வாழ்க்கை (பகுதி – 9)

தூக்கத்தின் அவசியமும், முக்கியமும் சொல்லிவிட்டு குறட்டை விட்ட நம் முந்தைய பகுதி, ஃப்ரெஷ்ஷா தூங்கி முழிச்சு, வாழ்வின் இன்னொரு முக்கிய பகுதியை எட்டி பார்க்கிறது. தூக்கத்த பத்தி எழுதறதுக்கு ஒரு பகுதியா, அப்போ துன்னுறத பத்தி ரெண்டு பகுதியும், குளிக்கறத பத்தி மூணு பகுதியும் எழுதுவீங்களோ என கேட்டார் ஒரு நண்பர். பெயர் ”உகாண்டா உசிதமணி”.

போர்வையில நாம் கழித்த நேரம் போக, வாழ்வின் மீதி நேரம் எங்கே போகுது என பூதக் கண்ணாடி கொண்டு பார்த்தால், தூங்கி போக்குன ஒரு பாதிய விட்டு புட்டோம்னா ஆபிஸ்ல போய் குப்பைய கொட்டுறது, இன்னொரு ஒன்றில் மூணு. ஆமாம்ல !!!! ஒரு எட்டு பத்து மணி நேரம் ஆபிஸ்ல போகுதுல்ல.

இப்போ பாருங்க, மீட் மை பிரெண்ட் ராகவ்... ஹாய்!!! என்றதும், பேர் தெரிந்து போச்சு, அடுத்து தாவுவது எங்கே. என்ன செய்யுறீங்க. எங்க வேலை... இது தானே. நம் அடையாளமாய் நாம் கொண்டிருப்பது நம் அலுவல் தானே. அலுவல் இல்லை என்றால் அழுவல் தானே. (கண்ணீரை சொல்கிறோம்... அழுகுவதை அல்ல) மைக்ரோ சாப்ட்ல பில் கேட்ஸ்சுக்கு பில் கிளார்க்கா இருக்கேன்... அப்படியா, நிக்குறீங்களே.. உக்காருங்க சார், என வரும் கமர்கட்டு பதில், இவர் டோல் கேட் வாட்ச்மேன் வடிவேல் என சொல்லும்போது. கமர்கட்டு கப்பலேறும். செய்யும் தொழிலில் நம் வாழ்க்கையை வைக்கும் விநோதம்.

சுருங்கச் சொன்னால்.... வாழ்க்கையில் பிடிக்குதோ பிடிக்கலையோ தூங்கோணும், வேலையும் செய்யோணும். கூட்டி கழிச்சு பாத்தா முக்காலே மூணு வீசம் எதுக்காகவோ, எவனுக்காகவோ வாழ வேண்டி இருக்கே..... ரொம்ப கொஞ்ச நேரம் மட்டுமே நமக்கே நமக்காய். என்ன கொடுமை இது சரவணன்னு நம்ம ”கமர்கட் கம்ருதீனும்”, ”கடலை உருண்டை கந்தசாமி”யும் புலம்பி கொண்டே சொல்றாய்ங்க.

ஏண்டா உனக்கு அறிவே இல்லையா! உன்னெயெல்லாம் நடுக்கடல்ல நட்ட வைக்கணுண்டா, உன்னிய எல்லாம் ஏண்டா இன்னும் சுனாமி தூக்கல. என உறுமிவிட்டு இது போதாதென்று பதிவில் சொல்ல முடியாத அக்மார்க் கெட்ட வார்த்தையில் அர்ச்சனை. யாரு... யார திட்டுறா... சம்பளம் கொடுக்கும் பாஸ். இவ்வளவையும் கேட்டுகிட்டு நம்மாளு எதுவுமே நடக்காதது போல் கண்டிசனா.... மூஞ்சிய சிரிச்ச மாதிரி வைச்சுகிட்டு, "அலார்ட் ஆறுமுகம்" போல் இருக்க வேண்டும். இல்லேன்னா, முதல் தேதி சம்பளம் சங்கு ஊதிடும்.

காசு கொடுப்பவன் பாஸ் என்பதால், அவர் சொல்லும் அரை குறை காமெடிக்கு விழுந்து விழுந்து சிரிக்கணும். போலியான ஒரு லிப்ஸ்டிக்கை நம் மூஞ்சி முழுதும் களிமண் மாதிரி பூசிக் கொண்டு சே... அடப் போங்கப்பா... என்ன வாழ்க்கைடா இது, என எரிச்சலோடு சலித்து கொள்பவரே நம்மில் பலர்.

மிக குறைந்த எண்ணிக்கையில் உள்ளவர் மாத்திரமே, எப்படா ஆஃபீஸ் தொறக்கும் என்றோ, சே... எதுக்கு லீவெல்லாம் விடுறாங்க, எத்தனை வேலை பெண்டிங்ல இருக்கு என்றோ "டிங்கி டாங்கி ரப்பப்போ, சிங்கி சாங்கி ரப்பப்போ" என்று பாடுவார்கள். வேலைக்கு போறதெல்லாம் அவுட் ஆப் ஃபேஷன், யாருப்பா போவா, படு போரு என்று சொல்லிக்கொண்டு திரியும் "அன்எம்ப்ளாய்ட் ஆவுடையப்பாக்களையும், இர்ரெஸ்பான்ஸிபிள் இக்னிகூம்பிகளையும்" அப்பாலிக்கா பார்ப்போம்.

கல்விச் சான்றிதழ், இன்ன பிற சர்டிஃபிகேட்டுகள் எல்லாம் சீராக அடுக்கி, நம் தகவலை அடுத்தவர் சொன்ன ஃபார்மெட்டில் அடித்து சி.வி. என சீவி சிங்காரித்து பூவும் பொட்டும் வைத்து புதுப்பொண்ணு மாதிரி நம்ம இதயத்துல வைக்கோணும். வாண்டட் காலம், முழுக்க படித்து அட்ரஸை கட் அவுட் , விண்ணப்பம் தயாராக்கி, முன்னாளில் தபால் செய்ததை இன்று மின்னஞ்சல் செய்யோணும். அக்கம்பக்கத்தில் அவசரமாய் வேலைக்கு செல்பவரை, ஆச்சர்யமாய் ஆயாசமாய்.... ஏன் கொஞ்சம் பொறாமையோடு (காதில் புகைவர) பார்க்கும் என தவிர்க்க முடியாத வேலை தேடும் படலம். நம் எல்லோரையும் செதுக்கி விட்ட சிக்கல் பருவம் இதுதான்.

வேலை தேடுவதில் அடிப்படை கோளாறு ஒன்று உண்டு. நான் பி.எஸ்.சி.... என நாம் சொல்ல, அது இருக்கட்டும்யா நீ என்ன வேலை செய்வ என நிர்வாகம் கேட்க... புரியாத பாஷையில் நாம் பே பே...பெப்பெப்பே என்று நமக்கு தெரிந்த பாஷையில் சொல்ல, உடனே எதிர்முனையில் இருந்து வரும் பதில்தான் ‘sorry to inform you, you are not selected’. வேலை இல்லேன்னு சொன்னாலும், we shall consider you for a suitable opening in future என இங்கிதத்துக்காக சொன்னதை சங்கீதமாய் கேட்பது நம் சிறு பிள்ளைதனம். அவ்வ்வ்வ் என்று "வடிவேல்தனமான அழுகை" எந்த நிறுவனத்திலும், எந்த வேலையையும் நமக்கு வாங்கி கொடுக்காது...

பணியில் அமர அல்லது வேலை கிடைக்க என்ன வேண்டும். ஆங்கிலம் தெரியுமா! சரளமாய் பேச, சங்கீதமாய் எழுத என. சரி அது இல்லையா, எங்க ப்ராடெக்டை விக்க முடியுமா.... இல்லேன்னா, கஸ்டமர பார்த்து அவர கன்வின்ஸ் செய்ய முடியுமா.... சரி இல்லையா.... கணக்கு எழுதுவியா.... இல்ல..... என்னதான்யா பண்ணுவே என்று கேட்டு இவன் எனக்கு எந்த விதத்தில் உபயோகம் என கம்பெனி பார்க்கும்.

இருபது வருசம் மக்குரு போட்டு எக்ஸாம் எல்லாம் பாஸ் பண்ணி ஃபர்ஸ்ட் க்ளாஸ் வாங்கினது நமக்கு பெருமையா இருக்கும். வேலைக்கு ஆவுமா... ஆவாதா... யாருக்கு தெரியும்!!?? சரி பிரச்சனை புரியுது. தீர்வு என்ன: ரொம்ப சிம்பிள். வயனாடு வயக்காட்டில் வேட்டியை வரிந்து கட்டி வரப்பில் வலப்புறம் வலம் வரும் வஜ்ரகும்பன் சொல்றார். முன்னேரு போன வழி பின்னேரு போக வேண்டியதுதான.

ஒரு அஞ்சு வருசம் சீனியர், முன்னால நடந்த முன் ஏரை போய் பார்க்கணும். அவரு முன்னேற என்ன செய்தாரு. எங்க இருக்காரு. இப்போ என்ன செய்யுறாரு..... என்ன செஞ்சதுனால அவருக்கு வேலை கிடைச்சுது. இப்படி அவர பத்திய தகவல் திரட்டணும். அதே வழியை ஃபாலோ பண்ணனும்... இல்ல, என் வழி தனி வழின்னு சொல்லிட்டு, மோட்டுவளையை பார்த்துகிட்டே உட்கார்ந்துட்டு "மௌன மோகனரங்கமா" இருக்கணும்...

ஒண்ணுன்னு இல்ல ஒரு அஞ்சாறு சீனியர்கிட்ட கேட்டா, நமக்கு தோதான ஒரு முறை எப்படியும் கிடைக்கும். ஆனாலும் உஷார், நம்மை முடக்கும் ஒரு முட்டுக்கட்டை, அந்த நேரத்தில் குத்தாட்டம் போடும் கூச்சம் தான்.

வேலை இல்லாதது ஜன்ம சாபம் இல்லை. எல்லா மனிதனும் கஷ்டப்பட்டு சம்பாதித்ததுதான் வேலை வாய்ப்பு. எனவே, கேட்கும் உதவியை உரிமையாய் உண்மையாய் கேட்டால் நிச்சயம் தட்டிய கதவு அகலமாய் திறக்கும், வாய்ப்புகள் உங்களை அப்படியே விழுங்கும், உள்ளே அழைத்து போய் உங்களின் சிம்மாசனத்தில் அமர வைக்கும்.

“கஷ்டப்பட்டு உழைச்சு முன்னேற பாரு இஷ்டப்பட்டு எல்லாரும் பின்னால் வருவார்”

“உன் கையை நம்பி உயர்ந்திட பாரு உனக்கென எழுது ஒரு வரலாறு
உனக்குள்ள சக்தி இருக்கு அதை உசுப்பிட வழி பாரு”


அப்படியும் இல்லையா, கொஞ்சம் அழுத்தமா சொல்லணும்னா

“வேலை உன்னை தேடி வருமா வேலை தேடி விரைந்து போ”

இப்படி திரையில் சொல்லப்பட்ட அறிவுரைகளில் ஏதாவது ஒன்றை மனதில் ப்ளே செய்யலாம்.... உழைத்து முன்னேறியவரை முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ளலாம்.... உழைத்து வாழ்வில் பெருவெற்றியும், நிலையான ஒரு இடத்தை பெற்ற எந்த ஒருவரையும் நாம் பின்பற்றலாம்...

அவரு நம்ம கட்சி இல்ல என்றோ, நான் அவருக்கு ரசிகன் இல்லை என்று ஜகா ஜகன்னாதன் ஆக இல்லாமல், வளமான வாழ்வை பெறலாம்... வாழ்க்கையில் யார் சொல்பேச்சையும் கேட்காமல் ”சொல்பேச்சு கேளா சோகப்பன்” மாதிரி இருப்பதைவிட, வெற்றியடைந்த யாராவது ஒருவர் சொல்லும் பேச்சையாவது கேட்டு, அவர் சொன்ன நல்ல வழியை பின்பற்றினால் ”மகிழ்ச்சி மருதப்பன்” ஆகி நாம் வாழ்வு சிறக்கும்....

யக்காவ் ... ஏ டு இஸட்லேயே எந்த எழுத்துக்குக்கா எப்பவும் ஜலதோஷம் பிடிச்சிருக்கும் என ஃபுல் பிளேடு ஃப்ராங்கிளின் கேக்க, பிச்சுப்புடுவேன் ’பி’ன்னு சொன்னா. ஏ.சிக்கு நடுவுல இருக்காம்னு எத்தனை நாளாட சொல்லுவ, என அடிக்க போவார் நம்ம அக்கா, எகிறி ஓடுவார் நம்ம ஃப்ராங்கிளின்.

எப்பவோ கேட்ட அரத பழசு ஜோக் இது என கேட்டவுடன் நம் மனம் சலிக்கும். புதுசா எதாவது சொல்லு என தூண்டும். பழசு சரியில்ல புசுது கண்ணா புதுசுதான் சரி எனும் நினைப்பை நிக்க வைத்துவிட்டு அடிப்படைகளை அருகில் வைப்போம்.

ஆர்.கோபி / லாரன்ஸ்

சொல்வது என்னன்னா. வெட்கம் தவிர், வேகம் கொணர், வெற்றி நமதே. என தன்னம்பிக்கையுடன் சகஉலக மனிதனையும், நம்பிக்கையும் இணைத்து வெற்றி வாகை சூட முறசை ஓங்கி ஒலிக்க செய்வோம்.....

(ரோமானியர்கள் விமர்சையாய் கொண்டாடிய சூரியனின் திருவிழாவை உலகம் முழுதும் உள்ள கிருஸ்துவர்கள் ஏசுநாதர் பிறந்த நாளாக கொண்டாடுகிறார்கள்...

இந்த நன்னாளில் ஒளியை வணங்கி "கிருஸ்துமஸ் பண்டிகை"யை விமர்சையாக கொண்டாட தோழமை மற்றும் குடும்பத்தார்க்கு மனம் கனிந்த கிருஸ்துமஸ் வாழ்த்துக்கள்.....)

14 comments:

susi said...

வழக்கம்போல சூப்பருங்க..

உங்களுக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் நண்பர்களே.

ராமலக்ஷ்மி said...

நல்ல இடுகை கோபி. உங்களுக்கும் நண்பர்களுக்கும் என் கிறுஸ்துமஸ் வாழ்த்துக்கள்.

KALYANARAMAN RAGHAVAN said...

ரைமிங்கா பேர் வைக்க (பதிவில்) உங்களை அடிச்சுக்க ஆளே இல்லேங்கோ! அருமையான சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த பதிவு.

ரேகா ராகவன்.

R.Gopi said...

//susi said...
வழக்கம்போல சூப்பருங்க..

உங்களுக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் நண்பர்களே.//

*********

வழக்கம் போல், யூ த ஃபர்ஸ்ட் சுசி...

தங்களின் தொடர் வருகையும், உற்சாகப்படுத்துதலும் எங்களுக்கு மிகவும் சந்தோஷத்தை அளிக்கிறது...

தொடர்ந்து வாருங்கள்... பதிவுகளுக்கு ஆதரவு தாருங்கள்...

மிக்க நன்றி சுசி...

R.Gopi said...

//ராமலக்ஷ்மி said...
நல்ல இடுகை கோபி. உங்களுக்கும் நண்பர்களுக்கும் என் கிறுஸ்துமஸ் வாழ்த்துக்கள்.//

********

வாங்க ராமலஷ்மி... உங்களை போன்றோரின் தொடர் வருகையும், பாராட்டுமே எங்களை இன்னும் நிறைய, நல்ல பதிவுகள் எழுத தூண்டும்...

மிக்க நன்றி மேடம்...

R.Gopi said...

//KALYANARAMAN RAGHAVAN said...
ரைமிங்கா பேர் வைக்க (பதிவில்) உங்களை அடிச்சுக்க ஆளே இல்லேங்கோ! அருமையான சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த பதிவு.

ரேகா ராகவன்.//

********

வாங்கோ சார்... நமஸ்காரம்... ரொம்ப நாள் கழிச்சு வந்து இருக்கீங்க...

உங்கள் தொடர் வருகையும், ஆதரவும் எங்களுக்கு மிக முக்கியம்...

நன்றி ரேகா ராகவன் சார்...

sindhusubash said...

கிறிஸ்த்துமஸ் வாழ்த்துக்கள்!

எப்படி இத்தன விஷயங்களை யோசிக்கறீங்க..ஒவ்வொரு இடுகையும் ரெண்டு தடவையாவது படிச்சதான் புரியுது.

பலா பட்டறை said...

//சொல்வது என்னன்னா. வெட்கம் தவிர், வேகம் கொணர், வெற்றி நமதே. என தன்னம்பிக்கையுடன் சகஉலக மனிதனையும், நம்பிக்கையும் இணைத்து வெற்றி வாகை சூட முறசை ஓங்கி ஒலிக்க செய்வோம்..... //

மொத்த மேட்டரே இவ்ளோதாங்க.. பொறுமையா நடந்து கடைவீதில போய் வாங்குபோது நமக்கு தேவையானது எல்லாமும் கிடைக்கும்...சர்ருன்னு வண்டில போய் பாருங்க எவ்வளவோ தவற விட்டிருப்போம்.

தலைய (நம்ம தலைய ) கீழ பார்த்தாலே போதும் ஏகப்பட்ட புதையல் கிடைக்கும்... அண்ணாந்து மேலயே பார்த்தா சூன்யம்தான்... ! நல்ல பதிவு ஜமாயுங்க..:))

R.Gopi said...

//sindhusubash said...
கிறிஸ்த்துமஸ் வாழ்த்துக்கள்!

எப்படி இத்தன விஷயங்களை யோசிக்கறீங்க..ஒவ்வொரு இடுகையும் ரெண்டு தடவையாவது படிச்சதான் புரியுது.//

*********

வாங்க சிந்துசுபாஷ்...

தங்களின் தொடர் வருகை, கருத்து பகிர்வு ஆகியவை இந்த பதிவை சிறப்பிக்கிறது.. தொடர்ந்து வருகை தந்து கருத்து பகிருங்கள்....

R.Gopi said...

//பலா பட்டறை said...
//சொல்வது என்னன்னா. வெட்கம் தவிர், வேகம் கொணர், வெற்றி நமதே. என தன்னம்பிக்கையுடன் சகஉலக மனிதனையும், நம்பிக்கையும் இணைத்து வெற்றி வாகை சூட முறசை ஓங்கி ஒலிக்க செய்வோம்..... //

மொத்த மேட்டரே இவ்ளோதாங்க.. பொறுமையா நடந்து கடைவீதில போய் வாங்குபோது நமக்கு தேவையானது எல்லாமும் கிடைக்கும்...சர்ருன்னு வண்டில போய் பாருங்க எவ்வளவோ தவற விட்டிருப்போம்.

தலைய (நம்ம தலைய ) கீழ பார்த்தாலே போதும் ஏகப்பட்ட புதையல் கிடைக்கும்... அண்ணாந்து மேலயே பார்த்தா சூன்யம்தான்... ! நல்ல பதிவு ஜமாயுங்க..:))//

*********

வாங்க தலைவா...

நீங்கள் வருகை தந்து, பதிவை ஆழமாக படித்து, கருத்து பகிர்வது எங்களுக்கு பெரிய ஊக்கமளிக்கிறது...

நீங்கள் சொன்னது மிக சரி...

sreeja said...

அருமை.

//வெட்கம் தவிர், வேகம் கொணர், வெற்றி நமதே.// நிச்சயமாக.

இரண்டாயிரத்து 10 - அனைவரும்
இன்னல்கள் தீர்ந்து
நோயின்றி பல செல்வங்ளோடு
வாழ இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

கோபி, லாரன்ஸ் குடும்பத்தார் மற்றும் அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

R.Gopi said...

//sreeja said...
அருமை.

//வெட்கம் தவிர், வேகம் கொணர், வெற்றி நமதே.// நிச்சயமாக.

இரண்டாயிரத்து 10 - அனைவரும்
இன்னல்கள் தீர்ந்து
நோயின்றி பல செல்வங்ளோடு
வாழ இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

கோபி, லாரன்ஸ் குடும்பத்தார் மற்றும் அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.//

*********

வாங்க ஸ்ரீஜா அவர்களே...

நீங்கள் தொடருந்து வருகை தந்து, பதிவை படித்து கருத்து பகிர்வதற்கு எங்களின் மனமார்ந்த நன்றி...

அன்புடன் அருணா said...

நல்ல பதிவு...பகிர்வு!

R.Gopi said...

// அன்புடன் அருணா said...
நல்ல பதிவு...பகிர்வு!//

*********

வருகை தந்து, பதிவை படித்து, வாழ்த்தியதற்கு மிக்க நன்றி அருணா மேடம்...