குடியிருக்க கூறு (ப்ளாட்) போட்டதில்
தென்றலை தொலைத்து
தாகம் தீர்க்கும் நீர்நிலைகளை இழந்தோம்...
செல்லுமிடம் எல்லாம் பேச எண்ணி
செல்லுலாரிடம் சிறைப்பட்டோம்...
சின்னஞ்சிறிய அலைபேசி
நம் அனைவரின் கைகளில் உறவாட
சந்தோஷமாய் பறந்து திரிந்த சிட்டுக்குருவியின் சங்கீதம் இழந்தோம்...
நம் அனைவரின் கைகளில் உறவாட
சந்தோஷமாய் பறந்து திரிந்த சிட்டுக்குருவியின் சங்கீதம் இழந்தோம்...
மனம் சொல்லும் இடம் விரைய
இறக்கைகளை
இரவல் வாங்கினோம்
மனம் போல் உடலும் பறந்து திரிய
பல ரக வாகனங்கள் வாங்கி
அது வெளியிடும் நச்சுப்புகையால்
நம் ஆரோக்கியத்தை இழந்தோம்...
அலுவல் அலம்பல் என ஆசைப்பட்டு
அந்நிய மொழி குடிபுக
தாய் மொழியை அந்நியமாக்கி
நாவில் சுவை இழந்தோம்
விரைவாய் செல்ல வேண்டி
வீதி கூட்டும் சாலைக்கென
மரங்களை வெட்டி சாய்த்ததில்,
இதம் தரும் நிழல்,
உடலுக்கு கிடைப்பதை இழந்தோம்....
வெட்டிய மரங்கள், விறகாகவும்,
வீட்டிற்கு கதவாகவும் ஆனதில்
ஒரு துளி காற்று இன்றி,
இயற்கையான குளுமையை இழந்தோம்...
வெள்ளையரிடம் குருதி சிந்தி,
சுதந்திரம் வாங்கி,
அதை உள்ளூர் கொள்ளையர்
கைகளில் தந்து நம் நாட்டை இழந்தோம்...
உச்சகட்ட இன்பம் தேடி, போதையின் பாதையை நாடி
வீடு, உறவுகள் தொலைத்து சந்தோஷம் முற்றும் இழந்தோம்...
பெண் வீட்டில் பொருள் வாங்கி
நம்மையே அடகு வைத்து,
உயிரினும் பெரிதான தன்மானம் இழந்தோம்...
கட்டியவளின் பேச்சு கேட்டு,
பெற்றோரை வீட்டை விட்டு துரத்த
நன்றி மறந்து,
நாம் வாழ்வின் பந்தம், பாசம் இழந்தோம்...
நாம் வாழ்வின் பந்தம், பாசம் இழந்தோம்...
பின்னாளில், அதே நிகழ்வை
நம் மக்கள் நமக்கு செய்தபோது
ஊரெல்லாம் புலம்பினோம்,
நம் தம்பட்டத்தில் தவறான ஒர் நெறிமுறை சொன்னோம்
அதை தாங்காத மனநிலையில் நம் உயிரை இழந்தோம்...
(ஆர்.கோபி / லாரன்ஸ்)
35 comments:
நிறைய இழந்துவிட்டோம்.. இன்னும் இழந்து கொண்டிருக்கிறோம் - நிறுத்த வழி தெரியாமல் சிலறும், வழியே இல்லாமல் சிலறும். நல்ல பகிர்வு.
//வெங்கட் நாகராஜ் said...
நிறைய இழந்துவிட்டோம்.. இன்னும் இழந்து கொண்டிருக்கிறோம் - நிறுத்த வழி தெரியாமல் சிலறும், வழியே இல்லாமல் சிலறும். நல்ல பகிர்வு.//
***********
வாங்க வெங்கட் நாகராஜ்...
உண்மைதான்... எத்தனையோ விஷயங்களை வாழ்வில் இழந்து விட்டோம்... இழந்து வருகிறோம்.. இந்நிலை மாற்ற முயற்சிப்போம்...
நன்றாகச் சொல்லியுள்ளீர்கள்.
// ராமலக்ஷ்மி said...
நன்றாகச் சொல்லியுள்ளீர்கள்.//
*******
வருகை தந்து, பதிவை படித்து, பாராட்டியமைக்கு மிக்க நன்றி ராமலக்ஷ்மி மேடம் ...
வரதட்சணை என்ற பெயரில்,
பெண் வீட்டில் பொருள் வாங்கி
நம்மையே அடகு வைத்து,
உயிரினும் பெரிதான தன்மானம் இழந்தோம்...
...... ஆஹா... இப்படி சிந்திக்க ஆரம்பித்து விட்டாலே, மாறுதல்கள் வர தொடங்கி விடும். :-)
//Chitra said...
வரதட்சணை என்ற பெயரில்,
பெண் வீட்டில் பொருள் வாங்கி
நம்மையே அடகு வைத்து,
உயிரினும் பெரிதான தன்மானம் இழந்தோம்...
...... ஆஹா... இப்படி சிந்திக்க ஆரம்பித்து விட்டாலே, மாறுதல்கள் வர தொடங்கி விடும். :-)//
*******
வாங்க சித்ரா....
நாம் எதிர்பார்க்கும் இது போன்ற மாற்றங்கள் வரும் நாள் வெகு தொலைவில் இல்லை...
\\சின்னஞ்சிறிய அலைபேசி
நம் அனைவரின் கைகளில் உறவாட
சந்தோஷமாய் பறந்து திரிந்த சிட்டுக்குருவியின் சங்கீதம் இழந்தோம்...\\
உண்மைதான்.
நிறைய இழந்துவிட்டோம்.. இன்னும் இழந்து கொண்டிருக்கிறோம்.
நல்ல பதிவு.
//அம்பிகா said...
\\சின்னஞ்சிறிய அலைபேசி
நம் அனைவரின் கைகளில் உறவாட
சந்தோஷமாய் பறந்து திரிந்த சிட்டுக்குருவியின் சங்கீதம் இழந்தோம்...\\
உண்மைதான்.
நிறைய இழந்துவிட்டோம்.. இன்னும் இழந்து கொண்டிருக்கிறோம்.
நல்ல பதிவு.//
********
வருகை தந்து, பதிவை படித்து, வாழ்த்தியமைக்கு எங்களின் மனமார்ந்த நன்றி அம்பிகா அவர்களே.
நாம் பெற்றவைகளை விட
இழந்தவைதான் மிக அதிகம்.
//santhanakrishnan said...
நாம் பெற்றவைகளை விட
இழந்தவைதான் மிக அதிகம்.//
******
வாங்க சந்தானகிருஷ்ணன்....
மிக சரியாக சொல்லி இருக்கிறீர்கள். வருகை தந்து, பதிவை படித்து, கருத்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி...
- தேஜாம்மா
அருமையான பதிவு!
வாழ்க்கையில் தினமும் இப்படித்தான் அருமையான விஷயங்களைத் தொலைத்துக்கொண்டிருக்கிறோம். மனிதனின் பேராசையும் சுயநலமும் அருமையான விஷயங்களை தொடர்ந்து அழித்துக்கொண்டே இருக்கின்றன! என் பயமெல்லாம் நம் எதிர்கால சந்ததிகளுக்கு எந்த நல்ல விஷயங்களை விட்டுச் செல்லப்போகிறோம் என்பதுதான்!!
//theja amma said...
- தேஜாம்மா//
எதையோ சொல்ல வந்து, ஒன்றுமே சொல்லாமல் போன தேஜாம்மா... நன்றி மீண்டும் வருக
//மனோ சாமிநாதன் said...
அருமையான பதிவு!
வாழ்க்கையில் தினமும் இப்படித்தான் அருமையான விஷயங்களைத் தொலைத்துக்கொண்டிருக்கிறோம். மனிதனின் பேராசையும் சுயநலமும் அருமையான விஷயங்களை தொடர்ந்து அழித்துக்கொண்டே இருக்கின்றன! என் பயமெல்லாம் நம் எதிர்கால சந்ததிகளுக்கு எந்த நல்ல விஷயங்களை விட்டுச் செல்லப்போகிறோம் என்பதுதான்!!//
*******
வாங்க மனோ மேடம்...
தாங்கள் வருகை தந்து, பதிவை படித்து கருத்து பகிர்ந்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி....
உண்மை. சந்தோசம் என்பது உண்மையில் என்ன என்பதை அறியாத மானிட ஜன்மங்கள் இப்படி இழந்த நிஜ சந்தோஷங்கள் மிக அதிகம். வாழ்த்துகள் கோபி!
நல்ல பதிவு Gobi.
// பெயர் சொல்ல விருப்பமில்லை said...
உண்மை. சந்தோசம் என்பது உண்மையில் என்ன என்பதை அறியாத மானிட ஜன்மங்கள் இப்படி இழந்த நிஜ சந்தோஷங்கள் மிக அதிகம். வாழ்த்துகள் கோபி!//
**********
பதிவை படித்து கருத்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி பெயர் சொல்ல விருப்பமில்லை....
//ஜெஸ்வந்தி said...
நல்ல பதிவு Gobi.//
*********
வருகை தந்து, பதிவை படித்து, பாராட்டியமைக்கு மிக்க நன்றி ஜெஸ்வந்தி மேடம் ...
இந்த பதிவிற்கு தமிழிஷில் வாக்களித்து பதிவை பிரபலமாக்கிய தோழமைகள் அனைவருக்கும் எங்களின் இதயம் கனிந்த நன்றி...
RDX
karthikvlk
venkatnagaraj
pinnokki
Ramalakshmi
sangarfree
jollyjegan
subam
spice74
suthir1974
bhavaan
balak
paarvai
kvadivelan
ambuli
chitrax
ambkikajothi
padma
அய்யயோ நான் அடிச்ச கமெண்ட்ஸ் எதுவுமே காணோமே!, எனன பிரச்சனைன்னு தெரியல,
உங்களது ஒவ்வொரு வார்த்தைகளுமே அருமையா இருந்தது, நல்ல பகிர்வு - தேஜாம்மா
அய்யயோ நான் அடிச்ச கமெண்ட்ஸ் எதுவுமே காணோமே!, எனன பிரச்சனைன்னு தெரியல,
//thejasvie said...
அய்யயோ நான் அடிச்ச கமெண்ட்ஸ் எதுவுமே காணோமே!, எனன பிரச்சனைன்னு தெரியல,//
*******
உங்களுக்கு மட்டுமில்லை... எல்லோருக்குமே இந்த பிரச்சனை இருந்தது... இப்போது சரிசெய்யப்பட்டு விட்டதாக அறிகிறேன்..
//theja amma said...
அய்யயோ நான் அடிச்ச கமெண்ட்ஸ் எதுவுமே காணோமே!, எனன பிரச்சனைன்னு தெரியல,
உங்களது ஒவ்வொரு வார்த்தைகளுமே அருமையா இருந்தது, நல்ல பகிர்வு - தேஜாம்மா//
**********
வாங்க தேஜாம்மா....
பதிவை படித்து, வாழ்த்தி பின்னூட்டமிட்டமைக்கு மிக்க நன்றி..
தோழமைகளின் வாழ்த்தே, நம்மை மென்மேலும் நன்றாக எழுத தூண்டும்.
நல்ல பகிர்வு.
//சே.குமார் said...
நல்ல பகிர்வு.//
*******
வாங்க குமார்....
பதிவை படித்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி... தொடர் வருகை தாருங்கள்... படித்து கருத்து பகிருங்கள்...
//சே.குமார் said...
நல்ல பகிர்வு.//
*******
வாங்க குமார்....
பதிவை படித்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி... தொடர் வருகை தாருங்கள்... படித்து கருத்து பகிருங்கள்...
தலைவரே,
போன பதிவையும் படித்தேன்.. வெயில் சென்னையிலேயே தாங்க முடியவில்லை.. அங்கு இன்னும் கொடுமையாகத்தானிருக்கும். :(
மரங்கள்.. ஆம் கட்டாயப்படுத்தவேண்டிய நிலையை எல்லாம் எப்போதோ கடந்தாச்சு. மக்களே இதை செயல்படுத்த வேண்டும். இல்லை என்றால் வருங்கால சந்ததிகள் நம்மை மன்னிக்காது!
தொடர்ச்சியான இந்த இடுகையும் நன்று.
தாமதத்திற்கு ஒரு மன்னிப்பு ப்ளீஸ்..:))
//【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
தலைவரே,
போன பதிவையும் படித்தேன்.. வெயில் சென்னையிலேயே தாங்க முடியவில்லை.. அங்கு இன்னும் கொடுமையாகத்தானிருக்கும். :(
மரங்கள்.. ஆம் கட்டாயப்படுத்தவேண்டிய நிலையை எல்லாம் எப்போதோ கடந்தாச்சு. மக்களே இதை செயல்படுத்த வேண்டும். இல்லை என்றால் வருங்கால சந்ததிகள் நம்மை மன்னிக்காது!
தொடர்ச்சியான இந்த இடுகையும் நன்று.//
*********
வாங்க ஷங்கர் ஜி...
தொடர்ந்து வருகை தந்து, பதிவுகளை படித்து கருத்து பகிர்வதற்கு மிக்க நன்றி...
சிந்திக்க வைக்கும் பதிவு..
நன்றாக உள்ளது..
// Indhira said...
சிந்திக்க வைக்கும் பதிவு..
நன்றாக உள்ளது..//
*********
வருகை தந்து, பதிவை படித்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி இந்திரா அவர்களே....
இழந்தவை நிறையதான் கோபி.
சிந்திப்போம், இழந்ததை மீட்டெடுக்க.
காலம் மாறும்,நல்லவை நடக்கும்.
//கோமதி அரசு said...
இழந்தவை நிறையதான் கோபி.
சிந்திப்போம், இழந்ததை மீட்டெடுக்க.
காலம் மாறும்,நல்லவை நடக்கும்.//
*********
வாங்க கோமதி மேடம்.... நீங்கள் சொன்னது போல், இழந்ததை பற்றி ஜாஸ்தி சிந்திக்காமல், இனி வரும் சந்ததியர்க்கு இன்னும் பலவற்றை இழக்காமலிக்க கற்றுத்தருவோம்...
//செல்லுமிடம் எல்லாம் பேச எண்ணி
செல்லுலாரிடம் சிறைப்பட்டோம்//
உண்மை...
//சந்தோஷமாய் பறந்து திரிந்த சிட்டுக்குருவியின் சங்கீதம் இழந்தோம்//
நிதர்சனம்..
//தாய் மொழியை அந்நியமாக்கி
நாவில் சுவை இழந்தோம்//
அருமை..
//உள்ளூர் கொள்ளையர்
கைகளில் தந்து நம் நாட்டை இழந்தோம்//
வேற என்ன செய்ய?
//பெண் வீட்டில் பொருள் வாங்கி
நம்மையே அடகு வைத்து//
அடகு கூட இல்ல... விற்பனை, வியாபாரம்!
//பின்னாளில், அதே நிகழ்வை
நம் மக்கள் நமக்கு செய்தபோது//
பஞ்ச்.. முற்றிலும் அருமையான கவிதை.. வாழ்த்துக்கள் :)
//ராதை said...
//செல்லுமிடம் எல்லாம் பேச எண்ணி
செல்லுலாரிடம் சிறைப்பட்டோம்//
உண்மை...
//சந்தோஷமாய் பறந்து திரிந்த சிட்டுக்குருவியின் சங்கீதம் இழந்தோம்//
நிதர்சனம்..
//தாய் மொழியை அந்நியமாக்கி
நாவில் சுவை இழந்தோம்//
அருமை..
//உள்ளூர் கொள்ளையர்
கைகளில் தந்து நம் நாட்டை இழந்தோம்//
வேற என்ன செய்ய?
//பெண் வீட்டில் பொருள் வாங்கி
நம்மையே அடகு வைத்து//
அடகு கூட இல்ல... விற்பனை, வியாபாரம்!
//பின்னாளில், அதே நிகழ்வை
நம் மக்கள் நமக்கு செய்தபோது//
பஞ்ச்.. முற்றிலும் அருமையான கவிதை.. வாழ்த்துக்கள் :)//
********
பதிவை முழுதுமாக ரசித்து படித்து, குட்டி குட்டியா பெரிய பின்னூட்டம் இட்டமைக்கு மிக்க நன்றி ராதை....
இன்றைய யதார்த்த நிலையை அழகாக சொல்லி இருக்கிர்கள் கோபி வாழ்த்துக்கள் இன்னும் இது போல் பல வர விரும்புகிறேன்.
Post a Comment