கேப்டன் - அதிரடி மீட்டிங் (பாகம்-2)

நான் முன்னமே சொன்ன மாதிரி, நம்ம நாட்டுல ஆச்சி சரியில்ல... எங்கன பாத்தாலும், கொலை, கொள்ளை, கற்பழிப்பு, வழிப்பறி இப்படி எல்லாம் நடக்குது...

நாங்க ஆச்சிக்கு வந்தா, இதை எல்லாம் தடுப்போம்... அப்புறம், நாங்களே பண்ணுவோம்... என்னது... கொலை, கொள்ளைய பண்ணுவோமான்னு கேக்கறியா?? டேய் பரதேசி... நீ எந்த கச்சிகாரன்னு சொல்லுடா...


என்னது என் கச்சியா?? என் கச்சில இருந்துட்டு தைரியமா என்னிய பத்துன உண்மைய சொன்னதுக்கு ஒரு டேங்ஸ்... ஆனா, இன்னில இருந்து ஒனக்கு சனி உச்சத்துல வந்துட்டான்... கேப்டன் கை காட்டியதும், ஒரு குண்டர் படை அந்த தொண்டரை அள்ளி சென்றது...


என்னதான் உண்மைன்னாலும், அத இப்படி பப்ளிக்கா சொல்லக்கூடாது.. நான் கூட எலக்சன் டைம்ல... எனக்கு எல்லாம் தெரியும்... ஆனாக்க, சொல்ல மாட்டேன்னு சொல்லி கருணாநிதி கிட்டவே ஆட்டம் போட்டேன்... இவன் என்னடான்னா, நம்ம தொழில் ரகசியத்த இப்படி ஒடச்சு பேசறான்... அவன கொண்டுட்டு போய், குடோன்ல வச்சு பட்டைய கெளப்புங்கடா... அந்த பரதேசி இனிமே சாப்பிட கூட வாய தொறக்கக்கூடாது... என்று கர்ஜிக்கிறார்...


இவிய்ங்க ஆச்சில நடந்த இன்னொரு அநியாயத்த சொல்லவா? என்று கேட்கிறார்... தொண்டர்கள் பாவம் போல், தலையை ஆட்டுகிறார்கள்...


நான் கடைசியா "விருதகிரி"ல நடிச்சேன் இல்ல... நடிச்சேனா இல்லையா, சொல்லுங்கடா?? வாயில என்னடா வச்சு இருக்கீங்க....என்கிறார்...


ஆமாம், தலீவா... ஆஸ்கர் நடிப்பு தலீவா என்று உணர்ச்சிவசப்பட்டு முன்னால் வந்து கூவிய தொண்டனுக்கு பையில் இருந்து ஒரு ரூ.500 நோட்டு எடுத்து தருகிறார்... நைட்டு செலவுக்கு வச்சுக்கோ, சைட் டிஸ்ஸுக்கும் சேர்த்து, ஒகேவா என்று சொன்னவாறு தன் பேச்சை தொடர்கிறார்...


தேர்தல் சுற்றுப்பயணம் போன எடத்துல எல்லாம் என்னிய பார்த்து "கருப்பு எம்.ஜி.ஆர்."னு மக்கள் வாயார வாழ்த்துனாங்க... எனக்கு ரெம்ப சந்தோசமா இருந்துச்சி... ஆனாக்க, இனிமே "எம்.ஜி.ஆர" நீங்க எல்லாரும்"வெள்ளை விஜயகாந்த்"னு கூப்பிடணும்... அத்த என் காதால நான் கேக்கணும்... கூப்பிடுவீங்களா என்று அடித்தொண்டையில் காட்டு கத்தலாக கேட்கிறார்...


கூட்டம் மெய்மறந்து, விசிலடித்து கை தட்டுகிறது... கேப்டன் உற்சாகமாகிறார்... பின்னால் திரும்பி சைகை காட்ட, ஒரு கூஜாவில் இருந்து கேப்டனின் பக்குவத்திற்கு மிக்ஸ் செய்யப்பட்ட "டாஸ்மாக்" ஒரு கிளாஸில் ஊற்றி கொடுக்கப்படுகிறது. அந்த "டாஸ்மாக்"கில் தொண்டை நனைந்தவுடன் கேப்டன் பழைய ஃபார்முக்கு திரும்புகிறார்... உற்சாகமாக உளற தொடங்குகிறார்...


நான் கஸ்டபட்டு நடிச்ச "விருதகிரி" படத்த "ஆஸ்கார்" அவார்டுன்னு ஏதோ இருக்காமே, அதுக்கு அனுப்ப மாட்டாய்ங்களாம்... நான் கேக்கறேன்... ஆச்சி உங்க கையில இருந்தா, அதுக்காக, நான் கஸ்டபட்டு நடிச்ச படத்த அனுப்ப மாட்டீய்ங்களா?? நான் ஜனாதிபதிய பாத்து மனு தரப்போறேன்...


அதே மாதிரி, என் இன்னொரு படம் "மரியாதை" இங்க சென்னையில ரிலீஸ் பண்ணவே விடல... இது அராஜகம் இல்லையா?? பதில் சொல்லுங்க..


மத்தியில இருக்கற காங்கிரஸும், மாநில அரசு தி.மு.க.வும் இது போல என்னிய தொடர்ந்து வெறுப்பேத்தினா, நான் ஏற்கனவே, முடிவு பண்ணின "டாஸ்மாக்" நுழைவு போராட்டம் தீவிரம் அடையும்...


ஒரு மாசத்துக்கு, எங்கள தவிர யாரும் "டாஸ்மாக்" கடை உள்ளக்கவே நொழைய முடியாது... "டாஸ்மாக்"தான் நாங்க... நாங்கதான் "டாஸ்மாக்"... இது ஓகேவா, பாத்துடுவோமா, நீங்களா, நாங்களான்னு, ஒரு மாசம், உங்க ஆளுங்க, மத்தவிய்ங்க சரக்கு அடிக்காம இருக்க முடியுமா??


போராடறதுன்னு வந்துட்டா, நானே நேர்ல எறங்கிடுவேன்... எல்லா கடைக்கும், நானே நேர்ல போயி, சரக்கு மொத்தமும் வாங்கி, எங்க ஆளுங்கள கூப்பிட்டு கொடுத்துடுவேன். அப்புறம், நீங்க குடிமக்களுக்கு பதில் சொல்லி ஆகணும்... சொல்ல வேண்டியத சொல்லிட்டேன்...அப்புறம் ஒங்க இஷ்டம்... என்கிறார்...


நான் பேச ஆரம்பிச்சா, நிறுத்த மாட்டேன்... ஆனாக்க, எனக்கு நெறைய வேலை இருக்கு... இப்போதைக்கு சில புள்ளி விபரம் மட்டும் சொல்றேன் என்றதும் அந்த இடமே காலியானது… (அங்கு ஓரத்தில் சாப்பிட்டு போடப்பட்டு இருந்த பிரியாணியை மொய்த்து கொண்டிருந்த 4 ஈயும், 2 காக்காவும்…. கூட அலறியடித்து பறந்து போனது)……..வெறுத்து போய், அந்த இடத்திலிருந்து கிளம்பிய அதே சமயம், ரோட்டில் ஓரமாய் நின்றிருந்த பேருந்தில், ஜன்னலோரமாய் அமர்ந்திருந்தவர்கள் கேப்டனை பார்த்து கையசைக்கிறார்கள்.. ஆனால், ஒரு பெண்ணின் கையிலிருந்த ஒரு சிறு குழந்தை, கேப்டனை நேருக்கு நேராக பார்த்த மாத்திரத்தில் "பூச்சாண்டி", "பூச்சாண்டி" என்று பயத்தில் கதறி, அலறி, வீறிட்டு அழ தொடங்குகிறது...


(இதற்கு மேல எழுதுவதற்கு,என்னாலேயே முடியாததால், தற்போதைக்கு தற்காலிக முற்றும்....)

36 comments:

கடம்பவன குயில் said...

ஆஹா......இன்னிக்கி உங்ககிட்ட கேப்டன் மாட்டிகிட்டாரா !!! தாக்கு தாக்குன்னு தாக்கிருகீங்களே. செம காமெடி . ரொம்ப நல்லாருந்தது. ஆனா கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க. கேப்டன் உங்கள தேடிக்கிட்டு இருக்காராம்

RVS said...

வெள்ளை விஜயகாந்த்... கோபி சான்சே இல்லை... குத்தி கிழிச்சிட்டீங்க..
தாற்காலிக முற்றும்.. மிகவும் ரசித்தேன். ;-))

அம்பிகா said...

ஹா...ஹா...ஹா.
இது ஒரிஜினலா இருக்கு.

Chitra said...

கலக்கல்...... !!!!!! பாராட்டுக்கள்!

வெங்கட் நாகராஜ் said...

அட இரண்டே பகுதிகள்ல முடிச்சிட்டீங்களே :( தொடருங்கள் நண்பரே...

பெசொவி said...

//ஒரு சிறு குழந்தை, கேப்டனை நேருக்கு நேராக பார்த்த மாத்திரத்தில் "பூச்சாண்டி", "பூச்சாண்டி" என்று பயத்தில் கதறி, அலறி, வீறிட்டு அழ தொடங்குகிறது...
//

top!

பெசொவி said...

//(இதற்கு மேல எழுதுவதற்கு,என்னாலேயே முடியாததால்//

அப்போ, உங்களுக்கும் ஒரு ஆஃப் இருந்தாதான் புல்லா எழுத முடியும்னு சொல்றீங்களா?

சாருஸ்ரீராஜ் said...

சூப்பர்...

Mrs. Krishnan said...

ஒரு சிறு குழந்தை,
கேபடனை நேருக்கு நேராக பார்த்த
மாததிரத்தில "பூச்சாணடி",
"பூச்சாணடி" என்று பயத்தில் கதறி,
அலறி, வீறிட்டு அழ தொடங்குகிறது...

ஹா ஹா ஹா ஹா
ஹா ஹா ஹா ஹா
ஹா ஹா ஹா ஹா
ஹா ஹா ஹா ஹா

(இதற்கு மேல்
எழுதுவதற்கு,எனனாலேயே முடியாததால்,
தற்போதைக்கு தறகாலிக முற்றும்....)

இதுக்கு மேல சிரிக்க எங்களாலும் முடியாதுங்க...கலக்கல் காமெடி.

jokkiri said...

வருகை தந்து, பதிவை படித்து, பாராட்டி, இண்ட்லியில் வாக்களித்து பதிவை பிரபலமாக்கிய தோழமைகள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி..

jokkiri said...

கதம்பவன குயில் - என்னை தேடறாரா... அப்போ எங்கேயாவது எஸ்கேப் ஆக வேண்டியது தான்..

“தல” ஆர்.வி.எஸ். - காமெடியை நீங்க நல்லா ரசிப்பீங்கன்னு தெரியும் பாஸ்...

அம்பிகா - ஆஹா... இது ஒரிஜினல் என்று வாழ்த்தியமைக்கு நன்றி...

சித்ரா - வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி...

வெங்கட் நாகராஜ் - ஏன் தல இந்த கொலவெறி...

பெயர் சொல்ல விருப்பமில்லை - எனக்கு ஆஃப் வேணுமான்னு கேட்டு தாக்கிட்டீங்களே தல...

சாருஸ்ரீராஜ் - மிக்க நன்றி...

திருமதி கிருஷ்ணன் - வாய் விட்டு சிரித்து மகிழ்ந்தமைக்கு மிக்க நன்றி..

Sivaraj said...

நான் கஸ்டபட்டு நடிச்ச "விருதகிரி" படத்த "ஆஸ்கார்" அவார்டுன்னு ஏதோ இருக்காமே, அதுக்கு அனுப்ப மாட்டாய்ங்களாம்... நான் கேக்கறேன்... ஆச்சி உங்க கையில இருந்தா, அதுக்காக, நான் கஸ்டபட்டு நடிச்ச படத்த அனுப்ப மாட்டீய்ங்களா?? நான் ஜனாதிபதிய பாத்து மனு தரப்போறேன்...


அதே மாதிரி, என் இன்னொரு படம் "மரியாதை" இங்க சென்னையில ரிலீஸ் பண்ணவே விடல... இது அராஜகம் இல்லையா?? பதில் சொல்லுங்க
ha ha ha


ஒரு சிறு குழந்தை, கேப்டனை நேருக்கு நேராக பார்த்த மாத்திரத்தில் "பூச்சாண்டி", "பூச்சாண்டி" என்று பயத்தில் கதறி, அலறி, வீறிட்டு அழ தொடங்குகிறது..


Ultimate.

football tickets said...

nice written in hindi i like that typical way.

football tickets said...

nice written in hindi i like that typical way.

போளூர் தயாநிதி said...

பாராட்டுக்கள்!

சி.பி.செந்தில்குமார் said...

>>ன் கஸ்டபட்டு நடிச்ச "விருதகிரி" படத்த "ஆஸ்கார்" அவார்டுன்னு ஏதோ இருக்காமே, அதுக்கு அனுப்ப மாட்டாய்ங்களாம்... நான் கேக்கறேன்... ஆச்சி உங்க கையில இருந்தா, அதுக்காக, நான் கஸ்டபட்டு நடிச்ச படத்த அனுப்ப மாட்டீய்ங்களா?? நான் ஜனாதிபதிய பாத்து மனு தரப்போறேன்..

ஹா ஹா நடப்பு சி எம்மையும் நக்கல் அடிக்கறீங்க.. நாளைய சி எம்மையும் நக்கல் அடிக்கறீங்க.. இதெல்லாம் நல்லதுக்கில்லை.. ஹி ஹி

jokkiri said...

வருக...வருக...

பதிவிற்கு வருகை தந்து, பதிவை படித்து கமெண்டிய அனைத்து தோழமைகளுக்கும் என் மனமார்ந்த நன்றி...

சிவராஜ்
ஃபுட்பால் டிக்கெட்ஸ்
போளூர் தயாநிதி (பெயர் அரசியல்வாதி மாதிரியே வச்சுருக்காரே!!)
சி.பி.செந்தில்குமார் - தாக்கணும்னு முடிவு பண்ணியாச்சுன்னா, எல்லாரையும் போட்டு தாக்க வேண்டியது தானே...

அருள் said...

சாய் பாபா - ஒரு மாறுபட்ட அனுபவம்

http://arulgreen.blogspot.com/2011/04/blog-post_25.html

ஸாதிகா said...

உங்களை ஒரு தொடர் பதிவுக்கு அழைத்துள்ளேன்.

Anonymous said...

ஆஸ்காரா...ஹா பயமா இருக்குன்னு ஆஸ்கார் குழுவினர் மயக்கம் போட்டுட்டாங்களாம்

Paleo God said...

ரெண்டு பார்ட்டும் சூப்பர்! கேப்டன் ஒரு எடத்துல கூட நாக்கக் கடிச்சா மாதிரி தெரியலையே பாஸ்? :))

இராஜராஜேஸ்வரி said...

பாராட்டுக்கள் நகைச்சுவையான பகிர்வுக்கு.

குணசேகரன்... said...

இன்றுதான் முதன் முதலில் உங்கள் பதிவை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வாழ்த்துக்கள்.
உங்கள் பதிவின் நடை அருமை..பகிர்தலுக்கு நன்றி.where is followers button?its not displayed.
http://zenguna.blogspot.com

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

எதிர்கட்சித்தலைவரு பூச்சாண்டி மாறிய கீறாரு?..

அட ஆமாம் பாஸ்..
கொஞ்சம் பூசின பூச்சாண்டிமாறித்தான் கீறார்.
:-)

Anonymous said...

Please send sujatha's stories to sitrodai@gmail.com

சி.பி.செந்தில்குமார் said...

பாவம்யா கேப்டன்..

Shiva Suja said...

அங்கு ஓரத்தில் சாப்பிட்டு போடப்பட்டு இருந்த பிரியாணியை மொய்த்து கொண்டிருந்த 4 ஈயும், 2 காக்காவும்…. கூட அலறியடித்து பறந்து போனது..

சிரிச்சி சிரிச்சி வயிறு தான் வலிக்குது... ஐயோ முடியல..

Shiva Suja said...

அங்கு ஓரத்தில் சாப்பிட்டு போடப்பட்டு இருந்த பிரியாணியை மொய்த்து கொண்டிருந்த 4 ஈயும், 2 காக்காவும்…. கூட அலறியடித்து பறந்து போனது..


சிரிச்சி சிரிச்சி வயிறு தான் வலிக்குது... ஐயோ முடியல..

Shiva Suja said...

ஒரு சிறு குழந்தை, கேப்டனை நேருக்கு நேராக பார்த்த மாத்திரத்தில் "பூச்சாண்டி", "பூச்சாண்டி" என்று பயத்தில் கதறி, அலறி, வீறிட்டு அழ தொடங்குகிறது...


எப்படி தான் இப்படி எல்லாம் யோசிக்கிறின்களோ தெரியல...

Priya said...

//ஒரு சிறு குழந்தை, கேப்டனை நேருக்கு நேராக பார்த்த மாத்திரத்தில் "பூச்சாண்டி", "பூச்சாண்டி" என்று பயத்தில் கதறி, அலறி, வீறிட்டு அழ தொடங்குகிறது...
//.... ஹாஹாஹா:)
சுவாரஸியம்!

Jaleela Kamal said...

என்ன இதற்கு பிறகு பதிவு ஏதும் வரல.

aotspr said...

எல்லாம் அரசியல்......

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

subasreemohan@yahoo.co.uk said...

Gopi Thanga mudiyala. Neenga ezuthinathai karpanaiyepanniviten vijaikanth pesarathu. Excellent.

Subasree Mohan said...

Hi Gopi super, Excellent.

Subasree Mohan said...

Hi Gopi vijaikantha karpanai panni parthen unga dialogue vachu. Excellent.

Subasree Mohan said...

Hi Gopi vijaikantha karpanai panni parthen unga dialogue vachu. Excellent.