வாழ்க்கை (ப‌குதி‍ - 6)

சரி... இப்போ மறுபடி யூ டர்ண் எடுத்து, திருமண மேட்டருக்கு வருவோம்.

எடக்கு மடக்கு ”ஏக்நாத்”, தற்செயலாய் அடுத்தாத்து ”அலட்டல் அம்புஜம் மாமி”யை சந்தித்தார்.
அம்புஜம் மாமி கேட்டார்... ஏண்டா... தங்கச்சிய டெல்லியில கட்டிக் கொடுத்தியே, நல்லா இருக்காளா?.
ஏக்நாத் சொன்னார்....ஆமா மாமி, மாப்பிள்ளை கூட சொக்க தங்கம் (விஜயகாந்த் அல்ல..), ரெண்டு பேரும் ரொம்ப நல்லா இருக்காங்க.
அதெல்லாம் இருக்கட்டுண்டா, விசேஷம் ஏதாவது உண்டா?.
கேள்வியின் அடியில் பொதிந்து உள்ள விஷயத்தை உணர்ந்து லேசான எரிச்சல். ஆயினும் வெளியில் காட்டவில்லை. எடக்கு மடக்கு காரர் ஆயிற்றே.
ஆங்... நேத்து தான், அவங்க ஆபிஸ்ல பெரிய விஷேசம். டின்னர், பார்ட்டின்னு பின்னி பெடல் எடுத்துட்டாங்கன்னார்.
அட அது இல்லடா, அபிஷ்டு... தெரிஞ்சுண்டே சொல்றியா... இல்ல, வேணும்னு என்ன கிண்டல் பண்றியா... வீட்டுல விசேஷம் உண்டான்னு கேட்டேன்...ம்ம்ம்... அதான்... புரிஞ்சுதா?
ஓஹோ... நீங்க அத கேக்குறீங்களா, இருக்கே. நல்லா பச்சையா, பெயிண்ட் அடிச்சு, வீடு இப்போ பளபளன்னு இருக்குது...தூள் கெளப்பிட்டாங்க.
அட போடா அசமஞ்சம்... உனக்கு எந்த விவரமுமே இல்ல, நான் வர்றேன் என அவர் நகர, எனக்கா தெரியல, என மனதினுள் சிரித்தபடி இவனும் நகர்ந்தான்.
பிள்ளைப் பேறு என்ன நம் கையில் மட்டுமா உள்ளது. தாமதம் சிலரிடம் மாதங்களாகவும், சிலரிடம் வருடங்களாகவும் அல்லவா பூச்சாண்டி காட்டும். அதற்காக நாம் இறையிடம் இறைஞ்ச வேண்டுமல்லவா?!! மழலை செல்வம் என்பது ‌தவமிருந்து கிடைக்கும் வரமல்லவா!!

கல்யாணம் முடிஞ்சா உண்டாயிட்டியா, ஏன் குண்டாகல – சந்தோசமா இல்லையா என அடுத்த வீட்டு அந்தரங்கத்தை அலசி ஆராய ஓராயிரம் "அந்தரங்க காரியதரிசிகள்” உண்டு. இவிய்ங்க சிங்கிளா இல்ல, ஒரு பெரிய டெர்ரர் குரூப்பா சேர்ந்து அலையுவாய்ங்க... இவர்கள் தரும் புற அழுத்தத்தின் நிழல் கூட படாத தூரத்தில் கணவன் மனைவி அன்யோன்யமாய் இருக்க வேண்டிய அவசியம் உண்டு.

பிள்ளை பிறப்பின் தாமதத்தால் வடிக்கப்படும் கண்ணீரின் வெப்பம் நமக்கு தெரியும். வீட்டு விஷேசங்களிலும் சபையிலும் அதிர்ஷ்டம் கெட்டவள் என்ற அமில பார்வைக்கு தப்பி முடங்கிக் கிடக்கும் மனைவி, கை பிசைந்து நிற்கும் கணவன் என்ற உணர்வை இந்த கூட்டம் என்று தான் உணருமோ?
புருஷனாவது பரவாயில்ல, இந்த மாமியார் நாத்தனார் டெர்ரர் தான் தாங்க முடியல. குடும்பத்துக்கு வந்த மருமகளை குத்துவோமா, வெட்டுவோமா, போட்டு தாக்குவோமா என்றே பார்க்கிறார்கள், வேற வழி இல்லாம தான் தலையணை மந்திரம், தனி குடித்தனம்னு யோசிக்க வேண்டி இருக்கு. இதுக்கு எதாவது தீர்வு இருக்கா?.

உண்மை. மாமியார் அவர்களே.... நீங்களும் நேற்றைய மருமகள் தானே, வந்தவள் உங்கள் மகள் போல் அல்லவா என அவரிடமும், சொன்னா சொல்லிட்டு போறாங்க உங்க அம்மா மாதிரி நினைச்சுக்கோ என இவரிடமும் எத்தனை நீளத்தில் சொன்னாலும் இது தீராத பஞ்சாயத்து (என்ன...சொம்பும், ஆலமரமும் மட்டும் இல்லை...). காலம் காலமாய் கச்சை கட்டிக் கொண்டு நிற்கிறது. சண்டை, வன்மம் என கொலை வரை நீண்டு கொறவளை பிடிக்கிறதே. தீர்வு காண அதன் ஆணி வேரான பிரச்சனை புரிதல் நல்லது.

இதை விளக்க ஒரு குட்டி கதை.

கோபு, பாபு அபூர்வ சகோதரர்கள் (புத்தம் புதிய காப்பி). இவிய்ங்க பிரதர்ஸ் இல்லடா பிரண்ட்ஸ் மாதிரி என ஊரார் சிலாகிப்பார்கள. மூத்தவன் கோபு கல்யாணம் முடிந்த மறு நாள், புது மாப்பிள்ளை அண்ணனை பார்க்க சிங்கத்தின் குகைக்கு சென்றான்.
கோபுவின் மாமனார் வீட்டில் விழுந்து விழுந்து உபசரித்து காஃபி, பலகாரம் எல்லாம் கொடுத்தார்கள். அண்ணனை மட்டும் காணவில்லை. சாப்பிட வாங்க என்ற போது, அண்ணன் வரட்டுமே என்ற பதிலுக்கு புன்னகையை பரிசளித்தார்கள்.

வர லேட்டாகும் மத்தியான சாப்பாடே இப்பதான் 4 மணிக்கு சாப்பிட்டுட்டு ரூமுக்கு போனாங்க. பாபுக்கு புரியவில்லை. தேவுடு காத்து 10 மணி சுமாருக்கு கதவு திறக்க கோபு மனைவியுடன் வந்தான்.

வாடா பாபு, சாப்பிட்டியா. இவனிடம் பேசினாலும் அண்ணனின் கண்ணும் கருத்தும் இன்னும் புதுப் பெண்ணையே சுற்றி வந்தது. அண்ணனும் நோக்க, அண்ணியும் நோக்க, அவர்தம் பார்வை தவிர்த்து, தம்பி தன் பாக்கெட்டை நோக்க, உள்ளே இருந்த புது "நோக்கியா” இவனை நோக்கியது..

சாப்பிட அமர்ந்ததும் குனிந்து ரகசியமாய் மனைவியிடம் ஏதோ சொல்ல அவள் வெட்கி தலை குனிந்தாள். என்ன என்று அப்பாவியாய் பாபு கேட்க, அவர்கள் உரையாடலில் உள்ளே வர முயற்சிக்க, ஒன்றுமில்லை, இது வேற..... பாபுவுக்கு இந்த பதில் ”ரெம்ப புதுசு அண்ணா புதுசு”.

சாப்பிட்டு முடித்ததும், சரி நீ மேல ரூம்ல படுத்துக்கோ என சொல்லி விட்டு நகர முற்பட்டவனை, இல்ல நான் வீட்டுக்கு போறேன் என வெளியே வந்தான் பாபு.

உலகம் இன்று மிகவும் புதியதாய் இருந்தது. கோபுவே உலகம், வாழ்வு, வாழ்வின் ஆதாரம், ரகசியம், பொருளாதாரம், ரசனை என இருந்த இத்தனை காலம் இனி இல்லை. அவனோடு மகிழ்ந்திருக்க, உறவாட ஒரு புது ஜீவன். இனி நான் இல்லை. புறக்கணிப்பு புதிராகுதே. நான் என்ன செய்ய?.

இது தானே முறை. மனைவியை விடுத்து என்னோடு இணக்கமாயிரு என நான் நினைக்க முடியுமா. அது பாவம், துரோகம். இல்லை அவன் வாழ்வில் நான் இனி இல்லை. இரு அடி பின் நகர்ந்து அவனோடு நான் வாழ்வில் பயணிக்க வேண்டும். தெளிவு பிறந்தது.

நண்பர்களே, சகோதரனுக்கு நேர்ந்த இந்த மன ஓட்டம் புரிந்து இருப்பீர்கள்.
பெற்று, பாலூட்டி, வளர்த்த தாய் விலகி ஒரு அடி பின் நகர்ந்து அவனோடு பயணிக்க வேண்டும். முடியுமா. மிக கடினம். சரி பிரச்சனை புரிகிறது, தீர்வு என்ன.

இந்த போரில், அல்லது நாடகத்தில் மூன்று முக்கிய கதா பாத்திரங்கள். மனைவி, மாமியார் மற்றும் கணவன். யாராவது ஒருவர் இந்த ஆழம் புரிந்தால் போதுமானது, பூகம்பம் இல்லாது லேசான, சர / “குருவி” வெடியோடு சமாளிக்கலாம்.

குடும்பத்தலைவன், தலைவி என ரேஷன் கார்டில் பெயர் பெற்றால் மட்டும் போதுமா. ஒரு "சாமான்யனா" ரேஷன் கடை க்யூவில போய் ஐந்தாவது ஆளாய் நின்னு சர்க்கரை வாங்கினா ஆச்சா.. பின்னே...அட.. தலைவன் ஆக வேண்டாமா.
இயேசுபிரான் மற்றும் கிருபானந்த வாரியார் சொல்வது போல், தலைவன் என்பவன் தன் தொண்டர்களின் முதன்மை வேலைக்காரன். தலைமைப் பதவி என்பது சொகுசான பஞ்சு தொப்பி அல்ல, அது பொறுப்பான முள் கீரிடம். கெட்ட பையனையோ, பொறுக்கியையோ கூட போனால் போகுது என்று ஒப்புக்கொள்ளும் பொண்டாட்டி பொறுப்பில்லாதவனை கால் காசுக்கு கூட மதிக்க மாட்டாள். இது வாழ்வில் நிதர்சனமான உண்மை...

மேலை நாட்டு சிந்தையில் தலைமை பற்றிய இன்னொரு உவமை எங்களுக்கு ரொம்ப பிடிக்கும். மின்னும் மணிகளை ஒன்றிணைக்க, வலுவான வெளியில் தெரியாத நூல் வேண்டும். செடியில் மலர்ந்த மலர்களை கொய்து மாலையாக்க அன்பு எனும் பந்தத்தில் இணைக்க உறுதியான நூல் வேண்டும். நூல் வெளியில் தெரிந்தால் மாலைக்கு அழகல்ல.

அது போல் தன்னை வெளிக்காட்டாது, அன்பினால் எல்லோரையும் அணைத்து செல்லும் பக்குவம் இருக்குதா, அப்போ நீங்கள் முரசறைந்து சொல்லலாம், நான் ”தலை” என.

தன்னலம் தவிர்த்த பொறுப்பு இனிய குடும்பம் சமைக்கும் உலகிற்கு நல்ல முன்னுதாரணம் முறசரையும்.

ஆர்.கோபி / லாரன்ஸ்

(முரசின் ஓசை விரைவில் நிறையும்....... அதன் அதிர்வு நம்மிடையே என்றும் தொடரும்....)

18 comments:

தண்டோரா ...... said...

பொறுப்புள்ள பிரஜையா இருக்கியே தம்பி

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

மீ, தி பஸ்ட்?
//பிள்ளை பிறப்பின் தாமதத்தால் வடிக்கப்படும் கண்ணீரின் வெப்பம் நமக்கு தெரியும். வீட்டு விஷேசங்களிலும் சபையிலும் அதிர்ஷ்டம் கெட்டவள் என்ற அமில பார்வைக்கு தப்பி முடங்கிக் கிடக்கும் மனைவி, கை பிசைந்து நிற்கும் கணவன் என்ற உணர்வை இந்த கூட்டம் என்று தான் உணருமோ?
புருஷனாவது பரவாயில்ல, இந்த மாமியார் நாத்தனார் டெர்ரர் தான் தாங்க முடியல. குடும்பத்துக்கு வந்த மருமகளை குத்துவோமா, வெட்டுவோமா, போட்டு தாக்குவோமா என்றே பார்க்கிறார்கள், வேற வழி இல்லாம தான் தலையணை மந்திரம், தனி குடித்தனம்னு யோசிக்க வேண்டி இருக்கு. இதுக்கு எதாவது தீர்வு இருக்கா?.
//
சான்சே இல்ல. அவங்க எல்லாம் சாடிஸ்ட்ங்க பாஸ்! குழந்தை இல்லன்னாலும் குத்திக் காட்டுவாங்க, அப்படியே உண்டாயிட்டாலும், "என்னமோ ஊருல எவளுக்குமே பிள்ளை இல்லாத மாதிரியும் இவளுக்கு மட்டும்தான் வந்துட்டா மாதிரியும் என்னமா ஆட்டம் போடுறா....?" என்று கொதிப்பார்கள்.
திருந்தாத ஜன்மங்கள்.

மர தமிழன் said...

கல்யாணம், புது மனைவி, குடும்பம், குழந்தைகள் என சட்டென நிகழும் மாற்றங்கள், மனிதனுக்கு பொறுப்புணர்வை, வாழ்வின் பிடிப்பை, அதிக தேவைகளுக்கான தேடலை, காதலின் புதிய பரிமாணத்தை, அன்பு, பரவசம், அரவணைப்பு, ஆனந்தம் ஏன் இன்னும் சொல்லப்போனால் அதிக நிம்மதியை அள்ளி அள்ளி கொடுக்கும் எல்லோருக்குமே .... இதில் ஏழை, பணக்காரன் என்றெலாம் பேதமில்லை... அனால் கையில் வெண்ணை வைத்துக்கொண்டு, நெய்க்கு அலையும் மனிதர்களாகத்தான் பெரும்பாலானவர்கள் இருக்கிறார்கள்.

கோமதி அரசு said...

//மின்னும் மணிகளை ஒன்றிணைக்க,
வலுவான வெளியில் தெரியாத நூல் வேண்டும். செடியில் மலர்ந்த மலர்களைகொய்து மாலையாக்க அன்பு எனும் பந்தத்தில் இணைக்க உறுதியான் நூல் வேண்டும்.நூல் வெளியில் தெரிந்தால் மாலைக்கு அழகல்ல.//

அற்புதமாய் வார்த்தைகளை மாலையாக கோர்த்து இருக்கிறீர்கள்.

//அன்பினால் எல்லோரையும்அணைத்து
செல்லும் பக்குவம் உள்ள எல்லோரும்
தலை.//

உண்மை .

உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்.

கவிநயா said...

நல்லா எழுதி இருக்கீங்க. சில விஷயங்கள் மட்டும் மாறுவதே இல்லை.

//தன்னை வெளிக்காட்டாது, அன்பினால் எல்லோரையும் அணைத்து செல்லும் பக்குவம் //

அற்புதமான உவமையை எடுத்துக் காட்டியிருப்பதற்கும் நன்றி!

susi said...

சூப்பரு சூப்பரு சூப்பரு....

//யாராவது ஒருவர் இந்த ஆழம் புரிந்தால் போதுமானது, //
டாப்...

புரிஞ்சுகிட்டா நிச்சயம் சந்தோஷம்தான். நீ புரிஞ்சுக்கொயேன்.. நீ புரிஞ்சுக்கொயேன்னு அடுத்தவங்கள கேக்கக்கூடாது.

ராமலக்ஷ்மி said...

நல்லா சொல்லியிருக்கீங்க கோபி. வாழ்த்துக்கள்.

படுக்காளி said...

வாங்கண்ணா, தண்டோரா. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

உங்க பாணியில் சொல்லணும்னா,

இதனால் சகலமானவருக்கும் சொல்லிக் கொள்வது என்ன வென்றால்.... டும்.. டும்... டும்.... தண்டோரா புண்ணியத்தில் நாங்க பொறுப்புள்ள பிரஜையாயிட்டோம்...

படுக்காளி said...

வாங்க பெயர் சொல்ல விருப்பமில்லை, சரியாக சொன்னீர்கள். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துக்கும் நன்றி.

வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இது தானடா எனும் பாடல் வரிகளை தங்கள் பின்னூட்டம் நினைவு படுத்துகிறது. சபாஷ்..

படுக்காளி said...

/// 1. கல்யாணம், மனிதனுக்கு பொறுப்புணர்வை, வாழ்வின் பிடிப்பை, அதிக தேவைகளுக்கான தேடலை, காதலின் புதிய பரிமாணத்தை, அன்பு, பரவசம், அரவணைப்பு, ஆனந்தம் ஏன் இன்னும் சொல்லப்போனால் அதிக நிம்மதியை அள்ளி அள்ளி கொடுக்கும் எல்லோருக்குமே

2. இதில் ஏழை, பணக்காரன் என்றெலாம் பேதமில்லை... ஆனால் கையில் வெண்ணை வைத்துக்கொண்டு, நெய்க்கு அலையும் மனிதர்களாகத்தான் பெரும்பாலானவர்கள் இருக்கிறார்கள்.///

ரொம்ப நல்லாயிருக்கு. எழிமையான வார்த்தைகள் அதில் அடங்கியுள்ள ஆழமான எண்ணங்கள். மிகச் சரியான கருத்து. வருகை தந்து கருத்து பகர்ந்தமைக்கு மிக்க நன்றி.

படுக்காளி said...

வாருங்கள் கோமதி அரசு, மிகுந்த நன்றி.

/// அற்புதமாய் வார்த்தைகளை மாலையாக கோர்த்து இருக்கிறீர்கள்.

உண்மை.உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்.///

ஒரு குடும்ப மகிழ்ச்சிக்கு தீர்வாய் நாங்கள் முன் வைத்த சாராம்சத்தை பின்னூட்டமாய் சொன்னதில் மிக்க மகிழ்ச்சி. இந்த ஒரு பொறுப்புணர்ச்சியை குடும்பத்தின் தலை எடுத்துக் கொண்டால், குடித்தனம் சிறக்கும் அல்லவா.

வேண்டுமென்றே தலை என விட்டு விட்டோம். அது தலைவன் தலைவி என இருவருக்குமே பொறுந்தும்.

படுக்காளி said...

நன்றியும், வாழ்த்துக்களும் கவிநயா,

///சில விஷயங்கள் மட்டும் மாறுவதே இல்லை.

அற்புதமான உவமையை எடுத்துக் காட்டியிருப்பதற்கும் நன்றி!///

நமது தேடலும், தேவையும் மாற்றங்களை நோக்கி நாம் எடுக்கும் முயற்ச்சியில் உள்ளதோ எனவும் தோன்றுகிறது. தங்கள் கருத்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

படுக்காளி said...

நன்றி சுசி. தங்கள் பின்னூட்டத்தின் முதல் வரி பார்த்ததுமே, தங்கள் மன ஒட்டம் புரிகிறது. நினைத்ததை உடன் எழுத்தில் சொல்ல வீரியமுள்ள தங்கள் எழுத்துக்கு நன்றி.


/// சூப்பரு சூப்பரு சூப்பரு....

//யாராவது ஒருவர் இந்த ஆழம் புரிந்தால் போதுமானது, //
டாப்...

புரிஞ்சுகிட்டா நிச்சயம் சந்தோஷம்தான். நீ புரிஞ்சுக்கொயேன்.. நீ புரிஞ்சுக்கொயேன்னு அடுத்தவங்கள கேக்கக்கூடாது.////

மிகச் சரியாக சொன்னீர்கள். அடுத்தவரை எதிர்பார்க்காமல் நாமே செய்வதில் தான் சூட்சமம் இருக்கு.

மிக்க நன்றி.

படுக்காளி said...

வாங்க ராமலக்ஷ்மி. வந்து பின்னூட்டம் தந்ததுக்கு மிக்க நன்றி.

///நல்லா சொல்லியிருக்கீங்க கோபி. வாழ்த்துக்கள் ///

தொடர்ந்து வாருங்கள், ஆலோசனை சொல்லி எங்கள் எழுத்துக்கு வலு சேருங்கள்.

ஈ ரா said...

குழந்தைப் பிறப்பு தாமதமாகின்றவர்களை கேள்விக்கணைகளால் குத்தி எடுக்கும் ஆழமான மேட்டரை நன்றாக சொல்லி இருக்கிறீர்கள்..

படுக்காளி said...

/// ஈ ரா said...
குழந்தைப் பிறப்பு தாமதமாகின்றவர்களை கேள்விக்கணைகளால் குத்தி எடுக்கும் ஆழமான மேட்டரை நன்றாக சொல்லி இருக்கிறீர்கள்..///

தாமதமாகுதே என பரிவோடு பார்க்காமல், துன்பத்தில் இன்பம் காணும் சில மனிதர்களும் நம்மோடே இருப்பது துரதிருஷ்டம்.

ஆழமாய் வாசித்து பின்னூட்டம் இட்டது மிக்க மகிழ்ச்சி.

வருகைக்கும் தங்கள் கருத்துக்கும் நெஞ்சார்ந்த நன்றி.

sreeja said...

// தலைவன் என்பவன் தன் தொண்டர்களின் முதன்மை வேலைக்காரன் // குடும்பத்திலும் பொதுவாழ்க்கையிலும் இதை கடை பிடித்தால் நலமே !!!

// மின்னும் மணிகளை ஒன்றிணைக்க,
வலுவான வெளியில் தெரியாத நூல் வேண்டும். நூல் வெளியில் தெரிந்தால் மாலைக்கு அழகல்ல. // எங்களுக்காக பல விஷயங்களை தேடி பிடித்து வெளியிட்டமைக்கு பாராட்டுக்கள்.

படுக்காளி said...

/// sreeja said...
தலைவன் என்பவன் முதன்மை வேலைக்காரன்; குடும்பத்திலும் பொதுவாழ்க்கையிலும் இதை கடை பிடித்தால் நலமே !!!

// மின்னும் மணிகளை ஒன்றிணைக்க,நூல் வேண்டும். நூல் வெளியில் தெரிந்தால் மாலைக்கு அழகல்ல. // எங்களுக்காக பல விஷயங்களை தேடி பிடித்து வெளியிட்டமைக்கு பாராட்டுக்கள்.///

தேங்க்ஸ்....

இந்த தொடர், நாம் அத்தனை பேருமே சேர்ந்து எழுதுவது.

சரியாக சொல்லணும்னா, பின்னூட்டம் பார்த்த பின் தானே அடுத்த பகுதி எழுத உக்கார்ரோம்...

தொடர்ந்து கருத்து தந்து தொடருக்கு உதவுங்கள்.

வாழ்த்துக்கள்.