நான் முன்னமே சொன்ன மாதிரி, நம்ம நாட்டுல ஆச்சி சரியில்ல... எங்கன பாத்தாலும், கொலை, கொள்ளை, கற்பழிப்பு, வழிப்பறி இப்படி எல்லாம் நடக்குது...
நாங்க ஆச்சிக்கு வந்தா, இதை எல்லாம் தடுப்போம்... அப்புறம், நாங்களே பண்ணுவோம்... என்னது... கொலை, கொள்ளைய பண்ணுவோமான்னு கேக்கறியா?? டேய் பரதேசி... நீ எந்த கச்சிகாரன்னு சொல்லுடா...
என்னது என் கச்சியா?? என் கச்சில இருந்துட்டு தைரியமா என்னிய பத்துன உண்மைய சொன்னதுக்கு ஒரு டேங்ஸ்... ஆனா, இன்னில இருந்து ஒனக்கு சனி உச்சத்துல வந்துட்டான்... கேப்டன் கை காட்டியதும், ஒரு குண்டர் படை அந்த தொண்டரை அள்ளி சென்றது...
என்னதான் உண்மைன்னாலும், அத இப்படி பப்ளிக்கா சொல்லக்கூடாது.. நான் கூட எலக்சன் டைம்ல... எனக்கு எல்லாம் தெரியும்... ஆனாக்க, சொல்ல மாட்டேன்னு சொல்லி கருணாநிதி கிட்டவே ஆட்டம் போட்டேன்... இவன் என்னடான்னா, நம்ம தொழில் ரகசியத்த இப்படி ஒடச்சு பேசறான்... அவன கொண்டுட்டு போய், குடோன்ல வச்சு பட்டைய கெளப்புங்கடா... அந்த பரதேசி இனிமே சாப்பிட கூட வாய தொறக்கக்கூடாது... என்று கர்ஜிக்கிறார்...
இவிய்ங்க ஆச்சில நடந்த இன்னொரு அநியாயத்த சொல்லவா? என்று கேட்கிறார்... தொண்டர்கள் பாவம் போல், தலையை ஆட்டுகிறார்கள்...
நான் கடைசியா "விருதகிரி"ல நடிச்சேன் இல்ல... நடிச்சேனா இல்லையா, சொல்லுங்கடா?? வாயில என்னடா வச்சு இருக்கீங்க....என்கிறார்...
ஆமாம், தலீவா... ஆஸ்கர் நடிப்பு தலீவா என்று உணர்ச்சிவசப்பட்டு முன்னால் வந்து கூவிய தொண்டனுக்கு பையில் இருந்து ஒரு ரூ.500 நோட்டு எடுத்து தருகிறார்... நைட்டு செலவுக்கு வச்சுக்கோ, சைட் டிஸ்ஸுக்கும் சேர்த்து, ஒகேவா என்று சொன்னவாறு தன் பேச்சை தொடர்கிறார்...
தேர்தல் சுற்றுப்பயணம் போன எடத்துல எல்லாம் என்னிய பார்த்து "கருப்பு எம்.ஜி.ஆர்."னு மக்கள் வாயார வாழ்த்துனாங்க... எனக்கு ரெம்ப சந்தோசமா இருந்துச்சி... ஆனாக்க, இனிமே "எம்.ஜி.ஆர" நீங்க எல்லாரும்"வெள்ளை விஜயகாந்த்"னு கூப்பிடணும்... அத்த என் காதால நான் கேக்கணும்... கூப்பிடுவீங்களா என்று அடித்தொண்டையில் காட்டு கத்தலாக கேட்கிறார்...
கூட்டம் மெய்மறந்து, விசிலடித்து கை தட்டுகிறது... கேப்டன் உற்சாகமாகிறார்... பின்னால் திரும்பி சைகை காட்ட, ஒரு கூஜாவில் இருந்து கேப்டனின் பக்குவத்திற்கு மிக்ஸ் செய்யப்பட்ட "டாஸ்மாக்" ஒரு கிளாஸில் ஊற்றி கொடுக்கப்படுகிறது. அந்த "டாஸ்மாக்"கில் தொண்டை நனைந்தவுடன் கேப்டன் பழைய ஃபார்முக்கு திரும்புகிறார்... உற்சாகமாக உளற தொடங்குகிறார்...
நான் கஸ்டபட்டு நடிச்ச "விருதகிரி" படத்த "ஆஸ்கார்" அவார்டுன்னு ஏதோ இருக்காமே, அதுக்கு அனுப்ப மாட்டாய்ங்களாம்... நான் கேக்கறேன்... ஆச்சி உங்க கையில இருந்தா, அதுக்காக, நான் கஸ்டபட்டு நடிச்ச படத்த அனுப்ப மாட்டீய்ங்களா?? நான் ஜனாதிபதிய பாத்து மனு தரப்போறேன்...
அதே மாதிரி, என் இன்னொரு படம் "மரியாதை" இங்க சென்னையில ரிலீஸ் பண்ணவே விடல... இது அராஜகம் இல்லையா?? பதில் சொல்லுங்க..
மத்தியில இருக்கற காங்கிரஸும், மாநில அரசு தி.மு.க.வும் இது போல என்னிய தொடர்ந்து வெறுப்பேத்தினா, நான் ஏற்கனவே, முடிவு பண்ணின "டாஸ்மாக்" நுழைவு போராட்டம் தீவிரம் அடையும்...
ஒரு மாசத்துக்கு, எங்கள தவிர யாரும் "டாஸ்மாக்" கடை உள்ளக்கவே நொழைய முடியாது... "டாஸ்மாக்"தான் நாங்க... நாங்கதான் "டாஸ்மாக்"... இது ஓகேவா, பாத்துடுவோமா, நீங்களா, நாங்களான்னு, ஒரு மாசம், உங்க ஆளுங்க, மத்தவிய்ங்க சரக்கு அடிக்காம இருக்க முடியுமா??
போராடறதுன்னு வந்துட்டா, நானே நேர்ல எறங்கிடுவேன்... எல்லா கடைக்கும், நானே நேர்ல போயி, சரக்கு மொத்தமும் வாங்கி, எங்க ஆளுங்கள கூப்பிட்டு கொடுத்துடுவேன். அப்புறம், நீங்க குடிமக்களுக்கு பதில் சொல்லி ஆகணும்... சொல்ல வேண்டியத சொல்லிட்டேன்...அப்புறம் ஒங்க இஷ்டம்... என்கிறார்...
நான் பேச ஆரம்பிச்சா, நிறுத்த மாட்டேன்... ஆனாக்க, எனக்கு நெறைய வேலை இருக்கு... இப்போதைக்கு சில புள்ளி விபரம் மட்டும் சொல்றேன் என்றதும் அந்த இடமே காலியானது… (அங்கு ஓரத்தில் சாப்பிட்டு போடப்பட்டு இருந்த பிரியாணியை மொய்த்து கொண்டிருந்த 4 ஈயும், 2 காக்காவும்…. கூட அலறியடித்து பறந்து போனது)……..
வெறுத்து போய், அந்த இடத்திலிருந்து கிளம்பிய அதே சமயம், ரோட்டில் ஓரமாய் நின்றிருந்த பேருந்தில், ஜன்னலோரமாய் அமர்ந்திருந்தவர்கள் கேப்டனை பார்த்து கையசைக்கிறார்கள்.. ஆனால், ஒரு பெண்ணின் கையிலிருந்த ஒரு சிறு குழந்தை, கேப்டனை நேருக்கு நேராக பார்த்த மாத்திரத்தில் "பூச்சாண்டி", "பூச்சாண்டி" என்று பயத்தில் கதறி, அலறி, வீறிட்டு அழ தொடங்குகிறது...
(இதற்கு மேல எழுதுவதற்கு,என்னாலேயே முடியாததால், தற்போதைக்கு தற்காலிக முற்றும்....)