ஜிமெயில் அக்கவுண்ட், ஜோக்கிரி ப்ளாக்ஸ்பாட் அப்பீட் ஆயிடுச்சி


வலையுலக பிரம்மாக்களே...... எனதருமை குடிமக்களே!! தோழமைகளே... நண்பர்களே.... வணக்கம்....


நான் சிறிது நாளாக (2008 டிசம்பர் முதல்) www.jokkiri.blogspot.com & www.edakumadaku.blogspot.com என்ற இரு வலைகளில் நிறைய பதிவுகளை பதிந்துள்ளேன்....

வெள்ளிக்கிழமை (30.07.2010) வார விடுமுறை முடிந்து, சனிக்கிழமை வந்து பார்த்தால், என் ஜிமெயில் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டு, என் ஒரு வலையான ஜோக்கிரியை காணோம்.... இட்ஸ் கான்..... போயே போச்சு.... போயிந்தே....

நல்ல வேளையாக இந்த எடக்கு மடக்கு வலை அப்படியே உள்ளது.... யாரோ ஒரு “மேதை” இதை சரியாக செய்யாமல், பாதி வேலை மட்டும் செய்துள்ளார்... மிச்ச பாதியை செய்யாமல் விட்டதற்கு அந்த “மேதை”க்கு மிக்க நன்றி....

என் வலையை தொடர்ந்து படிக்கும் நண்பர்கள் இந்த விஷயத்தில் எனக்கு ஆலோசனை சொல்லலாம், ஏதேனும் வழியில் உதவலாம்... (பின்னூட்டம் மூலமாக.....)

உங்கள் உதவிக்கு நன்றி.....
(பின் குறிப்பு & நியூஸ் அப்டேட்) :
என்னுடைய ஜிமெயில் மற்றும் ஜோக்கிரி வலைப்பதிவு ஹேக் செய்யப்பட்ட இந்த விஷயத்தில் வலையுலகின் சக பதிவரும், நண்பருமான திரு.சூர்யா கண்ணன் (www.suryakannan.blogspot.com) அவர்களின் முயற்சியால், நான் ஜிமெயில் மற்றும் ஜோக்கிரி வலைப்பதிவை திரும்ப பெற்றேன்... அவருக்கு நன்றி செலுத்தும் விதமாக நான் எழுதிய பதிவு இதோ :
”அப்பீட்” ஆன நான் மீண்டும் “ரிப்பீட்” ஆனேன்....

27 comments:

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

ரொம்பவும் ஜாலியால்ல இருக்கு,
உங்க இந்த இடுகை??? சரி வருத்தப்பட்டு
என்ன ஆக போகுதுன்னுதானே...
அன்பர்களே, யாரும் வரீங்களா
உதவிக்கு?
(அன்பரே, எனக்கும் வருத்தம்தான்;
அதனால் பின்னூட்டம் மட்டும் இட்டிருக்கிறேன்)

சௌந்தர் said...

நீங்க சூரிய கண்ணன் அவர்களை கேளுங்கள் அவர் ப்ளாக் யாரோ ஹேக் செய்தார்கள் இப்போது அதை மீட்டு விட்டார் suryakannan@gmail.com அவர் உங்களுக்கு உதவி செய்வார்

Jey said...

பதிவர் சூரயகண்ணன் அவர்களின் வலைபக்கமும் இதுமாதிரி ஹேக் செய்யப்பட்டது, மீட்டு விட்டார். அவரிடம் ஆலோசனை கேட்கவும்.

ஈ ரா said...

நானே ரொம்ப நாள் கழித்து ஜோக்கிரிக்கு வந்தேன்... பார்த்தா இப்படி ஆகி இருந்தது.. வருத்தமாக இருந்தது..

Prabhu said...

Gopi, sorry to hear that your account has been hacked. DO you remember the alternate email addres you have given for the account? Also check and see what is the security question, so that you can recover the account. Please try.

jokkiri said...

// NIZAMUDEEN said...
ரொம்பவும் ஜாலியால்ல இருக்கு,
உங்க இந்த இடுகை??? சரி வருத்தப்பட்டு
என்ன ஆக போகுதுன்னுதானே...
அன்பர்களே, யாரும் வரீங்களா
உதவிக்கு?
(அன்பரே, எனக்கும் வருத்தம்தான்;
அதனால் பின்னூட்டம் மட்டும் //

**********

வாங்க நிஜாம் பாய்....

இவ்ளோ கலவரத்துலயும் உங்களுக்கு கிளுகிளுப்பு....

பின்னூட்டத்திற்கு நன்றி....

jokkiri said...

//சௌந்தர் said...
நீங்க சூரிய கண்ணன் அவர்களை கேளுங்கள் அவர் ப்ளாக் யாரோ ஹேக் செய்தார்கள் இப்போது அதை மீட்டு விட்டார் suryakannan@gmail.com அவர் உங்களுக்கு உதவி செய்வார்//

******

தகவலுக்கு மிக்க நன்றி சௌந்தர்...

jokkiri said...

// Jey said...
பதிவர் சூரயகண்ணன் அவர்களின் வலைபக்கமும் இதுமாதிரி ஹேக் செய்யப்பட்டது, மீட்டு விட்டார். அவரிடம் ஆலோசனை கேட்கவும்.//

****

வருகைக்கும் தகவலுக்கும் மிக்க நன்றி JEY....

இதே தகவலை தோழர் சௌந்தர் அவர்களும் இங்கே பகிர்ந்தார்...

jokkiri said...

jokkiri said...
//ஈ ரா said...
நானே ரொம்ப நாள் கழித்து ஜோக்கிரிக்கு வந்தேன்... பார்த்தா இப்படி ஆகி இருந்தது.. வருத்தமாக இருந்தது.//

*******

வாங்க ஈ.ரா....

என்ன பண்றது “தல”... கெடக்கனும்னு இருந்தா கெடைக்காம இருக்காது... கெடைக்காதுன்னு இருந்தா, கண்டிப்பா கெடைக்காது...

ஜோக்கிரியில் நிறைய நல்ல பதிவுகள் இருந்தது.... அந்த வலைப்பதிவு அப்பீட் ஆனதில் எனக்கு வருத்தமே...

பார்ப்போம்...

jokkiri said...

//Prabhu said...
Gopi, sorry to hear that your account has been hacked. DO you remember the alternate email addres you have given for the account? Also check and see what is the security question, so that you can recover the account. Please try.//

**********

Thanks for your visit and valuable and encouraging comments Prabhu..

Let me try... Even Giri came forward to help in this regard...

கோமதி அரசு said...

என்’ திருமதி பக்கத்தில்’ வந்த பின்னூட்டத்தில் வழக்கமாய் கோபிதானே வருவார், ஜோக்கரி ஏன் வந்தார் என குழம்பிக் கொண்டு இருந்தேன்.

வலை உலகத்தில் எனன நடக்கிறது

மறுபடியும் ஜோக்கரி வர வாழ்த்துக்கள்.

jokkiri said...

//கோமதி அரசு said...
என்’ திருமதி பக்கத்தில்’ வந்த பின்னூட்டத்தில் வழக்கமாய் கோபிதானே வருவார், ஜோக்கரி ஏன் வந்தார் என குழம்பிக் கொண்டு இருந்தேன்.

வலை உலகத்தில் எனன நடக்கிறது

மறுபடியும் ஜோக்கரி வர வாழ்த்துக்கள்//

********

வாங்க கோமதி மேடம்....

உங்கள் வாக்கு பலித்தது.... அப்பீட் ஆன ஜோக்கிரி இப்போது ரிப்பீட் ஆனார்....

lawrance said...

இப்படியும் நடக்குமா...!!! என ஆச்சர்யபடவைகிறது இந்த நிகழ்வு.

தொழில் நுட்பம்... இத்தனை நுட்பமா.

ஹேக் செய்யப்பட்டதும் பின்னர் நண்பரின் துணையால் சரி செய்யப்பட்டதும் ஏற்படுத்திய பிரமிப்பு இன்னும் அகல வில்லை.

இடைப்பட்ட இந்த நாட்களில் தங்கள் மனம் அடைந்த வேதனையும், வருடங்களாய் குருவி போல் சேர்த்து வைத்த இலக்கிய படைப்பின் விலையும், மதிப்பும் படைப்பாளிக்கு மட்டுமே புரிந்த வலி.

உடுக்கை இழந்த கை போல், பிரதி பலன் எதிர்பாராது உதவிக்கு வந்த நண்பரின் செயல் வாழ்வு பற்றிய நம்பிக்கையை கூட்டுகிறது. ஒரு வாசல் மூடி மறு வாசல் வைப்பான் இறைவன்... என்னும் வரிகள் தான் இந்த நிகழ்வில் என் மனதில் ஓடுகிறது.

வாழ்த்துக்கள்... இன்னும் சாதனைகள் படைக்க பிரார்த்தனைகள்.

jokkiri said...

//lawrance said...
இப்படியும் நடக்குமா...!!! என ஆச்சர்யபடவைகிறது இந்த நிகழ்வு.

தொழில் நுட்பம்... இத்தனை நுட்பமா.

ஹேக் செய்யப்பட்டதும் பின்னர் நண்பரின் துணையால் சரி செய்யப்பட்டதும் ஏற்படுத்திய பிரமிப்பு இன்னும் அகல வில்லை.

இடைப்பட்ட இந்த நாட்களில் தங்கள் மனம் அடைந்த வேதனையும், வருடங்களாய் குருவி போல் சேர்த்து வைத்த இலக்கிய படைப்பின் விலையும், மதிப்பும் படைப்பாளிக்கு மட்டுமே புரிந்த வலி.

உடுக்கை இழந்த கை போல், பிரதி பலன் எதிர்பாராது உதவிக்கு வந்த நண்பரின் செயல் வாழ்வு பற்றிய நம்பிக்கையை கூட்டுகிறது. ஒரு வாசல் மூடி மறு வாசல் வைப்பான் இறைவன்... என்னும் வரிகள் தான் இந்த நிகழ்வில் என் மனதில் ஓடுகிறது.

வாழ்த்துக்கள்... இன்னும் சாதனைகள் படைக்க பிரார்த்தனைகள்//

***********

மிக்க நன்றி திரு லாரன்ஸ் அவர்களே.

தோழமைகளின் ஆதரவே பெரிய பலம்.

cdhurai said...

thala...

Naan pirabadalamnu nenachene...Gmail server roomkku.... athukkula hi...hi..

hek panninathu naan thaan...

Hi..hii... naan avaan illai- cdhurai

Sweatha Sanjana said...

Speak Out !!, What you want to be in next 2 years , what your kids want to be in 10 years?. What your country should provide you ? What your business or work to be? Shape up the future, write in www.jeejix.com .

Sweatha Sanjana said...

Speak Out !!, What you want to be in next 2 years , what your kids want to be in 10 years?. What your country should provide you ? What your business or work to be? Shape up the future, write in www.jeejix.com .

Gaana Kabali said...

அன்புள்ள கோபி,
"நல்லவர்கள் ,கெட்டவர்களுக்கும இடையே நடக்கும் யுத்தத்தில் இறுதி வெற்றி நல்லவர்களுக்கே" என்பது ஆண்டாண்டு காலமாக உண்மையாகிக் கொண்டிருக்கும் இறைவனின் நியதி.

வலைத்தளத்தை மீண்டும் உயிர்பித்தமைக்கு மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்!

Anonymous said...

100 ஃபாலோயர்ஸ்க்கு வாழ்த்துக்கள்

jokkiri said...

//cdhurai said...
thala...

Naan pirabadalamnu nenachene...Gmail server roomkku.... athukkula hi...hi..

hek panninathu naan thaan...

Hi..hii... naan avaan illai- cdhurai//

******

தென்மதுரையின் மற்றொரு டெர்ரர் ஃபேஸ் செல்லதுரை அவர்களே... வருக .... வருக.....

மிக்க நன்றி “தல”....

jokkiri said...

//Sweatha Sanjana said...
Speak Out !!, What you want to be in next 2 years , what your kids want to be in 10 years?. What your country should provide you ? What your business or work to be? Shape up the future, write in www.jeejix.com .//

******

தாங்கள் குறிப்பிட்டுள்ள வலையை பார்க்கிறேன்... நன்றி...

jokkiri said...

//ஆர்.கே.சதீஷ்குமார் said...
100 ஃபாலோயர்ஸ்க்கு வாழ்த்துக்கள்//

*******

வாங்க சதீஷ் ஜி...

வருகை தந்து, கமெண்டியதற்க்கு மிக்க நன்றி....

100 ஃபாலோயர்ஸா!! நீங்கள் சொன்னதும் தான் நானே பார்த்தேன்...

மிக்க நன்றி... தொடர்ந்து வாருங்கள்..

Jaleela Kamal said...

கோபி நலமா?

இப்படி அப்பீட் ஆவதால். நீங்க அத முழு பிலாக் க இம்போட் செய்து வைத்து கொள்ளலாம், ஜெய்லானி பிலாக்கில் விபரம் இருக்கும் பாருங்கல்.

Jaleela Kamal said...

சூரியா கண்ணன் சாரும் அதற்குண்டான பதிவு போட்டு இருக்கிறார்.

sindhusubash said...

அடடா இவ்வளவு நடந்திருக்கா? மறுபடியும் எப்பவும் போல எழுதுங்க...அதுக்குள்ள நானும் ஒரு சின்ன டூரை முடிச்சிட்டு வந்திடுறேன்.

jokkiri said...

// Jaleela Kamal said...
கோபி நலமா?

இப்படி அப்பீட் ஆவதால். நீங்க அத முழு பிலாக் க இம்போட் செய்து வைத்து கொள்ளலாம், ஜெய்லானி பிலாக்கில் விபரம் இருக்கும் பாருங்கல்.//

//Jaleela Kamal said...
சூரியா கண்ணன் சாரும் அதற்குண்டான பதிவு போட்டு இருக்கிறார்.//

***********

வாங்க ஜலீலா....

நலம்... நலமறிய ஆவல்....

ரம்ஜான் நோன்பு எப்படி போயிட்டு இருக்கு...

ஜெய்லானி ப்ளாக் பார்க்கிறேன்...

நண்பர் சூர்யா கண்ணன் முயற்சியால் தான் ஜிமெயில், ப்ளாக்ஸ்பாட் இரண்டுமே கிடைத்தது....

jokkiri said...

// sindhusubash said...
அடடா இவ்வளவு நடந்திருக்கா? மறுபடியும் எப்பவும் போல எழுதுங்க...அதுக்குள்ள நானும் ஒரு சின்ன டூரை முடிச்சிட்டு வந்திடுறேன்.//

********

வாங்க சிந்துசுபாஷ்...

எப்படி இருக்கீங்க... ரொம்ப நாள் ஆச்சுல்ல இங்க வந்து....

அடடா... அடுத்த டூரா... கலக்குங்க.. போயிட்டு வந்து பயணக்கட்டுரை போடுங்க...