2009 – 2010 சிறப்புப் பார்வை – (பகுதி – 2)

கலைத்துறைக்கு அதுவும் திரைத்துறைக்கு நம் தமிழ் நெஞ்சத்தில் சீரிய சிம்மாசனம் உண்டு. கடந்து வந்த வருட்த்தின் சில துளிகளை பார்ப்போமே...

· ஆஸ்கார் சாதனை: இசைப் புயல் ரகுமான், ஒலி மேதை ரசூல் பூக்குட்டி என களம் இறங்கி நம் ”ஆஸ்கார் விருது” ஏக்கத்தை தணித்தார்கள். 52 வருடங்களாய், முட்டி மோதி கிடைக்காத்து, இந்த வருடம் தென்னகத்துக்கு சொந்தமாக்கி கொண்ட நிகழ்வு சரித்திரத்தில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டது... நாம் விழாவில் எட்டிப்பார்த்து கொட்டாவி விட்ட காலம் போய், இப்போது நம் கதவு தட்டி ஆஸ்கார் விருது தரும் காலம் கனிந்து வந்திருக்கிறது.

· இங்கிலாந்தின் மிக பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சியான “பிக் பிரதர்” போட்டியில் பல்வேறு நாட்டை சேர்ந்த பல போட்டியாளர்களை பின்னுக்கு தள்ளி, வெற்றி பெற்று லண்டன் மக்களின் அங்கீகாரத்தை தனதாக்கி நம் எல்லோரையும் பெருமை பட வைத்தார் ஷில்பா ஷெட்டி... இந்த சாதனை படைத்த கையோடு திருமணம் செய்து கொண்டார்...

* அக்கட பூமியில் வெளிவந்த சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் தேஜா நடித்த “மகதீரா” என்ற சரித்திர படத்திற்கு நல்ல வசூல் மகசூல்... ஒச்சாயி பாட்டி காலத்து ஓராயிரம் முறை கேட்ட புராண கதையை லேட்டஸ்ட் க்ராஃபிக்ஸில் குழைத்து கொடுத்து பார்ப்பவர்களை பரவசப்படுத்திய ”அருந்ததி” என்ற படமும் பாக்ஸ் ஆஃபீஸில் பட்டையை கிளப்பியது... கூடவே அதன் தமிழ் டப்பிங் வடிவம் தமிழ்நாட்டிலும் வெற்றிக்கொடி நாட்டியது...

இவ்விட சேர நாட்டில் மம்மூட்டி நடிப்பில், பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு வெளியான “பழசிராஜா” படம் வசூலில் தூள் கிளப்பியது... இதில் சரத்குமாரின் வேடமும், நடிப்பும் நன்றாக பேசப்பட்டது... ஆனால், அது அவரின் தமிழ்ப்படமான “ஜக்குபாய்” ரிலீஸுக்கு எந்த விதத்திலும் உதவவில்லை... (இத்தனைக்கும் சூப்பரா இருக்காம்.... ஆந்தையார், கழுகார் நியூஸுங்கோ.....)

ஹாலிவுட்டில் தயாராகி வசூல் சாதனை படைத்த, படைத்து கொண்டிருக்கும் ”2012” மற்றும் ஜேம்ஸ் கேமரூனின் மெகா பட்ஜெட் படம் ”அவதார்” வெளியானது இந்த 2009 ஆண்டில்தான்... அதிலும் அவதார் படம் மெகா வசூலிலும், விஷுவலாக 3D யிலும் கலக்குகிறது.... ”அவதார்” படத்தின் டைரக்டர் ஜேம்ஸ் கேமரூன் யுவராஜ்சிங் போல 6 பந்துகளில் 6 சிக்ஸர் அடித்து விட்டார் என்கிறது உலக பாக்ஸ் ஆஃபீஸ் ரிப்போர்ட்....

* குறைந்த பட்ஜெட்டில், எளிமையான திரைவடிவத்தில், தரத்தில் உயர்ந்து வெளிவந்த படங்கள் சில பட்டையை கிளப்பின. இத.... இத .... இதத்தான் நாங்க எதிர்பார்த்த்தோம் என சினிமா ரசிகன் வசூலில் வக்கணையாச் சொன்னார்கள். உன்னைப் போல் ஒருவன், பசங்க, நாடோடிகள் .............. படங்களை பார்த்து...

* என்னைப்பாரு, என் பட்ஜெட்ட பாரு, என் படத்த பாரு, வசூல்ல பிச்சிக்கும் பாரு”, என டகால்டி விட்டு, மிகுந்த பொருட் செலவில் தயாரான “வில்லு” “குருவி”, “தோரணை”, “கந்தசாமி” ”வேட்டைக்காரன்” போன்ற எதிர்பார்க்கப்பட்ட படங்கள் பாக்ஸ் ஆஃபீஸில் பிச்சுக்கும் என களத்தில் நின்றவர்கள், அடிச்ச ஆடிக்காத்துல உச்சி குடுமி பிச்சிக்கிட்டு போச்சு. படங்கள் பப்பரப்ப என்று சொல்லி பப்படம் ஆனது. எதுவும்னா, அட மெய்யாலுமே எதுவுமே மிஞ்சலியாமே... அதிலும், ஒரு படத்தோட நடிகர் படம் ரிலீஸான 3வது நாளே படம் இமாலய வெற்றி, இதுவரை எந்த படமும் காணாத வெற்றி என்று பத்திரிக்கைகள கூப்பிட்டு சொன்னது, கோவில் படத்தில் வடிவேல் சிலம்ப சண்டையில் வெற்றி பெற்றதாக சொன்னதை போல் இருந்தது... இந்த நகைச்சுவை காட்சி பிரமாதமாக இருக்கும்... நேரம் கிடைக்கும் போது பார்த்து மகிழுங்கள்... அப்போது, அந்த நடிகர் சொன்னதையும் நினைத்து பார்த்தால், டபுள் கிச்சு கிச்சு உத்தரவாதம்...

அயன், ஆதவன் என்ற இரண்டு படங்களிலும் வெற்றி பெற்று ஒப்பனிங் ஓவரில் முதல் இரண்டு பந்துகளை சிக்ஸர் விளாசிய வீரேந்திர சேவாக் போல், வெற்றி வீரனாய் வலம் வருகிறார் சிவகுமாரின் மூத்த புதல்வர் சரவணன் அலையஸ் சூர்யா... இந்த இரண்டு வெற்றி படங்களை தொடர்ந்து முறுக்கிய மீசையோடு ஹரி டைரக்‌ஷனில் “சிங்கம்” என்ற படத்தில் நடித்து கொண்டிருக்கிறார்...
இது தவிர 2009 ஆம் வருடம் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் “எங்கள் ஆசான்” மற்றும் “மரியாதை” , சரத்குமார் அவர்கள் நடிப்பில் “1977” போன்ற டெர்ரர் படங்களும் ரிலீஸ் ஆகி நம்மை திகில் அடைய செய்தது...


( வாசகருக்கு ஒரு புதிர் போட்டி: அருகில் காணப்படும் படத்தில் ஏதாவது தவறு தெரிகிறதா.... விடை : இறுதி பத்தியில்)

வரும் ஆண்டை வரவேற்ப்போம்.
2010 ஆம் ஆண்டின் எதிர்பார்ப்பு நீண்ட நெடுங்காலம் அரசியலில் பணியாற்றி, தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாய் அறிவித்த மூத்த அரசியல் தலைவர் டாக்டர் கலைஞருக்கு பாராட்டும் பூமாலையும். இனி அவர் ஓய்வில் இருக்கும்போது, கதை வசனம் எழுதும் காவியங்கள் ”பொன்னர் சங்கர்”, பெண் சிங்கம்” போன்றவை வரிசையாய் வரிசையில் (இந்த வார்த்தை கரெக்டா??!!) நிற்கும்.... அந்த கலை படைப்புகளுக்கு தார்மீக ஆதரவு தரும் மாபெரும் பொறுப்பு 2010 ஆம் ஆண்டில் நமக்கு இருக்கிறது...

சிலருக்கு பிடிக்கல என்றாலும் உண்மை இதுதானே. ரஜினியின் புதிய படமான ”எந்திரன்” (தமிழ், தெலுங்கு, ஹிந்தி) ரீலீஸ் (ஏப்ரலில் இல்லையென்றால், கண்டிப்பாக ஜூன் மாதத்தில்) உலகளவில் மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஒட்டு மொத்தமாக படத்தில் பங்கு கொள்ளும் அத்துணை பெயர்களின் மிக கடின உழைப்பில் உருவாகும் இந்த படத்தின் மூலம் தமிழ் படங்களுக்கு உலகளாவிய அளவில் மார்க்கெட்டும், பெயரும், புகழும், வியாபாரமும், பணமும், வீச்சும், நம் கோடம்பாக்கத்தை தேடி வரப் போகிறது. “சிவாஜி” படத்தின் மூலம் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த ரஜினி, ஷங்கர், ஏ.ஆர்.ரஹ்மான் வெற்றி கூட்டணி, இந்த “எந்திரன்” படத்தின் மூலம் அகில உலகையும் திரும்பி பார்க்க வைக்கும் என நம்புவோம்... “எந்திரன்” வெற்றி பெற வாழ்த்துவோம்.

கூடவே சௌந்தர்யா ரஜினிகாந்த் அவர்களின் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியாவின் முதல் ஹீரோ அனிமேஷன் படமான “சுல்தான் தி வாரியர்” படமும் தமிழ் சினிமாவை வேறு ஒரு தளத்திற்கு அழைத்து செல்லும் என எதிர்பார்ப்போம்... அனிமேஷன் படம் என்பதால், சாத்தியப்படும் அனைத்து மொழிகளிலும் டப்பிங் செய்ய ஏதுவாகும்...

இந்தியாவின் முன்னணி இயக்குனர் மணிரத்னம் தயாரிப்பு மற்றும் டைரக்‌ஷனில் வெளிவர இருக்கும் “ராவண்” என்ற மும்மொழி படம் (தமிழ், தெலுங்கு, ஹிந்தி) பெரும் எதிர்பார்ப்பை கிளப்பி உள்ளது...

சராசரி சினிமா ரசிகனாய் செல்வாவின் ஆயிரத்தில் ஒருவன், சௌந்தர்யா ரஜினியின் “கோவா”, மிஷ்கினின் நந்தலாலா ஆகிய படங்களை எதிர்பார்ப்போம். நம்மை குஷிப்படுத்தும் என விஷ்ஷூவோம்.

இது தவிர மிருக சம்பந்தப்பட்ட தலைப்புகளை கொண்ட பல படங்கள் வரவிருக்கின்றன... உதாரணமாக “சுறா” மற்றும் “சிங்கம்”... அதனால, இந்த படம் நேஷனல் ஜியாக்ரஃபி சேனலில் ஒளிபரப்புவார்களா என்று “நக்கல் நாகமணி” கேட்ட கேள்விக்கு நெக்ஸ்ட் மீட் பண்ணுவோம்...
ரஜினி ரசிகர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி... (நன்றி நண்பர் சூப்பர் சுந்தர் (www.onlyrajini.com) )

சிவாஜி தி பாஸ் 2007 ஆம் ஆண்டு வெளிவந்து, மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இப்போது, ”சிவாஜி தி பாஸ்” படத்தின் ஹிந்தி பதிப்பை உலகெங்கும் ஜனவரி 8ம் தேதி 2010 அன்று வெளியிடுகிறது... ”அதிரடிக்காரன் மச்சான் மச்சான் மச்சானே” பாடலில் தமிழின் ஜாம்பவான் நடிகர்களான சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர் மற்றும் கமல்ஹாசன் ஆகியோரை இமிடேட் செய்து நடித்த ரஜினிகாந்த், இதன் தெலுங்கு பதிப்பில் பிரபலமான தெலுங்கு நடிகர்களை (என்.டி.ராமாராவ், ஏ.நாகேஸ்வர ராவ், சிரஞ்சீவி) இமிடேட் செய்து நடித்திருந்தார். அந்த பாடலின் வீடியோவை இங்கே பார்த்து ரசியுங்கள் : http://www.youtube.com/watch?v=hD916uVydqI&feature=related ஹிந்தி பதிப்பிலும் பிரமலமானவர்களை இமிடேட் செய்து நடித்திருக்கிறார்... அது சஸ்பென்ஸாக உள்ளதால், அதை பார்க்க அனைவரும் ஆவலாக இருக்கிறார்கள்...

நல்ல திரைப்படைப்புக்கள் வந்து நம்மை குஷிப்படுத்தட்டும், திரை வியாபாரமும் தளைக்கட்டும் என வாழ்த்துவோம்.

(புதிர் விடை : நிர்வாக இயக்குனர், தன் போர்டில் கை வைத்தால் பிசினஸ் பிச்சிக்கும்)

நன்றி !! வணக்கம்.

25 comments:

Anonymous said...

தொகுப்புகள் அனைத்தும் இனிப்பாய்...

R.Gopi said...

//தமிழரசி said...
தொகுப்புகள் அனைத்தும் இனிப்பாய்...//

*******

அதை விட இனிப்பாய் இருக்கிறது தோழமைகளின் தொடர் ஆதரவு...

மிக்க நன்றி தமிழரசி...

உங்களுக்கும், குடும்பத்தார்க்கும் எங்களின் இதயம் கனிந்த 2010 ஆம் ஆண்டு புத்தாண்டு வாழ்த்துக்கள்....

Eswari said...

//(புதிர் விடை : நிர்வாக இயக்குனர், தன் போர்டில் கை வைத்தால் பிசினஸ் பிச்சிக்கும்)//

sory enaku puriyalai....

R.Gopi said...

//Eswari said...
//(புதிர் விடை : நிர்வாக இயக்குனர், தன் போர்டில் கை வைத்தால் பிசினஸ் பிச்சிக்கும்)//

sory enaku puriyalai....//

*********

MANAGING DIRECTOR என்று இருக்க வேண்டிய ஸ்பெல்லிங், இந்த போர்டில் MANEGING DIRECTOR என்று இருக்கிறது... இது போன்ற சின்ன விஷயங்களை கூட சரியாக கையாள தெரியாத டைரக்டர்களோடு பணிபுரிந்ததால் தான், விஜயகாந்த் அவர்கள் டாப்-20 நடிகர்கள் பட்டியலில் இருந்து வெளியேற்றப்பட்டார்...

இப்போ ஓகேவா ஈஸ்வரி...

sreeja said...

Again good collections.

Keep-it up.

We wish very happy New Year 2010 to you and all our friends again.

R.Gopi said...

//sreeja said...
Again good collections.

Keep-it up.

We wish very happy New Year 2010 to you and all our friends again.//

********

Welcome Sreeja...

Thank you very much for your continuous visit and supporting comments...

We wish all our friends and their family members, a VERY HAPPY AND PROSPEROUS NEW YEAR 2010....

tecksnippets said...

Good blog to follow....

R.Gopi said...

//tecksnippets said...
Good blog to follow....//

*******

Thanks you very much for your maiden visit and encouraging comment tecksnippets....

Do visit regularly, read the updated articles and comment....

Wishing you and your family A VERY HAPPY AND PROSPEROUS 2010.

cdhurai said...

wish a Happy New year to Padukali Lawrance,jokkiri Gopi and all our friends,blogger's and their family members, a VERY HAPPY AND PROSPEROUS NEW YEAR 2010....

cdhurai
www.idhayamea.blogspot.com

சுசி said...

சூப்பர் தொகுப்புகள்ங்க..
படங்கள எங்க தேடிப் பிடிச்சீங்க?

உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

R.Gopi said...

//cdhurai said...
wish a Happy New year to Padukali Lawrance,jokkiri Gopi and all our friends,blogger's and their family members, a VERY HAPPY AND PROSPEROUS NEW YEAR 2010....

cdhurai
www.idhayamea.blogspot.com//

*********

செல்லதுரை, குடும்பத்தார், நண்பர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தார் அனைவருக்கும் என் மனம் கனிந்த இனிய 2010 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....

R.Gopi said...

//சுசி said...
சூப்பர் தொகுப்புகள்ங்க..
படங்கள எங்க தேடிப் பிடிச்சீங்க?

உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.//

********

வாங்க சுசி... தொடர் வருகை தந்து, உற்சாசப்படுத்துவதற்கு நன்றி...

படங்கள் உபயம் : கூகிளாண்டவர்...

உங்களுக்கும், குடும்பத்தார்க்கும் எங்களின் இதயம் கனிந்த 2010 ஆம் ஆண்டு புத்தாண்டு வாழ்த்துக்கள்....

Abu said...

This is Gopi Touch ! Pineeteenga !
இது தவிர 2009 ஆம் வருடம் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் “எங்கள் ஆசான்” மற்றும் “மரியாதை” , சரத்குமார் அவர்கள் நடிப்பில் “1977” போன்ற டெர்ரர் படங்களும் ரிலீஸ் ஆகி நம்மை திகில் அடைய செய்தது...

Kalakkal Comedy !

Regards
Abu

Abu said...

Dear Gopi and Friends,

Wish you a Happy & Prosperous New Year 2010 !

Regards
Abu

R.Gopi said...

//Abu said...
This is Gopi Touch ! Pineeteenga !
இது தவிர 2009 ஆம் வருடம் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் “எங்கள் ஆசான்” மற்றும் “மரியாதை” , சரத்குமார் அவர்கள் நடிப்பில் “1977” போன்ற டெர்ரர் படங்களும் ரிலீஸ் ஆகி நம்மை திகில் அடைய செய்தது...

Kalakkal Comedy !

Regards
Abu//

********

நெஜமாவே எல்லாரும் “டெர்ரர்” ஆனது உண்மை தலைவா...

R.Gopi said...

// Abu said...
Dear Gopi and Friends,

Wish you a Happy & Prosperous New Year 2010 !

Regards
Abu//

**********

உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி திரு அபுதாகீர் அவர்களே....

உங்களுக்கும், குடும்பத்தாருக்கும் என் மனம் கனிந்த இனிய 2010 ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்......

ஈ ரா said...

Happy New Year Ji...

மலைக்குப் போய்விட்டு வந்து எழுதுகிறேன்...

R.Gopi said...

//ஈ ரா said...
Happy New Year Ji...

மலைக்குப் போய்விட்டு வந்து எழுதுகிறேன்...//

********

உங்கள் புத்தாண்டு வாழ்த்து பதிவில் நீங்கள் “சாமியே சரணம் ஐயப்பா” என்று எழுதி இருந்த போதே, நீங்கள் மலைக்கு மாலை போட்டிருப்பதை அறிந்தேன்...

R.Gopi said...

இந்த புத்தாண்டு சிறப்பு பதிவிற்கு “தமிழிஷில்“ வாக்களித்து பதிவை பிரபலமாக்கிய உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.........


venkatnagaraj
Karthi6
spice74
jegadeesh
amalraaj
urvivek
VGopi
chuttiyaar
idugaiman
paarvai
anubagavan
mohanpuduvai
eroarun
giriblog

ராமலக்ஷ்மி said...

நல்ல தொகுப்பு.

புத்தாண்டு வாழ்த்துக்கள் கோபி.

R.Gopi said...

//ராமலக்ஷ்மி said...
நல்ல தொகுப்பு.

புத்தாண்டு வாழ்த்துக்கள் கோபி.//

********

வாங்கோ ராமல‌ஷ்மி மேடம்... வருகை தந்து வாழ்த்தியதற்கு மிக்க நன்றி மேடம்...

தங்களுக்கும், குடும்பத்தார்க்கும் என் மனம் கனிந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....

கிரி said...

//தமிழ்ப்படமான “ஜக்குபாய்” ரிலீஸுக்கு எந்த விதத்திலும் உதவவில்லை...//

நெட்ல வெளியாகி விட்டதாமே!

கோபி, குருவி 2008

R.Gopi said...

//கிரி said...
//தமிழ்ப்படமான “ஜக்குபாய்” ரிலீஸுக்கு எந்த விதத்திலும் உதவவில்லை...//

நெட்ல வெளியாகி விட்டதாமே!

கோபி, குருவி 2008//

*******

நெட்ல ஃப்ரீயா ரிலீஸ் ஆகியும், கொஞ்சம் பேர் தான் பார்த்து இருக்காங்களாம்... இதை பார்த்து சரத் அதிர்ந்து போய் உள்ளதாக தகவல்...

குருவி 2008, சரி கிரி... பேர் வேற மாத்தி வில்லுனு ஒரு படம் 2009 ல ரிலீஸ் ஆகி இருக்கும், சரியா??

அமுதா said...

நல்ல தொகுப்பு.
புத்தாண்டு வாழ்த்துக்கள்

R.Gopi said...

//அமுதா said...
நல்ல தொகுப்பு.
புத்தாண்டு வாழ்த்துக்கள்//

-*-*-*-*-*-*-*-*-*-*

வாங்க அமுதா...

வருகை தந்து, பதிவை படித்து வாழ்த்தியதற்கு மிக்க நன்றி...

உங்களுக்கும், குடும்பத்தார்க்கும் என் இதயம் கனிந்த 2010 ஆம் ஆண்டு புத்தாண்டு வாழ்த்துக்கள்....