துபாய் கோழி!!!.... கொக்கரக்கோ என கூவி பொழுது இனிமையாக விடிந்தது. இன்று ஒரு “மைனா”வும் சேர்ந்து கூவியபோது அந்த கூவலில் ஒரு இனிமை சேர்ந்திருந்தது....
வரவேற்பறையை தாண்டியதும் இருந்த அறையில், கிறிஸ்துமஸ் அலங்காரங்கள் அழகுக்கு அணி சேர்க்க, அயல் நாட்டு அரைக்கால் டிரவுசர்கள் அங்குமிங்கும் நிறைந்திருக்க அந்த லாபி பகுதி இனிமையாக இருந்தது. இதோ நண்பர் வந்து விட்டார். கை குலுக்கி, சம்பிரதாயங்கள் முடிய, ஹப்பா… இந்த பளபளப்பும், ஆடம்பரமும் கொஞ்சம் மூச்சு முட்டுவது போல் இருக்கிறது, வாருங்களேன் வெளிக்காற்றை சற்றே சுதந்திரமாக சுவாசிப்போம் என அன்புடன் அழைத்தார்.....
யதார்த்தமும் எளிமையும் ஒருசேர சுவாசிக்கும் தமிழ் திரையுலகின் வெற்றி இயக்குனர். திரு.பிரபு சாலமன் அவர்கள். அவரது சமீபத்திய மைனா திரைக் காவியம் பாமரனையும் படைப்பாளிகளையும் ஒரு சேர இணைத்து பாராட்ட சொல்லி விட்டதே. பாக்ஸ் ஆபிசிலும் இமாலய வெற்றி பெற்றுள்ளது.
நேற்றைய துபாய் சர்வதேச திரைப்பட விழாவில் (DIFF) ”மைனா” படம் இரவு திரையிடும் மகத்தான நிகழ்வு வெற்றிகரமாக அரங்கேறியது. சர்வதேச அளவில் படைப்பாளிகள் பாராட்டி, கேள்வி நேரத்தின் போது இன்னும் பாராட்டு மழையில் திரு.பிரபு சாலமன் அவர்களை நனைத்தனர். என்ன செய்வது வானம் பொத்து கொண்டு ஊத்தும் சென்னையில் இருந்து வந்தவருக்கு துபாய் மண்ணில் பாராட்டு மழை தானே மணி மகுடம். நேற்றைய விழாவின் களைப்போ அலுப்போ இல்லாது, சகஜமாக ஊர் சுற்றி பார்க்க நம்முடன் கிளம்பி விட்டார்....
பேச்சினூடே, தமிழ்ப்படங்கள் எதார்த்த படைப்புகளை படைக்க ஆயத்தமானது கண்டு தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்... “மைனா” போன்ற யதார்த்தமான சிறிய பட்ஜெட் படங்களை நம் மக்கள் இரு கரம் நீட்டி வரவேற்று, அமோக ஆதரவளிப்பது இது போன்று பல படைப்புகள் வெளிவர வழிவகுக்கும் என்று தெரிவித்தார்.... பெரிய பட்ஜெட் படங்களின் ஜிகினா தனங்கள் எடுபட்டாலும், நெகிழ்வான நிகழ்வுகளை உள்ளடக்கிய சிறிய பட்ஜெட்டில் தயாராகும் யதார்த்த படங்களே காலம் கடந்து நிற்கும் என்றும் கூறினார்...
சாலையில் வண்டி வழுக்கி கொண்டு ஓட, எங்கள் அரட்டை வண்டி பல தளங்களை தொட்டு தொட்டு ஓடுகிறது. துபாயின் அசுர வளர்ச்சி, அரசியல் எல்லாம் எங்கள் சிலபஸில் சிக்கிக் கொண்ட சில சில்வண்டுகள். உலகின் மிக உயரமான (தற்போதைக்கு) ”புர்ஜ் கலீஃபா” கட்டிடம் பார்க்க செல்கிறோம், அங்கு வாழ்வின் ஒரு ஆதாரமான தத்துவம் எங்களுக்கு புரிகிறது.”புர்ஜ் கலீஃபா”வின் கீழே நின்று எவ்வளவு உயரம் என பார்ப்பதற்கு கழுத்தை பின்னோக்கி தள்ளி, கஷ்டப்பட்டுத்தான் பார்க்க வேண்டும். அதிலும் முழு கட்டிடத்தையும் கேமராவில் அடக்க… உருண்டு புரண்டுதான் எழ வேண்டும். இதில் வாழ்வியல் தத்துவம் என்னவென்றால் ’வாழ்வில் நாம் உயரங்களை காண இது போல் நிறைய உருண்டு புரண்டு தான் எழ வேண்டும்’. ஃபோட்டா பிடிக்க போன இடத்தில் பிடித்த தத்துவம் எப்பூடி…?.
பேச்சு அவரது ”மைனா” திரைப்படத்தின் பக்கம் திரும்ப, ஒரு திரைப்படத்தின் வெற்றி இரண்டு சக்கரங்களில் இருக்கிறது. ஒன்று கண்டெண்ட் இன்னொன்று ஃபீல் என சுருக்கமாய் நச்சென்று தெளிவாக சொல்கிறார். தான் இன்று நடந்து வரும் இந்த யதார்த்த சினிமாவின் பாதை அன்னக்கிளி, பதினாறு வயதினிலே எனும் காலம் தொட்டு இன்னும் இன்றும் தொடர்கிறது காதல், பருத்தி வீரன் எனும் கலைப்படைப்புகளாய் என்கிறார். மைனாவை பொறுத்தவரை தியேட்டரில் திருவிழா எனும் இலக்கை நோக்கித்தான் பயணித்தேன், அதை அடைந்தேன் என நினைவுகளுடன் நெகிழ்கிறார்.
”மைனா” திரைப்படத்தின் வெற்றி அனைவரின் எதிர்பார்ப்புக்களையும் மேலும் தூண்டி விட்டிருக்கிறது, எனவே அடுத்த பட சிந்தனைகள் கொஞ்சம் படபடப்பாய் இருப்பதை தவிர்க்க முடியவில்லை என்கிறார். இன்னும் எனது அடுத்த படத்தின் உணர்வுகளில் பயணித்து கொண்டிருக்கிறேன், மிக விரைவில் தீர்மானம் செய்து அறிவிக்க இருக்கிறேன் என பொறுப்புணர்ச்சியுடன் பேசுகிறார்.
பளபளக்கும் துபாய் சாலைகள், சட்ட திட்டம், வாழ்க்கை முறை என ஆழமான கேள்விகள் கேட்டு, நம் தாயக மக்களை நினைவு கூர்ந்து இப்படி சொன்னார். நாளைய தேவை…. என பணத்தேவைக்காக இன்றைய வாழ்வை தொலைக்கிறார்களே.
யேசு கிறிஸ்து சொல்வாரே ‘வானத்து பறவைகளை பாருங்கள், அவை விதைப்பதும் இல்லை, அறுப்பதும் இல்லை. ஆயினும் வானகத்து தந்தை அவற்றை போஷிப்பதில்லையா. எதை உண்போம் எதை குடிப்போம் என கவலை கொள்ளாதீர் என சொல்வதே மிக உயர்ந்த லட்சியம். உலகே அதை பின்பற்றினால் நல்லதே என கருத்து சொல்லும் போது அவரது தத்துவ சிந்தனையும், சமூக அக்கறையும் மின்னி பளிச்சிடுகிறது.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் எனும் மாமேதையையும் தமிழ் சினிமாவுக்கு அவர் ஆற்றிய பெரும் பங்கையும் அன்புடன் நினைவு கூர்ந்து, நாம் அவருக்கு தர வேண்டிய மரியாதை தராமல், வெறுமே பெசண்ட் நகரில் உள்ள மயானத்தில், மின்சார எரியூட்டியதை நினைவு கூர்ந்து வருத்தப் பட்டார். குறைந்த பட்சம் அவருக்கு ஒரு நினைவிடமாவது நிறுவப்பட வேண்டும் என்ற அவரது கருத்தில் மறுக்க முடியாத உண்மை பளிச்சிட்டது.
மிகப்பெரிய 5 நட்சத்திர ஹோட்டலில் இரண்டு, மூன்று நாட்கள் உணவருந்தி இருந்தாலும், நம்மூர் கைப்பக்குவத்தில் உணவு கிடைக்குமா என்று கேட்ட போது, அவரை நம்மூர் அஞ்சப்பர் உணவகத்திற்கு இட்டு சென்றோம்...மணக்க மணக்க தமிழக செட்டி நாடு உணவு பரிமாறப்பட, ஒரு சிறிய பிரார்த்தனை செய்து விட்டு ஒரு கை பார்த்தோம்… சாப்பாட்டில் ஒரு கை பார்ப்பது தானே நல்லது, இரண்டு கையும் பார்த்தால் தண்ணீர் குடிக்க எச்சில் கையில் அல்லவா டம்ளர் ஏந்த வேண்டியிருக்கும்.
ஒரு சமூக அக்கறை உள்ள, நேர்மையான எளிமையான படைப்பாளியை சந்தித்து, உரையாடி, உறவாடியதில் மகிழ்ந்து மென்மேலும் அவர் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்து விடைபெற்றோம்.
அந்த ஹோட்டலின் வாசலுக்கருகில் நாளைய விடியலுக்கு கூவத் தயாராக ஒரு கோழி காத்திருந்தது
30 comments:
கலக்கல் சந்திப்பு - கலகல பதிவு !
Miga Arumaiyana santhipu...valthukal...
நிறைவான பதிவு
// ஒரு திரைப்படத்தின்
வெற்றி இரண்டு சக்கரங்களில்
இருக்கிறது . ஒன்று கண்டெண்ட்
இன்னொன்று ஃபீல் என
சுருக்கமாய் நச்சென்று தெளிவாக
சொல்கிறார்//
-
வெற்றி ஃபார்முலாவை சுருக்கமாக, தெளிவாக சொல்லி விட்டார்.
parattugal nanbare
Excellant narration Gopi on the meeting.I would be really happy if you had shared your writing skills with the Director and that he may cll you and Lawrence as part of his next film.Keep it up
Regards,
Dharma
தலைவர் மைனாவுக்கு கொடுத்த கடிதத்தைப் பற்றி ஏதாவது பேசினீர்களா ஜி ?
நல்ல பதிவு! பிரபு சாலமன் 'லாடம்' படத்திலிருந்து நான் ரசிக்கும் இயக்குனர்.
//சாப்பாட்டில் ஒரு கை பார்ப்பது தானே நல்லது, இரண்டு கையும் பார்த்தால் தண்ணீர் குடிக்க எச்சில் கையில் அல்லவா டம்ளர் ஏந்த வேண்டியிருக்கும்.
//
தத்துவம்?????????!!!!!!!!!!
//Chitra said...
கலக்கல் சந்திப்பு - கலகல பதிவு !//
*******
வாங்க சித்ரா....
முதலில் வருகை தந்து வடை பெற்றமைக்கு வாழ்த்துக்கள்...
பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி....
//Priya's Feast said...
Miga Arumaiyana santhipu...valthukal...//
********
Welcome Priya...
Thanks for your MAIDEN visit and encouraging comment... Do visit regularly and encourage us.....
//Mrs. Krishnan said...
நிறைவான பதிவு
// ஒரு திரைப்படத்தின்
வெற்றி இரண்டு சக்கரங்களில்
இருக்கிறது . ஒன்று கண்டெண்ட்
இன்னொன்று ஃபீல் என
சுருக்கமாய் நச்சென்று தெளிவாக
சொல்கிறார்//
-
வெற்றி ஃபார்முலாவை சுருக்கமாக, தெளிவாக சொல்லி விட்டார்.//
********
வாங்க திருமதி கிருஷ்ணன்...
வருகைக்கும், கமெண்டிற்கும் மிக்க நன்றி...
//polurdhayanithi said...
parattugal nanbare//
******
வெல்கம் தயாநிதி சார்...
வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி சார்...
//RD said...
Excellant narration Gopi on the meeting.I would be really happy if you had shared your writing skills with the Director and that he may cll you and Lawrence as part of his next film.Keep it up
Regards,
Dharma//
********
Welcome Dharma ji...
Thanks for your encouraging comments... Our writing will not just stop with encouraging our friends alone...
We too have certain plans and will reveal the same soon to all of you...
//ஈ ரா said...
தலைவர் மைனாவுக்கு கொடுத்த கடிதத்தைப் பற்றி ஏதாவது பேசினீர்களா ஜி ?//
********
வாங்க ஈ.ரா...
தலைவர் மைனா படத்திற்கு கொடுத்த கடிதம் பற்றியும், மற்றும் ஏராளமான விஷயங்கள் குறித்தும் வாகனத்தில் செல்லும் போது விவாதித்தோம்....
//கே. பி. ஜனா... said...
நல்ல பதிவு! பிரபு சாலமன் 'லாடம்' படத்திலிருந்து நான் ரசிக்கும் இயக்குனர்.//
*******
வாங்க ஜனா சார்....
வருகைக்கும், கருத்து பகிர்ந்தமைக்கும் மிக்க நன்றி...
நீங்க சார்மி ரசிகரா?
//பெயர் சொல்ல விருப்பமில்லை said...
//சாப்பாட்டில் ஒரு கை பார்ப்பது தானே நல்லது, இரண்டு கையும் பார்த்தால் தண்ணீர் குடிக்க எச்சில் கையில் அல்லவா டம்ளர் ஏந்த வேண்டியிருக்கும்.//
தத்துவம்?????????!!!!!!!!!!//
******
வாங்க தல!!
ஓஹோ... இது தான் தத்துவம் என்பதோ?
இந்த பதிவிற்கு “இண்ட்லி”யில் வாக்களித்து பதிவை பிரபலமாக்கிய என் தோழமைகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி....
karthikvlk
javaganesh
chitrax
venkatnagaraj
kobikashok
sriramanandaguruji
RAHIMGAZALI
aminamohammed
mrskrishnan
RDX
ganga
kbjana
kiruban
mounakavi
jollyjegan
Vino23
tamilz
urvivek
nanban2k9
arasu08
suthir1974
vilambi
mohamedibrahim19
பதிவில் குறிப்பிட மறந்த இன்னொரு முக்கியமான விஷயம் இதோ :
“மைனா” திரைப்படத்தின் இயக்குநர் திரு.பிரபு சாலமன் அவர்கள் துபாய் இண்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவலில் பங்கேற்க வந்திருப்பதாகவும், விரும்பினால் சென்று சந்திக்கலாம் என்று விபரம் அளித்த சென்னை நண்பர் திரு.டி.ஆர்.பிரபு அவர்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றி..........
சித்ரா சொன்னது போல் கலக்கலான கலகலபதிவு கோபி..
கொபி அவர்களே. அருமையான கலக்கலான சந்த்திப்பு/
பதிவும் விரிவான பதிவு.
’வாழ்வில் நாம் உயரங்களை காண இது போல் நிறைய உருண்டு புரண்டு தான் எழ வேண்டும்’.
தீடீர் வாழ்க்கை தத்துவம் அருமை.
இயக்குனர் ரொம்ப சாதாரணமாக இருக்கிறார்.
//தமிழரசி said...
சித்ரா சொன்னது போல் கலக்கலான கலகலபதிவு கோபி..//
********
தமிழுக்கு அரசியே...
என் வலைகள் பக்கமும் அவ்வப்போது விஜயம் செய்யுங்களேன்..
வருகை தந்து, கருத்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி...
//Jaleela Kamal said...
கொபி அவர்களே. அருமையான கலக்கலான சந்த்திப்பு
பதிவும் விரிவான பதிவு.//
// Jaleela Kamal said...
’வாழ்வில் நாம் உயரங்களை காண இது போல் நிறைய உருண்டு புரண்டு தான் எழ வேண்டும்’.
தீடீர் வாழ்க்கை தத்துவம் அருமை.
இயக்குனர் ரொம்ப சாதாரணமாக இருக்கிறார்.//
-*********
வாங்க ஜலீலா...
உண்மை தான்... பெரிய வெற்றியில் கிடைத்த புகழ் போதையை தலையில் ஏற்றிக்கொள்ளாமல், அடுத்து எடுக்க இருக்கும் மற்றொரு யதார்த்தமான படத்தை பற்றிய சிந்தனையே அவரை ஆக்ரமித்து இருக்கிறது...
பழகுவதற்கும் மிக எளிமையானவராகவும், இனிமையானவராகவும் இருந்தது பாராட்டத்தக்கது...
நம் அனைவரின் சார்பாகவும் அவரை வாழ்த்தியது மறக்க முடியாத ஒரு நிகழ்வாகும்...
பத்திரிகை நிருபர் மாதிரி பேட்டி எடுத்து இருக்கீங்க! :-) கலக்குங்க ..
//அந்த ஹோட்டலின் வாசலுக்கருகில் நாளைய விடியலுக்கு கூவத் தயாராக ஒரு கோழி காத்திருந்தது//
ரைட்டு :-)
பிரபு சாலமன் சொல்வதுப் போல் யதார்த்த படங்களே காலம் கடந்து நிற்கும்,உண்மை.
//வாழ்வில் நாம் உயரங்களை காண இது போல் நிறைய உருண்டு புரண்டு தான் எழவேண்டும்.//
நல்ல தத்துவ முத்து.
வாழ்வில் நாம உயரங்களை காண உறுண்டு புரண்டால் பாராவாயில்லை.
உருட்டு புரட்டு தான் செய்யக் கூடாது.
//கிரி said...
பத்திரிகை நிருபர் மாதிரி பேட்டி எடுத்து இருக்கீங்க! :-) கலக்குங்க ..
//அந்த ஹோட்டலின் வாசலுக்கருகில் நாளைய விடியலுக்கு கூவத் தயாராக ஒரு கோழி காத்திருந்தது//
ரைட்டு :-)//
*********
வாங்க கிரி...
அது கேள்வி - பதில் போல் இல்லாமல் ஒரு கலந்துரையாடல் போலவே இருந்தது...
பிரபு சாலமன் இன்னும் பெரிய உயரத்தை எட்டுவார் என்பது நிச்சயம்.
//கோமதி அரசு said...
பிரபு சாலமன் சொல்வதுப் போல் யதார்த்த படங்களே காலம் கடந்து நிற்கும்,உண்மை.
//வாழ்வில் நாம் உயரங்களை காண இது போல் நிறைய உருண்டு புரண்டு தான் எழவேண்டும்.//
நல்ல தத்துவ முத்து.
வாழ்வில் நாம உயரங்களை காண உறுண்டு புரண்டால் பாராவாயில்லை.
உருட்டு புரட்டு தான் செய்யக் கூடாது.//
*********
வாங்க கோமதி மேடம்...
வாழ்வில் உயரங்களை காண உருட்டு, புரட்டு தான் செய்யக்கூடாதுன்னு கரெக்டா சொன்னீங்க...
வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி மேடம்.
’வாழ்வில் நாம் உயரங்களை காண இது போல் நிறைய உருண்டு புரண்டு தான் எழ வேண்டும்’..
ரெம்பா நல்லா இருக்கு கோபி..
’வாழ்வில் நாம் உயரங்களை காண இது போல் நிறைய உருண்டு புரண்டு தான் எழ வேண்டும்’.
சூப்பர் வரிகள்.. ஆனால் உண்மை வரிகள் கோபி..
’வாழ்வில் நாம் உயரங்களை காண இது போல் நிறைய உருண்டு புரண்டு தான் எழ வேண்டும்’.
சூப்பர் வரிகள்.. ஆனால் உண்மை வரிகள் கோபி..
ஹாய் ஜோக்கிரி ஐ யம் முத்துராசா
நல்லா இருக்குது உங்க மைனா" திரைப்பட இயக்குனருடன் ஒரு சந்திப்பு"..
Post a Comment