பொன் அந்தி மாலைப் பொழுது – தோழமை டைரக்டர் செல்வகுமார்

மொபைல் ட்ரிங்...ட்ரிங்கியது.....

நம்ம எடக்குமடக்கு காரர் லைனில் வந்து, என்ன இன்னிக்கு ஏரியாவில யூரியா போடுவோமா என தொலைபேசினார். வேலை எல்லாம் முடிந்ததும் இருவரும் சந்தித்து அளவளாவுவதற்கு நாங்கள் வைத்த செல்ல பெயர் இது. சரி... எங்க, யூஷுவலா பட்டறை போடற “பென்டகன்”லயா (இது நாங்கள் சந்திக்கும் ஸ்பாட்டுக்கு வச்ச பெயர்) என்ற போது, இல்லை தலைவா... இன்னிக்கு நாம ஒரு ஸ்பெஷல் கெஸ்ட் மீட் பண்ண போறோம்... ஸோ, மீட்டிங் ஸ்பாட் அவர் முடிவு பண்ற இடத்துலன்னாரு...

ஆனாலும் பாருங்களேன் சாரு டெர்ரரா ஒரு மேட்டர் (தமிழ்ல விஷயம்னு சொல்றத இங்கிலிபீசுல இப்படி சொல்வாங்க தலைவா............) சொல்வாரு...‘எங்கு மது இல்லாமல் ஆண்கள் குழுமியிருக்கிறார்களோ அங்கு அவர்கள் வேறு மாதிரி என்பார். இதெல்லாம் நெம்ப தப்பு. சாரு இது ரொம்ப ஓவரு.

எங்கள் பட்டறையில், எங்க ஏரியா உள்ள வராதே என்றெல்லாம் முழங்காது சிறப்பு விருந்தினர் சிலரையும் கும்மியில் சேர்த்துக் கொண்டு பட்டறை போடுவோம், கும்மி அடிப்போம்...யூரியா இடுவோம். அன்று எங்கள் சிறப்பு விருந்தினர் அருமை நண்பர் டைரக்டர் செல்வகுமார் அவர்கள்.........

கருப்பு வெள்ளை திரைப்பட காலத்தில் நகைச்சுவை எனும் ண் தோம் கட்டிய திரு. ஐ.எஸ்.ஆர். அவர்கள் (சுமார் 400 படங்களில் நடித்த அனுபவசாலி...) மறைந்திருந்தாலும் அவரது நிழல் நம்மிடையே இன்னும் பத்திரமாய் திரைப்படமாய் இருக்கிறது. திரு. ஐ.எஸ்.ஆர். அவர்கள் நமக்கு “சோப்பு சீப்பு கண்ணாடி” என்ற மாபெரும் வெற்றி பெற்ற நகைச்சுவை திரைப்படத்தின் மூலம் ஏற்கனவே அறிமுகமானவர்.

விற்பனைக்கு செல்லும் இடத்தில் நாகேஷ் அவர்கள் ஒவ்வொரு அடிக்கும் ஒரு முட்டை எடுத்து பையில் போட, கிளம்பும் போது அத்தனை முட்டைக்கும் கடைசியில் பில் போடும் நகைச்சுவை காட்சியில் அடிப்பவர் நம் ஐ.எஸ்.ஆர். அடி வாங்குபவர் நாகேஷ் அவர்கள்...

அதிரடி நகைச்சுவை படமான “காசி யாத்திரை” படத்தில், வி.கே.ராமசாமி அவர்களின் இல்லத்து கணக்கு பிள்ளையாக படம் முழுதும் வியாபித்திருப்பார்... நகைச்சுவையை அள்ளி தெளித்திருப்பார்... கையில் எப்போதும் ஒரு குறிப்பேடு வைத்துக்கொண்டு வீட்டில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளையும் குறிப்பு எடுத்து கொண்டிருப்பார்...

சூப்பர் ஸ்டார் இரட்டை வேடத்தில் நடித்த “தர்மத்தின் தலைவன்” படத்தின் “தென் மதுரை வைகை நதி” எனும் பாடலில் வி.கே.ராமசாமியின் அருகே நின்று கொண்டு பணியாள் கெட்டப்பில் நடன அசைவு தருவாரே அவரும் இவரே.

மற்றும் ரஜினி அவர்களுடன் ”நான் மகான் அல்ல”, ”நெற்றிக்கண்” (இதில் ரஜினியின் தங்கையாக வரும் விஜயசாந்தியை பெண் பார்க்க வரும் சரத்பாபுவை அழைத்து வருவார்) போன்ற படங்களிலும் பணியாற்றியுள்ளார்...அவரது பிள்ளைதான் நண்பர் டைரக்டர் செல்வகுமார்.

தோழமை இயக்குனர் செல்வகுமார் அவர்கள் கம்புயூட்டரின் டாஸ் (DOS) வெர்ஷனில் கிளிப்பர், வேர்ட் ஸ்டார் எல்லாம் நம்மை அதிசயிக்க வைத்து கொடி கட்டி பறந்த கம்புயூட்டரின் கற்காலத்தில் கம்பெனி தொடங்கியவர் இவர். இவரிடம் பயிற்சி பெற்ற குருத்துக்கள் இன்று மலர்ந்து மணம் வீசுபவர்கள்.

கம்பெனி என ஓடிக் கொண்டிருந்தாலும் அப்பா தந்த டி.என்.ஏ. ரத்தத்தில் சும்மா இருக்குமா. கலை தாகம், இலக்கிய அறிவு என நச்சரிக்க மீடியா துறையில் மின்ன தொடங்கினார். பிரபல தொலைக்காட்சியான ZEE சேனலின் நிகழ்ச்சி இயக்குனராய் பல வருடங்கள் இருந்தார். அவ்வப்போது திரையில் தன் பங்களிப்பை சின்னதாய் செய்தவர், சில காலம் முன்பு முனைப்புடன் இயக்குனர் என கோதாவில் குதித்தார்.

பார்த்து பார்த்து “அவர்” எனும் திரைப்படத்துக்கான ஸ்கிரிப்ட் தயார் செய்தார். காட்சிகளாய் வசனங்களாய் அட்டகாசமாக வர, தயாரிப்பாளர் மனமுவந்து இணைந்தார். பின் என்ன ஜருராய் வேலை தொடங்கிவிட்டார். இன்றைய நிலவரப்படி, பாடல்கள் ரெடி, நடிக நடிகையர் தேர்வு முடித்து கேமராவை தூக்கி கொண்டு அவரது அவருக்கு வண்ணம் கொடுக்க உள்ளார். ஏப்ரலில் ஷுட்டிங். தற்சமயம் துபாய் விஜயம்...

சந்தித்து, பரஸ்பரம் அறிமுகமாகி சரவணபவனில் சங்கமித்தோம். எங்களுடன் டைரக்டர் செல்வகுமார், அவரின் இளைய சகோதரர் செல்வராஜ் மற்றும் அவர்களது நண்பர் மீனாட்சி சுந்தரம் உடனிருந்தனர்... பேச்சு இட்லியின் பக்கம் திரும்பியது. சென்னையில் ஒரு இட்லி 15 ரூபா என்றதும், நாங்கள் திகைத்தோம். வெள்ளந்தியாய் தோழர் செல்வராஜ் கேட்டார், பையில ஒரு 40/50 ரூவா மட்டும் இருக்கறப்போ நல்லா இருக்கேன்னு, தெரியாத்தனமா ஒரு ஏழெட்டு இட்லி தின்னுட்டா என்னங்க செய்யுறது. கேட்டவருக்கு ஆறுதலாய் பதில் சொல்லாமல் இப்பல்லாம் ஹோட்டல்ல மாவரைக்க கிரைண்டர் இருக்கு. மாட்டினா மாத்துதாண்டி என பயத்தில் பெட்ரோல் ஊற்றினார் நம்ம எடக்கு மடக்கு காரர்..

இட்லியில் சிறந்தது கோவையா அல்லது மதுரையா என மினி பட்டிமன்றம் கூட அரங்கேறியது. அந்த சில நிமிடங்கள் சரவண பவன் கலகலத்தது...என்ன ஒரு விசயம், நடுவர் ஐயா சாலமன் பாப்பையா இல்லாததால் முடிவு மட்டும் சொல்லாமல் பட்டி மன்றம் வெறும் சட்டி மன்றம் மட்டுமே ஆகி, அங்கே வைக்கப்பட்டு இருந்த சாம்பார் மற்றும் சட்னி சட்டிகள் காலியாகியது...,

பேச்சு பின்னர் அவரின் ‘அவர்’
திரைப்படம் பக்கம் திரும்பியது...

”அவர்” திரைப்படத்தின் இசையமைக்கப்பட்ட பாடல்களை ஐபாடில் ஒலிக்க விட்டார். நல்ல ஆல்பம். இசையில் கொஞ்ச நேரம் கரைந்தோம். பாடல்கள் சந்தை தொடும் போது மிக பரவலாய் அங்கிகரிக்கப்படும். எப்.எம். இந்த பாடல்களை த்த்து எடுத்துக் கொண்டு தேய் தேய் என தேய்க்கும். எங்க ஊர் டீக்கடையில் நிச்சயம் இந்த சிடி சீட்டியடிக்கும். அதிலும் எந்திரா பாடல் நம் இதயத்தையும் இடுப்பையும் நிச்சயம் ஆட்டும். நிச்சயம் ஆகட்டும் இந்த பாடல்கள் எங்களிடம் ஏற்படுத்திய தாக்கத்தை விலாவாரியாக அலசி பதிவிடுவோம். இன்னும் சந்தைக்கு வராத சங்கீத்ததை இன்று இப்படியே விடுவது தான் இங்கீதம்.

ஒரு குடும்பத்தின் புதிய வரவான “அவர்” யார் ? அந்த ”அவர்” மற்றவர்களிடம் ஏற்படுத்தும் தாக்கம் என்ன என்பதே அவரின் புதிய திரைப்பட கதையின் ஒன்லைனர். ம்.... சுவாரசியமாத்தான் இருக்கு. ஏன் செல்வா!!! இது மாஸுக்கான படமா க்ளாஸீக்கான படமா என நம் சிற்றறிவில் கேட்க, ஊடுருவிப் பார்த்து அப்படி ஒரு பகுப்பு திரைப்படத்துக்கு இல்லை. சுவாரசியமான திரைப்படமா இல்லையா என மட்டுமே உண்டு என்றார்.

சமூக சிந்தையும் அக்கறையும் உள்ள ஒரு பொறுப்பான படைப்பாளியிடம் இருந்து வந்த சத்தான முத்தான வார்த்தைகள். ஸ்கின் ஷோ எல்லாம் கிடையாது, குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும் வண்ணம் ஒரு திரில்லர் படம் என ஆர்வத்தை வேறு முடுக்கி விட்டார். வீட்டுக்கு போனதும் கூகிள்ல தேடிப்பார்த்து ஏதாவது லீக் ஆயிருந்தா படத்த உடனே பார்க்கணும் என யோசிக்கவும் வைத்தார். யோசித்தவர் நம்ம ஜில் ஜக்.. ஜாம்பஜார் ஜக்குபாய்.

திரைப்படத் துறையின் மிகப்பெரிய மாறுதல் பற்றி சிலாகித்து சொன்னார். முந்தியெல்லாம் ஃபீல்டுக்குள்ள வர்ரதுக்கு முரட்டுத்தனமான முனைப்பு வேண்டும். அடுத்த வேளை புவ்வாக்கு (அதாங்க சாப்பாட்டுக்கு....) என்ன செய்யுறது, குடும்பம் உண்டாக்கி புள்ள குட்டி பெறணுமேன்னு எந்த சிந்தையும் இல்லாம சாதிக்கணும் எனும் முனைப்பு மட்டும் இருந்தாலே வர முடியும்.

ஆனா இன்னைக்கு அப்படி இல்ல, என்னோட அசிஸ்டெண்ட டைரக்டர், விஸ்காம்ல கோர்ஸ் பண்ணிட்டு ஒரு புராஜெக்ட் மாதிரி மாருதி கார்ல வந்து இறங்கி வேலை முடிஞ்சதும் போயிடறான் என்றார். உண்மை!!!! ஏன் பிளாக் எனும் பெயரில் இக்கால இலக்கியம் கூட மிக எளிதாயிற்றே. பரவிய விதம் அற்புதமாக இருக்கிறதே.

பேசிய முதல் பத்து நிமிடங்களில் நம் அனபை சம்பாதிக்கும் மிக வலுவான ஆயுதம் செல்வாவிடம் இருக்கிறது. அது அவர் பேசாமல் நம்மை பேச விட்டு கேட்கும் பண்பு. அல்லது ‘பேச்சை குறைங்கடா’ என ”நக்கல் நாகேந்திரன்” சொல்வாரே அது.

தந்தை தந்த கலை ரத்தத்தில், கணினி தந்த அறிவு அணுகுமுறையில் நேர்த்தி, பொறுப்பான சமூக அக்கறையில் மனித நேயமும் மிகுந்து நம்மை வசிகரிக்கிறார். அவர் மிகப்பெரிய இடத்திற்கும், திரையுலகில் பெரிய உயரத்திற்கும் சீக்கிரம் சென்றடைவார் என்பதில் எங்களுக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை...

அந்த நாள் விரைவில் வர வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டி நண்பர் டைரக்டர் செல்வகுமார் அவர்களை பிரிய மனமின்றி கடிகாரத்தை நொந்தபடி வாழ்த்துக்கள் சொல்லி விடைபெற்றோம்....

(ஆர்.கோபி / லாரன்ஸ்)

17 comments:

Chitra said...

"அவர்" எங்கள், செல்வா அண்ணா....... வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்!

sreeja said...

வெள்ளை சட்டை - லாரன்ஸ்
டையுடன் இருப்பது - கோபி
கலர் சட்டை - செல்வா
சரியா ?

R.Gopi said...

//Chitra said...
"அவர்" எங்கள், செல்வா அண்ணா....... வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்!//

********

முதலில் வந்து வாழ்த்திய தோழமை “சித்ரா” அவர்களே... டைரக்டர் செல்வகுமார் அவர்கள் எல்லோரின் ஆசிகளுக்கும், பாராட்டுக்கும் மிகவும் தகுதியானவர் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்...

அவர் மிகவும் உயரிய இடத்தை அடைவார் என்பது உறுதி...

R.Gopi said...

//sreeja said...
வெள்ளை சட்டை - லாரன்ஸ்
டையுடன் இருப்பது - கோபி
கலர் சட்டை - செல்வா
சரியா ?//

********

தோழமை ஸ்ரீஜா அவர்களே. உங்கள் வரவு நல்வரவாகுக...

வாழ்க்கை தொடரை பற்றிய உங்களுக்கு நாங்கள் அனுப்பிய மெயில் பார்த்து பதிலளிக்கவும்...

மூக்கு கண்ணாடியுடன் இருப்பது டைரக்டர் செல்வகுமார் அவர்கள்... தோழமை லாரன்ஸ் அவர்கள் கழுத்தில் “டை”யுடன் காட்சி அளிக்கிறார்... நான் நீங்கள் குறிப்பிட்ட வெள்ளை சட்டையில்... லைட்டிங் தான் சட்டையின் நிறத்தை மாற்றி காண்பிக்கிறது...

நான், லாரன்ஸ் இருவரும் அணிந்திருந்தது ரோஸ் நிற சட்டை..

Jaleela Kamal said...

டைரக்டர் செல்வ குமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

அந்தி மாலை இப்படி ஒரு சந்திப்பு ம்ம் நல்லாதான் இருந்திருக்கும்.

எனன் சரவணபவாவில்
இட்லி பட்டி மன்றமா பேஷ் பேஷ்


(மூட்டபூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்தலாமா, தொடருங்கள்) ஓ தொடந்து விட்டேன். ரொம்ப நன்றி.

R.Gopi said...

//Jaleela said...
டைரக்டர் செல்வ குமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

அந்தி மாலை இப்படி ஒரு சந்திப்பு ம்ம் நல்லாதான் இருந்திருக்கும்.

எனன் சரவணபவாவில்
இட்லி பட்டி மன்றமா பேஷ் பேஷ்

(மூட்டபூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்தலாமா, தொடருங்கள்) ஓ தொடந்து விட்டேன். ரொம்ப நன்றி.//

*******

வாங்க ஜலீலா மேடம்...

ஆம்... டைரக்டர் செல்வகுமார் அவர்களுடன் அந்த சந்திப்பு மிகவும் பரவசப்படுத்திய ஒன்று...

மிகவும் தன்மையான மனிதர்... ஆழ்ந்த அறிவு கொண்டவர்... சாஃப்ட் ஸ்போகன்... அவரின் திறமைக்கு அவரின் “அவர்” படமே சான்றாக விளங்கப்போகிறது...

எழுத தொடர்ந்தமைக்கு வாழ்த்துக்கள்.

நட்புடன் ஜமால் said...

புது வரவை பற்றி புதுசா வரவு.

கலுக்குங்க செல்வா அண்ணா.

ஆவலுடன் காத்திருக்கின்றோம்.

----------------

ஸ்கின் ஷோ இல்லாத ஸ்கிரிப்ட் - இது ரொம்பவும் வரவேற்பு பெரும்.

R.Gopi said...

//நட்புடன் ஜமால் said...
புது வரவை பற்றி புதுசா வரவு.

கலுக்குங்க செல்வா அண்ணா.

ஆவலுடன் காத்திருக்கின்றோம்.

----------------

ஸ்கின் ஷோ இல்லாத ஸ்கிரிப்ட் - இது ரொம்பவும் வரவேற்பு பெரும்.//

********

நம் அனைவரின் வாக்கும் பலிக்கட்டும் .....

புதியவரின் புதிய முயற்சிக்கு நாம் அனைவரும் ஆதரவு தருவோம்...

எவ்வளவோ “குருவி”களுக்கு தந்த ஆதரவில் சிறிதளவேனும் இவர் போன்ற புதிய படைப்பாளிகளுக்கும் தந்தால், நாம் ரசித்து பார்ப்பதற்கு நல்ல படைப்புகளை அவர்கள் தருவார்கள்...

R.Gopi said...

இந்த பதிவிற்கு “தமிழிஷில்” வாக்களித்து பதிவை பிரபலமாக்கிய தோழமை அனைவருக்கும் எங்களின் மனமார்ந்த நன்றி....

addboxdinesh
mohamedFeros
anubagavan
venkatnagaraj
Jaleela
jntube
ktmjamal
chuttiyaar
vilambi
tamilz

அன்புடன் மலிக்கா said...

நிச்சியம் நல்ல இடத்தை பிடிப்பார் நல்ல கதைகளைக்கொடுப்பார் செல்வா வாழ்த்துக்கள்..

R.Gopi said...

//அன்புடன் மலிக்கா said...
நிச்சியம் நல்ல இடத்தை பிடிப்பார் நல்ல கதைகளைக்கொடுப்பார் செல்வா வாழ்த்துக்கள்..//

********

வாங்க அன்புடன் மலிக்கா... நீண்ட நாட்கள் கழித்து வருகை தந்திருக்கிறீர்கள்...

தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி... தொடர்ந்து வருகை தந்து, பதிவுகளை படித்து ஆதரவு தாருங்கள்...

Thenammai Lakshmanan said...

//பேசிய முதல் பத்து நிமிடங்களில் நம் அனபை சம்பாதிக்கும் மிக வலுவான ஆயுதம் செல்வாவிடம் இருக்கிறது. அது அவர் பேசாமல் நம்மை பேச விட்டு கேட்கும் பண்பு. அல்லது ‘பேச்சை குறைங்கடா’ என ”நக்கல் நாகேந்திரன்” சொல்வாரே அது.//

உண்மை கோபி அவர் அடுத்தவரை பேச விட்டு கருத்துக்களை பின்பு பகிர்ந்து கொள்வார்



//தந்தை தந்த கலை ரத்தத்தில், கணினி தந்த அறிவு அணுகுமுறையில் நேர்த்தி, பொறுப்பான சமூக அக்கறையில் மனித நேயமும் மிகுந்து நம்மை வசிகரிக்கிறார். அவர் மிகப்பெரிய இடத்திற்கும், திரையுலகில் பெரிய உயரத்திற்கும் சீக்கிரம் சென்றடைவார் என்பதில் எங்களுக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை...//

நிச்சயம் மிகப் பெரிய உயரத்தை அடைவார் எங்கள் அன்புத்தோழர் செல்வா

R.Gopi said...

thenammailakshmanan said...
//பேசிய முதல் பத்து நிமிடங்களில் நம் அனபை சம்பாதிக்கும் மிக வலுவான ஆயுதம் செல்வாவிடம் இருக்கிறது. அது அவர் பேசாமல் நம்மை பேச விட்டு கேட்கும் பண்பு. அல்லது ‘பேச்சை குறைங்கடா’ என ”நக்கல் நாகேந்திரன்” சொல்வாரே அது.//

உண்மை கோபி அவர் அடுத்தவரை பேச விட்டு கருத்துக்களை பின்பு பகிர்ந்து கொள்வார்



//தந்தை தந்த கலை ரத்தத்தில், கணினி தந்த அறிவு அணுகுமுறையில் நேர்த்தி, பொறுப்பான சமூக அக்கறையில் மனித நேயமும் மிகுந்து நம்மை வசிகரிக்கிறார். அவர் மிகப்பெரிய இடத்திற்கும், திரையுலகில் பெரிய உயரத்திற்கும் சீக்கிரம் சென்றடைவார் என்பதில் எங்களுக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை...//

நிச்சயம் மிகப் பெரிய உயரத்தை அடைவார் எங்கள் அன்புத்தோழர் செல்வா

*********

வாங்க தேனம்மை... இப்போ தான் உங்களுக்கு “அவர்” பற்றி தெரியப்படுத்தினேன்... உடனே இங்கே வந்து பதிவை படித்து கமெண்ட் பண்ணி இருக்கீங்க... வாவ்... என்னே உங்களின் சுறுசுறுப்பு...

ஏன் எங்கள் அன்புத்தோழர் என்கிறீர்கள்...அவர் நம் அன்பு தோழர்...

நான் ஏற்கனவே ஜமால் அவர்களிடம் சொல்லியது போல் :

நம் அனைவரின் வாக்கும் பலிக்கட்டும் .....

புதியவரின் புதிய முயற்சிக்கு நாம் அனைவரும் ஆதரவு தருவோம்...

எவ்வளவோ “குருவி”களுக்கு தந்த ஆதரவில் சிறிதளவேனும் இவர் போன்ற புதிய படைப்பாளிகளுக்கும் தந்தால், நாம் ரசித்து பார்ப்பதற்கு நல்ல படைப்புகளை அவர்கள் தருவார்கள்...

கோமதி அரசு said...

//தந்தை தந்த கலைரத்ததில்,கணினி தந்த அறிவு,அணுகு முறையில் நேர்த்தி,பொறுப்பான சமூக அக்கறையில் மனித நேயமும் மிகுந்து நம்மை வசீகரிக்கிறார்.
அவர் மிகப் பெரிய இடத்திற்கும்,திரையுலகில் பெரிய உயரத்திற்கும் சீக்கிரம் சென்றடைவார்
என்பதி எங்களுக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை.//

நானும் அந்த நாள் விரைவில் வர இறைவனை வேண்டுகிறேன்.

வாழ்க வளமுடன்.

R.Gopi said...

//கோமதி அரசு said...
//தந்தை தந்த கலைரத்ததில்,கணினி தந்த அறிவு,அணுகு முறையில் நேர்த்தி,பொறுப்பான சமூக அக்கறையில் மனித நேயமும் மிகுந்து நம்மை வசீகரிக்கிறார்.
அவர் மிகப் பெரிய இடத்திற்கும்,திரையுலகில் பெரிய உயரத்திற்கும் சீக்கிரம் சென்றடைவார்
என்பதி எங்களுக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை.//

நானும் அந்த நாள் விரைவில் வர இறைவனை வேண்டுகிறேன்.

வாழ்க வளமுடன்.//

********

வாங்க கோமதி மேடம்... கண்டிப்பாக நம் அனைவரின் வாழ்த்து டைரக்டர் செல்வகுமார் அவர்களுக்கு தேவைப்படும்...

அன்னார் திரையுலகில் பெரிய சாதனை படைக்க நாம் அனைவரும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்...

கே. பி. ஜனா... said...

ஐ. எஸ். ஆர்.எனக்குப் பிடித்த அறுபதுகளின் நகைச்சுவை நடிகர்களில் ஒருவர். நான் ரொம்ப ரசித்தது 'நீலவானம்' படத்தில் அவரின் பெர்ஃபாமான்ஸ். (கதை வசனம் பாலச்சந்தர், டைரக் ஷன் மாதவன்). அவரின் புதல்வர் செல்வகுமார் இயக்குனராயிருப்பது அறிகையில் மிக்க மகிழ்ச்சி உண்டாகிறது. 'அவர்' வெற்றி பெற வாழ்த்துக்கள்!
-- கே. பி. ஜனார்த்தனன்

R.Gopi said...

//K.B.JANARTHANAN said...
ஐ. எஸ். ஆர்.எனக்குப் பிடித்த அறுபதுகளின் நகைச்சுவை நடிகர்களில் ஒருவர். நான் ரொம்ப ரசித்தது 'நீலவானம்' படத்தில் அவரின் பெர்ஃபாமான்ஸ். (கதை வசனம் பாலச்சந்தர், டைரக் ஷன் மாதவன்). அவரின் புதல்வர் செல்வகுமார் இயக்குனராயிருப்பது அறிகையில் மிக்க மகிழ்ச்சி உண்டாகிறது. 'அவர்' வெற்றி பெற வாழ்த்துக்கள்!
-- கே. பி. ஜனார்த்தனன்//

*******

வாங்க ஜனா சார்...

நான் பட்டியலிட்ட சில படங்களை தவிர, மேலும் பலப்பல பழைய படங்களில் திரு.ஐ.எஸ்.ஆர். அவர்களின் நடிப்பை பார்த்து ரசித்திருக்கிறேன்... அதுவும் நாகேஷ் காம்பினேஷனில்...

வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஜனா சார்... உங்கள் வாழ்த்து “அவர்” திரு.செல்வகுமாரை அடைந்தது...