அனைவரின் வாழ்விலும் திருமணம் என்பது மனதுக்கு குதூகலம் அளிக்கக்கூடிய விஷயமாகும்....
திருமணத்தின் போது, மண்டபத்தில் எங்கெங்கு காணினும் மகிழ்ச்சி கொப்பளிக்கும் .... உற்றார், உறவினர்கள், நண்பர்கள் குழு என்று ஒரு குதூகல சூழ்நிலை நிலவும்....
வெகு நாட்களுக்கு பிறகு சந்திக்கும் எத்தனையோ உறவினர்கள், திருமணத்திற்கென்றே வெளிநாடுகளிலிருந்தும் கூட வரும் உறவினர்கள், நண்பர்கள் என்று அந்த சூழலே விழாக்கோலம் பூண்டிருக்கும்.....
முந்தைய நாளிலிருந்தே உற்சாகம் கரைபுரண்டோடும்.... பாட்டும், கூத்து, கும்மாளம் என்று கல்யாண மண்டபம் எங்கும் சலசலவென்ற பேச்சு சத்தம் எங்கும் எதிரொலிக்கும்...
பல வண்ணங்களில், பல விலைகளில், பல கடைகளில் வாங்கப்பட்ட பல்வேறுபட்ட பட்டுசேலைகளின் அணிவகுப்பு நடைபெறும்.... எந்தெந்த புடவை எந்தெந்த கடைகளில் வாங்கப்பட்டது, எந்தெந்த கடைகளில் இவை விலை குறைவாக கிடைக்கும் என்று விவாதமும், பட்டிமன்றமும் நடைபெறும்....
என்னிடம் வெறும் 20 பட்டுப்புடவைகள் தான் இருக்கிறது என்று தான் ஏதோ பரம ஏழை என்பது போல் சொல்பவர் பேச்சுக்கு அந்த பெண்டிர் கூட்டம் முழுதும் மகுடி கண்ட பாம்பு போல தலையாட்டும்.... பின், அவர் என்ன சொல்கிறாரோ அதுதான் அந்த திருமண மண்டபத்தில் (பட்டுப்புடவையை பொறுத்தவரையில்)....
முந்தைய நாள் சாயந்திரம் மாப்பிள்ளை அழைப்பு முடிந்து, மறுநாள் கல்யாணம் அன்று அனைவரின் கண்களும், அந்த பட்டுப்புடவை பெண்மணியின் பட்டுப்புடவையின் மேலேயே இருக்கும்.... அவரும், இதுநாள் வரையில் தான் எடுத்து கட்டாததும், இந்த திருமணத்திற்கென்றே வாங்கி கட்டிக்கொண்டது போலவும், சொல்லாமல் சொல்லி, அட்டகாசமாய் ஜிகுஜிகுவென்று ஒளிரும் ஒரு பட்டு புடவையை எடுத்து அணிந்து கொண்டு வருவார்....
அந்த பட்டுப்புடவையை கண்டு, அங்கு வெளிப்படும் பெருமூச்சின் ஒலி அந்த திருமண மண்டபத்தையே அதிர வைக்கும்.... காண்பவர் அனைவரின் கண்களும் ஒரு ஏக்கத்தை வெளிப்படுத்தும்.... இப்போது, அந்த பெண்மணி சொல்லும் வார்த்தை அனைவரையும் கோபமுற செய்யும்....
இந்த புடவை வெறும் ரூ.50,000 தான்... எனக்கு கூட இவ்வளவு சீப்பா வாங்கணுமான்னு தோணித்து.. இருந்தாலும், அடுத்த மாசம், இதைவிட கொஞ்சம் காஸ்ட்லியா வாங்கிக்கலாம்னு இந்த கல்யாணத்துக்காக இதை எடுத்துட்டேன்... ஒரு புடவை பார்த்தேன் பாருங்கோ.... ஆஹா.. அது சூப்பர்.. விலையும் கொறச்சல்தான்.. வெறும் 70,000 தான் என்பார்...
அந்த புடவையை மண்டபத்தில் வந்து அமர்ந்துள்ள அனைவரும் பார்க்கும் வண்ணம், அவரே அனைவரையும் தேடிச்செல்வார்... எல்லோரிடமும், அந்த புடவையின் பார்டரை மூன்று, நான்கு முறை எடுத்து காட்டுவார்.... உடனே, அவர்களும் அந்த புடவையை பார்த்து ஏதாவது கேட்காமல் இருக்க மாட்டார் என்று அவருக்கு தெரியும்.... இவருக்கு பட்டு மாமி என்று நாமகரணம் சூட்டுவோம்...
இப்போது கல்யாண மண்டபம் முழுதும் பட்டு மாமி நிறைந்திருக்கிறார்... அவரின் பட்டுப்புடவை அங்குள்ள பெண்டிரிடையே நிறைந்திருக்கிறது.... அந்த கூட்டத்தில் ஒரு பெண்மணி சொன்னார்... எனக்கென்னவோ, பட்டு மாமி, இந்த வயசுல இவ்ளோ பட்டுப்புடவை கட்டுவான்னு முன்னாடியே தெரிஞ்சுதான் சின்ன வயசுலயே அவங்களுக்கு பட்டுன்னு பேர் வச்சு இருக்கான்னு நினைக்கிறேன் என்றார்...

இதை கேட்டு, அங்கு கூடி இருந்த அனைவரும் அதை ஆமோதிப்பது போலவே இருந்தது... நாம சான்ஸ் கிடைக்கறப்போ, பட்டு மாமிய நல்லா நோஸ்கட் பண்ணனும் என்று அந்த கூட்டம் முடிவு பண்ணியது.
கெட்டி மேளம், கெட்டி மேளம் என்ற ஐயரின் குரலுக்கு செவிசாய்த்து, கெட்டி மேளம் கொட்டப்பட்டது... கல்யாண மாப்பிள்ளை, மணப்பெண்ணின் கழுத்தில் தாலி கட்டினார். கூடி இருந்த உறவினர்கள், நண்பர்கள் அட்சதை தூவி பொதுவில் வாழ்த்தி விட்டு,பின் ஒவ்வொருவராக வந்து மணமக்களை வாழ்த்தினர்...
ஆல் தி பெஸ்ட் டா...
பெஸ்ட் ஆஃப் லக் டா..
விஷ் யூ போத் எ வெரி ஹேப்பி மாரிட் லைஃப்
விஷிங் தி யங் கபுள் எ வெரி ஹேப்பி மேரியேஜ் லைஃப்
இப்படி பல பேர் பலவிதமான வாழ்த்துக்களை சொல்லி விடைபெற்றனர்...
இப்போது மாமிகள் அவர்களுக்குள் பேசி வைத்தபடி, கும்பலாக மணமக்களை வாழ்த்த வந்தனர்... அப்போது, பட்டு மாமி, மணமக்களை பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்று வாழ்த்தினார்....

உடனே பக்கத்தில் இருந்த அனைவரும் பட்டு மாமியை பார்த்து, பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழுங்கள் என்று வாழ்த்தினீர்களே... அப்படின்னா, என்ன அர்த்தம்னு தெரியுமா மாமி என்று கேள்வி எழுப்பினார்...
அங்கிருந்த அனைவரின் பார்வையும் பட்டு மாமி மேல் விழுந்தது... மாமிகளிடையே சலசலப்பு எழுந்தது... உடனே பட்டு மாமி கணீரென்ற குரலில் அங்கிருப்பவர்களை பார்த்து சொல்ல தொடங்கினார்...
பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்று எல்லோரும் மணமக்களை வாழ்த்துவது சகஜம்தான்... அந்த பதினாறு என்னவென்றால் :
1. கல்வி
2. அறிவு
3. ஆயுள்
4. ஆற்றல்
5. இனிமை
6. துணிவு
7. பெருமை
8. பொன்
9. பொருள்
10.புகழ்
11.நிலம்
12.நன்மக்கள்
13.நல்லொழுக்கம்
14.நோயின்மை
15.முயற்சி
16.வெற்றி
ஆகிய இவைதான் அந்த பெருவாழ்வு வாழ தேவையான பதினாறு என்றார்...

பட்டு மாமியை மடக்க நினைத்த மற்றவர் வாயடைத்து நின்றனர்... ஒருவருக்கொருவர், கண்டிப்பாக எனக்கு தெரியாது, நல்ல வேளை என்னை கேட்கவில்லை என்றவாறு அங்கிருந்து பறந்தனர்....பந்திக்கு முந்தினர்...
27 comments:
//பட்டு மாமி என்று நாமகரணம் சூட்டுவோம்...///
ஆஹா...ஹா..ஹா.. ஹா..
நல்ல பதிவு...
//Vidhoosh said...
//பட்டு மாமி என்று நாமகரணம் சூட்டுவோம்...///
ஆஹா...ஹா..ஹா.. ஹா..
நல்ல பதிவு...//
*******
வித்யா வாங்கோ... வாங்கோ... வணக்கம்... இந்த பட்டு மாமிங்கற பேர் ஓகேதானே.... உங்களுக்கு புடிச்சு இருந்தா சரி....
நல்ல பதிவுன்னு வாழ்த்தியதற்கு நன்றி...
நச்-சுன்னு ஒரு மெஸேஜ் சொல்லிட்டேளே
பேஷ் பேஷ் நன்னாயிருக்கு அம்பி ...
//நட்புடன் ஜமால் said...
நச்-சுன்னு ஒரு மெஸேஜ் சொல்லிட்டேளே
பேஷ் பேஷ் நன்னாயிருக்கு அம்பி ...//
*********
நமஸ்காரம். ரொம்ப புகழாதீங்கோ ஜமால் அண்ணா... ரொம்ப கூச்சமா இருக்கு...
வாழ்த்துக்கு நன்றி ஜமால் பாய்.... (நோன்பு எல்லாம் எப்படி போகுது??)
அம்பி பட்டு மாமிய பற்றி ரொம்ப பட்டு எழுதினா மாதிரி தோனுது நேக்கு.
பேஷ் பேஷ்
நீங்க சொல்லவந்தது பதினாறு பெற்று பெருவாழ்வு என்று சொல்வார்களே அதை //
சரிதான் நிறைய பேருக்கு தெரியாமல் கூட இருக்கும்.
// Jaleela said...
அம்பி பட்டு மாமிய பற்றி ரொம்ப பட்டு எழுதினா மாதிரி தோனுது நேக்கு.
பேஷ் பேஷ் //
வாங்க ஜலீலா மேடம்... சரியாதான் சொல்லி இருக்கீங்க...
//நீங்க சொல்லவந்தது பதினாறு பெற்று பெருவாழ்வு என்று சொல்வார்களே அதை
சரிதான் நிறைய பேருக்கு தெரியாமல் கூட இருக்கும்.//
கரெக்ட்... நான் சொல்ல வந்ததை கொஞ்சம் நீட்டி, முழக்கி, சுவாரசியமாக்கி சொல்ல முயற்சித்தேன்...
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி மேடம்... ரம்ஜான் நோன்பு எல்லாம் நல்லா போகுதா?
//இந்த புடவை வெறும் ரூ.50,000 தான்... எனக்கு கூட இவ்வளவு சீப்பா வாங்கணுமான்னு தோணித்து.. இருந்தாலும், அடுத்த மாசம், இதைவிட கொஞ்சம் காஸ்ட்லியா வாங்கிக்கலாம்னு இந்த கல்யாணத்துக்காக இதை எடுத்துட்டேன்... ஒரு புடவை பார்த்தேன் பாருங்கோ.... ஆஹா.. அது சூப்பர்.. விலையும் கொறச்சல்தான்.. வெறும் 70,000 தான் என்பார்//
ஹா ஹா, இது மாதிரி நிறைய நேரில் பார்த்து இருக்கேன். இப்படி சொல்பவர்கள்.
ரம்ஜான் நோன்பு ம்ம் பேஷா போயிண்டு இருக்கு,
இப்படி வாழ்த்தும் போது சிலருக்கு தெரியாது, 16 என்பது குழந்தைய தான் சொல்கிறார்கள் என்று நினைத்து கொள்வார்கள்
//ஹா ஹா, இது மாதிரி நிறைய நேரில் பார்த்து இருக்கேன். இப்படி சொல்பவர்கள்.//
சரிதான் மேடம்... நானும் நிறைய பேர் பார்த்து இருக்கேன்... அதான் எழுதினேன்...
//Jaleela said...
ரம்ஜான் நோன்பு ம்ம் பேஷா போயிண்டு இருக்கு, //
ஓ...சூப்பர்....
//இப்படி வாழ்த்தும் போது சிலருக்கு தெரியாது, 16 என்பது குழந்தைய தான் சொல்கிறார்கள் என்று நினைத்து கொள்வார்கள்.//
அதே... அதனால் தான் இந்த பதிவு மேடம்... சும்மா கிண்டலும், கேலியும் இல்லாம இதை மாதிரியும் பதிவும் போடலாம்னுதான்...
appa subjectey illainu enga pattu pudavaikku vettuvaikum pathiva gopi....nalla eruku..kannal parthu kaathal kettadhu pola..thirumana vaibavangalil nadakum sambavathai azhaga korthu solli erukinga...
16m petru peru vazhvu vazhunga ambi...ippadiku thamil mami
//தமிழரசி said...
appa subjectey illainu enga pattu pudavaikku vettuvaikum pathiva gopi....nalla eruku..kannal parthu kaathal kettadhu pola..thirumana vaibavangalil nadakum sambavathai azhaga korthu solli erukinga...
16m petru peru vazhvu vazhunga ambi...ippadiku thamil mami//
--------
சப்ஜெக்ட் இல்லேன்னு எல்லாம் இந்த பதிவு எழுதல.... நிறைய சரக்கு (பதிவு சரக்குதான், தப்பா நெனைக்காதீங்க....) கைவசம் இருக்கு... இது..ஏதோ சட்டுனு தோணிச்சு.. அதான்...எழுதினேன்...
பதிவு உங்களுக்கு பிடித்ததில், எனக்கு சந்தோஷம்...
எவ்ளோ கல்யாணத்துல பார்த்து இருக்கோம் தமிழ்.... அதான்...
தங்கள் 16 வாழ்த்துக்கு நன்றி....
நேக்கும் இந்தப் பதினாறு விடயம் இற்றைவரை தெரியாது பாருங்கோ கோபி. இன்னைக்கு பட்டுமாமி புண்ணியத்தில கற்றுகொண்டேன்.
அவாளுக்கு நன்றின்னு சொல்லிடுங்கோ அம்பி.
//ஜெஸ்வந்தி said...
நேக்கும் இந்தப் பதினாறு விடயம் இற்றைவரை தெரியாது பாருங்கோ கோபி. இன்னைக்கு பட்டுமாமி புண்ணியத்தில கற்றுகொண்டேன்.
அவாளுக்கு நன்றின்னு சொல்லிடுங்கோ அம்பி.//
வாங்கோ ஜெஸ்....
நெனச்சேன்...என்னடா...வர்றவா எல்லாம் இதையே சொல்றாளேன்னு....இப்போ நீங்களுமா... என்னவோ.. எனக்கும் இதுவரைக்கும் தெரியாது... ஏதோ பட்டு மாமி சொன்னாளோ... நானும் கத்துண்டேன்...
நீங்க சொன்னத பட்டு மாமி கிட்ட சொன்னேன்... ஜெஸ்க்கு ஒரு டாங்ஸ்னு சொல்ல சொன்னா!!
கோபி நோக்கு ரொம்ப அனுபவம் போல இருக்கு பட்டு புடவை எடுத்து.
இல்ல எல்லா கல்யாண ஆத்துலையும் போய் ஆராய்ச்சியா? பாத்துப்பா, சமையல் கட்டில் பத்திரம் அலம்ப போட்டுடரோரா. பொம்மனாட்டிகள் விசயத்தை இப்படி ஒப்பன்ன சொல்லபடாதுன்னு நோக்கு தெரியாதோ?
எது எப்படின்னாலும் கடைசியா ஒரு நல்ல சங்கதி சொல்லிருக்காய், அதுக்கே ஒரு சபாஷ். நல்லா இருடா அம்பி, இதே மாதிரி எழுதீண்டு, புண்ணியமா போகும். :))
//அந்த பதினாறு என்னவென்றால் ....//
ஓ இதுதான் அந்த பதினாறா ....
நல்ல பதிவு :)
உங்களை ஒரு தொடர் பதிவு எழுத அழைத்துள்ளேன்..:)
எனக்கும் இது வரை தெரியாது இப்பொழுது தெரிந்துகொண்டேன்..நல்லா தகவல்..
//ஒருவருக்கொருவர், கண்டிப்பாக எனக்கு தெரியாது, நல்ல வேளை என்னை கேட்கவில்லை என்றவாறு அங்கிருந்து பறந்தனர்....பந்திக்கு முந்தினர்...//
ஹி..ஹி...
அன்புடன்,
அம்மு.
//mayil said...
கோபி நோக்கு ரொம்ப அனுபவம் போல இருக்கு பட்டு புடவை எடுத்து.//
வாங்கோ மயில்... அப்டிலாம் இல்லீங்கோ...
//இல்ல எல்லா கல்யாண ஆத்துலையும் போய் ஆராய்ச்சியா? பாத்துப்பா, சமையல் கட்டில் பத்திரம் அலம்ப போட்டுடரோரா. பொம்மனாட்டிகள் விசயத்தை இப்படி ஒப்பன்ன சொல்லபடாதுன்னு நோக்கு தெரியாதோ? //
அய்யோ... ஏன் இந்த விபரீத முடிவு...(அதான் என்ன சமையல்கட்டில் பாத்திரம் அலம்ப விடற முடிவத்தான் சொன்னேன்....).. இனிமே பொம்னாட்டிகள் விஷயத்த ஓப்பனா சொல்ல மாட்டேன்...ட்டேன்...டேன்...ன்...
//எது எப்படின்னாலும் கடைசியா ஒரு நல்ல சங்கதி சொல்லிருக்காய், அதுக்கே ஒரு சபாஷ். நல்லா இருடா அம்பி, இதே மாதிரி எழுதீண்டு, புண்ணியமா போகும். :))//
பெரியவா ஆசீர்வாதம்... நன்னா, பேஷா எழுதறேன்...
//Sundari said...
//அந்த பதினாறு என்னவென்றால் ....//
ஓ இதுதான் அந்த பதினாறா ....
நல்ல பதிவு :)//
இதேதான் அந்த பதினாறு... நல்ல பதிவுன்னு சொன்னதுக்கு உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் டாங்க்ஸ்...
//Sundari said...
உங்களை ஒரு தொடர் பதிவு எழுத அழைத்துள்ளேன்..:)//
வந்து எட்டி பாக்கறேன், இன்னா மேட்டருன்னு...
// Ammu Madhu said...
எனக்கும் இது வரை தெரியாது இப்பொழுது தெரிந்துகொண்டேன்..நல்லா தகவல்..//
எனக்கே ஆச்சரியமா இருக்கு... யாருமே தெரியும்னு சொல்லவில்லை... அனைவரும் தெரிந்து கொண்டதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி...
//ஒருவருக்கொருவர், கண்டிப்பாக எனக்கு தெரியாது, நல்ல வேளை என்னை கேட்கவில்லை என்றவாறு அங்கிருந்து பறந்தனர்....பந்திக்கு முந்தினர்...//
ஹி..ஹி...
அன்புடன்,
அம்மு.//
பந்திக்கு முந்துங்கோ... பாயசம் காலியாயிட போறது...
இந்த பதிவிற்கு தமிழிஸில் வாக்களித்து பிரபலமாக்கிய உங்கள் அனைவருக்கும் என் நன்றி...
ktmjamal
vanniinfo
ashok92
VGopi
MVRS
arasu08
nanban2k9
ldnkarthik
ssrividhyaiyer
vimalind
mohamedFeros
eroarun
\\திருமணத்தின் போது, மண்டபத்தில் எங்கெங்கு காணினும் மகிழ்ச்சி கொப்பளிக்கும் .... உற்றார், உறவினர்கள், நண்பர்கள் குழு என்று ஒரு குதூகல சூழ்நிலை நிலவும்....\\
ஒரு திருமண மண்டபத்தையே கண் எதிரில் கொண்டுவந்துட்டிங்க கோபி அண்ணா..
வாழ்த்துக்கள்...
//கலாட்டா அம்மணி said...
\\திருமணத்தின் போது, மண்டபத்தில் எங்கெங்கு காணினும் மகிழ்ச்சி கொப்பளிக்கும் .... உற்றார், உறவினர்கள், நண்பர்கள் குழு என்று ஒரு குதூகல சூழ்நிலை நிலவும்....\\
ஒரு திருமண மண்டபத்தையே கண் எதிரில் கொண்டுவந்துட்டிங்க கோபி அண்ணா..
வாழ்த்துக்கள்...//
வாங்க கலாட்டா அம்மணி.. பதிவை ரசித்ததற்கும், வாழ்த்துக்கும் நன்றி....
நல்லா எழுதிருக்கீங்க :)
//, இந்த வயசுல இவ்ளோ பட்டுப்புடவை கட்டுவான்னு முன்னாடியே தெரிஞ்சுதான் சின்ன வயசுலயே அவங்களுக்கு பட்டுன்னு பேர் வச்சு இருக்கான்னு நினைக்கிறேன் என்றார்... //
:))))
//ஆல் தி பெஸ்ட் டா...
பெஸ்ட் ஆஃப் லக் டா..
விஷ் யூ போத் எ வெரி ஹேப்பி மாரிட் லைஃப்
விஷிங் தி யங் கபுள் எ வெரி ஹேப்பி மேரியேஜ் லைஃப்//
ஆக யாருமே தமிழிலோ, தாய் மொழியிலோ வாழ்த்தலை போல ..ஹ்ம்ம்....
//பட்டு மாமியை மடக்க நினைத்த மற்றவர் வாயடைத்து நின்றனர்... //
கட்டுரை "பட்டு" ன்னு முடிஞ்ச மாதிரி இருக்கு.... பட்டு மாமியை நோஸ் கட் குடுக்காமையே போனது மனசுக்கு வருத்தமா இருக்கு. '70000' ரூபாய் புடவையெல்லாம் ரொம்ப ஓவர் :O
//Shakthiprabha said...
நல்லா எழுதிருக்கீங்க :) //
வருகைக்கும், வாழ்த்துக்கும், ரசித்து படித்தமைக்கும் நன்றி ஷக்திபிரபா..
//ஆக யாருமே தமிழிலோ, தாய் மொழியிலோ வாழ்த்தலை போல ..ஹ்ம்ம்....//
நோ... ஒன்லி இங்கிலீஷ்...
//கட்டுரை "பட்டு" ன்னு முடிஞ்ச மாதிரி இருக்கு.... பட்டு மாமியை நோஸ் கட் குடுக்காமையே போனது மனசுக்கு வருத்தமா இருக்கு. '70000' ரூபாய் புடவையெல்லாம் ரொம்ப ஓவர் ://
பாவம்... பட்டு மாமி சந்தோஷமா இருந்துட்டு போகட்டுமே... நோஸ் கட் குடுக்காதது மனசுக்கு வருத்தமா?? யப்பா.... 70,000 புடவையெல்லாம் ஜுஜூபிங்க...
பட்டு மாமி பெரு வாழ்வுவாழஅபிராமி
பட்டரின அபிராமியம்மைப் பதிகப்
பாடலில் வரும் பதினாறு பேறுகளைச்
சொல்லி வாழ்த்திவிட்டார்கள்.
பட்டு மாமி அந்த அபிராமி அம்மன் போல் பட்டுத்தி வாழ்க வளமுடன்.
பட்டு மாமி பாத்திரத்தைப் படைத்த
கோபி வாழ்க வளமுடன்.
//கோமதி அரசு said...
பட்டு மாமி பெரு வாழ்வுவாழஅபிராமி
பட்டரின அபிராமியம்மைப் பதிகப்
பாடலில் வரும் பதினாறு பேறுகளைச்
சொல்லி வாழ்த்திவிட்டார்கள்.
பட்டு மாமி அந்த அபிராமி அம்மன் போல் பட்டுத்தி வாழ்க வளமுடன்.
பட்டு மாமி பாத்திரத்தைப் படைத்த
கோபி வாழ்க வளமுடன்.//
கோமதி மேடம்... தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி....
பதினாறு பேறு என்னவென்று சொல்ல விரும்பிய நீங்கள் இப்படி ஒரு கதையை எழுதி இருக்கிறீர்கள் என்று புரிகிறது. இருந்தாலும், தன்னுடைய டாம்பீகத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்த பட்டு மாமியை மனம் திருந்த வைத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.
(தங்கள் பதிவுகளை எல்லாம் இன்றுதான் படிக்க ஆரம்பித்திருக்கிறேன். எனவேதான் இந்த தாமதம். மன்னிக்கவும்.)
//பெயர் சொல்ல விருப்பமில்லை said...
பதினாறு பேறு என்னவென்று சொல்ல விரும்பிய நீங்கள் இப்படி ஒரு கதையை எழுதி இருக்கிறீர்கள் என்று புரிகிறது. இருந்தாலும், தன்னுடைய டாம்பீகத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்த பட்டு மாமியை மனம் திருந்த வைத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.
(தங்கள் பதிவுகளை எல்லாம் இன்றுதான் படிக்க ஆரம்பித்திருக்கிறேன். எனவேதான் இந்த தாமதம். மன்னிக்கவும்.)//
என் பதிவுகளை தொடர்ந்து படித்து, விரிவாக கருத்து சொல்லும் உங்கள் பாங்கு எனக்கு பிடித்திருக்கிறது.. நீங்கள் சொன்னதுபோல், கதையாக எழுதினால், அப்படிப்பட்ட ஒரு முடிவினை யோசித்திருக்கலாம்.. ஆனால்,பதினாறு பேறு பற்றி சொல்ல் விரும்பியதால், ஒரு நூலிழையாக அந்த "பட்டு மாமி" கேரக்டர்...
கூடவே, நீங்கள் யாரென்றும் சொன்னால், நான் மகிழ்வேன்...
Post a Comment