குடியிருக்க கூறு (ப்ளாட்) போட்டதில்
தென்றலை தொலைத்து
தாகம் தீர்க்கும் நீர்நிலைகளை இழந்தோம்...
செல்லுமிடம் எல்லாம் பேச எண்ணி
செல்லுலாரிடம் சிறைப்பட்டோம்...
சின்னஞ்சிறிய அலைபேசி
நம் அனைவரின் கைகளில் உறவாட
சந்தோஷமாய் பறந்து திரிந்த சிட்டுக்குருவியின் சங்கீதம் இழந்தோம்...
நம் அனைவரின் கைகளில் உறவாட
சந்தோஷமாய் பறந்து திரிந்த சிட்டுக்குருவியின் சங்கீதம் இழந்தோம்...
மனம் சொல்லும் இடம் விரைய
இறக்கைகளை
இரவல் வாங்கினோம்
மனம் போல் உடலும் பறந்து திரிய
பல ரக வாகனங்கள் வாங்கி
அது வெளியிடும் நச்சுப்புகையால்
நம் ஆரோக்கியத்தை இழந்தோம்...
அலுவல் அலம்பல் என ஆசைப்பட்டு
அந்நிய மொழி குடிபுக
தாய் மொழியை அந்நியமாக்கி
நாவில் சுவை இழந்தோம்
விரைவாய் செல்ல வேண்டி
வீதி கூட்டும் சாலைக்கென
மரங்களை வெட்டி சாய்த்ததில்,
இதம் தரும் நிழல்,
உடலுக்கு கிடைப்பதை இழந்தோம்....
வெட்டிய மரங்கள், விறகாகவும்,
வீட்டிற்கு கதவாகவும் ஆனதில்
ஒரு துளி காற்று இன்றி,
இயற்கையான குளுமையை இழந்தோம்...
வெள்ளையரிடம் குருதி சிந்தி,
சுதந்திரம் வாங்கி,
அதை உள்ளூர் கொள்ளையர்
கைகளில் தந்து நம் நாட்டை இழந்தோம்...
உச்சகட்ட இன்பம் தேடி, போதையின் பாதையை நாடி
வீடு, உறவுகள் தொலைத்து சந்தோஷம் முற்றும் இழந்தோம்...
பெண் வீட்டில் பொருள் வாங்கி
நம்மையே அடகு வைத்து,
உயிரினும் பெரிதான தன்மானம் இழந்தோம்...
கட்டியவளின் பேச்சு கேட்டு,
பெற்றோரை வீட்டை விட்டு துரத்த
நன்றி மறந்து,
நாம் வாழ்வின் பந்தம், பாசம் இழந்தோம்...
நாம் வாழ்வின் பந்தம், பாசம் இழந்தோம்...
பின்னாளில், அதே நிகழ்வை
நம் மக்கள் நமக்கு செய்தபோது
ஊரெல்லாம் புலம்பினோம்,
நம் தம்பட்டத்தில் தவறான ஒர் நெறிமுறை சொன்னோம்
அதை தாங்காத மனநிலையில் நம் உயிரை இழந்தோம்...
(ஆர்.கோபி / லாரன்ஸ்)