கோலிவுட் - டாப்-20 நடிகர்கள்


பிஹைண்ட்வுட்ஸ்.காம் தற்போதைய கோலிவுட் டாப்-20 நடிகர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது...

வழக்கம் போல், சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் “எந்திரன்” படத்தின் உலகளாவிய மெகா வெற்றியை தொடர்ந்து முதல் இடத்தில் இருக்கிறார்...

முன்பு டாப்-10ல் இடம் பெற்றிருந்த சரத்குமார், விஜயகாந்த் போன்றோர் டாப்-20ல் இடம் இழந்துள்ளனர்...

தொடர்ந்து வெற்றிகளை குவித்து வரும் நடிகர் சூர்யா 3ம் இடத்தில் உள்ளார்...
அந்த முழு பட்டியலை நீங்களே பாருங்களேன்...

1. RAJINI

Having just celebrated his 60th birthday, the Superstar is in no mood to slow down. His latest movie Endhiran is a testimony to this fact. With such an abundance of energy and dedication shown in the movie, he is no wonder, the toast of the crowd. Being a veteran in Kollywood, he is being looked at, by many, as an idol. Needless to say that his global image got bigger with Endhiran! What would be his next movie? Now that’s a million dollar question.


2. KAMAL

A man with ten faces, quite literally, when you count the different aspects of filmmaking he knows and contributes too. If Dasavatharam showed him in ten different avatars, his other movies project his various other talents too. A dream for every producer, Kamal's latest movie Manmadhan Ambu will please his audiences to no end. Least to say that his movies maintain a buzz right from the time it is announced.

3. SURIYA

Suriya stunned audiences when he transformed himself from playing a hunchback in Perazhagan to an angry man with a six pack in Ghajini. Having worked with many of the top directors in Kollywood, Suriya has carved a niche for himself. Being one of the crowd's favourite also helps him from being cheered by the audience regardless of age. His first Bollywood movie Rattha Charithiram is another movie which has proved his weight as an actor. 7aam Arivu? Wait, wait....

4. VIJAY

Arguably one of the best dancers among the current actors of the industry, Vijay's achievements are not alien to any. Continuing to enthrall audiences with his dancing skills and histrionics, he is liked my people from all walks of life and professions. He has the composure to take everything in his own stride. Though Kavalan is yet to be released, his fans are already talking about his next movie Velayudham. Hmm...

5. AJITH

An actor and an avid racer, Ajith is regarded by his fans as a calm person who is ready to please them through his movies. His movie Billa was a talking point in Kollywood for a while and Ajith showed his other face by helping with the screenplay of his movie Asal. With Mankatha, his 50th movie, in the news every day, his fans cannot wait to see their favourite hero on the silver screen.

6. VIKRAM

Another actor who likes to experiment with his looks and style if the movie demands, Vikram is another actor who can draw audience by sheer screen presence. With movies like Pithamagan, Anniyan and the more recent Raavanan proving his acting skills, it is little wonder that he got a lot of International recognition this year. With his next movie in production stages, Vikram would be excited to present himself before his fans.

7. DHANUSH

Dhanush is known to people as yet another actor who can dance effortlessly. Having acted in a serious movie like Polladhavan, he changed track and made the crowd go in splits with movies like Yaaradi Nee Mohini and Padikathavan. Uthama Puthiran showed his crowd-pleasing skills yet again. With his next movie Aadukalam making people notice with its music, his fans cannot wait to see what the Vetrimaran-Dhanush combination has to offer this time around.

8. KARTHI

He makes people go berserk when he says "Yenna mama sowkiyama", on stage. Karthi is fast emerging as one of people's favourites by acting in movies like Paiyaa and Naan Mahaan Alla. Having had a good 2010, Karthi must be banking heavily on his forthcoming movie Siruthai.

9. STR

If STR was seen on the silver screen mostly as an angry youngster or as an action hero, VTV changed this completely. Karthik and Jesse scripted a new chapter of love in Kollywood and showcased STR as a subtle actor. Busy ever since, he would be thrilled with his forthcoming releases Vaanam, Poda Podi and Vettai Mannan.

10. ARYA

He stunned people with his Agori avatar in Naan Kadavul. He made them feel for him in Madarapattinam and he had them in total splits in Boss engira Baskaran. Another of today's actors who is keen on showing variety, he is the toast of the younger generation with his cool looks in the latest movie Chikku Bukku. With Avan Ivan, directed by Bala, in the pipeline, Arya would be expecting to deliver what his fans expect.

11. JEYAM RAVI

Having acted mostly in romantic movies, Jeyam Ravi broke this image in the movie Peranmai, in which he acted as a tough NCC officer. Being touted as one of the many actors liked by family audiences, Jeyam Ravi's role in Thillalangadi is being praised by many. With Prabhu Deva's Engeyum Kadhal and Ameer's Aadhi Bhagavan in the pipeline, Jeyam Ravi is expecting to have a power-packed 2011.

12. VISHAL

The Tall-Dark-Handsome hero, as he is called by his fans, has acted in memorable movies in the past. His acting in Theeradha Vilaiyattu Pillai was well received in 2010. Acting in director Bala's movie Avan Ivan should be a learning experience for this talented actor who is also busy with his next movie under Prabhu Deva's direction.

13. JIIVA

Jiiva belongs to the latest generation of actors who display a lot of variety in terms of movies they act in. If Ram, E and Katradhu Tamizh proved his ability to enact serious roles, SMS and other such movies showed glimpses of him being a mass-entertainer. Having been low-key for a while, Jiiva is raring to roar in Singam Puli and in Ko.

14. BHARATH

Bob Kaly of Boys became the cynosure of everyone's eyes when Kaadhal got released. Pattiyal, Veyil and other movies proved his ability to carry a role on his shoulders with ease. He would be eagerly awaiting his next movie Vaanam, where he shares screen with Simbhu.

15. MADHAVAN

He may have been in the industry for 14 years but Madhavan is still referred to, by many, as the chocolate-boy hero. He has shown a flair for acting in different roles and languages too. After a spine-chilling performance in Yaavarum Nalam, he is all sent to take you on a cruise ride in Manmadhan Ambu.

16. PRITHVIRAJ

With a distinct Tamil accent, Prithviraj is one of the few actors who have proved his mettle in Kollywood after acting predominantly in other languages. His performances in Mozhi, Abhiyum Naanum and the more recent Raavanan are still appreciated by many. He is out to break his niche image with the upcoming multi-lingual movie Urumi, directed by Santhosh Shivan.

17. SHIVA

One of the budding talents in Tamil cinema, Shiva’s unique dialogue delivery is not only liked but imitated by many. This RJ-turned-actor became a solo hero in Thamizh Padam and gave us 'Va' in 2010. It is safe to say that he has his own audience who like his style of acting.

18. JAI

Jai is another actor with a unique dialogue delivery style. His role as Azhagar in the movie Subramaniapuram is still sympathized by many. Also doing the rounds is his performance in Kanimozhi. He would be eagerly expecting his next movie which include Vettai Mannan alongside Simbhu.

19. AADHI

He was hated by many for his 'junglee' character in Mirugam. But Aadhi impressed everyone with an underplayed performance of an investigating police officer in Eeram. The talented actor showed his other face in the recently released Ayyanar and would be banking heavily on his movie with Vasantha Balan which has been titled 'Aravaan'.

20. NAREN

Director Mysskin revealed that Naren is one of his favourite actors just for his dedication. Having made a grand debut in Tamil with Chithiram Pesuthadi, Naren created ripples with a strong performance in Anjathey. Fans will be eagerly waiting for his releases in 2011, which include Pookadai Ravi and Thambikottai.

நன்றி : BEHINDWOODS.COM

"மைனா" திரைப்பட இயக்குனருடன் ஒரு சந்திப்பு

துபாய் கோழி!!!.... கொக்கரக்கோ என கூவி பொழுது இனிமையாக விடிந்தது. இன்று ஒரு “மைனாவும் சேர்ந்து கூவியபோது அந்த கூவலில் ஒரு இனிமை சேர்ந்திருந்தது....

தமிழகமே பாராட்டும் ஒரு திரைப்பட இயக்குனரை சந்திக்க நாங்கள் இருவரும் தயாராகி, மகிழ்வுடன் அங்கு சென்றோம். அங்கு என்றால், எங்கு? துபாய் நகரின் உயர்மட்ட குடியிருப்புகளை தன்னடக்கிய ஜூமைரா எனும் ஏரியா.... அங்கு அமைந்துள்ள ஒரு உயர்ரக சொகுசு தங்கும் விடுதி. மதினத் ஜூமைரா என அழைக்கப்படும் மீனா அல் சலாம் எனும் 5 நட்சத்திர ஹோட்டல்.

வரவேற்பறையை தாண்டியதும் இருந்த அறையில், கிறிஸ்துமஸ் அலங்காரங்கள் அழகுக்கு அணி சேர்க்க, அயல் நாட்டு அரைக்கால் டிரவுசர்கள் அங்குமிங்கும் நிறைந்திருக்க அந்த லாபி பகுதி இனிமையாக இருந்தது. இதோ நண்பர் வந்து விட்டார். கை குலுக்கி, சம்பிரதாயங்கள் முடிய, ஹப்பா இந்த பளபளப்பும், ஆடம்பரமும் கொஞ்சம் மூச்சு முட்டுவது போல் இருக்கிறது, வாருங்களேன் வெளிக்காற்றை சற்றே சுதந்திரமாக சுவாசிப்போம் என அன்புடன் அழைத்தார்.....

யதார்த்தமும் எளிமையும் ஒருசேர சுவாசிக்கும் தமிழ் திரையுலகின் வெற்றி இயக்குனர். திரு.பிரபு சாலமன் அவர்கள். அவரது சமீபத்திய மைனா திரைக் காவியம் பாமரனையும் படைப்பாளிகளையும் ஒரு சேர இணைத்து பாராட்ட சொல்லி விட்டதே. பாக்ஸ் ஆபிசிலும் இமாலய வெற்றி பெற்றுள்ளது.

நேற்றைய துபாய் சர்வதேச திரைப்பட விழாவில் (DIFF) ”மைனா படம் இரவு திரையிடும் மகத்தான நிகழ்வு வெற்றிகரமாக அரங்கேறியது. சர்வதேச அளவில் படைப்பாளிகள் பாராட்டி, கேள்வி நேரத்தின் போது இன்னும் பாராட்டு மழையில் திரு.பிரபு சாலமன் அவர்களை நனைத்தனர். என்ன செய்வது வானம் பொத்து கொண்டு ஊத்தும் சென்னையில் இருந்து வந்தவருக்கு துபாய் மண்ணில் பாராட்டு மழை தானே மணி மகுடம். நேற்றைய விழாவின் களைப்போ அலுப்போ இல்லாது, சகஜமாக ஊர் சுற்றி பார்க்க நம்முடன் கிளம்பி விட்டார்....

பேச்சினூடே, தமிழ்ப்படங்கள் எதார்த்த படைப்புகளை படைக்க ஆயத்தமானது கண்டு தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்... “மைனா போன்ற யதார்த்தமான சிறிய பட்ஜெட் படங்களை நம் மக்கள் இரு கரம் நீட்டி வரவேற்று, அமோக ஆதரவளிப்பது இது போன்று பல படைப்புகள் வெளிவர வழிவகுக்கும் என்று தெரிவித்தார்.... பெரிய பட்ஜெட் படங்களின் ஜிகினா தனங்கள் எடுபட்டாலும், நெகிழ்வான நிகழ்வுகளை உள்ளடக்கிய சிறிய பட்ஜெட்டில் தயாராகும் யதார்த்த படங்களே காலம் கடந்து நிற்கும் என்றும் கூறினார்...

சாலையில் வண்டி வழுக்கி கொண்டு ஓட, எங்கள் அரட்டை வண்டி பல தளங்களை தொட்டு தொட்டு ஓடுகிறது. துபாயின் அசுர வளர்ச்சி, அரசியல் எல்லாம் எங்கள் சிலபஸில் சிக்கிக் கொண்ட சில சில்வண்டுகள். உலகின் மிக உயரமான (தற்போதைக்கு) ”புர்ஜ் கலீஃபா கட்டிடம் பார்க்க செல்கிறோம், அங்கு வாழ்வின் ஒரு ஆதாரமான தத்துவம் எங்களுக்கு புரிகிறது.”புர்ஜ் கலீஃபா”வின் கீழே நின்று எவ்வளவு உயரம் என பார்ப்பதற்கு கழுத்தை பின்னோக்கி தள்ளி, கஷ்டப்பட்டுத்தான் பார்க்க வேண்டும். அதிலும் முழு கட்டிடத்தையும் கேமராவில் அடக்க… உருண்டு புரண்டுதான் எழ வேண்டும். இதில் வாழ்வியல் தத்துவம் என்னவென்றால் ’வாழ்வில் நாம் உயரங்களை காண இது போல் நிறைய உருண்டு புரண்டு தான் எழ வேண்டும்’. ஃபோட்டா பிடிக்க போன இடத்தில் பிடித்த தத்துவம் எப்பூடி…?.

பேச்சு அவரது ”மைனா திரைப்படத்தின் பக்கம் திரும்ப, ஒரு திரைப்படத்தின் வெற்றி இரண்டு சக்கரங்களில் இருக்கிறது. ஒன்று கண்டெண்ட் இன்னொன்று ஃபீல் என சுருக்கமாய் நச்சென்று தெளிவாக சொல்கிறார். தான் இன்று நடந்து வரும் இந்த யதார்த்த சினிமாவின் பாதை அன்னக்கிளி, பதினாறு வயதினிலே எனும் காலம் தொட்டு இன்னும் இன்றும் தொடர்கிறது காதல், பருத்தி வீரன் எனும் கலைப்படைப்புகளாய் என்கிறார். மைனாவை பொறுத்தவரை தியேட்டரில் திருவிழா எனும் இலக்கை நோக்கித்தான் பயணித்தேன், அதை அடைந்தேன் என நினைவுகளுடன் நெகிழ்கிறார்.

மைனா திரைப்படத்தின் வெற்றி அனைவரின் எதிர்பார்ப்புக்களையும் மேலும் தூண்டி விட்டிருக்கிறது, எனவே அடுத்த பட சிந்தனைகள் கொஞ்சம் படபடப்பாய் இருப்பதை தவிர்க்க முடியவில்லை என்கிறார். இன்னும் எனது அடுத்த படத்தின் உணர்வுகளில் பயணித்து கொண்டிருக்கிறேன், மிக விரைவில் தீர்மானம் செய்து அறிவிக்க இருக்கிறேன் என பொறுப்புணர்ச்சியுடன் பேசுகிறார்.

பளபளக்கும் துபாய் சாலைகள், சட்ட திட்டம், வாழ்க்கை முறை என ஆழமான கேள்விகள் கேட்டு, நம் தாயக மக்களை நினைவு கூர்ந்து இப்படி சொன்னார். நாளைய தேவை. என பணத்தேவைக்காக இன்றைய வாழ்வை தொலைக்கிறார்களே.

யேசு கிறிஸ்து சொல்வாரே ‘வானத்து பறவைகளை பாருங்கள், அவை விதைப்பதும் இல்லை, அறுப்பதும் இல்லை. ஆயினும் வானகத்து தந்தை அவற்றை போஷிப்பதில்லையா. எதை உண்போம் எதை குடிப்போம் என கவலை கொள்ளாதீர் என சொல்வதே மிக உயர்ந்த லட்சியம். உலகே அதை பின்பற்றினால் நல்லதே என கருத்து சொல்லும் போது அவரது தத்துவ சிந்தனையும், சமூக அக்கறையும் மின்னி பளிச்சிடுகிறது.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் எனும் மாமேதையையும் தமிழ் சினிமாவுக்கு அவர் ஆற்றிய பெரும் பங்கையும் அன்புடன் நினைவு கூர்ந்து, நாம் அவருக்கு தர வேண்டிய மரியாதை தராமல், வெறுமே பெசண்ட் நகரில் உள்ள மயானத்தில், மின்சார எரியூட்டியதை நினைவு கூர்ந்து வருத்தப் பட்டார். குறைந்த பட்சம் அவருக்கு ஒரு நினைவிடமாவது நிறுவப்பட வேண்டும் என்ற அவரது கருத்தில் மறுக்க முடியாத உண்மை பளிச்சிட்டது.

மிகப்பெரிய 5 நட்சத்திர ஹோட்டலில் இரண்டு, மூன்று நாட்கள் உணவருந்தி இருந்தாலும், நம்மூர் கைப்பக்குவத்தில் உணவு கிடைக்குமா என்று கேட்ட போது, அவரை நம்மூர் அஞ்சப்பர் உணவகத்திற்கு இட்டு சென்றோம்...மணக்க மணக்க தமிழக செட்டி நாடு உணவு பரிமாறப்பட, ஒரு சிறிய பிரார்த்தனை செய்து விட்டு ஒரு கை பார்த்தோம் சாப்பாட்டில் ஒரு கை பார்ப்பது தானே நல்லது, இரண்டு கையும் பார்த்தால் தண்ணீர் குடிக்க எச்சில் கையில் அல்லவா டம்ளர் ஏந்த வேண்டியிருக்கும்.

ஒரு சமூக அக்கறை உள்ள, நேர்மையான எளிமையான படைப்பாளியை சந்தித்து, உரையாடி, உறவாடியதில் மகிழ்ந்து மென்மேலும் அவர் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்து விடைபெற்றோம்.

அந்த ஹோட்டலின் வாசலுக்கருகில் நாளைய விடியலுக்கு கூவத் தயாராக ஒரு கோழி காத்திருந்தது

அரிமா…. அரிமா… நீயோ…. ஆயிரம் அரிமா!!!

டிசம்பர் 12 2010 அன்று குளோபல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்த நாள்.

வழக்கமாக!!! பிறந்த நாளை சாக்கு வைத்து கொண்டு நமக்கு நாமே திட்டம் போல், தனக்கு தானே போஸ்டர் அடித்து எல்லா சுவரையும் அசிங்கம் செய்யும் மனிதர்களுக்கு இடையில், கொண்டாட்டங்களை தவிர்த்து அமைதியில் தன்னை அமிழ்த்தி, தனிமையில் தன்னை ஆராயும் ஒரு நிகழ்வாய் இதை கொண்டாடும் மகா மனிதன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த.

அங்கனம் உயர்ந்த பண்புகளை தன்னகத்தே கொண்ட நல்ல மனிதனின் பிறந்த நாளில் நாம் அவருக்கு அருமையான பூங்கொத்து ஒன்றினை பரிசளிப்போம்.... அழகான வார்த்தைகளை கோர்த்து மாலையாக்கி, இதோ ஒரு வாழ்த்துப்பா, அவரை விரும்பும் தங்கள் அனைவரின் மேலான பார்வைக்கு இதோ:

ரஜினி எனும் மூன்றெழுத்து காந்தம்

வெற்றி, நிறைவு, மகான் என மலர்ந்து

வாழ்வின் அர்த்தமாக மின்னுதே என்னே ஒரு பாந்தம்.


மலராத மலரும் உண்டா இவ்வுலகில்

இருந்தால் அது கூட, மலருமே உன் சிரிப்பில்

மலர்ந்த மலரின் மணத்தில், உயிர்ப்பில்

கண்ட அனைவரும் நிறைவோமே சிலிர்ப்பில்


வெள்ளி வானில் சில பல மின்மினி
மின்ன பாக்கும் பல சில இனி இனி

தோல்வி என்பதே இல்லை உனக்கினி


ஆறிலிருந்து அறுபது வரை உன் மேல் விருப்பம்
அதுவே திரைவாழ்வில் நீ கண்ட மாபெரும் திருப்பம்


உன் நிறமோ சிறிது கருமை - ஆனால்

கருமைக்கே நீ சேர்த்தாய் பெருமை

இதை கண்டோர்க்கெல்லாம் பொறாமை

அவர்களுக்கு எங்கே தெரியும் உன் அருமை


எல்லோர்க்கும் உன் செயல் மேல் நம்பிக்கை

நீ விதைத்தாய் அவர்தம் வாழ்வில் தன்னம்பிக்கை


நீ, மன்னர்களும் மண்டியிடும் ராஜாதி ராஜா
சேரனும், சோழனும் உள்ளடங்கிய -பாண்டியன்

உன் படம் படையெடுக்கும் போது

பட்டையை கிளப்பும் வசூல்... நல்ல மகசூல்.

உன் படம் கண்டவர்கள் சொன்னது தூள், தூள்...

முந்தைய வசூல் சாதனைகள் ஆனதே தூள், தூள்


நீ, ரசிகர்கள் கூட்டத்தை நல்வழிப்படுத்தி

முன்னின்று அழைத்து செல்லும் தளபதி

உலகிற்கு தர்மத்தை போதித்த தர்மதுரை


உழைப்பின் அருமை பெருமையை
ஓங்கி, உரக்க சொல்லிய உழைப்பாளி

வள்ளி" என்ற நல்ல படத்தின் படைப்பாளி


தர்மத்தை போதித்து அதர்மத்தை விரட்டியவன்

அதனாலேயே உன் பெயர் தர்மத்தின் தலைவன்


நீ, தரணிக்கே ஒரே மகன்
இந்நாட்டின் தலைமகன் - ஆயினும்

நான் மகான் அல்ல, சாமான்யன் தான்

என அடக்கத்துடன் சொல்லிய தங்க மகன்


நீ சொல்லி சூறாவளியாய் அடித்த படம் பாட்சா

உன்னிடம் எப்போதும் பலிக்காது மற்றவர்கள் பாச்சா


உன் அவதாரத்தின் ஒரு பெயரோ வீரா
-
ஆனாலும் நிஜத்தில் நீயோ ஒரு சமாதான புறா


அகவை அறுபதை கடந்த "மாவீரன் நீ
ஆயினும்...பாசம் உள்ள புனிதன் நீ

மீசை வைத்த குழந்தை நீ


சுருங்கி கிடந்த தமிழ் சினிமாவையும்

அதன் சுருண்டு கிடந்த வியாபாரத்தையும்

எந்திரன் என்ற படத்தின் மூலம் மீண்டும்

அகண்டு விரிய செய்த அற்புத மனிதன் நீ


ஆண்டுகள் பல ஆனாலும், வயது சில போனாலும்
,
இன்னும் உன் இளமை ஊஞ்சலாடுகிறது
.

தேனையும், சர்க்கரையையும் உண்டால்தான் இனிக்கும்

ஆனால், உன்னையோ நினைத்தாலே இனிக்கும்


நீ பாசத்தின் பாவலன், ஊர்காவலன்

அனைவரும் விரும்பும் "ந‌ல்ல‌வ‌னுக்கு ந‌ல்ல‌வன்"


அன்பான எஜமானுக்கு ஒரு உண்மையான வேலைக்காரன்
யுத்தத்தில் கூட தர்மம் கண்டது - உன்தர்ம யுத்தம்


அரிதாரமின்றி அவனியில் உலா வரும் அதிசய பிறவி நீ
எளியோருக்கு உதவிட இறைவன் படைத்த அற்புத கருவி நீ


தேவலோக இந்திரனும் கண்டு களித்தது உன் எந்திரனே
உன் புகழுக்கு தடை போட இனி இல்லை ஒரு அரணே


எந்திரன் என்ற ஒரு மாபெரும் சித்திரம்

உலகில் படைத்ததே பல பல சரித்திரம்


அனைவரும் தவமிருக்கும் ஆட்சி கட்டில்

உனக்கோ எப்போதுமே அது பேச்சு மட்டில்


ஆட்சியை தேடி அனைவரும், அனுதினமும் அலைய

வெண்தாடியோடு நீ அமைதியை தேடி இமயம் ஓடி ஒளிய


பிறந்த நாள் வாழ்த்து என நான் தொடங்க

வார்த்தைகள் தேடி வந்து, சேர்ந்து ஆனது கவிதை

அதுவும் இங்கே நிகழ்ந்தது தான் விந்தை


ஓடி மறைந்து ஒளிந்தாலும்
,
வேண்டாம் என்று ஒதுங்கினாலும்

உன்னை விடுவதில்லை நாம் இனி

வேண்டாமென சொல்லாதே நீ இனி


உனக்கே சமர்ப்பணம் இந்த சாமான்யனின் பா

இந்த அகிலமே காத்திருக்கு, அரியணை ஏற வா

"தல" சிறப்பு அதிரடி கேள்வி பதில்கள்

”தல” அவர்கள் வாழ்வின் முக்கிய கடமையான நமக்கு நாமே திட்டம் என்ற வழியில், தனக்கு தானே கேள்விகள் எழுப்பி, அதற்கு பதில் சொல்லும் “தல சிறப்பு அதிரடி கேள்வி-பதில்கள்” என்ற பகுதியில் எழுதியுள்ள லேட்டஸ்ட் “சிறப்பு கேள்வி-பதில்கள்” உங்கள் பார்வைக்கு.....

கேள்வி : ஜெ.ஜெ. உண்ணாவிரதம் இருந்தால்?
பதில் : உண்டு கொழுத்தவர்கள், உடல் இளைக்க இது ஒரு வழி. தேர்தலுக்காக போடும் நாடகத்தின் புதுமொழி.

கேள்வி : வை.கோ?
பதில் : அவர் பொய்க்கோ ஆகி வெகு நாட்கள் ஆகிவிட்டது. அவரை நம் மக்கள் போய்க்கோ என்று சொல்லும் நாள் வெகுதூரம் இல்லை.

கேள்வி : பகுத்தறிவு??
பதில் : அறிவுரைகளின் முதன்மை வார்த்தை. நாம் அடுத்தவரை பின்பற்ற சொல்வது. சொல்பவர்களாகிய நாங்கள் எப்போதுமே பின்பற்றாதது.

கேள்வி : சமீபத்தில் கிடைத்ததில் பிடித்தது?

பதில் : "பகுத்தறிவு பகலவன்" என்ற பட்டம்.


கேள்வி : மு.க.முத்து

பதில் : அகில உலக நாயகனாக வலம் வந்திருக்க வேண்டிய எங்கள் குடும்பத்தின் சொத்து....


கேள்வி : பிடித்த நிறம்

பதில் : மஞ்சள் நிறம் மட்டுமே அல்ல

கேள்வி : அடிக்கடி நினைவில் வந்து இம்சிக்கும் ஒரு வார்த்தை?
பதில் : ஐயோ, கொல்ராங்கோ, அய்யய்யோ கொல பண்றாங்கோ.........


கேள்வி : பிடிக்காத ஒரே நபர்

பதில் : ஜெ.ஜெ. என்று என் வாயால் சொல்ல மாட்டேன்.....

கேள்வி : எரிச்சலூட்டும் வார்த்தை
பதில் : மைனாரிட்டி அரசு.

கேள்வி : ஆற்காடு வீராசாமி?
பதில் : தொட்டால் ஷாக் அடிக்கமாட்டார். இடது புறம் சென்று பேசினால், பதிலளிக்க மாட்டார். மொத்தத்தில் நல்லவர். கழகத்தில் ஒரு மூத்தவர்.

கேள்வி : டி.ஆர்.பாலு?
பதில் : வழிப்போக்கர்களுக்கு வழிகாட்டி, பாலங்களின் நாயகன். பல கப்பல்களுக்கு சொந்தக்காரர் (எனக்கு கப்பம் கட்டியவர்களில் முதலிடம் இவருக்கு).

கேள்வி : அன்பழகன்?
பதில் : எனக்கு பின் என் இடம் இல்லை என்றாலும், என் இதயத்தில் அவருக்கு நிச்சயம் இடம் உண்டு (இல்லை என்றால், என் இடத்தையே கேட்டு விடுவார்).

கேள்வி : டி.ராஜேந்தர்??
பதில் : ஓயாமல் அடுக்குமொழி பேசி அடுத்தவரை இம்சிப்பவர். இப்போது நம்மை பார்த்து துடுக்குமொழியும் பேசுகிறார்... மிகப்பெரிய உடம்புக்கு சொந்தக்காரர். கூடவே, மிக சிறிய மனசுக்கும்......இந்த வயதிலும் திரையில் குத்தாட்டம் போடுவதில் வல்லவர்...இன்னமும் முதன்மை நாயகனாக நடிப்பேன் என்று சொல்லி அனைவரையும் எல்லோரையும் பயமுறுத்துபவர்.


கேள்வி : விஜயகாந்த்??
பதில் : அரசியலில் அரிச்சுவடி படிக்க வந்துள்ள குழந்தை. இருப்பினும் அதனிடம் இருக்கு நிறைய அகந்தை. நேற்றைய மழையில் முளைத்த காளான்... என்றும் பிறர் சொல் கேளான்....

கேள்வி : கையூட்டு என்றால்??
பதில் : கையூட்டு என்றால் என்ன?? என் தாய் என் சிறு வயதில் என் கையில் வைத்து ஊட்டிய சோறுதானே??

கேள்வி : தமிழ்??
பதில் : தாய்மொழியாம் தமிழ் என் மூச்சு, தமிழ் என் பேச்சு, தமிழ் என் வாட்சு.......

கேள்வி ; ஆங்கிலம்??
பதில் : வாணிபம் செய்ய புகுந்த அன்னியரின் பகட்டு மொழி.... நாம் எப்போதும் புறக்கணிக்க வேண்டிய ஒரு மொழி... ஆயினும், அவ்வப்போது நானும், எப்போதும் என் வீட்டு இளையவர்களும் கைகொள்ளும் ஒரு அற்புத மொழி...

கேள்வி : கருப்பு கண்ணாடி??
பதில் : அழகிற்கு அழகு சேர்ப்பதற்காக மட்டும் அல்ல என்று சொன்னால் நம்பவா போகிறீர்கள்.....

கேள்வி : பிடித்த சுவை?
பதில் : கருப்பட்டியும் அதனுடன் சேர்த்து சிறிதளவு தேனும்........

கேள்வி : பிடித்த உணவு?
பதில் : கேப்ப களி மற்றும் குறு மிளகாயுடன் சேர்த்து சில சிறிய வெங்காயங்கள். முன்பு, நிறைய தின்றாகி விட்டது. இப்போது தின்று சிறிது நாளாகி விட்டது. விரைவில் கிடைக்கும் என்று குறுங்கிளி ஒன்று காதில் சொல்லி விட்டு செல்கிறது........

கேள்வி : கலைஞர் டி.வி??
பதில் : உலக தொலைக்காட்சி வரிசையில் முதலிடம். உலக தமிழர்களின் தேவை, அதற்கு நாங்கள் செய்யும் சேவை. ஆஹா.... இந்த சேனலை பார்க்கத்தான் உலகிலுள்ள அனைத்து தமிழர்களும் காத்திருக்கின்றனர்... உலகின் பல கோடி தமிழர்கள் இலவசமாக மகிழ்விக்கும் ஒரு புதிய முயற்சி தான் இந்த கலைஞர் டி.வி... இந்த சேனல் யாருடையதாக இருந்தாலும், அவர்களின் நல்ல உள்ளத்திற்காக, அந்த சேவை செய்யும் மனப்பான்மைக்காக அவர்களை வாழ்த்துகிறேன்...


கேள்வி : ஜெயா டி.வி??

பதில் : அப்படி என்றால் என்ன?? புதியதாக வந்துள்ள ஒரு டி.வி.மாடலா?? இது வரை நான் கேள்விப்படவில்லை.....

கேள்வி : கடவுள் பக்தி??
பதில் : நான் இதுவரை நீங்கள் சொல்பவரை கண்ணால் கண்டதில்லை.... காதால் கேள்விப்பட்டதும் இல்லை... ஆனால், என் மனைவி மற்றும் குடும்பத்தாரிடம் எப்போதும் நீக்கமற நிறைந்திருப்பது....

கேள்வி : பிரச்சனை??
பதில் : கோயில்களில் என் வீட்டார் எனக்காக, என் பெயரில் செய்த அர்ச்சனை (இது வெளியில் தெரிந்தால் பிரச்சனை).

கேள்வி : பிடித்த பாடல்??
பதில் : சர்க்கர இனிக்கிற சக்கர, இதில் எறும்புக்கு என்ன அக்கறை??

கேள்வி : உங்கள் குரு??
பதில் : என்னை என் இதயத்தில் தாங்கி பிடித்த அறிஞர் அண்ணா....

கேள்வி : தேர்தல் கூட்டணி.
பதில் : இதயத்தில் இடமளித்தவர்களுக்கு தொகுதிகளிலும் கொஞ்சமாக இடமளிக்கும் ஒரு விளையாட்டு.

கேள்வி : இலவச கலர் டி.வி??
பதில் : மக்களை மகிழ்விக்கும்... ஆனால், சேனல்கள் பார்க்க சேர்த்து தனியே கட்டணம் வாங்கி விடுவோம்.

கேள்வி : ஒரு ரூபாய் அரிசி??
பதில் : ஒரு வேளை சாப்பிட்டவர்கள், இனி மூணு வேளையும் வயிறு முட்ட சாப்பிட நான் செய்த யோசனை.... (இந்த திட்டம் மட்டும் வராமல் இருந்திருந்தால் நான் மத்திய அரசை எதிர்த்து காலை டிஃபன் முடித்து விட்டு, உண்ணாவிரதம் இருந்திருப்பேன்).

கேள்வி : ஜல்லிக்கட்டு??
பதில் : வீரமிகு கட்டிளம் காளையர்கள், பருவ சிட்டுகளை, கட்டழகு கன்னியர்களை தன் வீரதீர செயல்கள் மூலம் தன் வசம் ஈர்க்க உதவும் ஒரு அற்புதமான விளையாட்டு....

கேள்வி : தொகுதி பங்கீடு??
பதில் : அதிகம் ஆசைப்படுபவர்களிடம், அதிக ஆசை ஆபத்து என்பதை வலியுறுத்தி, சொற்பமாக கொடுக்கப்படும் ஒரு விஷயம்... அதிலும் கண்டோம் பேரம் பேசும் சில அற்பம்....

கேள்வி : உங்கள் தேர்தல் வாக்குறுதிகள்??
பதில் : தேன் தடவிய கசப்பு மருந்து. மருந்து வேலை செய்வதற்குள் நாங்கள் ஆட்சி கட்டிலில் அமர்ந்து விடுவோம்.

கேள்வி : தமிழக மக்கள்??
பதில் : குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை, கூடி வாழ்ந்தால் கோடி நன்மை.

கேள்வி : இதை எதற்கு சொன்னீர்கள்??
பதில் : ஏதாவது சொல்லவேண்டுமே என்று சொன்னேன். மற்றபடி, அவர்கள் போடட்டும் எனக்கு ஓட்டு. இல்லை என்றால், அவர்களுக்கு நான் வைப்பேன் வேட்டு.

கேள்வி : மக்களிடம் பிடித்தது?
பதில் : அவர்களின் ஞாபக மறதி.

கேள்வி : பிடித்த வார்த்தை??
பதில் : நாளை நமதே, 234-ம் நமதே.....