வாழ்க்கை - (பகுதி - 11)

வாழ்க்கை ஒரு பயணம். உருண்டு உருண்டு ஓடும் மாற்றங்கள் நிறைந்தது. "சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே”ங்கற மாதிரியா, இல்லேன்னா நுரையை கிளப்பி ஓடும் ஆறு மாதிரியா, அல்லது நகரும் தரை போன்ற எஸ்கலேட்டரா!!! எனக் கேட்டால் ஆம். எப்போது நாம் பிறந்தோமோ அப்போதே நம் கையில் டிக்கட்டை திணித்து ... ம்... போலாம் ரைட்.....ரைட்ஸ் என பச்சைக் கொடி காட்டிடும் ஒரு நிகழ்வு. என்ன ஒரு வேடிக்கை, நம் மனித மனசு, பயணம் என்பதை ஒப்புக் கொள்ளாமல் இப்படியே இருக்கட்டுமே இது நல்லா இருக்கே என ஏங்கும். இருப்பதே நல்லா இருக்கே ஏன் மாறணும் என ஏமாற ஆசைப்படும்.

குழந்தை, இளமை, முதுமை என பருவங்களாய் பக்கங்களாய் மாற்றம் வரும். அப்படி மிக முக்கியமான முதுமை பருவத்தை பற்றி அலசி பார்ப்போம்... இளைய வயதில் விளையாடி, பெற்றோர் பெரியோர் சொல்பேச்சு கேட்டு நன்கு படித்து, உத்தியோகம் பெற்று, கடுமையாக உழைத்து, திருமணம் புரிந்து, அடுத்த சந்ததியை உருவாக்கி, அவர்களின் நலனுக்காக பாடுபட்டு, பின் அவர்களை நல்வழிபடுத்தி, அவர்களுக்கு நல்ல கல்வி கொடுத்து, ஒரு நல்ல பணியில் அமர்த்தி, அவர்களுக்கு நல்ல இடத்தில் நிச்சயம் செய்து திருமணம் செய்வித்து, இறைவனை வேண்டி வரமிருந்து, அவனருளால் கிடைக்கும் அடுத்த சந்ததியை கையில் ஏந்தி....(உஸ் அப்பாடா, இதை எழுதி, படிக்கறப்போவே கண்ண கட்டுதே!!!..).. கொஞ்சி விளையாடும் ஒரு அற்புத பருவமே முதுமை பருவம்...

இளமை பருவத்தை வீணாக்காமல், சபதம் எடுத்து உழைக்கும் அனைவரும் அதற்கான பலனை கண்டிப்பாக பெறுவார்கள்.... ஆண்டுகள் ஓடி, முதுமை பருவத்தை எட்டும் போது, தான் சிறு வயதில் புரிந்த சிறு சிறு தவறுகளை மெல்ல அசைபோட்டு, இப்படி செய்திருக்கலாமே என தோணுவதை தன் சந்ததியரும் செய்யா வண்ணம், அவர்களுக்கு பக்குவமாக எடுத்துரைத்து அவர்களை நல்வழிப்படுத்த எடுக்கும் முயற்சியே முதுமை பருவத்தில் ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய மிக மிக முக்கியமான கடமையாகும்...

இதை செய்யும் போது ஒரு முக்கியமான விசயம் இடிக்கும். அது தலைமுறை இடைவெளி. மனிதன் என்பது சூழ் நிலையின் எச்சம் என ஒரு சொல் உண்டு. நாம் சிந்திப்பது செயல்படுவது எல்லாமே நாடு, குடும்பம், கலாச்சாரம், மொழி, நண்பர்கள் உறவு, கலை என அதன் விளைவே. சரி, மேலே குறிப்பிட்டுள்ள லிஸ்ட் தன் தன்மையில் மாறிக் கொண்டே அல்லவா இருக்கிறது. நேற்றைய இட்லி மாவு இன்னிக்கு தோசை மாவல்லவா, என சரக்கு மாஸ்டர் ”சங்கரன் கோவில் சங்கரபாண்டி சங்கரப்பா” தன் தொழில் வழியாகவே சொல்றார்...

தகவல் தொழில் நுட்ப முன்னேற்றத்தில் இன்று அமெரிக்கா அதிர்வது ஆண்டிப்பட்டியில் பார்க்கப் படுகிறதே... ”அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா” அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில், அமெரிக்க நாட்டு மக்களுக்கு சொல்லும் விஷயங்களை, அதே நொடியில், ”கொட்டாம்பட்டி குமரேசன்” தொலைக்காட்சியில் லைவ் ரிலே பார்த்து, அவர் சொல்வதை கேட்டு, டீக்கடையில் தன் ”சகா சகாதேவனிடம்” வாதாடுகிறாரே....இது சரியா.... அப்படி சொன்னது தப்பில்லையா என்று??

யப்பா......நம் அடுத்த சந்ததி வளமாகவும் அறிவுபூர்வமாகவும் அல்லவா வளர்கிறது, சிந்திக்கிறது. அவர்கள் சிந்தனைக்கு மதிப்பு தந்து நம் சிந்தைகளை செதுக்கி, அதை பக்குவமாய் அன்பாய் எடுத்து சொல்ல நமக்கும் அவர்களுக்கும் பலன். இல்லையேல் ‘உனக்கு ஒண்ணும் தெரியாது நீ சும்மா இரு பாட்டி என நம் விழுதுகள் வீகத்தை வீக்கமாய் வீக்காய்/ பதிலாய் கேட்க வேண்டியிருக்கும்.

முக்கியமாக, கண்டிப்பாக சொல்ல வேண்டிய ஒரு விஷயம் இருக்கிறது.... அதுதான்.... மனித நேயம்....அல்லது மனிதாபிமானம்... எதற்கும் காத்திராமல் அடுத்தவர் உதவட்டுமே என சுணங்காமல், உடனே தன்னாலான உதவியை செய்வது... அல்லது இயேசு சொன்னது போல் உன்னைப் போல் உன் அயலானையும் நேசி. மிகப் பெரிய சமுதாய மாற்றம் தரும் மந்திரச் சொல் இதே.

சிறு வயதில் கேட்பது ஆழமாய் பதியும். எனவே நாம் போதிக்கும் நல்ல விஷயங்கள் அவர்கள் வாழ்நாள் முழுதும் பின்பற்ற ஏதுவாகிறது... விதை ஒன்று நட்டால் சுரை ஒன்றா முளைக்கும்.... நல்ல விஷயங்களை போதிப்பதால், வரும் சந்ததியில் நல்ல மனிதர்களின் எண்ணிக்கை பெருகி ஒரு நல்ல சமுதாயம் உருவாக வழி பிறக்கும்...
மாறுதல் நம்மிருந்து தொடங்கி, குடும்பம், சமூகம் என விரிந்தால் விண்ணைத் தொடலாம். அதற்கென பெரிய மலையை பெயர்க்கவோ அல்லது அதற்கு முயற்சிக்கவோ வேண்டாம், சிறு விதையை விதைத்தால் போதும்.
சின்னஞ்சிறு மாறுதல்கள் , உதாரணமாக, புறம் கூறாமை, பொய் பேசாதிருத்தல், தீய பேச்சுக்களை தவிர்த்தல், பிறர் பொருளுக்கு ஆசைப்படாதிருத்தல், பிறருக்கு கஷ்ட சூழலில் உதவுதல் போன்ற விஷயங்களை போதிப்பதன் மூலம், சிறு வயதிலிருந்தே அவர்கள் மனது அதையே பின்பற்ற துவங்கும்....
நம் முன்னேற்றத்திற்காகவும், நலனுக்காகவும் எவ்வளவு பேர் தனக்கு உதவினார்கள் என்பதை வளரும் சமுதாயத்திற்கு (குழந்தைகளுக்கு) எடுத்துரைக்கலாம்... அவர்களும், நல்ல நினைப்புடன் வளர இது உதவும்... நல்ல விஷயங்கள் பரவலாக மனதில் தோன்ற ஆரம்பித்தாலே, தீய விஷயங்கள் நம்மை அணுகாது ஓடிவிடும் ...
சினிமாவில் வரும் காமெடி ப்ரொஃபஸரை ரசிப்போம், ஆயினும் நிஜ வாழ்வில் கல்வி கற்பிக்கும் ஆசானை அன்புடன் மதிப்போம் (எழுத்தறிவித்தவன் இறைவன் அல்லவா), சரித்திரம் படிக்கும் சங்கதி என்ன, அறிவியலின் அம்சம் என்ன, கணிதத்தின் வீகமென்ன என நன்றாக படிப்பை உள்வாங்கி அர்த்தம் புரிந்து படித்து, அடுத்தவரை துன்புறுத்தாமல் இருத்தல் போன்ற விஷயங்களை போதிக்கலாம்...
ஊர் கூடி இழுத்தால் தேர் நகரும்... பெரிய உதவியோ, சிறிய உதவியோ, பலர் சேர்ந்து அந்த உதவியை செய்ய ஆசைப்பட, அந்த உதவி, தேவைப்படுவோர்க்கு சரியான நேரத்தில், சென்று சேரும் நிலையை உருவாக்கினால் ஊர் நிமிரும்...

எப்போதும் ஏதாவதொரு வழியில் ”இரை”யை தேடிக்கொண்டிருக்கும் மானிடம், அந்த தன் ”இரை” தேடலினூடே, சிறிது “இறை”யையும் தேட வேண்டும் என்பதை அழுத்தி சொல்லலாம்... வாழ்வில் தனக்கும், எவர்க்கும், எதற்கும், எப்போதும் (!!!!) உபயோகப்படாத டெலிவிஷன் நிகழ்ச்சிகளை புறம் தள்ள பழக்கப்படுத்தலாம்...
”மானாட மயிலாட” போன்ற வாழ்விற்கு தேவையில்லாத நிகழ்ச்சிகளை புறம் தள்ள சொல்லி, அழகான மான்கள், மயில்கள் துள்ளி விளையாடும் படங்களை கொண்ட புத்தகங்களை அவர்களுக்கு காண்பிக்கலாம்... நல்ல புத்தகங்களை நண்பர்களாய் அவர்களுக்கு அறிமுகப்படுத்தலாம்... நம்மிடம் தான் எத்தனை எத்தனை புத்தக பொக்கிஷங்கள் உள்ளன... அவைகளை மெதுவாக அவர்களுக்கு கண்ணில் காட்டலாம்....

முதலில், நாமே அவற்றை படித்து அவர்களுக்கு சுவாரசியமாக விளக்கலாம்... கடும் உழைப்பின் மூலம், வாழ்வில் உயர்நிலையை எட்டியவர்களை பட்டியலிட்டு, அவர்கள் அந்த நிலையை அடைய என்னென்ன செய்தார்கள் என்று விளக்கி கூறலாம்... இவையெல்லாம், கண்டிப்பாக சிறார்களின் மனதில் சிம்மாசனம் இட்டு உட்கார்ந்து விடும்.... பின், அவர்களாகவே, இது போன்ற புத்தகங்களை தேடி கண்டுபிடித்து படிக்க ஆரம்பித்து விடுவார்கள்....
வரும் தலைமுறைக்கு!!!! நம் அனுபவத்தை சிந்தையாய் சீராய் கொடுத்தால் மனிதம் எனும் முரசு ஓங்கி ஒலிக்கும்.
(ஆர்.கோபி / லாரன்ஸ்)
(வாழ்க்கை எனும் இத்தொடர் அடுத்த பகுதியில் நிறைவடையும்..... )

17 comments:

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

அருமையாய் சொல்கிறீர்கள், கோபி, வாழ்க்கையை அணு அணுவாய் ரசிக்கும் வித்தையை கற்றுக் கொடுத்து வருகிறீர்கள், நன்றி!

//வரும் தலைமுறைக்கு!!!! நம் அனுபவத்தை சிந்தையாய் சீராய் கொடுத்தால் மனிதம் எனும் முரசு ஓங்கி ஒலிக்கும்//

ஒப்புக் கொள்கிறேன். அதே சமயம், சென்ற தலைமுறையின் பெருமையை அறிந்து, மதித்து, அவர்களின் அனுபவபூர்வ அறிவுரையை மனத்தில் பதித்து அந்த சீரிய வழியில் பயணிக்கும் பக்குவம் இளைய தலைமுறைக்கு நிச்சயம் வேண்டும்.

Chitra said...

ினிமாவில் வரும் காமெடி புரோபசரை, ரசிப்போம், ஆயினும் நிஜ வாழ்வில் கல்வி கற்பிக்கும் ஆசானை அன்புடன் மதிப்போம் (எழுத்தறிவித்தவன் இறைவன் அல்லவா), .............நல்லா யோசித்து சொல்லி இருக்கிறீர்கள். :-)

R.Gopi said...

//பெயர் சொல்ல விருப்பமில்லை said...
அருமையாய் சொல்கிறீர்கள், கோபி, வாழ்க்கையை அணு அணுவாய் ரசிக்கும் வித்தையை கற்றுக் கொடுத்து வருகிறீர்கள், நன்றி!

//வரும் தலைமுறைக்கு!!!! நம் அனுபவத்தை சிந்தையாய் சீராய் கொடுத்தால் மனிதம் எனும் முரசு ஓங்கி ஒலிக்கும்//

ஒப்புக் கொள்கிறேன். அதே சமயம், சென்ற தலைமுறையின் பெருமையை அறிந்து, மதித்து, அவர்களின் அனுபவபூர்வ அறிவுரையை மனத்தில் பதித்து அந்த சீரிய வழியில் பயணிக்கும் பக்குவம் இளைய தலைமுறைக்கு நிச்சயம் வேண்டும்.//

//Chitra said...
ினிமாவில் வரும் காமெடி புரோபசரை, ரசிப்போம், ஆயினும் நிஜ வாழ்வில் கல்வி கற்பிக்கும் ஆசானை அன்புடன் மதிப்போம் (எழுத்தறிவித்தவன் இறைவன் அல்லவா), .............நல்லா யோசித்து சொல்லி இருக்கிறீர்கள். :-)//

----------

வணக்கம் பெயர் சொல்ல விருப்பமில்லை மற்றும் சித்ரா அவர்களே...

நாங்கள் முன்பே சொன்னது போல், தோழமைகளின் ஊக்கமே எங்களின் பெரிய பலம்...

கவிஞர் வாலி அவர்கள் சொன்னது போல், ஊக்குவித்தால், ஊக்கு விற்பவனும் தேக்கு விற்பான்...

தொடர்ந்து எங்கள் எழுத்துக்கு ஆதரவும், ஊக்கமும் அளித்து வரும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எங்களின் மனமார்ந்த நன்றி...

சுசி said...

ரொம்....ப நல்லா எழுதி இருக்கீங்க.

R.Gopi said...

// சுசி said...
ரொம்....ப நல்லா எழுதி இருக்கீங்க.//

-------

வாங்க சுசி...

நீங்க ரொம்......ப நல்லா எழுதி இருக்கீங்கன்னு சொல்லும் போதே தெரிகிறது எந்தளவு ரசித்திருக்கிறீர்கள் என்று....

நாங்கள் ஏற்கனவே சொன்னதுபோல், தோழமைகளின் ஊக்கமே எங்களின் பெரிய பலம்...

மிக்க நன்றி....

sindhusubash said...

எப்பவும் போல இந்த பகுதியும் அருமை. பல சமயம் ஏதோ ஒரு எண்ண ஓட்டத்தோட உங்க பதிவை படிக்க வந்தா அதுக்கு விடைகளா உங்க பதிவு அமையும்.வியப்பாகவும் பல தடவை ஆச்சர்யத்தையும் ஏற்படுத்துகிறது.

வாழ்த்துக்கள்.

R.Gopi said...

//sindhusubash said...
எப்பவும் போல இந்த பகுதியும் அருமை. பல சமயம் ஏதோ ஒரு எண்ண ஓட்டத்தோட உங்க பதிவை படிக்க வந்தா அதுக்கு விடைகளா உங்க பதிவு அமையும்.வியப்பாகவும் பல தடவை ஆச்சர்யத்தையும் ஏற்படுத்துகிறது.

வாழ்த்துக்கள்.//

-----------

பலரை சென்றடையும் பலனற்ற எழுத்தை விட சிலரையே சென்றடைந்தாலும், அது சிறந்ததாகவும், உபயோகமாகவும் இருந்தால், அது எங்களுக்கு மகிழ்ச்சியே...

நீங்கள் சொன்ன அந்த விஷயம் எங்களை பிரமிப்பில் ஆழ்த்துகிறது... இது போல், எல்லோருக்கும், வாழ்வில் எப்போதாவது நிகழும்... உங்களுக்கான சில குழப்பங்களுக்கு எங்கள் எழுத்து ஏதாவது விடை சொன்னால் அதை விட எங்களுக்கு மகிழ்ச்சி வேறு ஒன்றும் இல்லை...

தொடர்ந்து வருகை தந்து, பதிவை ஆழமாக படித்து, உங்களின் கருத்தை பகிர்ந்து உற்சாகப்படுத்தும் தோழமை சிந்துசுபாஷ் அவர்களே.... உங்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி.

கோமதி அரசு said...

//அடுத்த சந்ததியை கையில் ஏந்தி கொஞ்சி விளையாடும் பருவமே முதுமை பருவம்.//

//தன் சந்ததியை நல்வழிப்படுத்த தன் அனுபவங்களைச் சொல்லி அவர்கள் நன்றாக வாழ எடுக்கும் முயற்சியே முதுமை பருவம்//

முதுமை பருவம் அடைந்தவர்கள் எல்லா துறையிலும் அறிவுப் பெற்ற
இந்த இளைய தலை முறையிடம் அவர்களுக்கு ஏற்றவாறு எடுத்து சொல்லும் பக்குவம் பெற வேண்டும் கண்டிப்பாய்//

எல்லாவற்றையும் ஆமோதிக்கிறேன் . சரியாக சொல்லியிருக்கிறீர்கள்.
இளைய சமுதாயம் சிந்தையை ஒழுங்குப் படுத்தி சீராய் வாழ முரசு ஒலிக்கட்டும்.

வாழ்க்கை தொடருக்கு வாழ்த்துக்கள்,
உங்கள் இருவருக்கும்.

R.Gopi said...

//கோமதி அரசு said...
//அடுத்த சந்ததியை கையில் ஏந்தி கொஞ்சி விளையாடும் பருவமே முதுமை பருவம்.//

//தன் சந்ததியை நல்வழிப்படுத்த தன் அனுபவங்களைச் சொல்லி அவர்கள் நன்றாக வாழ எடுக்கும் முயற்சியே முதுமை பருவம்//

முதுமை பருவம் அடைந்தவர்கள் எல்லா துறையிலும் அறிவுப் பெற்ற
இந்த இளைய தலை முறையிடம் அவர்களுக்கு ஏற்றவாறு எடுத்து சொல்லும் பக்குவம் பெற வேண்டும் கண்டிப்பாய்//

எல்லாவற்றையும் ஆமோதிக்கிறேன் . சரியாக சொல்லியிருக்கிறீர்கள்.
இளைய சமுதாயம் சிந்தையை ஒழுங்குப் படுத்தி சீராய் வாழ முரசு ஒலிக்கட்டும்.

வாழ்க்கை தொடருக்கு வாழ்த்துக்கள்,
உங்கள் இருவருக்கும்.//

--------

வாருங்கள் கோமதி அரசு அவர்களே.. பதிவை விரிவாக படித்தது உங்களின் பின்னூட்டத்தில் தெரிகிறது...

தொடர் வருகை தந்து, பதிவை ஆழமாக படித்து, கருத்தும், பாராட்டும் அளிக்கும் உங்களின் பாங்கு எங்களை தலை வணங்க செய்கிறது...

அனுபவமே வாழ்க்கை... அதை முதியவர்களே முழுதும் அனுபவித்து இருப்பார்கள்...

மிக்க நன்றி மேடம்...

sreeja said...

என்னுடைய முதுமையிலும் இப்போதும் நான் எப்படி இருக்க வேண்டும் என்பதை கோடிட்டு காட்டுவதாக உள்ளது.

முழுவதும் படித்து முடித்தபின் ஒற்றை வார்த்தைதான் எனக்கு சொல்லத்தோன்றுகிறது - "அருமை'.

R.Gopi said...

//sreeja said...
என்னுடைய முதுமையிலும் இப்போதும் நான் எப்படி இருக்க வேண்டும் என்பதை கோடிட்டு காட்டுவதாக உள்ளது.

முழுவதும் படித்து முடித்தபின் ஒற்றை வார்த்தைதான் எனக்கு சொல்லத்தோன்றுகிறது - "அருமை'.//

********

நமக்கு தோன்றும் நல்ல கருத்தை நாலு பேருடன் பகிரவே இந்த பதிவு... தொடர் வருகை தந்து, பதிவை ஆழ்ந்து படித்து, கருத்து பகிரும் ஸ்ரீஜா அவர்களே...

படிப்பதை அப்படியே அக்கணமே மறவாமல், பின்பற்றுவேன் என்று சொன்ன பாங்கு எங்களுக்கு மிக பிடித்திருந்தது...

உங்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றி உரித்தாகுக....

sreeja said...

கோபி-லாரன்ஸ், இதுவரை வெளிவந்த 11 பகுதிகளையும் PDF-ஆக ஒரே பைலில் பதிந்து வைத்திருகிறேன். கடைசி பகுதி வந்தவுடன் அதையும் சேர்த்து அனுப்புகிறேன். யாருக்காவது தேவை இருப்பின் அதை டவுன்லோட் செய்யும் வகையில் இந்த தளத்தில் லின்க் கொடுக்கவும்.

உங்கள் எழுத்துக்கு தலை வணங்கி, என் சாதாரண பிரதிஉபகாரம்.

R.Gopi said...

//sreeja said...
கோபி-லாரன்ஸ், இதுவரை வெளிவந்த 11 பகுதிகளையும் PDF-ஆக ஒரே பைலில் பதிந்து வைத்திருகிறேன். கடைசி பகுதி வந்தவுடன் அதையும் சேர்த்து அனுப்புகிறேன். யாருக்காவது தேவை இருப்பின் அதை டவுன்லோட் செய்யும் வகையில் இந்த தளத்தில் லின்க் கொடுக்கவும்.

உங்கள் எழுத்துக்கு தலை வணங்கி, என் சாதாரண பிரதிஉபகாரம்.

*********

ஆஹா.... இது மிக பெரிய உதவி அல்லவா??

நாங்களே இது பற்றி பேசிக்கொண்டு இருந்தோம்.... இப்போது, நீங்கள் அந்த உத்தியை கூறி உள்ளீர்கள்...

பல பேர் ஒருங்கிணைந்து செயல்பட அந்த வேலை மிக சிறப்பாகும் என்பதை நீங்கள் மற்றொரு முறை நிரூபித்து உள்ளீர்கள்... அதற்காக உங்களுக்கு எங்களின் நெஞ்சார்ந்த நன்றி ஸ்ரீஜா அவர்களே...

நீங்கள் குறிப்பிட்டுள்ளது போலவே செய்து விடலாம்....

பலா பட்டறை said...

ஊர் கூடி இழுத்தால் தேர் நகரும்... பெரிய உதவியோ, சிறிய உதவியோ, பலர் சேர்ந்து அந்த உதவியை செய்ய ஆசைப்பட, அந்த உதவி, தேவைப்படுவோர்க்கு சரியான நேரத்தில், சென்று சேரும் நிலையை உருவாக்கினால் ஊர் நிமிரும்..///

எல்லாம் அடங்கிவிட்டது இதில். வாழ்வது மட்டும் குழுவாக வாழ்க்கை மட்டும் தனியாக, விலகல்கள் விலகினாலே போதும் வாழ்க்கை தேர் நகரும்..:))

வாழ்த்துக்கள் கோபி சார்..
அடுத்த பதிவோடு வாழ்க்கை தொடர் முடிந்துவிடுமா என்ன?:) அழ்காய் தொடர்வோம் என்று போட்டுவிடுங்கள்..:))

R.Gopi said...

//பலா பட்டறை said...
ஊர் கூடி இழுத்தால் தேர் நகரும்... பெரிய உதவியோ, சிறிய உதவியோ, பலர் சேர்ந்து அந்த உதவியை செய்ய ஆசைப்பட, அந்த உதவி, தேவைப்படுவோர்க்கு சரியான நேரத்தில், சென்று சேரும் நிலையை உருவாக்கினால் ஊர் நிமிரும்..///

எல்லாம் அடங்கிவிட்டது இதில். வாழ்வது மட்டும் குழுவாக வாழ்க்கை மட்டும் தனியாக, விலகல்கள் விலகினாலே போதும் வாழ்க்கை தேர் நகரும்..:))

வாழ்த்துக்கள் கோபி சார்..
அடுத்த பதிவோடு வாழ்க்கை தொடர் முடிந்துவிடுமா என்ன?:) அழ்காய் தொடர்வோம் என்று போட்டுவிடுங்கள்..:))//

*********

”வாழ்க்கை” தொடர் பதிவிற்கு தொடர்ந்து வருகை தந்து, தங்களின் மேலான கருத்தையும், ஊக்கத்தையும் அளித்த தோழமை சங்கர் அவர்களே.... உங்களுக்கு எங்களின் பணிவான வணக்கம்...

பல பேர் கூடி இழுக்க தேர் நகர்வது போல, பல தோழமைகளின் ஊக்கமே இந்த தொடரை இந்த அளவு அழைத்து சென்றது என்றால் அது மிகையல்ல....

எங்களுக்கும் இந்த தொடரை முடிக்க வேண்டும் என்ற ஆசையில்லை... தற்காலிக முற்றும் போட்டு, பிறகு எழுதலாமே என்று தான் நினைத்துள்ளோம்...

தொடர்ந்து ஊக்கமளித்த அனைத்து தோழமைகளுக்கும் இந்த நேரத்தில் நாங்கள் நன்றி (இந்த வார்த்தை குறைவுதான்) சொல்ல கடமை பட்டுள்ளோம்...

சொல்லச் சொல்ல said...

”மானாட மயிலாட” போன்ற வாழ்விற்கு தேவையில்லாத நிகழ்ச்சிகளை புறம் தள்ள சொல்லி, அழகான மான்கள், மயில்கள் துள்ளி விளையாடும் படங்களை கொண்ட புத்தகங்களை அவர்களுக்கு காண்பிக்கலாம்...

குழந்தைகள் உண்மையான மானை ரசிக்க ரெடி தான். ஆனால் பெற்றோர்கள் தான், "உன்னுடைய ப்ரோக்ராம் தான் நிறைய பார்த்துடீல. நாங்க கொஞ்ச நேரம் இதைப் பாக்குரோண்டா" என கெஞ்சியோ மிரட்டியோ சம்மதிக்க வைத்து நாம் அவர்களையும் பார்க்க வைக்கிறோம்.

உங்களின் உள்நோக்கு பார்வை ஈழுத்துகளில் தெரிகிறது

R.Gopi said...

//சொல்லச் சொல்ல said...
”மானாட மயிலாட” போன்ற வாழ்விற்கு தேவையில்லாத நிகழ்ச்சிகளை புறம் தள்ள சொல்லி, அழகான மான்கள், மயில்கள் துள்ளி விளையாடும் படங்களை கொண்ட புத்தகங்களை அவர்களுக்கு காண்பிக்கலாம்...

குழந்தைகள் உண்மையான மானை ரசிக்க ரெடி தான். ஆனால் பெற்றோர்கள் தான், "உன்னுடைய ப்ரோக்ராம் தான் நிறைய பார்த்துடீல. நாங்க கொஞ்ச நேரம் இதைப் பாக்குரோண்டா" என கெஞ்சியோ மிரட்டியோ சம்மதிக்க வைத்து நாம் அவர்களையும் பார்க்க வைக்கிறோம்.

உங்களின் உள்நோக்கு பார்வை ஈழுத்துகளில் தெரிகிறது//

*********

வாங்க சொல்ல சொல்ல....

உங்கள் கருத்து உண்மைதான்.. அதுதான் பெரும்பாலான இல்லங்களில் நடக்கிறது...

நாம் டெலிவிஷன் நிகழ்ச்சிகள் பார்க்க அவர்களை ஒரு சாக்காக வைத்து கொள்கிறோம்...

தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...