வாழ்க்கை (பகுதி– 8)

மனுச உடம்புல நீளமானது குடல்தான், மூணடி மனுசனுக்கு கூட , குடல் மட்டும் 20 அடில சுருட்டி மடக்கி தொப்பைக்குள்ள பத்திரமா இருக்கு. கறி சாப்பிடாதீங்கன்னு ஒரு மேட்டரும் அதுக்கு ஒத்து ஊத குரங்கு உதாரணமும் சொல்லி அடி உதைக்கு தப்பிய போன பகுதி, முக்கியமான இன்னொரு நீளமான வாழ்வின் பகுதிக்கு தாவுகிறது.

எதப்பத்தி வத்தி வைக்கிறீங்க என கொட்டாவி கோவிந்தராஜ் கேக்கிறாரு. தூக்கத்தில் பாதி, ஏக்கத்தில் பாதி போனது போனதில் ஏது மீதம் என வாழ்க்கை பத்தி சொன்னாரே சினிமாவில, அதே மேட்டர் தான்.

ஒரு நாளைக்கு இருபத்தி நாலு மணி நேரம். அதுல மூன்றில் ஒரு பங்கு தூங்கணும், நான் தூங்க மாட்டேண்ணு அடம் பிடிச்சா, வேர வழியேயில்ல, அண்ணா/ அக்கா! உங்கள தூக்குறதுக்கு நாலு பேரு வேணும். அதனால நல்லா தூங்குங்க. ஆஹா... மாப்பு இதுவரைக்கு சொன்ன அட்வைஸ்லயே இதுதாங்க டாப்பு.

சோறு இல்லண்ணா கூட வண்டிய ஒட்டிறலாம், தூக்கம் இல்லன்னா ஒரு பத்து நாள்ல சாவு நிச்சயம். சங்கு நிச்சயம். அதுல கூட முதல் இரண்டு மூணு நாள்லயே பேதலிச்ச புத்தி சேது புல் மேக்கப்ல வந்து ஆக்ட் குடுக்க ஆரம்பிச்சுடும்.

அப்படியா, மெய்யாலுமா.

இது மட்டுமா.... பத்து நாள் தூங்கலேன்னா சங்கு என்பது ஒரு மேட்டர். காணாமப் போன எலும்ப தெரியுமா. குழந்தையா நாம பிறக்கிறப்போ எலும்பு மொத்தம் 300, (எலும்ப எண்ணிட்டாங்க !!!! ) ஆனா அதே நாம் இளம் பருவத்தில எண்ணினா மொத்தம் 206. டேய் சரியா எண்ணுங்கடான்னாக்கூட அதேதான். அதெப்படி 94 எலும்பு காணாம போச்சு என ஏங்கி ஏங்கி அழுகுறார் நம்ம டொம்பர்க்கா கோப்பெருந்தேவி.

வாழ்வு என்பது ஒரு தகவல் புதையல். ரகசியங்களின் கழஞ்சியம். நம்மைப் பற்றி சில தகவல்கள் தெரிவது நம்மை தெளிவாக்கும். அதன் மாற்றம் நமக்கு வாழ்வை புரிய வைக்கும். புடிக்க வைக்கும். நோக்கம் புரியும்.

சரி, எத்தனையோ விசயங்கள் இருந்தாலும், 1/3 தூக்கம் ரொம்ப முக்கியம்னுட்டீங்க, அதை பத்தி தெரிஞ்சுக்கலாமே என கியூரியாஸிட்டி கிருஷ்ணம்மா கேக்கிறாங்க.

வாய் நிறைச்சு ஒரு கொட்டாவி விட்டு, கண் கலங்க பார்வை நெறிக்கும் போது, நம்ம தெரிஞ்சுக்குறோம்... ஆஹா... தூங்க டைம் ஆச்சுடான்னு. அதுவே நம்மள்ல சில பேரு, படுக்கையில படுத்து லைட்ட அணைச்சுக்கிட்டு எப்படா தூங்கலாம், எப்படிரா தூங்கலாம் எனவும் நித்திரைய தொடங்கலாம்.

எது எப்படின்னாலும் தூக்கம் தொடங்கினதும் என்ன நடக்குது படிப்படியா ; என படம் பார்த்து, பாடம் படிப்போமே.

மூளை தன் ஆட்ட்த்த கொஞ்சம் குறைச்சுக்கிட்டு ஒரு போக்கு காமிச்சு, நான் தூங்கப் போறேண்டான்னு ஒரு சவுண்டும் ஒரு திரவமும் சமிக்கையாக் அனுப்பிச்சு விடுது. உடம்பு பூராத்துக்கும். இதெல்லாம் உண்மைன்னு நம்பிக்கிட்டு நரம்பு மண்டலத்தின் அநேக டிப்பார்ட்மெண்ட் டீயூட்டி ஒவர் என சொல்லி விடுவதால் நம்ம முழிச்சுக்கிட்டு இருக்கிற வாழ்க்கை எனும் கடைய மூடிடுறாங்க...

முழுச்சுக்கிட்டு இருக்கப்போ 14 ஹெர்ட்ஸ் தொடங்கி 21 ஹெர்ட்ஸ் வரைக்கும் வேலை செய்யுற மூளை தொபுக்கடீர்ன்னு கீழ குதிச்சு 7 ஹெர்ட்ஸ் தொடங்கி 0 ஹெர்ட்ஸ் வரைக்கும் கும்மியடிக்க போவுது தான் இந்த ஸ்லீப்பிங் சிக்னல். (உபரித் தகவல்: 7 முதல் 14 வரை – தூக்கமும் இல்லாமல் முழிப்பும் இல்லாத நிலையே தியானம். சராசரி மனுசனுக்கு ரொம்ப கஷ்டம் இந்த தியான பிரிக்குவென்ஸில பிலிம் காட்டுறதுக்கு- ஒண்ணு முழிப்பு இல்லயா சரசரன்னு கீழே இறங்கி தூக்கம். )

எல்லாரையும் தூங்க வைச்சுட்டு, கடைய சாத்துனத்துக்கு அப்புறந்தேன் அண்ணாச்சி வேலய தொடங்குவார். யாரு நம்ம மூளை அண்ணாச்சி. முழிச்சுக்கிட்டு இருந்த நேரம் மாதிரி இல்லாம டபுள் ஸ்பீடுல வேலை செய்வார். பாருங்களேன் கடய மூடினவுடன கடைக்காரர் கணக்கு பாக்கிற மாதிரி.

அண்ணாச்சிக்கு இரண்டு வேலை. மனம் ரிப்பேர், பின்னர் உடல் ரிப்பேர்.

முதல்ல நினைவு பகுதி வந்து போஸ்ட் மாஸ்டர் வேலை பாப்பார்.

மூளையின் ஒரு சிறு பகுதி அவசரத்துக்கு குறிச்சு வைக்கன்னு நோட் பேட் மாதிரி இருக்கு. காலைல எந்திரிச்சதுல இருந்து படுக்கிறது வரைக்கும் நாமளும் காட்சிகளா, தகவல்களா சில விசயத்த குறிச்சு வைச்சுருவோம்.

இத ஒவ்வொரு குறிப்பா பார்த்து, நமக்கு தேவையா, தேவை இல்லையா என தரம் பிரிக்கும். அப்பாலக்கா தேவைன்னா, அதோட தொடர்புடைய மற்ற நினைவோட ஒரு எலக்ட்ரிக்கல் கனெக்‌ஷன் கொடுத்துட்டு, பியூஸ் கட்டை ராமசாமி மாதிரி டெம்பரவரிய தூக்கி போட்டுரும்.

கத்திரிக்கா வாங்கும் போது கடைக்காரன் பார்வை சரியில்ல. இது ஒரு தகவல். இது தேவைன்னு நம்ம வேல்யூ சிஸ்ட்த்தில பிரோக்ராம் பண்ணியிருந்தா, ஏற்கனவே கடை, ஷாப்பிங்குன்னு, பிலாசபின்னு சேர்த்து கோர்த்து வைச்சிருக்கிற இடத்தில இதயும் போட்டு வைச்சுறும். வைச்சுட்டு டெம்பரவரி மெம்மரில இருந்து இத டிலிட் பண்ணிரும்.

இப்ப தெரியுதா ஏன்னு, தூங்காத மூணே நாள்ல சேது.... புல் மேக்கப்... சமாச்சாரம். இன்னொரு சுவாரசியமான தகவல் பார்ப்போமே...

இங்க போஸ்ட் மாஸ்டர் போல சார்ட்டிங் நடக்கிற அதே வேளையில், இந்த விவரம் எதுவும் தெரியாம, மூளையோட ஒரு பகுதியில ஒரு டிபார்ட்மெண்ட் இருக்கு. இது வேலை என்ன்ன்னா, டீடெய்ல்லா கோனார் நோட்ஸ் போடுறது. (Logical side)

இப்படி வைச்சுக்குவோமே, கண் பார்த்த சமாச்சாரத்த கலரா, வடிவமா தகவலா நரம்புல அனுப்பும். வந்த தகவல அலசி ஆராய்ந்து, இது என்னடா என நினைவுகளிடம் ஹிண்ட் கேட்டு தீர்மானிச்சு, ’யப்பா... இது தாம்பா என அர்த்தம் சொல்லுவது இதன் வேலை. 24 ஹவர்ஸும் இதுக்கு இதுதான் வேலை.

அந்த டிப்பார்ட்மெண்ட், இந்த போஸ்ட் மாஸ்டர் சார்ட்டிங் வேலை எதுவும் தெரியாம, அப்புராணியா அவசரம் அவசரமா நோட்ஸ் போடும். இந்த கண்றாவி தேன் கனவு. எதுவுமே நடக்காம, எலக்டிரிக்கல் பல்ஸ் வைச்சுக்கிட்டு ஸ்கிரின் ப்ளே எழுதி டைரக்‌ஷனும் பண்ணி, ரீலிஸ் பண்ணிரும் நம்ம கோனார் டிப்பார்ட்மெண்ட்.

நம்மாளு டீரிமீங் டிங்குடாங்கு கூட, ஏதோ உண்மைதான் போல இருக்கு, நான் கோடீஸ்வரனாயிட்டேன். டீலா..... நோ டீலா என பீலா விட்டுக்கிட்டு இருப்பார்.

நீண்ட நினைவே நித்திரையில் கனவு, அல்லது அடங்காத ஆழ்மனதின் வெளிப்பாடுதான் கனவு என்றோ சொன்ன மேட்டர் இது தான்.

கனவை பத்தி புரிஞ்சுக்கிட்டா டென்ஷன் குறையும். அட போங்கப்பா தூக்கு கயிறு விழுந்தாலும் சரி, பண மூட்டை விழுந்தாலும் சரி கனவுன்னா என்ன்ன்னு எங்களுக்கு தெரியும் என எகத்தாளமாய் நாம் சொல்லலாம். இன்னும் ஒரு படி மேல போயி நோட் பேட்ல குறிக்கும் போதே சில மாறுதல் செஞ்சா இன்னும் சூப்பர்.

கார்ல ஏறி, காய்கறி கடை போவோம், பாஸ் அங்க காய் வித்திக்கிட்டு இருப்பார், கத்திரிக்கா பக்கத்தில லேப்டாப் என அர்த்தமே இல்லாம, கனவுல நடக்குறது இதுனால தான்.

இன்றைய நிகழ்வு, நேற்றைய நினைவு இரண்டும் கலந்து இருக்கிறது, கோடிட்ட இட்த்த நிரப்பும் கோனார் நோட்ஸ் டிப்பார்ட்மெண்ட் விளக்கத்தில, பில் இன் த பிளாங்க்ஸ் பீலீங்தேன் கனவு.

தூக்கத்தில இரண்டு நிலை. ஒண்ணு இந்த போஸ்ட் மாஸ்டர் வேலை பாக்கிற ரெம் ஸ்டேஜ் (rapid Eye movement) இன்னொன்னு நான் ரெம் ( Non Rapid eye movement ). தூங்கிறவன் பக்கத்தில நின்னு உத்து பார்த்தா லேசா திறந்து இருக்கிற இமைக்கு உள்ள கண் கதகளி ஆடுறது தெரியும். பாத்துட்டு, தொந்தரவு செய்யாம, ஓடி வந்திடுறது நல்லது.

நல்ல தூக்கத்துக்கு ஒரு சிறு அட்வைஸ். படுத்தவுடன தூங்காம, முழிச்சு இருந்துக்கிட்டு காலைல இருந்து என்ன நடந்த்துன்னு நாம நினைச்சு பார்த்தா, போஸ்ட் மாஸ்டருக்கு வேலை சுலபம். அட்டே பரவாயில்லயே எல்லாம் அடுக்கி நீட்டா இருக்கே என சந்தோசமாய் போஸ்ட் மாஸ்டர் வேலைய தொடங்குவார். இல்லயா முதல்ல கீளீன் பண்ணிட்டு, அல்லாத்தயும் அடுக்கி வைச்சுட்டு அப்புறந்தேன் தபால் பாக்கிற வேலைம்பார்.

அடுத்த ஸ்டேஷ், இந்த நான் ரெம் ஸ்டேஷ்ல தான் உடல் ரிப்பேர் நடக்கும். மனசு வேலைய முடிச்சுப்புட்டு, பாடிய பதம் பாக்கிறது தூக்கத்தின் மறு கடமை. அங்க பாருடா மூக்கு துவாரத்தில ஒரு சிராய்ப்பு, அத டிங்கர் பண்ணுடா, இங்க பாருடா, நுரையிரல்ல ரத்தம் இல்ல, அங்க ரெண்டு பயல போய் சுரண்ட சொல்லுடா என மேஸ்திரி வேலை பார்ப்பது இரண்டாவது நிலை.

நல்லபடியா சர்வீஸ் முடிஞ்சு, போலாம் ரைட்ஸ் என டெலிவர் பண்ணிட்டா, காலைல நம்ம முழிக்கும் போது சுறு சுறுன்னு எந்திருச்சுருவோம். இல்லை... !!!! இன்னும் ஒரு பைவ் மினிட்ஸ் என சிணுங்குவது இந்த ரெண்டு வேலைல ஏதோ கொஞ்சம் பாக்கி இருக்குன்னு தான் அர்த்தம்.

மக்களே, குடி மக்களே தூங்கும் மக்களே... உறங்குபவனை எழுப்புவோம் என சிலர் முழங்குகிறார்களே, எழுந்தவனை உறக்குவோம் என முறசரைந்தால் எப்படி..... (போர்த்தி விட்டு... குட் நைட்....)

தூக்கம் ஒரு வரப் பிரசாதம். துக்கம், கவலை, சோர்வு, பிணி என எல்லாம் நீக்கும் ஒரு டிரிட்மெண்ட் செஷன். நல்ல தூக்கம், நமது அடுத்த நாளை வளமாக்கும்.

ஆர்.கோபி / லாரன்ஸ்
சத்தம் செய்யாமல், மெல்லிய முறசரைந்து விட்டு.... குறட்டை ஒலியின் சுரத்தில் குதித்து ஒடுவோமா....

22 comments:

சுசி said...

ரொம்ப நல்ல பதிவு.

வழக்கம்போல சிரிப்போட படிச்சேன்.

படுக்காளி said...

வாங்க !!!! சுசி மேடம்,

நன்றி. தங்கள் தொடர் வருகைக்கும் கருத்துக்கும்.

சிரிப்போட படிச்சீங்கன்னு பின்னூட்டத்தில படிச்சது சந்தோசம்.

தூக்கம் பற்றிய புதிய கோணம் பார்த்து, நல்லா தூங்கி பிரஷ் ஆக இருப்பீங்கன்னும் நம்புறோம்.

கிளியனூர் இஸ்மத் said...

தூக்கத்தைப்பற்றி தெளிவா சொல்லி இருக்கீங்க நல்ல ஆய்வு....சொல்ற விதம் சூப்பர்....கலக்குங்க....வாழ்த்துக்கள்.

படுக்காளி said...

/// கிளியனூர் இஸ்மத் said...
தூக்கத்தைப்பற்றி தெளிவா சொல்லி இருக்கீங்க நல்ல ஆய்வு சொல்ற விதம் சூப்பர். கலக்குங்க.வாழ்த்துக்கள்.////

வருக தங்கள் வரவும், கருத்தும், தரும் ஊக்கமும் பரவசப்படுத்துகிறது.


‘ நல்ல பொழுதை எல்லாம் தூங்கி
கழித்தவர்கள் நாட்டை கெடுத்ததுடன் தாமும் கெட்டார்,

விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்து கொண்டார், குறட்டை விட்டோரெல்லாம் கோட்டை விட்டார்’

என பயங்காட்டுவதோ, அறிவுரை எல்லாம் சொல்லுவதோ இல்லாமல், சில தகவல்கள் சொல்லி ஆக்க பூர்வமாய் சிந்தை விதைப்பதே நல்லது என்பது தாழ்மையான எண்ணம்.

தங்கள் கருத்து பார்க்கும் போது நாம் சரியான பாதையில் போவதாய் படுகிறது. நன்றி....

பிரியமுடன்...வசந்த் said...

ரொம்ப அழகா நகைச்சுவை நல்லா எழுதீயிருக்கீங்க பாஸ்...!

தொடரட்டும் சிறப்பான இடுகைகள்

sreeja said...

அற்புதமான தூக்கம்.

//கொட்டாவி கோவிந்தராஜ்
டொம்பர்க்கா கோப்பெருந்தேவி
கியூரியாஸிட்டி கிருஷ்ணம்மா
பியூஸ் கட்டை ராமசாமி//

அருமை.

//படுத்தவுடன தூங்காம, முழிச்சு இருந்துக்கிட்டு காலைல இருந்து என்ன நடந்த்துன்னு நாம நினைச்சு பார்த்தா, போஸ்ட் மாஸ்டருக்கு வேலை சுலபம்.// - கண்டிப்பா இத இனிமே கடைபிடிக்க வேண்டியது தான்.

ஒரு சந்தேகம், தூங்குவதை போல நடிப்பவர்கள் மூளையும் இப்படித்தானா? கேட்டு சொல்லுங்கள்.
(சீரியசாக எடுக்க வேண்டாம், விளையாட்டாக கேட்டேன்).

//இன்னும் ஒரு பைவ் மினிட்ஸ் என சிணுங்குவது இந்த ரெண்டு வேலைல ஏதோ கொஞ்சம் பாக்கி இருக்குன்னு தான் அர்த்தம்.// இது அடிக்கடி நடக்கிறது - இனி இதற்கு தனி கவனம் செலுத்துகிறேன்.

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

பதிவு ரொம்ப நல்லா இருக்கு.....பாஸ்
(லேட்டா பின்னூட்டம் போடறேன்னு பாக்காதீங்க..........கொஞ்சம் தூங்கிட்டேன்.......ஓகே தானே?)

பலா பட்டறை said...

//தூக்கம் ஒரு வரப் பிரசாதம். துக்கம், கவலை, சோர்வு, பிணி என எல்லாம் நீக்கும் ஒரு டிரிட்மெண்ட் செஷன். நல்ல தூக்கம், நமது அடுத்த நாளை வளமாக்கும்.//

ரொம்ப சரி நான் கூட இது பற்றி பதிவிட்டுள்ளேன்... SAP/CEO ரஞ்சன் தாஸ் என்பவரின் மரணம் தூக்கமின்மையால் வந்ததென்பது ONE OF THE REASON.

சரியான தூக்கத்தையும்.. சோம்பேறித்தனமான தூக்கத்திற்கும் நிரம்ப வித்யாசம் உண்டு... உங்கள் பதிவு அளவான ஆரோக்கியமான தூக்கத்தை பற்றியது.. GOOD

cdhurai said...

எனக்கு பிடித்த தூக்கத்தை பற்றி சொல்லி என்னை ஆழ்ந்த நித்திரையில்…அமைதியில் ஆழத்திய உங்களை… sorry….எனக்கு தூக்கம் வருது… comment லாம் அப்புறம் பார்த்துக்க்லாம்…..ஆங்… கொர்… கொர்… கொர்… கொர்…

ஒரு கொசுறு தகவல் : தூங்கி கொண்டெ இருப்பவர்களின் உடல் செயல்பாடு குறைவாகவும்… மனதின் செயல்பாடு அதிகாமாகவும் இருக்கும்…

செல்லத்துரை

R.Gopi said...

தொடர் வருகை தந்து, படித்து, விரிவாக பின்னூட்டமிட்டு கொண்டிருக்கும் :

ஸ்ரீஜா
பிரியமுடன் வசந்த்
பெயர் சொல்ல விருப்பமில்லை
பலா பட்டறை
செல்லதுரை

அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி...

Chitra said...

அழைப்புக்கு நன்றி, கோபி சார். தூக்கத்தை பற்றிய தகவல்களை, உங்கள் நல்ல நகைச்சுவை உணர்வுடன் interesting ஆ சொல்லிய விதம், நல்லா இருக்குங்க. follow பண்றேன், இந்த பகுதியை. வாழ்த்துக்கள்.

R.Gopi said...

//Chitra said...
அழைப்புக்கு நன்றி, கோபி சார். தூக்கத்தை பற்றிய தகவல்களை, உங்கள் நல்ல நகைச்சுவை உணர்வுடன் interesting ஆ சொல்லிய விதம், நல்லா இருக்குங்க. follow பண்றேன், இந்த பகுதியை. வாழ்த்துக்கள்.//

*********

வாங்க சித்ரா... என் அழைப்பை ஏற்று வருகை தந்தமைக்கு நன்றி...

தலைவர் பிறந்த நாள் வாழ்த்து படிச்சுட்டு சொல்லுங்க...

sindhusubash said...

இத்தன விஷயம் தூக்கத்திலே இருக்கா?

//படுத்தவுடன தூங்காம, முழிச்சு இருந்துக்கிட்டு காலைல இருந்து என்ன நடந்த்துன்னு நாம நினைச்சு பார்த்தா, போஸ்ட் மாஸ்டருக்கு வேலை சுலபம்.//

அடடா அது தெரியாம தான் தினமும் தூங்கியிருக்கேனா...இன்னையிலிருந்துதொடங்கியிர வேண்டியது தான்.

நல்ல தகவல்களை நல்ல நகைச்சுவையோட சொல்லியிருக்கீங்க.

Jaleela said...

//வாழ்வு என்பது ஒரு தகவல் புதையல். ரகசியங்களின் கழஞ்சியம். நம்மைப் பற்றி சில தகவல்கள் தெரிவது நம்மை தெளிவாக்கும். அதன் மாற்றம் நமக்கு வாழ்வை புரிய வைக்கும். புடிக்க வைக்கும். நோக்கம் புரியும்//

இந்த வரிகள் அனைத்தும் அருமை, சரியாக சொன்னீர்கள்,


தூக்கத்துக்கும் ஒரு விரிவான நகைச்சுவை விளக்கமா? ரொம்ப அருமையான பதிவு கோபி,

R.Gopi said...

//sindhusubash said...
இத்தன விஷயம் தூக்கத்திலே இருக்கா?

//படுத்தவுடன தூங்காம, முழிச்சு இருந்துக்கிட்டு காலைல இருந்து என்ன நடந்த்துன்னு நாம நினைச்சு பார்த்தா, போஸ்ட் மாஸ்டருக்கு வேலை சுலபம்.//

அடடா அது தெரியாம தான் தினமும் தூங்கியிருக்கேனா...இன்னையிலிருந்துதொடங்கியிர வேண்டியது தான்.

நல்ல தகவல்களை நல்ல நகைச்சுவையோட சொல்லியிருக்கீங்க.//

********

வாங்க சிந்துசுபாஷ்... ரொம்ப நாள் ஆச்சு உங்கள பார்த்து... தங்கள் மற்றும் குடும்பத்தார் நலம் அறிய ஆவல்...

பதிவை தொடர்ந்து படித்து, கருத்து பகிர்ந்தமைக்கு நன்றி...

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு எழுதிய பிறந்த நாள் வாழ்த்தை இங்கே சென்று பாருங்கள்...

www.jokkiri.blogspot.com

R.Gopi said...

//Jaleela said...
//வாழ்வு என்பது ஒரு தகவல் புதையல். ரகசியங்களின் கழஞ்சியம். நம்மைப் பற்றி சில தகவல்கள் தெரிவது நம்மை தெளிவாக்கும். அதன் மாற்றம் நமக்கு வாழ்வை புரிய வைக்கும். புடிக்க வைக்கும். நோக்கம் புரியும்//

இந்த வரிகள் அனைத்தும் அருமை, சரியாக சொன்னீர்கள்,

தூக்கத்துக்கும் ஒரு விரிவான நகைச்சுவை விளக்கமா? ரொம்ப அருமையான பதிவு கோபி,//

********

ஜலீலா மேடம்... உங்களை போன்ற தோழமைகள் தொடர்ந்து வருகை தந்து, பதிவை படித்து, கருத்து பகிர்வதே எங்களை மேலும் நன்றாக எழுத தூண்டுகிறது...

நன்றி மேடம்....

ஈ ரா said...

//இது மட்டுமா.... பத்து நாள் தூங்கலேன்னா சங்கு என்பது ஒரு மேட்டர். காணாமப் போன எலும்ப தெரியுமா. குழந்தையா நாம பிறக்கிறப்போ எலும்பு மொத்தம் 300, (எலும்ப எண்ணிட்டாங்க !!!! ) ஆனா அதே நாம் இளம் பருவத்தில எண்ணினா மொத்தம் 206. டேய் சரியா எண்ணுங்கடான்னாக்கூட அதேதான். அதெப்படி 94 எலும்பு காணாம போச்சு என ஏங்கி ஏங்கி அழுகுறார் நம்ம டொம்பர்க்கா கோப்பெருந்தேவி.//

இது என்னான்னும் கொஞ்சம் சொல்லுங்க ஜி...

//முழுச்சுக்கிட்டு இருக்கப்போ 14 ஹெர்ட்ஸ் தொடங்கி 21 ஹெர்ட்ஸ் வரைக்கும் வேலை செய்யுற மூளை தொபுக்கடீர்ன்னு கீழ குதிச்சு 7 ஹெர்ட்ஸ் தொடங்கி 0 ஹெர்ட்ஸ் வரைக்கும் கும்மியடிக்க போவுது தான் இந்த ஸ்லீப்பிங் சிக்னல். (உபரித் தகவல்: 7 முதல் 14 வரை – தூக்கமும் இல்லாமல் முழிப்பும் இல்லாத நிலையே தியானம். சராசரி மனுசனுக்கு ரொம்ப கஷ்டம் இந்த தியான பிரிக்குவென்ஸில பிலிம் காட்டுறதுக்கு- ஒண்ணு முழிப்பு இல்லயா சரசரன்னு கீழே இறங்கி தூக்கம். )//

//கத்திரிக்கா வாங்கும் போது கடைக்காரன் பார்வை சரியில்ல. இது ஒரு தகவல். இது தேவைன்னு நம்ம வேல்யூ சிஸ்ட்த்தில பிரோக்ராம் பண்ணியிருந்தா, ஏற்கனவே கடை, ஷாப்பிங்குன்னு, பிலாசபின்னு சேர்த்து கோர்த்து வைச்சிருக்கிற இடத்தில இதயும் போட்டு வைச்சுறும். வைச்சுட்டு டெம்பரவரி மெம்மரில இருந்து இத டிலிட் பண்ணிரும்.//\

//அந்த டிப்பார்ட்மெண்ட், இந்த போஸ்ட் மாஸ்டர் சார்ட்டிங் வேலை எதுவும் தெரியாம, அப்புராணியா அவசரம் அவசரமா நோட்ஸ் போடும். இந்த கண்றாவி தேன் கனவு. எதுவுமே நடக்காம, எலக்டிரிக்கல் பல்ஸ் வைச்சுக்கிட்டு ஸ்கிரின் ப்ளே எழுதி டைரக்‌ஷனும் பண்ணி, ரீலிஸ் பண்ணிரும் நம்ம கோனார் டிப்பார்ட்மெண்ட்.//

இந்த முறை ... மேட்டர் ஸ்ட்ராங் தலைவா ரெண்டு மூணு தரம் படித்து வியந்தேன்

தமிழரசி said...

பெரிய பதிவு என்ற சலிப்பே தோன்றதவாறு நகைச்சுவையோடு சொல்ல வந்த விஷயத்தை நயம்பட சொல்லும் இந்த பதிவு அருமை....
வளரட்டும் இந்த வாழ்கை பகுதி உங்கள் இருவரின் நட்பைப் போல்...

R.Gopi said...

// ஈ ரா said...

இந்த முறை ... மேட்டர் ஸ்ட்ராங் தலைவா ரெண்டு மூணு தரம் படித்து வியந்தேன்//

*******

தோழமை ஈ.ரா.அவர்களே... தங்களின் தொடர் வருகை, பதிவை ஆழ்ந்து படித்து பின்னூட்டமிடுதல் எல்லாம் எங்களை மிகவும் ஊக்குவிக்கிறது...

மிக்க நன்றி... அடுத்த பகுதி வியாழன் அல்லது வெள்ளி அன்று பதிவேற்றம் செய்யப்படும்...

R.Gopi said...

//தமிழரசி said...
பெரிய பதிவு என்ற சலிப்பே தோன்றதவாறு நகைச்சுவையோடு சொல்ல வந்த விஷயத்தை நயம்பட சொல்லும் இந்த பதிவு அருமை....
வளரட்டும் இந்த வாழ்கை பகுதி உங்கள் இருவரின் நட்பைப் போல்...//

*******

வாங்க தமிழரசி...

எங்களின் பலமே நல்ல தோழமை பெற்றது தான்...

அதுவே பதிவை சிறப்பாக்குகிறது... தங்களின், பாராட்டும், கருத்தும் எங்களின் எழுத்தை மேம்படுத்துகிறது...

உங்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி.

RAMYA said...

பெரிய இடுகையா இருக்கேன்னு படிக்குறவங்க ஏமாந்துதான் போவாங்க
அவ்வளவு நகைச்சுவையோட எழுதி இருக்கீங்க:)


//
வாழ்வு என்பது ஒரு தகவல் புதையல். ரகசியங்களின் கழஞ்சியம். நம்மைப் பற்றி சில தகவல்கள் தெரிவது நம்மை தெளிவாக்கும். அதன் மாற்றம் நமக்கு வாழ்வை புரிய வைக்கும். புடிக்க வைக்கும். நோக்கம் புரியும்
//


இந்த வரிகளை நான் மிகவும் ரசிச்சுப் படிச்சேன்... அருமையான கருத்து....
தூக்கத்துக் கூட நீங்க கொடுத்திருக்கும் விளக்கமும் அருமை... :)

R.Gopi said...

//RAMYA said...
பெரிய இடுகையா இருக்கேன்னு படிக்குறவங்க ஏமாந்துதான் போவாங்க
அவ்வளவு நகைச்சுவையோட எழுதி இருக்கீங்க:)


//
வாழ்வு என்பது ஒரு தகவல் புதையல். ரகசியங்களின் கழஞ்சியம். நம்மைப் பற்றி சில தகவல்கள் தெரிவது நம்மை தெளிவாக்கும். அதன் மாற்றம் நமக்கு வாழ்வை புரிய வைக்கும். புடிக்க வைக்கும். நோக்கம் புரியும்
//


இந்த வரிகளை நான் மிகவும் ரசிச்சுப் படிச்சேன்... அருமையான கருத்து....
தூக்கத்துக் கூட நீங்க கொடுத்திருக்கும் விளக்கமும் அருமை... :)//

**********

பெரிய பதிவை பொறுமையாய் படித்து, பாராட்டிய உங்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றி ரம்யா...