வாழ்க்கை (பகுதி – 10)

ஒத்துக்கிறேனுங்கோ, சரிதானுங்கோ....உத்யோகந்தேன் வாழ்வுக்கு ஆதாரமான பணத்த தருது. மாசமானா முதல் தேதி சம்பளம் வருது. அதுவும் போக, இல்லேன்னு சொல்லாம, சமூக அங்கீகாரமும், அடையாளமும் தருது. இருந்தாலும் அதுக்காக நாம கொடுக்கிற விலை நெம்ப ஜாஸ்திங்க.

பாருங்களேன், ஒரு காய்ச்சல், ஒவ்வாமையால் வயிற்றுவலி, ஒற்றை தலைவலின்னு (ஒரு தலைன்னா கூட, அதுல என்னா என்னா வலி வருதுப்பா.... யப்பா.....) வந்தா சுளுவா லீவு எடுக்க முடியுதா. ஏன், உங்க உடம்புக்கு என்னாச்சு, இப்போ எப்படி இருக்குது தேவலையான்னு கூட கேக்காம, நேத்து நீ பாட்டுக்கு லீவ் எடுத்துட்ட... இப்போ பாரு, எவ்ளோ வேலை நின்னு போச்சு, இதையெல்லாம் நீ எப்போ முடிச்சு, இன்னிக்கு வேலைய ஆரம்பிப்பேன்னு ”மேனேஜர் மேகவர்ணம்” கர்ண கொடூரமாக கர்ஜிப்பது நம் காதில் ஈயத்தை காய்ச்சி ஊத்தியது போலிருக்கும்....

அதற்கு பதில் கூறும் விதமாக..... சார் (டேய் என்று மனதினுள்).... நேத்து நான் என் பாடி கண்டிஷன கவனிக்காம விட்டு இருந்தா, இன்னிக்கு டெட்பாடியாகி, மேலே போயிருப்பேனே (டா) என்று கதறுவது அங்கு யார் காதிலும் விழாது....

என்ன உடை உடுக்கணும், அத எப்படி எல்லாம் உடுக்கணும்னு ”கறார் கந்தசாமி”யா கம்பெனி கண்டிஷன் எல்லாம் போடுது. அக்னி நட்சத்திரத்தில, எல்லாம் பழுக்கறா சூடு அடிக்கறப்போ, புடுங்கிக்கிட்டு அடிக்கிற வெயில்ல கழுத்த இறுக்கி டை கட்டினாத்தான் ஆச்சு, இல்லேன்னா கம்பெனியோட பிஸினஸே போச்சுன்னா எப்படி?. ஆபிஸ் ப்ரோட்டாகால்ன்னு சொல்லி சூட், கோட் போட்டு, உள்ளார எல்லாம் புழுங்கி வேகுதுண்ணே....

இதுவாவது பரவாயில்ல, என்ன யோசிக்கணும், எப்படி யோசிக்கணும்னு கூட எதிர்பார்க்கிறது சரிங்களா. Change your thinking, Think Big, focus on your attitude என்றெல்லாம், நம்ம மண்டைக்குள்ள வந்து குந்தி, குடைவேன் என அடம் பிடிப்பது எந்த விதத்தில் சேர்த்தி. ஓ மை காட்.... எனக்கு சுதந்திரமே இல்லையே. ப்ளீஸ் ஆன்ஸர் மை ப்ரேயர்.....

ஒரு எளிய முறையில் நாம் இந்த பிரச்சனையை தீர்க்கலாம். ஒரு தராசு எடுத்து முள்ளை நேராக்கி, இடம் வலமாய் இருக்கும் இரண்டு தட்டுக்களை பார்க்கலாம். இதில் ஒரு தட்டில் பொறுப்புணர்ச்சியும், மற்றொரு தட்டில் சுதந்திரமும் நேரெதிராக இருக்கும். அதாவது எவ்வளவு பொறுப்பாய் நாம் இருக்கிறோமோ அவ்வளவு சுதந்திரம் நமக்கு கிடைக்கும். பொறுப்பு குறைந்தால் பருப்பு என பகுக்கப்பட்டு வாணலியில் தாளித்து விடுவார்கள் (ஸ்டவ் சூட்டை அதிகப்படுத்தி.... அப்புறம் நாம் கத்தி சொல்லணும்... அய்யய்யோ...கொல பண்றாங்கோ)..... இதில் முதலில் நாம் வெந்து, பின் நொந்து நூலாவோம்...

தீர்வு !!! நிர்வாகம் செய்ய நினைப்பது என்ன, அடையத் துடிக்கும் லட்சியம் என்ன, அதை செய்ய இந்த சிறு அணிலால் எப்படி உதவ முடியும் என யோசித்து, யாரும் சொல்லாமல் நாமே அதை இழுத்துப் போட்டு செய்ய துவங்கி விட்டால். டேய் விட்டுருடா, அவன் பாத்துக்குவான் என நிர்வாகம் சல்யூட் அடித்து விலகிவிடும். நிர்வாகத்துக்கு அப்படி ஒரு நம்பிக்கை வளர்ந்து விட்டால், சில்லரை விசயங்களில் தலை விடாமல், கொஞ்சம் தள்ளி நிற்கவும் வாய்ப்பு உண்டு.

எனக்கென்ன போச்சு, காலுக்கு கீழே பீச்சு என்பதாய் இதமான காற்றை மட்டும் சுவாசித்து, இயற்கை அழகை ரசித்து பார்த்துக்கொண்டு கடற்கரையில் நின்றிருந்தால், அடிக்கும் அலையில் நம் காலுக்கு கீழ் உள்ள மண் சுரண்டப்படும். நிற்க இடம் இல்லாத வேறு ஒருவன், நம் நாற்காலிக்கு குறி வைத்து இருக்கிறான் எனும் மேலை நாட்டு தத்துவமும் தரிகினதக்கம் போடும்.

குத்துற குத்தும், குடைச்சலும் தாங்கலையே, எனும் போது தான் ஆபத்பாந்தவனாக ஓய்வு வருவார். மதியம், நாள் இறுதி, வார இறுதி, வருட இற்தி என நமக்கு கிடைக்கும் ஓய்வை கெட்டிக்கா பிடிச்சா, நல்லது. நாள் முழுதும், வாரம் முழுதும், வருடம் முழுவதும் என ஓடி ஓடி உழைக்கும் நாம் ஓய்வை கொண்டாட வேண்டும். நம் உடலுக்கும் ஓய்வு தேவைதானே!!! ஓய்வின் முக்கியம் பற்றி சொல்ல, நம் உடம்பில் நடக்கும் ஒரு வினோத நிகழ்வை சொல்லி, விளக்குவோம்.

சொன்னாலும் கேக்காம நிக்கவே நிக்காம நம்ம உடம்புக்குள்ள ஓராயிரம் ஓடிக்கிட்டு இருக்கும். மூளை, இதயம் (இதுல ஒருத்தரு நிறைய பேருக்கு இடம் கொடுத்துட்டே போறாரு!!! இந்த இடம் ஃபுல்லாயிடுச்சுன்னா, என்ன பண்ணுவாரோ தெரியல), கல்லீரல், மண்ணீரல் என ஒரு பெரிய லிஸ்டே உண்டு. இதெல்லாம் தனியா சொல்லணுமா.... தெரியுமப்பா என சொல்கிறார் "தில்லாலங்கடி திகம்பரசாமி". ஓடிக்கிட்டு இருக்கிற அத்தனை உருப்பும், உயிரோட இருக்கும் போதே ஒரு நொடி எல்லாம் ஆஃப் ஆகி, அப்புறம் சுதாரிசிக்கிட்டு மறுபடி ஓடும். அப்படியா மெய்யாலுமா, எப்போ என ”எகத்தாள எம்டன் மகன் ஐஸக் ஏகலைவன்” பதில் சொல்றார்.

அது எப்போன்னா,,,,, தும்மும் போது.. அப்படியா... ஹார்டும் பிரெய்னும் கூடவா. அப்படியா!! ம் அது மட்டுமா இன்னொன்னையும் கேளுங்க.... ”கண் சிமிட்டி காஞ்சனா” எத்தனை தடவ கண்ண சிமிட்டுவா என ”சிக்கல் சிங்கார வேலன்” கேட்பார். ஏங்க கண் துடிக்கிறதெல்லாம் ஒரு மேட்டரா, நிமிசத்துக்கு பத்து தடவ நடக்குங்க..... ஹீ.... பத்து தடவ துடிக்குங்க....

சிந்தனைய தடுத்து நிறுத்தி ஓய்வு கொடுப்பது தான் இந்த கண் சிமிட்டல். சிந்திக்காதடா ப்ளீஸ் என கோரிக்கையாகவோ, அல்லது வேண்டாம்டா, நெக்ஸ்ட் யோசி என சிந்தனைய தட்டி விடுற அனிச்ச செயல் தான் இது. கண் சிமிட்டும் போது நம்மால யோசிக்க முடியாது.

இதனால் சகலமானவருக்கும் தெரிவிப்பது என்னவென்றால், ஒய்வு, லாஜிக்கல் பிரேக் எல்லாம் ரொம்ப அவசியம். உழைப்பதற்கு உற்சாகமாய் இருப்பதற்கு என உழைப்பதை விட ஒய்வு அத்தியாவசியம்.

இன்னும் ஒரே ஒரு நல்ல விசயம் சொல்லி, இந்த பகுதியை நிறைவு செய்வோம். வேலையில் முன்னேறுவது எப்படி. எங்க பாஸ் மாதிரி நான் ஆவறது எப்படி, சந்தையில கிடைக்கிற சரக்குல எதுவுமே சாரம் இல்லீங்க, எத்தனையோ படிச்சாச்சு, கேட்டாச்சு ஒண்ணும் பிரயோசனமில்லை, ஏதாவது வைச்சுருக்கீங்களா என கேட்டால் இருக்குது ஒரு மேட்டரு.

சர்வதேச நிறுவனத்தின் V.P. - H.R. இடம் வெள்ளந்தியாய் ஒரு கேள்வி கேட்டோம். ஏன் சார் உங்களுக்குன்னு மூணு செக்கரட்டரி, ஒரு நாள்ல குறைஞ்ச பட்சம் 15 மணி நேரம் வேலை செய்யுறீங்க, அப்படி என்னதான் வேலை செய்யுறீங்க அத கொஞ்சம் சொல்லுங்களேன் என்ற போது, அவர் சொன்ன பதில் ரொம்ப வித்தியாசமானது. ”ஙே”!!! என விழிக்க வைத்த்து.

சொல்றேம்பா. இன்னைக்கு என்ன வருசம். 2010, இதுல இருந்து ஒரு 15 வருசம் கூட்டிக்கோ, 2025 அந்த வருசத்துல தொடங்கி சுமாரா 2035 வரைக்கும் இந்த கம்பெனி என்னவெல்லாம் செய்யணும், என்ன பிரச்சனை எல்லாம் வரும், அப்போ எப்படி சமாளிக்கிறது என ஆராய்ந்து அதற்கென இன்றே தயார் செய்ய செயல் திட்டம் வகுப்பதே என் வேலை.

சும்மா சொல்றார். பெரிய டகால்டிங்க என மனம் திட்டவட்டமாய் திட்ட சதுரமாய் மறுதலித்து விட்ட்து. பின்னர் ஆழ்ந்து சிந்தித்த்தில் கொஞ்சம் புரிந்தது. சரிதானோ

ஒரு கம்பெனியில விற்பனை பிரிவு என்ற ஒரே டிபார்ட்மெண்டில், வி.பி சேல்ஸ் என்ன செய்வார். சேல்ஸ் மானேஜர் பணி என்ன...... சேல்ஸ்மேன் வேலை என்ன, சேல்ஸ் கோ-ஆர்டினேட்டர் வேலை என்னா.......................
இன்றைய தேதியின் வீகம் கடை நிலையில் தொடங்கி, வாரம், மாதம், வருடம் என கொஞ்சம் கொஞ்சமாய் மேலே வந்து விருட்சம் ஆகும்.

நாம் செய்ய வேண்டியது, நான் செய்யும் வேலை எத்தனை தூரம், வருங்காலத்தில் உள்ளது என பார்த்து, எப்படியாவது கொஞ்சம் தூரப் பார்வை பார்க்க ஆரம்பித்தால் நம் உத்யோகம் சிறக்கும். வேலையில் வெற்றி வாழ்க்கையை தன்னம்பிக்கையுடன் தளிர்க்க வைக்கும்.

ப்ரொஃபெஷனல் வெற்றி, புரமோஷன் எல்லாம் கிடைக்க வாழ்த்தி முறசை ஓங்கி அறைந்து விட்டு செல்வோம்....

15 comments:

விக்னேஷ்வரி said...

நல்ல இடுகைங்க.

R.Gopi said...

//விக்னேஷ்வரி said...
நல்ல இடுகைங்க.//

-*-*-*-*-*-*-*-*-*

வாங்க விக்னேஷ்வரி...

முதலில் வருகை தந்து, பதிவை படித்து, கருத்து சொன்னமைக்கு எங்கள் நன்றி.....

sreeja said...

// நாம் செய்ய வேண்டியது, நான் செய்யும் வேலை எத்தனை தூரம், வருங்காலத்தில் உள்ளது என பார்த்து, எப்படியாவது கொஞ்சம் தூரப் பார்வை பார்க்க ஆரம்பித்தால் நம் உத்யோகம் சிறக்கும். //

உண்மையில் உணர்ந்து படிக்க வேண்டிய பாடம்.

வித்தியாசமான பெயர்கள். அருமை.

வாழ்த்துக்கள்.

Chitra said...

குத்துற குத்தும், குடைச்சலும் தாங்கலையே, எனும் போது தான் ஆபத்பாந்தவனாக ஓய்வு வருவார். ........பயனுள்ள கருத்துக்குள் உள்ள இடுகை. நன்றி.

R.Gopi said...

//sreeja said...
// நாம் செய்ய வேண்டியது, நான் செய்யும் வேலை எத்தனை தூரம், வருங்காலத்தில் உள்ளது என பார்த்து, எப்படியாவது கொஞ்சம் தூரப் பார்வை பார்க்க ஆரம்பித்தால் நம் உத்யோகம் சிறக்கும். //

உண்மையில் உணர்ந்து படிக்க வேண்டிய பாடம்.

வித்தியாசமான பெயர்கள். அருமை.

வாழ்த்துக்கள்.//

-*-*-*-*-*-*-*-*-*-*

வழக்கம் போல், தொடர் வருகை தந்து, பதிவை ஆழ்ந்து படித்து, கருத்து பகிரும் ஸ்ரீஜா அவர்களே, உங்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றி......

R.Gopi said...

// Chitra said...
குத்துற குத்தும், குடைச்சலும் தாங்கலையே, எனும் போது தான் ஆபத்பாந்தவனாக ஓய்வு வருவார். ........பயனுள்ள கருத்துக்குள் உள்ள இடுகை. நன்றி.//

-*-*-*-*-*-*-*

வாங்க சித்ரா...

உங்கள் வருகையும், கருத்தும் எங்களுக்கு மிக்க உற்சாகம் அளிக்கிறது. தொடர் வருகை தாருங்கள்... மேலான கருத்தை பகிருங்கள்...

R.Gopi said...

இந்த பதிவிற்கு “தமிழிஷில்” வாக்களித்து பிரபலமாக்கிய தோழமை அனைவருக்கும் எங்கள் நன்றி...

Jaleela
ssrividhyaiyer
vanniinfo
venkatnagaraj
anubagavan
chitrax
suthir1974
ambuli
VGopi
kiruban
nanban2k9
Rajeshh
palapattarai

sreeja said...

கோபி, வாழ்க்கை பகுதியில் பல விஷயங்களை பற்றி நாம் அலசுகிறோம். அந்த வாழ்க்கையில் மிகவும் முக்கியமானதான "மனிதாபிமானத்தை" பலரும் மறந்து விடுகிறார்கள்.

அதை விளக்கும் ஒரு செய்தி...
http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=6220
இங்கே இருக்கிறது. தயவு செய்து இதை பார்த்து பதிவிடவும். நமது நண்பர்களின் கண்டனத்தை கண்டிப்பாக இந்த தளத்தில் பதிவு செய்யுமாறும் மேலும் இதுபோன்ற நேரத்திலே மனிதாபிமானத்துடன் செயல்பட்டு ஒரு உயிரை காக்கும் மன உறுதியை ஒவ்வொருவரும் கொள்ளவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

வெறும் பொழுதுபோக்கு அல்ல உங்கள் தளம் என்பது என் கருத்து.

R.Gopi said...

//sreeja said...
கோபி, வாழ்க்கை பகுதியில் பல விஷயங்களை பற்றி நாம் அலசுகிறோம். அந்த வாழ்க்கையில் மிகவும் முக்கியமானதான "மனிதாபிமானத்தை" பலரும் மறந்து விடுகிறார்கள்.

அதை விளக்கும் ஒரு செய்தி...
http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=6220
இங்கே இருக்கிறது. தயவு செய்து இதை பார்த்து பதிவிடவும். நமது நண்பர்களின் கண்டனத்தை கண்டிப்பாக இந்த தளத்தில் பதிவு செய்யுமாறும் மேலும் இதுபோன்ற நேரத்திலே மனிதாபிமானத்துடன் செயல்பட்டு ஒரு உயிரை காக்கும் மன உறுதியை ஒவ்வொருவரும் கொள்ளவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

வெறும் பொழுதுபோக்கு அல்ல உங்கள் தளம் என்பது என் கருத்து.//

-*-*-*-*-*-*-*-*

மனதை பதைபதைக்க வைத்தது இந்த செய்தி.... நாம் எதனால் இப்படி சுயநலத்தோடு இருக்கிறோம் என்றே என்னால் கணிக்க இயலவில்லை.. உயிர் என்றாலே உயிர்தானே...

பிறர்க்கு உதவுவது தானே மனித தன்மை... அது எங்கே போனது? இதை பற்றி விரிவாக பின்னர் விவாதிப்போம் ஸ்ரீஜா...

இந்த விஷயத்தை எங்களின் பார்வைக்கு எடுத்து வந்து, பதிவிட சொன்னமைக்கு மிக்க நன்றி...

பலா பட்டறை said...

வெறும் பொழுதுபோக்கு அல்ல உங்கள் தளம் என்பது என் கருத்து.//

நானும் இதை வழி மொழிகிறேன்..தொடரட்டும் உங்கள் பணி..::))

R.Gopi said...

// பலா பட்டறை said...
வெறும் பொழுதுபோக்கு அல்ல உங்கள் தளம் என்பது என் கருத்து.//

நானும் இதை வழி மொழிகிறேன்..தொடரட்டும் உங்கள் பணி..::))//

-*-*-*-*-*-*-*

ஸ்ரீஜா, பலா பட்டறை மற்ற பல தோழமைகளின் தொடர் வருகை, ஊக்கப்படுத்தும் பின்னூட்டம் ஆகியவையே எங்களின் பலம்... உங்கள் அனைவருக்கும் எங்களின் பணிவான வணக்கம் மற்றும் நன்றி....

கண்டிப்பாக நிறைய நல்ல விஷயங்களை வரும் காலத்தில், இங்கு பதிவு செய்வோம் என்று நாங்கள் உறுதி கூறுகிறோம்...

கோமதி அரசு said...

//பொறுப்பு குறைந்தால் பருப்பு என் பகுக்கப்பட்டு வாணலியில் தாளித்து விடுவார்கள்.//

//உழைப்பதை விட ஒய்வு அத்தியாவசியம்//

வேலையில் வெற்றி வாழ்க்கையை தன்னபிக்கையுடன் தளிர்க்க வைக்கும்//
சரியாக சொன்னீர்கள்.

செய்யும் தொழிலை தெய்வமாய் நினைத்தால் பாராட்டு புரமோஷன் நிச்சியம்.

வாழ்த்துக்கள் உங்கள் இருவருக்கும் .

R.Gopi said...

//கோமதி அரசு said...
//பொறுப்பு குறைந்தால் பருப்பு என் பகுக்கப்பட்டு வாணலியில் தாளித்து விடுவார்கள்.//

//உழைப்பதை விட ஒய்வு அத்தியாவசியம்//

வேலையில் வெற்றி வாழ்க்கையை தன்னபிக்கையுடன் தளிர்க்க வைக்கும்//
சரியாக சொன்னீர்கள்.

செய்யும் தொழிலை தெய்வமாய் நினைத்தால் பாராட்டு புரமோஷன் நிச்சியம்.

வாழ்த்துக்கள் உங்கள் இருவருக்கும் .//

*********

வாங்க மேடம்... பெண்டிங் விட்டதை எல்லாம் படிச்சுட்டீங்க போல இருக்கு... நன்றி...

உங்களின் ஆர்வத்திற்கும், படித்து கருத்து சொல்லி, பாராட்டும் அந்த நல்ல உள்ளத்திற்கும் நன்றி என்ற அந்த ஒரு சொல் மிக மிக குறைவு தான்...