இது வரை வாசித்து வந்த உங்களுக்கு ஒரு கேள்வி வரலாம்.
சரி, துபாய் மிக சிறிய இடம் என்று பதிவில் குற்ப்பிட்டுள்ளீர்கள், பின்னர் எப்படி இத்தனை உலக பிரசித்தி பெற்றது.
இந்த கேள்வியில், வளைகுடாவின் வளர்ச்சி பற்றியும், ஏன் நம்ம ஊர் துபாய் போல இல்லை என்பதற்கும் விடை கிடைக்கும் என்று நம்புகிறோம். ஒன்று இரண்டு காரணங்களை பார்ப்போமே.
இந்த அரசின் தொலை நோக்கு பார்வையும், நேர்மையான ஆற்றல் மிக்க செயல் திறனுமே.
நிர்வாகம் ஒரு மனிதாபிமானக் கண்ணோட்டத்தில் தொழில் போலே நடக்கும். பொதுமக்களிடம் இருந்து பெரும் தொகை / கட்டணம் அவர்களுக்கு சேவையாய் சென்றடைகிறதா என்பதில் கண்ணில் விளக்கெண்ணை ஊற்றி பார்ப்பார்கள். போலீஸ் அறவே லஞ்சம் வாங்குவதில்லை...( நம்மாளுங்க யாரும் உள்ளூர் போலீஸ் டிபார்மெண்டில் வேலையில் இல்லை....)
எதிலும் உயர்வு, எங்கும் மேன்மை. இதுவே தாரக மந்திரம். இல்லையென்றால் உலகின் உயரமான, உலகின் பெரிய உள்ளரங்கு சந்தை, அல்லது கடலில் மண்ணைக் கொட்டி நிலமாக்கி ப்ளாட் போட்டு விற்போம், ஊருக்குள்ள பள்ளம் தோண்டி கடல் தண்ணி திறந்து விடுவோம், கடலுக்குள்ள மூச்சடக்கி போயி பவுண்டேஷன் போடுவோம்!!! அங்க ஒரு 50 மாடியில 7 நட்சத்திர ஓட்டல் கட்டுவோம், போன்ற சுதந்திர சிந்தனை எக்கச்சக்கம்.
இதெல்லாம் என்ன, சொல்லவே இல்லை என்பவருக்கு இத பத்தி விலாவாரியா அடுத்த பகுதியில் சொல்றோம் என வாக்குறுதி தந்து விட்டு மேலே தொடருகிறோம்.
அஞ்சு வருசத்துக்கு முந்தி இந்த ஷேக் ஸாயித் ரோட்டில ஒண்ணுமே கிடையாது, இப்போ பாரு எத்தனை பில்டிங்கு, எனும் ஆச்சரிய வாக்கியம் மிக சகஜமாக இங்கு கேட்கும். ஆறு மாசத்தில இவ்வளவு மாறுதலா என வந்தவர் அதிசயிப்பார்.
ஒரு தமாஷ கேளுங்க, "உங்க ஆபிஸ் வரணும், வரைபடம் அனுப்புங்களேன்" என கேட்க "அட போய்யா, ஒவ்வொரு ஆறு மாசத்துக்கு புதுசு புதுசா மேப் போட்டு, போதும் போதும்னு ஆச்சு நீயே கண்டு பிடிச்சு வா" என சலித்து கொண்டார். இவருக்கே இப்படின்னா, பாவம் மேப் போட்டு விக்குற கம்பெனி பாடு.
6 லேன்ல எக்ஸ்பிரஸ்வேயா, ஒரு ஆறு மாதம் கொடு, 50 மாடியில காங்கிரீட் பில்டிங்கா, ஒரு இரண்டு வருசம் கொடு என்பது போல கற்பனைக்கு எட்டாத காலத்திட்டம் இங்கு சாஸ்வதம். கட்டுமான பணிகள் எல்லாம் திட்டமிட்ட தேதி, திட்டமிட்ட விதத்தில் இனிதே நிறைவேறும். இல்லையென்றால் அதற்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும்....
அமெரிக்கா பெரிதாய் அஞ்சும், ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தானில் தஞ்சம் புகுந்த முக்கிய புள்ளிகள், இரண்டு வருடங்களுக்கு முன் துபாய் வந்து சிறுநீரக அறுவை சிகிச்சை செய்ததாய் பரவலான ஒரு கிசு கிசு உண்டு.
இந்தியா தேடிக் கொண்டு இருக்கும் ஒரு நிழல் உலக தாதா (தாத்தா அல்ல - அவர் அவரை விட பெரிய கேடி) தன் மகளுக்கு விமரிசையாய் கண்ணாலம் கட்டிக் கொடுத்தது இங்கே தான். எப்படி........
அது எப்படி ஒரே நேரத்தில் மாமியாருக்கும் மருமகளுக்கும் நட்பாய் இருப்பது. அது தான், துபாய். தெளிவான சிந்தனை, கடுமையான சட்ட திட்டங்கள் (என்ன தான் தாதா வா இருந்தாலும் இங்க இருக்கச் சொல்ல பச்ச பிள்ள மாதிரி இருக்கணும், இல்லன்னா.....அதான் ஏற்கனவே சொல்லிட்டோமே....)
கோடு கிழிப்பதில் இருக்குது இவர்கள் சூட்சமம். இத கேளுங்களேன். சரக்கு (மது) அடிக்க அனுமதி உண்டு. அதுவும் சில எமிரேட்டுகளில், குறிப்பிட்ட உணவு விடுதிகளில் மாத்திரம். குடிச்சோமா, சத்தம் இல்லாம போனோமான்னு இருக்கணும். இல்லாம சலம்புனீங்க, அவ்ளோதான், தூக்கிக்கிட்டு போயி உள்ள போட்டு, நொங்கி எடுத்து, அப்புறமா ஊர விட்டு நாடு கடத்திருவாங்க அம்புடுதேன்.
புனித ரமலான் மாதத்தின் போது, குடி/சரக்கு எங்கும் தடை செய்யப்படும்.... ஹோட்டல்கள், பார்கள் இந்த சமயத்தில் குடி/சரக்கு சப்ளை செய்யாது... அது போன்றதொரு உத்தரவு அவர்களுக்கு அரசாங்கத்தால் முறையாக முன்கூட்டியே அனுப்பப்படும்....

ஷார்ஜாவில் எப்போதுமே குடி/சரக்கு கிடையாது (பெரிய பெரிய ஸ்டார் ஹோட்டல்களில் கூட)... காரணம், அவர்கள் சவுதி அரேபியாவின் சட்ட திட்டத்தை பின்பற்றுவது தான்....
ஷார்ஜாவில் இருப்பவர் சரக்கு குடிக்க வேண்டுமெனில், இந்த பக்கம் இருக்கும் துபாய்க்க்கோ அல்லது அந்த பக்கம் இருக்கும் அஜ்மனுக்கோ தான் செல்ல வேண்டும்.... வரும்போது போதையில் தள்ளாடிக்கொண்டே வரவேண்டும்.
வண்டிகளின் ரிஜிஸ்ட்ரேஷன் நம்பர் விசயத்துல யாவாரத்த பாருங்க, கார் நம்பர் ப்ளேட்டுகள் மற்றும் அதற்கு கொடுக்கப்படும் கொள்ளை விலை...ஒவ்வொரு டிஜிட் குறையும்போதும், நம்பர் ப்ளேட்டின் விலை அதிகமாகும்..
வண்டிகளின் ரிஜிஸ்ட்ரேஷன் நம்பர் விசயத்துல யாவாரத்த பாருங்க, கார் நம்பர் ப்ளேட்டுகள் மற்றும் அதற்கு கொடுக்கப்படும் கொள்ளை விலை...ஒவ்வொரு டிஜிட் குறையும்போதும், நம்பர் ப்ளேட்டின் விலை அதிகமாகும்..
உதாரணமாக 4/5 மாதங்களுக்கு முன் ஒரு டிஜிட் கொண்ட நம்பர் ப்ளேட் அபுதாபி தொழிலதிபர் ஒருவரால் திராம் 27 மில்லியன் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 30 கோடி) கொடுத்து எடுக்கப்பட்டது... இது கின்னஸ் சாதனை விலை, ஒரு நம்பர் ப்ளேட்டுக்கு….படிக்கும் போதே சிறு மூச்சு, பெரு மூச்சு எல்லாம் வந்து காது வழியா கரிவண்டி கணக்கா புகை வருதே...
காசு ஜாஸ்தி பண்ணு, ஆனா சேவைய உயர்த்து, இது தான் கொள்கை. டெலிஃபோன் சர்வீஸ் செய்யுறது ரெண்டு பேர், எடிஸாலட் மற்றும் டூ... இந்தியாவிற்கு பேசுவதற்கு மட்டும் கொள்ளை கட்டணம்.... ஏன்னா, இங்க இந்தியர்களின் எண்ணிக்கை அதிகம்..
சில தொழில் நுட்ப காரணத்திற்காக அமீரக அரசாங்கம், திடீரென அனைத்து டாக்சிகளின் நம்பர் ப்ளேட் நிறத்தை கருப்பு வெள்ளையிலிருந்து, மஞ்சள், கருப்பிற்கு மாற்ற சொல்லியது.... இரு தினங்களில் பாதிக்கும் மேற்பட்ட வாகனங்களின் நம்பர் ப்ளேட் நிறம் மாற்றப்பட்டுள்ளது.... அதுதான் அமீரகம், மற்றும் அதன் சட்டம் அதை நடைமுறைப் படுத்தும் வேகம்.... இதே நம்மூரில் நடக்குமா?
(தொடரும்.....)

17 comments:
னல்ல சுவாரஸ்யமா எழுதுறீங்க
//shabi said...
னல்ல சுவாரஸ்யமா எழுதுறீங்க//
வாங்க ஷபி....
வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி...
மத்திய கிழக்கு நாடுகள் - அயல் நாட்டு மோகம் (பகுதி-10)க்கு "தமிழிலிஷில்" வாக்களித்து பதிவை பிரபலப்படுத்திய உங்கள் அனைவருக்கும் என் நன்றி...
ecanadatamil
tgboyssarathy
tharun
vilambi
MVRS
suthir1974
kosu
blogpaandi
//அதுதான் அமீரகம், மற்றும் அதன் சட்டம் அதை நடைமுறைப் படுத்தும் வேகம்.... இதே நம்மூரில் நடக்குமா?//
நடக்கவே நடக்காது.
அரசாங்கம் எந்த சட்டம் கொண்டு வந்தாலும் அதில் இந்த குறை இருக்கிறது, இந்த பாதிப்பு இருக்கிறது, இதை மாற்ற வேண்டும், இதை நீக்க வேண்டும் என்று சொல்லுவது தானே ஜனநாயகம்? நம்ப ஜனநாயக நாட்டில் அந்த அரசாங்கத்தையும், அதன் செயல் வேகத்தையும் பார்த்து நாம் பெரும் மூச்சு மட்டும் தான் விட முடியும்.
இந்தியாவிற்கு பேசுவதற்கு மட்டும் கொள்ளை கட்டணம்.... ஏன்னா, இங்க இந்தியர்களின் எண்ணிக்கை அதிகம்..]]
காரணம் இதுவல்ல.
ஆனாலும் என்னால் சொல்ல இயலாதுப்பா - நிறைய சண்டைகள் வரலாம் - நமக்கு அதெல்லாம் ஆஹாதுப்பா
//Eswari said...
//அதுதான் அமீரகம், மற்றும் அதன் சட்டம் அதை நடைமுறைப் படுத்தும் வேகம்.... இதே நம்மூரில் நடக்குமா?//
நடக்கவே நடக்காது.
அரசாங்கம் எந்த சட்டம் கொண்டு வந்தாலும் அதில் இந்த குறை இருக்கிறது, இந்த பாதிப்பு இருக்கிறது, இதை மாற்ற வேண்டும், இதை நீக்க வேண்டும் என்று சொல்லுவது தானே ஜனநாயகம்? நம்ப ஜனநாயக நாட்டில் அந்த அரசாங்கத்தையும், அதன் செயல் வேகத்தையும் பார்த்து நாம் பெரும் மூச்சு மட்டும் தான் விட முடியும்.//
Perfectly said Eswari....
இந்தியர்கள் ஒன்றும் சளைத்தவர்கள் இல்லைப்பா திட்டமிடலிலும் ஆற்றலிலும்
வேறுபாடு எங்கே என்றால்
அவர்கள் நாட்டை குடும்பமாக நினைக்கின்றார்கள்
இவர்கள் குடும்பத்தை நாடாக நினைக்கின்றார்கள்
---------------
அவர்கள் குடும்பதிற்காக பாடுபடுகின்றனர்
இவர்கள் நாட்டிற்காக பாடுபடுகின்றனர்
//நட்புடன் ஜமால் said...
இந்தியாவிற்கு பேசுவதற்கு மட்டும் கொள்ளை கட்டணம்.... ஏன்னா, இங்க இந்தியர்களின் எண்ணிக்கை அதிகம்..]]
காரணம் இதுவல்ல.
ஆனாலும் என்னால் சொல்ல இயலாதுப்பா - நிறைய சண்டைகள் வரலாம் - நமக்கு அதெல்லாம் ஆஹாதுப்பா//
ஜமால் வாங்க... வேற காரணம் இருக்கா?/ ஓகே ஓகே... சண்டை வரும்னா சொல்ல வேண்டாம்... இங்க இல்ல.... சாட்ல கூட சொல்ல வேண்டா (டு)ம்...
//நட்புடன் ஜமால் said...
இந்தியர்கள் ஒன்றும் சளைத்தவர்கள் இல்லைப்பா திட்டமிடலிலும் ஆற்றலிலும்
வேறுபாடு எங்கே என்றால்
அவர்கள் நாட்டை குடும்பமாக நினைக்கின்றார்கள்
இவர்கள் குடும்பத்தை நாடாக நினைக்கின்றார்கள்//
அதே அதே... நாட்டின் முன்னேற்றத்திற்காக போடப்படும் திட்டங்களுக்கான தொகை எங்கே போகிறது... ஸ்விஸ் வங்கியில் அவர் கணக்குக்கு....
----------
//அவர்கள் குடும்பதிற்காக பாடுபடுகின்றனர்
இவர்கள் நாட்டிற்காக பாடுபடுகின்றனர்//
இதை தான் நாங்களும் சொல்ல வந்தோம்...
ஆஹா.. ரொம்ப சுவாரஸ்யமான பதிவு.. வாழ்த்துக்கள்..!
//பாவம் மேப் போட்டு விக்குற கம்பெனி பாடு//
ஏன் அவங்க பாடு குஷியாச்சே.. ஹிஹி..
Good posting.
//கலகலப்ரியா said...
ஆஹா.. ரொம்ப சுவாரஸ்யமான பதிவு.. வாழ்த்துக்கள்..!
//பாவம் மேப் போட்டு விக்குற கம்பெனி பாடு//
ஏன் அவங்க பாடு குஷியாச்சே.. ஹிஹி..//
//Earn Staying Home said...
Good posting.//
நன்றி லகலகப்ரியா மற்றும் Earn Staying Home...
I am coming after long time, very well written... ( sorry link - tamil google not working )...
//அது ஒரு கனாக் காலம் said...
I am coming after long time, very well written... ( sorry link - tamil google not working )...//
Welcome back அது ஒரு கனாக் காலம். Thanks for your visit, comment and wishes. Do come regularly to have updates... Also feel free to visit my other blog www.jokkiri.blogspot.com
//அடுத்த பகுதியில் சொல்றோம் என வாக்குறுதி தந்து விட்டு மேலே தொடருகிறோம்.//
கோபி அப்ப இதை நீங்க ஒருவர் மட்டும் எழுதலையா :-)
//(தாத்தா அல்ல - அவர் அவரை விட பெரிய கேடி//
ஹி ஹி ஹி
//அதுவும் சில எமிரேட்டுகளில்//
எமிரேட் அப்படின்னா என்ன ... அது எத்தனை இருக்கு
// பெரு மூச்சு எல்லாம் வந்து காது வழியா கரிவண்டி கணக்கா புகை வருதே//
எனக்கு அதுக்கு மேல வருது..
கிரி said...
//அடுத்த பகுதியில் சொல்றோம் என வாக்குறுதி தந்து விட்டு மேலே தொடருகிறோம்.//
கோபி அப்ப இதை நீங்க ஒருவர் மட்டும் எழுதலையா :-)
இல்லை கிரி... ஏற்கனவே தண்டோரா ஒருமுறை கேட்டபோது சொன்ன அதே விளக்கம்தான்... நானும், லாரன்ஸ் (www.padukali.blogspot.com)இருவரும் சேர்ந்து எழுதுகிறோம்...
//(தாத்தா அல்ல - அவர் அவரை விட பெரிய கேடி//
ஹி ஹி ஹி
//அதுவும் சில எமிரேட்டுகளில்//
எமிரேட் அப்படின்னா என்ன ... அது எத்தனை இருக்கு
எடிரேட் அப்படின்னா அமீரகம்... அபுதாபி (யு.ஏ.ஈ. அதாவது அமீரகத்தின் கேபிடல்)/அல் அய்ன், துபாய், ஷார்ஜா, அஜ்மன், உம் அல் குவைன், ராஸ் அல் கைமா மற்றும் ஃபுஜைரா என்று ஏழு எமிரேட்டுகள் உள்ளன கிரி...
// பெரு மூச்சு எல்லாம் வந்து காது வழியா கரிவண்டி கணக்கா புகை வருதே//
எனக்கு அதுக்கு மேல வருது..
ஹா..ஹா....
அருமையான பதிவு! இப்போ தான் எல்லாம் போட்டது போட்டபடி நிக்கிது. பாக்கவே பரிதாபமா இருக்கு. அநேகமா உங்க த்ரிஷ்டி பட்ருச்சுன்னு நினைக்கறேன்
//அநன்யா மஹாதேவன் said...
அருமையான பதிவு! இப்போ தான் எல்லாம் போட்டது போட்டபடி நிக்கிது. பாக்கவே பரிதாபமா இருக்கு. அநேகமா உங்க த்ரிஷ்டி பட்ருச்சுன்னு நினைக்கறேன்//
*********
ஏங்க... இப்போ நல்லா தானே போயிட்டு இருக்கு... எங்க மேல ஏன் இந்த கொலவெறி???
Post a Comment