பொங்கலோ பொங்கல்

நண்பர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தார் அனைவருக்கும் மனம் கனிந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

மார்கழி முடிந்து பிறந்தது தை
மனதில் நாளும் நம்பிக்கை வை

புதிதாய் வாங்கிய பானை இங்கு
அதை சுற்றி கட்டிய மஞ்சள் கிழங்கு

சந்தையில் வாங்கிய அடிக்கரும்பு
அதனுடன் வாங்கிய பூவும் அரும்பு

மாவால் போட்ட பல வகை நெளிக்கோலம்
அது காட்டியது கன்னியர்களின் கைஜாலம்

உமி களைந்து எடுத்த சம்பா அரிசி
அது நீரோடு நீராக ஒட்டி உரசி
அதனுடன் உடைத்து சேர்த்தது வெல்லம்
அதை இதமாய் பதமாய் சமைத்தது இல்லம்


மேக கூட்டம் களைந்து, வானத்தை பிளந்து
சூரிய கதிர்கள் பளீரென பிரகாசம் காட்ட

இருண்ட சூழல் விலகி வெளிச்சம் கூட்ட
சூரியனின் ஒளிக்கதிர்கள் பூமியை அடைய

நம் பூவுலகின் இருள் விலகியது.
அதுபோல் நம் வாழ்வின் இருள் விலக
எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்

அனைவரும் ஒன்று கூடி உரக்க கூவுவோம் -
"பொங்கலோ பொங்கல்
பொங்கலோ பொங்கல்"

7 comments:

ராமலக்ஷ்மி said...

இனிய பொங்கல் வாழ்த்துகள்!

RVS said...

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் கோபி! :-)

புவனேஸ்வரி ராமநாதன் said...

தங்களை மீண்டும் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி கோபி சார்.
தங்களுக்கும் தங்களது குடும்பத்தாருக்கும்
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

Anonymous said...

happy pongal to u and ur family members gopi ji...

Chitra said...

HAPPY PONGAL!!!!

Rathnavel Natarajan said...

எங்கள் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

Paleo God said...

உங்களுக்கும் நண்பர்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள். :))