வாழ்க்கை : (பகுதி – 4)

டாடி.... டாடி... இதப் பாருங்களேன். ஆவலாய் நீட்டிய காகிதத்தை வாங்கி படித்தார் அப்பா.

யப்பா.... ஒரு இயலாமை பார்வை வீசி விட்டு. அடேய்... பூமி குலுங்கினா அது பூகம்பம். அதுவே வெறுமே பூ குலுங்கினா அது வெறும் ஆட்டம், இல்லைன்னா குலுக்கம்.

ஓகே டாடி, என ஓரமாய் அன்று வைத்த பேப்பர், தற்செயலாய் இளம் வயதில் அவனுக்கு கிடைத்தது.....இன்று அவனுக்கு பிடித்தது, நண்பர் சிலாகித்தார், அச்சிடலாமே அற்புதம் என கவிஞர் கொஞ்சினார். அது என்ன ஒரே வார்த்தை தப்பாகவும், சரியாகவும் எப்படி ஆனது. அதுதான் கவிதை. ??? !!!!

பூவுக்குள் பூகம்பம் என அவன் எழுதியது, நேற்று, இன்று நாளை!!! என புதுப்புது அர்த்தம் தரும்!!!.

அவள் வீட்டு தெருவில் நடந்தேன்.
வீதியெங்கும் அமாவாசை,
என் உள்ளத்திலோ பவுர்ணமி


என்று எடக்கு மடக்காய் எழுதி, ஒன்றன் பின் ஒன்றாய் வார்த்தை கோர்த்து, கவிதை என்ற லேபிள் ஒட்டுவது இளமையில் சாத்தியம்.

காதல் புகுந்த மனதில் தமிழ் புதுப்புனலாய் புறப்ப‌டும். மனதில் பூக்கள் புதிதாய் பூக்கும்... அதன் வாசம் எழுதும் கவிதைகளில் மணம் வீசும்... ஏங்க, உங்களுக்கு கவிதை பிடிக்காதா என்று தாங்கள் நினைத்தால், இல்லீங்கோ!!! கவிதைக்கு எதிரி அல்ல நாங்கள். கவிதை தொடங்கும் விதம் பற்றி சும்மா கலாய்த்து பார்த்தோம். அவ்வளவுதான்.

'வெள்ளி நிலாவே விளக்காய் எரியும் கடல் தான் எங்கள் வீடு
முடிந்தால் முடியும் தொடர்ந்தால் தொடரும் இது தான் எங்கள் வாழ்க்கை
ஒரு சாண் வயிறை வளர்ப்பவர் உயிரை ஊரார் நினைப்பது சுலபம்
தரை மேல் பிறக்க வைத்தான், எங்களை தண்ணீரில் மிதக்க வைத்தான்


நாலு வரியில் மீனவர்களின் வாழ்க்கையை பற்றி சொன்ன போது கண்ணீர் கரை கடக்கும். உள்ளத்தின் மென்மையையும் மேன்மையையும் ஒரு சேர தொடும். மனிதனை புனிதன் ஆக்கும். கவிதை மிக இன்றியமையாத இயல்பு. வாழ்வை கவியாக கொள்வது கண்டிப்பாக சிறக்கும்.

கவிதை போல் காதலும் இயல்பே. காதல் எல்லாம் ஹம்பக் எனும் வாதமோ, காதல் தெய்வீகமானது எனும் கீதமோ கொஞ்சம் அதீதம் கலந்த அமிர்தம். அளவுக்கு மிஞ்சாமல், அக்கறையாய் அனுபவித்தால் அற்புதம். திருமண பந்தம், இறுதி வரை இல்லறம் எனும் இலக்கை சிக்கென பற்றினால் பரம சுகம். சொல்லி புரித‌லை விட‌, அனுப‌வித்து ர‌சிப்ப‌தே சால‌ சிறந்த‌து...

திருமணம். கொஞ்சம் லேட்டா இந்த தொடர் வாசிக்கிறேன். எனக்கு கல்யாணமாகி இரண்டு பிள்ளை இருக்கு என சிந்தித்தாலும், அட, கரெக்ட் டைம் பாஸ். நாளைக்கு பொண்ணு பார்க்கப் போறேன் என்றாலோ, இருவரும் படிக்க என எவர்கீரின் அடிப்படை சிலவற்றை உரசிப் பார்ப்போம்.

ஏங்க எதுக்காக‌ கல்யாணம் பண்றீங்க.... என நாசுக்காய் நம்மையே கேட்போமே. ஹும்... ஹும்... என மண்டைய சொறிவோம். அப்பா அம்மா சொல்றாங்க.... பக்கத்து வீட்டு பத்மாக்கா கட்டிக்கிச்சு, அதேன்... அல்லது போங்க சொல்ல வெக்கமா இருக்கு, இதெல்லாமா வெளிய சொல்லுவாக. பாருங்களேன். மேலே சொன்ன எந்த பதிலாவது திருமணம் எனும் முழுப் பரிமாணம் அடக்கியுள்ளதா. சரி அவங்கதான் சொல்லல, நீங்க சொல்லுங்க என்றால்.

கூடி வாழும் மனித இயல்பின் தேவை, சந்ததி படைக்கும் சாஸ்வதம், முதுமைப் பருவத்தில் தளரும் உடல் மற்றும் மனம் சார்பு நிலைக்கென அடிப்படையாய் ஏற்பட்டதே இந்த குடும்ப அல்லது திருமண பந்தம். ஆனால் சொன்னத விட்டுபுட்டு சுரைய புடுக்கிற கதைதான் ஒண்ணுக்கு பாதி நடக்குது.

திருமண பந்தம்; பந்தக்கால் இடும் முன்னர் சில பிரதிக்கனை எடுத்தால் நல்லது. இனி சாவுற வரை நீதான் என் பொண்டாட்டி, நீதாண்டா என் புருஷன் கடைசி வரைக்கும் என உரிமையாய், உறுதியாய் சொல்லும் மனதோடு வலது காலை எடுத்து முன்னால் வைப்போம். மகிழ்ச்சியான நிறைவான இல்லறமே மனித வாழ்வின் ஒரு மகத்தான நோக்கம். ஆனால் முள் முனையில் நடக்கும் காற்றுப் பந்து போல கவனம் குறைந்தால் வெடிக்கும் வாய்ப்பு உண்டு.

இறுதி வரை எடுத்த தீர்மானத்தில் இருந்து அணுவ‌ளவும் பின் வாங்கக் கூடாது. என்ன பிரச்சனை வந்தாலும். திருமணத்தை கட்டிக் காக்க வழிகள் நிறைய உண்டு. அது பத்தியே ஒரு தொடர் எழுதுற அளவுக்கு மேட்டர் இருக்கு, என்றாலும் ஒன்றிரண்டு மெயின் மேட்டர் இதோ,

1. செருப்பை கழற்றி வீட்டுக்கு வெளியில் வைத்து விட்டு, வெறுங்காலோடு நடப்பது என்பது சாதாரணமான ஒரு பழக்கம். வீட்டுக்குள் மட்டும் என பிரத்யேகமாய் பாத்ரூம் செருப்போடு சரக் புரக் என திரிவது மற்றொரு ரகம். இதில் சரி, தவறு என்று எதுவும் இல்லை. ஆனால் முதல் பழக்கம் உள்ள‌ புருஷனும், இரண்டாம் பழக்கம் உள்ள‌ மனைவியும் குடித்தனம் செய்தால், புருஷனுக்கு கொஞ்சம் டெர்ரராக இருக்கும்.

காலை வீணாக்குகிறானே பாவி என மனதினுள் மனைவி கூவுவாள். அந்த நேரம் பார்த்து கொடுத்த காப்பியில் சீனி தூக்கலாய் இருக்கும். புருஷன் சீறுவான். ‘இப்படி சீனிய அள்ளி கொட்டினா, மாசத்துக்கு மூணு மூட்டை வாங்கோணும்’.

ஏற்கனவே மனதுக்குள் கூவிக்கொண்டிருக்கும் பொண்டாட்டி விடுவாளா ‘காலையிலதான வாயில வைக்க முடியல், உன் அப்பன் வீட்டு பணமா போகுதுண்ணீங்க, சரின்னு சீனி போட்டா, ரொம்ப பேசுதீக. நானும் போனா போகுது, போனா போகுதுன்னா ரொம்ப பேசிட்டே போறீய‌ளே........

மக்களே... மக்களின் மக்களே... பெருங்குடி மக்களே, உடன்பிறப்புகளே, உயிரினும் மேலான ரத்தத்தின் ரத்தங்களே!!! கான்ஷியசாய் உரசும் இது போல் செருப்பு மேட்டர் சில, அன்கான்ஷியசாய் உரச ஓராயிரம் மேட்டர் உண்டு. இரு வேறு சூழலில் வளர்ந்து ஒன்றாய் குப்பை கொட்டும் போது இப்படித்தான். இத்தகைய வேறுபாடை மனதில் கொண்டு கண்கொத்தி பாம்பாய் இருந்தால் குடித்தனம் பொழைக்கும், இல்லையேல், கொறட்டை விடுகிறான் தாங்கல என குடும்ப நல கோர்ட் படியேறி விடும்.

2. டைரக்ட் அட்டாக் அல்லது இன்டைரக்ட் அட்டாக். இரண்டாவது எடக்கு மடக்கு தத்துவம் இது, நல்லா கேட்டுக்கோங்க. பாடத் தெரிந்த "பாத்ரூம் பாலசுப்ரமணி"க்கு கல்யாணம் முடிஞ்சு போச்சு. முதல் இரவில், நம்ம சுப்புணி, சுந்தரம்பாள் கிட்ட’ உனக்கு ஒண்ணு தெரியுமா... ‘( தொண்டையில் கிச்...கிச்.... லேசா கனைத்து கொண்டே... ) நான் ரொம்ப நல்லா பாடுவேன்.

ஏகத்துக்கும் டென்ஷனான புதுப்பொண்ணு அப்படியான்னுச்சு. அதோட விட்டிருக்கலாம். பாடட்டா என "சுப்பிரமணி" கீச்சிட, வேற‌ வழி,விதி வலிது, குனிஞ்ச தல நிமிரவே இல்ல, ஒரு லேசான தலையாட்ட, அது போதுமே, நம்மாளுக்கு, உடனே பாட தொடங்கினார்.... "அம்மாடி, ஆத்தாடி, உன்ன எனக்கு தர்றியாடி"....... ஏற்கனவே டென்ஷன், இதுல உச்சஸ்தாயியில் இந்த டகால்டி பாட்டு வேற‌. பாட்டு தொண்டையில் சிக்கிக்கிட்டு பாடாப் படுத்தியிருச்சு.

இதுவே நம்ம சுப்புணி தம்பி, "உஷார் உக்கிரசேனன்" கல்யாணம் எல்லாம் முடிஞ்சு ஒரு வாரம் ஓடிப் போச்சு. லேசாப் பாடத் தெரிஞ்சாலும் கம்முனு இருந்திட்டான். தற்செயலா யாரோ உன் புருஷன் பாட்டு எப்படின்னாளாம். திடுக்கிட்ட திருமதி ‘அவர் பாடுவாரா, சொல்லவே இல்ல’ என அதிசயித்து விட்டு. ‘ஏண்ணா பாடுவேளான்னான்னு’ கேக்க, வெக்கத்தில் நெளிஞ்சு, சும்மா பாத்ரூம்ல சுமாரா பாடுவேன், “எக்கோ”வுல நல்லா இருக்கும் என சொல்லி விட்டு வேறு ஒரு சந்தர்ப்பத்தில் பின்னிருந்து அணைத்து மெல்லிய குரலில் கிசுகிசுக்கும் குரலில் “நீல வான ஓடையில்” .... என்று ரம்மியமாக தொண்டையை திறந்தார். நகைச்சுவையாய் சொன்னாலும் மேட்டர் இதுதான்.

நாமே சொல்வதை விட அடுத்தவர் சொல்லி நம் சில்லறை திறமைகளை நாம் அடக்கி வாசிப்பது சுவாரசியம். ஒப்பனா பேசுறேன் பேர்வழி என்று கட்டியவளை கழுத்துறுக்காமல் பொறுமையாய் குடித்தனம் செய்யலாம். கிணத்து தண்ணிய ஆத்து வெள்ளமா அடிச்சுட்டு போறது.

3. எங்க அப்பா அம்மா தெய்வம். நீ என்ன (புருஷன) மதிக்கலேன்னா கூட பரவாயில்ல, நான் பொறுத்துக்குவேன் என கண்டிஷன் போடும் "கறார் கண்ணுசாமி", தன் மாமனார் மாமியாரை மதிப்பாரா??? சந்தேகந்தேன். பாருங்களேன் இவர் அவரின் அப்பா அம்மாவை மதிக்க மாட்டார், அவர் இவர் அப்பா அம்மாவை தொழ வேண்டும்... எப்புடி.... சொல்யூஷன் என்னன்னா, நம்ம "ஜீசஸ் கிரைஸ்ட்" சொன்னது தான். ‘உனக்கு அயலான் என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறாயோ அதை நீ அவனுக்கு செய்’.

அப்போ இரண்டாவது தத்துவம், மூணாவதையும் மிக்ஸ் பண்ணினா, நம்ம அப்பா அம்மாவ மதிக்கணும்னா சத்தமில்லாம ஒண்ணும் பேசாம நம்ம மாமனார், மாமியார உளமாற மதித்து விடல். என்ன செய்யும் நம்ம பொண்டாட்டி, ஏட்டிக்கு போட்டிதான. கண்டிஷனா நம்ம பெத்தவங்கள மதிக்கும்.

4. வாழ்க்கையின் ஆணி வேரே ஒருவரை ஒருவர் புரிதலிலும், விட்டு கொடுக்கும் மனப்பான்மையிலும் இருக்கிறது...இந்த மனப்பான்மை கணவன், மனைவியரிடையே அதிகமானால், குடும்பம் என்ற ஆணிவேர் பலப்பட்டு, நெடு நாட்கள் ஆலமரம் போல் தழைக்க வழிவகுக்கும்..

இது போன்று விரிசல் கண்ட பல குடும்பங்கள் தங்கள் வாழ்வை தொலைத்து விட்டு, ஆங்காங்கே நீதிமன்றங்களில் காணப்படுகிறது...இதற்கு காரணம் இருவரின் மன மன்றங்களிலும் தோன்றும் அந்த ஈகோ என்ற ஒரு விஷயம்... இந்த ஒரு விஷயத்தை தொலைத்தால், பின்னாளில் நாம் வாழ்வை தொலைக்க வேண்டியதில்லை... சாய்ஸ் நம்மிடம்தான். சிறு புரிதலில் வாழ்வை பெறுவது நல்லதா... இல்லை ஒரு சிறிய ஈகோவினால், வாழ்வை இழப்பது நல்லதா என்பதை சிந்தனை செய்வோம்... நினைவில் நிறுத்துவோம்..

அவ்வப்போது ஏற்படும் சிறு சிறு உரசல்கள் அவ்வப்போதே பேசி தீர்க்கப்படும் போது, அந்த விரிசல்கள் பெரிதாகாம‌ல் தடுக்கப்படுகிறது... அதை விடுத்து, அந்த உரசல்களை இருவரும் பெரிது படுத்தும்போது, அதுவே வாழ்வின் விரிசலுக்கு வழி வகுக்கிறது...

"நான் பெரிசும் இல்ல, நீ சிறிசும் இல்ல" எனும் சின்ன மந்திரத்தை புரிந்து, ஒவ்வொருவரும் வாழ்வின் ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைத்தால் துன்பம் நம்மை என்றும் அணுகுவதில்லை...

(ஆர்.கோபி / லாரன்ஸ்)

(முரசின் ஓசை இன்னும் சில பகுதிகளில் நிறையும்....... அதன் அதிர்வு நம்மிடையே தொடரும்)

22 comments:

மர தமிழன் said...

எதிர்பார்ப்பு என்பது இருமுனையிலும் கூரான கத்தி, வாழ்க்கையில் நாளை என்பது நிச்சயமில்லாத நிலையில் எதிர்பார்ப்பு படுத்தும் பாடு தான் ஈகோ வில் வந்து முடிகிறது. .ஆடாத ஆட்டமெல்லாம் ஆடியவர்கள் நோய் வாய் பட்டு சாகும் தருவாயில் அவருடன் இருந்தவர்களை கேட்டுப்பாருங்கள் சொல்வார்கள் வாழ்கையின் விசித்திரத்தை. ஒரு ஏரியாவில் ஒவ்வொரு நாளும் எத்தனை பேருக்கு நாய் கடிக்கிறது என்பது நமக்கு கடித்து அங்குள்ள ஆஸ்பத்திரியில் ஊசி போட போகும்போது தான் தெரிகிறது. மகாபாரதத்தில் கேட்கப்பட்ட 'உலகில் மிக சிரிப்பான விஷயம்' - மனிதன் மற்றவன் சாவை பார்த்த பிறகும் தனக்கு வராதென்று எண்ணிதிரிவது போல - எனக்கு எல்லாம் தெரியும் என்ற அகந்தை தான் வாழ்க்கை என்ற பயணத்திலிருந்து திசை மாறி செல்ல வைக்கிறது. மேலும் மனித வாழ்வில் கல்யாணம் என்பது ஒரு இனிப்பு வலைதான் மெதுவாய் தின்று வலை அறுத்து வந்த வேலை முடிக்கலாம், வயிறும் ரொம்பும் வாழ்வும் இனிக்கும்,

உழவு போலத்தான் இதுவும் - உலக வயலில் வாழ்க்கை பயிர்கள் நம்மாலேயே விதைக்கப்படுகிறது, நம்மாலேயே வளர்க்கப்படுகிறது, தூவும் விதை எல்லாம் ஒன்றேதான்.
பயிராகி மற்றவர்க்கு உதவுவதும், களையாகி மற்றவர் வாழ்வை துளைப்பதும் நம் கையில் தான் இருக்கிறது.

முட்களை தாண்டி ரோஜா மலர்வதும், மணப்பதும், தன்னை சுற்றி வாசம் தெளிப்பதும் நமக்கு தெரிவிப்பது என்ன? மனிதனின் ஜனனம் முதல் மரணம் வரையிலான தத்துவத்தின் ஹைக்கூ தானே.

முள்ளும், மலரும் தான் வாழ்க்கை, முள்ளை மறைத்து மலரை தருவோம் வாசமுள்ள வாழ்வு பெறுவோம்.

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

கலக்கிட்டீங்க, தல!
குடும்ப உறவுகள் எவ்வளவோ இருந்தாலும், மனைவியின் அருமை கொஞ்சம் பெரியதுதான். ஆயிரம் பிரச்சினைகள் வெளியில் இருந்தாலும், வீட்டுக்குள் வரும்போது மனைவியின் ஆதரவான வார்த்தைகள் சிறந்த தலைவலி நிவாரணி. அது போல், இருவரும் வேலை செய்பவர்களாக இருந்தால், இருவரும் மாலை வீட்டுக்கு வரும்போது ஒருவருக்கு ஒருவர் ஆறுதலாகவும், தேறுதலாகவும், பிரச்சினைகளை பரிமாறிக் கொண்டு, பரஸ்பரம் தீர்வுகள் யோசித்து அதை கடைபிடிக்கும் பொது, வாழ்க்கை, அமிர்தம் ஆவது உறுதி.
(ஒரு அருமையான
வாழ்க்கைத் துணை கிடைத்த பெருமையில்தான் இப்படி ஒரு பின்னூட்டம்.) தொடர்ந்து கலக்குங்க!

Geetha Achal said...

நல்ல பதிவு...அனைவரின் வாழ்கைக்கு தேவையான பகிர்வு.

அதிலும் 3 பயிண்ட் அருமை.

sreeja said...

என்ன திடீரென்று இந்த தாவு தாவிவிட்டீர்கள் ?

இளம் கல்வி, இனக்கவர்ச்சி, கவிதை, காதல் என்றுகூறி உடனே திருமணம் தானா ? அதற்கு நடுவில் இளைய பருவம் என்ற வலிமையான ஒன்று உள்ளாதே அதை ஏன் மறந்தீர்கள்?

இளய பருவத்தின் சக்தி, அதை மழுங்க செய்யும் சக்தி, அதிலிருந்து மீண்டு எழும் வழி, வழி பிறழாமல் மீண்டெழும் மார்கம் என்று பல கருத்துக்களை உங்கள் நகைச்சுவை பாணியில் எடுத்துரைக்கலாமே. இந்த இளய தலைமுறை எப்படியெல்லாம் பொழுதை வீணடிக்கின்றன என்று சொல்லி அதிலிருந்து விடுபடும் மார்கத்தையும் கூறலாமே.

குழைந்தைகள் - சொல்லி திருத்த காலமுண்டு
திருமணமானோர் - பட்டு தெரிந்துகொள்வார்கள்
இளைஞர்கள் - ரெண்டும்கெட்டான் ரகம். சமவயதினரை தவிர வேறு யார் சொன்னாலும் கேட்க கூடது என் வீராப்பில் இருப்பவர்கள்.

ஆகவே இந்த வாழ்க்கை ஓட்டத்தில் அதிகம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டியவர்கள் இளைஞர்களே என்பது என் கருத்து. அவர்களுக்காக இரண்டு பகுதிகளை ஒதுக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.

sindhusubash said...

அற்புதமான பதிவு.அப்பப்ப சின்ன சண்டைகளும் வாழ்க்கையின் சுவாரஸ்யத்தையும் அன்பின் ஆழத்தையும் கூட்டும்.அதுவே அன்றாட நிகழ்வுன்னா அதைவிட நரகமும் இல்லை.

சுசி said...

//நான் பெரிசும் இல்ல, நீ சிறிசும் இல்ல//
சூப்பருங்க....

//அதன் அதிர்வு நம்மிடையே தொடரும்//
உண்மைதாங்க....

R.Gopi said...

//மர தமிழன் said...
எதிர்பார்ப்பு என்பது இருமுனையிலும் கூரான கத்தி, வாழ்க்கையில் நாளை என்பது நிச்சயமில்லாத நிலையில் எதிர்பார்ப்பு படுத்தும் பாடு தான் ஈகோ வில் வந்து முடிகிறது. //

மிக சரி மர தமிழன் அவர்களே...

//ஆடாத ஆட்டமெல்லாம் ஆடியவர்கள் நோய் வாய் பட்டு சாகும் தருவாயில் அவருடன் இருந்தவர்களை கேட்டுப்பாருங்கள் சொல்வார்கள் வாழ்கையின் விசித்திரத்தை.//

இது தானே வாழ்வியலின் நடைமுறை உண்மை...

//எனக்கு எல்லாம் தெரியும் என்ற அகந்தை தான் வாழ்க்கை என்ற பயணத்திலிருந்து திசை மாறி செல்ல வைக்கிறது. மேலும் மனித வாழ்வில் கல்யாணம் என்பது ஒரு இனிப்பு வலைதான் மெதுவாய் தின்று வலை அறுத்து வந்த வேலை முடிக்கலாம், வயிறும் ரொம்பும் வாழ்வும் இனிக்கும்,//

மிக நல்ல கருத்து....

//உலக வயலில் வாழ்க்கை பயிர்கள் நம்மாலேயே விதைக்கப்படுகிறது, நம்மாலேயே வளர்க்கப்படுகிறது, தூவும் விதை எல்லாம் ஒன்றேதான்.
பயிராகி மற்றவர்க்கு உதவுவதும், களையாகி மற்றவர் வாழ்வை துளைப்பதும் நம் கையில் தான் இருக்கிறது.//

ஆஹா... இதையும் கூட பதிவில் இணைக்கலாம் போலிருக்கிறது...

//முள்ளும், மலரும் தான் வாழ்க்கை, முள்ளை மறைத்து மலரை தருவோம் வாசமுள்ள வாழ்வு பெறுவோம்.//

மிக மிக உயர்வான சிந்தனை...

தொடர் வருகைக்கும், ஆழ்ந்த கருத்துக்கும் மிக்க நன்றி மர தமிழன் அவர்களே...

R.Gopi said...

//பெயர் சொல்ல விருப்பமில்லை said...
கலக்கிட்டீங்க, தல!
குடும்ப உறவுகள் எவ்வளவோ இருந்தாலும், மனைவியின் அருமை கொஞ்சம் பெரியதுதான். ஆயிரம் பிரச்சினைகள் வெளியில் இருந்தாலும், வீட்டுக்குள் வரும்போது மனைவியின் ஆதரவான வார்த்தைகள் சிறந்த தலைவலி நிவாரணி. அது போல், இருவரும் வேலை செய்பவர்களாக இருந்தால், இருவரும் மாலை வீட்டுக்கு வரும்போது ஒருவருக்கு ஒருவர் ஆறுதலாகவும், தேறுதலாகவும், பிரச்சினைகளை பரிமாறிக் கொண்டு, பரஸ்பரம் தீர்வுகள் யோசித்து அதை கடைபிடிக்கும் பொது, வாழ்க்கை, அமிர்தம் ஆவது உறுதி.
(ஒரு அருமையான
வாழ்க்கைத் துணை கிடைத்த பெருமையில்தான் இப்படி ஒரு பின்னூட்டம்.) தொடர்ந்து கலக்குங்க!//

வாருங்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை அவர்களே..

மனைவியை பற்றி நீங்கள் சிலாகித்து சொன்னது மிக அருமை... அழகான மனைவி, அன்பான துணைவி அமைந்தாலே பேரின்பமே... வாழ்க்கையில் வேறென்ன வேண்டும்...!!??

வருகைக்கும், கருத்து பரிமாறி வாழ்த்தியதற்கும் மிக்க நன்றி...

R.Gopi said...

//Geetha Achal said...
நல்ல பதிவு...அனைவரின் வாழ்கைக்கு தேவையான பகிர்வு.

அதிலும் 3 பயிண்ட் அருமை.//

வாங்க கீதா... தொடர்ந்து வருகை தந்து, பதிவை படித்து பாராட்டுவதற்கு எங்களின் மனம் கனிந்த நன்றி....

R.Gopi said...

//sreeja said...
என்ன திடீரென்று இந்த தாவு தாவிவிட்டீர்கள் ?

இளம் கல்வி, இனக்கவர்ச்சி, கவிதை, காதல் என்றுகூறி உடனே திருமணம் தானா ? அதற்கு நடுவில் இளைய பருவம் என்ற வலிமையான ஒன்று உள்ளாதே அதை ஏன் மறந்தீர்கள்?//

ஓஹோ... அது விடுபட்டு விட்டதோ!!??

//இளய பருவத்தின் சக்தி, அதை மழுங்க செய்யும் சக்தி, அதிலிருந்து மீண்டு எழும் வழி, வழி பிறழாமல் மீண்டெழும் மார்கம் என்று பல கருத்துக்களை உங்கள் நகைச்சுவை பாணியில் எடுத்துரைக்கலாமே. இந்த இளய தலைமுறை எப்படியெல்லாம் பொழுதை வீணடிக்கின்றன என்று சொல்லி அதிலிருந்து விடுபடும் மார்கத்தையும் கூறலாமே.//

கண்டிப்பாக கூறலாம்... றலாம்...லாம்...ம்...

//குழைந்தைகள் - சொல்லி திருத்த காலமுண்டு
திருமணமானோர் - பட்டு தெரிந்துகொள்வார்கள்
இளைஞர்கள் - ரெண்டும்கெட்டான் ரகம். சமவயதினரை தவிர வேறு யார் சொன்னாலும் கேட்க கூடது என் வீராப்பில் இருப்பவர்கள்.//

ஹா...ஹா...ஹா... அதுதானே அந்த வயதின் வேகம்!??

//ஆகவே இந்த வாழ்க்கை ஓட்டத்தில் அதிகம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டியவர்கள் இளைஞர்களே என்பது என் கருத்து. அவர்களுக்காக இரண்டு பகுதிகளை ஒதுக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.//

கண்டிப்பாக ஸ்ரீஜா மேடம்... நீங்கள் சொன்ன கருத்துக்கள் பரிசீலிக்கப்படும்...

R.Gopi said...

//sindhusubash said...
அற்புதமான பதிவு.அப்பப்ப சின்ன சண்டைகளும் வாழ்க்கையின் சுவாரஸ்யத்தையும் அன்பின் ஆழத்தையும் கூட்டும்.அதுவே அன்றாட நிகழ்வுன்னா அதைவிட நரகமும் இல்லை.//

-****

வாங்க சிந்துசுபாஷ்...

வாழ்க்கையில் சிறு ஊடலின் தொடர்ச்சியாக கூடல் வருவது ரசிக்கத்தக்கது... விட்டு கொடுத்தலும், சம உரிமை கொடுத்தலும், பரஸ்பர புரிதலுமே மகிழ்ச்சியான வாழ்வுக்கு இன்றியமையாதது...

தொடர் வருகைக்கும், கருத்து பகிர்தலுக்கும் எங்கள் நன்றி...

R.Gopi said...

//சுசி said...
//நான் பெரிசும் இல்ல, நீ சிறிசும் இல்ல//
சூப்பருங்க....

//அதன் அதிர்வு நம்மிடையே தொடரும்//
உண்மைதாங்க....//

*****

வாங்க சுசி... தொடர்ந்து வருகை தந்து, பதிவை படித்து கருத்து பகிரும் உங்களுக்கு எங்கள் நன்றி...

KALYANARAMAN RAGHAVAN said...

//ஒப்பனா பேசுறேன் பேர்வழி என்று கட்டியவளை கழுத்துறுக்காமல் பொறுமையாய் குடித்தனம் செய்யலாம். கிணத்து தண்ணிய ஆத்து வெள்ளமா அடிச்சுட்டு போறது//

சரியாகச் சொன்னீர்கள். நல்ல பதிவை படித்த திருப்தி.

ரேகா ராகவன்.

R.Gopi said...

//KALYANARAMAN RAGHAVAN said...
//ஒப்பனா பேசுறேன் பேர்வழி என்று கட்டியவளை கழுத்துறுக்காமல் பொறுமையாய் குடித்தனம் செய்யலாம். கிணத்து தண்ணிய ஆத்து வெள்ளமா அடிச்சுட்டு போறது//

சரியாகச் சொன்னீர்கள். நல்ல பதிவை படித்த திருப்தி.

ரேகா ராகவன்.//

*********

வாங்க ராகவன் சார்...

வருகை தந்து, பதிவை படித்து, கருத்து சொன்னமைக்கு எங்கள் நன்றி...

மற்ற பகுதிகளையும் படித்து உங்கள் மேலான கருத்தை சொல்லவும்...

R.Gopi said...

இந்த பதிவிற்கு தமிழிஷில் வாக்களித்து பிரபலமாக்கிய உங்கள் அனைவருக்கும் எங்கள் நன்றி....

mohamedFeros
csKrishna
anubagavan
Raghavan
ldnkarthik
spice74
Mahizh
ambuli

கோமதி அரசு said...

வாழ்க்கை பகுதி நான்காவதும் மிக மிக அருமையாக உள்ளது.

காதல்,திருமணம்பற்றிய விளக்கம்
நன்று.

திருமணம் பந்தம் நல்ல முறையில் இருக்க நீங்கள் கூறும் நாலுவழிகளும்
சிறந்தது,பின்பற்ற எளிதானது.

பொறுமை விட்டுக்கொடுத்தல்,
தியாகம் (சகிப்புதன்மை)எனற மூன்றையும் இடம், காலம்,தொடர்பு
கொள்ளும் மக்கள் இவற்றிற்கேற்ப பயன்படுத்தினால் உலகையே நீ உன் வசமாக்கிக் கொள்ளலாம். பிறரிடம் உள்ள திறமையயைஎண்ணிப் பார்ப்பது
அவர்களோடு எவ்வாறு பழகுவது என்பதை வகுத்துக் கொள்ள உதவும்.
வெறுப்பு கொள்வதற்கு அன்று. பிறரிடமுள்ள நல்லவைகளை நினைத்து நினைத்து பாராட்டு. நன்றி செலுத்து.இங்குதான் உனக்கு அமைதியும் நிறைவும் உண்டாம் இவற்றையெல்லாம் தெரிந்து கொண்டால் போதாது,பழ்க்கத்தில் கொண்டு வ்ந்து வெற்றி பெறு.

பொறுமை,சகிப்புத்தன்மை இவை எல்லையின்றி தேவையாகும்.

பிறர் குற்றத்தைப் பெரிது படுத்தாமையும்,பொறுத்தலும், மறத்தலும் அமைதிக்கு வழிகளாகும்.

இவை வேதாத்திரி மகரிஷி சொல்லும்
அறிவுரைகள்.

நாள்தோறும் நம் நன்மைக்கு பாடு படும் வாழ்க்கை துணையிட்ம் தான்
நமக்கு கோபம் ஏற்படுகிறது .

நல்ல சிந்தனைகளை தூண்டும் வாழ்க்கை முரசு உரக்க ஒலிக்கட்டும்

வாழ்த்துக்கள் உங்கள் இருவருக்கும்.
வெற்றி தொடரட்டும்.

R.Gopi said...

// கோமதி அரசு said...

வாழ்க்கை பகுதி நான்காவதும் மிக மிக அருமையாக உள்ளது.

காதல்,திருமணம் பற்றிய விளக்கம் நன்று.

திருமணம் பந்தம் நல்ல முறையில் இருக்க நீங்கள் கூறும் நாலுவழிகளும் சிறந்தது,பின்பற்ற எளிதானது.

பொறுமை விட்டுக்கொடுத்தல்,தியாகம் (சகிப்புதன்மை)எனற மூன்றையும் இடம், காலம்,தொடர்பு கொள்ளும் மக்கள் இவற்றிற்கேற்ப பயன்படுத்தினால் உலகையே நீ உன் வசமாக்கிக் கொள்ளலாம். பிறரிடம் உள்ள திறமையயை எண்ணிப் பார்ப்பது, அவர்களோடு எவ்வாறு பழகுவது என்பதை வகுத்துக் கொள்ள உதவும்.
வெறுப்பு கொள்வதற்கு அன்று.

பிறரிடமுள்ள நல்லவைகளை நினைத்து நினைத்து பாராட்டு. நன்றி செலுத்து. இங்குதான் உனக்கு அமைதியும் நிறைவும் உண்டாம் இவற்றையெல்லாம் தெரிந்து கொண்டால் போதாது,பழ்க்கத்தில் கொண்டு வ்ந்து வெற்றி பெறு.

பொறுமை,சகிப்புத்தன்மை இவை எல்லையின்றி தேவையாகும்.

பிறர் குற்றத்தைப் பெரிது படுத்தாமையும்,பொறுத்தலும், மறத்தலும் அமைதிக்கு வழிகளாகும்.

இவை வேதாத்திரி மகரிஷி சொல்லும் அறிவுரைகள்.

நாள்தோறும் நம் நன்மைக்கு பாடு படும் வாழ்க்கை துணையிடம் தான் நமக்கு கோபம் ஏற்படுகிறது .

நல்ல சிந்தனைகளை தூண்டும் வாழ்க்கை முரசு உரக்க ஒலிக்கட்டும்

வாழ்த்துக்கள் உங்கள் இருவருக்கும். வெற்றி தொடரட்டும்.//

************

வாங்க கோமதி மேடம்... தொடர் வருகை தந்து, பதிவை படித்து, விரிவாக பின்னூட்டமிடும் உங்கள் பாங்கு எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது... வேதாந்த மகரிஷி அவர்களின் கருத்தை இங்கு அளித்தது டபுள் மகிழ்ச்சி..

கவிநயா said...

4 கருத்துகளும் அருமை. சின்ன சின்ன விஷயங்களை வெளிப்படையாக பேசிக் கொள்ளாமல்தான் பல விரிசல்கள் நிகழ்கின்றன. யோசிக்க வேண்டிய செய்திகளை அருமையாகத் தந்திருக்கிறீர்கள். நன்றி.

R.Gopi said...

//கவிநயா said...
4 கருத்துகளும் அருமை. சின்ன சின்ன விஷயங்களை வெளிப்படையாக பேசிக் கொள்ளாமல்தான் பல விரிசல்கள் நிகழ்கின்றன. யோசிக்க வேண்டிய செய்திகளை அருமையாகத் தந்திருக்கிறீர்கள். நன்றி.//

*******

வாங்க கவிநயா. மிக சரியாக சொன்னீர்கள்... வெளிப்படையாக பேசி கொண்டால், பிரச்சனைகள் எதுவும் வரவே வராது...

வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி....

தமிழ். சரவணன் said...

//இது போன்று விரிசல் கண்ட பல குடும்பங்கள் தங்கள் வாழ்வை தொலைத்து விட்டு, ஆங்காங்கே நீதிமன்றங்களில் காணப்படுகிறது...இதற்கு காரணம் இருவரின் மன மன்றங்களிலும் தோன்றும் அந்த ஈகோ என்ற ஒரு விஷயம்... இந்த ஒரு விஷயத்தை தொலைத்தால், பின்னாளில் நாம் வாழ்வை தொலைக்க வேண்டியதில்லை... சாய்ஸ் நம்மிடம்தான். சிறு புரிதலில் வாழ்வை பெறுவது நல்லதா... இல்லை ஒரு சிறிய ஈகோவினால், வாழ்வை இழப்பது நல்லதா என்பதை சிந்தனை செய்வோம்... நினைவில் நிறுத்துவோம்//

அன்பிற்குரிய நண்பர் அவர்களுக்கு,

தங்கள் கட்டுரையை படித்தேன் அருமை... சென்னையில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் மட்டும் ஒரு நாளைக்கு சுமார் 30 விவாகரத்து வழக்குகள் பதிவாகின்றன் மற்றும் அதிகபட்சமாக 75 வழக்குகள் பதிவான நாட்களும் உண்டு... இது போல் பிரிவினைகளால் ஆண்டொன்றுக்கு சுமார் 20,000 ஆயிரம் குழந்தைகள் தந்தையின் அரவனைபில்லாமல் வளர்கின்றது எனது குழந்தை உட்பட மற்றும் வரதட்சணை கொடுமை சட்டத்தினை பயன்படுத்தி இதுவரைக்கும் சுமார் 1,50,000 பெண்கள் மட்டும் (மாமியார், நாத்தனார் மற்றும் குடும்ப உறவினர்கள் ஆனால் எனது வழக்கில் வித்தியாசமாக என் தம்பி நண்பருடைய தாயரும் கைது செய்யப்பட்டு 5ந்து நாட்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்)

இதுபோல் குடும்பத்தை சீரழிக்கும் பெண்களை (???) என்னவென்று சொல்வது?

அன்புடன் தமிழ். சரவணன்

R.Gopi said...

தோழமை தமிழ் சரவணன் அவர்களுக்கு....

கேள்விப்பட்ட நிறைய விஷயங்களே இது போன்ற தொடரில் இடம் பெறுகிறது....

வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சரவணன்....

cdhurai said...

பதிவுலகில் முத்திரை பதித்துவரும் அன்பரே,

இந்த பதிவுலகிற்கு புதியவன் ஒரு காதல் கதை எழுதியுள்ளேன்..தங்களது ஆதரவை விரும்பி, தங்களே எனது வலைக்கு அழைக்கிறேன்….

http://idhayame.blogspot.com/2009/11/blog-post_12.html

அன்புடன்

செல்லத்துரை…..