ஐயா வணக்கம்.....
வணக்கம்..... என்னய்யா காலைலயே வந்துட்ட இன்னிக்கு.... (குரல் உப்புக்காகிதத்தை எடுத்து கிழிந்த தகரத்தில் வைத்து தேய்க்கிறது.... கேட்கும் அனைத்து காதுகளும் கண்டிப்பாக டர்...டர் டார்ர்ர் தான்)......
ஒண்ணும் இல்லய்யா.... இன்னிக்கு செயற்குழு கூடுது.... அங்க, நம்ம கழக கண்மணிகள் எல்லாம் வராங்க... மதுரையில அம்மாவுக்கு கூடின கூட்டம் பார்த்து, எல்லாரும் பேயடிச்சு போயிருக்காங்க...அவங்களுக்கு ஊக்கம் தர்ற மாதிரி நாம ஏதாவது பேசியாகணும்....
அப்படியா... சரி.... ஊக்கத்தொகை கேட்டா தான் கொஞ்சம் யோசிக்கணும்.... வெறும் ஊக்கம் தானே தந்துடுவோம்.... நான் சொல்றத அப்படியே எழுதி அங்க வர்ற எல்லார்க்கும் காப்பி எடுத்து கொடுத்துங்க......
சரிங்கய்யா.... அப்படியே செஞ்சுடுவோம்....
“தல” தன் உடன்பிறப்புகளுக்காக எழுதிய அந்த மடல்.....இதோ உங்கள் பார்வைக்கு......
அங்கெங்கெனாதபடி.. .... எங்கெங்கும்
நீக்கமற நிறைந்திருக்கும் அன்பு உடன்பிறப்பே..
”தேர்தல்” என்ற நான்கெழுத்து
விரைவில் வரவிருக்கிறது..
எப்போதும் ”வெற்றி” என்ற மூன்றெழுத்தை பெற
”உழைப்பு” என்கிற நான்கெழுத்தை பிரயோகித்தால்
”வாக்கு” என்கிற மூன்றெழுத்து நம் வசமாகும்
”மக்கள்” என்கிற நான்கெழுத்து
”மறதி” என்ற மூன்றெழுத்தை
கைகொள்ளும்போது
”பணம்” என்னும் மூன்றெழுத்தை கொடுத்து,
”ஓட்டு” என்ற மூன்றெழுத்தை பெற்றால்,
”வெற்றி” என்ற மூன்றெழுத்து
எப்போதும் நம் வசமே என்பதை
நினைவில் கொள்.....
என் அன்பு உடன்பிறப்பே.....
சிந்தித்து பார்க்க நம்மிடம்
”நேரம்” என்ற மூன்றெழுத்து இல்லை...
ஆகவே....
சிந்திக்காதே.... செயல்படு....
வீறு கொண்டு எழு....
வெற்றி நடை போடு
”கருணை” என்ற மூன்றெழுத்தை
வெறும் வார்த்தை என்ற நாலெழுத்தோடு நிறுத்தாமல்
”நிதி” என்ற இரண்டெழுத்தையும் நினைவில் வை
அதை ”கழகம்” என்கிற நாலெழுத்தின்
காலடியில் வை....
வாழ்க அண்ணா நாமம்.....
54 comments:
ஆட்டோ வருதாம்
நல்லாத்தான் சொல்லியிருக்கீங்க, பாஸ்!
பாத்து....................ஆட்டோ வர்றா மாதிரி தெரியுது!
ஐய்யா... ஐய்யய்யோ!!!!
ஆட்டோ மூணெழுத்து,
அதன் விளைவு பயம்
அதற்கும் மூன்றெழுத்து.
திமுக கருணா பேமிலி
எனும் மூன்றெழுத்துக்கள்
தமிழகம் எனும் நான்கெழுத்துக்கும்
எடக்கு மடக்கு எனும் நான்கெழுத்துக்கும் அன்னியமே... அப்படி போடு அருவாளை....
// LK said...
ஆட்டோ வருதாம்//
// பெயர் சொல்ல விருப்பமில்லை said...
நல்லாத்தான் சொல்லியிருக்கீங்க, பாஸ்!
பாத்து....................ஆட்டோ வர்றா மாதிரி தெரியுது!//
******
வாங்க LK மற்றும் பெயர் சொல்ல விருப்பமில்லை....
”ஆட்டோ” என்கிற மூன்றெழுத்து
என்னை தேடி வந்தால்
நான் “எஸ்கேப்” என்கிற நாலெழுத்தை உபயோகிப்பேன்...
//நான் ஆட்டோக்காரன் said...
ஐய்யா... ஐய்யய்யோ!!!!
ஆட்டோ மூணெழுத்து,
அதன் விளைவு பயம்
அதற்கும் மூன்றெழுத்து.
திமுக கருணா பேமிலி
எனும் மூன்றெழுத்துக்கள்
தமிழகம் எனும் நான்கெழுத்துக்கும்
எடக்கு மடக்கு எனும் நான்கெழுத்துக்கும் அன்னியமே... அப்படி போடு அருவாளை...//
**********
வாங்க ஆட்டோக்காரரே....
நான் முந்தைய கமெண்டில் சொன்னது போல், என் மிகப்பெரிய “ஆயுதம்” என்கிற நாலெழுத்தே “எஸ்கேப்” என்கிற நாலெழுத்து தான்....
/// ”தேர்தல்” என்ற நான்கெழுத்துவிரைவில் வரவிருக்கிறது.. எப்போதும் ”வெற்றி” என்ற மூன்றெழுத்தை பெற”////
சரி உடுங்க தலை.... அல்வா அப்படிங்கற ஒரு மூணெழுத்து கிடைக்காமலா போயிடும்...
/// அன்பு உடன்பிறப்பே.....
சிந்தித்து பார்க்க நம்மிடம்
”நேரம்” என்ற மூன்றெழுத்து இல்லை... ஆகவே.... சிந்திக்காதே....
செயல்படு....////
அரசியலின் சூட்சமத்தை அதன் ஆழத்தை, அசால்ட்டாய் நையாண்டியாய் சுட்டிய தங்கள் பதிவு பிரமாதம்.
கலக்குங்க நண்பரே....
//டால்டா said...
/// ”தேர்தல்” என்ற நான்கெழுத்துவிரைவில் வரவிருக்கிறது.. எப்போதும் ”வெற்றி” என்ற மூன்றெழுத்தை பெற”////
சரி உடுங்க தலை.... அல்வா அப்படிங்கற ஒரு மூணெழுத்து கிடைக்காமலா போயிடும்..//
********
ஹா...ஹா...ஹா....
வாங்க டால்டா...
நீங்க சொன்னதுல ஒரு சின்ன திருத்தம் தல....
”அல்வா”ங்கற மூன்றெழுத்தை “ஆல்டைம்” என்கிற நாலெழுத்தோட சேர்த்து பாருங்க...
தானிக்கு தீனி சரியா போயிந்தி...
//// ”கருணை” என்ற மூன்றெழுத்தை
வெறும் வார்த்தை என்ற நாலெழுத்தோடு நிறுத்தாமல்
”நிதி” என்ற இரண்டெழுத்தையும் நினைவில் வை
அதை ”கழகம்” என்கிற நாலெழுத்தின்காலடியில் வை.... ////
இதுதான்... இதுக்குத்தான்....
அதுதான்... அதுக்குத்தான்....
சிம்பிளா சொல்லணும்னா.....
அஜூக்குன்னா அஜூக்குத்தான். குமுக்குன்னா குமுக்குத்தான
பாத்து சூதானமா இருங்கப்பு....
ம்..போடுத்தாக்குங்க..ஆட்டோ இல்லயாம் சுமோ வருது..
உருக்கமான கடிதம் என்கிறீர்களே...
நான் கேட்கிறேன்...இந்த மக்கள் மன்றத்தை பார்த்து, எனக்கு பதில் சொல்லுங்கள்.
சுருக்கமா சொல்லுங்க
இது
உருக்கமா .... அல்லது நிதியின் பெருக்கமா.
//jokkiri said...
//டால்டா said...
/// ”தேர்தல்” என்ற நான்கெழுத்துவிரைவில் வரவிருக்கிறது.. எப்போதும் ”வெற்றி” என்ற மூன்றெழுத்தை பெற”////
சரி உடுங்க தலை.... அல்வா அப்படிங்கற ஒரு மூணெழுத்து கிடைக்காமலா போயிடும்..//
********
ஹா...ஹா...ஹா....
வாங்க டால்டா...
நீங்க சொன்னதுல ஒரு சின்ன திருத்தம் தல....
”அல்வா”ங்கற மூன்றெழுத்தை “ஆல்டைம்” என்கிற நாலெழுத்தோட சேர்த்து பாருங்க...
தானிக்கு தீனி சரியா போயிந்தி...///
எல்லோரும் நம்ம வழியை பின்பற்ற ஆரம்பிச்சிட்டாங்க. வேற ஏதாவது புதுசா யோசிக்கணும்.

//லாரன்ஸ் said...
/// அன்பு உடன்பிறப்பே.....
சிந்தித்து பார்க்க நம்மிடம்
”நேரம்” என்ற மூன்றெழுத்து இல்லை... ஆகவே.... சிந்திக்காதே....
செயல்படு....////
அரசியலின் சூட்சமத்தை அதன் ஆழத்தை, அசால்ட்டாய் நையாண்டியாய் சுட்டிய தங்கள் பதிவு பிரமாதம்.
கலக்குங்க நண்பரே....//
********
நன்றி லாரன்ஸ் அவர்களே....
// உள்ளூர் உட்டாலங்கடி said...
//// ”கருணை” என்ற மூன்றெழுத்தை
வெறும் வார்த்தை என்ற நாலெழுத்தோடு நிறுத்தாமல்
”நிதி” என்ற இரண்டெழுத்தையும் நினைவில் வை
அதை ”கழகம்” என்கிற நாலெழுத்தின்காலடியில் வை.... ////
இதுதான்... இதுக்குத்தான்....
அதுதான்... அதுக்குத்தான்....
சிம்பிளா சொல்லணும்னா.....
அஜூக்குன்னா அஜூக்குத்தான். குமுக்குன்னா குமுக்குத்தான//
*******
சரியா தான் சொல்லி இருக்கீங்க....
அஜக்கு நான்கெழுத்து
குமுக்கு நான்கெழுத்து....
// வெறும்பய said...
பாத்து சூதானமா இருங்கப்பு....//
*********
ரைட் தல.... நீ சொல்லிட்ட இல்ல. ஓகே..
//ஹரிஸ் said...
ம்..போடுத்தாக்குங்க..ஆட்டோ இல்லயாம் சுமோ வருது..//
********
வா தல.... நீ வேற பயமுறுத்தற... என் கையில இப்போ அந்த லெட்டர் காப்பி வச்சு இருக்கேன்...
//அரசியல் அல்லக்கை said...
உருக்கமான கடிதம் என்கிறீர்களே...
நான் கேட்கிறேன்...இந்த மக்கள் மன்றத்தை பார்த்து, எனக்கு பதில் சொல்லுங்கள்.
சுருக்கமா சொல்லுங்க
இது
உருக்கமா .... அல்லது நிதியின் பெருக்கமா.//
********
தல... இதுல ஒனக்கு இன்னாத்துக்கு டவுட்டு... அது “நிதி” என்ற இரண்டெழுத்தின் பெருக்கமே....
// நாகராஜசோழன் MA said...
//jokkiri said...
//டால்டா said...
/// ”தேர்தல்” என்ற நான்கெழுத்துவிரைவில் வரவிருக்கிறது.. எப்போதும் ”வெற்றி” என்ற மூன்றெழுத்தை பெற”////
சரி உடுங்க தலை.... அல்வா அப்படிங்கற ஒரு மூணெழுத்து கிடைக்காமலா போயிடும்..//
********
ஹா...ஹா...ஹா....
வாங்க டால்டா...
நீங்க சொன்னதுல ஒரு சின்ன திருத்தம் தல....
”அல்வா”ங்கற மூன்றெழுத்தை “ஆல்டைம்” என்கிற நாலெழுத்தோட சேர்த்து பாருங்க...
தானிக்கு தீனி சரியா போயிந்தி...///
எல்லோரும் நம்ம வழியை பின்பற்ற ஆரம்பிச்சிட்டாங்க. வேற ஏதாவது புதுசா யோசிக்கணும்.//
************
வாங்க நாகராஜசோழன்... எல்லாருக்கும் உங்க வழிதான் தல...
ஒன்லி கள்ள ஓட்டுதான்
கலக்கலா இருக்கு தலைவரே
ஊக்கத்தொகை கேட்டா தான் கொஞ்சம் யோசிக்கணும்.... வெறும் ஊக்கம் தானே தந்துடுவோம்.//
கரெக்டுதான்
\\ஆட்டோ” என்கிற மூன்றெழுத்து
என்னை தேடி வந்தால்
நான் “எஸ்கேப்” என்கிற நாலெழுத்தை உபயோகிப்பேன்...\\
நாங்களும் அருமை என்ற மூன்றெழுத்தையும், ஓட்டு என்ற மூன்றெழுத்தையும் போட்டுட்டோம்.
// dineshkumar said...
ஒன்லி கள்ள ஓட்டுதான்//
*********
யப்பா.... இது ஆல்டைம் டெர்ரர் மேட்டர் தான்....
// ஆர்.கே.சதீஷ்குமார் said...
கலக்கலா இருக்கு தலைவரே//
*******
வாங்க சதீஷ்....
நன்றி.... நன்றி....
//ஆர்.கே.சதீஷ்குமார் said...
ஊக்கத்தொகை கேட்டா தான் கொஞ்சம் யோசிக்கணும்.... வெறும் ஊக்கம் தானே தந்துடுவோம்.//
கரெக்டுதான்//
*****
மெய்யாலுமே இது தான் தலைவா உண்மை....
jokkiri said...
//அம்பிகா said...
\\ஆட்டோ” என்கிற மூன்றெழுத்து
என்னை தேடி வந்தால்
நான் “எஸ்கேப்” என்கிற நாலெழுத்தை உபயோகிப்பேன்...\\
நாங்களும் அருமை என்ற மூன்றெழுத்தையும், ஓட்டு என்ற மூன்றெழுத்தையும் போட்டுட்டோம்.//
********
வாங்க அம்பிகா....
உங்களுக்கு “நன்றி” என்கிற மூன்றெழுத்தும், “வணக்கம்” என்கிற ஐந்தெழுத்தும் உரித்தாகுக..
//அங்கெங்கெனாதபடி.. .... எங்கெங்கும்
நீக்கமற நிறைந்திருக்கும் அன்பு உடன்பிறப்பே..//
எடுத்தவுடனேயே டாப் கியர்...
அது சரி...
அடி உதை என்ற இரண்டெழுத்துக்கும்
குத்து வெட்டு என்ற மூன்று எழுத்திருக்கும்
சாக்கடை என்ற நான்கெழுத்திர்க்கும்
அரசியல் என்ற ஐந்தெழுத்திர்க்கும் நிறைய சம்பந்தம் இருப்பதால்
ஜாக்கிரதை என்ற ஐந்தெழுத்தை உங்களுக்கு உபதேசிக்கிறேன்..
எவ்ளோ நாள் தான் ஆட்டோ வருது, சுமோ வருது அப்படின்னு கமென்டறது..
மிகவும் ரசித்தேன்.......!
//RVS said...
//அங்கெங்கெனாதபடி.. .... எங்கெங்கும்
நீக்கமற நிறைந்திருக்கும் அன்பு உடன்பிறப்பே..//
எடுத்தவுடனேயே டாப் கியர்...
அது சரி...
அடி உதை என்ற இரண்டெழுத்துக்கும்
குத்து வெட்டு என்ற மூன்று எழுத்திருக்கும்
சாக்கடை என்ற நான்கெழுத்திர்க்கும்
அரசியல் என்ற ஐந்தெழுத்திர்க்கும் நிறைய சம்பந்தம் இருப்பதால்
ஜாக்கிரதை என்ற ஐந்தெழுத்தை உங்களுக்கு உபதேசிக்கிறேன்..
எவ்ளோ நாள் தான் ஆட்டோ வருது, சுமோ வருது அப்படின்னு கமென்டறது..//
**********
வாங்க மன்னை ஆர்.வி.எஸ். சார்..
ஜாக்கிரதை என்னும் ஐந்தெழுத்தை கை கொண்டு, எஸ்கேப் என்னும் நாலெழுத்தை ப்ராக்டீஸ் செய்திருப்பதால், “ப்ராப்ளம்” என்னும் ஐந்தெழுத்தை சமாளித்து விடலாம்..
// Kousalya said...
மிகவும் ரசித்தேன்.......!//
*********
வாங்க கௌசல்யா மேடம்...
நீங்கள் வருகை தந்து, பதிவை ரசித்து படித்ததில் மகிழ்ந்தேன்...
”ம்” என்ற ஒற்றை எழுத்து தவிர வேறெந்த வார்த்தையும் வரவில்லை. :))))
jokkiri said...
// dineshkumar said...
ஒன்லி கள்ள ஓட்டுதான்//
*********
யப்பா.... இது ஆல்டைம் டெர்ரர் மேட்டர் தான்....
சொந்த ஒட்ட போட உடமாட்டார்கள் இவ்வாட்ச்சியில் நீங்க வேணும்னா போட்டுபாருங்க
உடன்பிறப்புகளேல்லாம் உங்கள தேடிகிட்டு இருக்காங்களாமே.. விலாசம் குடுத்துடவா?
// வெங்கட் நாகராஜ் said...
”ம்” என்ற ஒற்றை எழுத்து தவிர வேறெந்த வார்த்தையும் வரவில்லை. :))))//
********
ஹலோ வெங்கட்....
“ம்” தவிர வேற ஏதாவது தயவுசெய்து சொல்லுங்களேன்....
//dineshkumar said...
jokkiri said...
// dineshkumar said...
ஒன்லி கள்ள ஓட்டுதான்//
*********
யப்பா.... இது ஆல்டைம் டெர்ரர் மேட்டர் தான்....
சொந்த ஒட்ட போட உடமாட்டார்கள் இவ்வாட்ச்சியில் நீங்க வேணும்னா போட்டுபாருங்க//
*******
கேட்டு பார்த்தேன் தலைவா... காலைலயே என்னோட ஓட்டு யாரோ போட்டுட்டாய்ங்களாம்... யப்பா, என்னா டெர்ரரு??
//இந்திரா said...
உடன்பிறப்புகளேல்லாம் உங்கள தேடிகிட்டு இருக்காங்களாமே.. விலாசம் குடுத்துடவா?//
********
வாங்க இந்திரா மேடம்...
ஏங்க... எம் மேல இம்புட்டு பாசம் உங்களுக்கு!!?
:)
ஏம்பா ஒரு மேட்டர் படிச்சு கமெண்ட் போடுற மாதிரியா எழுதிரிங்க...
பயமா இருக்கு... நான் இத படிக்கல... எனக்கு ஒன்னும் புரியல.. நான் நெனச்சு நெனச்சு சிரிக்கல,,ஆமாம் சொல்லிபுட்டேன்...
என் பெயர் கூட சொல்லமாட்டேன் மறந்துட்டேனே..அம்புட்டுத்தான்..
அண்ணா நாமம் வாழ்க... உடன்பிறப்பே உங்கள் எல்லோருக்கும் போடுவேனே நான் நாமம்...! ! ! ஆஹா..ஹ...ஆஹா..ஹ..
//”நிதி” என்ற இரண்டெழுத்தையும்
நினைவில் வை
அதை ”கழகம்” என்கிற நாலெழுத்தின்
காலடியில் வை....//
idharku parisaga நாமம் endra moondru ezhuthu namakku netriyil idapadum.
Kalakitinga.
பதிவும் நல்லாயிருக்கு... அதுக்கு உடன்பிறப்புகளின் கமெண்டுகளும் நல்லா இருக்கு...
நடத்து..நக்கல் நல்லா இருக்கு கோபி...பட்டுவேட்டிமைனரை வைத்து எவ்வளவு வேணா எழுதலாம்..அவரு அம்புட்டு ஒர்த்து
நையாண்டியும் நகைச்சுவையுமான பதிவு அருமை!
//விக்னேஷ்வரி said...
:)//
********
வாங்க விக்னேஷ்வரி...
உங்களின் ஸ்மைலிக்கு ஒரு நன்றி...
//Anonymous said...
ஏம்பா ஒரு மேட்டர் படிச்சு கமெண்ட் போடுற மாதிரியா எழுதிரிங்க...
பயமா இருக்கு... நான் இத படிக்கல... எனக்கு ஒன்னும் புரியல.. நான் நெனச்சு நெனச்சு சிரிக்கல,,ஆமாம் சொல்லிபுட்டேன்...
என் பெயர் கூட சொல்லமாட்டேன் மறந்துட்டேனே..அம்புட்டுத்தான்..
அண்ணா நாமம் வாழ்க... உடன்பிறப்பே உங்கள் எல்லோருக்கும் போடுவேனே நான் நாமம்...! ! ! ஆஹா..ஹ...ஆஹா..ஹ..//
********
யோவ் செல்லதுரை... மதுரைக்காரன்னு சொல்லிட்டு, இப்படி அனானியா வந்து பின்னூட்டம் போடறியேப்பா.... மதுரையோட மானம் போகுது...
//Mrs. Krishnan said...
//”நிதி” என்ற இரண்டெழுத்தையும்
நினைவில் வை
அதை ”கழகம்” என்கிற நாலெழுத்தின்
காலடியில் வை....//
idharku parisaga நாமம் endra moondru ezhuthu namakku netriyil idapadum.
Kalakitinga.//
**********
வாங்க திருமதி கிருஷ்ணன்...
நீங்க சொன்னது தான், ஆக்சுவலா கடைசி வரி...
நீங்க தான் கலக்கிட்டீங்க....
// ஸ்வர்ணரேக்கா said...
பதிவும் நல்லாயிருக்கு... அதுக்கு உடன்பிறப்புகளின் கமெண்டுகளும் நல்லா இருக்கு...//
******
வாங்க ஸ்வர்ணரேக்கா.... நீங்க எல்லாம் பாருங்க... “தல” லெட்டர் எழுதினா தான் நம்ம பக்கம் எல்லாம் எட்டி பார்க்கறீங்க....
//மணிஜீ...... said...
நடத்து..நக்கல் நல்லா இருக்கு கோபி...பட்டுவேட்டிமைனரை வைத்து எவ்வளவு வேணா எழுதலாம்..அவரு அம்புட்டு ஒர்த்து//
**********
வாங்க மணிஜீ....
எம்புட்டு நாளாச்சு நீங்க எல்லாம் இந்த பக்கம் வந்து...
அது என்னவோ தெரியல “தல”ன்னு சொன்னா, அம்புட்டு பேரும் ஆஜராயிடராங்க....
மெய்யாலுமே ”பட்டு வேட்டி மைனர்” அம்புட்டு வொர்த்து தான் தலைவா...
// மனோ சாமிநாதன் said...
நையாண்டியும் நகைச்சுவையுமான பதிவு அருமை!//
**********’
‘வாங்க மனோ மேடம்...
தீபாவளி பண்டிகை கொண்டாட்டல் எல்லாம் நல்லா போச்சா...
வருகை தந்து, பதிவை படித்து, கருத்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி...
உப்புத்தாளில் கீறிய மாதிரி ....அருமையான உதாரணம்
//goma said...
உப்புத்தாளில் கீறிய மாதிரி ....அருமையான உதாரணம்//
********
வாங்க கோமா... ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கீங்க....
பிரியாமணி அப்படின்னு ஒரு நடிகை இருக்காங்க... அவங்க குரலும் இவரோட குரலும் ஒரே மாதிரி இருக்கும்...
//”ஆட்டோ” என்கிற மூன்றெழுத்து
என்னை தேடி வந்தால்
நான் “எஸ்கேப்” என்கிற நாலெழுத்தை உபயோகிப்பேன்//
சரியான நகைச்சுவை, அந்த பெரியவரை போட்டு இப்படியா உலுப்புவது
//Jaleela Kamal said...
//”ஆட்டோ” என்கிற மூன்றெழுத்து
என்னை தேடி வந்தால்
நான் “எஸ்கேப்” என்கிற நாலெழுத்தை உபயோகிப்பேன்//
சரியான நகைச்சுவை, அந்த பெரியவரை போட்டு இப்படியா உலுப்புவது//
******
வாங்க ஜலீலா மேடம்...
இந்த ஒலகம் இன்னுமா அந்த “பெரியவர” நம்பிட்டு இருக்கு!? அய்யோ.... அய்யோ...
Post a Comment