இன்றைய தமிழ்ப்படங்களின் அறிமுகக்காட்சி

இன்றைய தமிழ் சினிமாவில், கதாநாயகர்களின் அறிமுகம், மிகவும் அராஜக பிரம்மாண்டமாக இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி.

பெரிய நடிகர் ரஜினிகாந்த் தொடங்கி, நண்டு, சிண்டு, வாண்டு நடிகர்கள் வரை, இந்த அறிமுகக்காட்சி அமைப்பது என்பதே ஒரு படம் எடுக்கும் அளவுக்கு பில்ட்- அப் செய்யப்படும். இதை நிர்மாணிக்க ஒரு குழுவே தனியாக, இரவும் பகலும், பகலும் இரவும் இயங்கும்.

முன்பெல்லாம் நாயகர்களின் அறிமுகக்காட்சியில், ஒரு எடுபிடி நடிகர், ஒரே ஒரு வசனத்தில் ஏக பில்ட்-அப் கொடுக்க, தரையில், தூசி, தும்பு, புடவை, பேன்ட், ஷர்ட், பாவாடை எல்லாம் பறக்க, நாயகரின் ஷூ எல்லா தூசிகளையும் கிளப்ப, கொஞ்சம் கொஞ்சமாக கேமரா, அவரின் கால், வயிறு (தொப்பை), இடுப்பு, மார்பு என முன்னேறி, முகத்தில் வந்து க்ளோஸ்-அப்பில் நிற்கும். அப்போது, அங்கு விரல் சுழற்சி, தொடை தட்டல், முஷ்டி முறுக்கல், பல வித வணக்கங்கள் கேமராவின் பல கோணங்களில் காட்டப்படும்.

அப்போது தியேட்டரில் கைதட்டல் காதை பிளக்கும், விசில் சத்தம் விண்ணை பிளக்கும், குலவி சத்தம் கூரையில் தெறிக்கும். பல வண்ண காகிதங்கள் அரங்கை நிறைக்கும், தூக்கி எறியப்படும் செல்லாத சில்லறை பலரின் தலையையும், திரையையும் பதம் பார்க்கும். சூடம் ஏற்றப்படும், ஆரத்தி எடுக்கப்படும், திருஷ்டி கழிக்கப்படும் (என்ன திரிஷ்டி, யாருக்கு???)

பின்னாளில், இது கொஞ்சம் உருமாறி, வழிமாறி, நேரடியாக நாயகன் மெதுவாக நடந்து வந்து, 500 பேரோடு இணைந்து, கை தூக்கி, ஒரு குத்தாட்டம் போட்டு படத்தை ஆரம்பித்து வைப்பார்.

இப்போது கேள்வி என்னவென்றால், இது போன்ற நாயகர்களின் அறிமுகப்பாடல்களில், பெரும்பாலும் நாயகர்கள், தங்கள் ரசிகர்களை, அடா, புடா என பாடுகிறார்களே, அது ஏன்?? அன்பு மிகுதியாலோ?? - உதாரணமாக :

அதாண்டா இதாண்டா அருணாச்சலம் நான்தாண்டா

ஆட்டோக்காரன், ஆட்டோக்காரன் ........ இரக்கமுள்ள மனசுக்காரண்டா, நான் ஏழைக்கெல்லாம் எப்பொழுதும் சொந்தக்காரன்டா

வந்தேண்டா பால்காரன் ......... அடடா பசுமாட்ட பத்தி பாடப்போறேன்

ஆடுங்கடா என்ன சுத்தி, நான் அய்யனாரு வெட்டுக்கத்தி

வாடா வாடா வாடா வாடா தோழா .... நாம் வாழ்ந்து பார்ப்போம் வாழ்ந்து பார்ப்போம் வாடா

இது சில உதாரணங்கள். முன்பு எம்.ஜி.ஆர். அவர்கள் நடித்த "இதயக்கனி" படத்தில் கூட இதுபோன்ற ஒரு நாயகன் அறிமுகப்பாடல் வரும். அது மிகவும் பிரமாதமாகவும், பிரம்மாண்டமாகவும் இருந்ததை மறுப்பதற்கில்லை, உண்மையை மறைப்பதற்கில்லை. அந்த பாடல் :

"நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற, இந்த நாட்டிலுள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற"

நண்பர்களே, நீங்களும் உங்கள் கருத்தை பின்னூட்டத்தில் பதிவு செய்யுங்களேன்

6 comments:

Anonymous said...

arputhamana kelvi thiru gopi avargale, indha kaalathil petra pillaigalidem erundhu mariyathai paarpadhu arithaga ullathu, matravargal yemmathiram.

GR-Chennai

Anonymous said...

அடித்து புடித்து டிக்கெட் வாங்கி திரையில் தன் தலைவன் எப்போது வருவான் என்று எதிர் பார்க்கும் சராசரி ரசிகனின் உணர்வை அற்புதமாக பதித்து உள்ளிர்கள் .

அன்போடு வரும் தொண்டனுக்கு ஆதரவாய் சமிக்கை செய்யும் கடமையை மறந்தனர் என்பதை அற்புதமாய் கோடிட்டு உள்ளிர்கள்.

ஆழம் தெரியாமல் அடுத்தவர் செய்வதை ஈ அடிச்சான் காபி அடிச்சால் இப்படித்தான் என்று நண்டு சிண்டுக்கு நல்ல ஒரு குட்டு

Anonymous said...

Very thought provoking question ! Excellent thinking.

Hope respect and values are restored in our filmdom.

Thanks for raising this valid issue.

Abu said...

ஒவ்வொரு நடிகனும் தனக்குரிய பாணியில் முதல் காட்சியில் தோன்றுவதே தன் ரசிகனுக்குரிய அந்த எதிர்பார்ப்பை பூர்திசெய்வதர்க்காகதான் அவர்கள் அப்படி காட்சியை அமைக்கிறார்கள்.

இது MGR முதல் ரஜினி , கமல், விஜயகாந்த் ,விஜய் , அஜித் அப்படி வருகிறார்கள் என்றால் அதில் ஒரு அர்த்தம் .இவர்களுக்கு ரசிகர்கள் ஜாஸ்தி.ஆனால் இதையே வாண்டுகள் (simbu, தனுஷ், சூப்பர் ஸ்டார் ரித்தீஷ் ) மற்றும் சல்லிகளும் , கப்பிகளும் செய்யும் போது மக்களுக்கு கோபம் வரத்தான் செய்யும்.

அவர்கள் ரசிகர்களை அட ,வாட, போடா என்று அழைப்பது என்பது அது அவர்கள் மீது உள்ள அளவற்ற அன்பின் காரணமாக.ஒழிய வேறொன்றுமில்லை.

MGR பாடல் வரிகள் மரியாதையான வரிகளாக இருந்தாலும்...ரஜினி , விஜயகாந்த் பாடல்களை எழுதிய பாடல் ஆசிரியர்கள் ஒரு படி மேலே போய் நாயகர்கள் ரசிகர்களுடன் இன்னும் நெருக்கத்தில் இருப்பது போல் எழுதியுள்ளார்கள்.

காலம் மாற மாற பாடல் ஆசிர்யர்களின் வரிகளும் மாறுவதில் வியப்பு ஒன்று இல்லை.

அன்புடன்,
அபு

R.Gopi said...

Thanks for your visit and explanation Mr.ABU

Anonymous said...

Mr.Joe Basker

Thanks for your visit and comment.