வெற்றியின் விழுதுகள் – (பகுதி-5)

உண்டு உண்டு என்று நம்பி காலை எடு,
இங்கு உன்னை விட்டா
பூமியேது கவலை விடு
ரெண்டில் ஒன்று பார்ப்பதற்கு தோளை நிமிர்த்து
ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு, என வாத்தியார் சொன்ன வாய்ப்பாடு உண்டு.... நம்பிக்கையில்லையா நண்பர்களே கால்குலேட்டர் எடுத்து நீங்களே தட்டி சரி பாருங்க. கணக்கும் அறிவியலுந்தேன் நம்ம இன்றைய வளர்ச்சிக்கு வக்காலத்து வாங்கும் இரட்டையர்கள்...

உங்க ஊர்ல இருந்து பக்கத்து ஊருக்கு போகணும்னா, கால் நடையா போவோணும், இல்லையா கால் நடைகள கட்டி வண்டி உண்டாக்கி போவோணும்…. எப்போ, ஒரு காலத்தில, ஆனா இன்னைக்கு ஜிவ்வுன்னு ஒரு பஸ், டக்கு டுக்குன்னு ரயிலு, புஸ்ஸூன்னு ஏரோப்ளேன்னு எத்தனையோ இருக்கு.

இதுக்கெல்லாம் காரணம் அறிவியல் கண்டுபிடிப்பு தானே. காசியில் செய்யும் பெரியோர் உரையை காஞ்சியில் செய்வதற்கோர் கருவி செய்வோம் என நம் வாழ்வை மாற்றிய விந்தை அறிவியல் ஆய்வுதானே. நம் பயணத்தில், உணவில், தகவல் தொழில் நுட்பத்தில் என எத்தனை எத்தனை சாதனைகள்.

புறாவை தூது விட்டு காத்திருந்த நாம் இன்று செல்போனில் அல்லவா செழிக்கின்றோம். அரசியல் பொது எனும் தளங்களில் இருந்து நாம் சந்தித்த சாதனையாளர்கள் போலவே அறிவியலில் மிரக்கிள் நடத்திய நம் மரியாதைக்குறிய தமிழர் சர்.சி.வி.ராமன் அவர்களின் வாழ்வை சற்று பார்ப்போமே.

“சர்” எனும் வார்த்தை பதம் நம் வாசக தோழமைகளுக்கு தெரிந்திருக்கலாம், என்றாலும் தெரியாத எங்களைப் போன்ற சிலருக்காக திரும்ப சொல்கிறோம், தெரிஞ்சவுங்க மன்னிச்சுக்கோங்க.

போரும், போர்க்கள வெற்றியும், உடல் பலமுமே உயர்ந்தது என நம்பப்பட்டது முந்தைய நூற்றாண்டு வரை. ஒரு மிக பெரிய மாறுதல் நிகழ்ந்தது அடுத்து வந்த 20ம் நூற்றாண்டின் மத்தியில் தான். அதுதான் இண்டெஸ்டிரியல் ரெவல்யூஷன் அல்லது சயிண்டிபிக் ரெவல்யூஷன். புதிய புதிய கண்டுபிடிப்புகளும் ஆய்வும், உபகரணங்களும் பாராட்டப்பட்டு பொன்னாடை போர்த்தப்பட்டது.

நைட் ஹூட் (KNIGHTHOOD) என வீரத்தை அங்கிகரித்த பழக்கம் மாறி, “சர்” எனும் மதிப்புமிக்கவர் என பட்டம் கொடுக்க தொடங்கிய கால கட்டத்தில் பிரிட்டிஷ் அரசின் உயர்ந்த இந்த அவார்டு வாங்கியவர் நம்மவர் திருச்சிக்காரர்.

அப்பா கணக்கு, இயற்பியல் பாடத்தின் வாத்தியார். யாரோ வாத்தியார் பிள்ளை மக்கு, வைத்தியன் பிள்ளை சீக்குன்னு வாங்களே அவர் மட்டும் கையில சிக்கினாரு, அவர பிடிச்சு வைச்சு, இல்லைங்க!!! இவரு பிரில்லியண்ட் என நாம் சொல்லி விடலாம். முழுக்க முழுக்க இந்தியாவிலேயே படித்து அறிஞர் ஆனவர் என குறிப்பிடப்படும் பெருமை இவருக்கு உண்டு.

இசை, இலக்கியம், இயற்பியல் எல்லாம் அவருக்கு பிறந்த வீட்டு சீதனம்... . பள்ளிப் படிப்பு எளிதாகவும் இயல்பாகவும் வந்தது அவரது மிகப் பெரிய பலம். சின்னஞ்சிறு வயசிலேயே புரிஞ்சு படிச்சவர். புஸ்தகத்தில மார்ஜின் காலத்துல ஹௌ, வொய் என குறிச்சு வைச்சுக்குவாராம்.

பாஸானாலே பெரிய விஷயம் என படிப்பை பூச்சாண்டி மாதிரி பார்த்து வாழ்வையே கண்டு அஞ்சிய ஒரு குழுவும், படிப்பை விளையாட்டு போல அனாயாசமாய் செய்து வெற்றி பெற்றவர் என இன்னொரு குழுவாகவும் மனிதர்கள்.

நான் எந்த ஊரு,
நீ எந்த ஊரு முகவரி

தேவையில்லை

என அந்த டெர்ரர் ஒப்பனிங் சாங் போல பாடிவிட்டு அடுத்தவங்க எந்த க்ரூப்னு கேக்காம மேல போவோம்.

17 வயசுல, பிரசிடென்ஸி காலேஜ்ல, ஸ்கூல்ல கொடுத்த தங்க மெடலோடு படிக்கப் போறாரு நம்மாளு. கிளாஸ் எடுக்க வந்த வாத்தியார் எலியட் கேட்டாராம் ‘ஏம்பா இது பி.ஏ. கிளாஸ். பார்த்தா சின்னப் பையனா இருக்கியே தெரியாத்தனமா வந்து உக்கார்ந்திட்டியோன்னு கேட்டேன்னாராம்’. பார்க்க சின்ன பையன் போல் சிறு சிறு துரு துரு செல்லந்தான் நம் C.V.ராமன்.

கோல்ட் மெடலிஸ்ட் ராமன் படிப்பிலே கெட்டி, ஆனாலும் அவர் ஒரு 15 வருடம் ஆராய்ச்சி செய்வதை வேலையாக செய்யவில்லை. அடங்காத ஆவல் மட்டும் கொண்டு, அவ்வப்போது படித்தும் அவர் எழுதியும் வந்தாரே ஒழிய முழு நேரமாய் செய்யவில்லை. இல்லேன்னு சொல்லாம, தனது 18 வயதில் பிரிட்டிஷ் நாளிதழில் தத்துவ கட்டுரை சில எழுதியிருக்கிறார்.

படித்து முடித்தபின் கல்கத்தாவில் தான் உத்தியோகம். ஒரு நாள் ட்ராமில் சென்று கொண்டிருந்த போது 210, Bow Bazaar தெருவில் உள்ள ஆராய்ச்சிக்கூடத்தின் பலகை பார்த்து உடனே குதித்து உள் சென்றார்.


இங்கு என்ன செய்கிறீர்கள் என கேட்டார். அவர்களும், இது போன்று செய்கிறோம்.... நீங்கள் வர தயாரா என்று கேட்ட போது, இதோ வந்தேன் என்று சொல்லி ஒப்புக்கொண்டு தன் அன்றாட பணிகளுக்கு இடையில் ஆராய்ச்சியும் தொடங்கினார்.

ஒரு ஆராய்ச்சியாளரின் சிந்தை செயல் வேறு. லண்டன் சென்று ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தில் சுற்றிப் பார்த்தவருக்கு நேர்ந்த ஒரு வினோத சம்பவமே ஆராய்ச்சி செய்ய தூண்டியது. அன்றைய காலகட்ட்த்தில் லண்டன் செல்வதென்பது இப்ப மாதிரி ஒரு நாள் கூத்தா. மாதங்களான நிச்சயமில்லாத கடற்பயணம். அப்படி ஒரு கடற் பயணத்தின் முடிவில் தோன்றிய தீர்மானம் தான் இவரின் வெற்றி.

ஒளி தன்மை பற்றிய நோபல் பரிசுக்கான கண்டுபிடிப்பு. அந்த அற்புதம் 1928 மார்ச் மாத்த்தில் நிக்ழ்ந்தது.

ஒளியின் தன்மை, கற்றையா துகள்களா. இப்படி ஒரு கேள்வியோ, இதற்கான விடையோ அதுவரை நாம் முயலாதது. அது துகள்களே, அதுதான் போட்டான்ஸ் என போட்டார் ஒரு போடு. ஏழு வண்ணத்தில் விப்ஜியார் (Violet, Indigo, Blue, Green, Yellow, Orange, Red) என வானவில் தோன்றுவது ஒளி விலகல். இதில் ஏழு நிறத்தை அப்பால வைச்சுட்டு ஒற்றை பளிர் வெள்ளை ஒளியை எடுத்து அதை ஒரு பிரிசம் வழி விட்டால் கிடைப்பது ஒற்றை அல்ல என்பது இவர் கண்டுபிடிப்பு. அதாவது என்னதான் நீங்க ஒளியை பிரிச்சு, பிரிசத்தில விட்டாலும் அங்க மாலிகியூல் செய்யுற களேபரம் இருக்கு. இந்த எபக்ட்க்கும் ராமன் எபக்ட் எனவும் இதில் போட்டான்ஸ் எடுக்கும் பாதைக்கு ராமன் பாதை எனவும் இவர் பெயர் பெற்றது.

எட்டாம்புல புரிஞ்சிருக்க வேண்டிய இந்த ராமன் எபக்ட் வாசகத் தோழமையே இப்ப புரியுது. இப்ப புரிஞ்சதால ராமன் எபக்டால எங்களுக்கு எந்த எபக்ட்டும் இல்லை. தங்களுக்கு எப்படியோ.....

இந்த ஆராய்ச்சி தந்த பாதையில் மேலும் சிலர் முன்னேறி, மிகப் பெரிய சாதனைகள் நிகழ்த்தினர். 1800 முழுமை பெற்ற ஆய்வுக்கும், 2500 புதிய தனிமங்களின் தீர்வுக்கும் வழி கோலியது. இந்த நூற்றாண்டின் மிக சிறந்த கண்டுபிடிப்பாக அறிவிக்கப்பட்டது.

வெறும் 300 ரூபாய் செலவழித்து உண்டாக்கிய உபகரணம்தான் இது. நேரத்தின் விலை தெரிந்து பணியாற்றியவர் அவர். லட்சியம் தெரிந்த பின் அதை அடைய எதுவும் நம்மை பாதிக்கா வண்ணம் பார்க்க வேண்டும் என்கிறார்.
ஒரு முறை முதல் வகுப்பில் தேர்ந்த ஒரு இளைஞன் இவரிடம் நேர்முக தேர்வுக்கு வருகிறான். சரி சொல் உன்னுள் அடங்காத அறிவியலின் வியப்பு பற்றியும், நீ தேடி அடைய நினைக்கும் விடை பற்றியும் சொல் என்றாராம்.

வந்தவர் முழித்து விட்டார், என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. அவருக்கும் பொறுமையாய், அறிவியல் என்பதில் மனிதனின் பங்கு என்ன, அதை ஆராய என்ன அவசியம் என சொல்லிக் கொடுத்து வாழ்த்தி அனுப்பியிருக்கிறார். அறிவியல் ஆய்வின் போது, நாம் தேடும் விடை கிடைக்கும் முன் அதற்கு கொடுக்கின்ற விலை அதிகம். தாங்க வேண்டிய சோதனையின் தாக்கம் அதிகம், உன்னைப் பார்த்தால் வீக்காயிருக்கிறாய். விளையாட்டிலும் உடற்பயிற்சியிலும் கவனம் செலுத்தி உடலை உரமாக்கு எனவும் பரிந்துரைத்தார்.

அறியாத ஒன்றை ஆராய்ந்து கண்டுபிடிப்பது அற்புதம். ஸ்விட்ச் போட்டா லைட் எரியும் என சொன்னால் இன்னிக்கு ஓகே, இதுவே இரு நூறு வருசத்துக்கு முந்தி சொன்னா, என்னது ஸ்விட்ச் போட்டா, லைட் எரியுமா? , விதைய போட்டா, நல்லா விளைச்சல் வரும் என்றிருப்பார்.

ஆம், ஒவ்வொரு அறிவியல் கண்டுபிடிப்புக்கும் பின்னால் ஒரு அறிஞரின் திடம் இருக்கிறது. அந்த திடம் எப்படிப் பட்ட்து. இச்சகத்துலோரெல்லாம் எதிர்த்து நின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.

கூட இருக்கும் சமூகம் சொல்லும் ‘ஏண்டா உனக்கு வேற வேலையே இல்லயா, ஏண்டா இப்படி இருக்க என இந்த நெட்டை மரங்களின் பொட்டை புலம்பல்களை கேட்டுக் கொண்டிருந்தால், சாதிப்பது எப்படி.

அவ்வறிஞரின் திடம் வேண்டுவோம். நம் திட்டம் குறித்தோ அல்லது தீர்மானம் குறித்தோ... இல்லை என யார் சொன்னாலும் பரவாயில்லை. உள்ளுணர்வு சொல்கிறதா, செயலில் இறங்கி விடுவோம்.

அவதார புருஷன் ஸ்ரீ ராமன் வாழ்க்கை காட்டும் தத்துவம் ஒரு தாரமும், தந்தை சொல் கேட்டு கானகம் சென்றதும், அரக்கர்களை அழித்ததும் என்றால். சர் சி.வி. வாழ்வு நமக்கு சொல்வது உள்ளுணர்வு கேட்குதலும், நம் தீர்மானத்தின் வழி நேரத்தை வீணாக்காமல், முன்னேறிச் செல்வதுமே....

சயிண்டிஸ்ட பத்தி சிம்பிளா சொல்லுங்க என ஆப்பாயில் அக்கிரமசிங்கத்தை கேட்டோம், அவர் சொல்றாரு. வெளிய இருந்து முட்டைய உடைச்சா அழிவு, அதுவே உள்ள இருந்து முட்டை உடைச்சு கோழி குஞ்சா வெளி வந்துச்சுன்னா அது ஆக்கம் அல்லது பிறப்பு.

பிறத்தியாரும் சமூகமும் சொல்லாமல் நாமே நம்மை அடைத்திருக்கும் கூட்டை உடைக்க முடியுமா...

முடியுமா ???? ...... முடியும்.... மா.... !!!!!

(லாரன்ஸ் / ஆர்.கோபி)

தொடரும்....

22 comments:

மணிஜி said...

ஆச்சர்யபடுத்தறே கோபி..நல்ல பதிவு

R.Gopi said...

//தண்டோரா ...... said...
ஆச்சர்யபடுத்தறே கோபி..நல்ல பதிவு//

*********

வாங்க தலைவா....

வாழ்த்துக்கு நன்றி... இந்த தொடர் பதிவும், ஏறக்குறைய அனைத்து பதிவுகளுமே நானும், தோழர் லாரன்ஸூம் இணைந்தே எழுதுகிறோம்...

நம் வாழ்த்துக்கள் அவரையும் சென்று அடையட்டும்...

Rekha raghavan said...

அருமைங்க!

ரேகா ராகவன்.

Chitra said...

சர் சி.வி. வாழ்வு நமக்கு சொல்வது உள்ளுணர்வு கேட்குதலும், நம் தீர்மானத்தின் வழி நேரத்தை வீணாக்காமல், முன்னேறிச் செல்வதுமே....


..........நல்ல தகவல்களும் ஊக்கமூட்டும் வார்த்தைகளும் கொண்ட பதிவு.

கோமதி அரசு said...

//சர்.சி.வி வாழ்வு நமக்கு சொல்வது உள்ளுணர்வு கேட்குதலும் நம் தீர்மானத்தின் வழி நேரத்தை வீணக்காமல்,முன்னேறிச் செல்வதே//

உள்ளுணர்வு எப்போதும் சரியாக சொல்லும் என்பதை நன்கு உணர்ந்து உள்ளார்.

//ஒவ்வொரு அறிவியல் கண்டுபிடிப்புக்கும் பின்னால் அறிஞரின் திடம் இருக்கிறது.//

உண்மை,சரியாக சொன்னீர்கள்.

நீங்கள் இருவரும் நல்ல பயனுள்ள
செய்திகளை சொல்லி உங்கள் வெற்றி
விழுதுகளை ஊன்றி தாய் மரத்தை
(மக்கள் மனத்தை)திடப் படுத்துகிறீர்கள்.

வாழ்த்துக்கள்!இருவருக்கும்.

R.Gopi said...

தொடர் வருகை தந்து, பதிவினை ஆழ்ந்து படித்து கருத்து பகிர்ந்து உற்சாகப்படுத்தும் தோழமைகள் அனைவருக்கும் எங்களின் நன்றி உரித்தாகுக...

ரேகா ராகவன்
சித்ரா
கோமதி அரசு

R.Gopi said...

இந்த பதிவிற்கு “தமிழிஷில்” வாக்களித்து பிரபலமாக்கிய உங்கள் அனைவருக்கும் நன்றி...

mohamedFeros
tharun
Karthi6
tamilz
balak
kosu
MVRS
kvadivelan
inbadurai
hihi12
anubagavan
annamalaiyaan
senthazalravi
chitrax

Paleo God said...

முட்டைய உடைச்சா அழிவு, அதுவே உள்ள இருந்து முட்டை உடைச்சு வெளி வந்துச்சுன்னா அது ஆக்கம் அல்லது பிறப்பு.//

அசத்தல்..:)

Paleo God said...

மொதல்லேர்ந்து படிச்சிடறேன்..:)

R.Gopi said...

//【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
முட்டைய உடைச்சா அழிவு, அதுவே உள்ள இருந்து முட்டை உடைச்சு வெளி வந்துச்சுன்னா அது ஆக்கம் அல்லது பிறப்பு.//

அசத்தல்..:)//

//【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
மொதல்லேர்ந்து படிச்சிடறேன்..:)//

***********

வாங்க ஷங்கர்...

வாழ்க்கை தொடர் எழுதும் போது, தொடர்ச்சியாக வந்து படித்து பின்னூட்டமிட்டீர்கள்... பின் உங்கள் வருகை நின்று போனது...

மீண்டும் இப்போது வருகை தந்துள்ளீர்கள்... மிக்க நன்றி...

ஜோக்கிரி பதிவில் குறிப்பிட்டதை போல், சுஜாதா அவர்களின் கதைகள் அனுப்பி விட்டேன்..

meenamuthu said...

கிட்டதட்ட எல்லா பதிவுகளும் படித்துவிட்டேன்!நடு நடுவே நகைச்சுவை மிளிரும் எழுத்துநடை அருமை!வாழ்த்துகள்

என் வீட்டிற்கு வந்து பாராட்டிச்சென்றது கண்டு மகிழ்ந்தேன். நன்றி கோபி

R.Gopi said...

//meenamuthu said...
கிட்டதட்ட எல்லா பதிவுகளும் படித்துவிட்டேன்!நடு நடுவே நகைச்சுவை மிளிரும் எழுத்துநடை அருமை!வாழ்த்துகள்

என் வீட்டிற்கு வந்து பாராட்டிச்சென்றது கண்டு மகிழ்ந்தேன். நன்றி கோபி//

**********

வாங்க மீனாமது...

தாங்கள் வருகை தந்து, படித்து கருத்து சொன்னமைக்கு மிக்க நன்றி..

இது ஒரு பரஸ்பர மரியாதை... நான் உங்கள் வலைக்கு வந்து படித்து பாராட்டுவதும், நீங்கள் இங்கு வருவதும்...

தொடர்ந்து வாருங்கள்... நன்றி....

Jaleela Kamal said...

சர்.சி.வி ராமன் பற்றி பற்றி என்ன அருமையாக எடுத்து சொல்லி இருக்கீங்க.


கோபி, கொஞ்சம் பிஸியாக இருந்ததால் தொடர்ந்து வரமுடியாமல் போச்சு.

உங்களுக்கும், உங்கள் தோழர் லாரன்ஸுக்கும் வாழ்த்துக்கள். மேலும் பல பயனுள்ள பதிவுகளை போட வாழ்த்துக்கள்.

R.Gopi said...

//Jaleela said...
சர்.சி.வி ராமன் பற்றி பற்றி என்ன அருமையாக எடுத்து சொல்லி இருக்கீங்க.

கோபி, கொஞ்சம் பிஸியாக இருந்ததால் தொடர்ந்து வரமுடியாமல் போச்சு.

உங்களுக்கும், உங்கள் தோழர் லாரன்ஸுக்கும் வாழ்த்துக்கள். மேலும் பல பயனுள்ள பதிவுகளை போட வாழ்த்துக்கள்.//

*******

வாங்க ஜலீலா மேடம்...

கண்டிப்பாக.... தோழமைகளின் ஆதரவும், ஊக்கமும் இருந்தால் நீங்கள் சொல்வது சாத்தியமே...

தோழமைக்கு நன்றி

sindhusubash said...

லேப்டாப் பண்ணின பிரச்சனையால கொஞ்ச நாளா வலைபக்கம் வரமுடியலை.

ரெண்டு பேரும் ஏதோ ஒரு முடிவோட தான் எழுதறீங்க போல இருக்கு...போற போக்கை பாத்தா நானும் புத்திசாலியாயிடுவேனோனு பயமா இருக்கு.

வாழ்த்துக்கள்.

R.Gopi said...

//sindhusubash said...
லேப்டாப் பண்ணின பிரச்சனையால கொஞ்ச நாளா வலைபக்கம் வரமுடியலை.

ரெண்டு பேரும் ஏதோ ஒரு முடிவோட தான் எழுதறீங்க போல இருக்கு...போற போக்கை பாத்தா நானும் புத்திசாலியாயிடுவேனோனு பயமா இருக்கு.

வாழ்த்துக்கள்.//

********

வாங்க சிந்துசுபாஷ்...

ஓஹோ... அதுதான் பிரச்சனையா? பரவாயில்லை... லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக தான் வந்து இருக்கிறீர்கள்...

எங்களை பற்றிய கமெண்ட் கொஞ்சம் ஓவரோ?? யாருக்கும் தெரியாத எதையும் நாங்கள் எழுதவில்லையே..

தெரிந்த நல்ல விஷயங்களை தோழமைகளுடன் பகிருகிறோம்... அவ்வளவுதான்...

புத்திசாலி மறுபடி புத்திசாலி ஆக முடியுமா என்ன??

பனித்துளி சங்கர் said...

அருமையான சிந்தனை !

மீண்டும் வருவான் பனித்துளி

R.Gopi said...

// ♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
அருமையான சிந்தனை !

மீண்டும் வருவான் பனித்துளி//

-********

நன்றி மீண்டும் வருக பனித்துளி சங்கர்

தோழி said...

நல்லா இருக்கு தொடருங்க...

R.Gopi said...

//தோழி said...
நல்லா இருக்கு தொடருங்க...//

*******

வருகை தந்து, பதிவை படித்து வாழ்த்திய தோழமைக்கு மிக்க நன்றி...

அடுத்த பகுதி ஓரிரு நாளில் பதிவேறும்...

சொல்லச் சொல்ல said...

நல்ல Research work பண்ணி மிக சுவாரஸ்யமாகக் கூறியுள்ளீர்கள். நன்றி. லாரென்ஸ்/கோபி

R.Gopi said...

//சொல்லச் சொல்ல said...
நல்ல Research work பண்ணி மிக சுவாரஸ்யமாகக் கூறியுள்ளீர்கள். நன்றி. லாரென்ஸ்/கோபி//

*****

வருகை தந்து, பதிவை படித்து, வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி சொல்ல சொல்ல....