வாழ்க்கை (பகுதி– 5)

ஒன்றிரண்டு பகுதிகளில் தொடரை முடிக்க எண்ணியதால் டாப் கியரில் கொஞ்சம் வேகமாக போகும் போது, முக்கியமான இளமைப் பருவத்தை விட்டு விட்டோம் (இதை சுட்டிக்காட்டிய தோழமைக்கு நன்றி).

தவழும் குழந்தையாய் இருந்த நாம், முழு மனிதனாய் ஒரு இரவில் தூங்கி எழுந்தவுடன் ஆவதில்லை (நிறைய தமிழ் படங்கள் பார்க்காத வரைக்கும்...).

”தசாவதாரத்தின் அரிதார நாயகன்” மைக்கேல் வெஸ்மோர் கூட பத்து விதமான‌ "பூச்சாண்டி" வேடங்களுக்காக ”குண்டு சட்டி”யில் இருக்கும் மைதா கூழை குழைச்சு எடுத்து ஒரு ஆறு, ஏழு மணி நேரம் பூசோணும், ”உலக நாயகனும்” பொறுமையா குந்தோணும்.

வாழ்வும் அதே போல் சில வருடங்கள் எடுத்தே இந்த மாறுதலை செய்கிறது. இப்படி ஆன முதல் படி, ஆங்கிலத்தில் "அடலெஸண்ட்" எனவும் நம் தாய் மொழியில் மொளச்சு மூணு இலை விடல, விடலை பருவம் எனவும்
குறிப்பிடப்படும். முளைக்கும் மீசை, மகரக் கட்டு என ஆண்களும், ”மனுஷி” ஆகும் ரீதியில் பெண்களுமாய் ஒரு பருவம். முழுக்க புரியலேன்னாலும், ஏதோ ஒரு குத்துமதிப்பா வாழ்க்கை புரியும்.

தீர்வு சொல்றேன்னு நம்ம கிளம்புறப்போ, உனக்கு என்னடா தெரியும் நீ சின்னப்பிள்ள என பெற்றோர் போடும் அதட்டலில் நமத்து போகும். என்னடா இது, மழலை என கொஞ்சினார்களே, தோளிலும் மார்பிலும் தவழ்ந்தோமே, என்ன ஆச்சு இன்னைக்கு என புரியாமல் "ஙே" என்று விழிப்பதில் தொடங்குது இந்த கோளாறு.

நாம் சொல்வதை ஒப்புக் கொள்ளும் நண்பர்கள் உற்ற துணை எனவும் தோன்றும். உஷாராய் இருந்து, நல்ல நண்பர்களை துணை கொண்டால், பூவோடு சேர்ந்த நாரும் மணக்க சாத்தியமுண்டு... இல்லையேல், வந்து சேர்ந்த கன்னுக்குட்டியும், பன்னிக்குட்டியோடு சேர்ந்து பல்டி அடிக்க வேண்டும். அட்வைஸ் மழை பொழியும் பெற்றோர் மேல் அங்கு தொடங்கும் கோபம் வெகு நாள் வரை தொடர்கிறது.

இன்னும் ஒரு சூட்சுமம் உண்டு. நாம் எதை நினைக்கிறோமோ, அதாகவே ஆகிறோம்.. அதாவது, நல்ல மாணவனாக ஆக வேண்டும் என்று உறுதி எடுத்தால், நன்றாக படித்து, பெற்றோருக்கு நல்ல பெயர் வாங்கி தரும் ஒரு நல்ல மாணவனாக முடியும்... இல்லையேல்... படிப்பு விடுத்து, தீய பழக்கங்களை கைகொண்டு, வாழ்வையே இழக்கும் நிலை வரும்... இதில், எது வேண்டுமென “ரூம்” போட்டு யோசிக்கலாம்..

வாழ்வின் எந்த கட்டத்தில் நாம் திடமாக (பாடி ஸ்ட்ராங், பேஸ்மெண்ட் வீக் மேட்டர் அல்ல..),உரத்துடன் உள்ளோம். உடலும், மனமும் உச்சகட்ட செயல் திறன் உள்ளது இப்போதான்.

ஏழு மலைய தாண்டணுமா, இல்லை ”எதிர் வீட்டு ஏழுமலை”ய போட்டு தாக்கணுமா, எதுன்னாலும் ஓகே. இந்த பருவத்தில, டேய்! சிகரெட் குடிக்காத, தண்ணி அடிக்காதன்னு யாராவது அக்கறையாக சொல்லும் போது, உகாண்டா நாட்டு அதிபர் ”உரேக்ஷா புரேக்ஷு” வீட்டு கோழி குருமாவுல உப்பு இல்லன்னா எனக்கென்ன எனும் தோரணையில்தான், நம் அறிவுரையும் பரிசீலிக்கப்படும். விசையுறு பந்து போலவும், வேண்டிய படி செய்யும் மனம் போலவும் இருப்பதால், இன்று செய்யும் விளைவின் தாக்கம் வீரியமில்லாமல் இருக்கும்.

வீட்டு நிர்வாகம் என்றால் என்ன, பொருளாதாரம், திட்டமிடல் என எந்த பிரஞையும் இல்லாத, அதை பற்றி அலட்டிக் கொள்ளாததே பிரச்சனையின் அடி நாதம். இதனாலதான் ஏன் படிக்கிறோம், எதுக்காக ஒழுக்கமா இருக்கணும் எனும் தெளிவு வருவதில்லை. இருபது வயசில அறிவுரை சொல்லி வேக வைக்க முடியாத இந்த பருப்பை என்ன வயதில் என்னதான் செய்வது?. என்னதான் தீர்வு. பெற்றோர் இடத்தில் கொஞ்சம் சான்ஸ் உண்டு.

நெருங்கிய நண்பர் அன்று மிக தளர்ந்து இருந்தார், முகம் சுண்ட காய்ச்சி இருந்தது. அருகில் நெருங்கி, புரியுது.... கவலைப்படாதே என்ன பிரச்சனை என்ற போது பொறிந்து தள்ளி விட்டார்.

எவ்வளவு கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறேன், என்ன குறைவு சார் இவனுக்கு, படிக்க வேண்டியது தானே. கட் அடிச்சுட்டு சினிமா, இண்டெர்வல்ல சிகரெட். படம் முடிஞ்சதும் தண்ணி... எங்க வம்சத்திலயே இப்படி ஒரு தறுதலைய பார்த்ததில்ல.

தீவிரம் புரிந்து போய், நாம் மெதுவாய் சொன்னது. ரொம்ப கரெக்ட். பெரிய பிரச்சனை தான், ஆனா தலை போற விஷயம் இல்ல. அதுக்காக நீங்களே ஒரு "தம்" வாங்கி கொடுத்து பத்த வைங்கன்னு சொல்லல, எரிச்சல கடாசிட்டு தன்மையா பாருங்க. ஒரு முறை சிகரெட் குடித்து விட்டான் என்பதால் இனப் பிரஷ்டமா செய்ய முடியும். ஒரு முறை முயற்சி என்பது மனித இயல்பு.

ஆனால், அதை தொட‌ராம‌ல் இருக்க‌ வைப்ப‌து ந‌ம் சாமர்த்திய‌ம்...

சிறு வயதில் கீழே விழுந்த போது, நீங்கள் தானே கை தூக்கி விட்டீர்கள். ஆகவே, அவர்களை அன்புடன், கனிவாக‌ அணுகி, பணம் சம்பாதிப்பது எவ்வளவு கடினம் என்பதையும் நாம் கஷ்டப்படுவதையும் சொல்லி வாழ்வின் நிதர்சனத்தை மெதுவாக சொல்லி புரிய வைக்கலாம்... போதை பழக்கம் எவ்வளவு கல்லூரி மாணவர்களை அழித்து இருக்கிறது.... இதனால், எவ்வளவு பெற்றோர்கள் மற்றும் குடும்பங்கள் நிம்மதியின்றி தவித்து இருக்கிறது என்று விளக்கி சொல்லலாம்..

நமக்கு திரையில் அறிமுகமான "கில்லாடி கில்பர்ட் தனசேகரன்", "மிரட்டும் ப்ரொஃபெஸர் மித்ரா", "த‌ர்ம‌ அடி த‌ர்ம‌லிங்க‌ம்" ஆகிய மூவரும் கூட்டணி அமைத்து தனியாளாய் இருக்கும் நம்ம ஹீரோவை தொல்லை செய்வர். புடுங்கிக்கிட்டு அடிக்கிற வெயில்லேயும் பளபளன்னு ஒரு கோட் சூட், கஜக் கம் இருட்டுல கூட கழற்றாத கூலிங் கிளாஸ், கெக்கே பிக்கேன்னு ஒரு சிரிப்பு, என கும்மாளம் போடும் டெர்ர‌ர் கூட்டணி. இவர் போல, இளமைப் பருவத்தில் நம்மை கதிகலங்க வைக்கும் மும்முனை தாக்குதலான‌ "போதை, பொழுது போக்கு, கச்சடா சிந்தனைகள்" என பல உண்டு.

ஒரே ஒரு "க்ளிக்"கில் இன்றைய வலையுலகம் நம் க‌ணினி வழியே உல‌கையே ந‌ம் முன் ப‌டைக்கும்... ஆயினும், அதன் வழியே அண்ட சராசர‌த்தின் அனைத்து விகார‌ங்க‌ளையும் ந‌ம் முன்னே கொட்டியும் விடும்... அதில் ந‌ம் வாழ்க்கைக்கு தேவையான‌வற்றை தேர்ந்து எடுத்துக்கொண்டு, மற்ற அனைத்து தேவையற்ற விஷ‌ய‌ங்க‌ளை புற‌ம் த‌ள்ளும் சூட்சும‌த்தை உணர‌ வேண்டும்...

வேலை செய்து களைத்த பின்னர் சினிமா பார்ப்பது என உருவான பொழுதுபோக்கு, வாழ்வின் முழு முதற் கடமையாய் ஆன கொடுமை, கண் முளிச்சு, தலை குளிச்சு மொத வேலையா நம்ம "முட்டை கண்ணன் மூவேந்திரன்" சினிமா டிக்கட் வாங்க க்யூவில் நிற்கிறான்.

நாலு மணி நேரமா. யம்மாடி, இங்கனம் வாழ்க்கை ஆகும் அவ‌ல‌த்தையும் ப‌க்குவ‌மாக‌ விள‌க்கி, வாழ்வின் அன்றாட‌ க‌ட‌மையை செவ்வ‌னே செய்த‌ பின்ன‌ரே, உற்சாக‌ப்ப‌டுத்தும் நிக‌ழ்வாக‌, சினிமாவை பார்க்கோணும்... மாட்னி, காலைக் காட்சியெல்லாம் தேவையா பாஸ் என "பால்கனி பலவேசம்" கேட்பது ஏறக்குறைய சரியோ!!!! .... ப‌ள்ளி, க‌ல்லூரியின் ப‌டிக்கும் நேரத்தில், படிப்பை புறம் தள்ளி, சினிமா காண செல்வதை பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும், படிப்புக்கும் நாம் செய்யும் துரோகம் என மனதில் தோன்றினால் நல்லது.

இதனால், மாணவ / மாணவியர்கள் சினிமாவை அதன் இடத்தில் நிறுத்தி, படிப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் நிலையை உருவாக்கலாம்... இன்று வாழ்வில் மிகப்பெரிய நிலையை அடைந்தவர்கள் அனைவரும், சிறு வயதில் எவ்வளவு கஷ்டப்பட்டார்கள் என்பதை உணர வைக்கலாம்...

வாழ்வில் பல சோதனைகளை வெற்றிக‌ர‌மாக‌ தாண்டிய‌வ‌ர்க‌ளே இன்று உலகில் சாத‌னையாள‌ர்க‌ள். வாழ்வின் ஒவ்வொரு நாளிலும், க‌டும் உழைப்புக்கு பின்ன‌ரே, நாளை உழைக்க வேண்டிய உற்சாகம் பெறவே சிறிது பொழுதுபோக்கு தேவை, இல்லையேல் பொழுதுபோக்கையே வாழ்வில் பிர‌தான‌மாக்கினால், அது பிர‌யோஜ‌ன‌ப்படாது.

பெற்றோர் மட்டும் அல்ல ந‌ல்ல‌ மாண‌வ‌ / மாண‌விய‌ர்க‌ளை உருவாக்குவ‌தில் ஆசிரியர்கள் மற்றும் உற்றார்களுக்கு பெரும் ப‌ங்கு உண்டு என்பது உள்ளங்கை நெல்லிக்கனி... மிக முக்கியமாக செய்ய வேண்டியது, பிள்ளைகளின் நண்பர்களை உற்று நோக்குங்கள். விவகாரமானவர்கள் என்றால் சற்றே விலக்கி விட முயலுங்கள்.

சரி, இவ்வளவு ஆட்டம் போட்ட வில்லன்கள் கடைசியில் ஆவது என்ன. ஒண்ணு சாகோணும் ... திருந்தோணும்...இல்லேன்னா தோத்து போய் ஓடோணும்... அத செய்ய வைக்கிறது நம்ம ஹீரோ. அல்லது செய்தால் அவர் தான் ஹீரோ.

நாம் அனைவரும் ஹீரோதானே, நம்மை நசுக்க வரும் நச்சுகளை நச்சென குத்தி, டிஷ்யூம் செய்து நாந்தாண்டா ஹீரோ என முறசரைந்து சொல்வோம்....

(ஆர்.கோபி / லார‌ன்ஸ்)

(முரசின் ஓசை நிலைக்கும்....... அதன் அதிர்வு நம்மிடையே என்றும் தொடரும்....)

22 comments:

ஈ ரா said...

பதினாறு வயசு -


பாவையின் பார்வைக்கு
பருவம் அது ஏங்கும் -
படிப்புக்கள் பலருக்குப்
படுக்கையில் தூங்கும்...!

படுக்காளி கோபி
அறிவுரை கேட்டால்
பன்றிக் குட்டியும்
பாரையே தாங்கும் !

R.Gopi said...

//ஈ ரா said...
பதினாறு வயசு -


பாவையின் பார்வைக்கு
பருவம் அது ஏங்கும் -
படிப்புக்கள் பலருக்குப்
படுக்கையில் தூங்கும்...!

படுக்காளி கோபி
அறிவுரை கேட்டால்
பன்றிக் குட்டியும்
பாரையே தாங்கும் !//

---------------

பாராட்டுன்னு வரும் போது, நண்பர் ஈ.ரா. அவர்களை யாரும் அடித்து கொள்ள முடியாது... அதுபோல் தான் இந்த பாராட்டும்...

பதிவை படித்து, பாராட்டி கருத்துரைத்தமைக்கு மிக்க நன்றி...

தண்டோரா ...... said...

/வாழ்வில் பல சோதனைகளை வெற்றிக‌ர‌மாக‌ தாண்டிய‌வ‌ர்க‌ளே இன்று உலகில் சாத‌னையாள‌ர்க‌ள். வாழ்வின் ஒவ்வொரு நாளிலும், க‌டும் உழைப்புக்கு பின்ன‌ரே, நாளை உழைக்க வேண்டிய உற்சாகம் பெறவே சிறிது பொழுதுபோக்கு தேவை, இல்லையேல் பொழுதுபோக்கையே வாழ்வில் பிர‌தான‌மாக்கினால், அது பிர‌யோஜ‌ன‌ப்படாது//

வேதாந்தி கோப்ரிஷியானாந்தா....

R.Gopi said...

//தண்டோரா ...... said...
/வாழ்வில் பல சோதனைகளை வெற்றிக‌ர‌மாக‌ தாண்டிய‌வ‌ர்க‌ளே இன்று உலகில் சாத‌னையாள‌ர்க‌ள். வாழ்வின் ஒவ்வொரு நாளிலும், க‌டும் உழைப்புக்கு பின்ன‌ரே, நாளை உழைக்க வேண்டிய உற்சாகம் பெறவே சிறிது பொழுதுபோக்கு தேவை, இல்லையேல் பொழுதுபோக்கையே வாழ்வில் பிர‌தான‌மாக்கினால், அது பிர‌யோஜ‌ன‌ப்படாது//

வேதாந்தி கோப்ரிஷியானாந்தா....//

*******

இந்த காலத்திற்கேற்ற அறிவுரைதானே தல...

நம்ம இப்போ அறிவுரை சொல்ற நிலையில்தானே இருக்கிறோம்...

தண்டோரா ...... said...

சரிதான் தம்பி..ஆனா கேப்பாங்கங்கிற??

R.Gopi said...

//தண்டோரா ...... said...
சரிதான் தம்பி..ஆனா கேப்பாங்கங்கிற??//

**********

இதே மாதிரி நமக்கு சொன்ன போது, நாம கேட்டோமா தல... அந்த மாதிரிதான்... சொல்றது நம்ம கடமை...

அப்படியே இங்கேயும் போய் பாருங்க..

மெல்லினம்....வல்லினம்...”புல்”லினம்...
http://jokkiri.blogspot.com/2009/11/blog-post_23.html

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//பெற்றோர் மட்டும் அல்ல ந‌ல்ல‌ மாண‌வ‌ / மாண‌விய‌ர்க‌ளை உருவாக்குவ‌தில் ஆசிரியர்கள் மற்றும் உற்றார்களுக்கு பெரும் ப‌ங்கு உண்டு என்பது உள்ளங்கை நெல்லிக்கனி... மிக முக்கியமாக செய்ய வேண்டியது, பிள்ளைகளின் நண்பர்களை உற்று நோக்குங்கள். விவகாரமானவர்கள் என்றால் சற்றே விலக்கி விட முயலுங்கள்
//
அருமையான வரிகள், ஆழ்ந்த கருத்துகள், வாழ்த்துகள் நண்பரே!

சுசி said...

//முழுக்க புரியலேன்னாலும், ஏதோ ஒரு குத்துமதிப்பா வாழ்க்கை புரியும்.//

ஒத்துக்கிறேன்.. ஒத்துக்கிறேன்..

நகைச்சுவை துள்ளி விளையாடுது...

ஆனா சொல்ல வந்தத தெளிவா சொல்றீங்க பாருங்க... அதுதான் உங்க வெற்றி.

Uma Madurai said...

அருமையான பதிவு. இது ஒரு புத்தக வடிவில் வந்தால் இணைய இணைப்பு இல்லாதவரும் படிக்கலாம்.

http://snehiti.blogspot.com

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

உங்களை வம்புக்கு இழுத்திருக்கேன், இங்க.
http://ulagamahauthamar.blogspot.com/2009/11/blog-post_28.html

தியாவின் பேனா said...

நல்லாயிருக்குது

கவிநயா said...

டீனேஜின் மன நிலைமையைப் பற்றி சரியாகவே சொல்லியிருக்கிறீர்கள். மிகவும் சிரமமான காலம்தான், அந்த வயதுப் பிள்ளைகள், பெற்றோர், இருவருக்குமே :(

R.Gopi said...

//உங்களை வம்புக்கு இழுத்திருக்கேன், இங்க.
http://ulagamahauthamar.blogspot.com/2009/11/blog-post_28.html//

************

வம்புக்கு தானே... இதோ வந்து பார்க்கிறேன்...

R.Gopi said...

//தியாவின் பேனா said...
நல்லாயிருக்குது//

*******

வ‌ருகை தந்து, ப‌டித்து க‌ருத்து சொன்ன‌மைக்கு மிக்க‌ ந‌ன்றி தியா அவ‌ர்க‌ளே...

R.Gopi said...

//கவிநயா said...
டீனேஜின் மன நிலைமையைப் பற்றி சரியாகவே சொல்லியிருக்கிறீர்கள். மிகவும் சிரமமான காலம்தான், அந்த வயதுப் பிள்ளைகள், பெற்றோர், இருவருக்குமே :(//

*******

வாங்க‌ க‌விந‌யா...

தொடர்ந்து வ‌ருகை தந்து, ப‌திவை ப‌டித்து, க‌ருத்து சொல்லும் உங்க‌ளுக்கு எங்க‌ளின் ம‌ன‌மார்ந்த‌ ந‌ன்றி...

R.Gopi said...

//Uma Madurai said...
அருமையான பதிவு. இது ஒரு புத்தக வடிவில் வந்தால் இணைய இணைப்பு இல்லாதவரும் படிக்கலாம்.

http://snehiti.blogspot.com//

*********

ம‌துரை உமா அவ‌ர்க‌ளே... முத‌ல் வ‌ருகைக்கு ந‌ன்றி... வ‌ருகை த‌ந்து, ப‌திவை ப‌டித்து, க‌ருத்து ப‌கிர்ந்த‌மைக்கு மிக்க‌ ந‌ன்றி... உங்க‌ள் க‌ருத்து ப‌ரிசீல‌னையில் உள்ள‌து...

R.Gopi said...

//சுசி said...
//முழுக்க புரியலேன்னாலும், ஏதோ ஒரு குத்துமதிப்பா வாழ்க்கை புரியும்.//

ஒத்துக்கிறேன்.. ஒத்துக்கிறேன்..

நகைச்சுவை துள்ளி விளையாடுது...

ஆனா சொல்ல வந்தத தெளிவா சொல்றீங்க பாருங்க... அதுதான் உங்க வெற்றி.//

***********

தொடர்ந்து வ‌ருகை தந்து, ப‌திவை ப‌டித்து, ஊக்க‌ப்ப‌டுத்தும் சுசி அவ‌ர்க‌ளுக்கு எங்க‌ளின் ம‌ன‌மார்ந்த‌ ந‌ன்றி...

R.Gopi said...

//பெயர் சொல்ல விருப்பமில்லை said...
//பெற்றோர் மட்டும் அல்ல ந‌ல்ல‌ மாண‌வ‌ / மாண‌விய‌ர்க‌ளை உருவாக்குவ‌தில் ஆசிரியர்கள் மற்றும் உற்றார்களுக்கு பெரும் ப‌ங்கு உண்டு என்பது உள்ளங்கை நெல்லிக்கனி... மிக முக்கியமாக செய்ய வேண்டியது, பிள்ளைகளின் நண்பர்களை உற்று நோக்குங்கள். விவகாரமானவர்கள் என்றால் சற்றே விலக்கி விட முயலுங்கள்
//
அருமையான வரிகள், ஆழ்ந்த கருத்துகள், வாழ்த்துகள் நண்பரே!//

********

வாங்க‌ பெய‌ர் சொல்ல‌ விருப்ப‌மில்லை...

பதிவை படித்து, பாராட்டிய‌த‌ற்கு எங்க‌ளின் ம‌ன‌மார்ந்த‌ ந‌ன்றி...

sreeja said...

Thanks for considering my opinion also.

Nice post.

Keep it up.

R.Gopi said...

//sreeja said...
Thanks for considering my opinion also.

Nice post.

Keep it up.//

*********

Thanks Sreeja for your continuous visit, comments and encouragement...

You are important, so your comment too..

மர தமிழன் said...

எத்தனயோ முட்டைகள் போடும் ஆமை...அதில் குஞ்சுகள் வெளி வந்து தப்பி பிழைப்பது ஒன்றிரண்டுதான்.. எத்தனையோ எதிரிகள் இளமை வாழ்வில் அத்தனையும் கடப்பது மற்றும் அதன் பின் வாழ்வு பயணம் இந்த தொடர் நிகழ்வே இன்றிய சூழ் நிலையில் பெரிய சாதனைதான். இந்த ஒரு பருவத்தை வளமாக்க ஒரு நாடும் மக்களும் சபதம் பூண்டால் அதுவே மனித குலத்தின் ஒரு புதிய பரிமாணமாக இருக்க முடியும்.

கோமதி அரசு said...

//பெற்றோர் மட்டும் அல்ல நல்ல மாணவ/மாணவியர்களை உருவாக்குவதில் ஆசிரியர்கள் மற்றும் உற்றார்களுக்கு பெரும் பங்கு உண்டு.என்பது உள்ளங்கை
நெல்லிக்கனி.//

நல்ல மாணவ/மாணவியர்களை உருவாக்குவதில் நாம் அங்கமாகஉள்ள
சமுதாயத்திற்கும் பொறுப்பு உண்டு.

நட்பின் ஆழத்தினால் மக்கள் எவ்வளவுக்கு எவ்வளவு உணர்ந்தும் ஒத்தும் இருக்கின்றாகளோ அந்த அளவுக்கு,ஒருவருடைய வாழ்க்கை நலனை மேம்பாட்டை இன்னொருவர் பெறமுடியும்.

இளமை பருவம் நாற்பது வயது வரை
தன் முயற்சியினால் ஒருவன் ந்ல்ல வாழ்க்கை அடைய வேண்டுமானால் நாற்பது ஆண்டுகளுக்குள்ளாகவே திறமையான ஒரு இடத்தை எட்டி விட வேண்டும்.

வாழ்க்கை (பகுதி-5) சிறப்பான இளமை காலத்தில் எப்படி இருக்க வேண்டும் என்பதை எடுத்து சொல்லியிருக்கிறீர்கள்.புரிந்து நடந்து கொணடால் வாழ்க்கை இனிமை.

உங்கள் முரசு ஒலிக்கட்டும் எல்லோர் நன்மைக்காக.

வாழ்த்துக்கள்.