தப்பித்த தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் - நடிகர் "குஜய்" புதுக்கட்சி


நடிகர் "குஜய்" கட்சி ஆரம்பிக்க போவதாக செய்தி வந்தவுடன் கீபாலபுரம், மைலாபுரம், கீயஸ் கார்டன், கிஜயகாந்த் அலுவலகம், பீரரசு அலுவலகம் எல்லாம் தீப்பற்றி கொள்கிறது...

"முத்தமிழ் காவலர் வலைஞர்" தன் இரு கரங்களான போர்காட்டாரையும், பொறைகிருகனையும் அலைபேசியில் மிக மிக அவசரம் என்று அழைக்கிறார்...... அடுத்த சில நிமிடங்களில் அவர்கள் கீபாலபுரத்தில் ஆஜர்......

வலைஞர் : என்னாய்யா, நாம இப்போதான் ஒருவழியா "சூப்பர் ஸ்டார் குஜினி"ய அரசியல் பேசக்கூடாதுன்னு வாய அடச்சு வச்சு இருக்கோம்.... அதுக்குள்ள, இது என்னய்யா புது தலைவலி.....

போர்காட்டார் : தலைவா.... அவன் கெடக்கான் சின்ன பய..... இங்கன கூட்டியாந்து, நம்ம மணிபர்ஸ் வாயர் சிரிக்கறத பாக்க சொன்னா போதும்..... பயந்து போயி, ஒரு மாசம் ஆஸ்பத்திரில படுத்துடுவான்.......

பொறைகிருகன் : ஆமாம் தலைவரே..... என்று சொல்லி தன் மணிபர்ஸ் வாயை திறந்து சிரிக்க.... போர்காட்டாரே ஒரு நிமிடம் ஆடி போய்விடுகிறார்.....

போர்காட்டார் : யோவ்... சும்மா இருய்யா..... எனக்கே நீ சிரிக்கறத பாத்தா, கதிகலங்குது..... "குஜய்" என்ன பாடுபட போறானோ? தலைவா, நான் அந்த சின்ன பையன அலைபேசில நீங்க கூப்பிடறதா சொல்லி கூப்பிடறேன்..... இங்கன வச்சு, அர்ச்சனை, ஆராதனை, அபிஷேகம் எல்லாம் பண்ணி, காணிக்கை குடுத்து அனுப்பி வைப்போம்........

பயலலிதா : நீங்க எல்லாம், என்ன பண்ணி கிழிக்கறீங்க.... ஆட்சிதான் இல்ல... இந்த மாதிரி சின்ன பிஸ்கோத்து பசங்க மேட்டர கூட கண்ட்ரோல்-ல வைக்க முடியலியா?

பயலலிதாவின் உக்கிர அர்ச்சனை வாங்கிய "தண்ணீர்செல்வம்", "பயகுமார்" எல்லாம் கிலியடித்து பம்முகிறார்கள்...... போயிஎன்ன ஏதுன்னு பாத்து, அந்த பையன இங்க கூட்டிட்டு வாங்க, கொஞ்சம் வேப்பிலை அடிச்சு, தாயத்து கட்டி குங்குமம் குடுப்போம்......

பூமதாஸ் : என்ன கிழிக்கரீங்கய்யா.... ஒவ்வொரு நடிகன், அரசியலுக்கு வரும் போதும், நாம கஷ்டப்பட்டு, அவங்க நடிச்ச படப்பொட்டிய தூக்கி போய், கொளுத்தறதும்..... அவனுங்கள அடிக்கறதும் .... இத இப்போவே, முடிச்சாகணும்..... என்ன பண்ற... அவன் நடிச்ச படம் ஏதாவது தியேட்டர்ல ஓடுச்சுன்னா, அங்க போய் ரகளை பண்ணுங்க.... முடிஞ்சா, அந்த படப்பொட்டிய எடுத்து, ரோட்டுல போட்டு தீ வச்சு கொளுத்துங்க...

கிஜயகாந்த் : ஏயி.... நீ என்ன பெரிய இவனா..... நான் மொதல்ல ஒரு படத்துல ஒனக்கு நடிச்சு குடுக்கலேன்னா, நீ இப்போ, இவ்ளோ பெரிய ஆளா ஆயிருப்பியா?? மவனே.... வந்த வழியே ஓடிடு..... இல்ல.... நடக்கறதே வேற ... என்று "குஜய்" வந்தால் பேச வேண்டிய டயலாக்கை ஒத்திகை பார்த்து கொண்டிருக்கிறார்...

கண்கள் கோவை பழமாக சிவக்க ஆரம்பிக்கிறது.... கை நேராக, டீப்பாயில் இருக்கும் "டாஸ்மாக்" சமாசாரத்தை எடுக்கிறது........ மச்சான் "கிதீஷ்" கிலியடித்து பார்த்து கொண்டிருக்கிறார்.. ஆஹா, இன்னிக்கி ஐயனாரு மலையேற போறாருடோய்.....

பீரரசு : வரேன்னு சொல்றவன் எல்லாம் வரது இல்ல... ஆனா, நீங்க வரவே மாட்டேங்கன்னு நெனச்சேன். வந்துட்டீங்க ..... என்னோட ஆபீசுக்கும், அப்படியே அரசியலுக்கும்... என்று ஒரு பெரிய பிட் போடுகிறார்........... இந்த டயலாக் நம்ம "குஜய்" வந்தா எடுபடுமா? என்று தன் எடுபிடிகளிடம் கேட்கிறார்..... அண்ணே, இது சூப்பர் டயலாக்னே என்று கோரசாக கும்மியடிக்கிறார்கள்..... நைட் கிடைக்கப்போகும் சரக்கை மனதில் வைத்து......

குஜய் : ன்னாவ்...... சார்.... இல்ல.... அய்யா, இதுதான் சரி என்று சொல்லிக்கொண்டே கீபாலபுரம் நுழைகிறார்......

இளைய தமிழே வருக.....இந்தியாவை காக்க வருக என்ற போர்ட் தாங்கி பிடித்தபடி, போர்காட்டார் வீட்டு வாசலில் நிற்கிறார்.......

வாங்க தம்பி.... நீங்களும் உங்கள் சுற்றமும் நலமா..... என்று உப்பு காகிதத்தை தகரத்தில் தேய்த்த குரல் கேட்டு, அந்த திசையை நோக்கி வணக்கம் போடுகிறார்....

வலைஞர் : தம்பி.... பசங்க இப்போதான் உங்க அரசியல் முடிவு பத்தி, என் கிட்ட சொன்னாங்க....... ஒங்கள மாதிரி இளைஞர்கள் தான் இப்போ, அரசியலுக்கு தேவை ...... ஏன், கஷ்டப்பட்டு புது கட்சி தொடங்கணும்... நம்ம கட்சி தான் இருக்கே, ஒங்கள மாதிரி, அரசியல் ஆசை உள்ள இளைஞர்களுக்கு...... என்கிறார்.

குஜய் : அய்யா..... ஒங்களுக்கு தெரியாதது இல்ல.... வரிசையா.... கூட்ஸ் வண்டி கணக்கா, என்னோட மூணு படமும் படுத்துடுச்சு....... அதான், ஒரு அரசியல் பில்ட்-அப் குடுத்து நம்ம சினிமா மார்கெட் சரி பண்ணலாம்னு.....

வலைஞர் : இதுக்கு ஏன், இவ்ளோ கஷ்டபடனும்...... அடுத்த படத்த, நானே "விதியநிதி" கிட்ட சொல்லி தயாரிக்க சொல்றேன்.... நானே கதை, வசனம் எழுதறேன்..... பெரிய பட்ஜெட்ல தயாரிச்சுடுவோம்...... "புலியின் மீசை" படம் பேரு... எப்படி........ அப்படியே "விரச ஒலி"ல ஒரு கவிதை எழுதி இந்த படத்த மக்களுக்கு அறிமுகம் பண்ணிடுவோம் சரிதானே என்று கரகரக்கிறார்...... போர்காட்டாரும், பொறைகிருகனும் ஆமோதித்து ஆமாம் தலைவரே, அப்படியே பண்ணிடுவோம் என்று கோரசாக கூவுகிறார்கள்....

குஜய் : பெரிய பட்ஜெட் ஓகே...... விதியநிதி ஓகே.... இப்போதான் "பில்லு" படுத்துச்சு.... அடுத்த படமும் பப்படமா .... இதுல, தாத்தா கதை வசனமா? நான் எஸ்கேப் என்று கதறியபடி, காம்பவுண்ட் சுவர் தாவி ஓடுகிறார்....... வழியில், ஒரு வாகனம் அவரை மடக்கி "கீயஸ் கார்டன்" தூக்கி போகிறது.....

கீயஸ் கார்டனில் நுழைந்த வண்டி, நடிகர் "குஜயை" கீழே இறக்கி விடுகிறது. "தண்ணீர்செல்வம்" "குஜயை" எழுப்பி பயலலிதா முன்பு நிறுத்துகிறார்.

திருதிருவென முழித்த "குஜய்" பயலலிதாவை பார்த்து, வெள்ளை யானை, பெரிய வெள்ளை யானை என்று அலறுகிறார்......

பயலலிதா முகம், பரங்கி பழத்தை போல சிவக்கிறது... இந்த மரியாதை தெரியாத சின்ன பையனை உடனே இந்த தோட்டத்துல இருந்து அனுப்பிடுங்க, யு ஆல் கேன் கோ அவுட் என்று குரல் கேட்டதும், அந்த அனலில் பொசுங்கிய "தண்ணீர்செல்வம்", "பயகுமார்" எல்லாம் தலை தெறிக்க ஓடுகிறார்கள்......

கிஜயகாந்த், பீரரசுடன் ஒரு வண்டியில் ஏறி, "குஜய்" எங்கே என்று தேடுகிறார்.. நாம ரெண்டு பெரும் சேர்ந்து "குஜய்" ஒரு வழி பண்ணனும்பா...... என்று சொல்லிவிட்டு..... திடீரென்று டேய் பரதேசி... டாஸ்மாக் கடைய பாத்துட்டும் வண்டிய நிறுத்தாம போனாக்க என்னடா அர்த்தம் என்று தனது வலது உருட்டுக்கட்டையை (வலது கையைத்தான்) "பீரரசு" நோக்கி வீசுகிறார்... ஓடும் வண்டியிலிருந்து "பீரரசு" நடுரோட்டில் தாவுகிறார்..... கிஜயகாந்த் வண்டி டாஸ்மாக் கடையருகே சடன் பிரேக் போடுகிறது.

எல்லோரும் "குஜய்" எங்கிருக்கிறார் என்று வலை போட்டு தேடி கொண்டிருக்க... அவரோ...... அவரின் புது பட நாயகியுடன் ஹைதராபாத் ராமோஜிராவ் கார்டனில் ........ கொண்டிருந்தார் (தப்பா எதுவும் நினைக்காதீங்க, டூயட் பாடி கொண்டிருந்தார்)............

மச்சி மச்சி மச்சி
நான் தொடங்க போறேன் கட்சி....

இச்சு இச்சு இச்சு
ஒன் கன்னத்த தாடி பிச்சு

(இது டூயட்டா, இல்ல கட்சியின் கொள்கை பாடலா என்iறு யாருக்கும் தெரியாது, பாடலை எழுதிய பீரரசு உட்பட...) ...

12 comments:

கௌதமன் said...

குஜய் : அய்யா..... ஒங்களுக்கு தெரியாதது இல்ல.... வரிசையா.... கூட்ஸ் வண்டி கணக்கா, என்னோட மூணு படமும் படுத்துடுச்சு....... அதான், ஒரு அரசியல் பில்ட்-அப் குடுத்து நம்ம மார்கட்ட சரி பண்ணலாம்னு.....


Sooper ayyaa soooper.
Engeyo poyitteenga!

R.Gopi said...

Gouthaman Sir

This is just a sample..... If you can go back to my previous articles, you can see terrific comedies like this.....

Thanks for your visit and comment.....

Eswari said...

என்ன கற்பனை, என்ன நகைச்சுவை !!!!!!!
super
பெயர்கள் எல்லாம் அழகா பொருக்கி போட்டு இருக்கீங்க
அடுக்கு ஒரு பெரிய சபாஷ்

R.Gopi said...

Welcome Eswari

Thanks for your maiden visit and encouraging comments.

Do visit regularly and encourage me.....

mazhai said...

தப்பித்த தமிழக மக்கள்.

யப்பா...இன்னுமொரு கட்சியா...பேசாம வீட்டுக்கொரு கட்சி தொடங்கிடுவோமா பாருங்க, அப்புறம் வேற் எவனும் கட்சி தொடங்கி கலாட்டா பண்ணமாட்டானில்ல ?

R.Gopi said...

//mazhai said...
தப்பித்த தமிழக மக்கள்.

யப்பா...இன்னுமொரு கட்சியா...பேசாம வீட்டுக்கொரு கட்சி தொடங்கிடுவோமா பாருங்க, அப்புறம் வேற் எவனும் கட்சி தொடங்கி கலாட்டா பண்ணமாட்டானில்ல ?//

Ellaarum katchi thodangittaa, vote podaradhukku yaaru iruppaangannu theriyala....

sreeja said...

thanks for adding my site in your list.

Sreeja.K

R.Gopi said...

Welcome Sreeja

Thanks for your maiden visit and comments.

Do visit regularly and share your views

வால்பையன் said...

ஆனந்த விகடன் லூசுப்பையன் படிச்சா மாதிரி இருந்தது!

R.Gopi said...

//வால்பையன் said...
ஆனந்த விகடன் லூசுப்பையன் படிச்சா மாதிரி இருந்தது!//

நன்றி வால்.....

வந்ததற்கும், வந்து படித்ததற்கும், படித்து கமெண்ட் போட்டதற்கும்......

Sathish Mayil said...

Super appu.

R.Gopi said...

//Sathish Mayil said...
Super appu.//

Thanks Mayil....