உலகின் ஒரே ஏழை - அட்ராட்ர நாக்க முக்க...


தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் முதல் முயற்சியாக வடிவேலுவை வைத்து தேமுதிக-வின் விஜயகாந்த் அவர்களை நார் நாராக கிழித்து வசைபாட வைத்தவரும், திருவாரூரில் போட்டியிடும் வேட்பாளரான திரு.கருணாநிதி தன் சொத்து விபரங்களை அளித்துள்ளார்... இந்த உலகமகா ஏழைக்கு சொந்தமா கார் கூட இல்லையாமாம்... சொத்து கணக்கு படித்து விட்டு யாரும் மயக்கம் போட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்...

**********

சென்னை: முதல்வர் கருணாநிதியின் சொத்து மதிப்பு விவரம் வெளியாகியுள்ளது. அதில் அவர் கூறியுள்ளபடி அவரிடம் சொந்தமாக ஒரு கார் கூட இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவாரூர் தொகுதியில் முதல்வர் கருணாநிதி போட்டியிடுகிறார். அவர் தனது சொத்து குறித்த விவரத்தை தந்துள்ளார்.

கருணாநிதியின் சொத்து மதிப்பு விவரம்:கருணாநிதி பெயரில் ரொக்கம்மாக 15 ஆயிரம் ரூபாய். அவரது மனைவி தயாளு அம்மாள் பெயரில் 30 ஆயிரம் ரூபாய், துணைவி ராஜாத்தி பெயரில் 2 லட்சம் ரூபாய் உள்ளது.

வங்கிக் கணக்கில் வைப்பு நிதியாக கோடம்பாக்கம் இந்தியன் வங்கியில் 4 கணக்குகள் உள்ளன. இதில் 5 கோடியே 13 லட்சத்து 49 ஆயிரத்து 152 ரூபாய். அடையாறு கரூர் வைசியா வங்கியில் 13 லட்சத்து 74 ஆயிரத்து 664 ரூபாய்.

கர்நாடகா வங்கியில் 39 லட்சத்து 62 ஆயிரத்து 995 ரூபாய். ராயப்பேட்டை இந்தியன் வங்கியில் 10 ஆயிரத்து 958 ரூபாய். சென்னை மகாலிங்கபுரம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 11 ஆயிரத்து 135 ரூபாய்.
கோடம்பாக்கம் இந்தியன் வங்கியில் 11 லட்சத்து 39 ஆயிரத்து 441 ரூபாய். ராஜா அண்ணாமலைபுரம் இந்தியன் வங்கியில் 13 லட்சத்து 15 ஆயிரத்து 180 ரூபாய் என, மொத்தம் 5 கோடியே 91 லட்சத்து 63 ஆயிரத்து 5,256 ரூபாய். 22 பைசா வங்கிக்கணக்கில் பணம் வைத்துள்ளார்.

அஞ்சுகம் பதிப்பகம் என்கிற பங்குதாரர் நிறுவனத்தில் 50 சதம் பங்குகள் 78,330 ரூபாய். இந்த நிறுவனத்திற்கு சென்னை, 180/93, கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் சொந்தான கட்டடம் மற்றும் நிலம். கோபாலபுரம் 15-4வது குறுக்குத்தெருவில் அஞ்சுகம் அம்மாள் அறக்கட்டளைக்கு செட்டில்மென்ட் செய்யப்பட்ட 6 ஆயிரத்து 162 சதுர அடி மனை மற்றும் அதில் உள்ள கட்டடம். அறக்கட்டளை சொத்து ஆயுட் காலம் அனுபவ பாத்தியம் உள்ளது. தஞ்சை மாவட்டம் அகரத்திருநல்லூர் கிராமத்தில் (சர்வே எண் 29, 30/2, 31/2ஏ) 14.30 ஏக்கர் நிலம். இதற்கான மதிப்பு 4 கோடியே 92 லட்சத்து 56 ஆயிரத்து 855 ரூபாய். இதன் மூலம் அவரது பெயரில் 10 கோடியே 84 லட்சத்து 20 ஆயிரத்து 380 ரூபாய். அவருக்கு திரைப்படம் எடுக்க மும்பையில் மோசர்பேரிடம் 10 லட்சம் ரூபாய் முன்பணம் வாங்கிய வகையில் கடன் உள்ளது என தெரிவித்துள்ளார். வருமான வரி 37 லட்சத்து 34 ஆயிரத்து 20 ரூபாய் கட்டியுள்ளார்.

அசையும் சொத்து மதிப்பில், மனைவி தயாளு பெயரில் கலைஞர் "டிவி' நிறுவனத்தின் பங்குதாரர் என்ற வகையில், 6 கோடி ரூபாய் உட்பட 15 கோடியே 39 லட்சத்து 85 ஆயிரத்து 363 ரூபாய். அசையா சொத்துகள் 5 லட்சத்து 22 ஆயிரத்து 635 ரூபாய். இது தற்போதைய நடப்பு சந்தையின் தோராய மதிப்பாக 5 லட்சத்து 51 ஆயிரம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

துணைவியார் ராசாத்தி பெயரில் அசையும் சொத்துகள் 20 கோடியே 62 லட்சத்து 61 ஆயிரத்து 924 ரூபாய். அசையா சொத்துகள் 3 கோடியே 8 லட்சத்து 35 ஆயிரத்து 318 ரூபாய். இதற்கு தற்போதைய நடப்பு சந்தையின் தோராய மதிப்பு 3 கோடியே 14 லட்சத்து 38 ஆயிரத்து 628 ரூபாய்.

தனது மகள் கனிமொழியிடம் இருந்து, பற்றில்லாக் கடனாக (அச்சச்சோ...பாவம், எவ்ளோ ஏழை பாருங்க.....) வாங்கிய ஒரு கோடியே ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 503 ரூபாய் கடன் உள்ளது என சொத்து விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

*************

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்............யப்பா.......... நெம்ப கண்ண கட்டுதேடா கபாலி.....

(நன்றி : தட்ஸ்தமிழ்.காம்)

21 comments:

Kousalya Raj said...

தலையே சுத்துதுங்க !! இந்தியநாடு ரொம்ப ஏழை நாடு என்று நிரூபிக்கிறது உங்க பதிவு... :)))

இந்த நேரத்தில இப்படி எல்லாம் தகவல் கொடுத்து வயித்தெரிச்சலை கிளப்புறீங்க கோபி.

ஓ.கே உங்களால் முடிந்ததை பண்ணறீங்க வாழ்த்துக்கள். :))

பெசொவி said...

ஒரு கார் கூட இல்லாத நிலைமை என்னை மிகவும் புண் படுத்தி விட்டது. இப்போதைக்கு என்னுடைய பழைய TVS 50 கொடுத்தால் வாங்கிக் கொள்வாரா என்று முத்தமிழ்க் கொலைஞரைக் கேட்டு சொல்லவும்.
(இதெல்லாம் ஒரு பதிவா என்று சொல்ல நினைத்தேன், இருந்தாலும் நட்பு காரணமாக அதைச் சொல்லாமலே போகிறேன்)
:)

ஸாதிகா said...

//கருணாநிதியின் சொத்து மதிப்பு விவரம்:கருணாநிதி பெயரில் ரொக்கம்மாக 15 ஆயிரம் ரூபாய். அவரது மனைவி தயாளு அம்மாள் பெயரில் 30 ஆயிரம் ரூபாய், துணைவி ராஜாத்தி பெயரில் 2 லட்சம் ரூபாய் உள்ளது.
// முழுப்புசணிக்காயை சோற்றுக்குள் மறைப்பார்கள் என்பார்களே...இல்லை இல்லை..முழு டைனோசர் ரோஸ்டை சோற்றுக்குள் மறைத்த கதையாக இருக்கின்றது.

Chitra said...

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்............யப்பா.......... நாங்களும் நம்பிட்டோம்!

jokkiri said...

வாங்க கௌசல்யா மேடம்
பெயர் சொல்ல விருப்பமில்லை
ஸாதிகா
சித்ரா

*******

உலகின் ஒரே ஏழையின் அராஜகத்தை பார்த்தீர்களா?

சொந்தமா ஒரு கார் கூட இல்லை
மகள் கனிமொழியிடம் கோடி ரூபாய் கடன்...

எவ்வளவு கஷ்டம்... ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்.. யப்பா.... முடியல...

முழு டைனோசர் இனத்தையே ரோஸ்ட் பண்ணி முழுங்கிடுவாங்க...

ஹுஸைனம்மா said...

சே.. இவ்வளவு ஏழையா? இது தெரியாம நான் எப்படியெல்லாம் தப்பாப் பேசிட்டேன்... ஆஆஆஆஆ.. (நாயகன் பாணி)

இப்பத்தான் ஒரு விசியம் பிரியுது. நாளபின்ன ஆட்சியில இல்லாமப் போனா, அவங்க குடும்பத்துக்காரங்களுக்கு சாப்பாடு யாரு போடுவாங்க? அதான், இம்புட்டு இலவசத் திட்டம் கொண்டாந்திருக்காரு தலிவரு... What a responsible family man!! :-))))

jokkiri said...

//ஹுஸைனம்மா said...
சே.. இவ்வளவு ஏழையா? இது தெரியாம நான் எப்படியெல்லாம் தப்பாப் பேசிட்டேன்... ஆஆஆஆஆ.. (நாயகன் பாணி)

இப்பத்தான் ஒரு விசியம் பிரியுது. நாளபின்ன ஆட்சியில இல்லாமப் போனா, அவங்க குடும்பத்துக்காரங்களுக்கு சாப்பாடு யாரு போடுவாங்க? அதான், இம்புட்டு இலவசத் திட்டம் கொண்டாந்திருக்காரு தலிவரு... What a responsible family man!! :-))))//

********

வாங்க ஹுஸைனம்மா...

ஆனாலும், இந்த வயசுலயும் நாம எல்லாரும் ரவுண்டு கட்டி அடிச்சாலும் தாங்கறாரே... அதான் “தல”யோட ஸ்பெஷாலிட்டி....

R.Gopi said...

இந்த பதிவிற்கு “இண்ட்லி”யில் வாக்களித்து பதிவை பிரபலமாக்கிய தோழமைகள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.....

முனைவர் இரா.குணசீலன் said...

நெம்ம்ம்ம்மம்ம்ம்ம்ப கண்ண கட்டுதே

முனைவர் இரா.குணசீலன் said...

ஒருநாள் ஒருவருக்கு தொலைபேசியில் அழைப்பு வந்தது...

ஏதோ பாடல் ஒலித்தது.வித்யாசமாகவுள்ளதே என்று உற்றுக்கேட்டேன்.

கலைஞர் எனத் தொடங்கியது அந்தப்பாடல்...

சரி இவர் திமுக தொண்டர் போல என நினைத்தேன்..

அதன் அடுத்த வரி ...

அவர் ஒரு கொலைஞர் என்று வந்தது..

சிலரைப் பலகாலம் ஏமாற்றலாம்
பலரைச் சிலகாலம் ஏமாற்றலாம்..

எல்லோரையும் எல்லாக் காலமும் ஏமாற்றமுடியாது

சகமனிதன் - இவன் உங்களில் ஒருவன் said...

அட என்னங்க நீங்க... கடைசி ஏழை இருக்கும் வரை இலவசங்கள் தொடரும்னு சொன்னா என்ன அர்த்தம் என்று இப்போ புரிந்ததா?? அவர் விரைவில் பெரும் பணக்காரர் ஆவதற்கு நாம் எல்லோரும் சேர்ந்து வாழ்த்துவோம்!! (அப்போ தானே இப்போ இருப்பதற்கு எதிர் நிலையில் இருப்பார்??)
visit and support another blog

http://sagamanithan.blogspot.com/

Mrs. Krishnan said...

//தனது மகள் கனிமொழியிடம் இருந்து,
பற்றில்லாக் கடனாக//

எதன் மீதும் பற்றில்லை பற்றில்லைன்னு சொல்லி சொல்லியே எல்லாத்தையும் பற்றிக்கொள்வாரே இவர். இப்போ கடனையும் இப்படி சொல்ல ஆரம்பிச்சுட்டாரா?

jokkiri said...

முனைவர் இரா.குணசீலன்
நீங்கள் சொன்ன பாடல் விஷயம் படித்ததும் களுக்கென்று சிரித்தேன்...

இனிமேல் ஏமாற மக்கள் தயாரில்லை என்பதையே கருத்து கணிப்பு சொல்கிறது... அவர்களுக்கு சாதகமாக இல்லையென்றதும் கருத்து திணிப்பு என்கிறார்கள்...

jokkiri said...

கடைசி ஏழை இருக்கும்வரை இலவசங்கள் தொடரும்னு சொல்றதுக்கு பதிலா ஒரு ஏழையை கூட இருக்க விடாது எங்கள் கழக அரசுன்னு சொல்லி ஓட்டு கேட்டாவது இருக்கலாம்...

jokkiri said...

ஆஹா...

“தல” எவ்வளவு பற்றற்ற வாழ்க்கை வாழ்கிறார் என்பதை சரியாக புரிந்து கொண்ட திருமதி கிருஷ்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

அன்புடன் மலிக்கா said...

அட்ரா சக்கை அப்படின்னு போட்டு கொளுத்திவிடுங்க. ஏதோ நம்மாள முடிஞ்சதுன்னு..

சமுத்ரா said...

பாவம் உண்மையிலே ஏழை தான்..அந்த மஞ்சள் துண்டு கூட ஒன்னே ஒன்னு தான் இருக்கிறதாம்..

jokkiri said...

வருகைக்கும், கருத்து பகிர்ந்தமைக்கும் மிக்க நன்றி

அன்புடன் மலிக்கா
சமுத்ரா

இந்த முறையாவது ஆட்சி மாற்றம் வர வாய்ப்புண்டா?

Sivaraj said...

If "corruption" is religion Karunanidhi is God.

jokkiri said...

வாங்க அன்புடன் மலிக்கா

இது நிஜமாவே அவர் தாக்கல் செய்த சொத்து கணக்கு தான்...

வாங்க சமுத்ரா

ஒரே ஒரு துண்டு தான் இருக்காமாம்.. பாவம் எம்புட்டு ஏழை..

சிவராஜ்

சரியா சொல்லி இருக்கீங்க தலைவா..

ஈ ரா said...

//கலைஞர் "டிவி' நிறுவனத்தின் பங்குதாரர் என்ற வகையில், 6 கோடி ரூபாய்//

அறுபது சதவீத பங்கின் மதிப்பே ஆறு கோடி ரூபாய் தான் என்றால் இருநூற்று பதினான்கு கோடி கடன் எப்படி கொடுத்தார்கள்? கிட்டத்தட்ட இரண்டாயிரம் சதவீதத்திற்கு மேல் இருக்குமே இந்த தொகை?

என்ன கணக்கோ? புரியவில்லை...

ஈ. ரா