வாழ்க்கை : பகுதி 2

(சாரி! ஷமிக்கணும்... இந்த பகுதி கொஞ்சம் சின்னதாப் போச்சு....)

முழக்கமாய் விரிந்த முதல் மூச்சு, தங்கள் விழிகளில் மலர்ந்து, மண்டைக்குள் புகுந்து விரல்களின் வழி பின்னூட்டமாய் பார்த்த போது, ஜிலீர் ஜிவ்வ்வ்வ்", ஆஹா!!! நச்சுன்னு ஒரு ஃபீல்.

பரஸ்பர அன்பில் நாங்கள் நினைத்ததை பங்கு வைத்த போது நல்லா இருக்கு, ரசிக்கிறோம் எனும்போது ரொம்ப சந்தோஷ‌ம். தங்கள் பின்னூட்டத்தை எதிர்பார்க்கிறோம் என விடுத்த வேண்டுகோளுக்கு செவிசாய்த்த அத்தனை நெஞ்சங்களுக்கும் ஒரு ஸ்பெஷல் நன்றி.

இந்த வாழ்க்கைத் தொடர் எது. தெளிவாய் விளக்கும் சித்தாந்தமா, இல்லை தெரியாமல் குழ‌ப்பும் வேதாந்தமா என ஒரு தன்னிலை விளக்கம். பகுத்தறியும் நம் அறிவில், வாழ்க்கை பற்றி சிலபஸில் வராத சில பாட திட்டங்கள் உள்ளன. அவை எப்போதுமே சாய்ஸில் போய்விடும்.. அதை நாம் உணர வாய்ப்பும் கம்மி.

ஒரு பிரபல ஆங்கில இலக்கியவாதி சொல்லுவான். நம் மூளை ஒரு சூப்பர் கம்புயூட்டர். என்ன ஒரு கொடுமை. முழுக்க இன்ஸ்டால் செய்து, ரெடியாக நம்மிடம் கொடுத்து விட்டார்கள். யூசர் மானுவல் மட்டும் இல்லை.

பிறப்பு, இறப்பு எனும் சமாச்சாரங்கள் நாம் தெ(ரி)ளிய கொஞ்சம் கஷ்டம். உணர வாய்ப்பும் கம்மி. அது அறிஞர்களின் விளக்கத்தை சார்ந்தே உள்ளது. வாழ்வியல் பிரச்சனை சில சந்திக்கும் போது தன்னம்பிக்கை இழந்து, அவசரக் குடுக்கையாய் தற்கொலை செய்யும் மனிதனை எப்படி கொள்வது. ஆன்மா தான் நீ!!! எனும் இந்திய வாக்கியமோ, மே த ஸோல் ரெஸ்ட் இன் பீஸ்!!! எனும் ஆங்கில வாசகமோ, முடிவில்லா வாழ்க்கை! எனும் முழக்கமோ பயணிப்பது ஒரே பாதையில்.

சராசரி சிந்தையில் ஆழமாய் நாம் செல்வது இல்லை. அது என்ன, ஏன் இப்படி என கேள்வி கேட்பது இல்லை. பயம் காரணமோ, இதெல்லாம் எதுக்குங்க... வேணாம் விட்டுடுவோம் என நினைப்புக்களோ எதுவோ ஒன்று நம் எல்லா மனித மனங்களையும் இணைக்காமல் இரு கூறாக்கி (சுக்கு நூறு அல்ல...) விடும் கூராக உள்ளது.

அந்த மிகப் பெரிய சப்ஜெக்ட்டை கொஞ்சம் பக்கத்தில் உக்கார வைத்து விட்டு. முதல் மூச்சில் தொடங்கி, இறுதி மூச்சு வரை நம் மனித வாழ்வை கொஞ்சம் அருகில் பார்க்கலாமே எனும் சிந்தனையே இந்த தொடர்.

சில தகவல்களை அலசி, உடனே செயல் படுத்த சில வினைகளை உருவாக்கினால் எப்படிங்க..... முதல் பகுதி படித்து விட்டு நன்றியோடு அப்பா அம்மாவை நினைச்சா, நம்ம முதல் பகுதி சூப்பர். அது தான் நோக்கம். இதுவே ஒரு தொலைபேசி, அன்பான மெய் தீண்டல், நச்சுன்னு ஒரு கிஸ், வாய் நிறைய சோறு, மனம் நிறைந்த புன்னகை, இப்படி தங்கள் வசதிக்கேற்ப எக்ஸ்டிராவாய் ஏதாவது நிறைவேறியிருந்தால் சூப்பரோ சூப்பர், படு சூப்பர்.

உரிமையாய் சட்டையை பிடிச்சு ஒரு தோழமை கேட்டது. கரெக்டா சொல்லு, இது நீங்களே எழுதுனதா, இல்ல மண்டபத்தில யாராவது சொன்னதா/எழுதி கொடுத்ததான்னு. பாருங்க எவ்வளவு கஷ்டப்பட்டு காலால ஓடினாலும், ரன்னிங் ரேஸ்ல ஃப‌ர்ஸ்ட் வந்தா, கூப்பிட்டு கையில தான் கப்பு கொடுக்கிறாங்க, காலுக்கு கொடுக்குறதில்ல. அதாங்க உலகம்... உக்காந்து யோசிக்கிறோம்..., ரூம் போட்டு. அவ்வளவுதான்.

இதே சிந்தனையை யாரோ ஒருத்தர் ஏதாவது ஒரு தருணத்தில் சொல்லித்தான் இருப்பாங்க.

‘பிறப்பை தேர்ந்தெடுக்கும் இறப்பை தேர்ந்தெடுக்கும் உரிமை உன்னிடத்தில் இல்லை,
நிறத்தை தேர்ந்தெடுக்கும், குணத்தை தேர்ந்தெடுக்கும் உரிமை உன்னிடத்தில் இல்லை'

என (படையப்பா படத்தில், ஓஹோஹோ...கிக்கு ஏறுதே...) சினிமா பாட்டில் சொன்னதை, ஃபுல் பாட்டில் கவுத்திட்டு நம்ம " "புளியங்கொட்டை ராமசாமி"யும் சொன்னார். அது போல சில சிந்தைகளை ‘நாங்கதான் யோசிச்சு சொன்னோம்’ என சொல்லவும் பிளான் இருக்கு.

துணையிருப்போம் இறுதிவரை என பின்னூட்டம் இட்ட தங்கள் அன்பு, பெருந்தன்மை, ஆக்கும் மன நெகிழ்ச்சி எங்கள் கண்களை பனிக்க வைக்கிறது (இது "தல" சொன்ன அந்த கண்கள் பனித்தது...இதயம் இனித்தது போல இல்லை...).

ஸ்ரெய்டாச் சொல்லு, இந்த பச்ச பிசின் மேட்டர் கரெக்ட் தானான்னா, ஆமாங்க என்றோம். அவரே தொடர்ந்து ‘ஆங்.. அதான், பச்சை பிள்ளன்னு சொல்றோமான்னார். இல்லைங்க அது வந்து பசுமையின் மொழித்திரிபு என விளக்காமல், பச்சை பச்சையா பேசுறான் என்பதில் கொச்சை எனும் அர்த்தம் தொனிக்கிறதே!!!! அது ஏங்க??? என எதிர் கேள்வி கேட்டோம். ... அதுவும் பச்சைதான!

என்னங்க செய்யுறது என் வாழ்க்கையை, நான் என்ன வைச்சுக்கிட்டா வஞ்சகம் செய்யுறேன். முயற்சி செய்யுறேன், முடியல என சில சமயம் தோன்றியிருக்கிறது. வாருங்களேன் நண்பர் சிம்பிள் சுந்தரை (www.onlyrajini.com) வம்புக்கு இழுத்து ஒரு கற்பனை செய்துள்ளோம், அவர் மன்னிப்பார் அல்லது எங்களை உரிமையாய் கோபித்து கொள்வார்...

ரஜினியின் தீவிர ரசிகர் அவர். ஒரு குத்து மதிப்பாய் அகில உலகே எதிர்பார்க்கும் ‘எந்திரன்’ பட ரீலிஸ் போது அலுவலக வேலையாய் உகாண்டா சென்று விட்டார் எனத் தொடங்குவோம். தவிர்க்க முடியாத காரணத்தால் உகாண்டா வந்து விட்டாலும் கூட எப்படியும் படம் பார்க்க வேண்டும் என டிசைட் செய்து விட்டார். அக்கம் பக்கத்தில் விசாரிக்கும் போது வாயில் நுழையாத ஏரியாவில் (டகாமா டொமேகா) ஒரு தியேட்டரில், எந்திரன் பட‌ம் ரிலீஸ்.

துள்ளி குதித்து சினிமா பார்க்க கிளம்பி விட்டார். சென்னையில் படம் பார்க்க விடாத விதியும் துள்ளி குதித்து அவரோடே டிக்கெட் வாங்காமல் பஸ்ஸில் பயணிக்கிறது. தியேட்டர் வந்தாச்சு. பெரிய க்யூ. சுந்தரும் வரிசையில் நின்று திக்... திக்... மனதோடு. விதியும் அப்படியே. கடைசி கடைசியா கவுண்டர்ல கை விடும் போது டொம்ன்னு சத்தம்.. என்னன்னு பார்த்தா, குளோஸ் பண்ணி ஹவுஸ் புல் போடு மாட்டிட்டாங்க... சுந்தர் வெறுத்துட்டார். விதி சிரிச்சுது. வேற வழி... கூடவே அவரும் சிரிச்சார்...

பக்கத்துல உள்ள எல்லார் கிட்டயும் ‘எக்ஸ்யூஸ்மி மிஸ்டர் கந்தசாமி, எக்ஸ்டிரா டிக்கெட் கண்ணுல காமி’, "ப்ளாக்ல ஒரே ஒரு டிக்கெட்டாவது கிடைக்குமா?" என துளாவ, "உகாண்டா ப்ரைம் மினிஸ்டருக்கே" அடுத்த ஷோ டிக்கட் தான் இருக்காம்... ஒண்ணும் பிரயோசனமில்ல, கடைசியா ஒரு காம்ரேட் சாயந்தரம் ஷோவுக்கு டிக்கட் இருக்கு வேணுமா’ இன்னு கேக்க, ஓகேன்னு புடுங்கிட்டார்.

இதுல பாத்தீங்க‌ன்னா, "எந்திரன்" படம் பாக்கணும்ங்கற‌ இலக்கு, சோதனைகளை சந்திச்சப்போ சிம்பிள் சுந்தர் என்ன செஞ்சார். அடுத்த அடுத்த வழிகள பார்த்தார். நின்னு புலம்பி இருக்கலாம். அதுக்கு நேரம் செலவழிக்காம ஓட்டம்... ஓட்டம்... வாழ்வின் எல்லை வரை ஓட்டம்.

விஞ்ஞான கவிஞர் வெத்து வேட்டு வீராச்சாமி இதப்பத்தி சொல்லும்போது, ‘கேல‌ண்ட‌ர்ல நாம என்ன‌ தேதி கிழிச்சோம்ங்க‌ற‌து முக்கிய‌ம் இல்ல‌ கிழிச்ச‌ தேதியில‌, நாம‌ என்ன‌த்த‌ கிழிச்சோம்ங்க‌ற‌துதான் முக்கிய‌ம்...’ என்றார்... அடாடாடா... என்ன தத்துவம்... என்ன தத்துவம்...

வாழ்க்கை நமக்கு ரெண்டு சாய்ஸ் தருது. ஒண்ணு பிடி...உடும்பு பிடி இல்லைன்னா, அடுத்தது புலம்பல்.

எது சரி! நம்ம எல்லாருமே முதல் சாய்ஸ்தான் முடிவு செய்யுற ஆளுங்க. பிடி... உடும்பு பிடி.... டவுட்டா!!! நின்னுட்டீங்கன்னா..... அடுத்த பாராவுக்கு வாங்க. நீங்க முயற்சி குறைவில்லாத, சில முயற்சிகள் தவறினாக் கூட லேசில விடுர ஆளு இல்லைன்னு நாங்க ப்ரூவ் பண்ணுறோம்.

‘முதுகுளத்தூர் அருகே, பழவந்தாங்கல் பக்கம், மல்லை கடலோரம்.... மல்லாட்டை பயிரறுத்து...கட்டிய மூடையில் பாதி காணாமல் போனதால்... கோபம் கொண்ட‌ கோப்பெரும் செங்கண்ணனின் ..... ‘ மேலே சொன்ன வார்த்தையை உங்களால் உரக்கச் சொல்ல முடிகிறதா. வேணும்னா வாசிக்குறத நிறுத்திட்டு அக்கம் பக்கம் பார்த்திட்டு, உரக்கச் சொல்லி பாருங்கள். முடிகிறது என்றால் "தளராத தன்னம்பிக்கையான முயற்சியின் தளபதி" நீங்கள்.

பிறந்த குழந்தை தன் மூன்றாம் மாதம் தொடங்கி தன்னை சுற்றியுள்ள ஓசை கேட்க தொடங்குகிறது. பின்னர், ஆறு மாதம் முதல் அதை முயற்சிக்கிறது. மா.... எனத் தொடங்கி கொஞ்ச காலத்தில் ம்... என அழுத்தம் கொடுத்து ம்...மா.... என தொடர்ந்து பின் அம்மா என சொல்லி பரமாத்மா என பக்குவமாய் சொல்ல ஒரு மூணு முதல் நாலு வயது வரை ஆகிறது.

பிறக்கும் போது நமது நாக்கும், குரல் வளையும் பேச வலு இல்லாமல் உள்ளது. நம் முயற்சியால் செய்யும் பயிற்சியால் மட்டுமே பேச முடிகிறது. பிறவியில் காது கேளாத குழந்தைகள், முதல் மூன்று வருடங்களில் செய்யத் தவறுகிற இந்த செயலே அவர்களை ஊமைகளாக ஆக்கி விடுகிறது. காது கேக்காததால் பேசும் வல்லமையை இழக்கும் பரிதாவம், முயற்சி என கேட்கும் போது மனம் பதறுகிறது. விளையாட்டாய் நாம் செய்த விசயம் எவ்வளவு பெரிசு என்பது புரிகிறது.

தொடர்ச்சியாய் மூன்று வருடம் இதை செய்தோமே, அடுத்தவர் கேலி என்பதை புறந்தள்ளினோமே. மழலை என வீட்டார் கொண்டாடினாலும், மக்கர் பண்ணுதுடாய் என அக்கம் பக்கம் சொன்னாலும் வெறும் சிறிப்பில் நம் ராஜ பாட்டையில் நடந்தோமே. இன்று அந்த தளராத தன்மை எங்கே உள்ளது என தேடச் சொல்லுகிறது.


முந்தைய அத்தியாயத்தில் நம் விருப்பு வெறுப்பு இன்றி திணிக்கப்பட்டதாய் சொன்ன அடையாளம் சில. நிறம், உடலமைப்பு, குரல், தாய், தாய் மொழி.....
லக்னோவில பொறந்தா வெறும் தாஸ், அதுவே லண்டன்ல பொறந்தா அவரு லார்ட் லபக்தாஸ். நாம் இந்த குடும்பத்தில் பிள்ளையாய் பிறந்ததால் நம் இனம், மொழி, மதம், பழக்கம், உணவு முறை எல்லாம் நாமாயிருக்கிறது.


இன்னும் கொஞ்சம் கலரா பொறந்திருக்கலாம், அரவிந்த் சாமி மாதிரி... இன்னும் இரண்டு இஞ்ச் உயரமா இருந்திருக்கலாம், அமிதாப் மாதிரி...ராஜீவ் காந்திக்கு பிள்ளையா பிறந்திருக்கலாம். இந்த மாதிரி அந்த மாதிரியா நினைவுகளில் தவறில்லை. நேர விரயம், காலம் வெகு சடுதியில் நகர்கிறது.

முக்கியமாய் முதல் படியாய் இருகூறாய் இதை பிரிக்கலாம்.
மாற்ற முடியாதது, மாற்ற முனைவது.

நிறம் பிடிக்கவில்லையா, மூக்கு பிடிக்கவில்லையா மாற்றுங்களேன். முகம், மூக்கு என்று அனைத்தையும் மாற்றிய மைக்கேல் ஜாக்ஸன் இல்லையா பின்ன. என்ன, அந்த பணமும், நேரமும் மெனக்கெடும் அவசியம் என பட்டால்... ஆல் த பெஸ்ட்!!!. இல்லை என நினைக்கிறீர்களா, நான் இவ்வளவுதான், இது தான் நான் என புலம்பலை புண்ணாக்கு தின்ன சொல்லிவிட்டு உலகிற்கு முரசறைந்து விட்டு நம் வேலையை தொடங்கிவிடலாம்..

புலம்ப‌லில்லாத முயற்சி முறசரையும்....

(இன்னும் வரும்......)

36 comments:

தியாவின் பேனா said...

பதிவு அருமை

kppradeep said...

Dear Gopiji,
Please read the following about death by —Sri Sri Paramahansa Yogananda


Understanding Death

Though the ordinary man looks upon death with dread and sadness, those who have gone before know it as a wondrous experience of peace and freedom.
—Sri Sri Paramahansa Yogananda

At death, you forget all the limitations of the physical body and realize how free you are. For the first few seconds there is a sense of fear -- fear of the unknown, of something unfamiliar to the consciousness. But after that comes a great realization: the soul feels a joyous sense of relief and freedom. You know that you exist apart from the mortal body.
—Sri Sri Paramahansa Yogananda

The consciousness of the dying man finds itself suddenly relieved of the weight of the body, of the necessity to breathe, and of any physical pain. A sense of soaring through a tunnel of very peaceful, hazy, dim light is experienced by the soul. Then the soul drifts into a state of oblivious sleep, a million times deeper and more enjoyable than the deepest sleep experienced in the physical body.... The after-death state is variously experienced by different people in accordance with their modes of living while on earth. Just as different people vary in the duration and depth of their sleep, so do they vary in their experiences after death.
—Sri Sri Paramahansa Yogananda

Every one of us is going to die someday, so there is no use in being afraid of death. You don't feel miserable at the prospect of losing consciousness of your body in sleep; you accept sleep as a state of freedom to look forward to. So is death; it is a state of rest, a pension from this life. There is nothing to fear. When death comes, laugh at it. Death is only an experience through which you are meant to learn a great lesson: you cannot die.
—Sri Sri Paramahansa Yogananda

Our real self, the soul, is immortal. We may sleep for a little while in that change called death, but we can never be destroyed. We exist, and that existence is eternal. The wave comes to the shore, and then goes back to the sea; it is not lost. It becomes one with the ocean, or returns again in the form of another wave. This body has come, and it will vanish; but the soul essence within it will never cease to exist. Nothing can terminate that eternal consciousness.
—Sri Sri Paramahansa Yogananda


The selections featured here are excerpted from Paramahansa Yogananda's book, WHERE THERE IS LIGHT : Insight & Inspiration for Meeting Life's Challenges.

Please note: Copyright © Yogoda Satsanga Society of India/Self-Realization Fellowship. All rights reserved. Except for your own personal use, or for brief quotations in reviews, no part of this page may be reproduced or transmitted without permission in writing from Yogoda Satsanga Society of India.

சுசி said...

//நான் இவ்வளவுதான், இது தான் நான் என புலம்பலை புண்ணாக்கு தின்ன சொல்லிவிட்டு //

சிரிப்போட சிந்திக்க வைக்கிறீங்க...

சூப்பர்...

R.Gopi said...

//தியாவின் பேனா said...
பதிவு அருமை//

*******

வ‌ருகை தந்து, ப‌திவை ப‌டித்து, பாராட்டிய‌த‌ற்கு எங்க‌ள் ம‌ன‌மார்ந்த‌ ந‌ன்றி தியா...

R.Gopi said...

Pradeep ji

Thanks for your continuous support. Sri Sri Paramananda Yogananda'w writing about DEATH is very good....

R.Gopi said...

//சுசி said...
//நான் இவ்வளவுதான், இது தான் நான் என புலம்பலை புண்ணாக்கு தின்ன சொல்லிவிட்டு //

சிரிப்போட சிந்திக்க வைக்கிறீங்க...

சூப்பர்...//

***********

வந்திருந்து, ரசித்து ப‌டித்து, வாழ்த்திய‌ தோழ‌மை சுசி அவ‌ர்க‌ளே... உங்க‌ளுக்கு எங்க‌ளின் ந‌ன்றி......

sreeja said...

கொஞ்சம் சீரியசாகவே தொடர் வேகமெடுக்கிறது.

உண்மயில் சொல்லப்போனால், நகைச்சுவை கலந்து இருந்தாலும் பதிவின் வீரியம் சிரிப்பதை விட சிந்தனையயே அதிகம் தூண்டுகிறது என்பதை மறுப்பதற்கில்லை.

// தொடர்ச்சியாய் மூன்று வருடம் இதை செய்தோமே, அடுத்தவர் கேலி என்பதை புறந்தள்ளினோமே. மழலை என வீட்டார் கொண்டாடினாலும், மக்கர் பண்ணுதுடாய் என அக்கம் பக்கம் சொன்னாலும் வெறும் சிறிப்பில் நம் ராஜ பாட்டையில் நடந்தோமே. இன்று அந்த தளராத தன்மை எங்கே உள்ளது என தேடச் சொல்லுகிறது. // - - பலநேரம் மறந்து போன ஒன்றை நினைவு படுத்திய வரிகள்.

பொழுதுபோக்கு என்று இந்த கால பிளாக்குகள் பக்கத்தை நிரப்ப முயற்சி எடுக்கும் வேளயில், பொழுதை நற்பொழுதாக போக்க நீங்கள் எடுக்கும் முயற்சிக்கு வணக்கங்கள்.

கோபி - ரஜினி ரசிகர் - அதனால் ரஜினியின் பாடல் வரிகள் அதிகம் மேற்கோள் காட்டப்படுகிறதோ?

ரஜினியின் பாடல்களில் தத்துவம் என்று தலைப்பிட்டு ஒரு பதிவு போடலாமே - நன்றாக இருக்கும் - பாடலாசிரியரின் பெயர் கண்டிப்பாக குறிப்பிட படவேண்டும். (ஏற்கனவே ப்திவிட்டிருந்தால் லின்க் தரவும்).

R.Gopi said...

//sreeja said...
கொஞ்சம் சீரியசாகவே தொடர் வேகமெடுக்கிறது.

உண்மயில் சொல்லப்போனால், நகைச்சுவை கலந்து இருந்தாலும் பதிவின் வீரியம் சிரிப்பதை விட சிந்தனையயே அதிகம் தூண்டுகிறது என்பதை மறுப்பதற்கில்லை. //

வ‌ருகை த‌ந்து, விரிவாக‌ ப‌டித்து பின்னூட்ட‌மிட்ட‌த‌ற்கு ந‌ன்றி ஸ்ரீஜா... இன்னும் நிறைய‌ விஷ‌ய‌ங்க‌ளை உள்ள‌ட‌க்கி அடுத்த‌ ப‌குதி த‌யாராகிற‌து... வெறுமே போத‌னை இன்றி சிறிது க‌ல‌க‌ல‌ப்பான‌ விஷ‌ய‌ங்க‌ளை புகுத்தினால், ப‌டிப்ப‌வ‌ர்க்கும் சுவார‌சிய‌மாக‌ இருக்கும் என்ற‌ ஒரே நோக்க‌த்துட‌னே சில‌ ம‌சாலா / காமெடி க‌லக்க‌ப்ப‌ட்டு இருக்கிற‌து... அதை குறிப்பிட்டு சொன்ன‌த‌ற்கு எங்க‌ள் ந‌ன்றி...

//பொழுதுபோக்கு என்று இந்த கால பிளாக்குகள் பக்கத்தை நிரப்ப முயற்சி எடுக்கும் வேளயில், பொழுதை நற்பொழுதாக போக்க நீங்கள் எடுக்கும் முயற்சிக்கு வணக்கங்கள்.//

நானும் நிறைய‌ பொழுதுபோக்காக‌ எழுதியுள்ளேன்... இந்த‌ ப‌திவு, கொஞ்ச‌ம் அந்த‌ ரூட் மாத்த‌ற‌ முய‌ற்சின்னு கூட‌ சொல்ல‌லாம்... இதையே ந‌ண்ப‌ர் "த‌ண்டோரா" கேட்ட‌போதும் சொல்லி உள்ளேன்... ம‌த்திய‌ கிழ‌க்கு நாடுக‌ள் ப‌ற்றிய‌ 14 ப‌குதி தொட‌ர் முடிந்த‌வுட‌ன், இதை எழுத‌ ஆர‌ம்பித்தோம்...

//கோபி - ரஜினி ரசிகர் - அதனால் ரஜினியின் பாடல் வரிகள் அதிகம் மேற்கோள் காட்டப்படுகிறதோ?//

க‌ண்டிப்பாக‌ அப்ப‌டி இல்லை... ர‌ஜினி நடித்த படங்களின் நிறைய‌ த‌த்துவ‌ பாட‌ல் வ‌ரிக‌ள்
இங்கே பொருத்த‌மாய் இருக்கும் என்று ப‌ட்ட‌தாலே உப‌யோக‌ப்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌து... ர‌ஜினி அவ‌ர்க‌ளை ப‌ற்றிய‌ ஒரு த‌னி 10 ப‌குதி தொட‌ரை என் இன்னொரு வலையான ஜோக்கிரியில் எழுதினேன்... அதை ப‌டித்தால், ர‌ஜினி அவ‌ர்க‌ளை ப‌ற்றி நிறைய தெரியாத சுவார‌சிய‌மான‌ த‌க‌வ‌ல்கள் பெற‌லாம்...

//ரஜினியின் பாடல்களில் தத்துவம் என்று தலைப்பிட்டு ஒரு பதிவு போடலாமே - நன்றாக இருக்கும் - பாடலாசிரியரின் பெயர் கண்டிப்பாக குறிப்பிட படவேண்டும். (ஏற்கனவே ப்திவிட்டிருந்தால் லின்க் தரவும்).//

நீங்க‌ள் சொன்ன‌ மாதிரி முய‌ற்சி செய்ய‌லாம்... ந‌ல்ல‌ ஐடியா‌தான்... யோசிக்கிறேன்... ஏற்க‌ன‌வே அவ‌ரை ப‌ற்றிய‌ ப‌ல‌ வித்தியாச‌மான த‌க‌வ‌ல்க‌ளுட‌ன் எழுதப்ப‌ட்ட‌ ஒரு தொட‌ர் "பேர‌ கேட்டாலே சும்மா அதிருதுல்ல‌" 10 பாக‌மாக‌ என் ம‌ற்றொரு ப்ளாக்ஸ்பாட் "ஜோக்கிரி"யில் வெளிவந்த‌து.... நீங்க‌ள் அதை படித்து பாருங்கள் ஸ்ரீஜா அவ‌ர்க‌ளே...

ஈ ரா said...

//பகுத்தறியும் நம் அறிவில், வாழ்க்கை பற்றி சிலபஸில் வராத சில பாட திட்டங்கள் உள்ளன. அவை எப்போதுமே சாய்ஸில் போய்விடும்.. அதை நாம் உணர வாய்ப்பும் கம்மி//

அருமையான ஒப்பீடு...

//நாம் தெ(ரி)ளிய கொஞ்சம் கஷ்டம்//

//சினிமா பாட்டில் சொன்னதை, ஃபுல் பாட்டில் கவுத்திட்டு நம்ம " "புளியங்கொட்டை ராமசாமி"யும் சொன்னார். //

உண்மை.. புதிதாக ஒன்றை சொல்வதும் கடினம்தான்.. எண்ண ஓட்டங்களின் விந்தை அது.

ஆனாலும் பாவம்க சுந்தர்.. படம் பார்த்துட்டு உகாண்டா போவட்டுமே ...

//பிறக்கும் போது நமது நாக்கும், குரல் வளையும் பேச வலு இல்லாமல் உள்ளது. நம் முயற்சியால் செய்யும் பயிற்சியால் மட்டுமே பேச முடிகிறது. பிறவியில் காது கேளாத குழந்தைகள், முதல் மூன்று வருடங்களில் செய்யத் தவறுகிற இந்த செயலே அவர்களை ஊமைகளாக ஆக்கி விடுகிறது. காது கேக்காததால் பேசும் வல்லமையை இழக்கும் பரிதாவம், முயற்சி என கேட்கும் போது மனம் பதறுகிறது. விளையாட்டாய் நாம் செய்த விசயம் எவ்வளவு பெரிசு என்பது புரிகிறது.
//

ம்ம்ம்

தொடருங்கள் தோழரே

ஈ ரா said...

////ரஜினியின் பாடல்களில் தத்துவம் என்று தலைப்பிட்டு ஒரு பதிவு போடலாமே - நன்றாக இருக்கும் - பாடலாசிரியரின் பெயர் கண்டிப்பாக குறிப்பிட படவேண்டும். (ஏற்கனவே ப்திவிட்டிருந்தால் லின்க் தரவும்).//

நீங்க‌ள் சொன்ன‌ மாதிரி முய‌ற்சி செய்ய‌லாம்... ந‌ல்ல‌ ஐடியா‌தான்... யோசிக்கிறேன்... ஏற்க‌ன‌வே அவ‌ரை ப‌ற்றிய‌ ப‌ல‌ வித்தியாச‌மான த‌க‌வ‌ல்க‌ளுட‌ன் எழுதப்ப‌ட்ட‌ ஒரு தொட‌ர் "பேர‌ கேட்டாலே சும்மா அதிருதுல்ல‌" 10 பாக‌மாக‌ என் ம‌ற்றொரு ப்ளாக்ஸ்பாட் "ஜோக்கிரி"யில் வெளிவந்த‌து.... நீங்க‌ள் அதை படித்து பாருங்கள் ஸ்ரீஜா அவ‌ர்க‌ளே...
//

நாம முயற்சி பண்ணலாமா?

R.Gopi said...

வ‌ருகைக்கும், பதிவை ப‌டித்து விரிவாய் பின்னூட்ட‌மிட்ட‌த‌ற்கும் மிக்க‌ ந‌ன்றி ஈ.ரா.அவ‌ர்க‌ளே...

//ஆனாலும் பாவம்க சுந்தர்.. படம் பார்த்துட்டு உகாண்டா போவட்டுமே ... //

நீங்க‌ சொன்னா ச‌ரி த‌லைவா...

//நாம முயற்சி பண்ணலாமா?//

க‌ண்டிப்பாக‌ ஈ.ரா.. முத‌லில் எப்ப‌டி செய்ய‌லாம் என்ற ஐடியா பற்றி எனக்கு ஒரு மெயில் போட‌வும்... என‌க்கு அட்ர‌ஸ் பண்ணுங்க‌...லார‌ன்ஸ்கு நான் அந்த‌ மெயில் நான் அனுப்ப‌றேன்... நாம் முய‌ற்சிப்போம்...

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//பாருங்க எவ்வளவு கஷ்டப்பட்டு காலால ஓடினாலும், ரன்னிங் ரேஸ்ல ஃப‌ர்ஸ்ட் வந்தா, கூப்பிட்டு கையில தான் கப்பு கொடுக்கிறாங்க, காலுக்கு கொடுக்குறதில்ல. அதாங்க உலகம்... உக்காந்து யோசிக்கிறோம்..., ரூம் போட்டு. அவ்வளவுதான்.
//

அவ்வளவு ஏங்க? கண்ணுக்குப் போடற கண்ணாடியை மூக்குக் கண்ணாடின்னு சொல்றோமே, ஏன் தெரியுமா? அந்தக் கண்ணாடியைத் தாங்கற மூக்குக்கு ஒரு மரியாதை தருவதற்குத் தான்.

(காதும்தான தாங்குது, ஏன் அதுக்கு மரியாதை தருவதில்லை என்று கேட்பவருக்கு, "நானும் தான் யோசிச்சுப் பார்கிறேன், விடை தெரியவில்லை, யாராவது தெரிஞ்சவங்க பதில் சொல்வாங்கன்னு நினைக்கிறேன்")

by the way,

தொடர் அருமையாக இருக்கிறது. ஒரு வேளை, இது சம்பந்தமாக எனக்கு ஏதாவது தோன்றினால், எழுதி அனுப்பலாமா? வெளியிடுவீர்களா?

R.Gopi said...

//பெயர் சொல்ல விருப்பமில்லை

அவ்வளவு ஏங்க? கண்ணுக்குப் போடற கண்ணாடியை மூக்குக் கண்ணாடின்னு சொல்றோமே, ஏன் தெரியுமா? அந்தக் கண்ணாடியைத் தாங்கற மூக்குக்கு ஒரு மரியாதை தருவதற்குத் தான்.

(காதும்தான தாங்குது, ஏன் அதுக்கு மரியாதை தருவதில்லை என்று கேட்பவருக்கு, "நானும் தான் யோசிச்சுப் பார்கிறேன், விடை தெரியவில்லை, யாராவது தெரிஞ்சவங்க பதில் சொல்வாங்கன்னு நினைக்கிறேன்")

by the way,

தொடர் அருமையாக இருக்கிறது. ஒரு வேளை, இது சம்பந்தமாக எனக்கு ஏதாவது தோன்றினால், எழுதி அனுப்பலாமா? வெளியிடுவீர்களா?//

**********

க‌ண்டிப்பாக‌ உங்க‌ளின் எழுத்தும், க‌ருத்தும் வெளியிட‌ப்ப‌டும்... என‌க்கு மின்ன‌ஞ்ச‌லில் அனுப்புங்க‌ள்... தொட‌ரை விரிவாக‌ ப‌டித்து, க‌ருத்து சொல்லி, பாராட்டிய‌த‌ற்கு எங்க‌ள் ந‌ன்றி...

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

என்னுடைய எண்ணங்களை இங்கே எழுதி இருக்கிறேன். படித்துப் பார்த்து கருத்து சொல்லவும்.

நன்றி.

R.Gopi said...

//பெயர் சொல்ல விருப்பமில்லை said...
என்னுடைய எண்ணங்களை இங்கே எழுதி இருக்கிறேன். படித்துப் பார்த்து கருத்து சொல்லவும்.

நன்றி.//

*********

ச‌ரி... ப‌டித்து விட்டு சொல்கிறேன்... ந‌ன்றி பெய‌ர் சொல்ல‌ விருப்ப‌மில்லை...

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

sorry that i had not given the link correctly.

http://ulagamahauthamar.blogspot.com/2009/11/blog-post_06.html

R.Gopi said...

//பெயர் சொல்ல விருப்பமில்லை said...
sorry that i had not given the link correctly.

http://ulagamahauthamar.blogspot.com/2009/11/blog-post_06.html////

*********

Ok Thanks... Will have a look into it...

நாஞ்சில் பிரதாப் said...

நல்லாருக்கே....

மர தமிழன் said...

வாழ்க்கை என்பது தற்போதய உலகின் மனிதர்களை வைத்து பார்க்கும்போது எனக்கு தோன்றுவது இதுதான்..

மனிதர்களின் மொழி பெயர் வைப்பதில் தான் அதிகம் செலவழித்திருக்கிறதோ என்று தோன்றுகிறது, தான் பார்த்த ஒவ்வொன்றுக்கும் பெயர் வைத்து மாய்ந்து போயிருக்கிறான் பேச ஆரம்பித்தது முதல்... ஒரு மரத்திற்கு தென்னை என்று தொடங்கி coconut tree என்பது வரை அவன் கத்திய கத்தல்கள் எல்லாமே மொழிகளாக இலக்கியமாக விரிந்து இன்னைக்கு என்னோடது தான் டாப் உன்னோடது டூப் என்று மாநாடு போட்டு பேசுவது வரை வந்துவிட்டது. தமிழில் இல்லாத ஒரு வார்த்தை computer அதை கணினி என்று மூணு எழுத்து போட்டு அது தான் தமிழ் என்றால் ... அடேங்கப்பா பெயர் வைப்பதில் நாமதான் கிங்கு.

சரிய்யா இதுக்கும் வாழ்க்கைக்கும் என்ன சம்பந்தம்ன்னு கேட்கறீங்களா இருக்குங்க நாம் கேட்க்கும் விஷயங்கள் நம்மை சுற்றி நிகழும் நிகழ்வுகள் தான் நம் வாழ்க்கையை தீர்மானிக்கும் காரணிகளாய் இருக்கும்போது நம் வாழ்க்கை எங்கே நம் கையில் இருக்கிறது?

நீங்கள் என்னதான் அகமும் புறமும் சுத்தமாய் இருந்தாலும் எங்கேயோ வெளிநாடு போய் வந்த சக மனிதன் உங்கள் மீது பன்றி காய்ச்சலை தும்மிவிட்டுபோனால் இன்றைய தேதியில் அது H1N1 வைரஸ் என்று கண்டு பிடித்து உங்களை காப்பற்றுமுன்பு 10 ம் நாள் காரியம் முடிந்திருக்கும்.

ஐயா.... சாமி சத்தியமாய் காலை திரும்பி மாலை வருவது நம் கையில் இல்லை. இங்கே மொழிக்கு இருக்கும் மதிப்பு கூட அதை பேசும் மனிதர்களுக்கு இல்லை என்பதே உண்மை.

இப்போதும் கூட வாழ்க்கை என்பது நம்மை சுற்றியே ( i mean மனிதர்களை) இருப்பதாக நாம் பேசுவது நம் சுயநலத்தின் உச்சகட்டம். ஏன் இந்த உலகில் மற்ற உயிரினங்களுக்கு வாழ்க்கை இல்லையா? குடும்பம் இல்லையா? நாளையே இறைவன் (அல்லது இயற்க்கை ) கோழிகளுக்கு ஆறு அறிவு கொடுத்து அவை நம்மையும் கூண்டில் அடைத்து மசாலா தடவி குழம்பு வைத்து சாப்பிட்டால் அதை நம் ஆறறிவு எந்த அளவுக்கு ஏற்றுக்கொள்ளும்?

காடுகளை அழித்து வீடுகளாகவும் விளை நிலங்களாகவும் ஆக்கி விட்டு அங்கே யானை வந்துவிட்டதென்று தொலைக்காட்சி செய்தியில் அழுவது என்ன நியாயம்? ஆமை புகுந்த வீடு உருப்படாதோ என்னமோ தெரியாது ஆனால் மனிதன் புகுந்த இந்த வீடு (உலகம்) அவனாலேயே உருப்படாமல் போகிறதன்னமோ உண்மை.

சுருக்கமாய் சொல்வதானால்

இன்றைக்கு மனித வாழ்க்கை என்பது நல்லவனும் கேட்டவனும் சேர்ந்து பயணிக்கும் ஒரு ஓட்டை படகு. அவ்வளவுதான்.

R.Gopi said...

//நாஞ்சில் பிரதாப் said...
நல்லாருக்கே....//

*********

வாங்க நாஞ்சில் பிரதாப்

வலைப்பக்கம் வந்திருந்து, பதிவை படித்து வாழ்த்தியதற்கு என் மனமார்ந்த நன்றி... நண்பர்களின் ஊக்கமே பெரிய பலம்....

R.Gopi said...

வாங்க‌ ம‌ர‌ த‌மிழ‌ன்

உங்க‌ளை ச‌மீப‌கால‌மாக‌ இட்லிவ‌டை வ‌லையில் பார்க்கிறேன்... த‌ங்க‌ளின் விரிவான‌ பின்னூட்ட‌ம் ஒரு நிமிட‌ம் எங்க‌ளை திகைப்பில் ஆழ்த்திய‌து என்றால் அது மிகைய‌ல்ல‌...

வெகு அழ‌காக‌வும், விரிவாக‌வும் வாழ்க்கையை அல‌சி இருக்கிறீர்க‌ள்... அத‌ற்காக‌ உங்க‌ளுக்கு ஒரு ஸ்பெஷ‌ல் ஷொட்டு...

க‌டைசியில் நீங்க‌ள் முத்தாய்ப்பாக‌ சொன்ன‌ விஷ‌ய‌ம் ரொம்ப‌ டாப்..

//"சுருக்கமாய் சொல்வதானால்

இன்றைக்கு மனித வாழ்க்கை என்பது நல்லவனும் கேட்டவனும் சேர்ந்து பயணிக்கும் ஒரு ஓட்டை படகு. அவ்வளவுதான்".//

தொட‌ர்ந்து வ‌ருகை தந்து, ஊக்க‌ம் அளியுங்க‌ள்.... மிக்க‌ ந‌ன்றி.....

சங்கர் said...

அற்புதமான படைப்புகள் வாழ்த்துக்கள் !நண்பர்களே இதுவரை திருடப்படாதா உங்கள் குட்டி இதயங்களையும் சத்தம் இல்லாமல் திருடி செல்ல விரைவில் வருகிறது இந்த சங்கரின் அதிரடி படைப்பான கரை தொடாத கனவுகள் உண்மை சம்பவங்கள் ஒரு தொடர்கதையாக ,,,,
http://wwwrasigancom.blogspot.com/
shankarp071@gmail.com

R.Gopi said...

//சங்கர் said...
அற்புதமான படைப்புகள் வாழ்த்துக்கள் !//

*******

நன்றி திரு சங்கர் அவர்களே...

கோமதி அரசு said...

கோபி,”வாழ்க்கை பகுதி2”

நன்றாக இருக்கிறது.

சினிமாக்களில் இந்த கால இளஞ்சர் என்றால் நண்பர்களுடன் குடி,சிகரெட்
பெண்களை கேலி செய்தல் என்று காட்டுகிறது.அதை விடுத்து நீங்களும் உங்கள் நண்பரும் வாழ்க்கையை ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொண்டு அலசுவது பாராட்டுக்குரிய விஷயம்.
இருவருக்கும் பாராட்டுக்கள்.

வேதாத்திரி மகரிஷி மனிதருள் வேறு பாடு ஏன் என்று சொல்லும் போது-- மனிதருள் வேறுபாடு ஏன்? இந்த சிந்தனை, இந்தக் கேள்வி எல்லோருடைய உள்ளத்திலும் ஏதேனும் ஒரு காலத்தில் நிச்சயமாக எழுந்திருக்கும்;சிலருக்கு அடிக்கடி எழுந்து கொண்டே இருக்கும்;
ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான காராணத்தைச் சொல்லக் கேட்டிருப்பார்கள்;அவரவர்கள் அறிந்து இருக்கின்றீர்கள் ஒரு காரணத்தை. ஆனாலும் முழுமையாக விரிந்த அறிவிலே இந்தக் கேள்விக்கு விடை கண்டு விட்டோமேயானால் நாம் வாழ்நாள் முழுவதும், நமது வாழ்விலே ஒரு பெஞ்சுடராக,எல்லாவித வாழ்க்கை இரகசியங்களையும் நாம் புரிந்து கொள்வதற்கும்,அதற்கு ஏற்றவாறு நமது கடமைகளை ஆற்றுவதற்கும் வேண்டிய ஆக்கமும், ஊக்கமும் பெற முடியும் என்கிறார்.

உங்களுக்கு அந்த எண்ணம் வந்து விட்டதால் நீங்கள் வாழ்க்கை பயணத்தில் தளராத தன்னம்பிக்கை உள்ள விக்ரமாதித்தானய் ஆகிவிட்டீர்கள்.
”புலம்பலில்லாத முயற்சி முறசர்ரையும்”
வெற்றி முரசு ஒலிக்கட்டும்,
வாழ்ககை தொடர்.

“கருவமைப்பு,உணவு வ்கை, காலம்
தேசம்,
கல்வி,தொழில்,அரசாங்கம்,கலை,
முயற்சி,
பருவம்,நட்பு,சந்தர்ப்பம்,பல ஆராய்ச்சி,
பழக்கம்,வழக்கம்,ஒழுக்கம்,இவற்றிற்க்கேற்ப்
உருவமைப்பு,குணம்,அறிவின் உயர்வு,கீர்த்தி,
உடல்வலிவு,சுகம்,செல்வம்,
மனிதர்கட்கு
வரும்வகையும் அவற்றின் தரம்,
அளவுக்கேற்ப
வாழ்க்கை நிலை வேறுபாடு அடையக்
கண்டேன்”
இப்படி 16 காரணங்களால் ஒவ்வொரு மனிதனும் பாதிக்கப்பட்டுள்ளான்.
நன்றி வேதாத்திரி மகரிஷி.

வாழ்த்துக்கள் கோவி.

கோமதி அரசு said...

கோபி,”வாழ்க்கை பகுதி2”

நன்றாக இருக்கிறது.

சினிமாக்களில் இந்த கால இளஞ்சர் என்றால் நண்பர்களுடன் குடி,சிகரெட்
பெண்களை கேலி செய்தல் என்று காட்டுகிறது.அதை விடுத்து நீங்களும் உங்கள் நண்பரும் வாழ்க்கையை ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொண்டு அலசுவது பாராட்டுக்குரிய விஷயம்.
இருவருக்கும் பாராட்டுக்கள்.

வேதாத்திரி மகரிஷி மனிதருள் வேறு பாடு ஏன் என்று சொல்லும் போது-- மனிதருள் வேறுபாடு ஏன்? இந்த சிந்தனை, இந்தக் கேள்வி எல்லோருடைய உள்ளத்திலும் ஏதேனும் ஒரு காலத்தில் நிச்சயமாக எழுந்திருக்கும்;சிலருக்கு அடிக்கடி எழுந்து கொண்டே இருக்கும்;
ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான காராணத்தைச் சொல்லக் கேட்டிருப்பார்கள்;அவரவர்கள் அறிந்து இருக்கின்றீர்கள் ஒரு காரணத்தை. ஆனாலும் முழுமையாக விரிந்த அறிவிலே இந்தக் கேள்விக்கு விடை கண்டு விட்டோமேயானால் நாம் வாழ்நாள் முழுவதும், நமது வாழ்விலே ஒரு பெஞ்சுடராக,எல்லாவித வாழ்க்கை இரகசியங்களையும் நாம் புரிந்து கொள்வதற்கும்,அதற்கு ஏற்றவாறு நமது கடமைகளை ஆற்றுவதற்கும் வேண்டிய ஆக்கமும், ஊக்கமும் பெற முடியும் என்கிறார்.

உங்களுக்கு அந்த எண்ணம் வந்து விட்டதால் நீங்கள் வாழ்க்கை பயணத்தில் தளராத தன்னம்பிக்கை உள்ள விக்ரமாதித்தானய் ஆகிவிட்டீர்கள்.
”புலம்பலில்லாத முயற்சி முறசர்ரையும்”
வெற்றி முரசு ஒலிக்கட்டும்,
வாழ்ககை தொடர்.

“கருவமைப்பு,உணவு வ்கை, காலம்
தேசம்,
கல்வி,தொழில்,அரசாங்கம்,கலை,
முயற்சி,
பருவம்,நட்பு,சந்தர்ப்பம்,பல ஆராய்ச்சி,
பழக்கம்,வழக்கம்,ஒழுக்கம்,இவற்றிற்க்கேற்ப்
உருவமைப்பு,குணம்,அறிவின் உயர்வு,கீர்த்தி,
உடல்வலிவு,சுகம்,செல்வம்,
மனிதர்கட்கு
வரும்வகையும் அவற்றின் தரம்,
அளவுக்கேற்ப
வாழ்க்கை நிலை வேறுபாடு அடையக்
கண்டேன்”
இப்படி 16 காரணங்களால் ஒவ்வொரு மனிதனும் பாதிக்கப்பட்டுள்ளான்.
நன்றி வேதாத்திரி மகரிஷி.

வாழ்த்துக்கள் கோபி.

R.Gopi said...

//கோமதி அரசு said...
கோபி,”வாழ்க்கை பகுதி2”

நன்றாக இருக்கிறது.

சினிமாக்களில் இந்த கால இளஞ்சர் என்றால் நண்பர்களுடன் குடி,சிகரெட்
பெண்களை கேலி செய்தல் என்று காட்டுகிறது.அதை விடுத்து நீங்களும் உங்கள் நண்பரும் வாழ்க்கையை ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொண்டு அலசுவது பாராட்டுக்குரிய விஷயம்.
இருவருக்கும் பாராட்டுக்கள்.//

//உங்களுக்கு அந்த எண்ணம் வந்து விட்டதால் நீங்கள் வாழ்க்கை பயணத்தில் தளராத தன்னம்பிக்கை உள்ள விக்ரமாதித்தானய் ஆகிவிட்டீர்கள்.
”புலம்பலில்லாத முயற்சி முறசர்ரையும்”
வெற்றி முரசு ஒலிக்கட்டும்,
வாழ்ககை தொடர்.//

********

கோமதி மேடம்... தங்கள் வருகையும், இந்த விரிவான பின்னூட்டமும் இந்த பதிவிற்கு ஒரு புதிய நிறத்தை தந்துவிட்டது...

தோழமைகள் ஈ.ரா., ஸ்ரீஜா, ப்ரதீப், மர தமிழன், பெயர் சொல்ல விருப்பமில்லை உள்ளிட்ட அனைவரும் இந்த தொடர் பதிவை மிக ஆழமாக படித்து கருத்து இட்டுள்ளார்கள்...

அதிலும், நீங்கள் வேதாந்த மகரிஷி அவர்களை மேற்கோள் இட்டு காட்டியது மிக சிறப்பு...

மேலும் அவர் சொல்லிய 16 விதமான பாதிப்புகளில் மனிதன் உள்ளான் என்ற லிஸ்ட் கண்டிப்பாக உண்மைதான்...

இதையெல்லாம் மெல்ல மெல்ல நாம் கடக்க வேண்டும் என்பதே எங்கள் அவா...

கோமதி அரசு said...

//வாழ்க்கை நமக்கு ரெண்டு சாய்ஸ்
தருது,ஒண்ணு பிடி...உடும்பு பிடி
இல்லைன்னா,அடுத்து புலம்பல்//

உடும்பு பிடி தான் நம் சாய்ஸ்.
குழந்தை தன் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு அதனுடைய விடா முயற்சிதான் காரணம்.
மனிதர்களின் முயற்சியின் அளவிலே அவர்களுடைய உயர்வு அமையும்.
சிலர் தானும் புலம்பி அடுத்தவர்களையும் புலம்ப வைப்பார்கள்.புலம்பலை விடுத்து அடுத்து என்ன என்று முயற்சிக்கும் போது வாழ்க்கை உயரும்.

நல்ல கருத்து கோபி.

R.Gopi said...

//கோமதி அரசு said...
//வாழ்க்கை நமக்கு ரெண்டு சாய்ஸ்
தருது,ஒண்ணு பிடி...உடும்பு பிடி
இல்லைன்னா,அடுத்து புலம்பல்//

உடும்பு பிடி தான் நம் சாய்ஸ்.
குழந்தை தன் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு அதனுடைய விடா முயற்சிதான் காரணம்.
மனிதர்களின் முயற்சியின் அளவிலே அவர்களுடைய உயர்வு அமையும்.
சிலர் தானும் புலம்பி அடுத்தவர்களையும் புலம்ப வைப்பார்கள்.புலம்பலை விடுத்து அடுத்து என்ன என்று முயற்சிக்கும் போது வாழ்க்கை உயரும்.

நல்ல கருத்து கோபி.//

***********

மிக ச‌ரியாய் சொன்னீர்க‌ள் கோம‌தி மேட‌ம்...

வாழ்க்கையில் முன்னேற‌ சோம்ப‌லை உத‌றி த‌ள்ளிவிட்டு மேலேறி செல்ல‌ வேண்டும். "ந‌ல்ல‌ பொழுதை எல்லாம் தூங்கி கெடுத்த‌வ‌ர்க‌ள், நாட்டை கெடுத்த‌துட‌ன், தானும் கெட்டார்" என்ற‌ பாட‌ல் ஒன்று போதுமே ... நாம் முன்னேற‌ சோம்ப‌லை விர‌ட்ட‌ வேண்டும் என்று தெரிந்து கொள்ள‌‌...

நன்றி கோமதி மேடம்....

மர தமிழன் said...

//கோமதி அரசு said...// உடும்பு பிடி தான் நம் சாய்ஸ்.
குழந்தை தன் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு அதனுடைய விடா முயற்சிதான் காரணம்.
மனிதர்களின் முயற்சியின் அளவிலே அவர்களுடைய உயர்வு அமையும்.
சிலர் தானும் புலம்பி அடுத்தவர்களையும் புலம்ப வைப்பார்கள்.புலம்பலை விடுத்து அடுத்து என்ன என்று முயற்சிக்கும் போது வாழ்க்கை உயரும்.

உண்மைதான் ,, இன்னும் சொல்வதென்றால் அந்த விடா முயற்சிதான் நம் பிறப்பிற்கே ஆதாரம், கொஞ்சம் சிந்தியுங்கள் தந்தையிடமிருந்து தாயின் கருப்பைக்குள் செல்லும் கோடானு கோடி விந்தணுக்களில் (இன்றைய இந்திய ஜன தொகையை விட அதிகம் சார் ) ஓடிப்போய் முதலில் நீங்களும் நானும் நுழைந்ததுதான் இன்றைய இந்த பதிவிற்கும், நிகழ்வுக்கும் காரணம். இயற்கையின் கட்டளை அது, ஓடிக்கொண்டே இருக்க survival of the fittest தத்துவமும் இங்கே தான் ஆரம்பம். மேலும் அங்கேயே சுயநலமும் ஆரம்பித்துவிடுகிறது (அத்தனை கோடி தம்பிகளையும், தங்கைகளையும் புறம் தள்ளி அன்னையின் முட்டையில் சுகமாய் புகுந்த தருணம்).

வேறு வழி இல்லை! if you don't have a problem, create a problem and solve it என்று சொல்வதைபோல, ஜெயித்தாலும், தோற்றாலும், சிரித்தாலும், அழுதாலும், பூமி சுற்றிக்கொண்டே தான் இருக்கிறது, காற்று வீசிக்கொண்டே தான் இருக்கிறது, மனிதனை தவிர மற்றெல்லா ஜீவராசிகளும் எந்த கடிகாரமும் என்றி பிறந்து, வாழ்ந்து, தனது சந்ததியின் பதிவுகளை தொடர்ந்துவிட்டு கவலை இல்லாமல் இறந்து போகின்றன. நாம் மட்டும் தான் இன்னும் அழுதுகொண்டிருக்கிறோம் அல்லது புலம்பிக்கொண்டிருக்கிறோம்.

இறைவனின் அல்லது படைப்பின் மிகப்பெரிய தவறு நமக்கு சிரிக்கவும் அழவும் permission தந்ததுதான். நாம் அதற்க்கு யோக்கியமானவர்கள்தானா என எண்ணத் தோன்றுகிறது.

R.Gopi said...

//மர தமிழன் said...

உண்மைதான் ,, இன்னும் சொல்வதென்றால் அந்த விடா முயற்சிதான் நம் பிறப்பிற்கே ஆதாரம், கொஞ்சம் சிந்தியுங்கள் தந்தையிடமிருந்து தாயின் கருப்பைக்குள் செல்லும் கோடானு கோடி விந்தணுக்களில் (இன்றைய இந்திய ஜன தொகையை விட அதிகம் சார் ) ஓடிப்போய் முதலில் நீங்களும் நானும் நுழைந்ததுதான் இன்றைய இந்த பதிவிற்கும், நிகழ்வுக்கும் காரணம். இயற்கையின் கட்டளை அது, ஓடிக்கொண்டே இருக்க survival of the fittest தத்துவமும் இங்கே தான் ஆரம்பம். மேலும் அங்கேயே சுயநலமும் ஆரம்பித்துவிடுகிறது (அத்தனை கோடி தம்பிகளையும், தங்கைகளையும் புறம் தள்ளி அன்னையின் முட்டையில் சுகமாய் புகுந்த தருணம்).

வேறு வழி இல்லை! if you don't have a problem, create a problem and solve it என்று சொல்வதைபோல, ஜெயித்தாலும், தோற்றாலும், சிரித்தாலும், அழுதாலும், பூமி சுற்றிக்கொண்டே தான் இருக்கிறது, காற்று வீசிக்கொண்டே தான் இருக்கிறது, மனிதனை தவிர மற்றெல்லா ஜீவராசிகளும் எந்த கடிகாரமும் என்றி பிறந்து, வாழ்ந்து, தனது சந்ததியின் பதிவுகளை தொடர்ந்துவிட்டு கவலை இல்லாமல் இறந்து போகின்றன. நாம் மட்டும் தான் இன்னும் அழுதுகொண்டிருக்கிறோம் அல்லது புலம்பிக்கொண்டிருக்கிறோம்.

இறைவனின் அல்லது படைப்பின் மிகப்பெரிய தவறு நமக்கு சிரிக்கவும் அழவும் permission தந்ததுதான். நாம் அதற்க்கு யோக்கியமானவர்கள்தானா என எண்ணத் தோன்றுகிறது.//

**********

மிக‌ மிக‌ ஆரோக்கிய‌மான‌ ம‌ற்றும் அழுத்த‌மான‌ க‌ருத்துக்க‌ளோடு இந்த‌ பின்னூட்ட‌ங்க‌ள் தொடர்ந்து இட‌ப்ப‌டுகிற‌து... அதற்காக ந‌ன்றி ம‌ர‌ த‌மிழ‌னுக்கும், கோம‌தி மேட‌த்திற்கும்...

மர தமிழன் இந்த பின்னூட்டத்தை மிகவும் முத்தாய்ப்பாக ஒரு விஷயம் சொல்லி முடித்திருக்கிறார்... அதாவது "இறைவனின் அல்லது படைப்பின் மிகப்பெரிய தவறு நமக்கு சிரிக்கவும் அழவும் permission தந்ததுதான். நாம் அதற்கு யோக்கியமானவர்கள் தானா என எண்ணத் தோன்றுகிறது"...

இது ஒரு சூப்பர் கேள்வி.... நன்றி மர தமிழன்...

r.selvakkumar said...

நணிபர் லாரன்சுக்கு வணக்கம்,
உங்கள் பதிவை படித்தேன். நீங்களும் உங்கள் நண்பர் கோபியும் இணைந்து எழுதியுள்ளதாக தெரிவித்திருந்தீர்கள். அடுத்த வரிக்கு போவதற்கு முன்னால் மனமார்ந்த பாராட்டுகள். சுஜாதா மாதிரி எழுத்தாளர்களுக்கு இறப்பே இல்லை. உங்களைப் போன்றோரின் பேனா(கீபோர்டு) வழியாக அடுத்த நூற்றாண்டுக்கும் பயணித்துவிடுவார்கள்.

இருவர் இணைந்து எழுதியதாக என்னால் அனுமானிக்கவே முடியவில்லை. படு சரளம். கனமான விஷயங்களை கடலைப் பொறி சாப்பிடுவது போல அசால்டாக எழுதியுள்ளீர்கள்.

என்னமோ பொறி தட்டுகிறது. நீங்கள் பெரிய எழுத்தாளர்களாக வருவீர்கள். முன் கூட்டிய வாழ்த்துக்கள்

”அவர்” படத்தில் நீங்கள் எப்படி பங்கேற்க விரும்புகிறீர்கள்?

நான் மெயிலில் அளித்த பதிலையே இங்கே பின்னூட்டமிட்டிருக்கின்றேன்.

R.Gopi said...

// r.selvakkumar said...
நணிபர் லாரன்சுக்கு வணக்கம்,
உங்கள் பதிவை படித்தேன். நீங்களும் உங்கள் நண்பர் கோபியும் இணைந்து எழுதியுள்ளதாக தெரிவித்திருந்தீர்கள். அடுத்த வரிக்கு போவதற்கு முன்னால் மனமார்ந்த பாராட்டுகள். சுஜாதா மாதிரி எழுத்தாளர்களுக்கு இறப்பே இல்லை. உங்களைப் போன்றோரின் பேனா(கீபோர்டு) வழியாக அடுத்த நூற்றாண்டுக்கும் பயணித்துவிடுவார்கள்.

இருவர் இணைந்து எழுதியதாக என்னால் அனுமானிக்கவே முடியவில்லை. படு சரளம். கனமான விஷயங்களை கடலைப் பொறி சாப்பிடுவது போல அசால்டாக எழுதியுள்ளீர்கள்.

என்னமோ பொறி தட்டுகிறது. நீங்கள் பெரிய எழுத்தாளர்களாக வருவீர்கள். முன் கூட்டிய வாழ்த்துக்கள்

”அவர்” படத்தில் நீங்கள் எப்படி பங்கேற்க விரும்புகிறீர்கள்?

நான் மெயிலில் அளித்த பதிலையே இங்கே பின்னூட்டமிட்டிருக்கின்றேன்.//

**********

வாங்க‌ செல்வ‌குமார்.... ந‌ல‌ம் ந‌ல‌ம‌றிய‌ ஆவ‌ல்...

த‌ங்க‌ளின் தந்தையாரை ப‌ல‌ ப‌ட‌ங்க‌ளின் பார்த்துள்ளேன்... "ஐ.எஸ்.ஆர்.வீட்டு அதிச‌ய‌ கோழி" என்று பல வருடங்களுக்கு முன்னால் தீபாவளி ஸ்பெஷல் "குமுத‌ம்" ஒரு ஆர்டிகிள் வெளியிட்ட‌து என் நினைவுக்கு வ‌ருகிற‌து... மேலும் அவ‌ர் சிரித்து கொண்டே நாகேஷ் அவ‌ர்க‌ளை அடிப்ப‌தும், நேகேஷ் அவர்களும், ஒவ்வொரு அடிக்கு ஒரு முட்டை என்று த‌ன் பையில் எடுத்து வைப்ப‌தும், பின் குர‌ங்கு மார்க் பொருட்க‌ளுக்கான பில் ப‌ண‌ம் செட்டில் செய்யும்போது, ஐ.எஸ்.ஆர். அவர்கள் அந்த‌ முட்டைக‌ளுக்கான‌ காசு க‌ழித்து கொடுப்ப‌தும்... என்று "சோப்பு சீப்பு க‌ண்ணாடி" ப‌ட‌த்தின் காட்சி நினைவுக்கு வந்த‌து... இருவரும் அந்த காட்சியில் போட்டி போட்டு நடித்திருப்பார்கள்... கூட‌வே, "த‌ர்ம‌த்தின் த‌லைவ‌ன்" ப‌ட‌த்தில் சூப்ப‌ர் ஸ்டார் ர‌ஜினி அவ‌ர்க‌ளுட‌ன் சில‌ காட்சிக‌ளில் வ‌ருவார்...

ஐ.எஸ்.ஆர்.அவர்கள் பெரிய‌ அள‌வில் சோபிக்காத‌து என‌க்கு வ‌ருத்த‌மே.. அவ‌ர் ம‌ட்டும‌ல்ல‌... இப்ப‌டி ப‌ல‌ பேர்....

இந்த‌ பதிவு நானும், லார‌ன்ஸ் அவ‌ர்க‌ளும் இணைந்து எழுதுகிறோம்... நாங்க‌ள் இருவ‌ரும் இணையும்போது, இரு ம‌ன‌ங்க‌ளின் க‌ருத்துக்க‌ள் ச‌ங்க‌மமாகி ப‌திவும், எழுத்தும் மெருகேறுகிற‌து என்ப‌து எங்க‌ள் எண்ண‌ம்...

"அவர்" ப‌ட‌ம் ப‌ற்றிய‌ விஷ‌ய‌ங்க‌ள் மெயிலில் விவாதிப்போம்...

த‌ங்க‌ளின் மனம் திறந்த பாராட்டுக்கு எங்க‌ள் ம‌ன‌மார்ந்த‌ ந‌ன்றி...

தமிழரசி said...

கண்ணுக்கு குளிர்ச்சியான படங்கள்.மனதுக்கு இதமான எதார்த்த உண்மை நல்லாயிருக்கு உங்கள் வாழ்க்கை தொடர்..எதார்த்தமா சிந்திந்து எழுதியிருக்கீங்க கோபி...
CLASS PERFORMANCE YA....மேலும் அசத்துங்கப்பா...

R.Gopi said...

//தமிழரசி said...
கண்ணுக்கு குளிர்ச்சியான படங்கள்.மனதுக்கு இதமான எதார்த்த உண்மை நல்லாயிருக்கு உங்கள் வாழ்க்கை தொடர்..எதார்த்தமா சிந்திந்து எழுதியிருக்கீங்க கோபி...
CLASS PERFORMANCE YA....மேலும் அசத்துங்கப்பா...//

*******

வ‌ருகை த‌ந்து, ப‌திவை ர‌சித்து ப‌டித்து, பாராட்டிய‌ தோழ‌மைக்கு மிக்க‌ ந‌ன்றி த‌மிழ‌ர‌சி...

மேலும் அச‌த்துவோம்... உங்க‌ளின் ஊக்க‌த்துட‌ன்...

bahrainbaba said...

uganda matter konjam idikkudhu.. ennaya vachi comedy keemedy pannaliye???????

R.Gopi said...

//bahrainbaba said...
uganda matter konjam idikkudhu.. ennaya vachi comedy keemedy pannaliye???????//

********

வாங்க தலைவா....

எப்படி இருக்கீங்க.... உகாண்டா மேட்டர்ல நம்ம சுந்தர் தானே இருக்கார்... நீங்க இல்லையே...