காங்கிரஸ் கூட்டணிக்கு "டாஸ்மாக்" கபாலி பிரச்சாரம்


இங்க வந்து குந்திகினு கீற கோடிக்கணக்கான ஜனங்களுக்கு வணக்கம். நாந்தான் "டாஸ்மாக் கபாலி", கபால்னு வந்து கூவறேன்.

நான் இந்த சந்துல வந்துகினு இருக்க சொல்ல, ஒரு பேமானி நம்மளாண்ட சோக்கா போட்டான் ஒரு மேட்டரு. அத்த கேட்டேன்... பேஜாராயிடேம்ப்பா ... என் கண்ணு பனிச்சு போச்சு. நெஞ்சு கனத்து போச்சு (நம்ம "தல" சொன்ன அதே இஷ்டைல் தான் ....).
அது இன்னான்னா, நம்ம சோனியா காந்திக்கு இந்தியாவுல சொந்தமா ஒரு வூடு கூட இல்லையாம், அத்த வுடுங்க, ஒரு காரு கூட இல்லையாமே?

இன்னாபா இது படா அக்குருமா கீதே. இந்த நாட்டுக்கே தங்க தலைவி அவுங்க, அவுங்களுக்கு இல்லேன்னா, எப்டிப்பா? நம்ம கைல கூட ஒரு ரிக்சா கீது.... அதுவும் மோட்டார் வச்ச ரிக்சா.
பாவம்பா, அந்தம்மாவுக்கு ஒரே ஒரு வூடுதான் கீதாம், அதுகூட இங்க இல்லப்பா........ இத்தாலில .... அதுவும் சின்ன வூடுப்பா ...... ஐய்யே... இன்னாபா சிரிக்கற .... சின்ன வூடுன்னா வேற அர்த்தம்ப்பா ....... தம்மாத்தூண்டு வூடுப்பா ........ வெல கூட வெறும் 19 லட்சம்தானாம்.

அவுங்க மொத்தமா வச்சுகீற துட்டு கூட வெறும் 1.8 கோடிதானாம். நம்ம கதைய வுடுங்க... நம்மளுக்கு எப்போவும் இந்த தெருக்கோடிதான்..... பாவம்பா அந்தம்மா .......... இன்னோவோப்பா, என் மனசுல இன்னா தோணிச்சோ அத்த சொல்லிட்டேன்.
பாவம், இந்த ஏழைக்கு ஓட்டு போட்டு வுடுங்க. எனக்கு இல்லேப்பா, நம்மள வுட பெரிய ஏழை சோனியா அம்மாவுக்கு..... இன்னாதான் இருந்தாலும், நம்ம தலீவிய வுட்டு குடுக்க முடியுமா.......
நான் சுருக்கால போய், "டாஸ்மாக்" வுட்டுகினு வரேன். நான் எந்த ரவுசும் பண்ணல. அதனால சொல்றத ஒயுங்கு மருவாதியா கேளுங்க..
போடுங்கம்மா ஓட்டு, கை சின்னத்த பாத்து ........
போடுங்கம்மா ஓட்டு, கை சின்னத்த பாத்து ........
(அந்த பக்கமா போயி நோட்டு வாங்குங்க ....... இந்த பக்கமா போயி ஓட்டு போடுங்க. ....... இத்த சொல்லிகினது - "டாஸ்மாக்" கபாலி).

5 comments:

. said...

கபாலி அண்ணாத்தே !!!

ஊட்டு மேட்டேர பத்தி விலா வாரிய சோக்கா சொன்ன

ஓட்டு நோட்டு தாட்டு போட்டு காட்டு காட்டு நு போட்டுஇருக்கிற வாத்தியாரே.

நீ போட்ட சௌண்ட்ல அவுல் செவுளா போச்சு

R.Gopi said...

வாங்க அண்த்தே வண்க்கம், குந்துங்க.. ஒரு மேட்டர் இருக்குது ......இன்னான்னா ....

எனக்கு இதுபோல பேசுன்னு சொல்லி குடுத்தது ரெண்டு பேரு

ஒருத்தரு கமலதாசன், இன்னொருத்தரு லூஸ் மோகன்.

இன்னா சொன்னாலும், கமலதாசன் போல சோக்கா பேச முடியாதுங்க.

செவுள்-ல அவுலா, சவுண்ட கொரச்சுகரேம்பா ......

டவுசர் பாண்டி said...

மொதல்ல இத பாரு நைனா !! போன மாசமே உன்ன எலீக்சன்ல நிக்க வச்சி கீது ,
அப்பால மீதி மேட்டர படி.

http://athekangal.blogspot.com/2009/03/blog-post.html

டவுசர் பாண்டி said...

யப்பா !! கபாலி நா இன்னா டான்னா, உனுக்கு வோட்டு கேக்கறேன், நீ வேற ஆருக்கோ, இப்பிடி ஜரண்டர், ஆயி பூட்டியே ? சொம்மா உஸ்தாது கணக்கா இருக்க தேவலையா ??
நம்ப ஏரியா பக்கமா வா நைனா !! பாந்த்ரா பாந்த்ராவா கீது ? ( மேட்டரு தாம்பா )

R.Gopi said...

அடடே

வாங்க டவுசர் பாண்டி அண்ணே

எப்டி கீறீங்க. இன்னா மேட்டரு. காலைலேயே டாஸ்மாக் கொஞ்சம் ஓவரா .... நம்ம ஏரியால வந்து சவுண்டு............

வரேன் வரேன் ஒங்க ஏரியா பக்கம் வரேம்பா ..... அந்த பாந்த்ராவையும் பாக்கணும்பா ...............