வேலை தேடுவது பற்றியும் இண்டெர்வியூ சென்று வேலை கிடைத்ததும் அது பற்றி நண்பர்களிடத்தில் பேசச்சொல்லி முந்தைய பதிவில் பார்த்தோம். இனி என்ன?
வேலை கொடுக்கிற நிறுவனம் நமக்கு தரும் சம்பளத்தையும் சலுகையையும் நல்லதா தானே சொல்லும். இல்லாம, உங்க தகுதிக்கு நாங்க ரொம்ப குறையாத்தான் கொடுக்கிறோம் என்றா உண்மையை சொல்லுவார்கள்.
இதுதான் சம்பளம், இது தான் சலுகைகள் என கேட்கும் போது, கண்ணை கட்டி காட்டுல விட்ட மாதிரித்தான் இருக்கும். இந்த சந்தர்ப்பத்தில் தான் அதே ஊரில் இருக்கும் நமது நண்பரிடத்தில் சொல்லும் போது அவர் சொல்லுவார்.
தங்க இவ்வளவு, சாப்பிட இவ்வளவு, இந்த சம்பளம் போதுமா போதாதா எனும் போதனை எல்லாம் அவர் தான் சொல்ல வேண்டும். என்ன சில சமயம் ஆர்வ கோளாறினால் நண்பர் கொஞ்சம் அதிகம் பேசலாம். பொறுமையாய் சகித்துக் கொண்டால், கை மேல் பலன் உண்டு.
சரி, பணம் சம்பாதிக்கிறதுண்ணு முடிவு செஞ்சாச்சு, துபாய் பத்தியும் தெரிஞ்சாச்சு, நல்ல வேலையும் தேடியாச்சு. அப்புறம் என்ன என படிப்படியாய் நாம் சிந்திக்கும் போது, ஒரு முக்கியமான விசயம். இது தான் வெற்றியின் ரகசியம்.
அது என்ன !!!
இது சுலபம் இல்லை. சொந்த மண்ணை விட்டு வெளிநாடு வர, உடம்பில் மட்டும் அல்ல மனதிலும் மலை அளவு தில் வேண்டும். தீபாவளி சேல்ஸ்ல தள்ளுபடில வாங்கி மலை இல்ல மடுகுதான்னாலும் ஓகே.
புது நாடு, புது கலாச்சாரம், எல்லாத்துக்கும் நம்மை மாற்றிக் கொள்கிற போக்கு வேண்டும். முனைப்பும் வேண்டும். எந்த பிரச்சனை வந்தாலும் சமாளிக்க முடியும் எனும் தன்னம்பிக்கையும் தள்ளுபடி இல்லாமல் வேண்டும். இதுக்கெல்லாம் சிகரம் வைத்தால் போல பொறுப்புணர்ச்சி பொங்கிப் பெருகணும்.
இது இல்லன்னா, இத புரியலேன்னா ‘எங்க ஆத்துக்கார்ரும் கச்சேரிக்கு போறார்ங்க’ கதையா நானும் போயி கொட்டிக் கிடக்கிற காச அள்ளிட்டு வந்திடரேன்னு நினைச்சா கஷ்டம் ஆயிடுங்க.
சரி வந்து இறங்கினாலும் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் இன்னொரு விசயம் உண்டு.
வெளி நாடு வந்து இறங்கியதும் சில அடிப்படைகளை உணர்ந்தால் நல்லது என தோணுது. என்ன தான் இருந்தாலும் இது நம்ம ஊர் இல்ல. இந்த ஊர் சட்ட திட்டம், நடைமுறை, தட்ப வெப்பம், சுற்று சூழல் எல்லாம் பார்த்து நாம கொஞ்சம் அட்ஜெஸ்ட் பண்ணிக்கறது அவசியம்.
நாம எதுக்கு வந்திருக்கிறோம், காசு சேக்கறதுக்கு. அந்த நெனைப்ப விட்டு விடாம, கெட்டியா பிடிச்சுக்கணும்னு சொல்லலாம். அனாவசிய செலவை குறைக்கலாம். அடுத்தவனுக்காக வாழாம நமக்காக வாழலாம். அது என்ன அவனுக்காக, அடுத்தவனுக்காகன்னு கேட்டீங்கன்னா.
ராசா மாதிரி மெத்து மெத்துன்னு உக்கார்ரதுக்கு சோபா இங்க கிடைக்கும். வாங்கி போட்டா எவ்வளவு நாள் நாம இதுல உக்காருவோன்னு தெரியாது. ஊருக்கு போகும்போது தூக்கிட்டு போகவும் முடியாது. வேலை இல்ல போடான்னு கம்பெனிக்காரன் சொன்னா, சொன்ன 30 நாள்ல நம்ம வெளிய போகணும். இதென்ன நம்ம ஊரா, இங்க இருக்கணும்னா விசா என்கிற ஒரு விஷயம் வேணும்.
அதனால எந்த செலவு செய்தாலும் யோசிச்சு சரின்னு பட்ட பின்னால செய்யுறது நல்லதுன்னு தோணுது.
இதே கருத்தை ஒரு கவிஞர் சொல்கிறார். யார் அவர்.
"கவிஞர் காத்துவாயன்". அவர் இலக்கிய பங்களிப்பு நேயர்கள் அறிந்ததே. இலக்கிய வட்டங்களால் பின்னர் ‘எல்லாம் தெரிந்த ஏழுமலை எனச் செல்லமாய் அழைக்கப்பட்டவரும் அவரே. துபாய் பற்றிய கவிதையில் இப்படி சொல்கிறார்.
லெப்ட்ல பாரு மண்ணு
ரைட்டுல பாரு பொண்ணு
நடுவால நீ நின்னு
சாப்டா ஒரு பன்னு
யோசிச்சு தின்னு
தின்னுட்டு பணத்த எண்ணு
(முற்றும்..... கனத்த மனதுடன்....)
துபாய் பற்றிய தொடரில் வளைகுடா, அன்னிய தேசம் என்பதை தகவலாய் மட்டும் சொல்லாமல், ஒரு கதை போல, நகைச்சுவையாய் சொல்ல வேண்டும். முடிந்தால் உலக, தத்துவ, தார்மீக அடிப்படையிலான எங்கள் சிந்தனையும் இணைக்க விரும்பினோம். தங்கள் கருத்துக்களை அறியும் போது, நாங்கள் விரும்பியது நடந்தது என்றே தெரிகிறது. வெற்றி பெற்றுத்தந்த அனைத்து வாசக நெஞ்சங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.
இந்த தொடர் எழுதியது, "பூக்கள் பூத்துக் குலுங்கும் நந்தவனத்தில் தென்றலின் கை கோர்த்து நடந்து வந்தது" போல் ஒரு திருப்தி. ஒருமித்த கருத்துடைய நண்பர் குழுவோடு, சிலுசிலுவென ரயிலில் பயணம் போவது போல. கலகலப்பும் நகைச்சுவையுமாய், அவ்வப்போது தகவல்களோடு பேசி சிரித்த கும்மாளம். இந்த பகுதியோடு நிறைவு பெறுகிறது எனும் போது இறுகிய இதயத்துடன் இறுதி பகுதி எழுதுகிறோம்.
எழுதுகிறோம் எனும் வார்த்தையில் விநோதம் உள்ளது. இருவர் எப்படி ஒரு தொடர் எழுத முடியும். முடியும், நல்ல புரிதலும், சக விட்டு கொடுக்கும் மனப்பான்மையும், பரஸ்பர மதிப்பும், ஆழ்ந்த அன்பும், இருந்த்தால் இது சாத்தியமாயிற்று.
இந்த தொடரை எழுத உறுதுணையாய் இருந்த அத்தனை நெஞ்சங்களுக்கும் நன்றி கூறி, நிறைவு செய்கிறோம்.
நன்றி வணக்கம்........
(குறிப்பு : துபாய் பற்றிய மேலே முடிந்த தொடரில் "வாழ்க்கை" பற்றி நாங்கள் எழுதிய குறிப்புக்கள் பிடித்ததாய் சொன்னதால், முழுமையாய் "வாழ்க்கை" பற்றி விரிவாய் ஒரு தொடர் எழுத உத்தேசித்துள்ளோம் - ஆர்.கோபி / லாரன்ஸ்)
36 comments:
அடுத்த தொடருக்கு waiting
me the first............
//சொந்த மண்ணை விட்டு வெளிநாடு வர, உடம்பில் மட்டும் அல்ல மனதிலும் மலை அளவு தில் வேண்டும். //
சூப்பர்...
நல்லா எழுதி இருக்கீங்க... வாழ்த்துக்கள்.
ரொம்ப அழகா விரிவா அரபு நாடுகளை பத்தி சொல்லியிருக்கிங்க.
வேதனைகளும் சாதனைகளும் அனுபவம் மிகுந்த தொடர்.
//ஷாஜ் said...
அடுத்த தொடருக்கு waitinக்//
வாங்க ஷாஜ்...
அடுத்த தொடருக்கான பூர்வாங்க வேலைகள் ஏற்கனவே தொடங்கிவிட்டது... முதல் பகுதியை வெகு விரைவில் எதிர்பார்க்கலாம்...
//ஷாஜ் said...
me the first............//
*********
Yes Welcome Shaj...
You, the first....
ஏனோ தெரியலை,என்னால் துபாய் சூழலுக்கு ஒத்துப்போக முடியலை.
//சுசி said...
//சொந்த மண்ணை விட்டு வெளிநாடு வர, உடம்பில் மட்டும் அல்ல மனதிலும் மலை அளவு தில் வேண்டும். //
சூப்பர்...
நல்லா எழுதி இருக்கீங்க... வாழ்த்துக்கள்.//
**********
வாங்க சுசி...
தொடர் வருகை தந்து, உற்சாகப்படுத்துவதற்கு என் மனமார்ந்த நன்றி...
பாராட்டியதற்கு ஒரு ஸ்பெஷல் நன்றி...
//sindhusubash said...
ரொம்ப அழகா விரிவா அரபு நாடுகளை பத்தி சொல்லியிருக்கிங்க.
வேதனைகளும் சாதனைகளும் அனுபவம் மிகுந்த தொடர்.//
நன்றி சிந்துசுபாஷ்...
நல்ல தோழமைகள் தொடர்ந்து வருகை தந்து, பதிவை படித்து, நிறைகுறைகளை சொல்லும் போது, மகிச்சியாக இருக்கிறது...
"சோதனை"களை தாண்டினால்தான் மேடம் வாழ்வில் "சாதனை" படைக்க முடியும்... இது வரலாற்று உண்மை...
//வடுவூர் குமார் said...
ஏனோ தெரியலை,என்னால் துபாய் சூழலுக்கு ஒத்துப்போக முடியலை.//
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி வடுவூர்குமார்... நீங்கள் இங்கே வருகை தன்து, வேலை செய்து, பிடிக்கவில்லை என்று ஊர் திரும்பியவர் என்று நினைக்கிறேன்...
ஒவ்வொருவரின் மனநிலை ஒவ்வொரு மாதிரி இருக்கிறது...
நல்ல படைப்பு நமக்கு ஏன் இந்த மோகம் ..........
வாழ்கையை துளைத்து பணத்தை ..........
தேடுகிறோம்
//வெண்ணிற இரவுகள்....! said...
நல்ல படைப்பு நமக்கு ஏன் இந்த மோகம் ..........
வாழ்கையை துளைத்து பணத்தை ..........
தேடுகிறோம்//
*********
வாங்க வெண்ணிற இரவுகள்...
வருகை தந்து, கருத்து சொல்லி சிறப்பித்ததற்கு நன்றி...
உலகின் விடை தெரியா கேள்விகளில் இதுவும் ஒன்று...
கோபிஜி அண்ட் லாரன்ஸ் ஜி..
ஒரு நல்ல தொடர்.. பல விஷயங்களை அருமையாக தொட்டிருந்தீர்கள்..
உங்கள் அடுத்த தொடர் ஆரம்பத்திற்கு வாழ்த்துக்கள்..
அன்புடன்
ஈ ரா
//ஈ ரா said...
கோபிஜி அண்ட் லாரன்ஸ் ஜி..
ஒரு நல்ல தொடர்.. பல விஷயங்களை அருமையாக தொட்டிருந்தீர்கள்..
உங்கள் அடுத்த தொடர் ஆரம்பத்திற்கு வாழ்த்துக்கள்..
அன்புடன்
ஈ ரா//
***************
வருகைக்கும், வாழ்த்தியதற்கும் நன்றி ஈ.ரா.அவர்களே...
தொடர்ந்து வருகை தந்து, ஆதரவு தாருங்கள்...
//புது நாடு, புது கலாச்சாரம், எல்லாத்துக்கும் நம்மை மாற்றிக் கொள்கிற போக்கு வேண்டும். முனைப்பும் வேண்டும். எந்த பிரச்சனை வந்தாலும் சமாளிக்க முடியும் எனும் தன்னம்பிக்கையும் தள்ளுபடி இல்லாமல் வேண்டும். இதுக்கெல்லாம் சிகரம் வைத்தால் போல பொறுப்புணர்ச்சி பொங்கிப் பெருகணும்.//
திருமணம் ஆகி புருஷன் வீட்டுக்கு போகும் பெண்களுக்கு சொல்லும் அதே அறிவுரையை அழகா சொல்லிடிங்க...
இந்த தொடரில் நிறைய விசயகளை தெரிந்து கொண்டோம். நன்றிகள் உங்களுக்கு.
//Eswari said...
திருமணம் ஆகி புருஷன் வீட்டுக்கு போகும் பெண்களுக்கு சொல்லும் அதே அறிவுரையை அழகா சொல்லிடிங்க...//
நன்றி ஈஸ்வரி... வருகை தந்து, படித்து கருத்து சொன்னதற்கும்..
//Eswari said...
இந்த தொடரில் நிறைய விசயகளை தெரிந்து கொண்டோம். நன்றிகள் உங்களுக்கு.//
மனம் விட்டு பாராட்டியதற்கு ரொம்ப நன்றி ஈஸ்வரி..
அடுத்து வரவிருக்கும் "வாழ்க்கை" தொடரிலும் இணையுங்கள்...
//ஊருக்கு போகும்போது தூக்கிட்டு போகவும் முடியாது.//
இது தாங்க பெரிய கடி..இங்கே நான் பொருட்கள் வாங்க முடியும் என்றாலும் அதை வாங்கி திரும்ப நம்ம ஊருக்கு எடுத்துட்டு போக முடியாது என்றே பல பொருட்கள் வாங்கவில்லை.
சிறப்பான ஒரு தொடர் எழுதிட்டீங்க.. துபாய் வருவதென்றால் இந்த இடுகைகளை படித்தால் ஓரளவு சிரமம் தவிர்க்கலாம் என்பது மறுக்கமுடியாத உண்மை.
வாழ்த்துக்கள்
//கிரி said...
//ஊருக்கு போகும்போது தூக்கிட்டு போகவும் முடியாது.//
இது தாங்க பெரிய கடி..இங்கே நான் பொருட்கள் வாங்க முடியும் என்றாலும் அதை வாங்கி திரும்ப நம்ம ஊருக்கு எடுத்துட்டு போக முடியாது என்றே பல பொருட்கள் வாங்கவில்லை.
சிறப்பான ஒரு தொடர் எழுதிட்டீங்க.. துபாய் வருவதென்றால் இந்த இடுகைகளை படித்தால் ஓரளவு சிரமம் தவிர்க்கலாம் என்பது மறுக்கமுடியாத உண்மை.
வாழ்த்துக்கள்//
************
வாங்க கிரி... இந்த சங்கடம் இங்க இருக்கற எல்லாருக்கும் இருக்கு... துபாய் வருகை தாருங்கள்....
அனுபவமும், அறிவுரைகளுமாக கலந்து நல்லா எழுதியிருக்கீங்க கோபி!!
//ஷஃபிக்ஸ்/Suffix said...
அனுபவமும், அறிவுரைகளுமாக கலந்து நல்லா எழுதியிருக்கீங்க கோபி!!//
***********
வாங்க ஷஃபிக்ஸ்....
வருகை தந்து, படித்து கருத்து சொல்லி, ஊக்கமளித்தமைக்கு நன்றி....
வரவிருக்கும் படைப்புகளையும் தொடர்ந்து படித்து கருத்து பகிருங்கள்...
கோபி,
நீங்களும்,லாரன்ஸும் எழுதிய”மத்திய கிழக்கு நாட்டு மோகம்” மிகவும் அருமை.
உங்களுக்கும்,உங்கள் நண்பருக்கும் முதலில் என் பாராட்டுக்கள்.
வாழ்க்கை தொடரை ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன்.
//அடுத்தவனுக்காக வாழாம,நமக்காக வாழலாம்.//
உண்மை, நாம் நமக்காக தான் வாழ வேண்டும்.
//உடம்பில் மட்டும் அல்ல மனதிலும்
மலை அளவு தில் வேண்டும்.//
நிச்சியம் வேண்டும்.
ஏழுமலை கவிதை நன்றாக இருக்கிறது.
பொறுப்புணர்ச்சி பொங்கி பெருகி நீங்கள் எழுதிய அரபு கட்டுரை உங்களை சிகரத்தில் ஏற்றி உள்ளது.
வாழ்க வளமுடன்.
கோமதி அரசு மேடம்...
தங்கள் வருகைக்கும், விரிவான கருத்துக்கும், மனம் விட்டு பாராட்டியதற்கும் எங்கள் மனமார்ந்த நன்றி...
இதுபோன்ற பாராட்டுக்கள் எங்களை மேலும் ஊக்கப்படுத்தி சிறப்பாக எழுத தூண்டுகிறது என்றால் அது மிகையல்ல...
நீங்கள் தொடர்ந்து வலைப்பக்கம் வருகை தந்து, உங்கள் மேலான கருத்துக்களை பகிரவும்...
கோபி,
தங்களை இட்லி வடை பதிவில் அடிக்கடி பார்கிறேன். தங்கள் பதிவுக்கு இன்று தான் வர முடிந்தது. நன்றாக எழுதுகிறீர்கள். வாழ்த்துக்கள். வெளி நாடு மோகம் பற்றிய தொடர் அற்புதம். காமெடியிலும் ரௌண்டு கட்டி அடிக்கிறீர்கள். இனி அடிக்கடி வருகிறேன்.
அப்படியே நீங்களும் நம்ம blog பக்கம் வாங்க. நான் பதிவு செய்த சற்று சுவரஸ்யமான பதிவுகள்:
புருஷன்- பொண்டாட்டி சண்டை
"யாரை பிடிக்கும்" எப்படி மாறுகிறது
படித்து விட்டு உங்க கருத்தகளை அள்ளி விடுங்க..
மோகன் குமார்
http://veeduthirumbal.blogspot.com/
//Mohan Kumar said...
கோபி,
தங்களை இட்லி வடை பதிவில் அடிக்கடி பார்கிறேன். தங்கள் பதிவுக்கு இன்று தான் வர முடிந்தது. நன்றாக எழுதுகிறீர்கள். வாழ்த்துக்கள். வெளி நாடு மோகம் பற்றிய தொடர் அற்புதம். காமெடியிலும் ரௌண்டு கட்டி அடிக்கிறீர்கள். இனி அடிக்கடி வருகிறேன்.
அப்படியே நீங்களும் நம்ம blog பக்கம் வாங்க. நான் பதிவு செய்த சற்று சுவரஸ்யமான பதிவுகள்:
புருஷன்- பொண்டாட்டி சண்டை
"யாரை பிடிக்கும்" எப்படி மாறுகிறது
படித்து விட்டு உங்க கருத்தகளை அள்ளி விடுங்க..
மோகன் குமார்
http://veeduthirumbal.blogspot.com///
********
வருகைக்கு நன்றி மோகன் குமார்... இந்த தொடரை சில காலம் இட்லிவடை ப்ளாக்கின் முதல் பக்கத்தில் இட்டு மரியாதை செய்ததை நன்றியுடன் நினைவு கூர்கிறேன்...
இந்த தொடர் பற்றிய உங்கள் கருத்து எங்களை ஊக்குவித்தது... அடுத்த தொடர் "வாழ்க்கை" முதல் பாகம் ஏறக்குறைய தயாராகி விட்டது... ஒரு சில நாளில் பதிவு செய்யப்படும்...
உங்கள் வலைப்பக்கம் வருகிறேன்...
Are you also in Dubai? My close friend Prasanna who knows me for more than 30 years (Aiyoo paavam) also is in Dubai.
Thanks for your comment in my blog. Pl do read and keep posting. SInce i dont know your mail ID, posting it here.
Mohan Kumar
//Mohan Kumar said...
Are you also in Dubai? My close friend Prasanna who knows me for more than 30 years (Aiyoo paavam) also is in Dubai.
Thanks for your comment in my blog. Pl do read and keep posting. SInce i dont know your mail ID, posting it here.
Mohan Kumar//
***********
Being in Dubai only we were able to closely watch the country and write this write-up...
My wishes to your OLD friend PRASANNA...
I have given my ID in your blog..
தொடக்கத்திலேயே விறுவிறுப்புடன் ஆரம்பித்து - யதார்த்த நடையில் - கண்கள் பனிக்க பயணித்து - இடையிடையில் - இதயம் இனிக்க - நகைச்சுவையையும் கலந்து - சொர்க்க புரியெனும் லோகத்தின் - லோக்கல் மேட்டரையும் கலந்து தெளித்து - உண்மை இதுதான் என சாமன்யனும் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் - வாழ்க்கை அதை வாழ்ந்து பார்க்கும் மனிதர்களையும் - படம் பிடித்து காட்டி - இறுதி பகுதியில் அன்பில் அறிவுறையும் கலந்து வழங்கி - இது முடிவல்ல ஒரு வாழ்க்கையின் ஆரம்பம் என முடித்திருப்பது - வரவேற்கதக்கது.
அடுத்த தொடர் எப்பொழுது ?
(கொஞ்ச நாள் வரல - அதுக்குள்ள முடிச்சிட்டீங்களே)
//sreeja said...
தொடக்கத்திலேயே விறுவிறுப்புடன் ஆரம்பித்து - யதார்த்த நடையில் - கண்கள் பனிக்க பயணித்து - இடையிடையில் - இதயம் இனிக்க - நகைச்சுவையையும் கலந்து - சொர்க்க புரியெனும் லோகத்தின் - லோக்கல் மேட்டரையும் கலந்து தெளித்து - உண்மை இதுதான் என சாமன்யனும் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் - வாழ்க்கை அதை வாழ்ந்து பார்க்கும் மனிதர்களையும் - படம் பிடித்து காட்டி - இறுதி பகுதியில் அன்பில் அறிவுறையும் கலந்து வழங்கி - இது முடிவல்ல ஒரு வாழ்க்கையின் ஆரம்பம் என முடித்திருப்பது - வரவேற்கதக்கது.
அடுத்த தொடர் எப்பொழுது ?
(கொஞ்ச நாள் வரல - அதுக்குள்ள முடிச்சிட்டீங்களே)//
********
வாருங்கள் ஸ்ரீஜா அவர்களே...
இந்த தொடரை ஆழமாக படித்த உங்களின் போக்கு, இந்த பிரமிக்கத்தக்க வைத்த பின்னூட்டத்தில் வெளிப்பட்டுள்ளது... சொன்ன கருத்தை ஆழமாக உள்வாங்கி, விரிவாக பின்னூட்டமிட்ட உங்களின் நேர்த்தி எங்களை கவர்ந்தது....
இறுதியில் நீங்கள் சொன்ன இந்த கருத்துக்கு எங்களின் மனமார்ந்த பாராட்டுக்கள்... (வாழ்க்கை அதை வாழ்ந்து பார்க்கும் மனிதர்களையும் - படம் பிடித்து காட்டி - இறுதி பகுதியில் அன்பில் அறிவுறையும் கலந்து வழங்கி - இது முடிவல்ல ஒரு வாழ்க்கையின் ஆரம்பம் என முடித்திருப்பது - வரவேற்கதக்கது)
அடுத்த "வாழ்க்கை" தொடரின் முதல் பகுதியை வியாழனன்று பதிவேற்றலாம் என்று யோசனை செய்துள்ளோம்...
நீங்கள் தொடர் வ்ருகை தரவேண்டும் என்பதே எங்களின் "அவா"...
நன்றி ஸ்ரீஜா அவர்களே.....
Dear Sri Gopi
I enjoyed reading your writings on dubai
i also enjoy your comments in Idlyvadai.
Keep writing ,nanbare.
raajoo,dubai
//srinivasan said...
Dear Sri Gopi
I enjoyed reading your writings on dubai
i also enjoy your comments in Idlyvadai.
Keep writing ,nanbare.
raajoo,dubai//
**********
Welcome Sri.Srinivas alias Raajoo.. Thanks for your visit and wish..
Do visit regularly and read all the articles....
பொதுவாவே வெளி நாடு போய் கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறது மற்றும் அதனோட ஒட்டிபிறந்த பிரிவுகள் எல்லாம் சோகம்தான் என்றாலும், அங்கே இருந்து திரும்ப மொத்தமாய் இங்கே வரும்போது ஏற்படும் திரிசங்கு மனநிலை இருகிறதே ரொம்ப கொடும சார் அது...
//மர தமிழன் said...
பொதுவாவே வெளி நாடு போய் கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறது மற்றும் அதனோட ஒட்டிபிறந்த பிரிவுகள் எல்லாம் சோகம்தான் என்றாலும், அங்கே இருந்து திரும்ப மொத்தமாய் இங்கே வரும்போது ஏற்படும் திரிசங்கு மனநிலை இருகிறதே ரொம்ப கொடும சார் அது...//
**********
சரியாய் சொன்னீர்கள் மர தமிழன்...
இக்கரைக்கு அக்கரை பச்சை... இல்லையென்றால் இப்படியும் சொல்லலாம்... அக்கரைக்கு இக்கரை பச்சை...
நண்பரே தங்கள் எழுத்து அருமை. நான் துபாயில் இல்லாவிட்டாலும் நான் இப்போது இருக்கும் வடஇந்திய சூழலுக்கு சற்றே பொருந்துகிறது.
//Madhavan said...
நண்பரே தங்கள் எழுத்து அருமை. நான் துபாயில் இல்லாவிட்டாலும் நான் இப்போது இருக்கும் வடஇந்திய சூழலுக்கு சற்றே பொருந்துகிறது.//
***********
வருக மாதவன் அவர்களே...
தங்கள் முதல் வருகைக்கு நன்றி.... பதிவை படித்து கருத்து சொன்னமைக்கு நன்றி....
தொடர்ந்து வாருங்கள்... அனைத்து பதிவுகளையும் படியுங்கள்....
என் மற்றொரு வலையும் வந்து பாருங்கள்...
www.jokkiri.blogspot.com
Post a Comment