வறுமையின் நிறம் சிகப்பு திரைப்படத்தில் கமல்ஹாசன் ஒரு இண்டெர்வியூ போவார். ஒரு இந்திய மாகாணத்தின் முதல் மந்திரி யார், என கோட்டு(டி)க்கார மானேஜர் கேட்க. நேற்றா! இன்றா!! நாளையா!!! என்று புரட்சித்தலைவர் படப் பெயரை எதிர் கேள்வியாய் இங்கிலீஷில் கேட்பார். இடைவேளை விடுவார்கள், பாப்கார்ன் வாங்க நாமும் ஒதுங்குவோம்.
இதே மாதிரி பதில் சொல்ல தோதுவாய் ஒரு கேள்வி. உலகத்தின் உயரமான கட்டிடம் எது என கேட்டால் நீங்கள் விவரமானவர்கள் சரியாக ஊகித்து வீட்டீர்களே. நேற்றா! இன்றா!! நாளையா!!!. உலகின் உயரமான கட்டிடம் எனும் அந்தஸ்தை இன்று துபாய் தனக்கு சொந்தம் ஆக்கி இருக்கிறது. கட்டிட்த்தின் பெயர் புர்ஜ் துபாய்.
சரி உயரம் என்ன?? உஷ்... சொல்ல மாட்டோம் (நம்ம கேப்டன் விஜயகாந்த் எப்போவும் சொல்ற ஸ்டைல்தான்... தெரியும், ஆனால் சொல்ல மாட்டேன்...) ஏங்க??? என்று நாம் கேட்டால், அவர்கள் சொல்கிறார்கள்... நாங்களும் இதமா சொல்லப் போயி வேற எதாவது ஊரில இதை விட உசரமா கட்டிப்புட்டா, நாங்க என்ன செய்யுறது. தென் கொரியா காண்டிராக்டர், சாம்சங் கம்பெனிக்கு, அவர்தாங்க பில்டிங் கட்டுறவர், அவருக்காவது தெரியும் என நம்புகிறோம்.
இன்னைக்கு தேதிக்கு 146 மாடி முடிஞ்சிருக்கு... உசரமா ஒரே ஒரு கட்டிடம் கட்டாம, அத ஒரு ஊரு மாதிரி கட்டுறது நம்ம துபாய் துணிச்சல். இந்த ஊரு கட்ட போட்ட திட்டம் எவ்வளவு. அதிகமில்லை ஜெண்டில்மேன் சுமார் 9,000 கோடி.
நவ நாகரீக வர்த்தக மையமும், நட்சத்திர ஹோட்டல்களும் அடக்கிய சொர்க்க புரியே இந்த டவுன் டவுண். பின்னே 30,000 வர்த்தக மற்றும் குடியிருப்பு வசதிகளும் உலகின் மிக பெரிய ஷாப்பிங் மால், பெயர் துபாய் மால் இதில் அடக்கம். இந்த கடை திறந்து இப்போ ஒரு வருசம் ஆச்சு. இதில் உசரமான ஒரே கட்டிடத்துக்கு மாத்திரம் 400 கோடி.
போற போக்கில ஒரு உபரித் தகவல். துபாயின் கட்டிட கட்டுமானத்தை பற்றி புரிந்து கொள்ள இந்த தகவல் உதவும் என நம்புகிறோம். இந்த உலகத்தில் உள்ள கிரேன் அதாங்க, மும்பை எக்ஸ்பிரஸ்ல நம்ம கமல்ஹாசன் ஏறி குரங்கு கூட விளையாடுவாரே, அந்த இரும்பு ஏணி தான். அதில 35% இங்கே துபாய்ல தான் குந்திகிட்டு இருக்கு. உலக விகித்தில் இது ரொம்ப ஜாஸ்தி, ஏன்யா 35% கிரேன் இங்க இருக்குன்னா அத்தன கட்டிட வேலை இங்க தான் நடக்குதுன்னு அர்த்தம்...
உசரமான கட்டிடம் கட்டுறோம் என சவுண்டு விட்ட நேரத்தில் இருந்து நாங்களும் பார்த்துக் கிட்டே இருக்கோம். கிரேன் வருது, ஆள் வருது, அம்பு வருது, அப்பு வருது, குப்பு வருது.. ஆனா பில்டிங் மட்டும் காணேம், என்னாடா வருசம் ஒண்ணாச்சே, ஒரு மாடி கூட கட்டலயேன்னு பார்த்தா சோக்கா சொன்னாரு துரை ஒரு கதை. 100 மாடி, 150 மாடின்னு கட்டுறது எப்படி, பூரா காங்கீரீட்டில தூண் எழுப்பி, சும்மான்னாக்க ஊடு செங்கல் வைச்சு சில சுவர், கண்ணாடில மீதி சுவர வைச்சி பூசாம பெயிண்ட் அடிக்காம, முடிக்கிறது தான் இந்த முறை. அதனால பில்டிங் நிக்கிறதுக்காக பூமிக்கு மேல உள்ள மாதிரி பூமிக்கு கீழேயும் ஆழமா பவுண்டேஷன் இருக்குதாம். சுருக்காச் சொன்னா 100 மாடில கட்டிடம் கட்ட 100 மாடி ஆழத்துக்கு குழி தோண்டி, பவுண்டேஷன் போட்டு அப்புறம் தூக்கணும் பில்டிங்க.
அதனால தான் பூமிக்கு கீழே பள்ளம் தோண்டுறது, நிரப்புறதுண்ணு நேரம் ஆனாலும் பூமிக்கு மேல சுளுவா அஞ்சு மாடி எட்டு மாடின்னு ஒரு வாரத்தில கட்டிராங்க. சரி, உலகத்திலே பெரிய டவர் கட்டியாச்சு, இவ்வளவு உசரமா கட்டி என்ன செய்ய போறீங்க, என்ற கேள்வி நம் வாசகர் மனதில் வரலாம். நீங்கள் நினைப்பதை உணர்ந்து பதில் சொல்வதே இல்லாமல் வேறு என்ன வேலை. தங்க ஒரு சர்வதேச புகழ் அர்மானி தன்னோட நட்சத்திர ஹோட்டல இங்க நட்த்த போகுது. 175 சொகுசு அறைகளும், 144 விரிவான தங்கும் வசதிகளும் அடங்கிய சூட்களுமென திட்டம் உண்டு. சுமார் 1,500 அடி உயரத்தில பொது மக்கள் போய் மேலே இருந்து கீழே பார்க்க வைக்க திட்டம் இருக்குது. இதுவே உலகத்தின் மிக உய்ரமான பார்வை மையம் என்பதும் ஒரு தகவல்.
144 தொடங்கி 146 மாடி வரை உள் வெளி கிளப். ஏங்க, 100/ 150 மாடியா இருக்கே. லிப்ட் ரொம்ப நேரமாகுமோ, என பயப்படாமல் இருக்க ஹை ஸ்பீடு லிஃப்ட் உதவியா இருக்கு. எண்ணம் உயர்வானால் செயல் உயர்வாகும். உயரம் அண்ணார்ந்து பார்க்க வைத்து அபிமானம் கூட்டும்... கூடவே ரொம்ப நேரம் பார்த்தால், கழுத்து வலியையும்...
துபாய் சுற்றி சுற்றி பல்பொருள் அங்காடிகள் உண்டு. சராசரி துபாய் வாழ் மக்களின் வார இறுதி திட்டங்களில் நிச்சயம் இது இடம் பிடிக்கும். வெறுமையான ஒரு தள்ளு வண்டியுடன் உள்ளே சென்று, கண்ணில் பார்த்தது, கையில் பிடித்து போடு. கொண்டு போன நடை வண்டியை நிரப்பு என்பதான எளிதான செயல் திட்டங்கள் உண்டு. என்ன இப்படிக்கா ஒரு நடை போய் வந்தால், மூன்று மணி நேரமும் ஒரு 500 திராமும் கணக்கில் கழியும். இதனால் தானே என்னவோ ஊரை சுற்றி ஷாப்பிங். எத்தனை வந்தாலும் போத வில்லை. பாருங்களேன் மொத்த பல் பொருள் அங்காடிகள் வாடிக்கையாளரை கவர, அதிரடி விலை குறைப்பு, தரம் என்று மட்டும் இல்லாமல் அனுபவம், உணர்வு என்ற அடுத்த கட்ட நிர்மாணத்துக்கு சென்று விட்டார்கள்.
உதாரணத்துக்கு இபுன் பத்துதா (இதுவும் ஒரு ஷாப்பிங் மால் பெயர்)..பார்ப்போமே. நம்ம பண்ணைபுர ராசா, அதான் இளையராஜா தத்துவார்த்தமாய் சொல்லுவார். இலக்கு என்பதற்கு இருப்பு கிடையாது. அது ஒரு ஓடும் தடாகம். சரிதான்.
நேற்று இந்த இபுன் பத்துதா திறந்த போது, உலகின் மிகப் பெரிய அங்காடியாய் இருந்த்து. இன்று அதை துபாய் மால் தட்டிச் சென்று விட்ட்து. சரி இப்போது என்ன செய்ய. உலகின் மிகப் பெரிய தத்துவ அங்காடி, அதாவது தீம் அங்காடி. சைசில் இது ஒன்றும் சளைத்த்து இல்லை. ஆறு அரங்கங்களாக சுமார் 1.3 கீ,மீ தூரத்தில் ஒரு அரங்கம், என்று சுமார் 8 கீ.மீ தூரம் உண்டு. சுருக்கமாய் சொன்னால் முழு தூரத்தையும் கடக்க ஒரு மனிதனால் ஒரு நாளாய் முடியாது. என்ன செய்யணும். ஒரு பக்கம் போயி, கால் வலிக்கிற வரை நடந்து பார்த்திட்டு, அதே இட்த்துக்கு திரும்ப வந்து வீட்டுக்கு போயிற வேண்டியது தான். இதே கணக்கில ஒரு நாலைஞ்சு தடவையா வந்து வந்து போனா ஓரளவுக்கு பார்த்துடலாம்.... 21 தியேட்டர்கள் உண்டு. ஐ மேக்ஸ் திரையும் உண்டு. என்ன, காசுதான் புடுங்கிடுவாங்க.. நம்ம காசுல சுளையா 500/600 துண்டு....
அரபு நாட்டின் சரித்திர அறிஞர் இபுன் பத்துதா 14ஆம் நூற்றாண்டின் ஆள். தன் தொலை நோக்கு பார்வையால், 6 நாடுகளில் சுற்றி தன் பயணம் பற்றிய விவரங்கள் எழுதியுள்ளார். அவர் நினைவாக அவர் பார்த்த 6 நாடுகளை அரங்கம் ஆக்கி இந்தியா, சீனா, எகிப்து என பெயரிட்டு சரித்திரத்தை ஷாப்பிங் ஆக்கியது சூப்பர்.
யார் இந்த இபுன் பதுத்தா. இங்கே சென்று பாருங்கள்..
ஐந்து நட்சத்திர ஹோட்டல்ல தான் நான் காப்பி குடிப்பேன். இதுக்கு மேலே எதாவது இருக்கா என்றால், இருக்கு வாங்க. ஏழு நட்சத்திரம் ஹோட்டல் ஒண்ணு கடலுக்குள்ள கட்டியிருக்காங்க. அது என்ன என்ற விவரம் தெரிய அடுத்த பகுதிக்கு காத்திருப்போமா..
(இன்னும் கொஞ்சமே வரும்...)
10 comments:
புதுப்பொலிவுடன் தமிழர்ஸ்
புதுப்பொலிவுடன் வெளிவந்துள்ள தமிழர்ஸ் இணையத்தில் உங்கள் பதிவுகளை இணைக்கலாம் வாங்க...
நீங்கள் மதிப்பு மிக்க பதிவரானால் உங்கள் தளத்தின் பதிவு தானாகவே இணையும்...
பல தள செய்திகள்...
ஓட்டுப்பட்டை வேண்டாம்...
எந்த நிரலியையும் நீங்கள் இணைக்கவேண்டிய கட்டாயம் இல்லை.
முழுவதும் தமிழில் படிக்க....
தமிழ்செய்திகளை வாசிக்க
(இது புதுசு) - உங்கள் தளத்தின் டிராபிக்கை அதிகரிக்க 100 சர்ச் என்ஜின் சப்மிட்
(விரைவில்) - இலவசமாய் இந்திய புக்மார்க் தளங்களில் (தமிழ், ஆங்கிலம்) உங்கள் பதிவை சில நொடிகளில் (Auto Submit) புக்மார்க் செய்ய
தமிழ்செய்திகளை இணைக்க
ஆங்கில செய்திகளை வாசிக்க
வலைப்பூ தரவரிசை
சினிமா புக்மார்க்குகள்
சினிமா புகைப்படங்கள்
//பூமிக்கு மேல சுளுவா அஞ்சுமாடி
எட்டுமாடின்னு ஒரு வாரத்தில் கட்டிராங்க//
பிரமிப்பாக உள்ளது.
//1500அடி உயரத்தில் ‘ பார்வைமையம்//’
உலகத்தின் மிக உயரமான பார்வைமையத்தை கீழே இருந்துப் பார்த்து கழுத்து வலிக்கிறது,மேலே
இருந்துப் பார்த்து தலை சுற்றுகிறது.
நன்றி கோபி.
பாஸ்போர்ட் இருக்கு.போக வர டிக்கெட்,செலவை பாத்துகிட்டின்னா ஒருக்கா வந்து உன்னை பார்ப்பேன் கோபி
மிக நல்ல பிளாக்
பிரம்மாண்டம்...
கட்டிடம், படம் மட்டும் அல்ல உங்கள் வர்ணனையும்தான்...
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி கோமதி மேடம்... எங்களுக்கும் பிரமிப்பாக தான் உள்ளது... என்ன, இந்த மந்த பொருளாதார நிலை சீக்கிரம் சரியாகி, அனைவரின் முகத்திலும் புன்னகை வரும் நாளை எதிர்பார்க்கிறேன்...
//தண்டோரா ...... said...
பாஸ்போர்ட் இருக்கு.போக வர டிக்கெட்,செலவை பாத்துகிட்டின்னா ஒருக்கா வந்து உன்னை பார்ப்பேன் கோபி//
வாங்க தண்டோரா... ஆயிரக்கணக்கான பெயரை தாங்கி வரும் வானூர்தி, உங்க ஒருத்தரையா வேணாம்னு சொல்ல போவுது... எப்போ வாரீகன்னு ஒரு கடுதாசி போடுங்க.. பொறவு பாப்போம்...
//Learn Speaking English said...
மிக நல்ல பிளாக்//
வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி...
// ஈ ரா said...
பிரம்மாண்டம்...
கட்டிடம், படம் மட்டும் அல்ல உங்கள் வர்ணனையும்தான்...//
நன்றி ஈ.ரா... எல்லா புகழும் படுக்காளி ஒருவருக்கே....
அப்பாடாஆஆஆஆஆஆஆஆஆஆஆ..12ம் பாகம் எப்படிங்க...கஜினிமுகமது மாதிரி விடாம தொடர்ச்சியா இந்த தொடரை எழுதறீங்க..துபாயின் சிறப்பு அம்சங்கள் வாய் பிளக்க செய்கிறது அதை நீங்களும் உரை நடையாக தராமல் படிக்கிறவங்களுக்கு போர் அடிக்காம நகைச்சுவை கலந்து எதார்தமா எழுதியிருக்கீங்க படிக்கும் போது அந்த ஊரை பார்க்கணும் என்று ஆவல் பிறக்கிறது.. நல்லாயிருக்கு கோபி
//சுருக்காச் சொன்னா 100 மாடில கட்டிடம் கட்ட 100 மாடி ஆழத்துக்கு குழி தோண்டி, பவுண்டேஷன் போட்டு அப்புறம் தூக்கணும் பில்டிங்க.//
அந்த பக்கம் பூமி வந்துடும் (திறந்திடும்) போல இருக்கே ;-)
கோபி, துபாய் (தொழிலாளர்கள்) தாங்கும் அறைகள் பற்றி படம் போடுங்க..விவரத்துடன்..எனக்கு மின்னஞ்சல் வந்தது.
//தமிழரசி said...
அப்பாடாஆஆஆஆஆஆஆஆஆஆஆ..12ம் பாகம் எப்படிங்க...கஜினிமுகமது மாதிரி விடாம தொடர்ச்சியா இந்த தொடரை எழுதறீங்க..துபாயின் சிறப்பு அம்சங்கள் வாய் பிளக்க செய்கிறது அதை நீங்களும் உரை நடையாக தராமல் படிக்கிறவங்களுக்கு போர் அடிக்காம நகைச்சுவை கலந்து எதார்தமா எழுதியிருக்கீங்க படிக்கும் போது அந்த ஊரை பார்க்கணும் என்று ஆவல் பிறக்கிறது.. நல்லாயிருக்கு கோபி//
வாங்க தமிழரசி...
உங்க கமெண்டே ஒரு பகுதி படிச்ச மாதிரி இருக்கு... வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி... ஒரு முறை வாருங்கள்.
//கிரி said...
//சுருக்காச் சொன்னா 100 மாடில கட்டிடம் கட்ட 100 மாடி ஆழத்துக்கு குழி தோண்டி, பவுண்டேஷன் போட்டு அப்புறம் தூக்கணும் பில்டிங்க.//
அந்த பக்கம் பூமி வந்துடும் (திறந்திடும்) போல இருக்கே ;-)
கோபி, துபாய் (தொழிலாளர்கள்) தாங்கும் அறைகள் பற்றி படம் போடுங்க.. விவரத்துடன்.. எனக்கு மின்னஞ்சல் வந்தது.//
கிரி... தொழிலாளர்கள் தங்கும் முறை / அறை பற்றி ஏற்கனவே எழுதி விட்டோமே... இன்னும் விடுபட்டவைகளை பற்றி எழுத முயற்சிக்கிறோம்...
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி கிரி...
//இந்த மந்த பொருளாதார நிலை
சீக்கிரம் சரியாகி அனைவரின்
முகத்திலும் புன்னகை வரும் நாளை
எதிர்ப்பார்க்கிறேன்//
கோபி உங்கள் எதிர்ப்பார்ப்பு வெற்றியடைய வாழ்த்துக்கள்!
வாழ்க வளமுடன்.
Post a Comment