் போது :)//

வாங்க முத்துலெட்சுமி......

அப்படியும் இருந்திருக்கலாம்.... ஆனால், கடைசியில் ஒரு பஞ்ச் வைப்பதற்காகத்தான் அப்படி முடிக்கப்பட்டது....

நன்றி மேடம்...

Unknown said...

Gopi what are you doing in Dubai wasting time working for some one when you can write such articles in Tamil which is much better than what we read in premier mags like Anandha Vikatan or Kumudam. So take your writing seriously, you have it in you to shine as a big writer and the right source for that is through a premier publication. Keep rocking.
Regards,
Dharma

R.Gopi said...

//rdharma said...
Gopi what are you doing in Dubai wasting time working for some one when you can write such articles in Tamil which is much better than what we read in premier mags like Anandha Vikatan or Kumudam. So take your writing seriously, you have it in you to shine as a big writer and the right source for that is through a premier publication. Keep rocking.
Regards,
Dharma//

நண்பர் தர்மா அவர்களுக்கு,

தங்களின் கமெண்ட் என்னை மிகவும் நெகிழ வைத்தது.... நண்பர் அருணுக்கு பிறகு வந்த மற்றொரு உற்சாகமூட்டும் கமெண்ட் இது... அதற்கு தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி....

நான் சும்மா விளையாட்டுக்கு எழுதி கொண்டிருக்கிறேன் தர்மா.... நீங்க ரொம்ப பெரிய பெரிய வார்த்தை எல்லாம் சொல்றீங்க....

நீங்கள் சொன்னதை நான் முழு நேரமாக இல்லாமல், பகுதி நேரமாக முயற்சி செய்கிறேன்...

Raju said...

அடப்பாவி,
பேயா நீயி.

R.Gopi said...

//டக்ளஸ்... said...
அடப்பாவி,
பேயா நீயி.//

நான் அவனில்லை..... நான் அது இல்லை....

இப்போ ஓகேவா தல....

சென்ஷி said...

:)

நல்ல வித்தியாசமான முடிவு!

R.Gopi said...

//சென்ஷி said...
:)

நல்ல வித்தியாசமான முடிவு!//


வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி சென்ஷி.... என் மற்றொரு வலைத்தளமான www.jokkiri.blogspot.com பார்த்து தங்கள் கருத்து சொல்லுங்கள்...

Eswari said...

//அடப்பாவி,
பேயா நீயி.//
நா நினைச்சேன் டக்ளஸ் சொல்லிட்டாரு

R.Gopi said...

//Eswari said...
//அடப்பாவி,
பேயா நீயி.//
நா நினைச்சேன் டக்ளஸ் சொல்லிட்டாரு.//

ஈஸ்வரி..... நான் அவனில்லை... அவன் நானில்லை...

Kavinaya said...

இயற்கையை தொலைத்துக் கொண்டிருப்பதைக் குறிக்கும் வரிகள் அழகாய் விழுந்து மனம் கனக்கச் செய்கின்றன. முடிவு சற்றும் எதிர்பாராதுதான், நீங்கள் குறிப்பிட்டிருந்ததைப் போல்!

நல்லா எழுதறீங்க கோபி. இன்னும் நிறைய எழுத வாழ்த்துகள்! :)

R.Gopi said...

//இயற்கையை தொலைத்துக் கொண்டிருப்பதைக் குறிக்கும் வரிகள் அழகாய் விழுந்து மனம் கனக்கச் செய்கின்றன. முடிவு சற்றும் எதிர்பாராதுதான், நீங்கள் குறிப்பிட்டிருந்ததைப் போல்!

நல்லா எழுதறீங்க கோபி. இன்னும் நிறைய எழுத வாழ்த்துகள்! :)//

**************.

வருகை தந்து, ரசித்து படித்து, கருத்து சொல்லி வாழ்த்தியதற்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் கவிநயா.

உங்க அளவுக்கு இல்லையென்றாலும், ஏதோ எழுதுகிறேன்...

Kavinaya said...

//உங்க அளவுக்கு இல்லையென்றாலும், ஏதோ எழுதுகிறேன்...//

கோபி, அப்படியெல்லாம் சொல்லாதீங்க! சித்திரமும் கைப்பழக்கம். எழுத எழுதத்தான் எழுத்து மெருகேறும். ஆர்வம் இருந்தா போதும். அதனால நிறைய வாசிங்க, நிறைய எழுதுங்க!

R.Gopi said...

//கவிநயா said...
//உங்க அளவுக்கு இல்லையென்றாலும், ஏதோ எழுதுகிறேன்...//

கோபி, அப்படியெல்லாம் சொல்லாதீங்க! சித்திரமும் கைப்பழக்கம். எழுத எழுதத்தான் எழுத்து மெருகேறும். ஆர்வம் இருந்தா போதும். அதனால நிறைய வாசிங்க, நிறைய எழுதுங்க!//

வ‌ருகை தந்து, ப‌டித்து வாழ்த்திய‌த‌ற்கு மிக்க‌ ந‌ன்றி க‌விந‌யா.... தொடர்ந்து வாருங்க‌ள்...