டாக்டர் விஜயகாந்த் நடிப்பில் விருத்தகிரி - அசத்தல் பாடல்கள்


இதுவரை நான் செய்யவே செய்யாத ஒன்றை (ஆடியோ விமர்சனம், திரைப்பட விமர்சனம்) செய்ய வைத்த நம் “கேப்டன்” டாக்டர் விஜயகாந்த் அவர்களுக்கு முதலில் நன்றி சொல்லி இந்த பதிவை
அவருக்கு சமர்ப்பிக்கிறேன்... (டெர்ரர் ஸ்டார்ர்ர்ர்ர்ர்ர்ர்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்........)

விஜயகாந்த் இயக்கி கதாநாயகனாக நடித்துள்ள படம் விருதகிரி. இப்படத்தை எல்.கே.சுதீஷ் தயாரித்துள்ளார். இப்படத்தின் பாடல் சி.டி. வெளியிட்டு விழா நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் திங்கள்கிழமை நடந்தது.

விழாவில் தே.மு.தி.க. அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், டைரக்டர்கள் ஆர்.கே.செல்வமணி, லிங்குசாமி, ஏ.வெங்கடேஷ், மாதேஷ், எழில், தயாரிப்பாளர்கள் முரளிதரன், சாமிநாதன், டி.சிவா, சீனிவாசன், எல்.கே. சுதீஷ் மற்றும் அருள்பதி, கலைப்புலி சேகரன், அனகை டி.முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விஜயகாந்த் பாடல் சி.டி.யை வெளியிட நடிகர் சத்யராஜ் பெற்றுக் கொண்டார். விழாவில் பேசிய விஜயகாந்த்,

எனது முந்தைய படங்களான தர்மபுரி, சுதேசி, சபரி போன்ற படங்களை வெளியிட முடியாமல் நிறைய பிரச்சினைகளை சந்தித்தேன். அதே பிரச்சினைகள் விருதகிரி படத்துக்கும் ஏற்பட்டு உள்ளது.


இந்த படத்துக்கு தியேட்டர்கள் கிடைக்கவில்லை. ரிலீஸ் செய்ய விடாமல் தடுக்கும் முயற்சிகளும் நடக்கின்றன. இந்த படத்தை தடுத்தால் விஜயகாந்த் யார் என்பதை காட்டுவேன். எனக்கு தொண்டர்கள் இருக்கிறார்கள். படத்தை எப்படி ரிலீஸ் செய்கிறேன் என்பதை பொறுத்திருந்து பாருங்கள். தியேட்டர் கிடைக்கவில்லை என்றால், நடுரோட்டில் வேட்டி கட்டி அதில் படத்தை திரையிடுவேன் என்றும் விஜயகாந்த் கர்ஜித்தார்.....

இந்த விழாவுக்கு என்னை வாழ்த்துவதற்காக திரையுலகைச் சேர்ந்தவர் பலர் வந்து

இருக்கிறார்கள். கவிஞர் வாலியின் பாடல்களை வெகுவாக ரசித்தவன் நான். அவருக்கு எனது படத்தின் முதல் பாடலை எழுத கொடுத்தேன். விருதகிரி படம் 25 சதவீதம் சென்னையிலும், 75 சதவீதம் வெளிநாடுகளிலும் படமாக்கப்பட்டு உள்ளது. அடுத்தவர்களை நம்பாமல், நானே டைரக்சன் செய்துள்ளேன்.... விருத்தகிரிபடம் ஆஸ்கருக்கு அனுப்பப்படுமா என்ற கேள்வியை தன்னை கேட்க வேண்டாம் என்று அடக்கத்துடன் பேசினார்....


நான் அ.தி.மு.க.வையும், காங்கிரஸ் கட்சியையும் விமர்சிப்பதில்லை என பேசுகிறார்கள். பத்திரிகை

களிலும் எழுதுகிறார்கள். அப்படியென்றால் இந்த கட்சிகளுடன் நான் கூட்டணி அமைப்பேன் என்றும் கூறுகிறார்கள்.

ஒரு விஷயத்தை தெளிவாக கூறிக்கொள்கிறேன்.

நான் யாரையும் நம்பி அரசியலுக்கு வரவில்லை. மக்களையும், தெய்வத்தையும் நம்பித்தான் அரசியலுக்கு வந்தேன். எனது மடியில் கனமில்லை. அதனால் எனக்கு பயமும் இல்லை.

காங்கிரஸ் கட்சியிடம் நான் ரூ. 100 கோடி வாங்கி விட்டதாக பேசுகிறார்கள். அ.தி.மு.க.விடமும் ரூ. 100 கோடி வாங்கி விட்டேன் என்கிறார்கள். அப்படி பணம் வாங்கி இருந்தால் விருதகிரி படத்தை ரிலீஸ் செய்ய இவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கமாட்டேன். கேப்டன் டி.வி.யையும் எங்கேயோ கொண்டு போய் இருப்பேன்.

பெரியார் பெயரில் சமத்துவபுரங்கள் ஆரம்பிக்கப்பட்டன. அவற்றின் நிலைமை இப்போது என்ன என்பது அனைவருக்கும் தெரியும். 59 லட்சம் ஏழைகளுக்கு இலவச வீடுக

ள் கட்டித்தரப்படுவதாக சொல்லப்படுகிறது. அப்படியென்றால் 1967ல் ஆட்சிக்கு வந்தவர்களால் இன்னும் வறுமையை ஒழிக்க முடியவில்லை என்றுதானே அர்த்தம்.

பிச்சைக்காரர் ஒழிப்பு திட்டம், கண்ணொளி திட்டம் போன்றவற்றால் பயன் அடைந்தவர்கள் யார் என்பதை காட்டுங்கள். நான் வறுமையை ஒழிப்பேன் என்று பேசி வருகிறேன்.

அப்படியென்றால் தனி மனித வருமானத்தை பெருக்குவேன் என்றுதான் அர்த்தம். இவ்வாறு விஜயகாந்த் பேசினார்

இந்த விழாவில் சொல்லப்பட்ட இன்னொரு விஷயம்.....

இந்திய அபோஸ்தல கிறிஸ்தவ பேராயர்களின் திருச்சபை டிசம்பர் 3ம் தேதி விஜயகாந்துக்கு சென்னையில் நடக்கும் விழாவில் டாக்டர் பட்டம் வழங்குகிறது.

அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் உள்ள பல்கலைக்கழகம் சார்பில் எஸ்.எம். ஜெயகுமார் தலைமையில் ஜான் வில்லியம்ஸ் இந்த விருதினை வழங்குகிறார்.

இந்த அறிவிப்பு நேற்று நடந்த விஜயகாந்த் நடித்து இயக்கிய விருதகிரி பாடல் வெளியீட்டு விழாவில் வெளியிடப்பட்டது.

விஜயகாந்தின் சிறந்த சமூக சேவை மற்றும் சிறுபான்மை மக்களுக்கு செய்து வரும் சேவையையும் பாராட்டும் வகையில் இந்த டாக்டர் விருது வழங்கப்படுகிறது...

இவ்விழாவில் கலந்துகொண்டு தே.மு.தி.க. அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் கலந்துகொண்டு பேசிய போது :

அவர், ‘’காலம் தந்த கொடை விஜயகாந்த். புரட்சி தலைவரை நம்மிடம் இருந்து பறித்துக்கொண்டது காலம். அய்யோ! காலம் பறித்துக்கொண்டதே புரட்சித்தலைவரை என கலங்கிய நமக்கு காலம் தந்த கொடைதான் வள்ளல் விஜயகாந்த்.

எம்.ஜி.ஆருடன் இறுதிவரை இருந்தவன் நான். யார் யாரெல்லாம் எம்.ஜி.ஆரை. பார்த்து பயந்தவர்கள் எல்லாம் அவர்கள் தான் இப்பொழுது விஜயகாந்தை பார்த்து பயப்படுகிறார்கள்.


நாடாளுவதற்கு அரசியல் தெரிந்திருக்க வேண்டியதில்லை. மக்களுக்கு சேவை செய்யும் மனம் ஒன்றே போதும்’’என்று பேசினார்

மேலும் இவ்விழாவில் நடிகர் சத்யராஜ் பேசியபோது :

நான் விஜயகாந்தை 32 வருட காலமாக விஜி என்று தான் கூப்பிடுவேன். முதன் முறையாக ரசிகர்களின் முன்னால் நானும் அவரை கேப்டன் என்று அழைக்க ஆசைப்பட்டேன்.


அவருக்கு டாக்டர் பட்டம் அறிவிக்கப்பட்டதால் இனி டாக்டர் கேப்டன் என்று அழைக்க வைத்துவிட்டார்.

எனக்கு ஒரு சிரமம் என்றால் ஓடோடி வந்து உதவி செய்து நான் உன் நண்பேன்டா என்று சொல்ல வைத்துவிடுவார். எதிர்காலத்தில் நானும் அவருக்கு உதவுகிற வகையில் நண்பேன் டா எனச்சொல்லும் காலம் வெகு தொலைவில் இல்லை.

அள்ளிக்கொடுத்தவர் புரட்ச்சித்தலைவர். அதை நமக்கெல்லாம் சொல்லிக்கொடுத்தவர் புரட்சிக்கலைஞர்’’என்று பேசினார்.

இவ்விழாவில் முத்தாய்ப்பாக (இப்போது எந்த கட்சியில் இருக்கிறோம் என்றே தெரியாத) எம்.எல்.ஏ. எஸ்.வி.சேகர் பேசும்போது,

’’தமிழக அரசியலை மாற்றி அமைக்கக்கூடிய சக்தி வாய்ந்த மிகப்பெரிய மக்கள் சக்தியை விஜயகாந்த் பெற்றிருக்கிறார். இந்தப் படம் எப்படி வெளியே வரும் பார்த்து விடலாம் என சவால் விட்டிருக்கிறார்கள்.

இதற்கு எல்லாம் பயப்படும் ஆள் அல்ல விஜயகாந்த். உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்கு தியேட்டர் கிடைக்கவில்லை. போஸ்டர் கூட ஒட்ட முடியவில்லை. இவற்றையெல்லாம் மீறி எம்.ஜி.ஆர். உலகம் சுற்றும் வாலிபனை வெளியிட்டார்.

அந்தப்படம் பெரிய வெற்றியை கொடுத்தது. விஜயகாந்த் படமும் வெற்றி வாகை சூடும். நாடாள முடியுமா என்று எம்.ஜி.ஆரைக்கேட்டார்கள். நாடாள முடியும் என நிரூபித்துக்காட்டினார் எம்.ஜி.ஆர். அதுபோல விஜயகாந்தும் நாடாளுவார்’’என்று தெரிவித்தார்

விருத்தகிரி படத்தில் 5 அசத்தல் பாடல்கள் உள்ளன.....

மனதில் உறுதியும், தைரியமும் உள்ளவர்கள் கீழ்க்கண்ட பாடல்களை கேட்க முயற்சிக்கலாம்.... எங்கே கேட்கலாம் என்று என்னையே கேள்வி கேட்டு யாரும் பின்னூட்டம் இட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்...

1) மக்கள் ஒரு புறம் - சங்கர் மகாதேவன்

2) தேவதை ஒன்று - ஹரிஹரன், சின்மயி

3) மன்னவனே மந்திரனே - செந்தில் தாஸ், ஸ்ரீலேகா, மாணிக்க விநாயகம்

4) பூக்கள் என்றோம் - சாதனா சர்க்கம்

5) ஏழைகள் தோழா வா வா - எஸ்.பி.பாலசுப்ரமணியம்

*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-

உங்களின் மன உறுதியை நீங்கள் சோதித்து பார்க்கும் ஒரு முயற்சியாக இந்த விருத்தகிரி படத்தின் பாடல்களை கேட்கலாம்... ஆகவே, மக்களே..... பாடல்களை கேட்டு மகிழுங்கள்............

(பின் குறிப்பு : விழாவில் படத்தின் பாடல்கள் ஒலிக்கவில்லை... பதிலாக வந்திருந்தவர்களின் ஜால்ரா ஒலிபட்டையை கிளப்பியது.....)

உடன்பிறப்புகளுக்கு ஒரு உருக்கமான கடிதம்

ஐயா வணக்கம்.....

வணக்கம்..... என்னய்யா காலைலயே வந்துட்ட இன்னிக்கு.... (குரல் உப்புக்காகிதத்தை எடுத்து கிழிந்த தகரத்தில் வைத்து தேய்க்கிறது.... கேட்கும் அனைத்து காதுகளும் கண்டிப்பாக டர்...டர் டார்ர்ர் தான்)......

ஒண்ணும் இல்லய்யா.... இன்னிக்கு செயற்குழு கூடுது.... அங்க, நம்ம கழக கண்மணிகள் எல்லாம் வராங்க... மதுரையில அம்மாவுக்கு கூடின கூட்டம் பார்த்து, எல்லாரும் பேயடிச்சு போயிருக்காங்க...அவங்களுக்கு ஊக்கம் தர்ற மாதிரி நாம ஏதாவது பேசியாகணும்....

அப்படியா... சரி.... ஊக்கத்தொகை கேட்டா தான் கொஞ்சம் யோசிக்கணும்.... வெறும் ஊக்கம் தானே தந்துடுவோம்.... நான் சொல்றத அப்படியே எழுதி அங்க வர்ற எல்லார்க்கும் காப்பி எடுத்து கொடுத்துங்க......


சரிங்கய்யா.... அப்படியே செஞ்சுடுவோம்....


“தல” தன் உடன்பிறப்புகளுக்காக எழுதிய அந்த மடல்.....இதோ உங்கள் பார்வைக்கு......

அங்கெங்கெனாதபடி.. .... எங்கெங்கும்

நீக்கமற நிறைந்திருக்கும் அன்பு உடன்பிறப்பே..


”தேர்தல்” என்ற நான்கெழுத்து

விரைவில் வரவிருக்கிறது..

எப்போதும் ”வெற்றி” என்ற மூன்றெழுத்தை பெற

”உழைப்பு” என்கிற நான்கெழுத்தை பிரயோகித்தால்

”வாக்கு” என்கிற மூன்றெழுத்து நம் வசமாகும்

”மக்கள்” என்கிற நான்கெழுத்து

”மறதி” என்ற மூன்றெழுத்தை

கைகொள்ளும்போது

”பணம்” என்னும் மூன்றெழுத்தை கொடுத்து,

”ஓட்டு” என்ற மூன்றெழுத்தை பெற்றால்,

”வெற்றி” என்ற மூன்றெழுத்து

எப்போதும் நம் வசமே என்பதை

நினைவில் கொள்.....

என் அன்பு உடன்பிறப்பே.....

சிந்தித்து பார்க்க நம்மிடம்

”நேரம்” என்ற மூன்றெழுத்து இல்லை...

ஆகவே....

சிந்திக்காதே.... செயல்படு....

வீறு கொண்டு எழு....

வெற்றி நடை போடு

”கருணை” என்ற மூன்றெழுத்தை

வெறும் வார்த்தை என்ற நாலெழுத்தோடு நிறுத்தாமல்

”நிதி” என்ற இரண்டெழுத்தையும் நினைவில் வை

அதை ”கழகம்” என்கிற நாலெழுத்தின்

காலடியில் வை....

வாழ்க அண்ணா நாமம்.....

ந‌ண்ப‌ர்க‌ள் மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய‌ தீபாவ‌ளி ந‌ல்வாழ்த்துக்க‌ள்...

தீபாவளிப் பண்டிகையை, 'பகவத் கீதையின் தம்பி' என்பார் ஸ்ரீகாஞ்சி மகா ஸ்வாமிகள். கீதைகள் பல இருந்தாலும், பகவத் கீதை தனிப்பெருமை பெற்றதாக எப்படி உள்ளதோ, அதேபோல் பண்டிகைகள் பல இருப்பினும் தனிப் பெருமையுடன் திகழ்கிறது தீபாவளித் திருநாள்.

கண்ணன், நரகாசுர சம்ஹாரம் செய்ததைக் கண்டு, நரகாசுரனின் தாயாருக்கு துக்கம் பொங்கியது. 'என் பிள்ளை போய்விட்ட துக்கம் உண்டு. இருப்பினும் உலகத்தாருக்கு எந்த துக்கமும் வரக் கூடாது. இந்த நாளில், அனைவரும் சந்தோஷமாக இருக்க வேண்டும்' என வேண்டினாள்! இந்த வேண்டுகோள்தான், தீபாவளிப் பண்டிகைக்கு தனிப்பெருமை சேர்த்தது. ''நாம் துன்பப்பட்டாலும் பரவாயில்லை. உலகம் க்ஷேமமாக இருக்க வேண்டும்' எனும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்வதுதான் தீபாவளியைக் கொண்டாடுவதன் தாத்பர்யம்'' என்று அருளியுள்ளார் ஸ்ரீமகா சுவாமிகள்.

இந்தியா மட்டுமின்றி அயல்நாடுகளில்கூட தீபாவளி கொண்டாடப்படுகிறது. இந்தியாவில், பல காரணங்களுக்காக தீபாவளி கொண்டாடப்படுகிறது.

நரகாசுரனுடைய தேசத்துக்கு பாதுகாவலாக கிரி துர்கம், அக்கினி துர்கம், ஜல துர்கம், வாயு துர்கம் எனும் நான்கு கோட்டைகள் இருந்தன. இந்த நான்கு கோட்டைகளையும் அழித்து நரகாசுரனை சம்ஹாரம் செய்தார் கண்ண பரமாத்மா! பஞ்சபூதங்களால் ஆன நம் உடலுக்குள் புகுந்து, தீயவற்றை விலக்கி, நமக்கெல்லாம் அருள்புரிகிறார் கண்ணன் என்பதைக் குறிக்கிறதாம் இது!

கிரி துர்கம் - மண்; அக்கினி துர்கம் - நெருப்பு; ஜல துர்கம் - தண்ணீர்; வாயு துர்கம் - காற்று! ஆக, நிலம், நெருப்பு, நீர், காற்று எனும் நான்கையும் சொல்லியிருப் பதால், ஐந்தாவது பூதமான ஆகாயமும் இதில் சேரும்.

பஞ்ச பூதங்களால் ஆன நம் உடலில், பகவானைக் குடியேற்ற வேண்டும். பகவானுக்கு நம் உள்ளத்தில் இருக்க இடம் கொடுத்தால், அவன் நமது உள்ளத்தில் உள்ள அறியாமையை நீக்குவான்; ஞான ஒளி பிரகாசிக்கும். இதுவே தீபாவளியின் உட்பொருள்.

ரமண மகரிஷி சொல்லும் தீபாவளியும் இதுவே!
''
தீய எண்ணங்கள்தான் நரகன். அவன் குடியிருக்கும் இடமே நம்முடைய உடல். இந்த மாயாவியை அழித்து, தானாக ஆவது- அதாவது, ஆத்ம ஜோதியாகத் திகழ்வதே தீபாவளி'' என்கிறார் பகவான் ரமணர்!

ஜோதிமயமான ஸ்வாமியை உள்ளத்தில் வைத்து வழிபட வேண்டும் என்பதைக் குறிக்கவே, தீபங்களை ஆவளி(வரிசை)யாக வைத்து, வழிபடுகிறோம். இதன் காரணமாகவே தீப ஆவளி என்பது தீபாவளி என்றானது. இதையே திருமகள் தீபாவளி என்றும் லட்சுமி தீபாவளி என்றும் சொல்வர். இது தொடர்பான கதை...

நரகாசுரனை அழிப்பதற்காக கண்ணன் சென்றபோது, பாணாசுரன் முதலான அசுரர்கள் பலர், திருமகளான லட்சுமிதேவியைக் கவர்ந்து வருவதற்காகப் புறப்பட்டனர். அவர்களின் உள்நோக்கத்தை அறிந்த லட்சுமிதேவி, அங்கே எரிந்து கொண்டிருந்த தீபச்சுடரில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டு, அசுரர்களின் கண்களில் படாமல் மறைந்தாள். அன்றைய நாள்தான், தீபாவளி!

தீபாவளியன்று திருமகள் தன்னை தீபத்தில் ஐக்கியப்படுத்திக் கொண்டதன் காரணமாகவே, தீபங்களை ஆவளி(வரிசை)யாக ஏற்றி வைத்து, தீபத்தில் திருமகளை வழிபடுகிறோம். மார்வாடி பெருமக்கள், தீபாவளியன்று புது வருடக் கணக்கு தொடங்குவதும், இந்தத் திருமகள் வழிபாட்டை முன்னிட்டே நடைபெறுகிறது.

அயோத்தியில் தீபாவளி:

ராவண சம்ஹாரம் முடிந்து சீதாதேவியுடன் ஜயராமனாக அயோத்தி திரும்பினார் ஸ்ரீராமன். அப்போது அதிகாலை மூன்று மணி. 14 ஆண்டுகளாக ஸ்ரீராமரை தரிசிக்காத அயோத்தி மக்கள், அந்த இரவில் ஏராளமான விளக்குகளை வரிசையாக ஏற்றி வைத்து, ராமரை தரிசித்து வரவேற்று மகிழ்ந்தனர்.

ஸ்ரீராமபிரான், சீதாபிராட்டியுடன் அரண்மனைக்குள் நுழைந்தார். அப்போது கௌஸல்யாதேவி, ''விளக்கேற்ற வந்த திருமகளே... சீதா! நீ இல்லாததால் இந்த அரண்மனையே இருள் சூழ்ந்து விட்டது. நீ விளக்கேற்று! அந்தகாரம் விலகி அருள் பரவட்டும்'' என்றாள். உடனே, தீபங்களை ஏற்றி வைத்து வழிபாடு செய்தாள் சீதை. இந்த நன்னாளே தீபாவளித் திருநாள்!

இதேபோல், ஞான தீபாவளி என்றும் போற்றுவர்! பிரகலாதனின் பேரனான மகாபலி முடிசூட்டிக் கொண்ட நாள்... தீபாவளி. அன்று ஏற்றப்படும் தீபம் 'எம தீபம்' எனப்படும். வாமன அவதாரம் எடுத்த பகவான், மகாபலி சக்ரவர்த்திக்கு அருள்புரிந்து அவருக்கு தன் ஞானத் திருவடி சூட்டிய நாள்தான் தீபாவளி என்பாரும் உண்டு.

ஆக, தீபாவளித் திருநாள் குறித்து பல கதைகள்; அத்தனையும் நமக்குச் சொல்லும் பாடம்... 'கெட்டவை நீங்கி நல்லதை அடைய வேண்டும். அதாவது ஞானத்தை அடைவதே தீபாவளி' என்கின்றனர் சான்றோர்.


(தகவல் உதவி : சக்தி விகடன்...)


வலையுலக தோழமைகள் மற்றும் அவர்களின் குடும்பத்தார் அனைவருக்கும் என் மனம் கனிந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.....

IT ன்னா இன்னாபா, அட, இங்க பாருங்க

ஃபார்வர்ட் மெயிலில் வந்தது.... சில பல மாற்றங்களுடன், அப்படியே உங்கள் பார்வைக்கு....

இந்த IT… IT ன்னு சொல்லுறாங்களே அப்படினா என்ன?

"அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ?" "ஏம்பா இந்த கம்ப்யூட்டர் படிச்சவங்க எல்லாம் நிறைய சம்பளம்வாங்கிட்டு, பந்தா பண்ணிட்டு ஒரு தினுசாவே அலையுறீங்களே? அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ?" –

நியாயமான ஒரு கேள்வியை கேட்டார் எனது அப்பா.

நானும் விவரிக்க ஆரம்பிதேன்.

அப்பா, "வெள்ளைகாரனுக்கு எல்லா வேலையும் சீக்கிரமா முடியணும்.
அதே மாதிரி எல்லா வேலையும் அவனோட வீட்டுல இருந்தே செய்யணும். இதுக்காக எவ்வளவு பணம் வேணுமானாலும் செலவு செய்ய தயாரா இருக்கான்.

அது சரி பல்லு இருக்குறவன் பக்கோடா சாப்பிடுறான்".

அதே தான்... இந்த மாதிரி அமெரிக்கால்-ல, இங்கிலாந்து-ல இருக்குற Bank, இல்ல எதாவது கம்பெனி, "நான் செலவு செய்ய தயாரா இருக்கேன். எனக்கு இத செய்து கொடுங்கன்னு கேப்பாங்க.

இவங்கள நாங்க "Client"னு சொல்லுவோம்.

"சரி"

இந்த மாதிரி Client-அ மோப்பம் பிடிக்குறதுக்காகவே எங்க பங்காளிக கொஞ்ச பேர அந்த அந்த ஊருல உக்கார வச்சி இருப்போம். இவங்க பேரு "Sales Consultants, Pre-Sales Consultants. ...". இவங்க போய் Client கிட்ட பேச்சுவார்த்தை நடத்துவாங்க.காசு கொடுக்குறவன் சும்மாவா கொடுப்பான்?

ஆயிரத்தெட்டு கேள்வி கேப்பான். உங்களால இத பண்ண முடியுமா?
அத பண்ண முடியுமான்னு அவங்க கேக்குற எல்லாம் கேள்விக்கும்,
"முடியும்"னு பதில் சொல்றது இவங்க வேலை."

அது சரி, இவங்க எல்லாம் என்னப்பா படிச்சுருப்பாங்க"?"

MBA, MSனு பெரிய பெரிய படிபெல்லாம் படிச்சி இருப்பாங்க."

முடியும்னு ஒரே வார்த்தைய திரும்ப திரும்ப சொல்றதுக்கு எதுக்கு MBA படிக்கணும்?"

அதானே –அப்பாவின் கேள்வியில் நியாயம் இருந்தது."

சரி இவங்க போய் பேசின உடனே client project கொடுத்துடுவானா?"

அது எப்படி? இந்த மாதிரி பங்காளிங்க எல்லா கம்பெனிங்கலேயும் . 500 நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 60 நாள்ளமுடிச்சு தரோம், 50 நாள்ல முடிச்சு தரோம்னு பேரம் பேசுவாங்க.இதுல யாரு குறைஞ்ச நாள சொல்றாங்களோ அவங்களுக்குப்ராஜெக்ட் கிடைக்கும்"

என்ன? 500 நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 50நாள்ல எப்படி முடிக்க முடியும்? ராத்திரி பகலா வேலை பார்த்தாலும் முடிக்க முடியாதே?"

இங்க தான் நம்ம புத்திசாலித்தனத்த நீங்கபுரிஞ்சிக்கணும். 50 நாள்னு சொன்ன உடனே client சரின்னு சொல்லிடுவான்.

ஆனா அந்த 50 நாள்ல அவனுக்கு என்ன வேணும்னு அவனுக்கும் தெரியாது, என்ன செய்யனும்னு நமக்கும் தெரியாது. இருந்தாலும் 50 நாள் முடிஞ்ச பிறகு ப்ரோஜெக்ட்னு ஒன்ன நாங்க deliverபண்ணுவோம்.

சரி... அப்போ ப்ராப்ளம் வராதா?

வருமே.... நாங்க தந்தத பாத்துட்டு "ஐய்யோ நாங்க கேட்டது இது இல்ல, எங்களுக்கு இது வேணும், அது வேணும்னு" புலம்ப ஆரம்பிப்பான்.

"இண்ட்ரெஸ்டிங், சரி அப்புறம்?" - அப்பா ஆர்வமானார்."

இப்போ தான் நாங்க நம்பியார் மாதிரி கைய பிசஞ்சிகிட்டே"இதுக்கு நாங்க CR raise பண்ணுவோம்"னு சொல்லுவோம்.

"CR-னா?" - இது அப்பா.....

அதாவதுப்பா, CR-னா, Change Request. இது வரைக்கும் நீ கொடுத்த பணத்துக்கு நாங்கவேலை பார்த்துட்டோம்.இனிமேல் எதாவது பண்ணனும்னா எக்ஸ்ட்ரா பணம் கொடுக்கணும்"னுசொல்லுவோம்.இப்படியே 50 நாள் வேலைய 500 நாள் ஆக்கிடுவோம்."

அப்பாவின் முகத்தில் லேசான பயம் தெரிந்தது.

"சரி, இதுக்கு அவன் சரின்னு சொல்லுவானா?"

ஹா...ஹா...ஹா.... சரின்னு சொல்லித்தானே ஆகணும். முடி வெட்ட சலூன்க்கு போய்ட்டு, பாதி முடிய மட்டும் வெட்டிட்டு வர முடியுமா?"

சரி ப்ராஜெக்ட் உங்க கைல வந்த உடனே என்ன பண்ணுவீங்க?"ன்னு அப்பா கேட்டார்....

என்ன பெருசா, நாங்க முதல்ல ஒரு டீம் உருவாக்குவோம். இதுல ப்ராஜக்ட் மேனேஜர்னு ஒருத்தர் இருப்பாரு.இவரது தான் பெரிய தலை. ப்ராஜெக்ட் சக்சஸ் ஆனாலும், ஃபெயிலியர் ஆனாலும் இவரு தான் பொறுப்பு."

"அப்போ இவருக்கு நீங்க எல்லாரும் பண்ற வேலை எல்லாம் தெரியும்னு சொல்லு."

"அதான் கிடையாது.

இவருக்கு நாங்க பண்ற எதுவும்யே தெரியாது."

"அப்போ இவருக்கு என்னதான் வேலை?"

–அப்பா குழம்பினார்.

"நாங்க என்ன தப்பு பண்ணினாலும் இவர பார்த்து கைய நீட்டுவோம். எப்போ எவன் குழிபறிப்பானு டென்ஷன் ஆகி டயர்ட் ஆகி டென்ஷன்ஆகுறது தான் இவரு வேலை."

"பாவம்பா"

"ஆனா இவரு ரொம்ப நல்லவரு. எங்களுக்கு எந்த பிரச்னை வந்தாலும் இவரு கிட்ட போய் சொல்லலாம்."

"எல்லா பிரச்னையும் தீர்த்து வச்சிடுவார?"

"ஒரு பிரச்சனைய கூட தீர்க்க மாட்டாரு. நாங்க என்ன சொன்னாலும் தலையாட்டிகிட்டே உன்னோட பிரச்னை எனக்கு புரியுதுனு சொல்றது மட்டும் தான் இவரோட வேலை."

"நான் உன்னோட அம்மா கிட்ட பண்றத மாதிரி?!"

"இவருக்கு கீழ டெக் லீட், மோடுல் லீட், டெவலப்பர், டெஸ்டர்னு நிறைய அடி பொடிங்க இருப்பாங்க."

"இத்தனை பேரு இருந்து, எல்லாரும் ஒழுங்கா வேலை செஞ்சாவேலை ஈஸியா முடிஞ்சிடுமே?""வேலை செஞ்சா தானே?

நான் கடைசியா சொன்னேன் பாருங்க... டெவலப்பர், டெஸ்டர்னு, அவங்க மட்டும் தான் எல்லா வேலையும் செய்வாங்க.அதுலையும் இந்த டெவலப்பர், வேலைக்கு சேரும் போதே "இந்த குடும்பத்தோட மானம்,மரியாதை உன்கிட்ட தான் இருக்குனு"சொல்லி, நெத்தில திருநீறு பூசி அனுப்பி வச்ச என்னைய மாதிரி தமிழ் பசங்க தான் அதிகம் இருப்பாங்க."

"அந்த டெஸ்டர்னு எதோ சொன்னியே? அவங்களுக்கு என்னப்பா வேலை?"

"இந்த டெவலப்பர் பண்ற வேலைல குறை கண்டு பிடிக்கறது இவனோட வேலை.

புடிக்காத மருமக கை பட்டா குத்தம்,
கால் பட்டா குத்தம் இங்குறது மாதிரி."

"ஒருத்தன் பண்ற வேலைல குறை கண்டு பிடிக்கறதுக்கு சம்பளமா? புதுசா தான் இருக்கு. சரி இவங்களாவது வேலை செய்யுராங்களா.சொன்ன தேதிக்கு வேலைய முடிச்சு கொடுத்துடுவீங்கள்ள?"

"அது எப்படி..? சொன்ன தேதிக்கு ப்ராஜக்டை முடிச்சி கொடுத்தா, அந்தக் குற்ற உணர்ச்சி எங்க வாழ்கை முழுவதும் உறுத்திக்கிட்டு இருக்கும். நிறைய பேரு அந்த அவமானத்துக்கு பதிலா தற்கொலை செய்துக்கலாம்னு சொல்லுவாங்க"

"கிளையன்ட் சும்மாவா விடுவான்? ஏன் லேட்னு கேள்வி கேக்க மாட்டான்?"

"கேக்கத்தான் செய்வான். இது வரைக்கும் டீமுக்குள்ளயே காலை வாரி விட்டுக்கிட்டு இருந்த நாங்க எல்லாரும் சேர்ந்து அவன் காலை வார ஆரம்பிப்போம்."

"எப்படி?"

"நீ கொடுத்த கம்ப்யூட்டர்-ல ஒரே தூசியா இருந்துச்சு. அன்னைக்கு டீம் மீட்டிங்ல வச்சி நீ இருமின, உன்னோட ஹேர் ஸ்டைல் எனக்கு புடிக்கலை."இப்படி எதாவது சொல்லி அவன குழப்புவோம். அவனும் சரி சனியன எடுத்து தோள்ல போட்டாச்சு, இன்னும் கொஞ்ச நாள் தூங்கிட்டு போகட்டும்னு விட்டுருவான்".

"சரி முன்ன பின்ன ஆனாலும் முடிச்சி கொடுத்துட்டு கைய கழுவிட்டு வந்துடுவீங்க அப்படித்தான?"

"அப்படி பண்ணினா, நம்ம நாட்டுல பாதி பேரு வேலை இல்லாம தான் இருக்கணும்."

"அய்யோ..... அப்புறம்?"

"ப்ராஜக்டை முடிய போற சமயத்துல நாங்க எதோ பயங்கரமான ஒன்ன பண்ணி இருக்குற மாதிரியும், அவனால அத புரிஞ்சிக்ககூட முடியாதுங்கற மாதிரியும் நடிக்க ஆரம்பிப்போம்."

"சரி....அப்புறம்?"

"அவனே பயந்து போய்,"எங்கள தனியா விட்டுடாதீங்க. உங்க டீம்-ல ஒரு ஒண்ணு, ரெண்டு பேர உங்க ப்ரொஜெக்ட பார்த்துக்க சொல்லுங்கன்னு" புது பொண்ணு மாதிரி புலம்ப ஆரம்பிச்சிடுவாங்க.

"இதுக்கு பேரு "Maintenance and Support". இந்த வேலை வருஷக்கணக்கா போகும்." ப்ராஜக்ட் அப்படிங்கறது ஒரு பொண்ண கல்யாணம் பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு வர்றது மாதிரி.

தாலி கட்டினா மட்டும் போதாது, வருஷ கணக்கா நிறைய செலவு செஞ்சு பராமரிக்க வேண்டிய விசயம்னு" இப்போ தான் கிளையன்டுக்கு புரிய ஆரம்பிக்கும்.

"ஆஹா...... எனக்கும் எல்லாம் புரிஞ்சிடுப்பா." இரு மொதல்ல தோளுக்கு மேல தலை இருக்கான்னு பார்க்கறேன்.... ஏன்னா, ரொம்ப நேரமா இந்த சுத்து சுத்துச்சே, அதான் இருக்கா, இல்ல கழண்டு விழுந்துடுச்சான்னு பார்க்கறேன்...

ஜிமெயில் அக்கவுண்ட், ஜோக்கிரி ப்ளாக்ஸ்பாட் அப்பீட் ஆயிடுச்சி


வலையுலக பிரம்மாக்களே...... எனதருமை குடிமக்களே!! தோழமைகளே... நண்பர்களே.... வணக்கம்....


நான் சிறிது நாளாக (2008 டிசம்பர் முதல்) www.jokkiri.blogspot.com & www.edakumadaku.blogspot.com என்ற இரு வலைகளில் நிறைய பதிவுகளை பதிந்துள்ளேன்....

வெள்ளிக்கிழமை (30.07.2010) வார விடுமுறை முடிந்து, சனிக்கிழமை வந்து பார்த்தால், என் ஜிமெயில் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டு, என் ஒரு வலையான ஜோக்கிரியை காணோம்.... இட்ஸ் கான்..... போயே போச்சு.... போயிந்தே....

நல்ல வேளையாக இந்த எடக்கு மடக்கு வலை அப்படியே உள்ளது.... யாரோ ஒரு “மேதை” இதை சரியாக செய்யாமல், பாதி வேலை மட்டும் செய்துள்ளார்... மிச்ச பாதியை செய்யாமல் விட்டதற்கு அந்த “மேதை”க்கு மிக்க நன்றி....

என் வலையை தொடர்ந்து படிக்கும் நண்பர்கள் இந்த விஷயத்தில் எனக்கு ஆலோசனை சொல்லலாம், ஏதேனும் வழியில் உதவலாம்... (பின்னூட்டம் மூலமாக.....)

உங்கள் உதவிக்கு நன்றி.....
(பின் குறிப்பு & நியூஸ் அப்டேட்) :
என்னுடைய ஜிமெயில் மற்றும் ஜோக்கிரி வலைப்பதிவு ஹேக் செய்யப்பட்ட இந்த விஷயத்தில் வலையுலகின் சக பதிவரும், நண்பருமான திரு.சூர்யா கண்ணன் (www.suryakannan.blogspot.com) அவர்களின் முயற்சியால், நான் ஜிமெயில் மற்றும் ஜோக்கிரி வலைப்பதிவை திரும்ப பெற்றேன்... அவருக்கு நன்றி செலுத்தும் விதமாக நான் எழுதிய பதிவு இதோ :
”அப்பீட்” ஆன நான் மீண்டும் “ரிப்பீட்” ஆனேன்....

இன்று எதை எதை இழந்தோம் !!!

நீர்வளங்களை மேடாக்கி,
குடியிருக்க கூறு (ப்ளாட்) போட்டதில்
தென்றலை தொலைத்து
தாகம் தீர்க்கும் நீர்நிலைகளை இழந்தோம்...

செல்லுமிடம் எல்லாம் பேச எண்ணி
செல்லுலாரிடம் சிறைப்பட்டோம்...
சின்னஞ்சிறிய அலைபேசி
நம் அனைவரின் கைகளில் உறவாட
சந்தோஷமாய் பறந்து திரிந்த சிட்டுக்குருவியின் சங்கீதம் இழந்தோம்...

விசையுறு பந்து போல்
மனம் சொல்லும் இடம் விரைய
இறக்கைகளை
இரவல் வாங்கினோம்

மனம் போல் உடலும் பறந்து திரிய
பல ரக வாகனங்கள் வாங்கி
அது வெளியிடும் நச்சுப்புகையால்
நம் ஆரோக்கியத்தை இழந்தோம்...

அலுவல் அலம்பல் என ஆசைப்பட்டு
அந்நிய மொழி குடிபுக
தாய் மொழியை அந்நியமாக்கி
நாவில் சுவை இழந்தோம்

விரைவாய் செல்ல வேண்டி
வீதி கூட்டும் சாலைக்கென
மரங்களை வெட்டி சாய்த்ததில்,
இதம் தரும் நிழல்,
உடலுக்கு கிடைப்பதை இழந்தோம்....

வெட்டிய மரங்கள், விறகாகவும்,
வீட்டிற்கு கதவாகவும் ஆனதில்
ஒரு துளி காற்று இன்றி,
இயற்கையான குளுமையை இழந்தோம்...

வெள்ளையரிடம் குருதி சிந்தி,
சுதந்திரம் வாங்கி,
அதை உள்ளூர் கொள்ளையர்
கைகளில் தந்து நம் நாட்டை இழந்தோம்...

உச்சகட்ட இன்பம் தேடி, போதையின் பாதையை நாடி
வீடு, உறவுகள் தொலைத்து சந்தோஷம் முற்றும் இழந்தோம்...

வரதட்சணை என்ற பெயரில்,

பெண் வீட்டில் பொருள் வாங்கி
நம்மையே அடகு வைத்து,
உயிரினும் பெரிதான தன்மானம் இழந்தோம்...

கட்டியவளின் பேச்சு கேட்டு,
பெற்றோரை வீட்டை விட்டு துரத்த
நன்றி மறந்து,
நாம் வாழ்வின் பந்தம், பாசம் இழந்தோம்...

பின்னாளில், அதே நிகழ்வை
நம் மக்கள் நமக்கு செய்தபோது
ஊரெல்லாம் புலம்பினோம்,

நம் தம்பட்டத்தில் தவறான ஒர் நெறிமுறை சொன்னோம்
அதை தாங்காத மனநிலையில் நம் உயிரை இழந்தோம்...

(ஆர்.கோபி / லாரன்ஸ்)