வாழ்க்கை (பகுதி– 7)

பொறுப்பு பற்றி பேசிய முந்தைய அத்தியாயம் தன் விழுதுகளை பரவவிட்டு, திருமணத்தின் இன்னொரு பகுதிக்கு செல்கிறது. மோகம் முப்பது நாள், ஆசை அறுபது நாள் அப்புறம் எல்லாம் அப்பிட்டுதேன்.... என சில பூச்சாண்டிகள் பயங்காட்டுகிற பருவம் எல்லாம் கடந்து, கால் வைத்த்தும் சிக்கிக் கொள்ளும் சாலையில் பயணிக்கிறது.

நமக்கே நமக்கே நமக்காய் கிடைக்கும் எதிர்பால் வாழ்க்கை துணை, துணையின் உறவுகள், இனிய இல்லறம், திடிரென கிடைக்கும் சமூக அங்கீகாரம் அல்லது மரியாதை எல்லாம், நம் காலரை நாமே தூக்கி விட துணை நிற்கும். மொட்டப் பயலா இருந்த முருகேசன, வாப்பா வீட்டுல கூட்டிட்டு வரலயா என சமூகம் மரியாதை தர துவங்கும்.

திருமணம் முடிந்து ஒரு மழலையும் இணைந்ததும்தான் குடும்ப பொறுப்புகள் பெரும் சுமையாக சும்மாடு தூக்க வைக்கும்... சிலருக்கு இந்த சுமை பயம்தான் பிள்ளைப் பேரை கொஞ்சம் சுணக்கி விடுகிறது.
இந்த மேட்டரத்தான்... எதுனாலும் ப்ளான் பண்ணி பண்ணனும்; நாங்க பிளானிங்ல இருக்கோம் என சொல்லவும் வைக்கிறது. என்னடா இது எத்தனை சம்பாதிச்சாலும் பத்தல, எவ்வளவு பிளான் பண்ணினாலும் பிச்சிக்கிட்டு போகுதே என நம்மிடமே பிலிம் காட்டும்.
பிலிம் பேரு நொந்தசாமி. தலைமுறை தலைமுறையாய் பட்டையை கிளப்பும் காவியம்.

பிறந்த குழந்தையை... பெத்தா மட்டும் போதுமா. நன்றாக, நல்லவனாக வளர்க்க வேண்டாமா, சிறந்த கல்வி அளிக்க வேண்டாமா... முடிந்த வரை, அடுத்தவர் ஏதும் அவதூறு கூறாத வகையில் ஆளாக்க வேண்டும்... எனும் நம் நினைப்பில் சுமையின் அழுத்தம் இன்னும் அதிகரிக்கிறது...

குழந்தையின் அறியாத மனதின் ஆசை, எண்ணங்களை பூர்த்தி செய்ய முடியலயே என மன கவலை...புத்தாடைகள்..கம்பியுட்டர் கேம்ஸ்... விண்ணை தொடும் விலைவாசியில், பிள்ளைகளின் ஆரம்ப கல்வி சேர்க்கைக்கான, நுழைவு விண்ணப்பம் வாங்கவே நுரை தள்ளுது, முதல் நாள் இரவே பள்ளிகளின் வாயிலில் தவமிருக்கும் நிலையிருக்கிறது... இன்னும் சில பெற்றோர்கள் பள்ளி சென்று பரீட்சை எழுதும் பவுசு கூட உள்ளது... இதை கேட்டுட்டு நம்ம மக்கப் மெகேபூப் சொன்னார் சோக்கா, ‘படிக்கிறது ரொம்ப கஷ்டங்க.... அதுவும் இந்த வயசில. ...முடியல... அழதுடுவேன்...ம்..ம்...
பிள்ளைகளின் படிப்பு, அன்றாட வாழ்வை வழி நடத்த பணம், எதிர்பாராத மருத்துவ செலவு. இதெல்லாம் போதாதுன்னு, வீட்டுக்கு வர்ர விருந்தினர்கள் காபி குடிச்சுட்டு கால் மேல கால் போட்டு சொல்லிருவாங்க (அவங்க கால் மேல அவங்க கால் போட்டு) மீயூச்சுவல் பண்ட், ஸ்டாக்ஸ், பிஸினஸ், இன்வெஸ்ட்மென்ஸ், பாரின் டூர்ன்னு

சினிமா சினிமா டிராமான்னு கூட்டி போயிட்டு ஹோட்டல்ல டின்னர் டாடி..ங்கும் போது சாப்பிடுறதுக்கு முன்னாலேயே வயத்த கலக்குது நம்ம சிக்கன சிங்ஸ்வானுக்கு. இதுல எங்கங்க சேவிங்ஸ். வரவு பத்தணா, செலவு எட்டணா , சேமிப்பு இரண்டணா என அடுத்தவனை பற்றிக் கவலைப்படாத திட மனது வெல்லும். அண்ணன் வாங்கினான் காரு, பர்சு படா டாரு எனும் நிலை வேணுமா.

வாழ்வு ஒன்றும் இன்றைய காலகட்டத்தில் (ஏன் முந்தைய நாளைய காலத்தில் கூட) ஒரு மலர் படுக்கை அல்ல... முள் நிறைந்த ஒரு கானகம்... குத்தி கிளிக்க முட்களும், விழுங்கி முழுங்க முதலைகளுமாய். ஆக‌வே, நாம் எடுத்து வைக்கும் ஒரு அடியும், நம்மை சேத‌ப்ப‌டுத்தாத‌ வ‌கையில் கவனமாக வைக்க வேண்டும்

பிள்ளை பிறந்தவுடன், அந்த குழந்தையை வளர்ப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டியிருப்பதால், மனைவியின் கவனம், கவனிப்பு கணவனின் மேல் முன்பு போல் இருப்பதில்லை.. எப்போதும் எல்லா விஷயங்களையும் பார்த்து, பார்த்து செய்த மனைவி, தாய் ஆனவுடன், இப்போது, அந்த கவனத்தை முழுதுமாக பிள்ளைகளின் மேலாக செலுத்த துவங்குகிறாள்...

தப்பில்லீங்களே.... ஆண் பார்க்கத்தான் ஒங்கு தாங்காய் கடா மீசையெல்லாம் வைத்து இருக்கான். உள்ளுக்குள்ள இன்னும் பச்சப் பிள்ளைதான் என்பது சிலருக்கு நல்லாவே தெரியும். இப்போ சொன்ன அந்த சிலரில் நம்மாளு கடா மார்க் பயில்வான் கூட உண்டு....

அண்ணனுக்கு ஒரு சலிப்பு... நம்மை நாள் முழுதும் குழந்தை மாதிரி கவனித்த தலைவியின் கவனம் இப்போது குழந்தையின் மேலே உள்ளது என்பதை இவரால் ஜீரணிக்க முடியவில்லை... முடிவு.. மனைவியின் மேல் எரிந்து விழுதல்... எதை கேட்டாலும், நிதானமாக, சாதாரணமாக பதிலளிக்க இயலவில்லை...

போதாக் குறைக்கு குடும்பத்தில் புதிய வரவால், செலவும் ஜிஞ்சினிக்கா ஆடுது... வருவாயில் அதுபோன்றதொரு பெரிய மாற்றம் வரவில்லை... தலைவி குடும்ப செலவுக்கு சிறிது அதிகமாக பணம் எதிர்பார்க்க, தலைவர் அதை கொடுப்பதற்காக‌, முன்பினும் அதிக உழைப்பை இட வேண்டியிருக்கிறது...

பட்ட இட்த்திலேயே படும் எனும் பழமொழி தெரியுமோ... விதிக்கு. அதுவரை வளரும் அல்லது ஒங்கும் உடல் உறுப்புகள் சுணங்கத் துவங்குவது மத்திம வயதில். இது போதும்டா உனக்கு என்பதாய் நம் உடல் உறுப்புகள் ஓபி அடிக்க ஆரம்பித்து விடும். இப்படி முதுமை உடல் நிலையில் மாற்றம் செய்ய ஆரம்பிக்கும் பொழுதில், முன்பினும் அதிக உழைப்பை இடும் சூழம் வரும்போது, காணும் யாவும் எதுவும் எரிச்சலாய் தோன்றுகிறது... உஷாராய் நாமும் இருந்து நம் துணையையும் புரிந்தால் பூரிப்பு. வாலி சொன்னது போல் ஊக்குவித்தால் யாரும் தேக்கு விற்பார். (சட்டையில் குத்தும் ஊக்கு அல்ல ஊக்கம்)

வாழ்க்கைய பத்தி முள்காடு, முதல இருக்குன்னு பீதிய கிளப்பி விடுறது நல்லதா. பூத்துக் குலுங்கும் நந்தவனம் அல்லவா வாழ்க்கை. சரி, அப்படியே இல்லேன்னா கூட அத நந்தவனம் ஆக்குவது எப்படி என தோட்டக்கார தொம்மா குருஸ் கேக்க, அதுக்கு அறிவுரை ஆந்தக் கண்ணன் ஒரு நல்ல சீக்கிய அறிவுரைய அடிப்படையா வைச்சு இப்படி சொல்றார்.

மனிதனுக்கு உடல் வலிமை போல், மன ஆரோக்கியம் ரொம்ப அவசியம். அது கஷ்டம் இல்ல, ரெம்ப ஈசி, மிஞ்சி போனா ஒரு வாரத்தில சரி பண்ணிடலாம்னு தொடங்கும் போது!!! சீக்கிரம் சொல்லு நான் உடனே செஞ்சுடுறேன் என தோணுது.

மனம் என்பது நம் எண்ணங்களின் பிம்பமே. கண்ணாடி போல் இருப்பதை காட்டும். தங்கத்தட்டாய் மனதை நினைத்து கொண்டால், மலர் வைத்தால் மணம் தரும், மலம் வைத்தால்...... அருவா அக்கிரச்சாமிய கூட யேயப்பா உன் மீசை நல்லா இருக்கேன்னு நினைச்சா நமக்கு நல்லது. சாய்ஸ் நம்மகிட்ட, அன்னப்பறவையா... அலார்ட்டா விளாண்டா அற்புதம்.

சரி புரியுது. சரி செய்யுறது எப்படி. ஒரு நாளை தொடங்கும் முன் இந்த நாள சூப்பர் நாளாக்க என்ன செய்யலாம். ஒரு அஞ்சு விசயம் சொல்லுன்னு கேட்டு நம்மகிட்ட இருந்து பதில் வாங்கிக்கலாம்.. அண்ணாமலைக்கு காவடி எடுத்துட்டு அப்படியே அமெரிக்கா போய் ஓபாமா பாத்துட்டு வர்ர வழியில.... என நீண்ட திட்டம் எல்லாம் போடாம, செஞ்சு முடிக்கிற மாதிரி சின்ன சின்ன, முடியும் பிளான் செய்யலாம். அண்ணனுக்கு ஒரு மெயில், தம்பிக்கு ஒரு போன் என.

சரி இரண்டாவது என் குடும்பத்தை மகிழ்விக்க ஏதாவது மூன்று வழிகள்.
அவ்வளவுதான். மனசில ஆச்சா... அச்சா. (தேசிய ஒருமைப்பாடு. மூன்று மொழிகள் கொண்ட வாக்கியம்)
5 ம் 3 ம் சேர்ந்தா அறியா பொண்ணும் கறி சமைப்பா என பழமொழி சொல்வது இதுதானோ.
இந்த பத்தி எழுதும் போதே பயம் வருகிறது. அடி வாங்க போவது நிச்சயம், அதுவும் மாமிசம் சாப்பிடும் முனியாண்டி என்பதால் கூடுதல் பயம்.

அறிவியல் கூற்றுப் படி, மாமிசம் சாப்பிடும் குடல் அமைப்பு சிறிசு, அதான் சிங்கம் சிங்கிள் டைம் தான் சாப்பிடும். தினமும் ஒருக்கா சாப்பிட்டா போதுமானது. தாவர பழ வகைகளுக்கு குடல் நீளமாகவும் பெரிசாகவும் இருக்கோணும். அதான் குரங்கு நாள் பூரா சாப்பிடுது. (சொன்ன உதாரணத்துல கோளாறாச்சோ... சாரி ..)

மனிதர்களுக்கும் நீளமான, பெரிய குடல் அமைப்பு.
மாமிசம் தப்பில்ல, வெஜிடேரியன் நல்லது. அதுவும் நாப்பது வயசுக்கு மேல் அக்பர் பாதுஷா போல், என் வயிறை பிணங்கள் பிதைக்கும் ஈடுகாடாய் ஆக்க மாட்டேன் என சொல்லி மாமிசம் குறைத்தால்/ தவிர்த்தால் டாக்டர் பீஸ் மிச்சம். சிக்கனுக்கு லெக் பீஸும் தப்பும்.

ஆர்.கோபி / லாரன்ஸ்
அடி உதைக்கு முன்னால..... முரசை ஒங்கி அறைந்து விட்டு ஒடிடலாமா...

18 comments:

தமிழரசி said...

அனுபவத்தை பின்னியிருக்கீங்க கோபி...எதார்த்தமா உண்மையா நல்லா திடமா இன்றைய நடப்பையெல்லாம் நகைச்சுவை கூடலோடு சொல்லியிருக்கீங்க.விடுமுறையிலும் பதிவா...அசத்துங்க அப்பு...

லாரன்ஸ் said...

வாங்க தமிழரசி,

வருகைக்கும் கருத்துக்கும் சிரம் தாழ்த்திய நன்றி.

நண்பர் கோபி விடுமுறையில் சென்றதால் இந்த பிராக்ஸி.

அவர் ஸ்பீடு நமக்கு வரல. எப்போ வருவாருன்னு காத்துக்கிட்டு இருக்கேன்.

//// தமிழரசி said... எதார்த்தமா உண்மையா நல்லா திடமா இன்றைய நடப்பையெல்லாம் நகைச்சுவை கூடலோடு ////

அதெப்படி எட்டு வார்த்தையில விட்டத்த பிடிச்சுட்டீங்க.

புத்தக வடிவில போடும் போது இதையே கேப்ஷனா வைக்கலாமே. சூப்பர்.

Shakthiprabha said...

நல்ல பதிவு கோபி.

Planning செய்வதற்கு இன்னொரு காரணமும் தற்காலத்தில் உண்டு. அதுதாங்க career (டிபன் கேரியர் அல்ல) ... பிள்ளைபெற்று கவனிப்பதும் careerம் ஆரம்ப காலத்தில் inversely proportional ஆகிவிடுகிறது.

படுக்காளி said...

/// Shakthiprabha said...
career (டிபன் கேரியர் அல்ல) ... பிள்ளைபெற்று கவனிப்பதும் careerம் ஆரம்ப காலத்தில் inversely proportional ஆகிவிடுகிறது. ////

மிக சிக்கலான வாழ்வியல் தளத்தை சொல்கிறீர்கள். நகைச்சுவை மின்னினாலும், அதையும் தாண்டி ஆழமான வேர் அதன் பரிமாணம் தெரிகிறது.

பெருகி வரும் பொருளாதாரத் தேவை காரணமாய், ஆச்சியும் ஐயரும் சேர்ந்து வேலை செய்ய வேண்டி இருக்கிறது. இந்நிலையில் மகப்பேறு திட்டமிடலை என்ன செய்வது.

சிலருக்கு கூட்டுக் குடும்பம் உதவிக் கரம் நீட்டும். பெற்றோர் பெரியோர் இருப்பு ஒரு வாராய் ஒரு சிலருக்கு பிரச்சனை தீர்க்கும்.

பணி அமர்த்திய கூலிக் காரரோ, கீரிச்சோ கிச்... கிச்... தான்.

தீர்வு சொல்ல எவ்வளவோ மண்டையை உடைத்தாலும் எதுவும் அடைபடலையே... தோழமை யாராவது பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்....

பலா பட்டறை said...

உங்களின் பதிவுக்கு பின்னூட்டமிட முயன்றபோது எனக்கு ஒரு கவிதையே கிடைத்தது.. (என் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறேன் ) நல்ல பதிவு வாழ்த்துக்கள்..

சுசி said...

//அடி உதைக்கு முன்னால..... முரசை ஒங்கி அறைந்து விட்டு ஒடிடலாமா... //

சூப்பர். பிரமாதமா எழுதி இருக்கீங்க.

நகைச்சுவை கருத்துகளை புரிந்து கொள்ள ஒரு ப்ளஸ் பாயின்ட்.

படுக்காளி said...

பின்னூடமாய் கவிதை. வார்த்தையில் மட்டும் அல்லாது அர்த்ததிலும் - அம்சம், ஆழம், இதம், ஈர்ப்பு, உண்மை, ஊக்கம், எளிமை, ஏக்கம், ஐ! நல்லா இருக்கே, ஒப்புயர்வில்லாதது, ஓங்கு, அஃவையார் ஆத்திசுடிய டிரை பண்ணேன்.... ஆத்தி....

//// பலா பட்டறை said...

எதை இழந்தால் எதை பெறலாம்...

மகிழ்ச்சி ; துக்கத்தை
மனைவி; தனிமையை
தனிமை ; காதலியை
காதலி ; உங்களை
நீங்கள் ; சுயம்
இயற்கை ; செயற்கை
பணம் ; சுதந்திரத்தை
குழந்தைகள் ; கோபத்தை
கோபம் ; குணத்தை
படிப்பு ; மறதியை
போதை ; நிதானம்
சொர்க்கம் ; உயிர்
நரகம் ; எதுவுமே
ஒன்று ; ஒன்றை

விரிவான கவிதைக்கு
http://palaapattarai.blogspot.com/

கருத்தில் எண்ணத்தில் என நாமனைவ்ரும் இணைவது மிகுந்த மகிழ்ச்சி.

நன்றி.... தொடர்ந்து இணைந்திருப்போம்....

படுக்காளி said...

/// சுசி said...
நகைச்சுவை கருத்துகளை புரிந்து கொள்ள ஒரு ப்ளஸ் பாயின்ட்.////

நன்றி. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

எங்களுக்கு முதலில் யோசனை. ஆழமான கருத்தை நகைச்சுவையாய் சொல்லும் போது கருத்து நீர்த்து போகுமோ என கவலை கொண்டோம்...

பின்னர், பேசிய போது, எத்தனையோ வாழ்க்கை தத்துவ படைப்புக்கள், சீரியஸாய் சொல்கிறது. ஒரே வித்தியாசம் இது வரை வாழ்க்கை தத்துவம் சொன்னவர் எல்லாம் மகான்கள், அறிஞர்கள்.

நாம் டகால்டி, தத்துக்குறி, கை நாட்டுக்காரன்.எனவே நம்ம லெவல்ல பேசுவோம்.

மலையை பெயர்க்க வேண்டாம் - மலரை விதைப்போமே எனும் சிந்தனையின் வெளிப்பாடே...

இன்னும் ஒரு முக்கிய விடயம். சில இடங்களில் நகைச்சுவை சில ஆக்க பூர்வ உணர்ச்சிக்கும் உதவியது.

உதாரணம் : வாழ்க்கை நம்மிடமே பிலிம் காட்டும், நொந்தசாமி....
தலைமுறை தலைமுறையாய் பிச்சிக்கிட்டு ஒடும் காவியம்....

மேற்கூரிய வார்த்தை கோர்வையில் இயலாமை பல் இளிக்காமல், நக்கல் செய்கிற்தே....வள்ளுவன் வாக்குப்படி துன்பம் வரும் வேளையில் சிரிக்கிறதே

தொடர்ந்து வாருங்கள், கருத்தும் ஆலோசனையும் தாருங்கள்.

கோமதி அரசு said...

//உஷாராய் நாமும் இருந்து நம் துணையையும் புரிந்தால் பூரிப்பு.
வாலி சொன்னது போல் ஊக்குவித்தால்
யாரும் தேக்கு விற்பார்.//

ஒருவருக்கு ஒருவர் புரிந்து கொள்ளுதல் மிக அவசியம்.

சிறுவர் முதல் பெரியவர் வரை ஊக்குவித்தலை தான் விரும்புவர்.

சரியாகத் தான் சொல்லியிருக்கிறீர்கள்.
வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள்.

படுக்காளி said...

/// கோமதி அரசு said...
ஒருவருக்கு ஒருவர் புரிந்து கொள்ளுதல் மிக அவசியம். ஊக்குவித்தலை சிறுவர் முதல் பெரியவர் வரை விரும்புவர்.////

மிகச் சரியான வாக்கு. நெத்தியடி போல் சாராம்சமான இரு வரிகளை சொல்லி பின்னூட்டத்தை பிரமாதப் படுத்தி விட்டீர்கள்.

வந்து கருத்து தந்தமைக்கு நன்றி.

Vijay said...

Hi friend this is vijay here.. ur doing a really good job.. can we exchange links..

sreeja said...

வாழ்க்கை துணை : வாழ்க்கையில் துணைதானே தவிர வாழ்க்கையின் ஏதோ ஒரு துறைக்கு மட்டும் துணையல்ல.

என்னதான் குடும்பத்தில் பல குழப்பங்களும் தடுமாற்றங்களும் இருந்தாலும் ஊக்குவிக்கும் ஒரு துணை இருந்தால் தெய்வமே கூட இருப்பதுபோல் தான்.

திருமணத்திற்கு முன் வாழும் வாழ்க்கையைவிட அதற்கு பின் வரும் வாழ்க்கையிலேயே அதிக அர்த்தங்களும் சந்தோஷங்களும் இருப்பதாக தோன்றுகிறது. வாழ்க்கை முழுமை அடைவதே திருமணத்திற்கு பின்பு தான் என்பது என் கருத்து.

பலரது வாழ்க்கயில் நடக்கும் அனுபவங்களை கோர்வையாக்கி அழகுற சொல்லும் பாங்கு அருமை.

பாராட்டுக்கள்.

ஈ ரா said...

//அதான் குரங்கு நாள் பூரா சாப்பிடுது. (சொன்ன உதாரணத்துல கோளாறாச்சோ... சாரி ..) //

மிகவும் ரசித்தேன்...
//
பிள்ளைகளின் படிப்பு, அன்றாட வாழ்வை வழி நடத்த பணம், எதிர்பாராத மருத்துவ செலவு. இதெல்லாம் போதாதுன்னு, வீட்டுக்கு வர்ர விருந்தினர்கள் காபி குடிச்சுட்டு கால் மேல கால் போட்டு சொல்லிருவாங்க (அவங்க கால் மேல அவங்க கால் போட்டு) மீயூச்சுவல் பண்ட், ஸ்டாக்ஸ், பிஸினஸ், இன்வெஸ்ட்மென்ஸ், பாரின் டூர்ன்னு

சினிமா சினிமா டிராமான்னு கூட்டி போயிட்டு ஹோட்டல்ல டின்னர் டாடி..ங்கும் போது சாப்பிடுறதுக்கு முன்னாலேயே வயத்த கலக்குது நம்ம சிக்கன சிங்ஸ்வானுக்கு. இதுல எங்கங்க சேவிங்ஸ். வரவு பத்தணா, செலவு எட்டணா , சேமிப்பு இரண்டணா என அடுத்தவனை பற்றிக் கவலைப்படாத திட மனது வெல்லும். அண்ணன் வாங்கினான் காரு, பர்சு படா டாரு எனும் நிலை வேணுமா.///

இன்னும் பொருளாதார ரீதியில் மிகவும் கஷ்டப்படும் வாழ்க்கையைப் பற்றியும் கொஞ்சம் எழுதுங்களேன் லாரன்ஸ் அண்ட் கோபி

படுக்காளி said...

/// Vijay said...
Hi friend .. can we exchange links.. ///

தங்கள் பெயரின் அர்த்தம் உங்கள் வாழ்க்கையிலும் (நம் தொடரின் தலைப்பிலும்) பெற இனிய வாழ்த்துக்கள்.

முறு முறுப்பான நல்ல திரைத்தகவல்களை கொண்டிருக்கிறது உங்கள் வலை மனை.

வாழ்த்துக்கள்.

தொடர் வருகை தாருங்கள். நன்றி.

படுக்காளி said...

//// sreeja said...
வாழ்க்கை துணை : வாழ்க்கையில் துணைதானே தவிர வாழ்க்கையின் ஏதோ ஒரு துறைக்கு மட்டும் துணையல்ல. ////

மிக ஆழமான கருத்து. நேர்மையான அதிரடி சிந்தனை எனவும் சொல்லுவோம்.

///ஊக்குவிக்கும் ஒரு துணை இருந்தால் தெய்வமே கூட இருப்பதுபோல் தான். ////

இதை விட, இறைவிட மேல் ஒரு நிலை உண்டா. ஊக்குவித்தலின் அவசியத்தை விளக்க இதிலும் ஒரு வாக்கியம் உண்டா. நம் துணையிடம் மட்டும் இதை சொன்னால், நீ இறை என சொன்னால் அவ்வளவுதான், வாழ்க்கை பூரா வசந்தம் தானே.

//// திருமணத்திற்கு முன் வாழும் வாழ்க்கையைவிட அதற்கு பின் வரும் வாழ்க்கையிலேயே அதிக அர்த்தங்களும் சந்தோஷங்களும்

வாழ்க்கை முழுமை அடைவதே திருமணத்திற்கு பின்பு தான் ////

உண்மை.

என்றாலும் வாஜ்பாய், மற்றும் சில ஆன்மிக நண்பர்கள் ஒத்துக்கொள்வார்க்ளோ என ஐயம் இருக்கு.

படுக்காளி said...

//// ஈ ரா said...
//சொன்ன குரங்கு உதாரணத்துல கோளாறாச்சோ... சாரி ..) //

மிகவும் ரசித்தேன்.../////

எழுதும் போதே சில பகுதிகள் நமக்கு பிடிக்கும்.

ஈ.ரா. அவர்கள் எப்போதுமே எங்களுக்கு பிடித்த அதே பகுதியை சுட்டி பின்னூட்டம் இடுவது மிகுந்த ஆச்சர்யம்.

அதெப்படி நம் எண்ணங்கள் இப்படி இணைகின்றன்.

// இன்னும் பொருளாதார ரீதியில் மிகவும் கஷ்டப்படும் வாழ்க்கையைப் பற்றியும் கொஞ்சம் எழுதுங்களேன் லாரன்ஸ் அண்ட் கோபி ///


மிக ஆழமான ஒரு விடயத்தை முன்னிறுத்துகிறீர்கள்.

ஒரு உதவி/ வேண்டுகோள். தங்களுக்கு சிரமம் இல்லை என்றால், இதுபத்தி ஒரிறு பத்திகள் எழுதி தந்தால், நம் தொடரில் இணைத்து விடலாமே.

கிளியனூர் இஸ்மத் said...

வாழ்க்கை தொடர் ஒரு மெகா சீரியல் மாதிரி போகுது....சீரியஸ்சா வாழ்க்கை இருக்குதேன்னு எழுதுறதயாவது காமிடியா எழுதி படிக்கிறவங்கள சிரிக்க வச்சிருக்கீங்க....உங்கள் கருத்தின் நடை பிடிச்சிருக்கு அதேபோல் எழுத்தின் நடையும்...நம்ம அன்னம்(அன்ன நடை) மாதிரி.

அனுபவங்களும் அறிவுரைகளும் வாழைப்பழத்துல ஊசி ஏற்றுவதைப்போல் சொல்லவேண்டிய இடத்துல சும்மா நச்சுன்னு (விஷமில்லைங்க)சொல்லிருக்கீங்க.

ஒரு பொந்துல ரெண்டு பாம்புமாதிரி...ஒரு வலையில இரண்டுபேர் கலாயிககுறீங்க....எழுதுறது யாரு லாரன்ஸா அல்லது கோபியா?....எப்பூடி.....
ஏழு தொடரையும் படிச்சிட்டேன் உங்களின் எட்டாவது (எட்டும்ங்க....தொடர தொடர்ந்து படிச்சதுனால உங்க பழக்கதோசம் எனக்கும் வந்துபுடுச்சிங்க)தொடரை ஆர்வத்துடன் எதிர்ப்பார்க்கிறேன்.வாழ்த்துக்கள்.

படுக்காளி said...

//// கிளியனூர் இஸ்மத் said...
வாழ்க்கை தொடர் ஒரு மெகா சீரியல் மாதிரி போகுது....////

வாங்க நண்பர் இஸ்மத்,

லேசா ஒரு பயம் இருந்துச்சு. நல்ல வாழ்க்கைய பத்தி ஏன் இப்படி கோணங்கித்தனம் செய்யுறீங்கன்னு... சொல்லுவீங்களோன்னு... அப்பாடா, நல்லா இருக்குன்னு சொன்னதுல மனசு லேசாச்சு.

/// காமிடியா எழுதி படிக்கிறவங்கள சிரிக்க வச்சிருக்கீங்க....நம்ம அன்னம்(அன்ன நடை) மாதிரி.///

மெ வை மி ஆக்கி சூப்பர். சுசி, அவர்களுக்கு பின்னூட்டத்தில் சொன்ன பதில் ஏன் இப்படி நகைச்சுவைய தளமாய் தேர்ந்தெடுத்தோம் என எங்கள் எண்ணத்தை பிரதிபலிக்கும்.

//// அனுபவங்களும் அறிவுரைகளும் வாழைப்பழத்துல ஊசி ஏற்றுவதைப்போல் சொல்லவேண்டிய இடத்துல சும்மா நச்சுன்னு (விஷமில்லைங்க)சொல்லிருக்கீங்க.////

மலையை பெயர்ப்பதில்லை, மலரை விதைப்பதாவது நிச்சயம் இந்த தொடரின் நோக்கம். தங்களின் வார்த்தையில் நம் தொடர் அதன் நோக்கம் தொட்டது என தெரிகிறது. மிக்க நன்றி.

/// ஒரு பொந்துல ரெண்டு பாம்புமாதிரி...ஒரு வலையில இரண்டுபேர் கலாயிககுறீங்க....எழுதுறது யாரு லாரன்ஸா அல்லது கோபியா?....எப்பூடி.....////

ஆஹா!!! எலி, பாம்பு என இணைத்து , பின்னூட்டத்த பின்னீட்டீங்க.....

எங்களுக்கே ஆச்சர்யம், எண்ணங்களும், வார்த்தையும் அப்படி இணைகிறது.

யாராவது எழுதி, அதில் அடுத்தவர் எடிட் செய்து திருப்பி அனுப்பி, இப்படியே ஒரு நாலைந்து முறையில் ஒரு பகுதி ரெடி. நல்ல புரிதலும், பரஸ்பர மரியாதையிலும் கை கோர்த்து, நம் தமிழ் நிற்கிறது.

/// ஏழு தொடரையும் படிச்சிட்டேன் உங்களின் எட்டாவது (எட்டும்ங்க....தொடர தொடர்ந்து படிச்சதுனால உங்க பழக்கதோசம் எனக்கும் வந்துபுடுச்சிங்க)தொடரை ஆர்வத்துடன் எதிர்ப்பார்க்கிறேன்.வாழ்த்துக்கள். ////

நண்பர் ஒருவர் தொலைபேசியில் கேட்டார், என்ன எட்டாவது ரெடியா என. ஹூம்... ஏறக்குறைய நாளை பதிவேற்றம் செய்து விடலாம்.

என்ன மேட்டரெல்லாம் எழுதியிருக்கீங்க, என்றதற்கு... ஒண்ணே ஒண்ணு!!! ஒரே மேட்டர் தான். போர்வைய இழுத்திப் போர்த்து தூங்குறத பத்தி என்றேன்....

நே!!!! என விழித்தார்....

நாளை தெரிஞ்சுடும்டீ உன் பவுசு என கோபத்தில் போனை வைத்து விட்டார்.

ஆழமாய் படித்து விரிவான பின்னூட்டம் இட்டு, ஊக்குவித்தமைக்கு
மிகுந்த நன்றி...

தொடர் வருகை தாருங்கள்...