வெற்றியின் விழுதுகள் – பகுதி 2

சாதிகள் இல்லையடி பாப்பா குலம் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்

மனிதர்களின் வாழ்க்கையை பற்றி எழுதப் போகிறோம் என்றதுமே முதலில் ஒரு விசயத்தை தெளிவு படுத்தி தங்கள் ஒப்புதலோடு தொடர்வோம். அதானே ”விளக்க வச்சுட்டு விளக்கமா பேசலாம், அதுக்குன்னு விளங்காதத பேசுறதுக்கு விளக்க அமுத்திட்டா மட்டும் போதுமா”. செருப்பு இல்லாம நாம நடக்க முடியும் அதுவே நாம இல்லாம செருப்பால நடக்க முடியுமா. சொல்றத சொல்லிப்புட்டு தெளிவா தொடங்கிறதுதானே நல்லது.

ஆனானப்பட்ட ஆண்டவனுக்கே சாத்தான்னு ஒரு எதிர்கட்சி இருக்கும்போது, சாதாரண மனுசனுக்கு நிச்சயம் ஒரு எதிர்ப்பு இருப்பது இயல்பு தானே. என்னதான் சாதனையாளர்கள் ஆனாலும் அவங்களையும் பிடிக்கும் பிடிக்காத என இரண்டு கட்சிகள் உண்டு. கலர்ல கரை வேஷ்டி கட்டி, கலகலப்பா ஒரு கும்பல் இங்கேயும் இருக்கு அங்கேயும் இருக்கு. எல்லோருக்கும் பிடிக்கும் படியாக, எல்லோரும் ஒப்புக் கொள்ளக்கூடிய ஒருத்தர், யாரும் குறையே சொல்லாத ஒரு மனிதர் வேண்டுமென்றால், ஒருவரை இனிமே புதுசா செய்யத்தான் வேண்டும், ஒருவர் பிறக்க வாய்ப்பு இல்லை.

ஒரு அறிஞர் உபன்யாசம் செஞ்சாராம். மனுசன் சாவாம இருக்க என்ன செய்யணுங்கிற ரகசியத்த நான் 10 நாளுல சொல்லுவேன்னு ஒரு குண்ட தூக்கி போட, தினசரி அதை கேட்க கூட்டம் பிச்சுக்கிச்சாம். அடடா... இந்த மேட்டர மட்டும் தெரிஞ்சுகிட்டா நமக்கு மட்டுமில்ல...வரும் நம்ம சந்ததிக்கும் சூப்பராச்சேடா டோய்னு ஆர்வமா கேட்டாங்களாம்...முதல் நாள்லயே மேட்டர் என்னன்னு சொல்லாம, கடைசி நாள்ல அவர் இப்படி சொன்னாராம் ‘இறவாமை கிடைக்க, நமக்கு பிறவாமை வேண்டும் என்று’ எப்புடி.... கிறுகிறுத்து போச்சுல்ல..

பிறப்பு இறப்பு எப்படியோ அப்படித்தான் விறுப்பு வெறுப்பும் தவிர்க்கவே முடியாது.

மனிதர் என்பது பிறத்தியாருக்கு பிடிக்கும் மற்றும் பிடிக்காத விசயம் சேர்ந்த கலவையே. கரெக்ட்டு என ஒத்துக்கொண்டு, உன்னிப்பாய் பார்த்து அவர்களிடத்தில் நாம் எடுத்துக் கொள்ள என்ன இருக்கிறது. அவரது பலம் என்ன அதை செய்ய என்னால் முடியுமா என பகுத்துப் பார்ப்பதிலேயே நம் பலம் இருக்கிறது. நாம் முன்னர் சொன்னது போல், சந்திக்கும் ஒவ்வொருவரிடம் இருந்து நாம் கற்றுக் கொள்வதிலேயே நம் கவனம் வைப்போம்.

சரி பாபா சாகேப் அம்பேத்கர் பற்றி பார்ப்போமே. இந்தியாவின் கான்ஸ்டிட்யூஷன் செய்தது இவர்தான், ரிசர்வேஷன என பகுத்தது இவர்தான் எனும் நம் தகவல்கள் தாண்டி அவரின் வாழ்வை சற்றே நெருங்கிப் பார்ப்போமே.

அம்பேத்கர் வாழ்வை தரிசிக்கும் முன் காலக் குதிரையில் ஏறி, 2300 வருசங்களுக்கு முன் செல்வோம். காசா பணமா, பாஸ்போர்ட்டை கூட வீட்டிலேயே பத்திரமாய் வைத்துவிட்டு வாருங்கள், டைம் மெஷினில் ஏறி டைலமோ டைலமோ... டைல டைல டைலமோ என்று பாடிக்கொண்டே அங்கிட்டு போவோம்....

பருத்தி கொட்டை விக்கறவன், புண்ணாக்கு விக்குறவன் பஞ்சு மிட்டாய் விக்குறவன் எல்லாம் தொழிலதிபரா. நாட்டுல இந்த தொழிலதிபர்கள் தொல்லை தாங்க முடியலப்பா என சலித்துக் கொள்ளும் நமக்கு இந்த காலத்தில் தொழிலதிபர் தொல்லைன்னா அந்த சரித்திர காலத்தில குறு நிலமன்னர்கள் தொல்லை. எட்டுப்பட்டிகளை உள்ளடக்கிய மிராசுகூட ‘ராஜா... ராஜாதி ராஜனிந்த ராஜா’ என ஸ்டைலாய் பாடிக் கொண்டு ஆட்சி செய்து வந்தனர். ஒன்று பட்டால் உண்டு வாழ்வு, இல்லை ஒற்றுமை நீங்கின் அனைவருக்கும் தாழ்வே என புரியாமல் பக்கத்து நாட்டுகிட்ட சோறு தண்ணி புழக்கம் இல்லாம இருந்தாங்க.
இந்திய தொல் பொருள் வரலாறு பார்க்கும் போது, நம்ம தமிழ் நாட்டுல தான் உயிரினம் இருந்ததா ஆராய்ச்சியாளர் சொல்றாங்க. தமிழ் நாட்டுல 75,000 வருசத்துக்கு முந்தி மனுசர்கள் (Homosapien) இருந்ததாகவும், 5 லட்ச வருசத்துக்கு முந்தி மனுசன் மாதிரி சில உயிரினம் (Hominid) இருந்ததாகவும் புள்ளிவிவரம் சொல்லுது. வளைச்சு பிடிச்சு மௌரியர்கள் ஆண்ட 3 BC. யில பாரதம் ஒற்றுமையா பெரிசா இருந்துச்சு. அதுக்கு பின்னால, சுமாரா 1,500 வருசம் இந்த மாதிரி பிரிஞ்சு பிரிஞ்சு சின்ன சின்ன நாடா இருந்துச்சு. வாசகர் எல்லாம் பெருமை பட்டுக்க ஒரு இன்பர்மேஷன், அந்த காலத்தில நம்ம இந்தியா தான் வல்லரசு.

இந்தியா இயற்கை வளமும், தங்கமும், கலையும் கலாச்சாரமுமா மின்னிக் கொண்டிருக்க, அண்டை நாடுகள் இதை ஆவலாய் பார்த்து. கொண்டு வந்துரவேண்டியதுதான் என எல்லோருமே திட்டமிட்டார்கள். அப்படி திட்டம் இட்டவர்களில் ஒருவர் அலெக்ஸாண்டர்.

ரொம்ப அழகா இருக்காங்க என சுத்தமான அக்மார்க் தமிழில் சொல்லி, யவனர்கள் என சரித்திரத்தில் குறிக்கப்பட்ட கூரூப்ல இருந்து நம்ம மாவீரன் அண்ணன் அலெக்ஸாண்டர் வந்து சிதறிக் கிடந்த பாரத தேசத்தை எளிமையாய் வென்றான். ஒற்றுமையாய் எதிர்த்து நின்று போரிடாமல், ஒன்று திரளாமல் செப்பரேட் செப்பரேட்டா அப்பீட் ஆனார்கள் நம்ம குறு நிலமன்னர்கள்.

தோல்வியின் காரணத்தை தீவிரமாக யோசித்தவர் சாணக்கியர் எனும் தீவிர சிந்தனையாளர். அவர் தீர ஆலோசித்து ஒரு திட்டம் வகுத்தார். சிதறிக் கிடப்பதே பலவீனம், ஒற்றுமையே பலம் என ஒரு கணக்கு கூட்டினார், சரி சக்தி வாய்ந்த மிகப் பெரிய நாடு எனும்போது அதை ஆள தகுதியான வீரத்தில் மிகுந்து விவேகத்தில் பெரிய மன்னன் வேண்டும். அவர் கணக்குப்படி சந்திரகுப்தரிடம் அந்த தகுதிகள் இருப்பதாய் கண்டு அவரையே தலைவன் என கணக்கிட்டார்.

ஆனால் அந்த திட்டத்தின் முதல் பிரச்சனை, சந்திரகுப்தர் சார்ந்திருப்பது கீழ் ஜாதி. சுற்றியிருந்தவர்கள் அவர் கருத்தை எதிர்த்தனர். ஆனால் இவரோ அரசை ஆள தகுதிதான் வேண்டும், வீரம் தான் வேண்டும், ஜாதி என ஜல்லியடிக்காதீர் என தீர்மானமாய் சொன்னார்.

அப்போதைய அரசன் நந்தாவும், அவன் குடிகார மகனும் அதற்கு லாயக்கில்லை என சொன்னதை கேட்டபோது மன்னன் நந்தா உக்கிரமாக வாதாடினான். நீயும் என் குலம், நீ எப்படி கீழ் ஜாதியில் உள்ளவனுக்கு துணை செல்லலாம் என்று முழங்கி அவரை அரசவையில் இருந்து தூக்கி வீசினான். சாதி இல்லை என முழங்கி, என் சபதத்தில் வெற்றி பெறும் வரை தலைமுடி முடியேன் என சூளுரைத்து சந்திர குப்தரை முடிசூட்டி தன் முடி முடிந்தார்.
பிரதம மந்திரியாய் திறம்பட பணியாற்றி, ஈரான் தொடங்கி, தெற்கே மைசூர் வரை பாரத தேசம் உருவாக்கி, கலியுகத்தின் மிகப் பெரிய பாரதம் என பெறுமையும் பெற்றது சாணக்கியரின் சாதனை. பாருங்களேன் அன்றைய பாரதம் எம்மாம் பெரிசு.

தோற்பது தவறில்லை. தோல்விக்கான காரணம் அறிவது, பிரச்சனையின் ஆழ சென்று வேர் வரை பார்ப்பது முக்கியம் என்பது சாணக்கியர் வாழ்வு நமக்கு தரும் முதல் பாடம். சிதறுண்டிருக்கும் இத்தனை பெரிய தேசத்தை ஒன்று படுத்துவது என்பது எளிதா. மொழி கலாச்சாரம், மதம் என எத்தனை வேறுபாடுகள். எப்படிங்க ஒட்டும் என குறை சொல்லாமல் எது பிரச்சனையின் ஆணி வேர் என காண்பது மிக மிக அவசியம்.

மேலை நாட்டிலொரு (5 WHY) ஃபை வொய் எனும் தத்துவம் உண்டு. ஏந்த பிரச்சனையானாலும் ஒய்... ஒய்... என கேட்டுக் கொண்டே இரு என்பார்கள். சாணக்கியர் இப்படி கேட்டிருப்பாரோ!!??.... நாமெல்லாம் தோத்துப் போயிட்டோம். ஒய்... வந்தவன் பலசாலி, நம்மால தாங்கமுடியல. ஒய். நம்ம பேஸ்மெண்ட் வீக்கு, படை பலம் இல்ல. ஒய். சின்ன தேசம்தான, பெரிசா நாடு இருந்திருந்தா, ஒரே தலைவன் கீழ் செயல் பட்டிருந்தால் நாம் செயிச்சிருக்கலாம். இப்படி ஒவ்வொரு படியாக ஒய் ஒய் என கேட்டால் பிரச்சனையின் ஆழத்துக்கு எளிதாய் செல்லலாம்.

வாசக தோழமைகள் உங்களை வாட்டியெடுக்கும் ஏதாவதொரு பிரச்சனையை எடுத்து கொள்ளுங்களேன். லைஃப்ல லட்சியமே என்னான்னு தெரியலைங்க என்று சொல்லும் “எயிம்லெஸ் எம்டன் மகன்” ஆகவும் இருக்கலாம், நேத்து தூங்கவே இல்லீங்க என சொல்லும் ராக்கோழி ரங்கண்ணனாகவும் இருக்கலாம். எதுவானாலும் ஓகே. கேள்வி கேட்டுவிட்டு ஒய் என முதல் கேள்வி கேட்டு, அதற்கு கிடைக்கும் பதிலில் மறுபடி ஒய் எனக் கேட்டு, கிடைக்கும் பதிலில் மறுபடி ஒய் கேட்டு பாருங்களேன்.

ஒரு மூன்று ஒய் கேட்டு பதில் வாங்கும் முன்னரே மூச்சு வாங்கி போகும். ஐந்தாவது ஒய் போவது நெம்ப கஷ்டம், போயிட்டோமுன்னா அதுதான் நம் பிரச்சனையின் ஆணி வேர்.

பிறக்கும் போது ஒட்டிக்கும் சாதி சரியில்ல என உணர்ந்து சாதி இல்லை என சொல்லி தன் இலக்கை அடைந்து சாதித்த சாணக்கியரின் வாழ்வுக்கு ஒரு சல்யூட் அடித்துவிட்டு, சாதி இல்லை என சொல்லி சாதித்த இன்னொரு சரித்திர புருஷன் பி.ஆர். அம்பேத்கரின் வாழ்வை அடுத்த பகுதியில் பார்ப்போமே.

(லாரன்ஸ் / ஆர்.கோபி)

அடுத்தபடி அடுத்த படி வெற்றிப்படி.

23 comments:

Chitra said...

மேலை நாட்டிலொரு (5 WHY) ஃபை வொய் எனும் தத்துவம் உண்டு. ஏந்த பிரச்சனையானாலும் ஒய்... ஒய்... என கேட்டுக் கொண்டே இரு என்பார்கள். சாணக்கியர் இப்படி கேட்டிருப்பாரோ!!??.... நாமெல்லாம் தோத்துப் போயிட்டோம். ஒய்... வந்தவன் பலசாலி, நம்மால தாங்கமுடியல. ஒய். நம்ம பேஸ்மெண்ட் வீக்கு, படை பலம் இல்ல. ஒய். சின்ன தேசம்தான, பெரிசா நாடு இருந்திருந்தா, ஒரே தலைவன் கீழ் செயல் பட்டிருந்தால் நாம் செயிச்சிருக்கலாம். இப்படி ஒவ்வொரு படியாக ஒய் ஒய் என கேட்டால் பிரச்சனையின் ஆழத்துக்கு எளிதாய் செல்லலாம்.


...........இது நல்ல இடுகை ஒய்

R.Gopi said...

//Chitra said....

...........இது நல்ல இடுகை ஒய்//

********

Thanks Chitra for your visit and comment...

Jaleela Kamal said...

/பருத்தி கொட்டை விக்கறவன், புண்ணாக்கு விக்குறவன் பஞ்சு மிட்டாய் விக்குறவன் எல்லாம் தொழிலதிபரா. நாட்டுல இந்த தொழிலதிபர்கள் தொல்லை தாங்க முடியலப்பா //
சரியான காமடி

வெற்றியின் விழுதுகள் இரண்டாவது பகுதியும் அருமை

R.Gopi said...

//Jaleela said...
/பருத்தி கொட்டை விக்கறவன், புண்ணாக்கு விக்குறவன் பஞ்சு மிட்டாய் விக்குறவன் எல்லாம் தொழிலதிபரா. நாட்டுல இந்த தொழிலதிபர்கள் தொல்லை தாங்க முடியலப்பா //
சரியான காமடி

வெற்றியின் விழுதுகள் இரண்டாவது பகுதியும் அருமை//

*********

பதிவிற்கு வருகை தந்து, படித்து பாராட்டியமைக்கு எங்களின் மனமார்ந்த நன்றி.........

CS. Mohan Kumar said...

நல்ல விஷயம் தொடருங்கள்...

R.Gopi said...

//மோகன் குமார் said...
நல்ல விஷயம் தொடருங்கள்...//

********

பதிவிற்கு வருகை தந்து, படித்து வாழ்த்திய தோழமைக்கு எங்களின் மனமார்ந்த நன்றி.......

Thenammai Lakshmanan said...

//பிறக்கும் போது ஒட்டிக்கும் சாதி சரியில்ல என உணர்ந்து சாதி இல்லை என சொல்லி தன் இலக்கை அடைந்து சாதித்த சாணக்கியரின் வாழ்வுக்கு ஒரு சல்யூட் அடித்துவிட்டு, சாதி இல்லை என சொல்லி சாதித்த இன்னொரு சரித்திர புருஷன் பி.ஆர். அம்பேத்கரின் வாழ்வை அடுத்த பகுதியில் பார்ப்போமே//

the complete issue is superb Gopiand this is excellent ...

R.Gopi said...

//thenammailakshmanan said...
//பிறக்கும் போது ஒட்டிக்கும் சாதி சரியில்ல என உணர்ந்து சாதி இல்லை என சொல்லி தன் இலக்கை அடைந்து சாதித்த சாணக்கியரின் வாழ்வுக்கு ஒரு சல்யூட் அடித்துவிட்டு, சாதி இல்லை என சொல்லி சாதித்த இன்னொரு சரித்திர புருஷன் பி.ஆர். அம்பேத்கரின் வாழ்வை அடுத்த பகுதியில் பார்ப்போமே//

the complete issue is superb Gopi and this is excellent ...//

********

Welcome Thennammai....

Thanks for your continuous visit and encouraging comments.....

கோமதி அரசு said...

இரண்டு வாரம் ஊரில் இல்லை அதனால் உங்கள் பதிவை படிக்க முடியவில்லை.

//தோற்பது தவறில்லை,தோல்விக்கான காரணம்
அறிவது,பிரச்சனையின் ஆழசென்று வேர் வரை பார்ப்பது முக்கியம்//

நல்ல கருத்து.

வெற்றி படிகளில் ஏறி விடாமல் சென்று கொண்டு இருக்க வாழ்த்துக்கள், உங்கள் இருவருக்கும்.

R.Gopi said...

//கோமதி அரசு said...
இரண்டு வாரம் ஊரில் இல்லை அதனால் உங்கள் பதிவை படிக்க முடியவில்லை.

//தோற்பது தவறில்லை,தோல்விக்கான காரணம்
அறிவது,பிரச்சனையின் ஆழசென்று வேர் வரை பார்ப்பது முக்கியம்//

நல்ல கருத்து.

வெற்றி படிகளில் ஏறி விடாமல் சென்று கொண்டு இருக்க வாழ்த்துக்கள், உங்கள் இருவருக்கும்.//

********

தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி கோமதி மேடம்...

ஈ ரா said...

நகைச்சுவையாக சொன்னாலும் "இறவாமை இல்லாதிருக்கப் பிறவாமை வேண்டும்"
மனிதர் என்பது பிறத்தியாருக்கு பிடிக்கும் மற்றும் பிடிக்காத விசயம் சேர்ந்த கலவையே.
சந்திக்கும் ஒவ்வொருவரிடம் இருந்து நாம் கற்றுக் கொள்வதிலேயே நம் கவனம் வைப்போம்.
இன்றைய சூழலில் பிறப்பாலான சாதி தேவையில்லை....

நல்ல கருத்துக்கள்..தொடருங்கள்...

இடைவெளிக்கு பின் இப்போதுதான் கொஞ்சம் நேரம் செலவிடுகிறேன்... எல்லாவற்றையும் படிக்க முயல்கிறேன்..

R.Gopi said...

//ஈ ரா said...
நகைச்சுவையாக சொன்னாலும் "இறவாமை இல்லாதிருக்கப் பிறவாமை வேண்டும்"
மனிதர் என்பது பிறத்தியாருக்கு பிடிக்கும் மற்றும் பிடிக்காத விசயம் சேர்ந்த கலவையே.
சந்திக்கும் ஒவ்வொருவரிடம் இருந்து நாம் கற்றுக் கொள்வதிலேயே நம் கவனம் வைப்போம்.
இன்றைய சூழலில் பிறப்பாலான சாதி தேவையில்லை....

நல்ல கருத்துக்கள்..தொடருங்கள்...

இடைவெளிக்கு பின் இப்போதுதான் கொஞ்சம் நேரம் செலவிடுகிறேன்... எல்லாவற்றையும் படிக்க முயல்கிறேன்..//

********

வாங்க ஈ.ரா..

நீண்ட நாட்களுக்கு பின் தரிசனம்.. நலம் நலமறிய ஆவல்...

மற்ற பதிவுகளையும் படித்து கருத்து பகிருங்கள்...

நன்றி...

அண்ணாமலையான் said...

மிக அருமையா சொன்னீங்க....

R.Gopi said...

//அண்ணாமலையான் said...
மிக அருமையா சொன்னீங்க....//

******

கருத்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி அண்ணாமலையான் அவர்களே...

ஜெயந்தி said...

வெற்றியின் விழுதுகள் மிகவும் நல்ல பதிவு. எளிமையாகவும் விறுவிறுப்பாகவும் செல்கிறது உங்கள் எழுத்து. வாழ்க்கைக்குத் தேவையான பதிவு.

R.Gopi said...

//ஜெயந்தி said...
வெற்றியின் விழுதுகள் மிகவும் நல்ல பதிவு. எளிமையாகவும் விறுவிறுப்பாகவும் செல்கிறது உங்கள் எழுத்து. வாழ்க்கைக்குத் தேவையான பதிவு.//

********

பதிவிற்கு வருகை தந்து, படித்து கருத்து பகிர்ந்த தோழமைக்கு எங்களின் மனமார்ந்த நன்றி...

CS. Mohan Kumar said...

பல நல்ல விஷயங்கள் அறிய முடிகிறது. மிக நன்றி

R.Gopi said...

//மோகன் குமார் said...
பல நல்ல விஷயங்கள் அறிய முடிகிறது. மிக நன்றி//

********

வாங்க மோகன் குமார் அவர்களே...

இனி வரும் பகுதிகளில் நிறைய விஷயங்களை எழுத தீர்மானித்துள்ளோம்...

தொடர்ந்து வருகை தாருங்கள்....

அருவி said...

ஓட்டுப் போட்டதுக்கு நன்றி

Anonymous said...

//ஒரு அறிஞர் உபன்யாசம் செஞ்சாராம். மனுசன் சாவாம இருக்க என்ன செய்யணுங்கிற ரகசியத்த நான் 10 நாளுல சொல்லுவேன்னு ஒரு குண்ட தூக்கி போட, தினசரி அதை கேட்க கூட்டம் பிச்சுக்கிச்சாம். அடடா... இந்த மேட்டர மட்டும் தெரிஞ்சுகிட்டா நமக்கு மட்டுமில்ல...வரும் நம்ம சந்ததிக்கும் சூப்பராச்சேடா டோய்னு ஆர்வமா கேட்டாங்களாம்...முதல் நாள்லயே மேட்டர் என்னன்னு சொல்லாம, கடைசி நாள்ல அவர் இப்படி சொன்னாராம் ‘இறவாமை கிடைக்க, நமக்கு பிறவாமை வேண்டும் என்று’ எப்புடி.... கிறுகிறுத்து போச்சுல்ல..

பிறப்பு இறப்பு எப்படியோ அப்படித்தான் விறுப்பு வெறுப்பும் தவிர்க்கவே முடியாது.//

உணர முடிந்தாலும் ஏற்க மறுக்கிறது மனசு இது தானே மனிதனின் வீக்னெஸ் கோபி...

R.Gopi said...

// தமிழரசி said...
//ஒரு அறிஞர் உபன்யாசம் செஞ்சாராம். மனுசன் சாவாம இருக்க என்ன செய்யணுங்கிற ரகசியத்த நான் 10 நாளுல சொல்லுவேன்னு ஒரு குண்ட தூக்கி போட, தினசரி அதை கேட்க கூட்டம் பிச்சுக்கிச்சாம். அடடா... இந்த மேட்டர மட்டும் தெரிஞ்சுகிட்டா நமக்கு மட்டுமில்ல...வரும் நம்ம சந்ததிக்கும் சூப்பராச்சேடா டோய்னு ஆர்வமா கேட்டாங்களாம்...முதல் நாள்லயே மேட்டர் என்னன்னு சொல்லாம, கடைசி நாள்ல அவர் இப்படி சொன்னாராம் ‘இறவாமை கிடைக்க, நமக்கு பிறவாமை வேண்டும் என்று’ எப்புடி.... கிறுகிறுத்து போச்சுல்ல..

பிறப்பு இறப்பு எப்படியோ அப்படித்தான் விறுப்பு வெறுப்பும் தவிர்க்கவே முடியாது.//

உணர முடிந்தாலும் ஏற்க மறுக்கிறது மனசு இது தானே மனிதனின் வீக்னெஸ் கோபி...//

*******

ஆமாம் தமிழரசி... நாம் எதை தான் ஒப்புக்கொள்கிறோம்..

மண்ணின் மீது மனிதனுக்கு ஆசை
மனிதன் மீது மண்ணுக்கு ஆசை
மண் தான் கடைசியில் ஜெயிக்கிறது
இதை மனம் தான் உணர மறுக்கிறது.

KarthigaVasudevan said...

நல்ல பதிவுங்க...வாழ்த்துக்கள்.

இந்த நந்தர்கள் சாணக்கியம் சந்திர குப்தர் கதையை நாடகமா போடுவாங்க முன்ன தூர்தர்சன்ல ஆர்.எஸ் மனோகர் ட்ரூப் அவர் தான் கௌடில்யர் .அப்போ அந்த தொடர் நாடகம் ஹிட்.இப்படிப்பட்ட விவரணையான சரித்திர நாடகங்கள் இப்போ வரக் காணோம்,வந்தா குழந்தைகள் மனதில் அழுத்தமா பதியும் மறக்காது எப்பவும்,இதே போல அறிவியல் கண்டுபிடிப்பாளர்கள் வரிசை ஒன்னையும் தொடர் நாடகங்களோ தூர் தர்ஷன்ல போட்டாங்க நான் 4 th படிக்கும் போது.இப்ப டெக்னாலஜி வளர்ந்திருக்கு "மானாட மயிலாட" ஜோடி நம்பர் ஒன்னை" காட்ட மட்டும்.இந்த நிகழ்ச்சிகள் பொழுது போக்கானவை போட்டா போடட்டும்,கூடவே சுவாரஸ்யமா ஆக்கபூர்வமான நாடகங்களையும் போடலாம்,யோசிப்பாங்களா நிகழ்ச்சி தயாரிப்பாளர்களும் டி.வி அதிபர்களும்.

R.Gopi said...

// KarthigaVasudevan said...
நல்ல பதிவுங்க...வாழ்த்துக்கள்.

இந்த நந்தர்கள் சாணக்கியம் சந்திர குப்தர் கதையை நாடகமா போடுவாங்க முன்ன தூர்தர்சன்ல ஆர்.எஸ் மனோகர் ட்ரூப் அவர் தான் கௌடில்யர் .அப்போ அந்த தொடர் நாடகம் ஹிட்.இப்படிப்பட்ட விவரணையான சரித்திர நாடகங்கள் இப்போ வரக் காணோம்,வந்தா குழந்தைகள் மனதில் அழுத்தமா பதியும் மறக்காது எப்பவும்,இதே போல அறிவியல் கண்டுபிடிப்பாளர்கள் வரிசை ஒன்னையும் தொடர் நாடகங்களோ தூர் தர்ஷன்ல போட்டாங்க நான் 4 th படிக்கும் போது.இப்ப டெக்னாலஜி வளர்ந்திருக்கு "மானாட மயிலாட" ஜோடி நம்பர் ஒன்னை" காட்ட மட்டும்.இந்த நிகழ்ச்சிகள் பொழுது போக்கானவை போட்டா போடட்டும்,கூடவே சுவாரஸ்யமா ஆக்கபூர்வமான நாடகங்களையும் போடலாம்,யோசிப்பாங்களா நிகழ்ச்சி தயாரிப்பாளர்களும் டி.வி அதிபர்களும்.//

*********

வாங்க மேடம்...

நீங்க சொன்ன நிகழ்ச்சிகளை போட்டால் விளம்பரதாரர்கள் கிடைக்க மாட்டார்கள்...

மானாட மயிலாட போன்ற ஒன்றுக்கும் உபயோகமில்லாத நிகழ்ச்சிகள் போட்டால் தான் நிறைய விளம்பரதாரர்கள் கிடைப்பார்கள்...

இதுதான் நமது விதி.... தொலைக்காட்சி என்பதன் நோக்கமே வெறும் பொழுதுபோக்கு என்று ஆகிவிட்டது....