அரிமா…. அரிமா… நீயோ…. ஆயிரம் அரிமா!!!

டிசம்பர் 12 2010 அன்று குளோபல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்த நாள்.

வழக்கமாக!!! பிறந்த நாளை சாக்கு வைத்து கொண்டு நமக்கு நாமே திட்டம் போல், தனக்கு தானே போஸ்டர் அடித்து எல்லா சுவரையும் அசிங்கம் செய்யும் மனிதர்களுக்கு இடையில், கொண்டாட்டங்களை தவிர்த்து அமைதியில் தன்னை அமிழ்த்தி, தனிமையில் தன்னை ஆராயும் ஒரு நிகழ்வாய் இதை கொண்டாடும் மகா மனிதன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த.

அங்கனம் உயர்ந்த பண்புகளை தன்னகத்தே கொண்ட நல்ல மனிதனின் பிறந்த நாளில் நாம் அவருக்கு அருமையான பூங்கொத்து ஒன்றினை பரிசளிப்போம்.... அழகான வார்த்தைகளை கோர்த்து மாலையாக்கி, இதோ ஒரு வாழ்த்துப்பா, அவரை விரும்பும் தங்கள் அனைவரின் மேலான பார்வைக்கு இதோ:

ரஜினி எனும் மூன்றெழுத்து காந்தம்

வெற்றி, நிறைவு, மகான் என மலர்ந்து

வாழ்வின் அர்த்தமாக மின்னுதே என்னே ஒரு பாந்தம்.


மலராத மலரும் உண்டா இவ்வுலகில்

இருந்தால் அது கூட, மலருமே உன் சிரிப்பில்

மலர்ந்த மலரின் மணத்தில், உயிர்ப்பில்

கண்ட அனைவரும் நிறைவோமே சிலிர்ப்பில்


வெள்ளி வானில் சில பல மின்மினி
மின்ன பாக்கும் பல சில இனி இனி

தோல்வி என்பதே இல்லை உனக்கினி


ஆறிலிருந்து அறுபது வரை உன் மேல் விருப்பம்
அதுவே திரைவாழ்வில் நீ கண்ட மாபெரும் திருப்பம்


உன் நிறமோ சிறிது கருமை - ஆனால்

கருமைக்கே நீ சேர்த்தாய் பெருமை

இதை கண்டோர்க்கெல்லாம் பொறாமை

அவர்களுக்கு எங்கே தெரியும் உன் அருமை


எல்லோர்க்கும் உன் செயல் மேல் நம்பிக்கை

நீ விதைத்தாய் அவர்தம் வாழ்வில் தன்னம்பிக்கை


நீ, மன்னர்களும் மண்டியிடும் ராஜாதி ராஜா
சேரனும், சோழனும் உள்ளடங்கிய -பாண்டியன்

உன் படம் படையெடுக்கும் போது

பட்டையை கிளப்பும் வசூல்... நல்ல மகசூல்.

உன் படம் கண்டவர்கள் சொன்னது தூள், தூள்...

முந்தைய வசூல் சாதனைகள் ஆனதே தூள், தூள்


நீ, ரசிகர்கள் கூட்டத்தை நல்வழிப்படுத்தி

முன்னின்று அழைத்து செல்லும் தளபதி

உலகிற்கு தர்மத்தை போதித்த தர்மதுரை


உழைப்பின் அருமை பெருமையை
ஓங்கி, உரக்க சொல்லிய உழைப்பாளி

வள்ளி" என்ற நல்ல படத்தின் படைப்பாளி


தர்மத்தை போதித்து அதர்மத்தை விரட்டியவன்

அதனாலேயே உன் பெயர் தர்மத்தின் தலைவன்


நீ, தரணிக்கே ஒரே மகன்
இந்நாட்டின் தலைமகன் - ஆயினும்

நான் மகான் அல்ல, சாமான்யன் தான்

என அடக்கத்துடன் சொல்லிய தங்க மகன்


நீ சொல்லி சூறாவளியாய் அடித்த படம் பாட்சா

உன்னிடம் எப்போதும் பலிக்காது மற்றவர்கள் பாச்சா


உன் அவதாரத்தின் ஒரு பெயரோ வீரா
-
ஆனாலும் நிஜத்தில் நீயோ ஒரு சமாதான புறா


அகவை அறுபதை கடந்த "மாவீரன் நீ
ஆயினும்...பாசம் உள்ள புனிதன் நீ

மீசை வைத்த குழந்தை நீ


சுருங்கி கிடந்த தமிழ் சினிமாவையும்

அதன் சுருண்டு கிடந்த வியாபாரத்தையும்

எந்திரன் என்ற படத்தின் மூலம் மீண்டும்

அகண்டு விரிய செய்த அற்புத மனிதன் நீ


ஆண்டுகள் பல ஆனாலும், வயது சில போனாலும்
,
இன்னும் உன் இளமை ஊஞ்சலாடுகிறது
.

தேனையும், சர்க்கரையையும் உண்டால்தான் இனிக்கும்

ஆனால், உன்னையோ நினைத்தாலே இனிக்கும்


நீ பாசத்தின் பாவலன், ஊர்காவலன்

அனைவரும் விரும்பும் "ந‌ல்ல‌வ‌னுக்கு ந‌ல்ல‌வன்"


அன்பான எஜமானுக்கு ஒரு உண்மையான வேலைக்காரன்
யுத்தத்தில் கூட தர்மம் கண்டது - உன்தர்ம யுத்தம்


அரிதாரமின்றி அவனியில் உலா வரும் அதிசய பிறவி நீ
எளியோருக்கு உதவிட இறைவன் படைத்த அற்புத கருவி நீ


தேவலோக இந்திரனும் கண்டு களித்தது உன் எந்திரனே
உன் புகழுக்கு தடை போட இனி இல்லை ஒரு அரணே


எந்திரன் என்ற ஒரு மாபெரும் சித்திரம்

உலகில் படைத்ததே பல பல சரித்திரம்


அனைவரும் தவமிருக்கும் ஆட்சி கட்டில்

உனக்கோ எப்போதுமே அது பேச்சு மட்டில்


ஆட்சியை தேடி அனைவரும், அனுதினமும் அலைய

வெண்தாடியோடு நீ அமைதியை தேடி இமயம் ஓடி ஒளிய


பிறந்த நாள் வாழ்த்து என நான் தொடங்க

வார்த்தைகள் தேடி வந்து, சேர்ந்து ஆனது கவிதை

அதுவும் இங்கே நிகழ்ந்தது தான் விந்தை


ஓடி மறைந்து ஒளிந்தாலும்
,
வேண்டாம் என்று ஒதுங்கினாலும்

உன்னை விடுவதில்லை நாம் இனி

வேண்டாமென சொல்லாதே நீ இனி


உனக்கே சமர்ப்பணம் இந்த சாமான்யனின் பா

இந்த அகிலமே காத்திருக்கு, அரியணை ஏற வா

62 comments:

Anonymous said...

ரஜினி என்னும் மாபெரும் தலைவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Anonymous said...

சினிமா கடவுள் ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Anonymous said...

நண்பா இண்ட்லியில் இணைத்து விட்டேன்

புவனேஸ்வரி ராமநாதன் said...

கலக்கல்.

jokkiri said...

//ஆர்.கே.சதீஷ்குமார் said...
ரஜினி என்னும் மாபெரும் தலைவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்//

*********

வாங்க சதீஷ்...

முதலில் கமெண்ட் இட்டு வடை பெற்றமைக்கு வாழ்த்துக்கள்....

நன்றி....

jokkiri said...

//ஆர்.கே.சதீஷ்குமார் said...
சினிமா கடவுள் ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்//

*******

அட...

சரியா தான் சொல்லி இருக்கீங்க... இது கூட நல்லா இருக்கே... சினிமா கடவுள்....

jokkiri said...

//ஆர்.கே.சதீஷ்குமார் said...
நண்பா இண்ட்லியில் இணைத்து விட்டேன்//

******

இண்ட்லியில் இணைத்தமைக்கு மிக்க நன்றி சதீஷ்....

jokkiri said...

//புவனேஸ்வரி ராமநாதன் said...
கலக்கல்.//

********

வாங்க புவனா மேடம்....

வருகை தந்து, தலைவரை வாழ்த்திய பதிவை பாராட்டியமைக்கு மிக்க நன்றி..

karthikkumar said...

தலைவரை வாழ்த்த வயதில்லை. என் சார்பா நீங்களே வாழ்த்திடுங்க.

Mrs. Krishnan said...

ஓடி மறைந்து ஒளிந்தாலும்,
வேண்டாம் என்று ஒதுங்கினாலும்
உன்னை விடுவதில்லை நாமினி
வேண்டாமென சொல்லாதே நீயினி
உனக்கே சமர்ப்பணம் இந்த
சாமான்யனின் பா
இந்த அகிலமே காத்திருக்கு,
அரியணை ஏற வா
***
அட்டகாசம்! அருமை!!
இந்த கவிதையை படிச்சா தலைவர் மனசு மாறி வந்தாலும் வந்திடுவார்

தலைவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

வெங்கட் நாகராஜ் said...

ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். சீக்கிரமே சொல்லிட்டோமா?

பெசொவி said...

நல்ல பதிவு, வாழ்த்துகள்!

பதினேழு முறை வந்து பதினெட்டில் வென்றவன் கஜினி

முதல் முறையிலேயே நம் மனத்தை வென்றவர் ரஜினி

RVS said...

ரசிகர்களின் "எஜமானுக்கு" பிறந்த நாள் வாழ்த்துக்கள். ;-)

Jaleela Kamal said...

அட எல்லா படஙக்ளையும் சேர்ந்து என்னமா வாழ்த்து பதிவு சூப்பர்

Chitra said...

அடிச்சு தூள் கிளப்பிட்டீங்க.... வாழ்த்து கவிதை - நல்லா வந்து இருக்குது.

கோமதி அரசு said...

ரஜினி அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

அவர் படங்களை வைத்து அவர் புகழ் பாடிய உங்கள் பாடல் அருமை.

சாருஸ்ரீராஜ் said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள்

ம.தி.சுதா said...

அருமையாக தெரிந்தெடுத்து வடித்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்...

ஈ ரா said...

"ஓடி மறைந்து ஒளிந்தாலும்,
வேண்டாம் என்று ஒதுங்கினாலும்
உன்னை விடுவதில்லை நாமினி
வேண்டாமென சொல்லாதே நீயினி"
...

அரிமா அரிமா
நீயோ அமீரக அரிமா
அண்ணன் பிறந்தநாள் வந்தால்
சும்மா விடுமா ?

jokkiri said...

// karthikkumar said...
தலைவரை வாழ்த்த வயதில்லை. என் சார்பா நீங்களே வாழ்த்திடுங்க.///

****

வாங்க கார்த்திக் குமார்...

தலைவரை வாழ்த்த என்ன கசக்குமா? கண்டிப்பாக வாழ்த்தி விடுவோம்...

jokkiri said...

//Mrs. Krishnan said...
ஓடி மறைந்து ஒளிந்தாலும்,
வேண்டாம் என்று ஒதுங்கினாலும்
உன்னை விடுவதில்லை நாமினி
வேண்டாமென சொல்லாதே நீயினி
உனக்கே சமர்ப்பணம் இந்த
சாமான்யனின் பா
இந்த அகிலமே காத்திருக்கு,
அரியணை ஏற வா
***
அட்டகாசம்! அருமை!!
இந்த கவிதையை படிச்சா தலைவர் மனசு மாறி வந்தாலும் வந்திடுவார்

தலைவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்//

********

வாங்க திருமதி கிருஷ்ணன்...

இந்த கவிதையை படித்தால் மனசு மாறி வந்தாலும் வந்து விடுவார்...

ஆஹா... அவர் வந்தா மட்டும் போதுமே!!

jokkiri said...

//வெங்கட் நாகராஜ் said...
ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். சீக்கிரமே சொல்லிட்டோமா?//

********

வாங்க வெங்கட் நாகராஜ்....

தலைவருக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லுவோம்... சீக்கிரம் சொன்னது நல்லது தானே!!

jokkiri said...

//பெயர் சொல்ல விருப்பமில்லை said...
நல்ல பதிவு, வாழ்த்துகள்!

பதினேழு முறை வந்து பதினெட்டில் வென்றவன் கஜினி

முதல் முறையிலேயே நம் மனத்தை வென்றவர் ரஜினி//

*********

வாங்க பெயர் சொல்ல விருப்பமில்லை

நம் அனைவரின் மனதையும் வென்ற சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்வோம்...

jokkiri said...

//RVS said...
ரசிகர்களின் "எஜமானுக்கு" பிறந்த நாள் வாழ்த்துக்கள். ;-)//

*****

வாங்க மன்னை ஆர்.வி.எஸ்....

தலைவருக்கு பிறந்த நாள் வாழ்த்தை உங்களுடன் இணைந்து நானும் சொல்லிக்கொள்கிறேன்...

jokkiri said...

//Jaleela Kamal said...
அட எல்லா படஙக்ளையும் சேர்ந்து என்னமா வாழ்த்து பதிவு சூப்பர்//

********

வாங்க ஜலீலா மேடம்...

என் இந்த வாழ்த்துடன் நீங்களும் இணைந்து சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களை பிறந்த நாளில் வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி....

jokkiri said...

//Chitra said...
அடிச்சு தூள் கிளப்பிட்டீங்க.... வாழ்த்து கவிதை - நல்லா வந்து இருக்குது.//

******

வாங்க சித்ரா....

அதிரடி நாயகனுக்கு இது போன்றதொரு அதிரடி வாழ்த்து தேவைதானே!!

வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி....

jokkiri said...

// கோமதி அரசு said...
ரஜினி அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

அவர் படங்களை வைத்து அவர் புகழ் பாடிய உங்கள் பாடல் அருமை.//

******

கோமதி மேடம்.... வாங்க... நலம், நலமறிய ஆவல்...

சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாள் வாழ்த்து பதிவில் உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி...

வந்திருந்து, வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி மேடம்...

jokkiri said...

//சாருஸ்ரீராஜ் said...
பிறந்த நாள் வாழ்த்துக்கள்//

********

வாங்க சாருஸ்ரீராஜ்...

பதிவிற்கு வருகை தந்து, என்னுடன் இணைந்து சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்லியமைக்கு மிக்க நன்றி...

jokkiri said...

//ம.தி.சுதா said...
அருமையாக தெரிந்தெடுத்து வடித்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்...//

*******

வாங்க ம.தி.சுதா அவர்களே....

பதிவை படித்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி.....

jokkiri said...

// ஈ ரா said...
"ஓடி மறைந்து ஒளிந்தாலும்,
வேண்டாம் என்று ஒதுங்கினாலும்
உன்னை விடுவதில்லை நாமினி
வேண்டாமென சொல்லாதே நீயினி"
...

அரிமா அரிமா
நீயோ அமீரக அரிமா
அண்ணன் பிறந்தநாள் வந்தால்
சும்மா விடுமா ?//

********

ஆஹா... வராத ஈ.ரா.வே வந்துட்டாரே!!! சூப்பர்....

தலைவா... நீங்க இன்னும் அந்த “அமீரக அரிமா” வார்த்தையை மறக்கலியா!!?

பதிவிற்கு வருகை தந்து, படித்து, என்னுடன் இணைந்து “சூப்பர் ஸ்டார் ரஜினி” அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்ன உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி...

ரஹீம் கஸ்ஸாலி said...

சூப்பர்(ஸ்டார்) பதிவு என்பது இதுதானோ.....

jokkiri said...

//ரஹீம் கஸாலி said...
சூப்பர்(ஸ்டார்) பதிவு என்பது இதுதானோ.....//

*********

வாங்க ரஹீம் பாய்...

பதிவிற்கு வருகை தந்து, வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி...

ஆனாலும், நீங்க ரொம்ப மிகையா சொல்றீங்க....

deen_uk said...

சான்சே இல்ல கோபிண்ணா ,அன்பு தலைவனுக்கு , கலக்கல் கவிதை மாலை...!பின்னிட்டீங்க! வாழ்த்துக்கள்...
மேலும்..நாளை பிறந்தநாள் காணும்,குழந்தை உள்ளம் கொண்ட அன்பு தலைவனுக்கு,எங்கள் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

எப்பூடி.. said...

கலக்கல் கவிதை, தலைவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

jokkiri said...

//deen_uk said...
சான்சே இல்ல கோபிண்ணா ,அன்பு தலைவனுக்கு , கலக்கல் கவிதை மாலை...!பின்னிட்டீங்க! வாழ்த்துக்கள்...
மேலும்..நாளை பிறந்தநாள் காணும்,குழந்தை உள்ளம் கொண்ட அன்பு தலைவனுக்கு,எங்கள் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்..//

*******

பதிவிற்கு வருகை தந்து, வாழ்த்துப்பா படித்து பாராட்டியமைக்கு மிக்க நன்றி தீன் பாய்....

jokkiri said...

//எப்பூடி.. said...
கலக்கல் கவிதை, தலைவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்//

******

வாங்க ஜீவதர்ஷன்...

நீங்க இந்த வாரம் முழுக்க தலைவர் ஸ்பெஷல் போடறப்போ, நான் இந்த ஒண்ணே ஒண்ணு தானே போட்டேன்..

வருகை தந்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி....

S. Abdulla said...

Please send me Sujatha novels my email id syed.abdulla@al-rushaid.com

அன்பரசன் said...

ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

ஜெயந்த் கிருஷ்ணா said...

கலக்கல் கவிதை, தலைவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

deen_uk said...

இன்று பிறந்தநாள் காணும் என் அன்பு தலைவருக்கு என் மனம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
நீங்கள்,சீரும் சிறப்புடனும்,நீண்ட ஆயுளுடனும்,ஆரோக்கியத்துடனும் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்

deen_uk said...

லண்டனில் உள்ள மெழுகு சிலை அருங்காட்சியகத்தில் (WAX MUSEUM-Madame Tussuads-LONDON)..தலைவரின் மெழுகு சிலை வைக்க ஓட்டெடுப்பு நடக்கிறது..நமது தளத்தின் ரசிக நண்பர்கள் ,மற்றும் உங்களுக்கு தெரிந்த தலைவர் ரசிகர்கள் அனைவருக்கும் இதை தெரியப் படுத்தி,தலைவருக்கு ஒட்டு போடுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
கீழே லிங்க் கொடுத்துள்ளேன்..தலைவருக்கு பிறந்தநாள் பரிசாக ,அவருக்கு லண்டனில் மெழுகு சிலை வைப்போம்.வோட்டளிக்கும் அன்பு உள்ளங்களுக்கு நன்றி..
http://www.behindwoods.com/

எப்பூடி.. said...

'வீரா' திரைப்படத்தை பஞ்சு அருணாச்சலம் தயாரித்ததை குறிப்பிட்டுள்ளேன், ஏனைய திரைப்படங்களின் பெயர்களை குறிப்பிடுங்கள், இணைத்து விடுகிறேன்.

உங்கள் மேலதிக தகவல்கள் பதிவுகளை பூரணப்படுத்த உதவுகிறது, மிக்க நன்றி.

jokkiri said...

//S. Abdulla said...
Please send me Sujatha novels my email id syed.abdulla@al-rushaid.com//

********

அப்துல்லா பாய்...

தலைவருக்கு கஷ்டப்பட்டு ஒரு வாழ்த்துப்பா எழுதியிருக்கேன்... அதை பத்தி ஒரு வார்த்தை சொல்லாம, சுஜாதா நாவல்கள் கேக்கறீங்களே...

பட்.... பரவாயில்லை... நீங்கள் கேட்ட சுஜாதா நாவல்கள் அனுப்புகிறேன்...

jokkiri said...

//அன்பரசன் said...
ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..//

*******

வாங்க அன்பரசன்...

பதிவிற்கு வருகை தந்து, தலைவரை வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி....

jokkiri said...

// வெறும்பய said...
கலக்கல் கவிதை, தலைவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்//

*******

வாங்க தோழரே....

வருகை தந்து, கவிதையை பாராட்டி, தலைவருக்கும் வாழ்த்து பகிர்ந்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி...

jokkiri said...

//deen_uk said...
இன்று பிறந்தநாள் காணும் என் அன்பு தலைவருக்கு என் மனம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
நீங்கள்,சீரும் சிறப்புடனும்,நீண்ட ஆயுளுடனும்,ஆரோக்கியத்துடனும் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்//

*********

வாங்க தீன் பாய்....

நன்றி... நன்றி.... நீங்க எல்லாம் வந்து வாழ்த்து சொல்றது பார்த்து ரொம்ப சந்தோஷம்....

jokkiri said...

//deen_uk said...
லண்டனில் உள்ள மெழுகு சிலை அருங்காட்சியகத்தில் (WAX MUSEUM-Madame Tussuads-LONDON)..தலைவரின் மெழுகு சிலை வைக்க ஓட்டெடுப்பு நடக்கிறது..நமது தளத்தின் ரசிக நண்பர்கள் ,மற்றும் உங்களுக்கு தெரிந்த தலைவர் ரசிகர்கள் அனைவருக்கும் இதை தெரியப் படுத்தி,தலைவருக்கு ஒட்டு போடுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
கீழே லிங்க் கொடுத்துள்ளேன்..தலைவருக்கு பிறந்தநாள் பரிசாக ,அவருக்கு லண்டனில் மெழுகு சிலை வைப்போம்.வோட்டளிக்கும் அன்பு உள்ளங்களுக்கு நன்றி..
http://www.behindwoods.com///

********

தகவலுக்கு நன்றி தீன் பாய்...

இதை ஏற்கனவே நான் முடிச்சாச்சு.. மற்ற நண்பர்களும் இதில் பங்கு கொண்டால், வெற்றி நிச்சயம்...

jokkiri said...

//எப்பூடி.. said...
'வீரா' திரைப்படத்தை பஞ்சு அருணாச்சலம் தயாரித்ததை குறிப்பிட்டுள்ளேன், ஏனைய திரைப்படங்களின் பெயர்களை குறிப்பிடுங்கள், இணைத்து விடுகிறேன்.

உங்கள் மேலதிக தகவல்கள் பதிவுகளை பூரணப்படுத்த உதவுகிறது, மிக்க நன்றி.//

**********

வாங்க ஜீவதர்ஷன்...

ஏற்கனவே உங்கள் பதிவில் கமெண்டி விட்டேன்... பார்த்து உங்கள் பதிவில் சேர்த்து விடுங்கள்....

ரிஷபன்Meena said...

ரஜினி சுய விளம்பரம் இல்லாமல் வாழ்வது ஆச்சர்யமே. வாழ்க பல்லாண்டு.

சன் டி.வியில் கொழந்தைப் பையன் எல்லாம் உப்பு சப்பு இல்லாத பேட்டி எடுக்க, தல, உட்கார்ந்து பதில் சொல்லியதை பார்த்த போது பரிதாபமாக இருந்தது.

கிரி said...

தலைவருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். இன்று சிங்கப்பூர் ல் ரஜினி ரசிகர்கள் சார்பாக முதியோர் இல்லத்தில் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.

கிரி said...

எனக்கும் கவிதைக்கும் வெகு தூரம் என்பதால் கோபி கவிதையே என் கவிதையாகவும் :-)

rajagopalan said...

Dear Gopi

Kalakkal kavidai. I always admire and enjoy your sense of humour.

raju-0502349374

Unknown said...

Dear Gopi

Nice Paa.. (This Pa refers to your kavithai)

Doolpa... (This refers to you writing the same)

Belated Wishes to Global "Super Star"
do I need to specify the name here. need not.

Kamesh

jokkiri said...

//ரிஷபன்Meena said...
ரஜினி சுய விளம்பரம் இல்லாமல் வாழ்வது ஆச்சர்யமே. வாழ்க பல்லாண்டு.

சன் டி.வியில் கொழந்தைப் பையன் எல்லாம் உப்பு சப்பு இல்லாத பேட்டி எடுக்க, தல, உட்கார்ந்து பதில் சொல்லியதை பார்த்த போது பரிதாபமாக இருந்தது.//

********

வாங்க ரிஷபன் சார்...

சன் டி.வி. பேட்டி “எந்திரன்” படத்துக்கான ப்ரமோ சார்... அதான் அப்படி இருந்தது... அவரும் ப்ரமோவில் ஒத்துழைப்பேன் என்று ஒப்புக்கொண்டதற்காக செய்து கொடுத்தது....

jokkiri said...

//கிரி said...
தலைவருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். இன்று சிங்கப்பூர் ல் ரஜினி ரசிகர்கள் சார்பாக முதியோர் இல்லத்தில் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.

எனக்கும் கவிதைக்கும் வெகு தூரம் என்பதால் கோபி கவிதையே என் கவிதையாகவும் :-)//

*******

வாங்க கிரி

தலைவர் பிறந்த நாளை முதியோர் இல்லத்தில் கொண்டாடியது படித்தாலே ரொம்ப நெகிழ்வா இருக்கு...

கவிதையா!! தமாஷ் பண்றீங்க கிரி...

jokkiri said...

//rajagopalan said...
Dear Gopi

Kalakkal kavidai. I always admire and enjoy your sense of humour.

raju-0502349374//

*******

வாங்க ராஜு....

வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி...

ஃப்ரீயா இருக்கும் போது அழைக்கவும்....

050-4168650

jokkiri said...

//Kamesh said...
Dear Gopi

Nice Paa.. (This Pa refers to your kavithai)

Doolpa... (This refers to you writing the same)

Belated Wishes to Global "Super Star"
do I need to specify the name here. need not.

Kamesh//

**********

நெம்ப டேக்ஸ்பா

Unknown said...

சினிமா கடவுள்னு சொல்லாதீங்க, மனித கடவுள்னு சொல்லுங்க அதுதான் சரியா இருக்கும்

ஐயையோ நான் தமிழன் said...

அடா.....அடா.......அடா......
சூப்பர்ணா........
கலக்கிட்டிங்க

வாழ்த்துக்கள்....நம்மளும் முடிஞ்சதை பண்ணிருக்கோம் கொஞ்சம் போய் பாருங்க

but one thing
உனக்கெல்லாம் இது தேவையாடா அப்பிடின்னு
திட்டக்கூடாது

http://rupsrajni.blogspot.com/2010/12/super-star_12.html

jokkiri said...

//இரவு வானம் said...
சினிமா கடவுள்னு சொல்லாதீங்க, மனித கடவுள்னு சொல்லுங்க அதுதான் சரியா இருக்கும்//

*********

வாங்க இரவு வானம்....

அவர் நல்ல மனிதனாகவே இருக்கட்டும்... அதுவே நல்லா இருக்கு...

வருகை தந்து, பதிவிற்கு கருத்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி....

jokkiri said...

//ஐயையோ நான் தமிழன் said...
அடா.....அடா.......அடா......
சூப்பர்ணா........
கலக்கிட்டிங்க

வாழ்த்துக்கள்....

நம்மளும் முடிஞ்சதை பண்ணிருக்கோம் கொஞ்சம் போய் பாருங்க

but one thing
உனக்கெல்லாம் இது தேவையாடா அப்பிடின்னு திட்டக்கூடாது

http://rupsrajni.blogspot.com/2010/12/super-star_12.html//

*********

வாங்க நண்பா....

ஹா...ஹா....ஹா... இதோ பார்க்கிறேன்....

Kavi said...

உங்களது பதிவுகள் அனைத்தும் படிக்க சுவராஷ்யமாய் இருக்கின்றன... என் பக்கம் பார்க்க .... http://www.padugai.com ... நீங்களும் படித்திட்டு சொல்லுங்கள் www.padugai.com ... உங்கள் பதிவுகளுக்காக காத்திருக்கிறேன் ... :)
நன்றி