நாம் எல்லோரும், 20/20 உலக கோப்பை கிரிக்கெட் பற்றியும், இந்தியாவின் பொறுப்பற்ற ஆட்டத்தால் சூப்பர்-8 கட்டத்தில், ஒரு போட்டி கூட வெற்றி பெறாமல் இந்தியா போட்டியை விட்டு வெளியேறிய நிலையையும், பாகிஸ்தானுக்கு பதில் இலங்கையே கோப்பையை வென்றிருக்கலாம் போன்ற விஷயங்களையும் விவாதிக்கும் இந்த வேளையில், இந்திய பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நெஹ்வால் ஒரு சூப்பர் உலக சாதனையை செய்துள்ளார். அது இந்தோனேசிய ஒபன் சாம்பியன் ஆனது.
முதலில் அவருக்கு, நம் வாழ்த்துக்கள். இது போல், மேலும் பல சாதனைகள் சாய்னா நெஹ்வால் படைக்க நாம் அனைவரும் ஒன்றுகூடி அவரை வாழ்த்துவோம்.
இந்திய பேட்மின்டன் நட்சத்திரம் சாய்னா நெஹ்வால், இந்தோனேசிய ஓபன் பட்டத்தை வென்று, சாம்பியன் பட்டத்தை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
சீனாவைச் சேர்ந்த முன்னணி வீராங்கனை லின் வாங்கை வீழ்த்தி அருமையான வெற்றியைப் பெற்றுள்ளார் சாய்னா.
இன்று நடந்த இறுதிப் போட்டியில், சாய்னா, 12-21, 21-18, 21-9 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
49 நிமிடங்களில் இந்தப் போட்டி முடிவடைந்தது.
இதுவரை உலக அளவில் எந்த வீராங்கனையும் இவ்வளவு சிறப்பாக ஆடியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சாய்னாவிடம் தோல்வியுற்ற வாங் உலக அளவில் 3வது ரேங்க்கில் இருப்பவர். இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சாய்னா நெஹ்வால் உலக அளவில் 8வது ரேங்க்கில் இருக்கிறார்.
அவருக்கு மீண்டும் ஒரு முறை நம் மனமாந்த வாழ்த்துக்கள்.
(நன்றி : தட்ஸ்தமிழ்.காம்)
(டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவும், பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நெஹ்வால் போல் சிறப்பாக ஆடி, இந்தியாவுக்கு பல வெற்றிகளை தேடி தரவேண்டும் என்பதே விளையாட்டில் ஆர்வமுள்ள நம் அனைவரின் ஆசையும்............)
9 comments:
அப்படியா!
//கிரி said...
அப்படியா!//
இன்னா தல அப்டியான்ற....... இது இந்தியாவுக்கே பெருமை தேடி தர சாதனைபா...
அதான் சைன நெஹ்வால் அவகள பாராட்டினேன்.
Really, she has made India proud, though no one is going ga-ga over her. She deserves more exposure in the media...
Hats off saina!!!
//Vetrimagal said...
Really, she has made India proud, though no one is going ga-ga over her. She deserves more exposure in the media...
Hats off saina!!!//
******
Welcome Vetrimagal for your maiden visit and comments....
Do visit regularly and share your views...
'அதிர்ச்சி தோல்வி அடைவது எப்படி?' என்கிற
புத்தகம் எழுத அதிகம் தகுதி உடையவர் யார்?
Sania வா ? அல்லது Saina வா?
கௌதமன்.
நல்ல பதிவு கோபி அண்ணா..
\\இந்திய பேட்மின்டன் நட்சத்திரம் சாய்னா நெஹ்வால், இந்தோனேசிய ஓபன் பட்டத்தை வென்று, சாம்பியன் பட்டத்தை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையைப் படைத்துள்ளார்.\\
சாய்னா நெஹ்வாலுக்கு நம் நெஞ்ஞார்ந்த வாழ்த்துக்கள்..
really we r proud of u Saina...JaiHind!
வருகைக்கு நன்றி கௌதமன்
"அதிர்ச்சி தோல்வி" அடைவதில் சானியா, சாய்நாவை மிஞ்சியதாகத்தான் இதுவரை நாம் பார்த்துள்ளோம்.
வரும் நாட்களில் சாய்னா தன் தவறுகளை திருத்தி கொள்வார் என்று நம்புவோம்.
முதல் வருகைக்கு நன்றி கலாட்டா அம்மணி (பேரே சூப்பரா இருக்கே?!)
சாய்னா நெஹ்வாலை இந்த வெற்றிக்கு வாழ்த்துவதோடு, தொடர் வெற்றிக்கு பாடுபடுவார் என்று நம்புவோம்.....
இந்தியர்களின் அடுத்த கனவு கன்னி சாய்னா-வா?
//Eswari said...
இந்தியர்களின் அடுத்த கனவு கன்னி சாய்னா-வா?//
Ah haa........ Konja naalaavadhu velaiyaada videngalen........
Neenga sonnadhu.... Sangaththula pesi mudivu pannittu solren.....
Post a Comment