வாழ்க்கை நிறைவு பகுதி – (பாகம் 12)

முற்றுப் புள்ளி இல்லா வாக்கியத்துக்கு எந்த அர்த்தமும் இல்லை, அதே மாதிரி முழுசா வாழாத வாழ்க்கைக்கு ஒரு அழகும் இல்லை.

வாக்கியம் போலவே தான் வாழ்க்கையும், முற்றும் எனும் போதே முழுமை அடைகிறது. ஆனால் என்ன!!! இறுதி என்பது நம்மை கலவரப்படுத்தும் சோகமாக்கும். இல்லை என்றால் பாருங்களேன் இந்த தொடரின் இறுதி பகுதி எனும் போது கனத்த மனதுடன் அய்யோ இனி இத பத்தி எழுத முடியாதே என இயலாமை அழுகாச்சி, அழுகாச்சியா இருக்கு. அதுக்காக உடனே, இதுவொரு வரலாற்று புதினம், இதன் பெயர் “அழுகாச்சி காவியம்” அப்படின்னு எல்லாம் சொல்லி உங்கள பயமுறுத்தல...
வாசகர்கள் சிறிதே மன்னித்தால் மரணம் பற்றிய சில வார்த்தை பதங்களை பார்ப்போமே. டேய் அவன் புட்டுகினாண்டா...பூட்டாண்டா, மவனே சங்குடா... நட்டுக்கினாண்டா, டிக்கெட் வாங்கிட்டாண்டா, அப்பா தொலைஞ்சாண்டா....அடிடா டண்டணக்கா.... டணக்கு டக்கா.... . இறப்பை ஏளனம் செய்யவோ, சிறுமை படுத்தவோ இதை சொல்லவில்லை. சொன்னது பூரா நிலுவையில் நிற்கும் / நாம் சொல்லும் சொற்பதங்களே, இதை சொல்லும் போது ஒரே ஒரு கேள்வி மட்டும் மனதில் எழுகிறது.

அதெப்படிங்க நமக்கு பிடிக்காதவர்கள், சம்பந்தமில்லாதவர்கள் மறையும் போது மட்டும் நாம் சொல்லும் மேற்கூறிய வார்த்தைகள் நமக்கு தோதுப்படாததாயிற்று.

நம் எல்லோரின் ஆர்வமும் பிரஸண்ட் ஆகும் ஒரு டாபிக் சாவு. ஏங்க மகாத்மா காந்தி செத்து, அவர் உடல் பிரேத பரிசோதனை செய்தப்போ தங்க நாணயம் 5 சிறுகுடல்ல இருந்துதாமே... அப்படிங்களா!!! , 1941 -ல தாமஸ் எடிசன் செத்தப்போ ஹென்றி ஃபோர்ட் அவரோட கடைசி மூச்ச ஒரு பாட்டில்ல பிடிச்சாராமே... மெய்யாலுமா!!! , நியர் டெத் எக்ஸ்பீரியன்ஸ் வாசிக்கும் போது, நீளமான ஒளி டனல்ல நடக்குற மாதிரி இருக்காமே, கரெக்ட்டுங்களா!!! என தேடித்தேடி நாம் படித்த தகவல்கள் நம் ஆவலைதானே உறுதி செய்கிறது.

சாவுன்னா என்னங்க ரொம்ப வலிக்குமா, நாம சாவும் போது நமக்கு தெரியுமா, நம்ம சீவன் போகும்போது சிவன் தெரியுமாமே அப்படியா, அது எனக்கு மட்டும் தெரியுமா இல்ல எல்லோருக்குமா என எல்லோரும் நாம் ஓயாமல் கேள்வி கேட்டு, பதில் சொல்ல யாரும் இல்லாமல் சிறு குழந்தை போல் நிற்கிறோமே?.

அவ்வளவு ஏன், 2000 வருடத்தின் நோபல் பரிசு வாங்கிய ”மை நேம் இஸ் ரெட்” எனும் புதினம் சொல்வது கூட இறப்புக்கு பின் எனும் எக்ஸ்பீரியன்ஸ்தானே. ஆனால், ஒரு மினிட்... இதை தான், தமிழ்ல “நான் சிவப்பு மனிதன்”னு படமா எடுத்தாங்களான்னு ” நக்கல் நாகமூர்த்தி” கேட்டார்னா, அதுக்கு நாங்க சொல்லும் பதில் “ஙே”.............

தெரியாதத விட்டுத் தள்ளுங்க, தெரிஞ்சத தொட்டு கொள்ளுங்க... சாவுங்கிறது நிரந்தர தூக்கம். செத்துப் போறதுங்கறது பிரஞ்கை இல்லாத தூக்கம் மாதிரிதேன், அம்புட்டுதேன் என எடுத்துக்குவோம் என்கிறார் ”ஆல்டைம் அப்பீட் அம்பி மாமா”. தினம் தினம் தூங்குறோமே!! அது ஓகேதான, நல்லாத்தான இருக்கு என சாவை ஏற்க முடியுமா.


எண் ஜாண் உடம்புக்கு சிரசே பிரதானம்.... அதுபோல், புரியாத மரணத்தில் நமக்கு பயமே பிரதானம்,வெல்ல முடியா இயற்கையில் இயலாமையே பல் இளிக்கும். அன்பாய் அலட்டாமல்... தெரியுமப்பா என நம்மால் சாவ முடியுமா.


சரி மருத்துவம் இது பற்றி என்ன சொல்கிறது. ஆன்மாவெல்லாம் கிடையாது,அடம் பிடிக்கும் அறிவியல். மருத்துவமும் அதுதான் சரி என கூட்டணியில் கும்மியடிக்கும்.

உடம்பு தான் மனிதன் அதை தாண்டி ஒன்றும் இல்லை, செத்துப் போன காரணம்... இதயம் நின்று போனது என மூர்க்கமாய் முழங்கி வாதிடும். தெரியாத நாம், வெள்ளந்தியாய் ஏன் நின்னுச்து... எதுக்காக நிக்கணும். இவ்வளவு நாள் நல்லாத்தானே இருந்துச்சு, ஏன் இப்படி திடீர்னு சுணங்குச்சுன்னு ...ஏன்... டாக்டர் நீங்க எல்லாத்தையுந்தான் ஓட வைப்பீங்களே. இதயத்த, நுரையிரல, மூளைய, அது மட்டுமா.... கையில பில்ல கொடுத்து எங்களையுமில்ல ஓட வைப்பீங்க. அப்படின்னா இத மறுபடி ஓட வைக்கமுடியாதா என கேட்டால்.... ம்.... அது அப்படித்தான், அதுக்கு மேல அப்பிட்டு, என அறிந்ததை மட்டும் அறிவியல் சொல்லும்
ஆவியை/ ஆன்மாவை இறைவனிடம் ஒப்புக் கொடுக்கிறேன் எனும் பிப்பிரிப்போ பிரிட்டடோ எண்ணத்துக்கு...என்னத்துக்கு !!! என கேட்டு , அத்துடன் பாவம் அப்புராணி, ஒண்ணுமே தெரியலையே, அறியாமை என அட்ரஸ் தரும்.


சரி சராசரி மனிதனுக்கு குழப்பம். அதெல்லாம் ஒண்ணுமே இல்லப்பா என மருத்துவம் ஒதுக்கி வைத்த மனஇயல் கூட பிற்பாடு ஒட்டிக் கொண்ட்து. கொஞ்ச காலம் கழிச்சு, ஹாங்.... சைக்காலஜி இருக்கு என்று மருத்துவம் ஒப்புக் கொண்டது. இன்னைக்கு ஆன்மீகம் ஆசிரமம் தாண்டி ஆஸ்பத்திரியில் நுழைகிறது. எப்படிங்கிறீங்களா, ரெய்க்கி, பிரானிக் ஹீலீங், ரிலாக்ஸேஷன் ரெஸ்பான்ஸ் என இன்னிக்கு இருக்கிறதாச்சு. அப்பல்லோ ஆஸ்பத்திரி போனா அங்கே இருக்கு. அமெரிக்காவில இருக்கு,

நாம அரக்க பரக்க ஓடி, வாழ்வை வாழ்ந்து விட்டு, காலன் வந்து உயிரைப் பறிக்கும் போது, நமக்கு கோபம் தீயாய் எழுகிறது. இதுதான் வாழ்க்கைன்னா எதுக்கு வாழணும்.


நம் கோபத்தை களைந்து, இயலாமையை இடறி விட்டு விட்டு, புன்முறுவலுடன் மரணம் பற்றிய தெளிவு வரும்போது, நம் கவலைகள் பறந்து ஓடும். பதவிசு, பொக்கிஷம், உறவு, லட்சியம் என மூச்சிரைக்க இன்று ஓடும் ஓட்டம் தெளிவாகும். நம் சிந்தை செயல் எல்லாம் புது பிம்பம் பெறும். முடிவு பற்றிய தெளிவு நம் இன்றைய பாதையை முயற்சியை சீராக்கும் முரசின் அதிர்வு முன்னிலும் தெளிவாகும்.நாம பொறக்கறப்போ கையில எதுவும் எடுத்துட்டு வரலியே... நாம போறப்போவும் கையில ஒண்ணுமே எடுத்துட்டு போக முடியாதே... இந்த இடைப்பட்ட கொஞ்ச நேரம் இருக்கறதுல ஏண்டா இவ்ளோ ஆட்டம் போடறன்னு “தத்துவ மேதை தங்கசாமி” கேக்கறது மனசுல ஆழமா ஒலிச்சுட்டே இருக்கு...

இன்னிக்கு தேதியில நீ ஒனக்குன்னு எடுத்து வைக்கற எதுவுமே நாளைக்கு ஒனக்கு பின்னாடி, வேற யாருக்கோ தானே, அப்புறம் ஏண்டா எல்லாம் எனக்கு, எனக்குன்னு அடுத்தவன் சொத்தை கூட பிடுங்கி பதுக்கி வைக்கற, நீ இன்னிக்கு விடுற மூச்சு கூட ஒன்னோட உடம்புல வாடகைக்கு தானேடா இருக்கு, இதுல என்னடா நிரந்தரம் பார்த்தே என்று “பேராசை பெரியண்ணா”விடம் கேட்ட போது, அவருக்கு எதுவும் பதில் சொல்ல தோணாமல் “ஹீ...ஹீ...ஹீ” என்று இளித்து நின்ற போது தெரிஞ்ச ரெண்டு சொத்தை பற்கள் ”உவ்வே”னு சொல்ல வச்சுது..

இந்த ஒலகத்துல, மனுஷங்கள தவிர வேற யாருக்குமே (ஓரறிவுள்ள விலங்கினங்களுக்கு கூட....) பின்னாடி வர்ற பத்து தலைமுறைக்கு சொத்து சேர்த்து வைக்கணும்னு தோணவே இல்லியே... இதுல இருந்தே தெரியுதே, நாம எவ்ளோ சுயநலவாதின்னு... மனுஷனா பொறந்த யாரும், இந்த ஒலகத்துக்கு தன்னாலான ஏதாவது ஒரு நன்மை செஞ்சுட்டு தான் சாகணும்... இதை ஒரு உறுதிமொழியா கூட எடுத்துக்கலாம்... அதை அடைவதற்கான கால அளவை குறித்து கொள்ளலாம்...

குறைஞ்சபட்சம் ஒரு மரமாவது நடணும்ங்கறா மாதிரி ஒரு தோட்டக்கார முதியவர் கேரக்டர் “உன்னால் முடியும் தம்பி” படத்துல வரும்... அது மாதிரி, நாம எல்லாரும், நம்மால முடிஞ்ச, நம்ம சக்திக்கு உட்பட்ட ஏதாவது ஒரு நல்ல விஷயத்தை கண்டிப்பா செய்யணும்... இந்த விஷயம், நம்மை தொடர்ந்து வந்து, இந்த பூமியில் வாழப்போகும் சந்ததிக்காக நாம செய்ய வேண்டிய ஒரு விஷயம்... பெருசாவோ, சிறுசாவோ, ஏதோ ஒண்ணு செய்யணும்...

முரசின் மங்களம்.

வாழ்க்கை முடியாது, ஆயினும் இந்த தொடர் தற்காலிகமாய் முற்றும். நிறைவு செய்யும் முன் ஒரு செய்தி.


வாழ்க்கை என தொடர் வாசிக்கும் தோழமையே!!! தங்கள் வாசிப்பின் உட்காரணம், எது? தேடித்தேடி தகவல் சேர்த்து மாற துடிக்கும் மாற்றம் எதனால். இன்னும் வாழ்வை செழுமையாக்க அல்லது செம்மையாக்க அல்லவா. விவேகான்ந்தரின் வாழ்க்கை குறிப்பு இது பற்றி தரும் தகவல் ஒன்று.

ஒருவன் அவரை அணுகி, கடவுளை தாங்கள் கண்ட்துண்டா என கேட்க. ஆம் என்றார். அதற்கு நான் எவ்வளவோ முயன்றேன், என்னால் காண முடியவில்லை, எனக்கு காட்டுவீர்களா என கேட்க. அதுக்கென்ன இப்பவே காட்டுறேன் வா என கூப்பிட்டார்.


சற்றே கலவரமானாலும் ஆர்வத்துடன் அவர் பின் நடந்தான் அவன். ஒரு நீர் நிலை அடைந்து அவன் தலையை தண்ணீரில் அமுக்கி பிடித்தார் விவேகான்ந்தர். கை கால் உதற ஜீவ மரண போராட்டம் அங்கு நடந்த்து. அவன் உடல் தளரும் வேளையில் கையை விடுவித்தார் மகான். கால் தடுமாற கைகள் துவள அவசர அவசரமாய் மூச்சு இழுத்து விட்டான்.

அப்போது கணிரென்ற குரலில், இப்போது காற்றுக்காக ஏங்கினாயே, முனைப்புடன் மூச்சு விட முயன்றாயே, அதே முயற்சியை இறை தேடலுக்கு உபயோகி, நிச்சயம் தெரிவார்.


ஆம் மாற வேண்டும், மாற்ற வேண்டும் என்ற நம் நினைவு அங்கனம் ஆகும் போது வழிகள் தானே பிறக்கும். மாற்றம் நிகழும்.

இது வரை வாழ்க்கை பற்றிய இந்த தொடரை எங்களுடன் கை கோர்த்து கூடவே பயணம் செய்து, நிறைவு செய்ய உதவிய அத்துணை தோழமைகளுக்கும் எங்களின் சிரம் தாழ்ந்த வணக்கம்.

(ஆர்.கோபி / லாரன்ஸ்)

12 comments:

Chitra said...

மாற வேண்டும், மாற்ற வேண்டும் என்ற நம் நினைவு அங்கனம் ஆகும் போது வழிகள் தானே பிறக்கும். மாற்றம் நிகழும்.
.............இவ்வளவு அருமையான பதிவை நகைச்சுவையுடன் தந்தமைக்கு நன்றி.

R.Gopi said...

//Chitra said...
மாற வேண்டும், மாற்ற வேண்டும் என்ற நம் நினைவு அங்கனம் ஆகும் போது வழிகள் தானே பிறக்கும். மாற்றம் நிகழும்.
.............இவ்வளவு அருமையான பதிவை நகைச்சுவையுடன் தந்தமைக்கு நன்றி.//

*********

எப்போதும் போல், சிறப்பு வருகை தந்து, பதிவை ரசித்து படித்து, ஊக்கப்படுத்தியும், பாராட்டியும் பின்னூட்டமிட்டமைக்கு எங்களின் மனமார்ந்த நன்றி சித்ரா....

sreeja said...

// முற்றுப் புள்ளி இல்லா வாக்கியத்துக்கு எந்த அர்த்தமும் இல்லை, அதே மாதிரி முழுசா வாழாத வாழ்க்கைக்கு ஒரு அழகும் இல்லை //

முடிவிற்கும் ஒரு அருமையான தொடக்கம்.

உங்கள் E-Mail ID தெரியப்படுத்தவும்.

R.Gopi said...

//sreeja said...
// முற்றுப் புள்ளி இல்லா வாக்கியத்துக்கு எந்த அர்த்தமும் இல்லை, அதே மாதிரி முழுசா வாழாத வாழ்க்கைக்கு ஒரு அழகும் இல்லை //

முடிவிற்கும் ஒரு அருமையான தொடக்கம்.

உங்கள் E-Mail ID தெரியப்படுத்தவும்.//

********

ஸ்ரீஜா......

உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல....

தொடர்ந்து வருகை தந்து, பதிவை விடாமல் படித்து, சிறப்பாக ஆராய்ந்து, ஊக்கப்படுத்தி, இப்போது, அந்த 12 பகுதிகளையும் ஒன்றாக்கி ஒரு பிடிஎஃப் ஃபைலில் இட்டு....

அப்பப்பா... எங்களுக்கு இணையான உழைப்பை வழங்கி எங்களை கௌரவப்படுத்திய நல்ல உள்ளத்திற்கு எங்களின் சிரம் தாழ்ந்த வணக்கம்...

சுசி said...

உங்களுக்குத்தாங்க நன்றி சொல்லணும்.

எவ்ளோ பெரிய விஷயத்தை நகைச்சுவையோட அவ்ளோ நல்லா எழுதி இருக்கீங்களே..

வாழ்த்துக்கள்.

R.Gopi said...

//சுசி said...

உங்களுக்குத்தாங்க நன்றி சொல்லணும்.

எவ்ளோ பெரிய விஷயத்தை நகைச்சுவையோட அவ்ளோ நல்லா எழுதி இருக்கீங்களே..

வாழ்த்துக்கள்.//

**********

வாருங்கள் சுசி... நாங்கள் ஏற்கனவே சொன்னது போல், உங்களின் ஊக்கமும், உற்சாகமும் இன்றி இந்த தேர் ஓரடி கூட நகர்ந்திட முடிந்திருக்குமா என்று தெரியவில்லை..... ஆகவே, எங்களின் நன்றி, எங்களை ஊக்கப்படுத்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் உரித்தாகுக....

கோமதி அரசு said...

//முற்றுப் புள்ளி இல்லா வாக்கியத்திக்கு எந்த அர்த்தமும் இல்லை,அதே மாதிரி முழுசா வாழாத வாழ்க்கைக்கு ஒரு அழகும் இல்லை.//

உண்மையான வார்த்தை.

//இன்னிக்கு தேதியில் நீ ஒனக்குன்னு எடுத்து வைக்கற எதுவுமே நாளைக்கு ஒனக்கு பின்னாடி,வேற யாருக்கோ தானே//

ஆமாம்,ஆமாம்.

//நாம எல்லாரும்,நம்மால் முடிஞ்ச,நம்ம சக்திக்கு உட்பட்ட ஏதாவது ஒரு நல்ல விஷயத்தை கண்டிப்பாய் செய்யனும்//

நல்ல கோரிக்கை.61வது குடியரசு தினத்தன்று,இந்த நல்ல செய்தியை மக்கள் சிந்திக்கட்டும்.

வாழ்க்கை நிறைவு பகுதி மன நிறைவாக உள்ளது.

உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்.

அடுத்த தொடர் பதிவு என்ன?உங்கள் இருவரிடமும் நிறைய எதிர்ப்பார்க்கிறேன்.

வாழ்க வளமுடன்.

சொல்லச் சொல்ல said...

அறிவியலாக, மருத்துவமாக, ஆன்மீகமாக, மரணத்தின் வாசல் வரை கொண்டுவிட்டு , விவேகானந்தரின் கதையுடன் பத்திரமாக திருப்பி உயிருடன் விட்டமைக்கு மிக்க நன்றி.
நல்ல அலசல்.

R.Gopi said...

//கோமதி அரசு said...
//முற்றுப் புள்ளி இல்லா வாக்கியத்திக்கு எந்த அர்த்தமும் இல்லை,அதே மாதிரி முழுசா வாழாத வாழ்க்கைக்கு ஒரு அழகும் இல்லை.//

உண்மையான வார்த்தை.

//இன்னிக்கு தேதியில் நீ ஒனக்குன்னு எடுத்து வைக்கற எதுவுமே நாளைக்கு ஒனக்கு பின்னாடி,வேற யாருக்கோ தானே//

ஆமாம்,ஆமாம்.

//நாம எல்லாரும்,நம்மால் முடிஞ்ச,நம்ம சக்திக்கு உட்பட்ட ஏதாவது ஒரு நல்ல விஷயத்தை கண்டிப்பாய் செய்யனும்//

நல்ல கோரிக்கை.61வது குடியரசு தினத்தன்று,இந்த நல்ல செய்தியை மக்கள் சிந்திக்கட்டும்.

வாழ்க்கை நிறைவு பகுதி மன நிறைவாக உள்ளது.

உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்.

அடுத்த தொடர் பதிவு என்ன?உங்கள் இருவரிடமும் நிறைய எதிர்ப்பார்க்கிறேன்.

வாழ்க வளமுடன்.//

**********

வாருங்கள் கோமதி மேடம்... பெரிய பெரிய வார்த்தை எல்லாம் சொல்லி எங்களை திக்கு முக்காட வைத்து விட்டீர்கள்....

உங்களின் அன்புக்கு எங்களின் மனமார்ந்த நன்றி...

நல்ல உள்ளங்கள் பல, இந்த தொடரை ரசித்து, வாசித்து ஊக்கம், உற்சாகப்படுத்தியதே இந்த 12 பகுதி வரை நிகழ்ந்த அற்புதமான நிகழ்வு...

அடுத்த தொடர் பற்றி ஆலோசனை இருக்கிறது...

விரைவில் தொடங்குவோம் என்று எதிர்பார்க்கிறேன்...

மீண்டுமொருமுறை உங்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றி மேடம்.

R.Gopi said...

//சொல்லச் சொல்ல said...
அறிவியலாக, மருத்துவமாக, ஆன்மீகமாக, மரணத்தின் வாசல் வரை கொண்டுவிட்டு , விவேகானந்தரின் கதையுடன் பத்திரமாக திருப்பி உயிருடன் விட்டமைக்கு மிக்க நன்றி.
நல்ல அலசல்.//

********

முதல் வருகைக்கும், ஊக்கப்படுத்தும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி...

தாங்கள் 12 பகுதிகளையும் பொறுமையாக படித்து கருத்து கூறவும்...

தங்களின் மேலான கருத்தை எதிர்பார்க்கிறோம்.

cdhurai said...

hai friends,

so now u finished and starting a new fresh upcoming topic edition of life... we r so eager to read for that edition...title name Pls?

"even if u died,any one searching for u means that u r still living in the earth up to that moment"- Uravin Vali ingu vaalumvarai nee valkiraai- swami chellanatha...

cdhurai

R.Gopi said...

//cdhurai said...
hai friends,

so now u finished and starting a new fresh upcoming topic edition of life... we r so eager to read for that edition...title name Pls?

"even if u died,any one searching for u means that u r still living in the earth up to that moment"- Uravin Vali ingu vaalumvarai nee valkiraai- swami chellanatha...

cdhurai//

*********

செல்லதுரை அவர்கள் ஏதோ சொல்ல வருகிறார் என்று மட்டும் தெரிகிறது. ஆனால், என்ன சொல்ல வருகிறார் என்று புலப்படவில்லை...

சுவாமி செல்லானந்தா சொல்லிய பொன்மொழி கல்வெட்டில் செதுக்கப்பட வேண்டிய ஒன்று.. அப்போது தான், வரும் சந்ததியினரும் படித்து பயன்பெற முடியும்.... மிக்க நன்றி தலைவா..