நல்ல காலம் பொறக்குது, நல்ல காலம் பொறக்கும்னு, கையிலிருக்கிற உடுக்கையை ஆட்டி, குறி சொல்லிட்டு போறார்.
தோழமையே!! ஒவ்வொரு வருடமும் மிக நல்லா இருக்கும் என்ற நம்பிக்கையுடன் தானே நாம் ஆரம்பிப்போம். வரும் 2010 வருடமும் வளமான வாழ்வை தர அந்த ஆண்டவனை மனதார வேண்டுகிறோம். தோழமைகள் மற்றும் அவர்தம் குடும்பத்தார்க்கும் எங்களின் மனங்கனிந்த 2010 ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
கடந்து சென்ற 2009 ஐ பொது, அரசியல், சினிமா எனும் அடிப்படையில் பார்த்து முக்கிய நிகழ்வுகளை அசை போடுவோம்.
பொது
* வங்கியின் முதல்வர்கள், அரசியல் முதல்வர்கள், பொருளாதார மேதைகள் தொடங்கி பொட்டி கடைக்காரர் வரை பயந்து கால் நடுங்கி இந்த ரிசஷன் எப்பப்பா சரியாகும்! அடுத்த ஆறு மாசத்தில சரியாகுமா என கவலை பட வைத்தது. தொடங்கியது என்னவோ போன வருடத்தின் இறுதி என்றாலும், துள்ளிக் குதித்து குத்தாட்டம் போட்டது இந்த வருடந்தான். இந்த ஜிஞ்சினக்கா சிக்கா... சிக்கா ஆட்டம் நிக்க இன்னும் ஓரிரு வருடங்கள் ஆகும் எனும் அஜால்குஜால் ஆரூர்தாஸின் ஆருடம் தான் ஈரக் குலைய பதற வைக்குது.
*நம்மாளு விஞ்ஞானி வெங்கட ராமகிருஷ்ணன் இயற்பியலுக்காக வாங்கிய நோபல் பரிசு, இவரு எங்காளுய்யா என நம் அனைவரையும் காலரை தூக்கி விட வைத்தது.
* சத்தமில்லாம செஞ்ச டகால்டி வேலைகள் வெளியில் தெரிந்ததாலும், 26/11 மும்பை மேட்டருக்கு பின் அமெரிக்கா சப்போர்ட் செய்வதிலிருந்து சற்றே பின்வாங்கியதாலும்,, உலக நாடுகள் கொஞ்சம் உன்னிப்பாய் பார்த்ததாலும், பலவீனமான, லேசா அசந்தாலும் கால் வாருகிற அரசியல் அமைப்பினாலும், அண்டை நாடு பாகிஸ்தான் கொஞ்சம் அமுக்கி வாசித்தது. அந்தப்புறம் “சீனா” சீண்டிப்பார்க்கிறது... இந்தப்புறம் ”இலங்கை” பிரச்சனை தீராமல் இருக்கிறது... (இது நிரந்தரமாக தீர வேண்டும் என்பதே நம் அனைவரின் அவா....).
அரசியல்
* குடும்பத்துக்குள்ள குத்து வெட்டா இருக்குது, ஒட்டவே ஒட்டாது, என ஆருடம் சொல்லப்பட்ட முக்கிய கட்சி, மிகவும் வெற்றிகரமாய் பாகப்பிரிவினை செய்து, இன்னும் கொஞ்ச காலத்துக்கு சுமுகமா ஒடும் என்பதாய் தீர்க்கப்பட்டது. டிவி யாவாரம் எங்கனயும் போப்புடாது, எல்லாக் காசும் எங்களுக்கே எனும் செல்ல தத்துவத்தில் , இரண்டாவதிலும் இவர்களே.
சேனல் வரிசையின் இரண்டாவது இடம் வேறு யாருக்கும் போய்விடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் இப்போது, இவ்விடமும் பல சேனல்கள் புதிது புதிதாய் முளைக்க துவங்கியுள்ளது. இடைத்தேர்தலில் கிடைத்த வெற்றி கூட, மக்கள் அதை அங்கீகரித்ததாகவே தெரிகிறது. நாளொரு மேனியும் பொழுதொரு ஸ்பெக்டரமுமாய் (வண்ணமுமாய்) வளர்ந்து கொண்டே இருக்கிறது. இது மெய்யாலுமே, அசுர வளர்ச்சிடா யப்போய்ய்ய்ய்ய்ய்...... அதுவும் சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில் இரண்டு தொகுதிகளிலும் மு.க.வின் யுக்தி நல்ல பலன்களை தந்தது... நோட்டை நீட்டி, வோட்டை பெற்று, நாட்டை பிடித்து, ஆட்டையை போடு என்ற நல்லெண்ணம் தான், வேறென்ன நல்ல நினைப்பு இவர்களுக்கு...
* புரட்சித்தலைவர் வென்றெடுத்த மு.க. எதிர்ப்பு எனும் சக்தியை, ஒருங்கிணைக்கத் தவறி, பொது மக்களின் நம்பிக்கையை பெற தவறியதால், எக்ஸாம் ஸ்கூட் அடிக்கும், தேர்தலை புறக்கணிக்கும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டு கொடநாட்டில் ரெஸ்ட் எடுக்கறோமுங்கோ ரெஸ்ட் என்று சொல்லி ரெஸ்டோ ரெஸ்ட் என்று முடங்கியது.... இந்த முடங்கலே தோல்விக்கு வழிவகுத்தது... (நல்ல பொழுதையெல்லாம் தூங்கி கெடுத்தவர், நாட்டை கெடுத்ததுடன் தானும் கெட்டார் என்று புரட்சி தலைவர் பாடினார் என்பதை அம்மையாருக்கு யாராவது ஞாபகப்படுத்தினால் தேவலை... (பாடல் எழுதியவர் : பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்).
* ஹேய்.. லெப்ட்ல போ, அப்பாலிக்கா ரைட்ல போ, இல்லென்னா நேர போ என மூத்த அரசியல் கழகங்களின் கண்ணில் விரல் விட்டு ஆட்டின, மாம்பழக் கட்சி, தேர்தல் தோல்வியில் மக்கள் மற்றும் கழகங்களின் ஆதரவை ஒரே நேரத்தில் இழந்து மோட்டுவளை பார்த்து கொண்டு அடுத்து என்ன செய்யுறதுன்னு தீவிர ஆலோசனை.
* எதிர்கால தமிழகம், வருங்கால விடிவெள்ளி, இளைய தலைமுறைத் தலைவன், என அதிரடியாய் களம் இறங்கிய முரசு, கொஞ்சம் கொஞ்சமாய் வால்யூம் குறைந்து, நிறைய அடி வாங்கி (முடியல..... என்று அலறுவது காதில் கேட்குதா!!) லேசாக தெளிந்து, நேற்றைய நிலவரம் படி டெபாசிட்டை தானம் செய்தது.
* தொலைக்காட்சியின் அரசி என் மனைவி, இத்தனை நாள் அரசியல் அனுபவம், நான் மிஸ்டர் மெட்ராஸ் வேற, 20 மொழி எனக்கு தெரியும், நம்மகாந்த் வளர்ச்சி எல்லாம் பார்த்து, நான் டாஸ்மாக் இல்லை, பாஸ்
மார்க் என கொடி ஏத்திய குமாரன், பாவம் காற்றில் விட்ட கோட்டையை நினைத்து கன்னத்தில் கை வைத்து இருக்கிறார். கழகத்தில கூப்பிடுவாங்களா என காதை காத்து வாக்கில் வைத்திருக்கிறார். இன்னும் ”ஜக்குபாய்” வேற ரிலீஸ் ஆகல... யாரும் வாங்கல... கடை விரித்தேன் கொள்வாரில்லை கதை தான் இங்க....
• ஜனங்களே நல்லா கேட்டுக்கோங்க, நாங்கள் தான் 2011ல் பிரதமர், அதில்லயா நாங்கதான் முதல்வர் என்று அடித்து கூறிய “தட்டி பார்த்தேன் கொட்டாங்கச்சி” நடிகரும், வளவள, கொழகொழ என்றே எப்போதும் பேசும் ”நவரச சிங்க நடிகரும்”, வடிவேல், விவேக் போன்ற காமெடியன்களுக்கு சவால் விடுவதாய் பஞ்ச் டயலாக்ஸ் பேசி நம்மை கிச்சு கிச்சு செய்தார்கள்...
(ஆர்.கோபி / லாரன்ஸ்)
தொடரும்....
இதன் தொடர்ச்சி/ இறுதி பகுதி நாளை பதிவேறும் . வந்து படித்து தங்கள் கருத்துக்களை சொல்லுங்களேன்.
தொடரும் பகுதி - சுடச்சுட ஒரு சினிமா கண்ணோட்டம்.
6 comments:
பல வருடங்கள் தொடர்ந்த, தொடரும் என்று நினைக்கபட்ட கோலங்கள் சீரியல் பொசுக்கென்று முடிந்து விட்டதை சொல்ல மறந்துடிங்களே???
//Eswari said...
பல வருடங்கள் தொடர்ந்த, தொடரும் என்று நினைக்கபட்ட கோலங்கள் சீரியல் பொசுக்கென்று முடிந்து விட்டதை சொல்ல மறந்துடிங்களே???//
*********
வாங்க ஈஸ்வரி... ரொம்ப நாள் கழிச்சு வந்து இருக்கீங்க... ஆனாலும் லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்து ஒரு விஷயம் சொல்லி இருக்கீங்க... அதான் கோலங்கள் சீரியல் முடிந்த மேட்டர சொல்றேன்...
சன் டிவி செய்யும் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது..இவை எல்லாம் எங்கே சென்று முடியுமோ!
அடுத்த வருடம் ஏதாவது "நல்ல" மாற்றங்கள் வந்தால் சரி!
//கிரி said...
சன் டிவி செய்யும் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது..இவை எல்லாம் எங்கே சென்று முடியுமோ!
அடுத்த வருடம் ஏதாவது "நல்ல" மாற்றங்கள் வந்தால் சரி!//
**********
வாங்க கிரி... நாளுக்கு நாள் அட்டகாசம் கூடுமே தவிர, குறைவதற்கு எங்கே வாய்ப்பு... அதுவும், அடுத்த வருடம் அவர்கள் கையில் இந்தியாவின் மிகப்பெரிய படம் (எந்திரன்) உள்ளது... முதல் சொந்த தயாரிப்பு வேற...
என்னன்னோ நடக்கப்போகுதோ??!!
Nice coverage.
//sreeja said...
Nice coverage.//
********
Many thanks Sreeja for your visit and encouraging comment...
Post a Comment