டாக்டர் விஜயகாந்த் நடிப்பில் விருத்தகிரி - அசத்தல் பாடல்கள்


இதுவரை நான் செய்யவே செய்யாத ஒன்றை (ஆடியோ விமர்சனம், திரைப்பட விமர்சனம்) செய்ய வைத்த நம் “கேப்டன்” டாக்டர் விஜயகாந்த் அவர்களுக்கு முதலில் நன்றி சொல்லி இந்த பதிவை
அவருக்கு சமர்ப்பிக்கிறேன்... (டெர்ரர் ஸ்டார்ர்ர்ர்ர்ர்ர்ர்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்........)

விஜயகாந்த் இயக்கி கதாநாயகனாக நடித்துள்ள படம் விருதகிரி. இப்படத்தை எல்.கே.சுதீஷ் தயாரித்துள்ளார். இப்படத்தின் பாடல் சி.டி. வெளியிட்டு விழா நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் திங்கள்கிழமை நடந்தது.

விழாவில் தே.மு.தி.க. அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், டைரக்டர்கள் ஆர்.கே.செல்வமணி, லிங்குசாமி, ஏ.வெங்கடேஷ், மாதேஷ், எழில், தயாரிப்பாளர்கள் முரளிதரன், சாமிநாதன், டி.சிவா, சீனிவாசன், எல்.கே. சுதீஷ் மற்றும் அருள்பதி, கலைப்புலி சேகரன், அனகை டி.முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விஜயகாந்த் பாடல் சி.டி.யை வெளியிட நடிகர் சத்யராஜ் பெற்றுக் கொண்டார். விழாவில் பேசிய விஜயகாந்த்,

எனது முந்தைய படங்களான தர்மபுரி, சுதேசி, சபரி போன்ற படங்களை வெளியிட முடியாமல் நிறைய பிரச்சினைகளை சந்தித்தேன். அதே பிரச்சினைகள் விருதகிரி படத்துக்கும் ஏற்பட்டு உள்ளது.


இந்த படத்துக்கு தியேட்டர்கள் கிடைக்கவில்லை. ரிலீஸ் செய்ய விடாமல் தடுக்கும் முயற்சிகளும் நடக்கின்றன. இந்த படத்தை தடுத்தால் விஜயகாந்த் யார் என்பதை காட்டுவேன். எனக்கு தொண்டர்கள் இருக்கிறார்கள். படத்தை எப்படி ரிலீஸ் செய்கிறேன் என்பதை பொறுத்திருந்து பாருங்கள். தியேட்டர் கிடைக்கவில்லை என்றால், நடுரோட்டில் வேட்டி கட்டி அதில் படத்தை திரையிடுவேன் என்றும் விஜயகாந்த் கர்ஜித்தார்.....

இந்த விழாவுக்கு என்னை வாழ்த்துவதற்காக திரையுலகைச் சேர்ந்தவர் பலர் வந்து

இருக்கிறார்கள். கவிஞர் வாலியின் பாடல்களை வெகுவாக ரசித்தவன் நான். அவருக்கு எனது படத்தின் முதல் பாடலை எழுத கொடுத்தேன். விருதகிரி படம் 25 சதவீதம் சென்னையிலும், 75 சதவீதம் வெளிநாடுகளிலும் படமாக்கப்பட்டு உள்ளது. அடுத்தவர்களை நம்பாமல், நானே டைரக்சன் செய்துள்ளேன்.... விருத்தகிரிபடம் ஆஸ்கருக்கு அனுப்பப்படுமா என்ற கேள்வியை தன்னை கேட்க வேண்டாம் என்று அடக்கத்துடன் பேசினார்....


நான் அ.தி.மு.க.வையும், காங்கிரஸ் கட்சியையும் விமர்சிப்பதில்லை என பேசுகிறார்கள். பத்திரிகை

களிலும் எழுதுகிறார்கள். அப்படியென்றால் இந்த கட்சிகளுடன் நான் கூட்டணி அமைப்பேன் என்றும் கூறுகிறார்கள்.

ஒரு விஷயத்தை தெளிவாக கூறிக்கொள்கிறேன்.

நான் யாரையும் நம்பி அரசியலுக்கு வரவில்லை. மக்களையும், தெய்வத்தையும் நம்பித்தான் அரசியலுக்கு வந்தேன். எனது மடியில் கனமில்லை. அதனால் எனக்கு பயமும் இல்லை.

காங்கிரஸ் கட்சியிடம் நான் ரூ. 100 கோடி வாங்கி விட்டதாக பேசுகிறார்கள். அ.தி.மு.க.விடமும் ரூ. 100 கோடி வாங்கி விட்டேன் என்கிறார்கள். அப்படி பணம் வாங்கி இருந்தால் விருதகிரி படத்தை ரிலீஸ் செய்ய இவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கமாட்டேன். கேப்டன் டி.வி.யையும் எங்கேயோ கொண்டு போய் இருப்பேன்.

பெரியார் பெயரில் சமத்துவபுரங்கள் ஆரம்பிக்கப்பட்டன. அவற்றின் நிலைமை இப்போது என்ன என்பது அனைவருக்கும் தெரியும். 59 லட்சம் ஏழைகளுக்கு இலவச வீடுக

ள் கட்டித்தரப்படுவதாக சொல்லப்படுகிறது. அப்படியென்றால் 1967ல் ஆட்சிக்கு வந்தவர்களால் இன்னும் வறுமையை ஒழிக்க முடியவில்லை என்றுதானே அர்த்தம்.

பிச்சைக்காரர் ஒழிப்பு திட்டம், கண்ணொளி திட்டம் போன்றவற்றால் பயன் அடைந்தவர்கள் யார் என்பதை காட்டுங்கள். நான் வறுமையை ஒழிப்பேன் என்று பேசி வருகிறேன்.

அப்படியென்றால் தனி மனித வருமானத்தை பெருக்குவேன் என்றுதான் அர்த்தம். இவ்வாறு விஜயகாந்த் பேசினார்

இந்த விழாவில் சொல்லப்பட்ட இன்னொரு விஷயம்.....

இந்திய அபோஸ்தல கிறிஸ்தவ பேராயர்களின் திருச்சபை டிசம்பர் 3ம் தேதி விஜயகாந்துக்கு சென்னையில் நடக்கும் விழாவில் டாக்டர் பட்டம் வழங்குகிறது.

அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் உள்ள பல்கலைக்கழகம் சார்பில் எஸ்.எம். ஜெயகுமார் தலைமையில் ஜான் வில்லியம்ஸ் இந்த விருதினை வழங்குகிறார்.

இந்த அறிவிப்பு நேற்று நடந்த விஜயகாந்த் நடித்து இயக்கிய விருதகிரி பாடல் வெளியீட்டு விழாவில் வெளியிடப்பட்டது.

விஜயகாந்தின் சிறந்த சமூக சேவை மற்றும் சிறுபான்மை மக்களுக்கு செய்து வரும் சேவையையும் பாராட்டும் வகையில் இந்த டாக்டர் விருது வழங்கப்படுகிறது...

இவ்விழாவில் கலந்துகொண்டு தே.மு.தி.க. அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் கலந்துகொண்டு பேசிய போது :

அவர், ‘’காலம் தந்த கொடை விஜயகாந்த். புரட்சி தலைவரை நம்மிடம் இருந்து பறித்துக்கொண்டது காலம். அய்யோ! காலம் பறித்துக்கொண்டதே புரட்சித்தலைவரை என கலங்கிய நமக்கு காலம் தந்த கொடைதான் வள்ளல் விஜயகாந்த்.

எம்.ஜி.ஆருடன் இறுதிவரை இருந்தவன் நான். யார் யாரெல்லாம் எம்.ஜி.ஆரை. பார்த்து பயந்தவர்கள் எல்லாம் அவர்கள் தான் இப்பொழுது விஜயகாந்தை பார்த்து பயப்படுகிறார்கள்.


நாடாளுவதற்கு அரசியல் தெரிந்திருக்க வேண்டியதில்லை. மக்களுக்கு சேவை செய்யும் மனம் ஒன்றே போதும்’’என்று பேசினார்

மேலும் இவ்விழாவில் நடிகர் சத்யராஜ் பேசியபோது :

நான் விஜயகாந்தை 32 வருட காலமாக விஜி என்று தான் கூப்பிடுவேன். முதன் முறையாக ரசிகர்களின் முன்னால் நானும் அவரை கேப்டன் என்று அழைக்க ஆசைப்பட்டேன்.


அவருக்கு டாக்டர் பட்டம் அறிவிக்கப்பட்டதால் இனி டாக்டர் கேப்டன் என்று அழைக்க வைத்துவிட்டார்.

எனக்கு ஒரு சிரமம் என்றால் ஓடோடி வந்து உதவி செய்து நான் உன் நண்பேன்டா என்று சொல்ல வைத்துவிடுவார். எதிர்காலத்தில் நானும் அவருக்கு உதவுகிற வகையில் நண்பேன் டா எனச்சொல்லும் காலம் வெகு தொலைவில் இல்லை.

அள்ளிக்கொடுத்தவர் புரட்ச்சித்தலைவர். அதை நமக்கெல்லாம் சொல்லிக்கொடுத்தவர் புரட்சிக்கலைஞர்’’என்று பேசினார்.

இவ்விழாவில் முத்தாய்ப்பாக (இப்போது எந்த கட்சியில் இருக்கிறோம் என்றே தெரியாத) எம்.எல்.ஏ. எஸ்.வி.சேகர் பேசும்போது,

’’தமிழக அரசியலை மாற்றி அமைக்கக்கூடிய சக்தி வாய்ந்த மிகப்பெரிய மக்கள் சக்தியை விஜயகாந்த் பெற்றிருக்கிறார். இந்தப் படம் எப்படி வெளியே வரும் பார்த்து விடலாம் என சவால் விட்டிருக்கிறார்கள்.

இதற்கு எல்லாம் பயப்படும் ஆள் அல்ல விஜயகாந்த். உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்கு தியேட்டர் கிடைக்கவில்லை. போஸ்டர் கூட ஒட்ட முடியவில்லை. இவற்றையெல்லாம் மீறி எம்.ஜி.ஆர். உலகம் சுற்றும் வாலிபனை வெளியிட்டார்.

அந்தப்படம் பெரிய வெற்றியை கொடுத்தது. விஜயகாந்த் படமும் வெற்றி வாகை சூடும். நாடாள முடியுமா என்று எம்.ஜி.ஆரைக்கேட்டார்கள். நாடாள முடியும் என நிரூபித்துக்காட்டினார் எம்.ஜி.ஆர். அதுபோல விஜயகாந்தும் நாடாளுவார்’’என்று தெரிவித்தார்

விருத்தகிரி படத்தில் 5 அசத்தல் பாடல்கள் உள்ளன.....

மனதில் உறுதியும், தைரியமும் உள்ளவர்கள் கீழ்க்கண்ட பாடல்களை கேட்க முயற்சிக்கலாம்.... எங்கே கேட்கலாம் என்று என்னையே கேள்வி கேட்டு யாரும் பின்னூட்டம் இட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்...

1) மக்கள் ஒரு புறம் - சங்கர் மகாதேவன்

2) தேவதை ஒன்று - ஹரிஹரன், சின்மயி

3) மன்னவனே மந்திரனே - செந்தில் தாஸ், ஸ்ரீலேகா, மாணிக்க விநாயகம்

4) பூக்கள் என்றோம் - சாதனா சர்க்கம்

5) ஏழைகள் தோழா வா வா - எஸ்.பி.பாலசுப்ரமணியம்

*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-

உங்களின் மன உறுதியை நீங்கள் சோதித்து பார்க்கும் ஒரு முயற்சியாக இந்த விருத்தகிரி படத்தின் பாடல்களை கேட்கலாம்... ஆகவே, மக்களே..... பாடல்களை கேட்டு மகிழுங்கள்............

(பின் குறிப்பு : விழாவில் படத்தின் பாடல்கள் ஒலிக்கவில்லை... பதிலாக வந்திருந்தவர்களின் ஜால்ரா ஒலிபட்டையை கிளப்பியது.....)

19 comments:

NaSo said...

//உங்களின் மன உறுதியை நீங்கள் சோதித்து பார்க்கும் ஒரு முயற்சியாக இந்த விருத்தகிரி படத்தின் பாடல்களை கேட்கலாம்... ஆகவே, மக்களே..... பாடல்களை கேட்டு மகிழுங்கள்...........//

எனக்கு மன உறுதியை சோதிக்கும் எண்ணம் இப்போதைக்கு இல்லை. ஆள விடுங்க சாமி!!

தினேஷ்குமார் said...

என்ன சார் பன்றது நம்மால பாட்ட கேட்க்க முடியும் படத்த பாக்க முடியும் முடிந்தா பதிவுல கிழிக்கலாம் அவ்வளவுதான் ...........

வேறென்ன செய்ய முடியும்

கிரி said...

ஏன் இப்பூடி? :-)))

கேப்டன் ஏன் அவர்களைப்போல ஆர்ம்ஸ் காட்டாம இருக்காரு ;-)

Jaleela Kamal said...

http://samaiyalattakaasam.blogspot.com/

ithil comment pooda mudiyuthannu paarungakaL

Chitra said...

மனதில் உறுதியும், தைரியமும் உள்ளவர்கள் கீழ்க்கண்ட பாடல்களை கேட்க முயற்சிக்கலாம்.... எங்கே கேட்கலாம் என்று என்னையே கேள்வி கேட்டு யாரும் பின்னூட்டம் இட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்...


..... ha,ha,ha,ha,ha...

jokkiri said...

//நாகராஜசோழன் MA said...
//உங்களின் மன உறுதியை நீங்கள் சோதித்து பார்க்கும் ஒரு முயற்சியாக இந்த விருத்தகிரி படத்தின் பாடல்களை கேட்கலாம்... ஆகவே, மக்களே..... பாடல்களை கேட்டு மகிழுங்கள்...........//

எனக்கு மன உறுதியை சோதிக்கும் எண்ணம் இப்போதைக்கு இல்லை. ஆள விடுங்க சாமி!!//

********

என்ன இப்பூடி அலறி அடிச்சுட்டு ஓடறாரு.... வாங்க தல... ஒரு ட்ரை கொடுங்களேன்....

jokkiri said...

//dineshkumar said...
என்ன சார் பன்றது நம்மால பாட்ட கேட்க்க முடியும் படத்த பாக்க முடியும் முடிந்தா பதிவுல கிழிக்கலாம் அவ்வளவுதான் ...........

வேறென்ன செய்ய முடியும்//

********

தினேஷ் சார்... பாட்ட கேளுங்க... படத்த பாருங்க... வேற ஒண்ணும் செய்ய வேண்டாம்... இந்த ரெண்டு விஷயத்த செஞ்சாலே நீங்க பெரிய ஆளுன்னு நாங்க சொல்லிடுவோம்..

jokkiri said...

//கிரி said...
ஏன் இப்பூடி? :-)))

கேப்டன் ஏன் அவர்களைப்போல ஆர்ம்ஸ் காட்டாம இருக்காரு ;-)//

*-*-*-*-*-*-*-*-

வாங்க கிரி....

அவரு ஆர்ம்ஸ் காட்டுனாருன்னா, பார்க்கற பூரா தமிழ்நாடுமே அலறிடும்..

jokkiri said...

//Jaleela Kamal said...
http://samaiyalattakaasam.blogspot.com/

ithil comment pooda mudiyuthannu paarungakaL//

*******

வாங்க ஜலீலா...

புது வலை புகு விழாவிற்கு வாழ்த்துக்கள்... அங்கேயும் வந்து வாழ்த்து சொல்லிட்டேன்...

jokkiri said...

// Chitra said...
மனதில் உறுதியும், தைரியமும் உள்ளவர்கள் கீழ்க்கண்ட பாடல்களை கேட்க முயற்சிக்கலாம்.... எங்கே கேட்கலாம் என்று என்னையே கேள்வி கேட்டு யாரும் பின்னூட்டம் இட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்...


..... ha,ha,ha,ha,ha...//

********

வாங்க சித்ரா....

என்னா இப்படி சிரிக்கறீங்க... கேப்டன் டாக்டர இம்புட்டு இன்ஸல்ட் பண்ணுறீங்க

Anonymous said...

//உங்களின் மன உறுதியை நீங்கள் சோதித்து பார்க்கும் ஒரு முயற்சியாக இந்த விருத்தகிரி படத்தின் பாடல்களை கேட்கலாம்.//

பாடல்களைக் கேட்கலாமா வேண்டாமா??? என்ன தான் சொல்றீங்க?

jokkiri said...

//இந்திரா said...
//உங்களின் மன உறுதியை நீங்கள் சோதித்து பார்க்கும் ஒரு முயற்சியாக இந்த விருத்தகிரி படத்தின் பாடல்களை கேட்கலாம்.//

பாடல்களைக் கேட்கலாமா வேண்டாமா??? என்ன தான் சொல்றீங்க?//

*********

வாங்க இந்திரா....

விதி வலிதுங்கறத விட நான் வேற என்னத்த சொல்ல!!?

R.Gopi said...

இந்த பதிவிற்கு இண்ட்லி/தமிழிஷில் வாக்களித்து பதிவை பிரபலமாக்கிய தோழமைகள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி....

karthikvlk
razack
RDX
maragadham
nagarajachozhan
rvsm
giriblog
ambuli
tharun
ldnkarthik
mounakavi
kvadivelan
jntube
balak
urvivek
Rajeshh
sriramanandaguruji
chitrax
hihi12
venkatnagaraj

ம.தி.சுதா said...

எல்.கே.சுதீஷ் துணிகரச் செயலுக்கு.. வாழ்த்துக்கள்...


அன்புச் சகோதரன்
ம.தி.சுதா
http://mathisutha.blogspot.com/

(என்னைத் தெரிகிறதா... பெரிரிரிரியயய இலையாக எடுத்து வைத்திருங்கள்...)

jokkiri said...

// ம.தி.சுதா said...
எல்.கே.சுதீஷ் துணிகரச் செயலுக்கு.. வாழ்த்துக்கள்...

அன்புச் சகோதரன்
ம.தி.சுதா
http://mathisutha.blogspot.com/

(என்னைத் தெரிகிறதா... பெரிரிரிரியயய இலையாக எடுத்து வைத்திருங்கள்...)//

*******

வாங்க தலைவா....

Mrs. Krishnan said...

//மனதில் உறுதியும், தைரியமும்
உள்ளவர்கள் கீழ்க்கண்ட
பாடல்களை கேட்க
முயற்சிக்கலாம் ....
எங்கே கேட்கலாம்
என்று என்னையே கேள்வி கேட்டு யாரும்
பின்னூட்டம் இட வேண்டாம்
என்று கேட்டுக்கொள்கிறேன் ...//

பாட்டையும் கேட்டு அதை பத்தி பதிவும் போடற வரை தாக்கு பிடிச்சிருக்கீங்கன்னா... நீங்க ரொம்ப strong தான்.

Mrs. Krishnan said...

//இவ்விழாவில் முத்தாய்ப்பாக
( இப்போது எந்த கட்சியில்
இருக்கிறோம் என்றே தெரியாத)
எம்.எல்.ஏ. எஸ்.வி.சேகர்
பேசும்போது,//

ஹா ஹா ஹா ஹா. உங்களை எல்லாம் விருதகிரி பாட்டை விடாம 1 மாசம் கேட்க வைக்கணும்.

jokkiri said...

//Mrs. Krishnan said...

பாட்டையும் கேட்டு அதை பத்தி பதிவும் போடற வரை தாக்கு பிடிச்சிருக்கீங்கன்னா... நீங்க ரொம்ப strong தான்.//

********

நான் பாட்டு கேட்டுட்டேன்னு யாரோ உங்க கிட்ட தப்பா நியூஸ் கொடுத்து இருக்காங்க... அந்த அளவு மன உறுதி எனக்கும் இல்லீங்கோ...

jokkiri said...

//Mrs. Krishnan said...
//இவ்விழாவில் முத்தாய்ப்பாக
( இப்போது எந்த கட்சியில்
இருக்கிறோம் என்றே தெரியாத)
எம்.எல்.ஏ. எஸ்.வி.சேகர்
பேசும்போது,//

ஹா ஹா ஹா ஹா. உங்களை எல்லாம் விருதகிரி பாட்டை விடாம 1 மாசம் கேட்க வைக்கணும். //

******

ஆஹா.... என்னங்க இது... என் மேல ஏன் இந்த கொலவெறி??!!